பார்ப்பனர்கள் தமிழ் என்ற பெயரில் மரியாதையில்லாமல் கொச்சையாக பேசுவார்களே அவா, இவா நன்னா இதெல்லாம் அவர்களுடைய ஜாதிய வெறி இன்னும் வாழ்ந்து கொண்டுதானிருக்கின்றது என்பதை சுட்டிகாட்டுகின்றது. அதே போல் தில்லியில் போய் பணிபுரிந்தாலும் இன்னும் அய்யர் என்னும் சாதி பெயரை தைரியமாக வைத்து கொண்டு வலம் வருகின்றனர், தமிழ்நாட்டிலும் பலர் அப்படித்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். என்ன தான் பார்ப்பனர்கள் நாங்கள் மடிசாரிலிருந்து. ஜூன்ஸ்க்கு மாறிட்டோம், உணவு பழக்கங்களையும் மாற்றிகொண்டோம், ஏன் மாட்டுக்கறி எல்லாம் தின்போம, மக்களோடு மக்களாக வாழ்கின்றோம் என்று தம்பட்டம் அடித்தாலும், இன்னும் இந்த பழையை கொச்சை
Tweet
Monday, 30 November 2009
பார்ப்பனர்கள் தங்களுடைய பார்ப்பன ஜாதியை அடையாளப்படுத்தும் விதமாகவே தமிழை கொச்சையாக பயன்படுத்துகின்றனர்.?
மகரஜோதி அனைவரது கண்களுக்கும் தெரியுமா?
இது யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல இது செய்திகளின் அடிப்படையிலேயே இந்த இடுகை இடப்பட்டுள்ளது. என்பதை முதலிலேயே தெரிவித்து கொள்கின்றேன்.
சபரிமலையில் மகரசங்கராந்தி அன்று தெரியும் ஜோதியை மகரஜோதி
எனப்படுகின்றது. இந்த ஜோதியைப்பார்ப்பதற்காக பல்வேறு மாநிலங்களிலிருந்தும் சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதமிருந்து இந்த ஜோதியை ஆன்மீகவாதிகள் காணுகின்றனர் என்பது நாம் அறிந்த ஒன்று. இது பாவம் செய்தவர்கள் அதாவது தவறு செய்தவர் கண்களுக்கு இது தெரிவதில்லை என்ற நம்பிக்கையும் காலங்காலமாக இருந்து வந்திருக்கின்றது. ஆனால் இதை தொலைக்காட்சியில் ஒளிபரப்பிய பிறகு இந்த புரளிகள் அடங்கின. இது கடவுள் ஐயப்பன் மகரசங்கராந்தி அன்று ஜோதி வடிவமாக காட்சி அளிக்கின்றார் என்றே அனைவராலும்
Tweet
ஒருவர் பொருளாதாரத்தில் மேம்பட்டபிறகு தான் திருமணம். செய்து கொள்ள வேண்டுமா? இது சரியா?
சில மாதங்களுக்கு முன் விஜய் தொலைக்காட்சியில் இந்த தலைப்பு பற்றி அலசப்பட்டுள்ளது. அப்பொழுது பன்னாட்டு நிறுவனங்கள் பொருளாதாரா சரிவை சந்திப்பதற்கு சற்று முன். அதில் பெரும்பாலனவர்கள் பணம் சம்பாதித்த பிறகே திருமணம் செய்து கொள்வேன் என்று வாதிட்டனர். அதில் பலபேருக்கு அகவை 35 ஐ தொட்டுவிட்டது. இன்னும் சிலருக்கு 40 வயது அதற்கு மேலும் இருக்கும். ஆனால் இன்னும் திருமணத்தை தள்ளிபோடுகின்றனர். இதற்கு அவர்கள் கூறும் காரணம் திருமணம் செய்து கொண்டபின் பல பொருளாதார சிக்கலுக்கு நாம் ஆளாக நேரிடும் ஆகையால் ஒரு வீடு , பண சேமிப்பு, வாகன வசதி இவற்றை பெருக்கிகொண்டபின் திருமணம் செய்து கொள்வதே நல்லது. அப்பொழுது தான் சந்தோஷமாக வாழ முடியும் என்று வாதிட்டனர். இது மிகவும் தவறு.
Tweet
இந்தியாவின் முதல் எலும்பு வங்கியின் நிலை......?
இந்த தளம் சென்று காண்க http://pratyush.instablogs.com/entry/no-bone-in-indias-first-bone-bank/ Tweet
Sunday, 29 November 2009
காசியில் நிகழும் அதிசயத்திற்கான அறிவியல் காரணங்கள்.....?
Tweet
சயனைட் சாப்பிட்டால் மரணம் 10 விநாடி.....
ஒவ்வொரு தீவிரவாதிக்கும் பயிற்சி முடிந்ததுமே அவர்களுக்கு கொடுக்கப்படுகிற முதல் சங்கதி இந்த சயனைட் குப்பிதான்....! சயனைட் அடைக்கப்பட்ட அந்த குப்பியைத்தான் கழுத்தில் சங்கிலியோடு பிணைத்து மாட்டிகொண்டுருப்பார்கள். காவல் துறையினர், மற்றும் எதிரி நாட்டிடம் அகப்பட்டுக் கொண்டால் இந்த குப்பியை எடுத்து வாயின் ஒரமாக வைத்து லேசா கடித்தா விஷம் உமிழ் நீரில் கலந்து பத்து விநாடிகளில் சர்வ நிச்சயமான மரணம்.
அவ்வளவு வீரியமான நஞ்சு (விஷம்). மற்ற எந்த நஞ்சானாலும்
Tweet
தலைநகர் தில்லியிலேயே தமிழர்களின் பரிதாப நிலைமை.......பிபிசி
இந்தியாவின் தலைநகர் தில்லி, குமாஸ்தாவின் நகரம் எனப்பெயர் பெற்ற தில்லியில், சுமார் 1.7 கோடி மக்கள் வசிக்கின்றனர். அதில் சுமார் 10 லட்சம் பேர் தமிழர்கள். இதில் பல பேர் தமிழகத்தில் இருந்து அரசு பணிக்காகவும், வணிகம் புரிவதற்காகவும், இன்னும் சில பேர் கூலி வேலைகளுக்காகவும் இங்கிருந்து பல வருடங்களுக்கு முன்பே புலம் பெயர்ந்தவர்கள். அவர்களில் சிலரே நல்ல நிலையில் இருப்பதாகவும், மிகுதியாக உள்ளவர்கள் இன்னும் கஷ்ட ஜூவனமே நடத்தி வருகின்றனர் (3 தலைமுறைகளாக).
Tweet
Saturday, 28 November 2009
கங்கை கூவமாகும் அபாயம்?
உலகில் மிக அசுத்தமான நதிகளில் முதல் நதியாக கங்கை ந்தியை டைம்ஸ் சி என்.என் என்னும் நிறுவனம் அறிவித்துள்ளது. இதை சீரமைப்பதற்கும் அங்குள்ள சாதுக்கள் எனும் பழமைவாத குழுவினர் அனுமதிப்பதில்லை என்ற தகவலையும் வெளியிட்டுள்ளது. அவர்களின் கூற்று கங்கை எப்பொழுதும் தூய்மையான புனிதமான நதி என்பது தான் அவர்களது அசைக்கமுடியாத கூற்று.
Tweet
Friday, 27 November 2009
இலங்கைத் தமிழர் பிரச்சினை தமிழக மக்களை அவ்வளவாக பாதிப்பதில்லை? இதை அரசியலாக்குவதும் தேவையற்றது.
இலங்கைத்தமிழர் பிரச்சினைகள் தமிழக மக்களை அவ்வளவாக பாதிப்பதில்லை. ஆனால் இங்குள்ள ஏன் அங்குள்ள சில இலங்கைத் தமிழர்கள் மற்றும் அயல்நாட்டு இலங்கை வாழ் தமிழர்கள் இதை பூதகாரமான பிரச்சினையாக ஆக்கிப் பார்க்கின்றனர். சமீபகாலமாக இது பல அரசியல் களங்களில் ஒருவரை ஒருவர் தாக்கி கொள்ள இந்த பிரச்சினையை கையில் எடுத்துள்ளனர். இதில் அதிக ஆர்வம் காட்டாத அதிமுக வும் இதை கையில் எடுத்திருப்பது மக்களிடையே மிக ஆச்சரியத்தை தான் ஏற்படுத்துகின்றது.
பெரும்பாலும் இந்த பிரச்சினை தமிழகத்தையும், தமிழக அரசியல்வாதிகளையும் நோக்கியே தாக்குதல் அம்புகள் வீசப்படுகின்றது. இதில் அதிக அக்கரை காட்டி வந்த திமுக, தன்னுடைய அத்தனை முயற்சிகளை பயன்படுத்தியும் முழுப்பயனையும் எட்டியுள்ளதா? என்பது சந்தேகமே. ஆனால் இதற்கு மேல் ஒன்றுமே செய்யமுடியாத நிலைக்கு அது தள்ளப்பட்டுவிட்டது என்பது உண்மை. அதற்கு காரணம் அதன் கூட்டணியான காங்கிரஸ் கட்சியே என்பது அனைவருக்கும் தெரிந்த விசயம். தமிழக மக்கள் இதற்கு ஆதரவான மனநிலையில் உள்ளனரா ? என்றால் அவர்களை இந்த பிரச்சினை பாதித்ததாக தெரியவில்லை.
பெரும்பாலும் இந்த பிரச்சினை தமிழகத்தையும், தமிழக அரசியல்வாதிகளையும் நோக்கியே தாக்குதல் அம்புகள் வீசப்படுகின்றது. இதில் அதிக அக்கரை காட்டி வந்த திமுக, தன்னுடைய அத்தனை முயற்சிகளை பயன்படுத்தியும் முழுப்பயனையும் எட்டியுள்ளதா? என்பது சந்தேகமே. ஆனால் இதற்கு மேல் ஒன்றுமே செய்யமுடியாத நிலைக்கு அது தள்ளப்பட்டுவிட்டது என்பது உண்மை. அதற்கு காரணம் அதன் கூட்டணியான காங்கிரஸ் கட்சியே என்பது அனைவருக்கும் தெரிந்த விசயம். தமிழக மக்கள் இதற்கு ஆதரவான மனநிலையில் உள்ளனரா ? என்றால் அவர்களை இந்த பிரச்சினை பாதித்ததாக தெரியவில்லை.
Thursday, 26 November 2009
அரசு பள்ளி மாணவர்களின் கேள்விகள்?
அரசு பள்ளி ஆசிரியர்கள் மிகச் சிறப்பாக பாடம் சொல்லித் தருவதாக அவர்களே கூறிக்கொள்கின்றனர். பிறகேன்? அவர்களுடையப் பிள்ளைகளை மட்டும் அரசு பள்ளிகளில் கல்வி பயிலாமல் தனியார் பள்ளிகளில் கல்வி பயில்கின்றனர். அவர்களின் கல்வி புகட்டும் தன்மை மேல் அவர்களுக்கே நம்பிக்கையில்லாமையே இது காட்டுகின்றது. இவர்கள் பிள்ளைகளுக்கே ஒழுங்காக பாடம் சொல்லிக்கொடுக்க முடியாதவரகள் ஊரார் பிள்ளைகளுக்கு எப்படி பாடங்கள் சொல்லிக்கொடுக்க முடியும்?
Tweet
Thursday, 19 November 2009
Re:பெரியாரியத்தை மதமாக்கும் சில பெரியாரிஸ்டுக்கள்
குழலி பின்னூட்டங்களை தடை செய்திருப்பதாக அறிவித்திருந்தார் இருந்தாலும் இதை அந்த கருத்தோடு ஒப்பிட்டு சிலவற்றை குறிப்பிட விரும்புகின்றேன்.
//ஒரு பெரியாரிஸ்ட் என சொல்லிக்கொள்பவர் காலையில் எக்காரணம் கொண்டும் குளிக்க மாட்டார் மாலையில் தான் குளிப்பார், காலையில் குளிப்பது நம் பழக்கமில்லை என்பார்....//
பெரியார் சில வழக்கமான பின்பற்றல்களை மூடநம்பிக்கைகளை வளர்க்கின்றது என்பதற்காக அவர் அதை மாற்றிக்காட்டினார். பெரியவர்களிடம் காலில் விழுந்து வணங்குவது இதையும் அவர் விலக்கி வைத்தார். மரியாதை மனதில் இருந்தால் போதும் என்ற நம்பிக்கையை வலியுறுத்துவதற்காக. தன் காலில் ஒரு தொண்டர் விழுந்த பொழுது எடுத்த புகைப்பட பதிவை அழித்தார் என்பது வரலாறு. இது முன்னூதாரணத்தை ஏற்படுத்தி விடக்கூடாது என்ற எண்ணத்தினால். நாம் செய்த காரணத்தால் மூடநம்பிக்கையான பின்பற்றல் நடைபெறக்கூடாது, என்பதற்காக. அதுபோலத்தான் காலையில் குளிப்பதை மாற்றிக்காட்டினார்.
சிலருக்கு காலையில் குளிக்காவிட்டால் ஒரு மாதிரியாக சோர்வாக இருக்கும் அத்ற்காக காலையிலேயே குளிப்பார்கள் இதை பெரியாரிஸ்டுகள், பெரியாஸ்டு அல்லாதவர்கள் என்று பிரித்து கொள்ள தேவையில்லை. அவரவர் வியர்வையின் தன்மை தோல் தன்மைக்கேற்றமாதிரி இதை மாற்றி கொள்ளலாம் இதனால் எந்தவித கொள்கை மாற்றமும் அல்லது தடுமாற்றமும் வந்துவிடப்போவதில்லை. சில நேரங்களில் சோம்பேறித்தனத்திற்காகவும் குளிப்பதில்லை. இப்படியெல்லாம் இருப்பதினால் கடவுள் அணுக்கிரகம் கிடைக்காது என்று கூறிவந்தவர்களையும், ஆரோக்கியமில்லை என்று கூறிவந்தவர்களையும் முட்டாளுக்குவதற்காக நடைமுறைப் படுத்தினார். இதையெல்லாம் கண்டிப்பாக கடைப்பிடித்துதான் பெரியாரிஸ்டாக வாழவேண்டும் என்ற அவசியமில்லை. நான் சொல்லுவதையே பகுத்தறிவுடன் சிந்தித்து பார்த்து எது சிறந்தது என்று ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கூறியவர் தான் பெரியார் ஆகையாலேயே அவரை பெரியார் என்கின்றோம்.
//எப்படி மதத்தை பின்பற்றுபவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தங்கள் மதத்தை சிறு வயதிலிருந்தே திணிக்கின்றார்களோ அதே போல பல பெரியாரிஸ்ட்கள் குடும்பங்களில் சிறு வயதிலிருந்தே கடவுள் இல்லையென்றும் பெரியாரியமும் திணிக்கப்படுகின்றது,....//
ஒரு குழந்தையை எந்த மதத்திணிப்பும், கடவுள் நம்பிக்கையும் இல்லாமல் வளர்த்தாலே அது பகுத்தறிவுவாதியாக வளர்ந்து விடும் அதற்கு பெரியாரிஸ்டு என்ற போர்வைத் தேவையில்லை. அது சாத்தியமில்லை காரணம் குழந்தைகள் செய்யும் குறும்புகளை, தவறுகளை தடுப்பதற்காக முதலில் கடவுளை நம்மையும் அறியாமல் திணிக்கின்றோம் அப்படியில்லையென்றால் பூச்சாண்டிகளையும், தற்காலத்தில் காவலர்களை காட்டி இதுவும் மூடநம்பிக்கை தான். அவர்களை அடிக்காமல், துன்புறுத்தாமல் பணியவைக்க மனிதர்கள் பயனபடுத்தி வரும் சுலபவழி. இது ஆழப்பதிந்து விடுகின்றது. என் குழந்தைக்கும் இந்த மாதிரி பெரியாரை காட்டி அவன் செய்த தவறுக்காக பெரியார் உன்னை மன்னிக்கமாட்டார் என்று கூறினேன் அன்று முதல் பெரியாரின் உருவத்தைப் பார்த்து பயப்பட ஆராம்பித்தான் (அவர் தாடியுடன் இருந்ததை பார்த்து) அவன் மனதில் வேறொரு முகமாக உருவகப்படுத்தி கொண்டான். இதற்கு முன் விவேகானந்தரை காட்டினேன். அவரையும் இப்படி ஒரு தனி சக்தியாக உருவகப்படுத்திகொண்டான். இதன் விளைவு அவர்கள் அவன் கணவில் வந்து மிரட்டினர். எதை நினைத்து கொண்டு படுக்கின்றோமோ அதுதான் கனவாக வருகின்றது. அய்யோ பெரியார் என்னை பார்க்கின்றார் அவரின் படத்தை திருப்பி வையுங்கள், விவேகானந்தர் பார்க்கின்றார் நான் தவறு செய்யவில்லை திருப்பி வையுங்கள் என்று நடுஇரவில் எழுந்த அலர ஆரம்பித்து விட்டது. இவைகளை மனோத்துவ ரிதியில் அனுகவேண்டியது நம் கடமையாகிவிட்டது. இதற்குப் பிறகு பெரியாரிசம் என்பது என்ன? அதை அவன் வளர வளர போதிக்கவேண்டியது கல்வி நிறுவனங்களின் கடமையாகும் அதை கண்டிப்பாக பல கல்வி நிறுவனங்கள் செய்யாது மாறாக இன்னும் மூடநம்பிக்கைகளையே கல்வி நிறுவனங்களும் சரி சமூகங்களும் சரி கடவுள் என்ற உருவகத்தையே அவன் மனதில் ஆழப்பதிய வைத்துவிடும் என்னதான் பகுத்தறிவை (பெற்றோர்கள் சிறிதளவே புகுத்தமுடியும்) மீண்டும் சமூகம் மூடநம்பிக்கைகளை வேரூன்றிவிடும். பெற்றோர் எண்ணிக்கை இருநபர்கள் ஆனால் சமூகம் பெரும் எண்ணிக்கை இதிலிருந்து விழித்தெழ கல்வி நிறுவனங்கள் பெரியாரிசத்தை சொல்லித்தருவதில் என்ன தவறு இருக்கமுடியும். மூடநம்பிக்கைகளை சொல்லித்தருவதற்கு நிறுவனங்கள் இருக்கும் பொழுது, பெரியாரிசத்தை புகட்டுவதற்கு ஒரு சில மிகச் சொற்ப கல்வி நிறுவனங்களே உள்ளன. கிருத்துவத்தை ஒரு சில கிருத்துவ கல்வி நிறுவனங்கள் பாரபட்சமில்லாமல் சொல்லிக் கொடுக்கவில்லையா? இதில் மட்டும் திணிப்பு எங்கிருந்து வந்தது. இதில் தான் பகுத்தறிவு வந்துவிடுகின்றதே, வேறு எதிலும் பகுத்தறிவு வருவதில்லையே. என்னை பொருத்தவரை ஏன் எல்லோருக்கும் இதுதான் பகுத்தறிவாக இருக்கும் ஏன், எதற்கு, எப்படி... என்று ஆங்கிலத்தில் WH Questions அடங்கியவையே பகுத்தறிவு அது பெரியாரிசத்தில் நிறைய உண்டு.
மூன்றாவதாக தங்களுடைய பின்னூட்டத்தில்
// நீங்கள்தான் இந்து மதத்தை வெறுப்பவர்கள்ஆயிற்றே....//என்று கூறியிருக்கின்றீர்கள் இது தமிழ் ஒவியா நோக்கி எழுப்பிய வினா அவர் பதிலளித்து விட்டார். இருப்பினும் இந்த வினா இப்படி பலராலும் எழுப்பப்படும் என்பதால் தான் பெரியார் மதம் மாறவில்லை. அவரை மதம் மாறி விடுமாறு கூறியபோதும் இந்த மதத்தில் இருப்பதால் தான் பல சவுகரியங்கள் இருப்பதாக கூறினார். அதையும் விளக்கினார், நாம் இதன் ஒட்டைகளை எடுத்து காட்ட முடியும் இல்லாவிட்டால், உனக்கும் என் மதத்திற்கும் என்ன சம்பந்தம்? என்ற கேள்வி இந்து மதத்தினரால் வைக்கப்படும். அவர் சாதுர்யம் இன்றுவரை நிரூபனம் ஆகிக்கொண்டிருக்கின்றது என்பதற்கு உங்கள் கேள்வியே சாட்சி.
தவிர இளஞ்சேரன் குறிப்பிட்டதில் தவறொன்றுமில்லை. பிராமாணர்களில் நல்லவர்கள் உள்ளனர் என்ற வாதம் எழுப்பப்பட்டது. அப்பொழுது பிராமணர்கள் மோசமானவர்கள் என்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டுகின்றது. பாராதியார் தாழ்த்தப்பட்டவருக்கு பூணூல் அணிவித்து அவரை உயர்ந்தவராக்கினார் என்ற பதிலை ஆகா ஒகோ என்று கூத்தாடுபவர்கள் உண்டு. ஏன் தாழ்ந்தவன், உயர்ந்தவன் என்பதை தீர்மானிக்க ஒரு கயறு தேவையா? அதை தூக்கி எறி ஜாதியை உன் அடிமனத்திலிருந்து தூக்கி எறி, உன் ஜாதிய அடையாளங்களை, மத அடையாளங்களைத் தூக்கி எறி அந்த சமத்துவத்தை வலியுறுத்துவதுதான் பெரியாரிசம். அது இன்று வரை எந்த பிராமணரும் கடைப்பிடிக்கவில்லை. ஆனால் நாங்கள் மாறிவிட்டோம் எங்களுக்கும் இடவொதுக்கீடு வேண்டும் என்கின்றனர். இடவொதுக்கீட்டை சலுகை என நினைக்கின்றனர். மிகப்பெரிய தேசிய அரசியல் கட்சி தலைவருக்கே தெரியவில்லை, ஆனால் எப்படியாவது ஆட்சிக்கு மட்டும் வந்து விடவேண்டும். என்ன தான் அப்படி பெரிய படிப்பு படித்தார்களோ தெரியவில்லை.
இங்கிருந்து மதம் மாறி செல்கின்றனர் அவர்களும் அந்த மதத்தில் மூடநம்பிக்கைகளை பின்பற்றிக் கொண்டு இந்து மதத்தை பெரியாரை துணைக்கு வைத்து வாதாடுவார்கள் இது பெரியாரிசமில்லை. என் கல்லூரியில் ஒருவர் கிருத்தவராக மாறிவிட்டார் ஆனால் தலித் என்ற பிரிவில் பயன் பெற்று வந்தார் ஆனால் அவர் பிற்படுத்தபட்டவர் (கிருத்தவர் என்பதால்) தலித்தை காரணம் காட்டி மத்திய அரசு வேலை வாங்கி சென்றுவிட்டார் அது வேறு விசயம். அவர் அடிக்கடி இந்து மதத்தை சாடிக்கொண்டிருப்பார் பெரியாரை உதாரணத்திற்கு வைத்து கொண்டிருப்பார். நான் கூட பெருமை பட்டதுண்டு.
ஒரு நாள் அவர் தேர்வுத்தாளில் jc என்று குறிப்பிட்டார். அதை பார்த்து கேட்ட பொழுது இந்து மதத்தில் உள்ளவர்கள் பிள்ளையார் சுழி போடுகிறார்களே அதற்காகத் தான் நான் உடனே அப்படி என்றால் இனி பெரியார் பெயரை சொல்லி இந்த செயலை செய்யாதே என்று கூறினேன். பெரியார் கூறியதை உன் இன்னோரு மூடநம்பிக்கைக்கும், மதவெறிக்கும் சாதகமாகப் பயன்படுத்தாதே. இது பெரியாருக்கு இழுக்கு அதற்காகவா பாடுபட்டார். இன்று வரை அவரோடு எந்த தொடர்பும் வைத்துக் கொள்வதில்லை. பெரியாரிசத்தை புரிந்து கொள்ளாதவர்களுக்கு பெரியார் ஒரு கவசம். ஆம் சுயநலக் கவசம். அதைத்தான் சிலர் பின்பற்றுகின்றனர் சில பிராமணர்கள் கூட பெரியாரிசத்தை ஆதாரிப்பார்கள். அவர்கள் முழு மனதுடன் ஆதரிக்க வில்லை அப்படிபட்டவர்கள் நிறைய பேர் உள்ளனர். அவர்களை எதிர்த்தும் கேள்வி கேட்டிருக்கின்றேன். அதற்கு பதில் ஹி ஹி தான்.....நன்றி.
தொடர்புள்ள சுட்டிகள் குழலி பக்கங்கள் ;பெரியாரியத்தை மதமாக்கும் சில பெரியாரிஸ்டுகள் Tweet
Subscribe to:
Posts (Atom)