Pages

Showing posts with label இன்று ஒரு தகவல். Show all posts
Showing posts with label இன்று ஒரு தகவல். Show all posts

Monday, 14 February 2011

பெண்களின் மாதவிடாய் ஒரு தீட்டா.....?



சமீபத்தில் இணையத்தில் பார்த்தது...பெண்கள் தீட்டு.....ஒரு அசுத்தம் என்ற கருத்து வைக்கப்பட்டிருக்கிறது...அதனடிப்படையில்.......எழுந்தவைகளாக...

இது அசுத்தம் இல்லை....சுத்தம் தான்....முதலில் மனிதனே அசுத்தம் தான்...தினம் தினம் இவன் உடம்பு அசுத்தத்தை சுமந்து கொண்டு தான் அனைத்து இடங்களுக்கும் செல்கிறது....கோயில் கருவறைக்குள்ளும் செல்லுகிறது...வேறு புனிதமானதாக சொல்லப்படும் இடங்களுக்கெல்லாம் இந்த அசுத்தத்தோடு தான் செல்கிறது. இதில் பெண்களுக்கு வரும் மாதவிடாய் மட்டும் எப்படி அசுத்தமாகும்...? இது ஆணாதிக்க மனப்பான்மையினால் ஆரியத்தினால் திராவிடர்களும் பின்பற்றும் வகையில் புகுத்தப்பட்ட மூடநம்பிக்கை.....

நாம் தினம் தினம் அந்தக் திட, திரவக் கழிவை வெளியேற்றுகிறோம்...திரவக் கழிவை அடிக்கடி வெளியேற்றுகிறோம்....அதை தன் உடலுறுப்பை (கை) கொண்டே சுத்தம் செய்கிறோம்...மீதமுள்ள திட திரவக் கழிவுகள் நம்உடலிலேயே தங்கியும் விடுகிறது...இதில் மனிதனே அசுத்தம் தான்...அவனே ஒரு தீட்டு தான்...

இதில் தனியாக இயற்கையின் வரையறையாக பெண்களின் உடலில் இருந்து இரத்தமாக வெளியேறும்..... பெண்களின் கருமுட்டை வெளியேற்றம்...மட்டும் எப்படி தீட்டாகும்....? இப்படியெல்லாம் சொல்லி பெண்ணை ஒதுக்கி அடிமைப்படுத்தும் எண்ணம் கொண்ட ஆணாதிக்க மனப்பான்மை......தான் இப்படி பரப்புரை செய்துகொண்டிருக்கிறது.

இந்த அசுத்தத்துடன் இருக்கும் தன்னிலையை மறந்த பார்ப்பனன் தான் பார்ப்பனரல்லோதரை கோயிலில் அர்ச்சனை செய்வதற்கும் நுழையவிடாமல் இருப்பவன்....அவனும் அசுத்தமானவன்...மலக்கழிவையும், திரவக்கழிவையும் சுமந்து கொண்டு தானே...கோயிலில் பூஜை செய்கிறான்....இது எல்லோருக்கும் இருக்கும் இயற்கை விதகள் தானே...எல்லோருடைய உடல் கழிவுகளும் நாற்றமெடுத்தவைகள் தானே.....இதில் மற்றவர்கள் செய்தால் தீட்டு, பார்ப்பனர்கள் செய்தால் மணக்கும என்று ஓதுக்குவது என்பது வர்க்கபேதத்தை தவிர வேறு எதுவாக இருக்கமுடியும்...?...இது தான் பார்ப்பனீயம்....(இது ஒழிக்கப்படவேண்டியவைகள் சீக்கிரமே ஒழிந்து விடும்....அது பற்றி பிரச்சினையில்லை)

இப்பொழுது இது தான்....தாய்க்குலத்தின் அசுத்தம் என கூறும் இவனே அந்த அசுத்தத்தின் வழியாக பிறப்பெடுத்து அவனே தாய்க்குலத்தின் இயற்கை உபாதைகளை அசுத்தம் என சொல்வது...முட்டாள் தனமானது...தாய்க்குலத்தை அவமதிப்பது....அது அசுத்தம் அந்த அசுத்தத்தின் வழியாக பிறப்பெடுத்த எல்லோரும் அசுத்தம் தான்... அனைவருமே தீட்டுடையவர்கள் தான்.

காட்டில் வாழும் தாவரத்தை உண்ணும் விலங்குகளான மான், காட்டாடு, காட்டெருமை..... மற்றும் வீட்டில் வளர்க்கும் தாவரத்தை உண்ணும் விலங்குகளான ஆடு, பசு மாடுகள், எருமை, ...இன்னும் அனைத்துண்ணிகளான நாய்.... (இறைச்சி உண்ணிகளும் அடங்கும்) போன்ற விலங்குகள் எல்லாம்....குட்டிகளை ஈனும்பொழுது அதன் உடலோடு சேர்ந்து வரும் ஜவ்வு போன்ற தசை படலத்தையும், ரத்தத்தையும் தானே (தாய்) உண்டுவிடும்...இது குட்டிகளை இறைச்சி உண்ணும் விலங்குகளிடமிருந்து தன் குட்டிகளை பாதுகாக்க இந்த தாவரத்தை உண்ணும் விலங்குகள் அம்மாதிரி தற்காப்புக்காக உண்ணுகின்றன..இந்த பகுத்தறிவு அதற்கு இயற்கையிலேயே ஏற்பட்டுவிடுகிறது....(ஆதாரம் டிஸ்கவரி சேனல்) 

இவைகளுக்கெல்லாம் (விலங்குகளுக்கெல்லாம்) அசுத்தம் எது? சுத்தம் எது? என்று தெரியாதா என்ன?....இந்த விலங்குகள் தன் மலத்தை உண்கிறதா? என்ன? ...அப்படி உண்ணுவதில்லை...ஆனால் தன் ரத்தத்தை, இறைச்சியை உண்ணுகிறது. 

விலங்குகள் குட்டிகளை ஈனும்போது வரும் ரத்தம் மற்றும் ஜவ்வுகளினால் ஏற்படும் வாடை வீச்சத்தினால் இறைச்சி உண்ணும் விலங்குகள் வெகு தொலைவில் இருந்தாலும் நுகர்வினால் கவரப்பட்டுவிடும். இந்த இறைச்சி உண்ணும் விலங்குகளுக்கெல்லாம் குட்டிகளே சிறந்த உணவுகள்....இறைச்சி மிருதுவாகவும்...எதிர்ப்பின்றி இறையை எடுத்துக்கொள்வதற்கு ஏதுவாக. இருப்பதால்..குட்டிகளை ஈணப்போகும் விலங்குகளையே இந்த விலங்குகள் குறிவைக்கும்.....இதை தடுக்கும் பொருட்டே இவைகள் இந்த புனிதமான காரியத்தில் ஈடுபடுகின்றன. ஆனால் அவைகள் புனிதங்களாக மனிதர்களால் கருதப்படுகின்றன, வணங்கவும் படுகின்றன.

ஆனால் சகமனுஷியான பெண்ணிற்கு மட்டும் மாதத்தில் தொடர்ந்து வரும் இயற்கையான உபாதைகளை அசுத்தம் என்று ஆன்மீகத்திற்கும் பெண்கள் செல்வதற்குத் தடை (சபரிமலைக்கு செல்வதற்கு தடை)...வீட்டிற்குள்ளும் தடை...எனபது மனிதன் விலங்குகளை விட பகுத்தறிவற்றவன் என்பதையே காட்டுகிறது....தாய்க்குலத்தை இது போன்று பிரிவுப்படுத்தி எந்த வகையில் அசுத்தப்படுத்தினாலும் அவன் மனித நேயமற்றவனே.... என்ன தான் படித்தவனாயிருந்தாலும் அவனை விட முழு மூடன் உலகத்தில் இல்லை என்பதற்கு இம்மாதிரி ஆணாதிக்க பார்வைகளே சாட்சி....

அதே போன்று பயிர்ப்பு என்பதற்கும்...இப்படியான அர்த்தம் கற்பிக்கப்படுகிறது.

.//கணவன் இல்லாத மற்றொரு ஆடவன் தொட்டால் வரும் அருவருப்பு. அதாவது கணவன் அல்லாது மற்ற எந்த ஆடவனும் (தவறான நோக்கோடு) தொட்டாலும் அருவருப்பு அடைய வேண்டும் - என்பதையே இது குறிக்கிறது.''//
.

கணவனைத்தவிர...இந்த ''தொட்டால்'' எதைக்குறிக்கிறது...? புறத்தோலின் மேல் தொடுவதையா...? அப்படியென்றால் ''அப்பா'' ''அண்ணன், தம்பி''தொட்டால் கூடவா....இல்லை இந்த தொடுதல் என்பது ''கலப்பு, கலவி'' பற்றியது...அப்படியென்றால் ஆண் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் கலவித் தொட்டால் ''அருவருப்பு'' வரவேண்டுமே அதை மட்டும் பெண்களுக்கு மட்டும் தாரை வார்த்து கொடுத்து விட்டு இவன் மட்டும் ''உயிர் கொல்லி'' ''எய்ட்ஸ்'' நோயையும் இந்த சமூகத்துக்கு தருவானேன்.. பெண்ணிற்கான இலக்கணத்தையும் ஆணே வகுக்கிறான்.

ஒரு பெண்ணின் விருப்பமில்லாமல் கணவனாக இருந்தாலும் தொட்டாலும் தவறான நோக்கமே அகும்....அது இந்திய தண்டனைச் சட்டப்படி தண்டனைக்குறிய குற்றமுமாகும். ஆகையால் தவறான நோக்கம் என்பது பொதுவான ஒன்று தான் கணவனுக்கு மட்டும் ஏற்படுத்தப்பட்ட விதிவிலக்கு என்பதெல்லாம் கிடையாது.

.இந்த தவற்றை எல்லாம் செய்வது ஆண் தானே..தன்னை விரும்பாத பெண்ணை கனவிலும் நினைத்தாலும் அருவருப்பு வரவேண்டுமே.....! மாற்றான் துணை என்று தெரிந்தவுடனே அருவருப்பு வரவேண்டுமே.....!ஏன் வருவதில்லை...?..தனக்கு சாதகமான எதையும், தமிழ் வார்த்தைகள் உள்பட ஆண் ஏற்றுக்கொள்வான்...பாதகமான வார்த்தைகளை பெண்ணிற்கு தள்ளிவிடுவான்...இது தான் ஆண்...இதைத்தான் ''ஆணாதிக்கம்'' என்ற ஆரிய வர்க்கத்தினரிடமிருந்து இருந்து இது அப்படியே திராவிடரிடையேயும் புகுந்தவைகள்...

இம்மாதிரி ஆணாதிக்க தமிழ் சொற்களை...உடனடியாக ஒழிக்க வேண்டும்

நம்மை சுற்றியே அனேக அசுத்தங்கள்...இதையே நாம் புரிந்துகொள்ளவில்லை....இம்மாதிரி சொற்களைக் கொண்டும் நாம் இனபேதங்களை வளர்க்கிறோம் எனபது மட்டும் உண்மை....நம்மை ஈன்றெடுத்த தாய்க்குலத்தையே மாற்று பார்வையில் பார்க்கும் மனப்பான்மை ஒழிக....
....தகவலுக்காக.........

Saturday, 29 January 2011

மகரஜோதி மனிதர்களால் ஏற்றப்படுகிறதா? நம்ப மறுக்கும் தமிழக.....மூடநம்பிக்கையாளர்கள்!

சமீபத்தில் சபரிமலை மகரஜோதி பற்றிய சர்ச்சைகள் குறித்து ஒரு தனியார் தொலைக்காட்சியில் 26.1.11 அன்று வெளியிடப்பட்ட காட்சிகள் குறித்து...


சமீபத்தில் சபரிமலை அருகே புல்மேடுப் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் நூற்றுக்கணக்காணவர்களைப் பலிவாங்கியது...கட்டுக்கடங்காத கூட்டம் இருக்கிற இடத்தில் பாதுகாப்பு நடைமுறைகளை எப்படி மேற்கொள்வதுஎனபது குறித்து ஒரு கேள்வி முன்வைக்கப்பட்டது. இந்த கேள்வியைப் பின்தொடர்ந்து செல்லுகிறபொழுது எதிர்பாராத விதமாக இனொனொரு சர்ச்சையும் ஏற்பட்டது.
சபரிமலை ஐயப்பன் கோவில்....தென்னிந்தியாவின் புகழ்பெற்ற ஆன்மீகத் திருத்தலம்...இங்கு ஆண்டுதோறும் காட்சி தரும் மகரஜோதி தரிசனம்....யாத்திரிகர்களை பொருத்தவரை ஓர் அதிசயம்...அதுவும் தமிழக, கர்நாடக, ஆந்திர நம்பிக்கையாளர்களுக்கு மட்டுமே இது ஒர் அதிசயம்...
இதோ நேரில் பார்த்தது மாதிரி பொய் பேசி மக்களை உசுப்பேத்தும் மூடநம்பிக்கையாளரின் விளக்கம்....(அவருக்கு மக்கள் உயிரை பற்றி என்ன வந்தது... அவா உயிரோடு இருந்தால் போதாதா?)
மகரஜோதி எனபது...நிச்சயமாக..சத்தியமாக...(நிச்சயம்..சத்தியம் இரண்டும் வேறு வேறா...?) மனிதர்களால் ஏற்றப்படுவது அல்ல..தேவாதி தேவர்கள் இந்திர லோகத்தில் இருந்து அந்த ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இறங்கி, அவா அங்கே இறங்கி, அந்த டயத்துல தான் அவா அங்கே இறங்கறா...இறங்கி சுவாமியையும் சூரியனையும் ஆராதனை பண்ணி வழி காமிச்சி விட்டுட்டு அவா போய்டுவா.... இது நம்பிக்கைக்கு பாத்திரமான அனுபவ விஷயம் (மூடநம்பிக்கை என்று வந்து விட்ட பிறகு அனுபவம் எங்கே வந்தது...?) அங்கே நடப்பது தேவ ரகசியம். (மூடநம்பிக்கையாளருக்கு மட்டும்...கேரள மக்களுக்கு அல்ல...!)
மேலே கூறப்பட்ட மூடநம்பிக்கையின் பேரில் தான் இந்த ஆண்டும் (2011) ஜனவரி 14 ந் தேதி சபரிமலையில் லடசக்கணக்கான நம்பிக்கையாளர்கள் கூடியிருந்தனர். மகரஜோதி தரிசனம் முடிந்தது கூடியிருந்த நம்பிக்கையாளர்கள் புல்மேடு பகுதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 100 க்கும் மேற்பட்ட மக்களை பலி வாங்கின.
புல்மேடு பகுதியில் இறந்து போனவர்களின் குடும்பங்களுக்கு லட்சகணக்கில் உதவித்தொகை வழங்கப்பட்டது.இப்படியான கூட்ட நேரங்களில் எப்படிப்பட்ட பாதுகாப்பு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்ற விவாதங்களும் முன்வைக்கப்பட்டது. அதைவிட அந்த காட்டுப்பகுதியையே மூடிவிடலாமா? என்ற யோசனையும் சொல்லப்பட்டது.
இந்த விபத்துக்கான காரணம் குறித்த வழக்கு விசாரணை கேரள உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதில் நீதிமன்றம் எழுப்பிய மிக முக்கியமானதொரு கேள்வி தான் இத்தனை பெரிய சர்ச்சையினை ஏற்படுத்தியது.
நீதிமன்றம் எழுப்பிய இந்த கேள்வியும் இதற்கு கோவில் நிர்வாகம் தந்த பதிலும் தான் தற்போது ஐயப்ப நம்பிக்கையாளர்களிடேயே பெரும் பதட்டத்தையும், பலவிதமான அதிர்ச்சி அலைகளையும் ஏற்படுத்தியுள்ளன. இத்தனை பரபரப்பிற்கும் காரணமான மகரஜோதி தரிசனம் உண்மையிலேயே ஓர் அதிசயம் தான் எனபது யாத்திரிகர்கள் பலரது நம்பிக்கை.
ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 14 அன்று மட்டும் தான் மகரஜோதி தரிசனம் கிடைக்கும். இதனால் குறிப்பிட்ட அந்த நாளில் சபரிமலையில் லட்சக்கணக்கில் யாத்திரிகர்கள் கூடுவது வழக்கம். அந்த குறிப்பிட்ட நாளில் கடவுள் ஐயப்பனுக்கு அணிவிக்க திருவாபரணப் பெட்டி கோயிலுக்கு வந்து சேரும். மாலையில் கடவுளுக்கு தங்க ஆபரணம் அணிவித்து தீபாரதனை காட்டும் சமயம், சபரிமலையில் இருந்து கிழக்கு திசையில் அமைந்துள்ள காந்த மலை மீது ஒரு பிரகாசமான நட்சத்திரம் தெரியும். அதை தொடர்ந்து ஒரு தீபஜோதி ஒரு சிலநிமிடங்களுக்கு தோன்றி மறையும். இதுதான் மகரஜோதி தரிசனம். மூன்று முறை தோன்றி மறையும் மகர ஜோதியை கண்டு சபரிமலை முழுவதும் பக்தர்களால் முழங்கப்படும் சரண கோஷம் மலை முழுக்க எதிரொலிக்கும்.
 
...தமிழ் மூடநம்பிக்கையாளர்..
நட்சத்திரத்திற்கு பிறகு ஜோதி தெரியும் அது இங்கும் அங்கும் அசையாது...அது மலைகளுக்கு இடைப்பட்ட இடத்தில் தெரியும்...இது தமிழ் ஆள்....(மீண்டும் மீண்டும் தமிழ் ஆட்கள் மட்டுமே தெரிவிக்கும் தகவல்...மலையாளி அல்ல....)
ஒவ்வொரு ஜனவரி 14 ந் தேதி....சபரிமலையில் வானத்தில் தோன்றும் மகரவிளக்கு குறித்த விவாதம் நீண்டநாளகவே நடைபெற்று வருகிறது...சமீபத்தில் நடந்த சம்பவத்தால் இந்த விவாதம் சர்ச்சையாகவும் மாறியிருக்கிறது....
தற்பொழுது எது மகரஜோதி? எனபதில் தான் குழப்பம் ஏற்படுத்தி ஒரு புதுவிதமான சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது....அனைறயதினம் வானில் தோன்றும் பிரகாசமான நட்சத்திரம் தான் மகரஜோதி..அதை தொடர்ந்து வானில் தெரியும் தீபவிளக்கு தான் மகரவிளக்கு....இது பொன்னம்பல மேட்டில் ஒரு பழங்குடியினமக்களால் செய்யப்படும் ஒரு தீபராதனை சடங்கு....அதாவது மகரஜோதி என்பது புனித நடசத்திரம்...மகரவிளக்கு என்பது மனிதர்கள் ஏற்றிவைப்பது என சபரிமலை பூஜைப்பணிகளை செய்துவரும் தந்திரி குடும்பத்தினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். நட்சத்திரத்தை தொடர்ந்து வரும் தீப ஒளியே மகரஜோதி என பக்தர்களிடையே இன்றுவரை நம்பப்படும் அழுத்தமான நம்பிக்கை. அடர்ந்த காட்டுப்பகுதியான பொன்னம்பல மேட்டில் யாரும் தீபம் ஏற்றி பக்தர்களை நம்பவைக்கமுடியாது என்பதே பலரது உறுதியான (மூடநம்பிக்கை) கருத்து.
(இது அனைத்தையும் கூறுவது மூடநம்பிக்கையில் மூழ்கிகிடக்கும் தமிழர்கள் தான்...)100 க்கு 100 சதவீதம் தெய்வீகம் தான், உண்மையானது, நம்பிக்கையானது மனிதர்களால் ஏற்றப்படுவது அல்ல...குறிப்பாக அந்த காந்தமலைப்பகுதிக்கு சாதரணமாக யாரும் போக முடியாது...(இவர் போலனா யாரும் போகமுடியாதா...? ..ப்பூ...செவ்வாய் கிரகத்துக்கே போறான் மனிதன்...)
இன்னொரு மூடநம்பிக்கையாளர்...60 ஆண்டுகளாக சபரிமலை போய்வருகிறேன் ''நான் பார்த்த வரையில் ஜோதி உண்மையானது''
''ஜோதி இயற்கையானது தானே தவிர செயற்கையானது கிடையாது'' இதுவும் முடநம்பிக்கை தமிழ் பேசும் ஆளின் கூற்று....(இயற்கையெல்லாம் பொய்யாக போய்விட்டது...)

அப்படியானால் லடசக்கணக்கான பக்தர்கள் நம்பிக்கை பொய்யாகிப்போனதா? மகரஜோதி மனிதர்களால் தான் ஏற்றப்படுகிறதா? கோவில் நிர்வாகம் பூடகமாக இந்த விஷயத்தை பற்றி சொல்லியும் மூடநம்பிக்கையாளர்களோ இதனை ஏற்கத் தயாராக இல்லை....
அதனால் தான் கேரள அரசும் மகர ஜோதி குறித்து விசாரணை நடத்த மாட்டோம் என பகிரங்கமாக அறிவித்து விட்டது....
கேரள நம்பிக்கையாளர்களைப் பொருத்தவரை மகரஜோதி தரிசனம் ஒர் அதிசயமாகப் பார்க்கப்படுவதில்லை....ஆனால் தமிழக, ஆந்திர, கர்நாடக நம்பிக்கையாளர்களோ ஒளி வடிவமாக ஐயப்பனே காட்சி தருவதாக மகரஜோதி தரிசனத்தை பார்க்கின்றனர். 
கேரள மக்களின் மகரஜோதி நம்பிக்கைகளை பல ஆண்டுகளுக்கு முன்பே மாற்றியமைத்தது ஒரு காணொளி (வீடியோ) ஆதாரம்...அதை எடுத்து வந்து வெளியிட்டவர் தான் கேரள பத்திரிகையாளர் மனோஜ் கே புதியவிளா...அவர் தனியார் தொலைக்காட்சிக்குப் பல அதிர்ச்சிகரமானத் தகவலைக் கூறினார்.......
''நான் பொன்னம்பல மேட்டில மகரஜோதி ஏத்துற இடத்துக்கு போய்வந்தேன்...1989 இல் அங்கே என்ன நடக்கிறது? என்பதற்கான ஆதாரங்களை திரட்ட போயிருந்தேன்...திரும்பவும் 2000 த்தில் தொலைக்காட்சி பத்திரிக்கையாளராக அங்கே போய் அந்த இடத்தை எல்லாம் காணொளியில் ஒளிப்பதிவு செஞ்சேன்....
மகரஜோதி கொளுத்துகிற இடத்தையும் காணொளியில் பதிவு செஞ்சேன்...
கேரள தொலைக்காட்சியில் அந்த காணொளியை ஒளிபரப்பு செய்தோம்...
இதில இரண்டு விஷயம்...
ஒன்று அங்கு இருக்கிற ஆதிவாசி மக்கள்...சபரிமலை உற்சவத்தில் அவங்க தீபாராதனை காட்டி அவங்க வழிபட்டு வந்திருக்காங்க....
அது சபரிமலையில் இருந்து பார்க்கிறபொழுது ஆகாயத்தில் ஒரு அதிசயமான ஒளிதெரியற மாதிரி எல்லொரும் உணரந்தாங்க...அது ஒரு நம்பிக்கையாகவே மாறிடுச்சி...அதற்குப்பிறகு மலையில் மின்சார வயர்கள் (ஈ.பி லைன்) அமைச்ச காலகட்டத்தில ஆதிவாசி மக்களை அங்கிருந்து காலி பண்ணிட்டாங்க....
அதன்பிறகு ஆதிவாசி மக்கள் ஏற்றிய தீபராதனை ஏற்ற வழியில்லாத காரணத்தால் தேவஸ்தான துறையும் (தேவசம் போர்டும்), அரசும் சேர்ந்து தீபராதனையை கொளுத்த ஆரம்பிச்சாங்க...அது மட்டுமில்லாமல் ஊடகங்கள் (மீடியாக்கள்) மூலமாக காட்டும் பொழுது ஜோதி தெரிஞ்சது.....ஜோதி தெரிஞ்சது..ஜோதி தெரிஞ்சது....என்று ஒரு பெருவாரியான மூடநம்பிக்கையை உருவாக்கிட்டாங்க...(மாஸ் ஹிஸ்டிரியா). அதுதான் மகரஜோதி ஒரு அற்புதமான விஷயம் என்ற ஒரு பரபரப்பை ஏற்படுத்திடுச்சி...''''
பொன்னம்பல மேட்டில் தெரியும் ஜோதி விஷயம் பற்றிய மதிப்பீடுகள் கேரளாவிலும் ஆச்சர்யமான ஒன்றாகத்தான் கருத்ப்பட்டுவந்தது...
முதன்முதலாக பொன்னம்பல மேட்டிற்கு சென்று அந்த விஷயத்தை கண்டுபிடித்து வெளிப்படுத்தியப் பிறகே புதிய மாற்றத்தை கேரளாவிலும் ஏற்படுத்தியது என்று கூறுகிறார் மனோஜ்கே புதியவிளா...
''''சபரிமலையில் மகர சங்கராந்தி பூஜை நடக்கும் பொழுது...கிழக்கில ஒரு தீபம் தெரியும் ஒரு நட்சத்திரம் தெரியும் என்பது தான் ஒரு நம்பிக்கை...அந்த ஒளி தெரியும் பொன்னம்பல மேடு என்ற இடம் பூமியிலேயே இல்லை என்பதுதான் பலரது எண்ணம். அதானால் ஏற்படற பரபரப்பினால் கூடும் கூட்டத்தினால் ஏற்படும் நெரிசலினால்...1999 இல் 82 பேரும்...2011 இல் 102 பேரும் இறந்து போய்ட்டாங்க...(இந்த 82, 102 இதையும் நம்மாளுங்க கதை கட்டுனாலும் கட்டுவாங்க...இரட்டைப்படை...சொறி சிரங்கு படை என்று...எதற்கும் காத்து இருக்கலாம்...)''
இத்தனைக்கும் காரணம் மகரஜோதி ஒரு அதிசயம் அதை பார்க்கணுங்கற ஒரு எதிர்பார்ப்பு தான்...
கேரளத்தில் பகுத்தறிவுவாதிகள் சங்கம் மகரஜோதி ஏற்றும் இடத்தை கண்டுபிடித்து அதுபற்றிய தகவல்களை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என எல்லா மொழிகளிலும் சிறு கையேடு வெளியிட்டு பிரச்சாரம் நடத்தினாங்க. ""மகரஜோதி மனிதர்கள் தான் ஏத்தறாங்க"" அப்படிங்கற விஷயம் கேரள மக்கள் எல்லோருக்கும் தெரியும். அதனால தான் இப்படி இரண்டு பெரிய விபத்து கேரளத்தில் நடந்தும் அதில மலையாளிகள் பாதிக்கப்படவில்லை.
 
கடந்த ஈராயிரம் ஆண்டில் வெளியான இந்த காணொளி ஆதாரம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.
மகரஜோதி மனிதர்களால் தான் ஏற்றப்படுகிறதா? அப்படியென்றால் யார்? ஏற்றுகிறார்கள்?
சபரிமலை மகரஜோதி மனிதர்களால் ஏற்றப்படுகிறதா? அதன் உண்மை நிலையை மக்களிடம் தெரிவிக்க வேண்டும் என்று கேரள உயர்நீதிமன்றம் ஒரு நிர்பந்தத்தை முன்வைத்திருக்கிறது....
 
மக்களின் நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் பெரிதாக ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதில்லை...அதை விஞ்ஞான ரீதியாக அணுகுவதுமில்லை...ஆனால் இது சர்ச்சைக்கு ஆளான காரணத்தினால் இந்த இடத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறது.........
மகரஜோதி மனிதர்களால் ஏற்றப்படுகிறதா? அப்படியென்றால் யார்? ஏற்றுகிறார்கள்? என்ற இந்த கேள்விக்கு பதிலாக வந்தவர் தனவச்சபுரம் சுகுமாறன்...
 
''கேரள பகுத்தறிவுவாதிகள் சங்கத்தின் மூலமாக இந்த மகரஜோதி உண்மைகளை ஆராயவேண்டும் என்று முடிவெடுத்து முதல் முதலாக 1980 இல் முடிவு பண்ணோம்...1980 ஜனவரி 14 அன்று மூழியாறிலிருந்து 35 கிலோ மீட்டர் காட்டுப்பாதையில நடந்து போய் பம்பா அணை என்ற இடத்தைப் போய் சேர்ந்தோம்...அங்கிருந்து கொச்சி பம்பை என்ற இடத்திற்கு 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்து பொன்னம்பலமேடு என்ற இடத்திற்கு போய் சேர்ந்தோம். நாங்க போன சமயம் கேரள தேவஸ்தானத்தின் ஜீப் ஒன்றும், கேரள காவல் துறை ஜீப் ஒன்றும் நின்றிருந்தது. அப்பதான் மகரஜோதி கொளுத்துகிற இடத்தை பார்த்தோம். அடுத்து அந்த வழியாக வந்த மின்சாரத்துறை ஜீப்பில் ஏறி நாங்களும் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தோம்.
தேவஸ்தான துறை ஜீப்பில் ஒரு சாக்குப் பையில் 8, 10 கிலோ கற்பூரமும் ஒரு பாத்திரமும் எடுத்துட்டு வந்திருந்தாங்க..சாயந்தரம் ஒரு ஐந்தரை மணி இருக்கும் அங்கிருந்த பாறையில எல்லாத்தையும் வைச்சாங்க...அந்த இடம் வடக்கு கிழக்காக இருந்த்து..சபரிமலையில் இருந்து 2000 அடி உயிரத்தில் ஒரு புல் மேடாக கிடந்தது...அப்புறம் ஒரு பாத்திரத்தில கற்பூரங்களை நிரப்பி 6.40 மணிக்கு கொளுத்தி தூக்கி காமிச்சாங்க..மின்சாரத்துறையை (ஈ பி) சார்ந்த கோபிநாத் என்ற ஊழியர் தான் அந்த வருஷம் மகரஜோதியை ஏற்றிக் காண்பித்தவர் அணைத்து...அணைத்து மூன்று முறை மகரஜோதியை ஏற்றிக்காண்பித்தனர். இப்படித்தான் மகரஜோதியை ஏற்றிக்காண்பிக்கின்றனர் என்ற விஷயம் அன்றுதான் தெரிந்தது.
 
ஒருகட்டத்தில் யார்? மகரஜோதியை ஏற்றுவது? என்ற போட்டியால் ஏற்பட்ட குழப்பங்களால் இந்த உண்மைகள் வெளி உலகுக்கு அம்பலமானது எனகிறார் சுகுமாறன்.
 
1982 இல் பொன்னம்பலமேட்டுக்கு ஜனவரி 14 க்கு ஒரு நாள் முன்னாடியே அதாவது ஜனவரி 13 அன்றே சென்று 6.40 மணிக்கு நாங்க ஒரு மகரஜோதியை ஏற்றிவிட்டோம்...இது பற்றி மாத்ருபூமியில் யாரோ போலியாக மகரஜோதியை ஏற்றிவிட்டார்கள் என்று தலைப்புச் செய்தியே வெளியானது. வானொலியிலேயும் மகரஜோதி தெரிந்ததாக செய்தி சொன்னாங்க...உடனே இந்த விஷயத்தை தேவசம் போர்டு மறுத்திடுச்சி...அதற்கடுத்த நாள் 1982 ஜனவரி 14 ம் நாள் அந்த வருஷம் மகரஜோதியை ஏற்றியது காவல் துறை தான்.(போலிஸ்). தேவசம் போர்டு ஆட்கள் பொருட்களை எடுத்துட்டுப்போய் கொடுத்தாங்க போலிஸ் அதை ஏத்திச்சு. அன்னைக்கு ஏற்றும்பொழுது அங்கிருந்த புல்மேட்டில் தீப்பிடித்து விட்டது. அதை நாங்க எல்லோரும் ஒன்று சேர்ந்து தான் அணைச்சோம். இது பற்றி கேரள பத்திரிகையில் கூட செய்தி வந்துள்ளது.
அதறகடுத்து 1983 ம் ஆண்டும் போனோம் அப்போது அங்கே 30 க்கும் மேற்பட்ட காவலர்கள் ஆயுதத்தோடு வந்து எங்க எல்லோரையும் பலமாக தடியடி நடத்தி தாக்கினார்கள். எல்லோருக்கும் நல்ல அடி...எனக்கும் பலமான அடி மூன்று மாதம் ஆயுர்வேத சிகிச்சை எடுக்கிற அளவுக்கு அடி...இப்படியாக 1983 மகரஜோதி அமைந்தது..தொடர்ந்து பல வருடங்களாக மகரஜோதி சமயத்தில் பொன்னம்பல மேட்டுக்கு போய்ட்டுதான் இருக்கிறோம்...இப்போது 2011 இல் மகரஜோதி முடிந்த பிறகும் அங்கு போய் பார்த்தோம்...கடந்த 30...31 வருஷமாக தேவசம் போர்டு தான் மகரஜோதியை ஏத்திட்டு வர்றாங்க...
தற்போது சபரிமலை நிர்வாகம் மகரஜோதி என்பது காந்தமலை மீது தோன்றும் நடசத்திரம் மட்டுமே என்று இறுதியாக அறிவித்து உள்ளது...
மகரஜோதி, மகரவிளக்கு இரண்டும் வேற! வேற! என்று புது குழப்பத்தை தேவசம் போர்டு அறிவித்துள்ளது. அவங்க சொல்ற மாதிரி மகரஜோதி என்பது நட்சத்திரம்! என்ற பட்சத்தில் அதை பார்க்கிறதுக்கு சபரிமலைக்கோ, பொன்னம்பலமேட்டிற்கோ போக வேண்டியதில்லை...கேரளாவிலே எந்த பாகத்தில் இருந்து பார்த்தாலும் அந்த நட்சத்திரம் தெரியும்...! அதுமட்டுமில்லாமல் தென்னிந்தியாவில் எஙகிருந்து பார்த்தாலும் அந்த நடசத்திரம் தெரியும்! அதுவும் ஜனவரி 14 மட்டும் தான் தெரியும் என்று எந்த வானசாஸ்திரமும் சொல்லவில்லை...இப்படியெல்லாம் மக்களை யாரும் ஏமாத்தக்கூடாது....
காலம் காலமாக நம்பிக்கைகள் நொறுங்கும்பொழுது யாராலும் தாங்கவியலாது...எனபது நிதர்சனம்...என்று அந்த தொலைக்காட்சி முடித்திருக்கிறது...
இந்த சபரிமலை மகரஜோதி விஷயத்தில் மூன்று விஷயம் பேசப்படுகிறது...
தேவஸ்தான்ம் எங்களுக்கும் மகரஜோதிக்கும் சம்பந்தமில்லை என்று சொல்லியது....
அதே மாதிரி தேவஸ்தானமே மகரஜோதிங்கறது வேற..மகரவிளக்கு என்பது வேற..என்பதை மக்கள் குழப்பிக்கொள்ளக் கூடாது...என்று கூறியது
மூன்றாவது மக்களுடைய நம்பிக்கை சார்ந்த விஷயங்களை அறிவியல் ரீதியாக ஆராயத் தேவையில்லை என்று கேரள அரசும் கருத்து சொல்லியிருப்பது...
இதுவே ஒரு ஏமாத்துவேலையாக தெரிகிறது...எல்லாம் அங்கு குவியும் காணிக்கை (144 கோடி)  வருமானத்தை கணக்கில் எடுத்துக் கொண்டுதான் இதை மறைக்கிறார்கள் எனபது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது....இது மொத்தம் இது போன்ற தமிழக, ஆந்திர, கர்நாடக மூடநம்பிக்கையாளர்களால் சேருகிறது என்பது ஊரறிந்த விஷயம்....வரி ஏய்ப்பு எப்படி வசூலானால் என்ன,,,? நாட்டிற்கு தேவையான வருமானம் கிடைக்கிறதே...என்று கேரள அரசு நினைக்கிறதா? (சுவிஸ் வங்கியில் கருப்பு பணம் வைத்திருப்பவர்களை பற்றி வெளியிடத்தேவையில்லை என்பது மாதிரி...இதிலும் அரசு மெத்தனம் காட்டுகிறது...)

...நன்றி கேரள பகுத்தறிவுவாதிகள் சங்கம்..தனியார் தொலைக்காட்சி..நன்றி டெக் சத்தீஸ் இணையதளம்.... 

Wednesday, 26 January 2011

பெண்ணியம் பற்றி அதிக அக்கறைப்படுபவர்களிடம் ஒரு சில கேள்விகள்....? கற்புக்கரசிகள் யார்...?




பெண்ணியம் பற்றி அதிக அக்கறைப்படுபவர்களிடம் ஒரு சில கேள்விகள்....? பெண்ணுக்கு சுதந்திரம் கொடுத்தால் என்ன ஆகும் எனப் பயப்படும் ஆணாதிக்க மனப்பான்மை கொண்டவரிடம் சில கேள்விகள்....?

பெண்ணுக்கு ஆண் சுத்ந்திரம் வழ்ங்க வேண்டுமா? அல்லது பெண்ணே சுதந்திரத்தை எடுத்துக்கொள்ளவேண்டுமா?

மனிதன் என்ற சொல்லுக்குள் அடங்கியவர்கள் தான் பெண், ஆண், திருநங்கைகள் என இம்மூவரும் .

இதில் மனிதவுரிமை எனபது இம்மூவருக்கும் சமமாக இருப்பது தான். இதை இவருக்கு வழங்கினால் என்ன? ஆகும்?......... அவருக்கு வழங்கினால் என்ன ஆகும்? என்று வினவுவதே தவறான ஆணாதிக்க மனப்பான்மை....? எவருடைய சுத்ந்திரத்தையும் எவரும் தட்டிப்பறிக்க முடியாது...இந்த மூன்று பாலினத்தின் சுதந்திரத்தை நிர்ணயிக்கும் உரிமை ஒரு பாலினத்திற்கு மட்டும் வழங்கப்படவில்லை.

மனிதவுரிமை என்ற நீர் நிறைந்த பாத்திரத்தில் அனைவரும் சுதந்திரத்துடன் நீர் பருகவே இந்த சமுதாயத்தில் அந்த பாத்திரம் உருவாக்கப்பட்டது. ஆனால் நிகழ்வில் அவ்வாறு நடைபெறுவதில்லை,,,,

ஆண் அந்த பாத்திரத்தை சுற்றி நின்று மறைத்துக்கொண்டு பெண் மற்றும் திருநங்கைகளுக்கு வழிவிடாமல், மனிதவுரிமை என்ற நீரைப்பருகவிடாமல்  மறைத்துக்கொண்டுள்ளனர், இதில் மீறி ஆணை விலக்கிக்கொண்டு மனிதவுரிமை பாத்திரத்தை அடையும் பெண்ணை பெரிய அதிசயத்துடன் பார்க்கும் பார்வை தான் இந்த சமுதாயத்தில் நிலவுகிறது.

பெண்ணுக்கு ஆண் சுதந்திரம் வழங்கத் தேவையேயில்லை, அந்த அதிகாரமும் அவனுக்கு இல்லை. அனைவரின் மனிதவுரிமையும் ஏற்கனவே அந்த பாத்திரத்தில் நிறைந்து இருக்கிறது. ஆகையால்

பெண்களே! உங்கள் சுதந்திரத்தை நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள்!

 யாரிடமும் இதற்காக கையேந்தாதீர்கள்!.

பெண்களின் சுயமரியாதையை பெண்கள் தான் காத்துக்கொள்ளவேண்டும்.

எந்த கட்டுப்பட்டித் தனத்திற்கும் ஆட்படத்தேவையேயில்லை. எந்த விமரசனத்தைப் பற்றியும் கவலைப்படத்தேவையில்லை.

பெண்ணியம் பற்றிப் பேசுபவர்கள் சிறு இனிஷியல் விஷயத்தைக் கூட மாற்றுவதில்லை, துறப்பதற்கு மனமில்லை,,,,

பெண், ஆண் திருமணம் புரிந்தால் பெண் தான் ஆணின் தலைப்பெழுத்தை (இனிஷியலை) சூட்டிக்கொள்கிறார். ஆண் அவரின் தகப்பனார் தலைப்பெழுத்தை அப்படியேத் தாங்கி கொண்டிருக்கிறார். பெண் தன் தந்தைப் பெயரின் தலைப்பெழுத்தைக் கூட வைத்துக்கொள்ள உரிமை இல்லை.

தம்பதியர் இருவரினால் பிறந்த பிள்ளைகளுக்கு கூட ஆணின் தலைப்பெழுத்து  (இனிஷியல்) மட்டுமே வைக்கப்படுகிறது.

 ஏன்? பெண், ஆண் என இருவரின் தலைப்பெழுத்தை வைத்தால் என்ன? இந்த உரிமைகளை கூட பகிர்ந்து கொள்ள மனமில்லாமல் வாய் கிழியப் பெண்ணியம் பற்றி பேசுபவர்கள் இந்த உலகில் இன்னும் உண்டு.


எங்கே? எந்த ஆணாவது பெண்ணின் தந்தைப் பெயரின் முதலெழுத்தை சூட்டிக்கொள்கிறார்களா?....ஆண் அவரின் தந்தையின் தலைப்பெழுத்துடன் (இனிஷியலுடன்) இருக்கட்டும், பெண் அவர் தந்தையின் தலைப்பெழுத்துடன் (இனிஷியலுடன்) இருக்கட்டும். இதில் என்ன மாறுபாடு வந்துவிடப்போகிறது. ஒற்றுமைகள் தான் வளரும். இதெல்லாம் சடங்குகள் அல்ல....சடங்குகள் என்ற பெயரில் வளர்க்கப்படும் ஆணாதிக்க மனப்பான்மைகள்.

குடும்பத்தலைவர் என்றால் பெண், ஆண் இருவரும் தான் குடும்பத்தலைவர்.


பெண் மட்டும் திருமணம் ஆனவுடன் பெண்ணின் தந்தையை அப்படியே கழற்றி விட்டுவிடவேண்டும். ஆனால் ஆணுக்கு மட்டும் பெண்ணின் தந்தை சம்பாதித்த சொத்து மட்டும் வேண்டும்.

கலப்புத்திருமணம் செய்து கொண்டவர்கள் கூட ரொம்ப பெரிய புரட்சி செய்துவிட்டதாக மார்தட்டிக்கொள்வார்கள்

. என்னப் பெரிய புரட்சி...ஆணின் சமயத்தைதான் பெண் வேண்டாவெறுப்புடன் பின்பற்றவேண்டும். ஆணின் சாதியக்கோட்பாட்டைத்தான் பெண் பின்பற்ற வேண்டும். அங்கேயே காதல் செத்துவிட்டது. இது சமய்ததிற்கான ஆட்சேர்ப்பேத் தவிர இது கலப்புத் திருமணம் அல்ல...

சமயத்தையும் சாதியையும் துறக்காமல் என்ன கலப்புத்திருமணம்? என்ன பெரிய புரட்சி..?

பெண் சுதந்திரத்துடன் அவரின் பிறப்பின் சமயத்தை தழுவ உரிமையிருக்கிறதா? அப்புறம் என்ன? ஈருடல் ஒர் உயிர். ''உனக்காக என் உயிரையும் விட்டுக்கொடுப்பேன் என்பதெல்லாம் சும்மா தானே....!.

பாரதியார் பெண்ணியம் பற்றி புரட்சியாக எழுதினார்....என்று பீய்த்திக்கொள்ளும் பெருமை பீய்த்தக்களையர்களும் உண்டு...

எங்கே! பாரதியார் பெண்ணியம் பற்றி கவிதை எழுதிவிட்டு அவர் வீட்டில் பெண்ணடிமைத்தனத்தைதான் பேணினார்.

இதைத்தான் விவேகானந்தரின் பெண் சீடரான நிவேதிதா அம்மையார் பாரதியாருக்கு சுட்டிக்காட்டினார்.

''உன்வீட்டில் உள்ள குப்பைகளை முதலில் அகற்று.... ஊர் குப்பைகள் தானாக அகன்று விடும்''.

''சாதிகள் இல்லையடி பாப்பா'' என்று பாடிய பாரதி....  மட்டும் பூணூலை மாட்டிக்கொண்டு தன்னுடைய பார்ப்பன ஜாதியை கெட்டியாகப்பிடித்து கொண்டிருந்தால்....சாதி ஒழிந்து விடுமா?....அல்லது பாரதியார் தான் பெரிய மனிதராக ஆகிவிடுவாரா? இல்லை அதை பாப்பாவுக்குத்தான் சொன்னேன் எனக்கில்லை என்ற அர்த்தமாகிவிடுமா?

நம்முள்ளத்திலேயே மிகப்பெரிய மூடநம்பிக்கை இருந்து கொண்டுதான் இருக்கிறது. நம் வீட்டுப்பெண்களையே நாம் மதிப்பதில்லை. இப்படித்தான் ஒரு தனியார் நிறுவனப் பணி நேர்காணலில் ஒருவரிடம் அந்த நிறுவனத்தாரால் கேள்வி கேட்கப்பட்டது.

''பெண்கள் எப்படி இருக்கவேண்டும்.''

அதற்கு விண்ணப்பத்தாரர்...கூறிய பதில்...

.''கற்புக்கரசிகளாக இருக்கவேண்டும்''.கணவனே கண் கண்ட தெய்வம் என்று இருக்கவேண்டும்''

 ''அப்படியா! கற்புக்கரசிகள் என்றால் என்ன? அப்படி யாராவது உள்ளார்களா?''

உடனே விண்ணப்பத்தாரர்.... கோப்பபட்டு

''என்ன இப்படி கூறுகிறீர்கள்....தமிழ் நாட்டில் கண்ணகி, நளாயினி, சாவித்திரி....இப்படி பலர் இருந்தனர்''என்று காணாத கற்புக்கரசிகளை பதிலாக தந்தார்.

என்னப்பா கோப்படுகிறாய்.!..இவ்வளவு பெரிய சமூகத்தில் 3 பேரை மட்டும்தான் கூறுகிறாய்....? அதுவும் காணாதவர்களை பற்றி மட்டும் தான் கூறுகிறாய்....
''ஏன்? நிகழ்வில் இருப்பவர்கள் யாரும் உன்நினைவிற்கு வர வில்லையா...?''

இப்படி சுட்டிக்காட்டியும் புரிந்து கொள்ள முடியாத அந்த மூட விண்ணப்பத்தாரர்....மறுபடியும் பழமைவாதத்தைதான் தன்பதிலாக வைத்தார்....

''இன்னும் நிறையா பேர் இருக்கிறார்கள்....எனக்கு நினைவில்லை....

அதைக்கேட்டு சிரித்த அந்த நேர்காணல் அதிகாரி....

''ஏனப்பா! உன் அம்மா....உன் ஆயா....உன் தங்கை....உன் அக்காள், உன் நெருங்கிய உறவினர்கள் என இவர்கள் எல்லாம் உன் நினைவுக்கு வரவில்லையா? அவர்கள் கற்புக்கரசிகள் இல்லையா...? உன்னை சுற்றி இருப்பவர்களைப் பற்றியே உனக்கு நினைவுக்கு வரவில்லை...தெரியாத கற்புக்கரசிகளைப் பற்றி நினைவில் வைத்துக்கொண்டு என்ன பயன்....''

அப்போது தான் அவருடையத் தவறு அவருக்கு புரிந்த்து....மண்டையை சொரிந்தார் பேண் வரும் அளவிற்க்கு....

இன்னும் சிலர் ஆட்டோவில் இப்படி எழுதி வைத்திருப்பார்கள்....
சீறும் பாம்பை நம்பு! சிரிக்கும் பெண்ணை நம்பாதே!

எங்கே சிரிக்கும் அம்மாவை நம்பமாட்டாயா? சிரிக்கும் உடன்பிறந்த சகோதரிகளை நம்ப மாட்டயா? சிரிக்கும் எந்த நெருங்கிய பெண் உறவினர்களையும் நம்ப மாட்டியா?

உன்னை உயிர்ப்பித்த தாய்க்குலம் சிரிப்பதைக் கூட நம்பாத நீ என்னத்திற்காக உயிர் வாழவேண்டும்.!

பெண்களை போகப்பொருளாக வர்ணிப்பதை தவிர இவர்களுக்கு வேறெதுவும் தெரியாது....

பெண்களை பொது இடத்தில் விளிப்பது கூட நாகரிகமற்ற முறையில் அவள், இவள் என்று தான் ஆண்களால் விளிக்கப்படுகிறார்...கணவனே கூட ''அவள் அப்படித்தான்'' என்று பொது இடத்திலேயே பலர் முன்னிலையிலேயே விளிக்கிறான்...பெண் தன் கணவனை எந்த இடத்திலும் ''அவன்'' என்று பொது இடத்தில் விளிப்பது கிடையாது. ''அவர்'' என்று தான் மரியாதையுடன் கூறுவார். அதே மரியாதையை பெண்ணுக்கு ஆண் அளிப்பதில்லை.

பெண்கள் மாதந்தோறும் துன்பமுறும் விஷயமான மாதவிடாய்...மறுஜென்மம் எடுக்கும் மகப்பேறுவைப் பற்றி பல ஆண்களுக்கு சிந்திக்க தெரியாது....உயிரைப்பிடித்து கொண்டு உயிர் உருவாக்கும் உன்னதத்தைப் பற்றி பல ஆண்கள் உணர்வதும் கிடையாது.

பெண்களுக்கு இயற்கையிலேயே துன்பம் அதிகம்! இதை உணர்ந்தவன் மனிதன்!

மேலே குறிப்பிட்டதைப் போலத்தான் இந்த பெண்ணியம் பற்றி கருத்து வைப்பவர்களும் தங்களை சுற்றி பெண்ணடிமைத்தனம் எந்தளவில் இருக்கிறது என்பதை உணராமல், அதை மாற்ற ஒரு சிறு முயற்சியும் எடுக்காதவர்கள், இன்னும் பெண்ணியம் பற்றி பேசிக்கொண்டிருக்கின்றனர். இதுவரை பெண்ணியம் பற்றி கருத்து வைத்தவர்கள் இந்த இடத்தைக்கூட தொட்டுக்காட்டியது கிடையாது. நம்மை சுற்றி இருப்பவைகளைப் பற்றி யாரும் கவலைப்படுவதே கிடையாதே! அடுத்த வீடு! அடுத்த நாடு! இதைப்பற்றி பேச சொன்னால் நாள் முழுதும் வாய் வலிக்கும் அளவுக்குப் பேசும் மனப்பான்மை தானே....நாட்டில் பெருத்து இருக்கிறது.

முதலில் பாரதியார் பாடல்களை உதாரணம் காட்டுவதை நிறுத்தவேண்டும்!. அவரே அவர் பாடலில் சுட்டிக்காட்டியபடி பின்பற்றி நடக்கவில்லை.

வேண்டுமென்றால் வியாபாரத்திற்கு அவர் பாடலைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.


ஒரு பெண் சமுதாயத்தில் பிறக்கும் பொழுதே திருமணத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு தான் அடிமையாகவே குழந்தையில் இருந்து வளர்க்கப்படுகிறார்...பெண் பிள்ளைகளுக்கு எல்லா வீட்டு வேலைகளும் இளமையிலேயே கற்றுத்தரப்படுகிறது. ஆண் பிள்ளைகளுக்கு மட்டும் ஆணாதிக்கம் கற்றுத்தரப்படுகிறது. பெண் இன்னொரு வீட்டிற்கு போகப்போகிறவர் என்ற எண்ணத்தில் தான் வளர்க்கப்படுகிறார். வீட்டில் உள்ள அனைவரது துணிகளையும் துவைப்பது முதல் சமையல் வேலை வரை பெண் தான் செய்யவேண்டும். அதன்பிறகு கல்வியிலும் கவனம் செலுத்தவும் வேண்டும், அதில் முதன்மை பெற வேண்டும்....

திருமணத்திற்கு பின்னும் ஆணாதிக்கத்தை எதிர்த்து போராடவேண்டும். பின்பு அதே பெண்ணே ஆணாதிக்க மனப்பான்மைக்கு உடன் பட்டவறாக மாற்றவும் படுகிறார். பெண்ணே பெண்ணிற்கு எதிரியாக மாறுவது இப்படித்தான்...அது தான் மாமியார் மருமகள் சண்டைகளாக மாறுவதற்கான காரணம். 

பெண் செய்யும் அத்தனை குற்றத்திலும் ஆண் சம்பந்தப்பட்டிருப்பான். பெண் தனித்து எந்த குற்றத்தையும் புரிந்ததில்லை....எந்த குற்றத்தின் பின்னணியிலும், எப்பொழுதும் ஒரு ஆண் சம்பந்தப்பட்டிருப்பான்....

(அது தந்தை, சகோதரன், காதலன், கண்வன், மகன், மச்சினன், மருமகன், பேரன்....என்று யாராவது ஒரு ஆடவன் சம்பந்தப்பட்டிருப்பான்)

பல சமயங்களிலும், புரணாங்களிலும் பெண்களை இழிவுப்படுத்தி தான் கூறப்பட்டுள்ளது...அதில் பார்ப்பன இந்து சமயம் மிக மோசம்...இன்னும் சில இதர சமயங்களிலும் அப்படித்தான் இழித்து ஆணாதிக்கத்திற்கு ஆதரவாக ஆண் மதவாதிகளால் வஞ்சகமாகப் புகுத்தி எழுதப்பட்டுள்ளது.

இன்னும் இதர சமயங்களில்.....

பாலியியல் தொழில் புரியும் பெண்களை கல்லால் அடித்து கொல்ல வேண்டும்....

''பெண் எப்படி தனியாக பாலியியல் தொழில் புரிய முடியும்!''

அந்த தொழில் புரிய காரணமான ஆணுக்கு எந்த தண்டனையும் கிடையாது....முதலில் இந்த தொழிலுக்கு காரணமான அந்த ஆணைத்தான் கல்லால் அடித்து கொல்ல வேண்டும்....(யாரையும் கொல்ல வேண்டாம்...சட்டம் சும்மா விடாது...)

அம்மாதிரி சமயக்குப்பைகளை தயக்கமில்லாமல் கொளுத்துங்கள்!

திரைப்படங்களும் இம்மாதிரி பெண்ண்டிமைத்தனங்களை காசுக்காக காட்சிப்படுத்திக் காட்டும். பெண்ணை கை நீட்டி அடிப்பது போன்ற காட்சிகளை, ஆணாதிக்கத்தை ஊக்குவிப்பது போல், ஆதரிப்பது போல் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். இக்காட்சிகளை முதலில் தணிக்கைத் துறையினர் அனுமதிக்க கூடாது. அப்படி அடிக்கும் திரைக்கலைஞர்களையும் மக்கள் ஆதரிக்க கூடாது.

பல உடன்பிறந்த சகோதரிகளைப் பெற்றிருக்கும் ஆண் கூட தன் தங்கை, அக்காள் எந்த காதலும் செய்துவிடக்கூடாது...எனபதிலேயே கவனத்துடன் இருக்கிறான்...

அவன் மட்டும் இன்னொருவரின் சகோதரிகளைப் பார்த்து ஜொல்லு விடலாம்...காதல் செய்யலாம் ...காதல் என்ற பெயரில் கயமைத்தனம் புரியலாம்..

தன் சகோதரிகள் எந்த ஆணையும் ஏறெடுத்து பார்க்க கூடாது. எந்த ஆணும் அவன் உடன்பிறந்த தமக்கைகளை ஏறெடுத்தும் பார்க்க கூடாது. பார்த்தால் அவனுக்கும் உதை, அவன் சகோதரிகளுக்கும் உதை.

.இதுதான் ஆணாதிக்கமனப்பான்மை....தனக்கு இருக்கும் அதே உணர்ச்சிகள் தான் அவன் சகோதரிகளுக்கும் இருக்கும் எனபதை ஏற்றுக்கொள்ள மனமில்லாதவர்கள் தான் இந்த உலகில் அதிகம்.


ஒரு ஆண் எத்தனை திருமணம் வேண்டுமானாலும் புரிந்து கொள்ளலாம். மனைவி இறந்த மறுநிமிடமே..!. மாறாக பெண்ணிற்கு உணர்ச்சிகளே இருக்க கூடாது. இளம் பெண்ணை திருமணம் புரிந்த கையோடு வீட்டில் விட்டு விட்டு தனியாக பொருள் சம்பாதிக்க வெளிநாடு சென்றாலும் கற்புடன் உணர்ச்சிகளை அடக்கிகொண்டு இருக்கவேண்டும். இவன் மட்டும் போகிற இடத்தில் எல்லாம் மேயலாம் கற்பாவது மண்ணாங்கட்டியாவது.


ஒழுக்கத்திற்கு கூட ஆணுக்கு பல விதிவிலக்குகள்...பெண்ணிற்கு மட்டும் தான் கற்பு..நெறி....

ஆணுக்கு அது தேவையே இல்லை...ஒழுக்கமும் தேவையே இல்லை...இதுதான் இந்த சமூத்தின் மூட நியதி...

பெண்ணியம் பேசுபவர்களே! முதலில் உங்கள் வீட்டுப் பெண்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்....நீங்கள் பழமைவாதிகளாக இருந்து கொண்டு ஊருக்கு உபதேசிக்கப் புறப்படாதீர்கள்....!

''பெண்'' குழந்தையில் இருந்து முதுமை அடையும் வரை அடிமையாகவே வாழ்கிறாள்! வாழவைக்கப்படுகிறாள்! ஆண்களால் அடிமைப்படுத்தப்படுகிறாள்...இதை எதிர்ப்பவர் வீட்டிலும் இந்த முறை பின்பற்றப்படுகிறது,,,,என்பது தான் உண்மை....முதலில் அதைக்களைய முற்படுங்கள்....

வீட்டிற்குள்ளே களையவேண்டிய பெண்ணடிமைத்தனங்கள் நிறைய உள்ளன...கன்னிகாதானம், வரதட்சணை, இனிஷியல், பெண்ணை வேலைக்காரியாக, கொத்தடிமையாக வளர்ப்பது,,,போன்ற நிறைய அடிமைத்தன விஷயங்கள் உள்ளன...

பெண்கள், திருநங்கைகள் அவர்களுடைய சுத்ந்திரத்தை எடுத்துக்கொள்ளும் பொழுது, ஆண்கள் அதை தடுக்காமல் அவர்களுக்கான வழியை அடைத்துக்கொள்ளாமல் வழிவிட்டாலேப் போதுமானது. 
....தகவலுக்காக.

Tuesday, 23 March 2010

மனித உயிர்களோடு விளையாடும் காலாவதியான மருந்துகள்

.

சென்னை : காலாவதியான மாத்திரைகளை விற்று வந்த மோசடி கும்பல் போலீசில் சிக்கியது. மக்களின் உயிரோடு விளையாடும் இந்த கும்பலை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் தலைமறைவாகியுள்ளனர். அவர்களை பிடிக்க போலீஸ் தனிப்படை அமைத்துள்ளது. காலாவதியான மாத்திரைகளை கண்டுபிடிப்பது எப்படி என்பது குறித்து அதிகாரிகள் இன்று கோட்டையில் ஆலோசனை நடத்துகிறார்கள்.

கம்பெனிகள் தயாரிக்கும் மாத்திரைகளை குறிப்பிட்ட காலம் வரை தான் பயன்படுத்த முடியும். அதன் பிறகு அவை கெட்டுப் போய்விடும். இப்படி கெட்டுப்போன, காலாவதியான மாத்திரைகள் பல கடைகளில் விற்கப்படுவதாக மருந்து கட்டுப்பாட்டுத் துறைக்கு தகவல்கள் வந்தன. இதைத் தொடர்ந்து அவர்கள் போலீசில் புகார் செய்தனர். போலீசாருடன் இணைந்து மருந்து கட்டுப்பாடுத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் காலாவதியான மாத்திரைகள் எப்படி கடைகளுக்கு மீண்டும் விற்பனைக்கு வருகின்றன என்ற திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னை கொடுங்கையூரில் குப்பைகள் கொட்டும் இடம் உள்ளது. இங்கு கொட்டப்படும் கழிவுகளில் காலாவதியான மருந்துகளும் இருக்கும். இதனை அந்த பகுதியில் வசித்து வரும் ரவி, அவரது மனைவி சுனிதா ராணி ஆகியோர் ஆட்களை வைத்து சேகரித்துள்ளனர். அவற்றை சேகரித்து தருபவர்களுக்கு கிலோவுக்கு ரூ.150 கொடுத்துள்ளனர். இந்தத் தகவல் கிடைத்ததும் போலீசார் அவர்களை விசாரித்தனர். அப்போது சுனிதா ராணி மட்டும் போலீசில் சிக்கினார். ரவி தலைமறைவாகிவிட்டார்.

பிடிபட்ட சுதாராணியிடம் நடத்திய விசாரணையில், குப்பைமேட்டில் கிடக் கும் காலாவதியான மாத்திரைகளை வாங்கி கோயம்பேட்டில் உள்ள மீனா ஹெல்த்கேர் நிறுவனத்துக்கு சொந்தமான கடைகளில் விற்றுவிடுவோம் என்று கூறினார். உடன் கோயம்பேட் டில் சம்பந்தப்பட்ட இடத்தை போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது குடோனில் பதுக்கி வைக்கப்பட்ட காலாவதியான மருந்துகள் பெட்டி பெட்டியாக சிக்கின. பல லட்ச ரூபாய் மதிப்புள்ள காலாவதி மருந்து களை போலீசார் கைப்பற்றி னர். உடன் குடோனில் வேலை பார்த்த கிருபாகரன்(30), ராமகிருஷ்ணன்(35), விஜயகுமார்(34), கோவிந்தன்(29), ஜெகதாம்மா(30), தர்மராஜன்(50) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். சுனிதா ராணியையும் கைது செய்தனர்.

குடோன் உரிமையாளர் மீனாட்சி சுந்தரம் தலைமறைவாகிவிட்டார். இவர் சென்னை மாவட்ட மருந்து விற்பனையாளர்கள் சங்க தலைவராக உள்ளார். இது தொடர்பாக எழும்பூர் சஞ்சய் குமார், முத்தமிழ் நகர் ரவி, சூளைமேடு வெங்கடேசன், பாஸ்கரன், பிரதீப், ஜோட்டியா, சேகர் உள்பட 7 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இவர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பிடிபட்டவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. குப்பைமேடு மட்டுமல்லாமல் மருந்துகளை விற்கும் சூப்பர் ஸ்டாக்கிஸ்ட்டுகளை, இந்த மோசடி கும்பல் தங்கள் கையில் போட்டுக்கொண்டு, காலாவதியான மாத்திரைகளை குறைந்த விலை கொடுத்து வாங்கியுள்ளது. பின்னர் அவற்றை கோயம்பேடு குடோனுக்கு கொண்டு சென்று, கெமிக்கல் மூலமாக அதில் உள்ள தாயாரிப்பு தேதி, காலாவதி தேதிகளை அழித்துவிட்டு, புதிதாக வேறு தேதிகளை போட்டுள்ளனர். பின்னர் இந்த மாத்திரைகளை கம்பெனிகள் தயாரித்து தந்த மாத்திரைகளைப் போல நாடுமுழுவதும் விற்று பல கோடி ரூபாய் சம்பாதித்துள்ளனர்.

காலாவதி மருந்துகள் பிடிபட்டது குறித்து சுகாதாரத்துறை செயலாளர் சுப்புராஜிடம் கேட்ட போது, ‘‘உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் காலாவதியான மாத்திரைகளை விற்கும் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. காலாவதி மருந்துகளை விற்பது நிரூபிக்கப்பட்டால், ரூ. 10 லட்சம் அபராதமும், ஆயுள் தண்டனையும் கிடைக்கும். காலாவதியான மருந்துகளை எப்படி கண்டுபிடிப்பது, பொது மக்களுக்கு எப்படி விழிப்புணர்வை ஏற்படுத்துவது, இப்போதுள்ள பிரச்னையை எப்படி சமாளிப்பது என்பது குறித்து அதிகாரிகளுடன் இன்று தலைமை செயலகத்தில் ஆலோசனை நடக்கிறது. காலாவதி மருந்து குறித்து தகவல் தர ஹெல்ப்லைன் அமைப்பது குறித்தும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும்’’ என்றார்.

இது மனிதாபிமானம்
காலாவதி மருந்து விற்ற மீனாட்சி சுந்தரம் தலைமறைவாகிவிட்டார். மேலும் சிலர் சிக்குவார்கள் என்று போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது. இந்நிலையில் போலீசார் கோயம்பேடு குடோனில் காலாவதி மருந்துகளை பிடித்த தகவல் கிடைத்ததும், அது என்ன மருந்து என்பதை தெரிந்து கொண்ட திருவாரூர் மருந்து வியாபாரிகள் அவற்றை மக்களுக்கு விற்பதை நிறுத்திவிட்டனர். இந்த மருந்துகளை சாப்பிட்டு மக்கள் பாதிப்படைய கூடாது என்று இந்த நடவடிக்கையை அவர்கள் எடுத்துள்ளனர்.

......தினகரன் 22.03.2010

கூடுதல் தகவல்....
காலாவதியான மருந்து விற்பனையாளர்களை தண்டிக்க சட்டம் அமல்.....ஆயுள் தண்டனை,

தப்பிச்சென்ற காலாவதியான மருந்து விற்பனையாளர்களை பிடிக்க 5 தனிப்படை.....நீதிமன்றம் முன்ஜாமின் மறுப்பு (சென்னை செசன்ஸ் நீதிமன்றம்)

குறிப்பாக தாய்மார்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குழந்தைகளுக்காக அடிக்கடி மருந்துகள் வாங்குபவர்கள் அவர்கள் தான். எந்த கேள்வியும் கேட்காமல்.

போலி மருந்து, காலாவதியான மருந்துகள் பற்றி உடனடியான புகாருக்கு தொலைபேசி 044 24338421.

முக்கிய குறிப்பு எந்த மருந்து வாங்கினாலும் ரசீது வாங்க மறக்காதீர். இல்லையென்றால் மருந்தே வாங்காதீர். அவர்கள் அதற்குரிய உள்ளூர் வரிகளை ரசீது கொடுக்கமலேயே வாங்கி விடுகின்றனர். ஆனால் ரசீது கொடுப்பதில்லை. நாமும் கேட்பதில்லை. படித்தவர்கள் மத்தியிலேயே இந்த விழிப்புணர்வு இல்லை. 

(பயந்தது போல் நடந்துவிட்டது எத்தனை பேர்களின் உயிரைக்கொன்றார்களோ? எவ்வளவு காலம்....இதை தொடர்ந்திருப்பார்கள்....இந்த மனிதன் சென்னை மாவட்ட மருந்து விறபனையாளர் சங்கத் தலைவர் வேறு...கொஞ்சம் அசந்தால் நம்ம உயிர் நம்முடையது இல்லை)

Sunday, 14 March 2010

எனக்கு ஷூ தைக்கவும் தெரியும்.........




ஆதிக்க சக்திகள் ஒரு சமூகத்தை ஆக்கிரமித்து வருவதும் அதன் பொருட்டு ஒடுக்கப்பட்ட சமூகத்தை எழுந்திருக்கவிடாமல் செய்வது எனபது காலங்காலமாக தொடர்ந்து வருவது தான். இது ஏதோ இந்தியாவில் மட்டும் தொடர்வது அல்ல அனைத்து நாடுகளிலும் வெவ்வேறு வடிவங்களில், வெவ்வேறு காரணங்களை வைத்து மனிதனை மனிதனே தாழ்த்துகின்ற நிலை தொடர்ந்து வருவது தான். சாதி வெறிகளாகட்டும், மதவெறிகளாகவும், இனவெறிகளாகவும் இந்தியாவில் தொடர்வது போல பிறநாடுகளில் மதவெறிகளாகவும், நிறவெறிகளாகவும் தொடர்கின்றன. அதற்காக பல முனை போராட்டங்களையும், மகப்பெரிய யுத்தங்களின் மீலமும் அவர்கள் எதிர்த்து வருவதை நாம் காணாமலில்லை.

இப்படிப்பட்ட ஆதிக்க வெறியினரிடமிருந்து இன்று ஒரு ஒபமா வெற்றிபெற்றிருந்தாலும். இந்த வெற்றி அவ்வளவு சுலபமானதல்ல என்பது பெரும்பான்மையான மக்கள் உணராமல் இல்லை. ஆதிக்க வெறி கொண்டவர்கள் ஏன் இன்றளவிலும் தன் சகமனிதனையை தாழ்த்த எண்ணம் கொண்டிருப்பதும், அது இன்றளவிலும் விஞ்ஞானம் வளர்ந்து விட்ட நிலையிலும் பலத்த எதிர்ப்புகிடையே தொடர்வதும் விந்தையானதுதான்.

முடிவில் அழியப்போவது என்னமோ ஆதிக்க வெறிகொண்டவர்கள் தான். மண்ணை கவ்வுவதும், மண்ணோடு மண்ணாவதும் அந்த ஆதிக்க வெறி கொண்ட மாக்கள் தான் என்பதை நல்லோர்  அனைவரும் அறிவர். 

அமெரிக்காவின் அதிபராக இருந்த ஆப்ரகாம் லிங்கன் அமெரிக்காவின் அதிபராக பொறுப்பேற்றதை பொறுக்கமுடியாத ஆதிக்க மனப்பான்மை கொண்ட நிறவெறியனர் அவரை பாரளுமன்றத்திலேயே அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் கருவிக்கொண்டிருந்தனர். ஒரு ஆதிக்க மனப்பான்மை கொண்ட ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், ஆப்ரகாம் லிங்கனை அனைவர் முன்னிலையிலும் அவமானப்படுத்த வேண்டும்  என்ற எண்ணத்தோடு கூறியது இதுதான்...

''மிஸ்டர் ஆப்ரகாம் லிங்கன் எனது காலில் இருக்கும் ஷூ வைப்பாருங்கள் இது உங்கள் அப்பா தைத்து கொடுத்தது தான்......''

அதற்கு சிறிதும் லட்சியம் செய்யாத ஆப்ரகாம் லிங்கன்...

''அதற்கென்ன அந்த ஷீ கிழிந்து விட்டால் சொல்லுங்கள் நான் இன்னொன்றை புதிதாக நன்றாக தைத்து தருகின்றேன்...''

என்று கூறிய லிங்கன்...

''எனக்கும் ஷீ தைக்கவும் தெரியும்...''

.என்று முன்னே நடந்தார்... 

இரண்டடி நடந்து சென்று பின் திரும்பிய லிங்கன்..

''எனக்கு நாடாளவும் தெரியும்.....''

அந்த பதிலை எதிர்பார்க்காதா நிறவெறிக்கொண்ட மனிதன் கூனிக்குறுகினான் அம்மன்றத்தில் அனைவரின் முன்னிலையிலும்.....

... பேராசிரியர்.சுப வீ ரப்பாண்டியன்



Thursday, 18 February 2010

நல்லவரிடம் தோற்பதும் பெருமை தானே!







சில வருடங்களுக்கு முன் என்னுடைய அலுவலகத்தில் ஒரு கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக சிறப்பு விருந்தினராக மறைந்த இலக்கியச் செல்வரும், நாடாளுமன்ற மேலவை உறுப்பினருமான வலம்புரி ஜான் வருகை புரிந்து எங்களது கருத்தரங்கில் உரையாற்றினார். அப்பொழுது அவர் கூறிய நிகழ்வுதான் பின்வருவன-;
நம் இந்தியக் குடியரசுத் தலைவரான அப்துகலாம் (அன்றையக் காலகட்டத்தில் அவர்தான் குடியரசுத்தலைவர்) அடிக்கடி கூறும் கீதையின் வாசகமான 

'' எது நடந்ததோ! அது நன்றாகவே நடந்தது! எது நடக்கிறதோ? அது நன்றாகவே நடக்கிறது! எது நடக்கவிருக்கிறதோ? அதுவும் நன்றாகவே நடக்கும்!'' 

என்று அடிக்கடி கூறிவருகின்றாரே! இதற்கு என்ன சொல்கிறார்! என்ற நோக்கத்தில் 


''மும்பையில் சில நாட்களுக்கு முன் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததே!, அதில் பலர் மாண்டனரே! அதுவும் நன்றாகவே நடந்தது! என்று எடுத்துக்கொள்ளலாமா? உங்கள் கருத்துப்படி'' 

''என்று நம் உயர்திரு குடியரசுத் தலைவருக்கு தமிழில் கடிதம் எழுதினேன்! அவர் கண்ணில் இது படுமா? அதற்கு பதில் எழுதுவரா? அவருக்கு நேரமிருக்குமா? என்ற எண்ணத்திலும், அதிக எதிர்பார்ப்பில்லாமலும் இருந்தேன். ஆனால் இரண்டு நாள் கழித்து என் இல்லத் தொலைபேசிக்கு அழைப்பு வந்தது, அழைத்தது வேறு யாருமல்ல! நம் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமே தான். நானோ அதிர்ச்சியில் ஒரு நிமிடம் நின்றேன். அவரே தொடர்ந்தார்....

''நான் தான் அப்துல் கலாம் பேசுகிறேன்! நலமா! வலம்புரி ஜான் அவர்களே! என்று வீட்டில் உள்ள அனைவரின் நலனையும் விசாரித்து விட்டு, எது நடந்ததோ? நன்றாகவே நடக்கும் என்று நல்லவற்றுக்குத்தான் குறிப்பிட்டேன். நல்லது நடக்கவேண்டும் என்ற எண்ணத்தில் மட்டுமே குறிப்பிட்டேன். இது (மும்பை சம்பவம்) நடந்ததற்காக ஏற்கனவே மிக வருத்தத்தில் இருக்கிறேன். உங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது கண்டு மிகுந்த வருத்தமடைகிறேன்'' என்று குறிப்பிட்டார்.  எனக்கோ மிக அதிர்ச்சிஅவர் தொலைபேசியில் அழைத்ததில் இருந்தே, ஆனால் மேலும் அவர் தொடர்ந்தார் எப்படி? இப்படித்தான் 

'' நீங்கள் கூடத்தான் சன் தொலைக்காட்சியில் தினமும் 'இந்தநாள் இனிய நாள்' என்று கூறுகிறீர்கள். அனைவருக்கும் இனியநாளாக அமைந்து விடுகின்றதா?'' என்று பதிலுக்கு என்னை மடக்குவது போல் வினவினார். 

''ஆம் நீங்கள் சொல்வது சரிதான் ஐயா!'' என்று கூறிவிட்டு  இப்படி மனதுக்குள் நினைத்துக்கொண்டேன் '' நான் கூறும்  இந்த நல்ல விஷயங்களை பின்பற்றினால் இந்த நாள் மட்டுமல்ல எந்த நாளும் இனிய நாள் என்று வழக்கமாக சன் தொலைக்காட்சியில் கூறிடுவேன். அதை பின்பற்றுபவர்கள் அனைவருக்கும் எந்த நாளும் இனிய நாளாகத்தான் இருக்கும்'' என்று கூற நினைத்து என் மறுமொழியை மனதுக்குள்ளேயே பூட்டிக் கொண்டேனே தவிர!, அவரிடம் கூற மனம் வரவில்லை. 

ஏனென்றால் அந்த மாபெரும் மனிதர், இந்தியாவின் மிக உயர் ஏன்? மிக உச்ச பதவியில் இருப்பவர். ஆனால் என் இல்லம் நோக்கி பாரபட்சம் பார்க்காமல் இந்தத் தமிழனையும் மதித்து அழைக்கின்றாரே! தமிழை அவ்வளவு நேசிக்கின்றாரே! ஒரு சாமான்யனையும் தனக்கு நிகராக வைத்து போற்றுகின்றாரே! அந்த மனிதரிடம் நமது திறமையை காட்டி என்ன? ஆகப் போகின்றது. இவரிடம் தோற்பதைவிட மிகப்பெரிய பெருமை வேறொன்றுமில்லை! என்று நினைத்து அவருக்கு நன்றிகூறி விடை கொடுத்தேன். அது தான் அப்துல் கலாம்! அதுதான் அவரை அனைவரும் நேசிப்பதற்கான காரணம் என்று எங்களிடம் அவரின் சிறப்பை கூறினார் வலம்புரிஜான்.

நல்லவரிடம் தோற்பதும் பெருமை தானே! என்ற புதிய விளக்கத்தை பெற்ற திருப்தியோடும், அப்துல் கலாமின் மிக உயர்ந்த குணத்தை போற்றுகின்ற மனதோடு கூட்டம் இனிதே முடிந்தது.

----நன்றி அனுபவம்

Tuesday, 9 February 2010

வரி ஏய்த்த நகை கொள்ளை போனது, அபகரித்தவர் வாழ்க்கை கொள்ளியில் போனது!




சில வருடங்களுக்கு முன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு ஒரு விசேஷத்திற்காக தங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆகையால் அங்கு புறப்பட்டு சென்றேன். அந்த பகுதி பகலில்  மக்கள் நடமாட்டம் அதிகமிருக்கும் சந்தைப்பகுதி, உறவினர் இல்லமும் அந்தப் பகுதியொட்டிய தெருவில் அமைந்துள்ளது குறிப்பிடத் தக்கது.

வீட்டிற்குள் நுழையும் போதே உறவுக்காரப் பாட்டனாரிடம் சில அதிகாரிகள் கையொப்பம் வாங்கிக் கொண்டிருந்தனர். அந்த வீட்டின் எதிர்வீட்டில் அந்த அரசு அதிகாரிகள் போவதும் வருவதுமாகவும், சிலப்பெட்டிகளை தூக்கி வருவதுமாக இருந்தனர். அது  ஒரு மார்வாடி வீடு, வெளியில் நிறுத்தப்பட்ட வாகனம் பழைய ஸ்டாண்டர்டு வேன், (முற்றிலும் சீலிடப்பட்ட வாகனம்) இப்பொழுது அங்கே என்ன நடக்கின்றது என்பதை நானே யூகித்துக்கொண்டேன். 

வேறொன்றமில்லை வருமான வரித்துறையினர் அந்த வீட்டை சோதனை செய்து கொண்டிருக்கின்றனர். அந்த மார்வாடி முகத்தில் சவக்கலை, அந்த அதகாரிகளிடம் என்னென்னவோ பேசி கெஞ்சிக்கொண்டிருந்தார். அவர்கள் அதை அலட்சியம் செய்து கொண்டே அவர்கள் பணியை செய்து கொண்டிருந்தனர். அந்த மார்வாடி பல இடங்களில் பவுன் புரோக்கர் மற்றும் வட்டிக்கடை நடத்திவருபவர்.

மெதுவாக அங்கிருந்த உறவுகளிடம் '' என்ன? கையொப்பம் வாங்குகின்றனர்! பாட்டனாரிடம்...'' (அது ஒரு பெரிய கூட்டு குடும்பம், அந்த வீட்டின் மூத்தவரான அந்த (பாட்டனார்) பெரியவர் ஊர்த்தலைவர், அரசியல் புள்ளி மற்றும், வியாபாரி சங்கத் தலைவரும் ஆவார்) என்று வினவியபோது. அவர்கள் கூறியபோது எதிர் வீட்டில் நடக்கும் சோதனையில் கைப்பற்றிய ஆவணங்கள், சொத்துக்கள், மற்றும் ரொக்கங்கள் இவற்றிற்காக சாட்சி கையொப்பம் வாங்குகின்றனர். 

இதற்காக அந்த பெரியவர் மறுத்துக் கொண்டிருந்தார். அவர்களும் '' நீங்களே பெரியத் தலைவராக இருந்து கொண்டு மறுத்தால் எப்படி?'' என்று வாதாடிக்கொண்டிருந்தனர். அது வேறொன்றுமில்லை அந்த மார்வாடி எதிர் வீட்டுக்காரர் தவறாக நினைத்துவிடப்போகிறார் என்ற அச்சத்தில் தான் அந்த பெரியவர் மறுத்துக் கொண்டிருந்தார். இறுதியில் கையொப்பம் போட்டுவிட்டார். பொருள்களும் வாகனத்தில் போய்விட்டது.

இது இரவு பகலாக இரண்டு நாளாக நடந்து கொண்டிருந்த  சோதனை அன்று தான், அதாவது  நான் செல்லும் போது தான் முடிவடைந்திருக்கிறது.

இதில் என்ன செய்தியிருக்கிறது..... இதற்கு பின் தான் ஒரு செய்தியிருக்கிறது..

அதற்குபின் ஒருவாரம் அங்கே தங்கியிருந்தேன். அன்றிரவே அந்த வீட்டு மொட்டை மாடியில், தூக்கம் வராமல், நடு இரவில் காற்று வாங்குவதற்காக தற்செயலாக சென்றேன் இரவு 1 மணியளவில். அப்போதே அந்த விட்டு கூரையின் மீது சில நடமாட்டங்கள் நிழலாகத் தெரிந்தது. வேறோருவராக இருந்தால், அந்த திடீர் உருவங்களைப் பார்த்து பேய் என்று பயந்து வந்திருப்பார்கள். அந்தப் பகுதியில் இரவில் ஒரு நடமாட்டமும் இருக்காது. ஆள் அரவமற்று நிசப்தமாக இருக்கும்.

சில உருவங்கள் குனிவதும் என் தலை பார்த்ததும், பதுங்குவதுமாக இருந்தது. அந்த உருவங்கள் எதையோ தேடிக்கொண்டிருந்ததை மட்டும் என்னால் சந்தேகத்துடன் உணரமுடிந்தது. அது பற்றியும் உறவுகளிடமும் விசாரித்தேன் என்னைத்தான் திட்டினார்கள்... உனைன யார் பேய் உலாவுகின்ற நேரத்தில் மொட்டை மாடிக்கு செல்ல சொன்னது.... என்று பெரியவர்கள் எனக்கு சுற்றிப்போட ஆரம்பித்தனர்.

மீண்டும் அந்த விசேஷ நிகழ்ச்சிகள் முடிந்து வீடு திரும்பினோம். ஒரு 1 மாதம் கழித்து மீண்டும் அந்த இல்லம் சென்று தங்க வேண்டியிருந்தது. சென்றேன். இந்த முறை அந்த மார்வாடி வீட்டில் பாட்டுக்கள் (இந்திப் பாடல்கள் தான்) ஒலித்து கொண்டிருந்தது. வீடே மங்களகரமாக இருந்தது. மார்வாடி வீட்டில் உள்ள உறவுகள் அனைவரும் மார்வாடி வீட்டில் போய்க்கொண்டிருந்தனர். 

மார்வாடி வீட்டு பக்கத்து வீட்டில் ஒரு பால்காரர் வசித்துவருகிறார். அவர் முந்தைய இரவில்  மாரடைப்பால் அகால மரணமடைந்து அவருடைய உடல் வெளியில் இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்டிருந்தது.  அங்கிருந்த பகுதி மக்கள் அந்தப் பால்காரரின் உடலுக்கு மாலை அணிவித்து இறுதி மரியாதையை செலுத்திவிட்டு புன்னைகயுடன் போய்க்கொண்டிருந்தனர்.  போகும் போது அனைவரும் மார்வாடியைப் பார்க்கத் தவறவில்லை. பக்கத்து வீட்டில் துக்கம் மார்வாடி வீட்டில் பாட்டு, குதூகலம்.... இது திடீரென்று பார்ப்பவர்கள் அனைவருக்கும் சந்தேகத்தை உருவாக்கியது. மார்வாடி எதை பற்றியும் கவலைப்படாமல் இதை செய்து கொண்டிருந்தார்.

இவர்கள் ஏதோ விஷயம் புரிந்து கொண்டு சிரிக்கின்றனர். இத்தனைக்கும் துக்க வீட்டிற்கு சென்று வருபவர்கள் சிரிப்பார்களா? எனக்கு வழக்கம் போல சந்தேகம் வந்து உறவுகளிடம் கேட்ட பொழுது ஒரு கதையை கூறினர்.....அந்த கதை இது தான்...

கடந்த முறை தணிக்கை அதிகாரிகள் அவர் வீட்டில் திடீரென்று நிழைய முற்பட்டபொழுது அந்த மார்வாடி அனைத்து நகைகளையும், எடுத்து வீட்டின் கூரை மீது எறிந்திருக்கிறார். அது பல இலட்ச மதிப்புள்ள நகைகள். இதை இரு கண்கள் முதலிலேயே பார்த்து விட்டது. அதற்கு பின் கதவைத்திறந்து அதிகாரிகளை உள்ளே விட்டிருக்கிறார் இந்த மார்வாடி. வீட்டின் சோதனை நடைபெற்றிருக்கும் பொழுதே ஒரு உருவம் முகத்தை மறைத்து கொண்டு பக்கத்து வீட்டின் மாடி சன்னல் பகுதியில் இருந்து கையை விட்டு இந்த மூட்டைகளை எடுத்துக் கொண்டது. 

அந்த உருவம் வேறு யாருமல்ல. அந்த பக்கத்து வீட்டு பால்காரர் தான். இதை இந்த மார்வாடி பார்த்துவிட்டார். அப்போது கத்தவும் முடியாது. தன் கண்ணெதிரே நகை களவாடப்படுவதை இல்லையில்லை எடுக்கப்படுவதை பார்த்துக் கொண்டிருந்தார், அதிகாரிகளின் கண்ணில் மண்ணைத் தூவிய மார்வாடி. அவர் அதை பிறகு பக்கத்து வீட்டாரிடம் பார்த்து கேட்டு வாங்கிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் இருந்தார்.

வருமான வரி சோதனைகள் முடிந்து அவர்கள் புறப்பட்டதும். அந்தப் பால்காரரிடம் போய் நகைகளை கேட்டிருக்கிறார் மார்வாடி.

''பால்காரர் எந்த நகை? என்னிடம் வந்து கேட்கிறாய்? ''என்று பதிலுக்கு ஒன்று தெரியாதவர் போல் நடிக்க... 
....மார்வாடி தொடர்ந்து நடந்தவைகளைக் கூற....
...''நான் எதையும் எடுக்கவில்லை... வேண்டுமானால் காவல் துறையில் போய் முறையிடு....''
(அங்கே போக முடியாதே! இது தெரிந்து தான் பால்காரர் சமயோசிதமாக சொல்கிறார்)
....''''இந்த சோதனைப் பற்றியே எனக்குத் தெரியாது''... என்று பால்காரர் முரண்டு பிடிக்க... ஒரு கட்டத்தில் வாக்குவாதமாக முற்றி...வாய்த்தகராறில் முடிந்தது... ...''என் நகை போனது என்...... (முடிக்கு) சமம், நீ எப்படி வாழ்ந்துவிடுகிறாய் என்று பார்த்துவிடுகிறேன்...''

என்று அவர் பங்குக்கு கூறிவிட்டு வீட்டிற்குள் போய்விட்டார், அந்த மார்வாடி.

இனி என்ன பால்கார்ருக்கு செம குஷி... நகைகளை அப்போதே ஊரில் எடுத்து சென்று பதுக்கி வைத்துவிட்டார், இந்த விபரீத மனிதர்.  உடனே ஊருக்குச் சென்றார் கொஞ்சம் கொஞ்சமாக காசாக்கினார். மிக ஜாலியாக குடியும், குடித்தனமுமாக போயிற்று. ஒரு கட்டத்தில் இவரின் சந்தோஷம் எல்லை மீறி மிக அதிகமாக குடித்தார் மாரடைப்பு வந்து விட்டது. அப்படியே சந்தோஷ மரணமடைந்துவிட்டார்.

இப்போது தெரிந்து விட்டது மார்வாடி ஏன் பாட்டு போட்டுக் கொண்டிருந்தார் என்று? மார்வாடிக்கு மிக சந்தோஷம். பால்காரர் வீட்டில் துக்கம் இவர் வீட்டில் பாட்டுக் கச்சேரி..... திரைப்படத்தில் வந்த வடிவேல் நகைச்சுவை மாதிரி இருந்தது.

வரி ஏய்த்த காசு வாய் புளித்திடுமா?....நாய் வித்த காசு தான் குரைத்திடுமா?....

வரி ஏய்ப்பினால் மார்வாடி நகைகள் கொள்ளை போனது... அதை அபகரித்தவர் வாழ்க்கையோ கொள்ளியில் போனது.... என்று அங்கிருந்தவர்கள் முனகி கொண்டு சென்றனர்... இப்படியல்ல இப்படி...
ஊரை ஏய்த்த மார்வாடிக்கு (மசிறு )போச்சு..... அதை பிடுங்கித்தின்ன பால்காரருக்கு உசிறு போச்சு....
மார்வாடி அப்படித்தானே நகைகளை தூக்கி போட்டார் சர்வ சாதாரணமாக விட்டின் கூரை மேல்....

ஒரு மாதத்திற்கும் மேலாக இந்த விஷயத்தையே அந்த பகுதி மக்கள் தங்களுக்குள் நகைச்சுவையாக சொல்லி சிரித்து கொண்டிருந்தனர்.

இப்போது எனக்கும் புரிந்து விட்டது அன்று ஏன்? நடுஇரவில் அந்த வீட்டின் கூரை மீது நடமாட்டம் தெரிந்ததின் பின்புலம். இதை என் உறவுகளும் உறுதி படுத்தினர். அதற்கு பின் தொடர்ந்து அந்த வீட்டின் கூறை மீது பலர் நடு இரவில், சிறுவர்களும், பேய் மாதிரி தேடிக்கொண்டிருந்ததை காண முடிந்தது. ஆசை எனும் பேய் யாரை விட்டது. அது பிடிக்காத மனிதர்கள் இல்லை. 

''ஆசையே துன்பத்திற்கு காரணம் '' என்று இதற்குத்தான் சாக்கிய முனிவரான கௌதம புத்தர் சொன்னாரோ?