இரண்டாம் உலகப் போர் நடந்த 1945 ஆம் ஆண்டில், அமெரிக்க பிரிட்டன் கூட்டணிப் படைகளுடன் போரிட்ட ஜப்பான், முதல் சில மாதங்களுக்கு, தத்தளித்தது. அமெரிக்கர்கள் பசிபிக்கில் போரிட்டுக் கொண்டே, முன்னேறிக்கொண்டிருந்தனர். ஜப்பானின் வணிக கப்பல்களையும், கப்பற்படையின் விமானங்களையும் அமெரிக்க நீர்மூழ்கி கப்பல்களும், விமானங்களும் அழித்துவிட்டன.
ஜப்பானின் முக்கியத் தாய்நாட்டுத் தீவுகளுக்கு, எண்ணெய் மற்றும் மூலப்பொருட்களின் வரத்து துண்டிக்கப்பட்டது.
ஜப்பானியர் தோல்வியை சந்தித்துக் கொண்டிருந்தனர்.
இருப்பினும் அவர்கள் மிக கடுமையாக எதிர்த்துப் போர் புரிந்தால். அதனை சமாளிக்க முடியாமல் அமெரிக்கர்கள் விட்டுக் கொடுத்துவிடுவர் என்ற நம்பிக்கையில், அவர்கள் சரணடைய மறுத்தனர்.
கூட்டணிப் படை தங்கள் தாய்நாட்டை நோக்கி எடுத்து வைக்கும் ஓவ்வொரு அடிக்கும், அதன் ரத்தத்தை விலையாக தரவேண்டும் என்பதில் ஜப்பானியர் தெளிவாக இருந்தனர்.
அது அமெரிக்கர்களுக்குப் பெரும் பிரச்சினையாக இருந்தது. அதிக அமெரிக்க உயிர்களை இழக்காமல், ஜப்பானை எப்படி? தோல்வியுறச் செய்வது?
அதற்காக, அந்நாடு இதுவரைக் கண்டிராத, ஒரு மிகவும் சக்திவாய்ந்த மற்றும் ஆபத்தான ஆயுதத்தை கையில் எடுக்கும்.
அந்த ஆயுதம் போரின் போக்கை முற்றிலும், முழுமையாக மாற்றிவிடும்.
ஜப்பானியத் தாய்நாட்டுத்தீவுகளை சுமார் 10 லட்சம் வீரர்கள் பாதுகாத்து வந்தனர். அவர்களுக்கு உதவ கிட்டத்தட்ட 5000 விமானங்கள் இருந்தன.
![]() |
ஜப்பானிய கேமிகேசி வீரர்கள் |
கிட்டத்தட்ட இரண்டரை லட்சத்துக்கும் அதிகமான அமெரிக்க உயிர்கள் இழக்கப்படும் என்று கணிக்கப்பட்டது.
![]() |
ஹேரிஸ் எஸ் டூரூமென் |
பிறகு 1945 ஆம் ஆண்டு, ஜூலை மாதம் புதிய அமெரிக்க குடியரசுத்தலைவரான, ஹேரி எஸ் ட்ரூமன் Harry S. Truman , உயர்மட்ட ரகசிய அறிவியல் ஆராய்ச்சித் திட்டத்தின் பயன்களை கேள்விப்பட்டார். அதனை மேன் ஹேட்டன் திட்டம் Manhattan Project என்று அழைத்தனர்.
(Project started at Manhattan District)
மூன்று வருடங்களாக கூட்டணி விஞ்ஞானிகள், அணுகுண்டை தயாரிப்பதில் ஈடுபட்டிருந்தனர். அது ஒரு அணு பிரியும்போது, பெருமளவில் ஆற்றல் வெளியேற்றப்படும் ஒரு ஆயுதம். அது கற்பனை செய்யமுடியாது ஒரு அழிக்கும் சக்தி. அந்த திட்டத்திற்கு ராணுவப் பொறியாளரான, அமெரிக்கப்படைத் தளபதி, லெஸ்லி குரூவ்ஸ் Major General Leslie Groves தலைமை ஏற்றார்.
![]() |
ராபர்ட் ஹோப்பன் ஹைமர் |
அதன் அறிவியல் இயக்குநராக இருந்தவர், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த, 39 வயது நிரம்பிய பௌதிகவாதியான, ராபர்ட் ஹோப்பன் ஹைமர் J. Robert Oppenheimer. கூட்டணியின் மிகச்சிறந்த அறிவியல் வல்லுனர்கள் 3 ஆண்டுகளாக, ஈடுபட்டிருந்தனர்.
ஜூலை மாதம் 16 ந்தேதி காலை 5.30 மணிக்கு, அணுயுகம் ஆரம்பித்தது.
![]() |
டிரினிட்டி அணு வெடிப்பு சோதனை |
ஆபரேஷன் டிரினிட்டி Trinity(nuclear test) வெற்றியடைந்தது என்ற செய்தி, குடியரசுத் தலைவர் ட்ரூமெனை விரைவாக சென்றடைந்தது.
அவர் ஐரோப்பாவின் எதிர்காலத்தைப் பத்தி கலந்து பேசுவதற்காக, ஸ்டாலினையும், சர்ச்சிலையும் சந்திக்க, பெர்லினின் புறநகர் பகுதியில் உள்ள போட்ஸ்டேமிற்கு Potsdam சமீபத்தில் தான் வந்திருந்தார்.
ட்ரூமென் தயங்கவில்லை. அவர் புதிய குண்டுகளை ஜப்பானில், எவ்வளவு சீக்கிரம் போட முடியுமோ? அப்படி தயாராகும்படி தன் படைத்தளபதிக்கு ஆணையிட்டார்.
இரண்டு அணுகுண்டுகள். ஒன்று லிட்டில் பாய் Little Boy என்று குறியிடப்பட்ட யுரேனியம் கருவி. மற்றொன்று ஃபேட் மேன் Fat man என்ற குறியீட்டுப் பெயர் கொண்ட புளுட்டோனியம் குண்டு.
இரண்டும் மரியானாத் தீவுகளுக்கு கொண்டு செல்லப்பட்டது.
![]() |
எனோலா கே விமானத்துடன் பால் டிபெட்ஸ் விமானி |
அங்கே மிக அதிகம் அனுபவம் கொண்ட, மற்றும் சிறப்பாகப் பயிற்சி கொடுக்கப்பட்ட, 509 வது கூட்டுப்படைக் குழுவின் தலைவருமான, பால் டிபெட்ஸ் Colonel PaulTibbets தன் B 29 ஐ (விமானம் Boeing B-29 Super fortress ) தயார் படுத்தினார்.
ஆகஸ்டு 6 ஆம் தேதி காலை, 2.45 ற்கு டிபெட்ஸ் தன்னுடைய தாயின் பெயரான, எனோலா கே Enola Gay எனப்பெயரிடப்பட்ட விமானத்தைக் கிளப்பினார். லிட்டில் பாயை எடுத்துக்கொண்டு.
அந்த விமானம், ஜப்பானின் நான்காவது பெரிய நகரமான, ஹீரோஷிமாவை Hiroshima, நோக்கி ஒரு தடங்கலுமில்லாமல் பறந்தது. ஞாயிற்றுக்கிழமையின் பிரகாசமான காலையில், எட்டு மணிக்கு எனோலா கே EnolaGay, நகரின் மேலே சுமார் பத்தாயிரம் மீட்டர் உயரத்தில், பறந்தது. எட்டு பதினைந்து ஆனவுடன், லிட்டில் பாய் கீழேப் போடப்பட்டது.
அந்த யுரேனிய அணுகுண்டில், கிட்டத்தட்ட பதிமூன்றாயிரம் டன்களின் வெடிமருந்து சக்தி அதில் இருந்தது. அந்த நாய்குடைப் போன்ற மேகத்தின் கீழே, வெப்பநிலை, ஐந்தாயிரம் டிகிரி சென்டிகிரேடை தொட்டது.
ஆயிரக்கணக்கான மக்கள், உடனேயே ஆவியாகிப்போயினர். சுற்றுபுறத்தில் சுமார் எட்டு கிலோ மீட்டர் வரை இருந்த கட்டிடங்கள், அதிர்ச்சி அலைகளால் தரைமட்டமாயின.
இறப்பு எண்ணிக்கையின் கணிப்பு பெருமளவு, வேறுபட்டது. சிலர் நாற்பதாயிரம் பேர் என்றனர். வேறுசிலர், ஒரு லட்சம் என்றனர்.
அடுத்துவந்த வாரங்களில் கதிர் வீச்சின், நச்சுத்தன்மையால் மேலும் ஆயிரக் கணக்கானோர் இறந்தனர்.
1945
ஆம் ஆண்டு ஆகஸ்டு 7 ஆம் தேதி,
குடியரசுத் தலைவர் ட்ரூமென் அணுகுண்டைப் பற்றி
உலகிற்குத் தெரிவித்து ஜப்பானிற்கு எச்சரிக்கை விடுத்தார்.
ஆனால் ஜப்பான் சரணடைவதற்கான செய்தி, கிடைக்கவில்லை. இரு நாட்களுக்குப் பின் ஆகஸ்டு 9 ஆம் தேதி, முக்கிய ராணுவத் துறைமுகமான, நாகசாகியில் Nagasaki பேட் மேன் Fat man குண்டு வீசப்பட்டது.
இந்த புளுட்டோனிய அணுகுண்டு, இன்னும் அதிக சக்தி வாய்ந்ததாக இருந்தது. உண்மையில் அந்த அணுகுண்டு, இலக்கில் இருந்து மிகவும் விலகி விழுந்தது. இருப்பினும், அது பெரும் அழிவை உண்டாக்கியது.
அந்த குண்டுவெடிப்பினால் 35,000 -50,000 எண்ணிக்கைக்கும் இடைப்பட்ட மக்கள் உயிரிழந்ததாக கணிக்கப்பட்டது.
தாங்கள் ஒரு புதிய, மற்றும் அச்சமூட்டும் ஆயுதத்தைச் சந்தித்தோம் என்பதை அச்சமயம் ஜப்பானிய அரசாங்கத்திற்கு எந்த சந்தேகமும் இல்லை.
ஆனால், இதுவாவது அவர்களை, சரண்டையும்படி வற்புறுத்துமா? என்பது தான் கேள்வியாக இருந்தது. அதன்பின் ஆகஸ்டு 14 ஆம் தேதி, கூட்டணிப் படைகளின் தளபதிகளின் ஆணைகளை ஒப்புக்கொண்டால், அரசரின் நிலை பாதுகாக்கப்படும் என்ற செய்தியை ட்ரூமென் நிர்வாகம் அனுப்பியது.
ஹீரோ ஹிட்டோ Hirohito தனது பெரும் செல்வாக்கினைப் பயன்படுத்தி, தாங்க முடியாதவைகளை தாங்கவும், விதிகளை ஒப்புக்கொள்ளவும் தனது போர் அமைச்சரவைகளுக்கு அறிவித்தார்.
அந்த தினம் ஜப்பான் எந்த நிபந்தனையுமில்லாமல் சரணடைந்ததாக, வாஷிங்கடனில் குடியரசுத் தலைவர் ட்ரூமென் அறிவித்தார்.
ஒவ்வொரு அமெரிக்க நகரத் தெருக்களிலும், சந்தோஷமாக கூட்டம் கூட்டமாக, கொண்டாடினர்.
பிரிட்டனில் புதிய பிரதம மந்திரியான கிளமென்ட் அட்லி, Clement Attlee
இந்த செய்தியை நள்ளிரவில் ஒலிபரப்பினார்.
''ஜப்பான் இன்று சரணடைந்தது. நம்முடைய கடைசி எதிரி வீழ்த்தப்பட்டார். உலகில் அமைதி திரும்பவும் வந்துவிட்டது. இந்த இரட்சிப்புக்கும் கருணைகளுக்கும், நாம் கடவுளுக்கு நன்றி சொல்லவேண்டும். அரசர் நீடுழி வாழ்க!''
சில நிமிடங்களிலேயே லண்டன் தெருக்களெங்கும் மக்கள் கூடினர். பலர் பக்கிங்காம் அரண்மனையின் முன் கூடினர். ஒரு மாபெரும் தெருக்கொண்டாட்டம் மறுநாளும் நீடித்தது.
மறுநாள் காலை ஆகஸ்டு 15 ஆம் தேதி, அதிர்ச்சியடைந்த ஜப்பானிய மக்கள் தங்கள், கடவுளான அரசரின் குரலை முதன் முறையாக கேட்டனர்.
''ஜப்பான் இப்போது முடியாத நிலைமையில் இருப்பதாகவும், நாட்டிற்கு சரணடைவதை தவிர வேற வழியில்லை என்றும் அவர் கூறினார். எல்லா ராணுவப் படையினரும் தங்கள் ஆயுதங்களை கீழே போடவேண்டும்'' என்றார்.''
பேரரசின் செல்வாக்கு மிக அதிகமாக இருந்ததால் எல்லாப் படையினரும் கீழ்படிந்தனர்.
முடிவில் சரணடைந்த இருவாரங்களுக்குப் பின், ஆகஸ்டு 28 ஆம் தேதி, முதல் அமெரிக்கப் படை ஜப்பானுக்கு வந்தது.
டோக்கியோ விரிகுடாவில் ஒரு பெரும் கப்பற்படை கூடியது. ஒரு காலத்தில் பெருமை வாய்ந்ததாக இருந்து இப்போது, அவர்களால் முழுமையாக வீழ்த்தப்பட்ட, ஜப்பானியக் கப்பற்படையின் உடைந்து கிடந்த கப்பற் துண்டுகளை அது கடந்துவந்தது.
பல நாட்களுக்குப் பின், 1945 ஆம் ஆண்டு, செப்டம்பர் 2 ஆம் தேதி, ஜப்பானிய தூதுக்குழு அமெரிக்கப் போர் கப்பலான மிசௌரியின் USSMissouri (BB-63) மீது ஏறி வந்தது.
அதன் மேல்தளத்தின் பின்பகுதியில், ஜப்பானிய வெளிநாட்டு அமைச்சர், மெமரு ஷிமட்சு Mamoru Shigemitsu நிபந்தனையற்ற சரண்டைவதற்கான ஆவணத்தில் கையொப்பமிட்டார்.
அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு, ஜப்பானை திறமையாக நடத்திச் செல்லவிருக்கும், அமெரிக்கத் தளபதியான ஜென்ரல் டக்ளஸ் மெக்கார்த்தரும் Douglas MacArthur அதில் மேல் ஓப்பமிட்டார்.
பிறகு, 2000 க்கும் அதிகமான கூட்டணிப்படை விமானங்கள், வானில் உறுமின. அது ஜெர்மனியையும், ஜப்பானையும், முழுமையான தோல்விக்கு ஆட்படுத்திய அற்புதமானப் படைக்கு ஒரு பொருத்தமான பாராட்டாக இருந்தது.
இரண்டாம் உலகப்போர் முடிந்துவிட்டது.
ஜப்பானின் போருக்கான ஒரு இரக்கமற்ற ஆசை ஒரு அற்புதமான அழிக்கும் சக்தியால், நசுக்கப்பட்டது.
இப்போது மேற்கைப் போலவே (ஜெர்மனி), கிழக்கிலும், உலகம் புதிய எல்லைகளால் பிரிக்கப்பட்டு, பகிர்ந்துக் கொள்ளப்படும். புதியக் கூட்டணிகள் உருவாக்கப்படும். அணு யுத்தத்தின் நிழலின் கீழே உலகில் ஆதிக்கம் செலுத்த புதிய எதிரிகள் போட்டிப் போடுவார்கள். உலக வரலாற்றில் ஒரு புதிய சகாப்தம் துவங்கிவிட்டது.
..தகவல்கள் திரட்டப்பட்டது. டிஸ்கவரி சேனல் இரண்டாம் உலகப்போர் வண்ணம் தொடர் தமிழ், ஆங்கில விக்கிப்பீடியா மற்றும் உலகப்போர் குறித்த வீடியோக்கள்.
''சண்டைப் போட ஜப்பானுக்கு இருக்கும் சக்தியை, எங்களால் முழுமையாக அழிக்க முடியும் என்பது நினைவில் இருக்கட்டும். இதுவரையில் உலகில் பார்த்தேயிராத அழிவுமழை, வானத்தில் இருந்து விடாமல் பொழிவதை, அவர்கள் நிச்சயம் எதிர்பார்க்கலாம்.''
ஆனால் ஜப்பான் சரணடைவதற்கான செய்தி, கிடைக்கவில்லை. இரு நாட்களுக்குப் பின் ஆகஸ்டு 9 ஆம் தேதி, முக்கிய ராணுவத் துறைமுகமான, நாகசாகியில் Nagasaki பேட் மேன் Fat man குண்டு வீசப்பட்டது.
இந்த புளுட்டோனிய அணுகுண்டு, இன்னும் அதிக சக்தி வாய்ந்ததாக இருந்தது. உண்மையில் அந்த அணுகுண்டு, இலக்கில் இருந்து மிகவும் விலகி விழுந்தது. இருப்பினும், அது பெரும் அழிவை உண்டாக்கியது.
அந்த குண்டுவெடிப்பினால் 35,000 -50,000 எண்ணிக்கைக்கும் இடைப்பட்ட மக்கள் உயிரிழந்ததாக கணிக்கப்பட்டது.
தாங்கள் ஒரு புதிய, மற்றும் அச்சமூட்டும் ஆயுதத்தைச் சந்தித்தோம் என்பதை அச்சமயம் ஜப்பானிய அரசாங்கத்திற்கு எந்த சந்தேகமும் இல்லை.
ஆனால், இதுவாவது அவர்களை, சரண்டையும்படி வற்புறுத்துமா? என்பது தான் கேள்வியாக இருந்தது. அதன்பின் ஆகஸ்டு 14 ஆம் தேதி, கூட்டணிப் படைகளின் தளபதிகளின் ஆணைகளை ஒப்புக்கொண்டால், அரசரின் நிலை பாதுகாக்கப்படும் என்ற செய்தியை ட்ரூமென் நிர்வாகம் அனுப்பியது.
ஹீரோ ஹிட்டோ Hirohito தனது பெரும் செல்வாக்கினைப் பயன்படுத்தி, தாங்க முடியாதவைகளை தாங்கவும், விதிகளை ஒப்புக்கொள்ளவும் தனது போர் அமைச்சரவைகளுக்கு அறிவித்தார்.
அந்த தினம் ஜப்பான் எந்த நிபந்தனையுமில்லாமல் சரணடைந்ததாக, வாஷிங்கடனில் குடியரசுத் தலைவர் ட்ரூமென் அறிவித்தார்.
'' ஜப்பானின் நிபந்தனையில்லாத சரணடைவைக் குறிக்கும் போஸ்ட்டெர்ம் பிரகடனத்திற்கு Potsdam Declaration முழு ஒப்புதல் அளிக்க, நான் இந்த பதிலை எடுத்துக் கொள்கிறேன்."
ஒவ்வொரு அமெரிக்க நகரத் தெருக்களிலும், சந்தோஷமாக கூட்டம் கூட்டமாக, கொண்டாடினர்.
![]() |
கிளமென்ட் அட்லி |
பிரிட்டனில் புதிய பிரதம மந்திரியான கிளமென்ட் அட்லி, Clement Attlee
இந்த செய்தியை நள்ளிரவில் ஒலிபரப்பினார்.
''ஜப்பான் இன்று சரணடைந்தது. நம்முடைய கடைசி எதிரி வீழ்த்தப்பட்டார். உலகில் அமைதி திரும்பவும் வந்துவிட்டது. இந்த இரட்சிப்புக்கும் கருணைகளுக்கும், நாம் கடவுளுக்கு நன்றி சொல்லவேண்டும். அரசர் நீடுழி வாழ்க!''
சில நிமிடங்களிலேயே லண்டன் தெருக்களெங்கும் மக்கள் கூடினர். பலர் பக்கிங்காம் அரண்மனையின் முன் கூடினர். ஒரு மாபெரும் தெருக்கொண்டாட்டம் மறுநாளும் நீடித்தது.
மறுநாள் காலை ஆகஸ்டு 15 ஆம் தேதி, அதிர்ச்சியடைந்த ஜப்பானிய மக்கள் தங்கள், கடவுளான அரசரின் குரலை முதன் முறையாக கேட்டனர்.
![]() |
ஜப்பான் மன்னர் ஹிரோ ஹிட்டா |
''ஜப்பான் இப்போது முடியாத நிலைமையில் இருப்பதாகவும், நாட்டிற்கு சரணடைவதை தவிர வேற வழியில்லை என்றும் அவர் கூறினார். எல்லா ராணுவப் படையினரும் தங்கள் ஆயுதங்களை கீழே போடவேண்டும்'' என்றார்.''
பேரரசின் செல்வாக்கு மிக அதிகமாக இருந்ததால் எல்லாப் படையினரும் கீழ்படிந்தனர்.
முடிவில் சரணடைந்த இருவாரங்களுக்குப் பின், ஆகஸ்டு 28 ஆம் தேதி, முதல் அமெரிக்கப் படை ஜப்பானுக்கு வந்தது.
டோக்கியோ விரிகுடாவில் ஒரு பெரும் கப்பற்படை கூடியது. ஒரு காலத்தில் பெருமை வாய்ந்ததாக இருந்து இப்போது, அவர்களால் முழுமையாக வீழ்த்தப்பட்ட, ஜப்பானியக் கப்பற்படையின் உடைந்து கிடந்த கப்பற் துண்டுகளை அது கடந்துவந்தது.
பல நாட்களுக்குப் பின், 1945 ஆம் ஆண்டு, செப்டம்பர் 2 ஆம் தேதி, ஜப்பானிய தூதுக்குழு அமெரிக்கப் போர் கப்பலான மிசௌரியின் USSMissouri (BB-63) மீது ஏறி வந்தது.
அதன் மேல்தளத்தின் பின்பகுதியில், ஜப்பானிய வெளிநாட்டு அமைச்சர், மெமரு ஷிமட்சு Mamoru Shigemitsu நிபந்தனையற்ற சரண்டைவதற்கான ஆவணத்தில் கையொப்பமிட்டார்.
![]() |
டக்ளஸ் மெக்கார்த்தர் |
அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு, ஜப்பானை திறமையாக நடத்திச் செல்லவிருக்கும், அமெரிக்கத் தளபதியான ஜென்ரல் டக்ளஸ் மெக்கார்த்தரும் Douglas MacArthur அதில் மேல் ஓப்பமிட்டார்.
''கூட்டணிப் படைகளின் முதல் பெரும் படைத்தலைவராக, நாடுகளின் பாரம்பரியப்படி, நான் என் கடமைகளை நேர்மையுடனும், பொறுமையுடனும் செய்து முடிப்பதை என்னுடைய முக்கிய நோக்கம் என்று நான் தெரிவித்துக் கொள்கிறேன்.''
பிறகு, 2000 க்கும் அதிகமான கூட்டணிப்படை விமானங்கள், வானில் உறுமின. அது ஜெர்மனியையும், ஜப்பானையும், முழுமையான தோல்விக்கு ஆட்படுத்திய அற்புதமானப் படைக்கு ஒரு பொருத்தமான பாராட்டாக இருந்தது.
இரண்டாம் உலகப்போர் முடிந்துவிட்டது.
ஜப்பானின் போருக்கான ஒரு இரக்கமற்ற ஆசை ஒரு அற்புதமான அழிக்கும் சக்தியால், நசுக்கப்பட்டது.
இப்போது மேற்கைப் போலவே (ஜெர்மனி), கிழக்கிலும், உலகம் புதிய எல்லைகளால் பிரிக்கப்பட்டு, பகிர்ந்துக் கொள்ளப்படும். புதியக் கூட்டணிகள் உருவாக்கப்படும். அணு யுத்தத்தின் நிழலின் கீழே உலகில் ஆதிக்கம் செலுத்த புதிய எதிரிகள் போட்டிப் போடுவார்கள். உலக வரலாற்றில் ஒரு புதிய சகாப்தம் துவங்கிவிட்டது.
..தகவல்கள் திரட்டப்பட்டது. டிஸ்கவரி சேனல் இரண்டாம் உலகப்போர் வண்ணம் தொடர் தமிழ், ஆங்கில விக்கிப்பீடியா மற்றும் உலகப்போர் குறித்த வீடியோக்கள்.
No comments:
Post a Comment