Pages

Wednesday, 11 May 2011

ஒசாமா முதல் திரைப்படம்...பகுதி-2


(ஜிகாத்-அல்கொய்தா பின்னணியில் இருக்கும் மனிதர்கள் மற்றும் கொள்கைகள்)

..............முழுமையா நாசப்படுத்தியிருக்கும்னு விளக்கம் கொடுத்தாரு!


ஒரு சமூகம் வெளிப்பார்வைக்கு இஸ்லாமிய சமூகம் மாதிரி இருந்தாலும் உள்ளுக்குள்ள ஒரு புறமத சமுதாயமா வகைப்படுத்தற மாதிரிதான் இன்னமும் இருக்கமுடியும்னு இறுதியா சொன்னாரு! அதாவது அவர் இது மூலமா விளக்கமா புரியவைச்சது என்னென்னா? இந்த சமூகம் இஸ்லாமிய கோட்பாடுகள் படி காட்டிக்கிட்டாலும் அது இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு எதிரா நடந்துக்கலாம் என்கிறதை தான்.

இந்த முறைகேட்டையும், புறம்பான நடத்தையையும் மாற்றியமைக்க குதூப்புக்கு தென்பட்ட ஓரே வழி, மானூடச் சட்டங்களால் உருவாக்கப்பட்டதற்கு பதிலாக, கடவுளால் இயற்றப்பட்ட சட்டங்களை கொண்ட ஒரு இஸ்லாமிய குடியரசை நிறுவதுதான். எகிப்தின் புதிய மதச்சார்பற்ற ஆட்சியாளர்களுடனும், குத்தூப்பும் அவருடைய  சக இஸ்லாமிய மதவாதிகளும் தாங்கள் முரண்பட்டுகொண்டிருந்ததை வெளிப்படுத்தினர்.

மேற்கத்திய நாடுகளான உறவாலும் அதன் முன்னால் அரசர் பரூக் நாடுகடத்தப்பட்டது இன்னமும் தீர்க்கப்படாத கேள்வியாகவே உள்ளது.

1952 இல் ஒரு ராணுவ அதிகாரிகள் கூட்டம் எகிப்தின் ஆட்சியை கைப்பற்றியது. எகிப்தின் புதிய இரும்பு மனிதராக இருந்தவர் கேமல் அப்துல் நாசர் (Gamal Abdel Nasser Hussein). ஒட்டுமொத்த அரேபிய நாடுகளும், எகிப்தும் மதச்சார்பற்ற, தேசிய மற்றும் சோசலிச நாடுகளாக இருக்கவேண்டுமென்பது அவருடைய லட்சியமாக இருந்தது. அதாவது மெக்காவைவிட அவருடைய நோக்கு மாஸ்கோ மீது அதிகமாகப் பதிந்தது. தோல்வியில் முடிந்த ஒரு கொலை முயற்சியானது, இஸ்லாமிய சகோதரர்களை ஆயிரக்கணக்கில் வளைத்து கைது செய்ய நாசருக்கு போதுமான காரணமாக அமைந்தது. ஆறு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. பலருக்கு நீண்டகால கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. அவர்களில் ஒருவராக சையத் குத்தூப்பும் இருந்தார். இன்று அந்த இஸ்லாமிய சகோதரத்துவத்துக்கு தலைமை தாங்கி நடத்துபவர் அன்று குத்தூப்புடன் சிறையில் இருந்தார்.

அவரல் தன்னோட சகோதரர் கடுமையான சித்தரவதைகளுக்கு ஆளாக்கப்படுவதைப் பார்த்தார். மிக பலசாலியான மனிதனால கூட அந்த மாதிரி சித்தரவதையை தாங்க முடியாது.

நான் கைகால்களில விலங்குகளோட இருந்தேன். என் உடலில புழுக்கள் என் தசைகளை சாப்பிடுவதை பார்க்கமுடிஞ்சது. ஆனா அசையக்கூட முடியாது,

அவர் கூட சிறையில கூட்டமா இஸ்லாமிய சகோதரர்கள் இருந்தாங்க. அவங்க எல்லோரும் இதை எதிர்க்க ஆசைப்பட்டாங்க. ஆனா சிறை அதிகாரிகள் கையால சிறைக்கதவுகளை திறந்து விட்டு அவங்க எல்லோரையும் சுட்டுத்தள்ளினாங்க.. குத்தூப் இதை பார்த்து அதிர்ச்சியடைந்து, இந்தா மாதிரியான காரியத்தை, ஒரு சக இஸ்லாமியனுக்கு செய்யறவ, ஒரு உண்மையான இஸ்லாமியனா இருப்பானா? ன்னு தனக்குத்தானே கேட்டுக்கிட்டாரு!. அவங்க எல்லோரும் முஸ்லிம்கள் இல்லைன்னு முடிவு கட்டுனாரு.!. மனசுக்குள்ளே அவங்களை மதத்தை விட்டு தள்ளிவைச்சாரு!.

இந்த அனுபவம் அவரை சாலைகளில் அடையாள வாசகங்களை எழுத வைத்தது. மிகச்சுருக்கமாக, எளிமையாக, துல்லியமாக சொல்வதென்றால் அதை இஸ்லாமிய வாதிகளின் புரட்சி என்று கூறலாம்.

எங்களால ஜகல்லியா சமுதாயத்தோட சமாதானமா போகமுடியாது. அதனால் எங்களால எந்த விசுவாசமும் காட்டமுடியாது. இஸ்லாமிய ஜிகாத் மானிட இனத்தை இன்னொரு மனிதனுக்கு அடிமையாயிருக்கறதிலிருந்து விடுவிக்கறதால, அது ஆண்டவருக்கு செய்யற தொண்டாயிடுது.


இனைறய அல்கொய்தாவின் துணைத்தலைவராக இருக்கும் நபருக்கு, குத்தூப்பின் வாழ்க்கையும், கொள்கைகளும் மிகப் பலமான பாதிப்பை உருவாக்கியது.

அய்மன் அல் ஜவாஹிரி, 1951 ஆம் ஆண்டு கெய்ரோவில் பிறந்தார். ஜவாஹிரி ஒரளவிற்கு வசதி வாய்ப்புகள் நிறைந்த மனிதர்கள் வசிக்கக்கூடிய புறநகர்ப் பகுதியான மாடியில் (Maadi-Cairo sub urban place), கல்வியறிவு நிறைந்த மத்தியத்தரக் குடும்பத்தில் வளர்ந்தார். குத்தூப்பின் வழக்கறிஞராக இருந்த மவுஸ் அசாம் (Mahfouz Azzam) தான் ஜவாஹிரியின் தாய்மாமன்.

அய்மன் (ஜவாஹிரி) ரொம்ப அமைதியானவர். அதோட சில நண்பர்கள் மட்டும் தான் அவருக்கு இருந்தாங்க! ஆனா நிறைய படிப்பாரு! அவரு உண்மையிலேயே பெரிய அறிவாளி! அவரோட சிறு வயசிலேயே சையத் குத்தூப்போடயும் மத்தவங்களோடயும் சேர்ந்து மத அரசியல் சம்பந்தமான புத்தகங்களை நிறையப் படிப்பார். அவருக்கு எல்லா விஷயங்களிலேயும் ஆர்வம் ரொம்ப அதிகம்.


சையத் குத்தூப் ஒரு குடும்ப நண்பராக இருந்ததுடன், அவர் மீது நடந்த வழக்கும், கிடைத்த தண்டனையும், வாலிப வயதில் இருந்த அய்மன் அல் ஜவாஹிரிக்கு மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கின.

1965 இல் எகிப்திய அதிகாரிகள் குத்தூப்பை மீண்டும் கைது செய்தனர்.


நான் அந்த வழக்கு விசாரணை குறிப்புகளை படிச்சேன்! இந்த மனிதருக்கு தனக்கு மரணதண்டனை கண்டிப்பா விதிக்கப்படும்ணு நிச்சயமா தெரிஞ்சிருக்கு! நாசர் அரசு அவரை மறுபடியும் கைது செஞ்சி விசாரணைக்குட்படுத்தியதே தன்னைப் படுகொலை செய்யத்தான் என்பதை தெரிஞ்சிக்கிட்டாரு!


நாசரிலிருந்து கீழ்மட்டம் வரை குத்தூப் மரண தண்டனையை எதிர்த்து முறையீடு செய்வார்கள் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் அவர் அதை மறுத்துவிட்டார்.


தன்னோட கொள்கைகளும் கோட்பாடுகளும், தான் உயிரோட இருக்கறதை விட இறந்தாத்தான், அதிக பாதிப்பை ஏற்படுத்தும்னு, குத்தூப் பதில் கொடுத்தாரு!


தளபதி போர்ட் அலார்ம் அந்த மரண தண்டனை நிறைவேற்றப்படுவதை உறுதி செய்தார்.


அவர் ரொம்ப சத்தமா பேசுவாரு! கடவுளோட தீர்ப்பைத் தவிர மத்த தீர்ப்பை எல்லாம் பொய்யானது! என சொல்லிகிட்டேயிருந்தார். அவரை பின்பற்றி நடக்கிறவங்க, கடவுளோட தீர்ப்பை மட்டும் தான் நம்பியாகணும்ன சொல்லுவாரு!


குத்தூப்பின் மரண தண்டனை சிறைவேற்றப்பட்டது. அய்மன் அல் ஜவாஹிரிக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. பல ஆண்டுகளுக்குப் பின்னர் அந்த சம்பவம் தான் ஜிகாத்திய இயக்கத்தை பற்றவைத்த ஒரு தீப்பொறியாக அமைந்ததாக அவர் விவரித்தார்.


இந்த இளைஞன் தன்னோட பதினாறாவது வயசில, இந்த இஸ்லாமிய இயக்கத்துல சேர்ந்தான். சையத் குத்தூப்புக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதுக்கப்புறம் மக்கள், தங்களுக்கு ஏதாவது கெடுதல் நடக்குமோன்னு பயந்து அந்த இயக்கத்தை விட்டு ஒடிக்கிட்டிருந்தப்போ! இவன் போய் அதில சேர்ந்தான். அவன் அந்த பாதிப்பை விரும்பி அதில சேர்ந்தான். இதிலிருந்து அய்மன் அல் ஜவாஹிரியோட மனதிடம் எப்படியிருந்ததுன்னு நமக்கு காட்டுது.


தான் எழுதிய கட்டுரைகளில் ஜவாஹிரி இந்நாட்களில் சையத் குத்தூப்பின் கவிதை ஒன்றிலிருந்து கோடிட்டு காட்டயிருக்கிறார்.

“”சகோதரா! உனக்கெதிரே நின்றிருக்கும் பாதை!, ரத்தத்தால் நனைந்துள்ளது!. உனது தலையை இடதோ! அல்லது வலதோ! திருப்பாது நேரே சொர்க்கத்தை மட்டும் நோக்கி பார்ப்பாய்””


1967 இல் இஸ்ரேல் தனது எல்லைகளில் நிறைந்திருந்த மூன்று அரேபிய ராணுவங்களின் மீது ஒரு எதிர்பாராத கடுமையான தாக்குதலை நிகழ்த்தியது.


1967 ல நடந்த அந்த ஆறு நாள் தாக்குதல்ல, ஏழாவது நாள், நவீன கால அரேபியர்களால முகம்மது நபிக்கப்புறம் வந்த தலைவர்கள்ல, அடுத்த சக்தி வாய்ந்த, மகத்தான அரேபியரா இருக்கலாம்னு கருதப்பட்ட நாசருடைய செல்வாக்கு முறியடிக்கப்பட்டது. அரேபிய தேசிய வாதம் அவரோட சேர்ந்து அழிஞ்சு போச்சு! இது அரேபிய தேசியவாதத்துக்கு எதிரா நடந்த வாட்டர்லூ யுத்தம்!


இந்தளவுக்கான மாபெரும் தோல்வியால், விழிப்படைந்த இஸ்லாமிய புத்துணர்ச்சியானது, முஸ்லிம் உலகத்தையே அதிர வைத்தது. அதற்கான அரேபிய வார்த்தையான சாஹவாவுக்கு (Sahawa) "விழித்தெழுதல்" என்று அர்த்தம்.

நாசர் இறந்த பொழுது அவரோடு சேர்ந்து தேசியவாத கனவும் அழிந்தது. ஜவாஹிரி, அதை இது போல வர்ணிக்கிறார்.


1967 இல் நடந்த முறியடிப்புக்கு பிறகு, அதன் நேரடியான பாதிப்பினால் பலமக்கள், அதிலும் குறிப்பாக இளைஞர்கள் தங்கள் துவக்க கட்ட அடையாளத்திற்குத் திரும்பினார்கள். அதாவது நாகரிகமடைந்த இஸ்லாமிய நாட்டின் அங்கத்தினர்களாக மாறினார்கள்.


அந்த காலக்கட்டத்தில் தான் அப்துல்லா ஸ்லைப்பருக்கு ஜவாஹிரியின் குடும்பத்தினரையும், உறவினர்களையும் அறிந்து கொள்ள நேர்ந்தது.


அசாம் குடும்பம் ரொம்ப பிரபலமான குடும்பம், உண்மை என்னென்னா? நான் இஸ்லாமியனா மதம் மாறினவன். அவங்க ரொம்ப பாராட்டினாங்க! அதனால அவங்க மூலமா, நான் அய்மனை சந்திச்சேன். அவர் அப்பத்தான் திருமணம் பண்ணிகிட்டு, ஒரு மருத்துவ படிப்பையும் , மருத்துவக்கல்வி நிலையத்திலேயும் முடிக்கிற நிலைமையில் இருந்தாரு. அவரு மட்டும் தான் நான் என்ன நடக்குதுன்னு தெரிஞ்சக்கனும்கிறதுக்காக, உலகத்துக்குள்ளே ஒரு சுற்றுப்பயணாமா கூட்டிட்டுப் போனாரு.

நான் இளைஞர்கள் போஸ்டர்கள் தயார் பன்றதையும், ஹிஜாப் (hijab-muslim women traditional dress) எனப்படும் பெண்கள் பர்தாக்கள் தயாரிக்கறதையும், நான் பார்த்தேன். அங்க முழு நேரமும் செயல் விளக்கம் நடத்திகிட்டே இருந்தாங்க!


இஸ்லாமிய புத்துணர்ச்சி எல்லாப் பல்கலைக்கழகங்களையும் கூட அடைந்திருந்தது.


அவர் ஒரு தீவிரவாதின்னு நான், ரொம்ப நேரங்கழிச்சு உணர்ந்துகிட்டேன். பல்கலைக்கழக்ங்கள்ல பெருகிட்டு வந்த, இந்த இஸ்லாமியவாத மனோபாவத்துக்கு, அவர் ஒரு முக்கிய காரணகர்த்தான்னு நினைச்சேன்.

ஆனா ஒரு திடீர் புரட்சியில, ஆட்சியையே கைப்பற்றக்கூடிய அளவுக்கு, ஒரு ரகசிய இயக்கத்தை அவர் சேர்ந்தவர்னு, அப்ப நினைச்சு கூடப் பார்க்கலை.

ஜவாஹிரி தன் உண்மை நோக்கத்தை வெளியில தெரியாது, சாமர்த்தியமாக மறைத்து வந்தார். மருத்துவக் கல்லூரியில் நல்ல மாணவனாக, தாடியற்ற நவீன இளைஞனாக இருந்தார். ஆனால் நாசருக்கு, அடுத்த ஆட்சியாளருக்கு எதிரான கொலை சதியில், அவர் ராணுவ அதிகாரிகளை ரகசியமாக சேர்க்கத்துவங்கினார்.

டேவிட் முகாமில் இஸ்ரேலுடனான அமைதி ஒப்பந்தத்தில் அன்வர் சதாத் கையெழுத்திட்டார். அதனால் அவர் எகிப்துக்கும், இஸ்லாமுக்கும் துரோகமிழைத்தவராக, ஜவாஹிரி கருதினார்.


ஜவாஹிரி ஒரு புரட்சியாளர் என்கிறதோட இந்த அரசை, ஒரு சட்டவிரோதமானதுன்னு நம்பினார். அவரோட புட்சிகரமான கொள்கைகள் அவரோடப் பதினாறாவது வயசுல ஆரம்பிச்சது. இந்த ஆட்சியமைப்பைத் தூக்கியெறிய, ஆயுதப் போராட்டம், இல்லை ராணுவ அமைப்புதான் தேவைங்கற எண்ணம், அவரை ஆட்டி வைச்சது.


இஸ்லாமியத் தீவிரவாதிகளால வளர்ந்து வரும் அச்சுறுத்தலால் ஏற்பட்ட விழிப்புணர்ச்சி காரணமாக, அரசாங்கம் வழக்கமாக சந்தேகத்துக்குரியவர்களை கைது செய்யத் துவங்கியது. 1981 இல் ஜவாஹிரி ஏற்கனவேத் திட்டமிட்டு சேர்த்திருந்த, ராணுவத்திலிருந்த அதே பயங்கரவாதக் குழுவின் பகுதி, தாங்களும் பிடிபடுவதற்கு முன்பாக ஒரு திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்தது.


ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதத்தில் அன்வர் சதாத் (Muhammad Anwar Al Sadat ), ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்வதும் வழக்கம். அந்த நிகழ்ச்சிதிட்டமிட்டபடி வழக்கம்போல  நடைபெற்றது. ஆனால் அணிவகுப்பு மரியாதையேற்கும் மேடைக்கு முன்பாக ராணுவ வாகனங்களில் ஒன்று திடீரென்று நின்றபோது, பத்திரிகையாளர்களும், ஒளிப்பதிவாளர்களும் சிதறி ஒடினார்கள். நான்கு வீரர்கள் அந்த மேடையை நோக்கி தோட்டாக்களை மழையாக பொழிந்தார்கள். சதாத் இறந்து வீழ்ந்தவுடன் கொலைகாரர்களில் ஒருவன், ““நான் பேரோவைக் கொன்று விட்டேன்”” என்று உரத்தக்குரலில் கூவினான்.


ஜவாஹிரியும் அவரோட குழுக்களும் சையத் குத்தூப்போட கருத்துகளை படிச்சதால, அவங்க அந்த படுகொலையை, அவங்க புறிஞ்சிகிட்டபடி, இன்னொரு முஸ்லீமை மதநீக்கம் செய்யறதை ஞாயப்படுத்துனாங்க! அந்த தர்க்கத்துக்கு முதல்ல பலியானவரு அன்வர் சதாத். அவங்க அன்வர் சதாத் படுகொலையை ஞாயப்படுத்துனாங்க!. ஏன்னா? இனிமேலும் அவர் ஒரு இஸ்லாமியர் இல்லைன்னு அவங்க முடிவுப் பண்ணிட்டாங்க! அதனால அவர் வாழத்தகுதியில்லாதவர்ன்னும் அறிவிச்சாங்க!


காலத்தாமதமின்றி கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்ட நூற்றுக்கணக்கான இஸ்லாமிய மதவாதிகளில் அய்மன் அல் ஜவாஹிரியும் ஒருவர். ஜவாஹிரிக்கு அடுத்த அறையில் அடைக்கப்பட்டிருந்தவர் மன்டாசாத் அல் சையாத்.


அவங்க போலிஸ் உபயோகிக்கற தடி மாதிரி ஒன்னை உபயோகிச்சி எங்களுக்கு எலிக்டிரிக் ஷாக் கொடுத்தாங்க! எங்களோட ஈறுகள்ல, எங்க உதடுகள்ல, எங்க மார்புல, எங்க பிறப்புறுப்புகள் எல்லாத்திலேயும் அதிர்ச்சி கொடுத்தாங்க!  அவங்க எங்களை ஒரு நாற்காலி மேல நிக்கவைச்சி, அப்புறம் எங்க கைகளை பின்பக்கமா வைச்சி கட்டி அதை ஒரு கதவு முனையில இழுத்து கட்டிட்டாங்க, அப்புறம் அந்த நாற்காலியை நகர்த்திட்டாங்க!. உங்க கைகளோட ஆதாரத்துல, நீங்க அந்த கதவுல இருந்து தொங்கிகிட்டு இருப்பீங்க! அது கைகள்ல, ஒரு தற்காலிக வாதத்தை உருவாக்கிடும். சிலபேர் ஆயுள் முழுக்க வாதத்தால செயலிழந்து போயிட்டாங்க!.


அந்த உடல் ரீதியான சித்திரவதை மிகக்கொடுமையாக இருந்தாலும், மனரீதியாக இழிவுப்படுத்தி செய்த கொடுமைகள் தான் அதைவிட கொடுமையாக இருந்தன. ஜவாஹிரி மனம் பேதலித்து எல்லாப் பெயர்களையும் கூறிவிட்டார். அந்தச் சித்திரவதைகளை அனுபவித்தது ஜவாஹிரியின் மனதில் ஆறாத பழிவாங்கும் தாகத்தை தூண்டிவிட்டது. அவருடைய வழக்கு விசாரணையின்போது மிக வரம்பு மீறிய முரட்டுத்தனமாகவும் நடந்து கொண்டார்.
********************

ஜவாஹிரி....
நாங்க எங்க மதத்தை நம்பறோம் அதோட கொள்கைகளையும், அதை பின்பற்றி நடக்கிறதையும், நமிபிக்கையோடு செஞ்சு, ஒரு இஸ்லாமிய நாட்டையும், ஒரு இஸ்லாமிய சமூகத்தையும் ஸ்தாபிக்க எங்களால முடிஞ்சதை செஞ்சிட்டு வர்றோம்””

லாஹி...லாஹ...இல்ல்லா....லாஹி...லாஹ...இல்ல்லா

  எங்க மதத்துமேல எங்களுக்கு நம்பிக்கையிருக்கறதுக்காக நாங்க வருத்தப்படல, அதுமட்டுமில்லாம நாங்க, பல தியாகங்கள் பண்ணியிருக்கோம். இஸ்லாமுக்கு வெற்றி கிடைக்கிற வரைக்கும், இன்னும் பலத் தியாகங்கள் பண்ணத் தயாரா இருக்கோம்!

லாஹி...லாஹ...இல்ல்லா....லாஹி...லாஹ...இல்ல்லா


கிட்டத்தட்ட மூனுலிருந்து நாலு வருஷங்கள் வரைக்கும், ஜவாஹிரி சிறையில இருந்திருக்கார்னு நான் நினைக்கிறேன்.
அப்ப அவர் அனுபவிச்ச சித்திரவதைகளால, அவரோட மனசு உடைஞ்சு போனதோட, அதனால அவர் வாழ்க்கையே அந்த கணத்திலேயிருந்து கடுமையான மாற்றமடைஞ்சது. அவர் அந்த நாட்டை மன்னிக்கவோ? ஏன்? தன்னையேக் கூட மன்னிச்சிக்கலைன்னு நான் நினைக்கிறேன்.


எகிப்திய அரசாங்கம், இஸ்லாமிய சகோதரத்துவத்தை ஒட்டுமொத்தமாக நசுக்கிவிட முயற்சிகள் செய்தது. ஆனால் அந்த கொள்கைகளை அழிக்கமுடியவில்லை. இந்த செயலானது சவுதி அரேபியாவையும், இளம் ஒசாமா பின்லேடனையும் சென்றடைந்தது.



எகிப்து அரசாங்கம் தொடர்ந்த, இஸ்லாமிய சகோதரத்துவ அங்கத்தினர்கள் மேல் நடந்த அடக்குமுறைகளால் பலர் தலைமறைவானார்கள். இப்படி நாட்டை விட்டுவந்த பல முஸ்லிம் சகோதரர்கள், பின்லேடன் மாணவராக ஜெட்டா பல்கலைக்கழகத்தில் இருந்த பொழுது, கல்வி கற்பிக்க வந்தார்கள். அப்படி வந்தவர்களில் ஒருவர் தான் சையத் குத்தூப்பின் சகோதரரான முகம்மத் குத்தூப்.


சையத் குத்தூப்பின் சகோதரரான முகம்மத் குத்தூப் சிறையிலிருந்து வெளியே வந்ததும், நேரா சவுதி அரேபியா வந்து சேர்ந்தாரு! அவரு மத்தவங்களை கவரக்கூடியவரு! ஒரு எழுத்தாளராவும், தத்துவவாதியாவும், அவரோட கொள்கைகள்ல தன்னோட சகோதரர்களுக்கு அவர் சமமாக இருந்தாரு! ஜெட்டாவில அவர் விரிவுரைகள் கொடுப்பாரு! அதை பின் லேடன் போய் ஆர்வமா கேப்பாரு!


முஸ்லிம்கள் ரொம்ப ஆதிக்கத்தோட இருக்கணும்னும், தனித்துவத்தோட இருக்கணும்னும் முகம்மத் குத்தூப் அறிவித்து அழைப்பு விடுப்பாரு!.....

************
...தொடரும்..பகுதி-3
...நன்றி; தமிழ் டிஸ்கவரித் தொலைக்காட்சி...03.05.2011-ஜிகாத்-அல்கொய்தா பின்னணியில் இருக்கும் மனிதர்கள் மற்றும் கொள்கைகள்

Tuesday, 10 May 2011

ஒசாமா முதல் திரைப்படம்...பகுதி-1



(ஜிகாத்-அல்கொய்தா பின்னணியில் இருக்கும் மனிதர்கள் மற்றும் கொள்கைகள்) 

இது தான் ஒசாமா பின்லேடனுடைய முதல் திரைப்படம். 1989 இல் எடுக்கப்பட்டது. அதில் அவர் ஆப்கானிஸ்தானில் ரஷ்ய ஆக்கிரமிப்பை எதிர்த்து தான் செய்யும் போரில் கலந்து கொள்ள இஸ்லாமியரை வேண்டிக்கொள்கிறார். ஆக்கிரமிப்பை எதிர்த்த இந்த இளம் தலைவனை உலகிலேயே அதிகமாகத் தேடப்படும் பயங்கரவாதியாக எது மாற்றியது? இன்று தனது பிரதிநிதியாக இருக்கும் அய்மன் அல் ஜவாஹிரியின் தூண்டுதலுக்கு எப்படி அவர் ஆளாக்கப்பட்டார்?

இந்த மனிதர்கள் எப்படி? சாதாரண யுத்தமாக இருந்த ஒரு இஸ்லாமியக் கோட்பாட்டை மேற்கத்திய உலகுக்கு எதிரான பயங்கரவாத யுத்தமாக மாற்றினார்கள்? அத்துடன் தாங்கள் ஜிகாத் என்று கூறிக்கொள்ளும் ஒரு மரண எண்ணிக்கையை ஞாயப்படுத்த அமைதியையும், மகிமையும் வாய்ந்த இஸ்லாத்தை அல்கொய்தாவால் எப்படி? பயன்படுத்திக்கொள்ள முடிந்தது?

1998 இன் துவக்கத்தில் ஒசாமா பின்லேடன் தனது செயற்கைகோள் தொலைபேசியிலிருந்து தொடர்ச்சியாக பலமுறைத் தொட,ர்பு கொண்டார். அந்த அழைப்புக்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து வடக்கு லண்டனில் ஒரு புறநகர் பகுதியில் இருந்த வீதிக்கு சென்றிருப்பதை, அமெரிக்க சமிக்ஞை உளவுத்துறை கண்டுபிடித்து பதிவு செய்திருக்கிறது. அது ஒரு காலத்தின் அல்கொய்தாவின் லண்டன் பிரிவின் தலைவராக இருந்தவரின் இருப்பிடமாக இருந்துள்ளது.

1998 பிப்ரவரி 22 ந் தேதி மேற்கு லண்டனில் இருந்து வெளியாகும் ஒரு அரபு மொழி தினசரியான அல்கொர்ட்ஸ்க்கு (AL-Quads-AL Arabi) ஒரு செய்தியை பேக்ஸ் மூலம் அனுப்பினார். அதன் ஆசிரியர் ஒரு காலத்தில் ஒசாமா பின்லேடனை ஆப்கானிஸ்தானில் பேட்டி கண்டிருக்கிறார். ஆனால் அமெரிக்கர்களையும் யூதர்களையும் கொல்வதாக விடப்பட்ட அச்சுறுத்தல் செய்தி அடங்கிய பேக்சை எதிர்கொள்ள எதுவும் அவரை தயார் செய்திருக்கவில்லை.


""அமெரிக்கர்களையோ, அவர்களின் கூட்டணியில் இருப்பவர்களையோ, ராணுவத்தினரோ அல்லது பொது மக்களோ போரிடுவதும் கொல்வதும் உலகின் எந்தவொரு பகுதியில் இருக்கும் ஒரு இஸ்லாமியரின் கடமை.""

அது அப்படி திகில் அடிக்கவைச்சது. ரொம்ப ரொம்ப பயங்கரமான லெட்டர் அது. அப்பாவி மக்களை எந்தவொரு நியாயுமுமில்லாம கொல்றதுங்கிறது, ரொம்ப கொடுமை. இது இஸ்லாமோட கொள்கை இல்லை. அப்படி செய்யறது இஸ்லாத்துக்கு புறம்பானது. ஆனா அது ரொம்ப முக்கயமானதுங்கறதுனாலே, நான் அதை வெளியிட்டேன்.
 


மேற்கத்திய நாடுகள் மீதான அல்கொய்தாவின் போர் அறிவிப்பானது, ஆங்கிலேய பத்திரிகையுலகில் மிக்ச்சிறிய தாக்கத்தை மட்டுமே ஏற்படுத்தியது. ஒசாமா பின்லேடன் என்னும் இந்த அற்ப மனிதன் யார்? என்கிற அலட்சியம்.

மூன்று மாதங்களுக்குப் பிறகு உள்ளூர் பழங்குடியினர் போல வேடமணிந்து ஏ பி சி (ABC) செய்தி நிருபரான ஜான் மில்லர் இந்தக் கேள்விக்கு விடை கண்டுபிடிப்பதற்கான வழியில் சென்று கொண்டிருந்தார். அவரும் கனடாவைச் சேர்ந்த அவருடைய கேமரா மேனும் அல்கொய்தாவின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிக்குள் ஊடுருவிச்  சென்றிருந்தனர்.

ஆனால் ஒவ்வொரு சாலைத் தடையிருக்கும் இடத்திலும், காவலாளிகள் கூடுதலான விரோத பாவத்துடனும், சந்தேகத்துடனும், இருக்கத் துவங்கினார்கள்.


அந்த காலத்துல அல்கொய்தா உலகளவில ஆரம்ப நிலையில இருந்த ஒரு பயங்கரவாத இயக்கமா இருந்தாலும், மத்த அதிகார மையங்கள் மாதிரி தான் செயல்பட்டது. எப்படின்னா? எங்க இரண்டு டிரைவரும், அத்தாட்சி காகிதங்களை கொண்டுவர மறந்துட்டதுனால, எங்களை எல்லா இடத்திலேயும் நிறுத்தி விசாரிச்சாங்க.


போகும்போது ஆட்கள் புதர்கள் பின்னாடி இருந்து ஒடி வந்தாங்க. 
அவங்க கைகள்ல கிரானைட் லாஞ்சர்களும்,  ஆட்டோமெட்டிக் துப்பாக்கிகளும் இருந்தது. அவங்க வண்டியை  நோக்கி ஒடி வந்து, வண்டி கதவை இழுத்து திறப்பாங்க. அது துரதிருஷடவசமா ஏம்பக்கமா இருந்தது. என் கண்ல டார்ச்சையோ, இல்லை பிளாஷ் லைட்டையோ அடிப்பாங்க. ஒரு துப்பாக்கி என் தலைல பதியும், ஒரு துப்பாக்கி என் விலால பதியும்.


எங்க இரண்டு பக்கத்திலே இருந்தும் எச்சரிக்கைக்காக அவங்க சுட்டாங்க. இருட்டல துப்பாக்கி வெடிக்கும் போது வர்ர வெளிச்சமும், அந்த துப்பாக்கி சுடும்பொழுது  மேக்சினிலிருந்து வெளி வருகின்ற முப்பது ரவுண்டு தோட்டாக்களின் சத்தமும் கேட்டது. அப்ப எங்கம்மா சொன்ன வார்த்தைகள் தான் ஞாபகத்துக்கு வந்தது. யாருக்காக நீ போய் சாகணும்?. யார்? அந்த ஒசாமாங்கிறதுதான்?

நடுராத்திரில அந்த மலைமேல பெட்ரோல்ல இயங்குற ஜெனரேட்டர் மூலமா அதீத பிராகாசமான விளக்குகளை எரிய விட்டிருந்ததோட, அந்த இடத்துல ஒரு பெருங்கூட்டமே கூடியிருந்தது. எல்லாருமே முழுக்க முழுக்க ஆயுதங்களோட இருந்தாங்க.
*********
அது மூன்றாம் உலகயுத்தம் துவங்கிட்ட மாதிரி ஒரே ரகளையா இருந்தது. அதோட ஒசாமா அங்கு வந்து சேர்ந்தாச்சுன்னு தெரிஞ்சது. அப்புறம் திடீர்னு நடந்து வந்து கண் முன்னாலே நின்னாரு!
***********
நான தயாரா வச்சிருந்த பதினாறு கேள்விகளோட உக்கார்ந்திருந்தேன்! இது ராணுவ வீரர்கள் யுத்த களத்தில சண்டை போடற மாதிரி இல்லையே! இந்தப் போர்ல அப்பாவிக் குழுந்தைகளும் பெண்களும் தானே பாதிக்கப்பட்டிருக்காங்க! கோழைகளால செயல் வடிவம் கொடுக்கப்படற இந்த பயங்கரவாதத்தை எப்படி? நீங்க போர்னு சொல்லமுடியுது?

அதுக்கு அவர் உங்களை மாதரி ஒரு அமெரிக்கர் கிட்டேயிருந்து, இந்த மாதிரி வினோதமான கேள்வி வருதே! ன்னாரு!

ஒசாமா....

“”ஹிரோஷிமாவையும் (Hiroshima), நாகசாகியையும் (Nagasaki) அழிச்சி இந்த நிலைமைக்கு கொண்டு வந்தது, உங்க நாடு இல்லையா! இந்த இடத்துல இருந்தவங்க யுத்தத்தில ஈடுபடாத அப்பாவிப் பெண்களும், குழந்தைகளும் இல்லையா!
நாங்களும் நீங்க வகுத்த சட்டத்தை, அப்படியே கையிலெடுத்துகிட்டு, அதை உங்கமேல பிரயோகம் பண்ணிக் காட்டறோம். அவ்வளவு தான்.”” னாரு!


அதற்கு மூன்று மாதங்களுக்குப் பிறகு, ஒசாமா பின்லேடன் மேற்கத்திய நாடுகள் மற்றும் அமெரிக்காவுக்கு எதிரான இந்த யுத்தத்தில் இந்த முதல் தாக்குதலை தொடுத்தார்.

கென்யாவிலும், தான்சான்யாவிலும் அமெரிக்கத் தூதரகங்களுக்கு முன்பாக வெடிகுண்டுகள் வெடிக்கப்பட்டன. அந்த வெடிகுண்டு விபத்து 1 சி.ஐ.ஏ உளவாளியையும், 11 அமெரிக்கப் பிரதிநிதிகளையும் கொன்றது. 5000 க்கும் மேற்பட்ட ஆப்ரிக்கர்கள் படுகாயமடைந்ததுடன், 234 பேர் கொல்லப்பட்டனர்.

பின்லேடன் பயங்கரவாதத்தை நியாயப்படுத்த இஸ்லாத்தை நெறிபிறழ்வாக பயன்படுத்துவதாக பெரும்பாலான இஸ்லாமியர்கள் கருதுகிறார்கள்.

ஜிகாத் என்பதற்கு நேரடியான அர்த்தம், கடும்முயற்சி அல்லது போராட்டம். ஆகவே இஸ்லாம் கூறுவதின்படி, ஜிகாத் என்பது பாவங்களையும் தூண்டுதல்களையும் எதிர்த்து நடத்தும் அமைதியான போராட்டம். ஆனால் வாட்கொண்டு நடத்தும் ஜிகாத்துகளும் உண்டு.

ஏசுவையும், புத்தரையும் போல் அல்லாது தீர்க்கதரிசி முகம்மது, ஒரு வீரரும், ஆட்சியாளருமாக இருந்திருக்கிறார். அவர் படைகளுக்குத் தலைமை தாங்கிச் சென்று யுத்தங்களில் போரிட்டிருக்கிறார்.

முகம்மது நபி வரையறுத்த ஜிகாத், கிருஸ்தவ கோட்பாட்டின்படி சாதாரணமான யுத்தம் என்று கூறப்படுவதிலிருந்து, வேறுபட்டதல்ல.

ஒரு அமெரிக்க யூதர், அவர் எகிப்தில் வாழ்ந்த இஸ்லாம் மதத்தை தழுவியவர்.


""இஸ்லாமே, ஒரு யுத்த அடிப்படை சூழலிலே தான் பிறந்தது. சுய தற்காப்பிற்காக ஒருத்தர் போரிடலாம், அப்படிங்கறது தான் அந்த சமுதாயத்துக்கு நபிகள் நாயகம் வெளிப்படுத்திய உண்மை. ஆனா உங்க எதிரி அமைதியை நாடினா? அவரோட சமதானமா போகணும், ஏன்னா? ஆண்டவர் அதைத்தான் விரும்பறாரு! அதிலேயிருந்தும், நபிகளோட மத்த வாசகங்கள் மூலமாகவும், ஜெனிவா ஒப்பந்தத்தோட முதல் விதிகள் மாதிரியே இருக்கறதை, அதாவது பெண்களையும், குழந்தைகளையும் கொல்லக்கூடாதுன்னும், எதிரி சமாதானத்தை நாடுனா? அவனோட சமாதான ஒப்பந்தம் செஞ்சிக்கணும்கிறது தான் தெரியுது. இது தான் உண்மை.

மேலும் மக்கள் நடத்துற வழிபாட்டுத்தலங்களையும், தேவாலயங்களையும், யூத திருக்கோயில்களையும் நாம பாதுகாத்தாகணும்.

ஆனா பின்லேடன் பன்றது என்னென்னா? எல்லாத்தையும் தலைகீழாப் புரட்டி போடற வேலை தான்.""

1930 இல் ஏமனிலிருந்து சாதாரண கொத்தனார் ஒரு ஒட்டகப் பயண கூட்டத்தில் இணைந்து கொண்டார். வேலை தேடி அவர் சவுதி அரேபியா வழியாக, வடதிசையில் பயணித்து, செங்கடல் துறைமுகமான ஜெட்டாவிற்கு வந்தார். அது கிட்டதட்ட 1600 கி.மீ பயணம். அந்த தொலைவுக்கு அவர் நடந்தே பயணம் செய்திருக்கிறார். அவரது பெயர் முகம்மத் பின் லேடன். (Sheikh Mohammed bin Awad bin Laden)

கால ஓட்டத்தில் அவர் சவுதி மன்னர்களின் அபிமான ஒப்பந்தக்காரராகிவிட்டார். எண்ணெய் கண்டுபிடிப்பால் அந்த அரச குடும்பம் பெரும் பணக்காரர்களான அதே நேரத்தில், முகம்மத் பின் லேடனும் பெரும் பணக்காரர் ஆனார். அவருடைய கட்டுமான நிறுவனம் அந்த நாட்டிலேயே மிகப்பெரிய  நிறுவனமாகியது. எந்தளவு என்றால்? இஸ்லாமியர்களின் புனித இடமான மெக்காவிலிருக்கும் மகா மசூதியை புனரதுராணம் செய்யும் பணியை மேற்கொள்ளும் அளவிற்கு கௌரவம் அடைந்தது.

சவுதி தங்களது இஸ்லாமிய அடிப்படை வாதமாகிய வகாபிசத்தை பரப்புவதற்காக வெளிநாடுகளில் பல்லாயிரக்கணக்கான மசூதிகளையும், மதக்கலவி கற்பிக்கும் பள்ளிகளையும் கட்ட பின்லேடன் குடும்பம் பெருமளவில் உதவிகள் புரிந்தது. 1967 இல் ஒரு விமான விபத்தில் காலமாவதற்கு முன் முகம்மத் பின் லேடன் 22 பெண்களை மணந்து 54 குழந்தைகளுக்குத் தந்தையாக விளங்கினார்.

அவர்களுடைய தந்தை இறந்த பொழுது 24 மகன்களில் ஒவ்வொருவரும் பல கோடிகளுக்கு அதிபதிகளாக விளங்கினார்கள். குடும்பத்தோடு விடுமுறையை கழிக்க சுவிடனுக்கு வந்திருக்கும் அந்த குழந்தைகளில் பெரும்பாலானவர்கள் மேற்கத்திய கலாச்சாரத்தில் அதிகம் ஊறியவர்கள். ஆனால் ஒரு தற்காலிக மனைவிக்கு முகம்மதுவின் 17 வது மகனாக பிறந்த ஒசாமா அந்த புகைப்பட்த்தில் காணப்படாதது ஒன்றும் தற்செயலாக நடந்தது அல்ல.


ஒசாமா ஆழ்ந்த மத நம்பிக்கை கொண்டவரு! அவர் தன்னை போட்டோ எடுக்கறதை விரும்பினதே இல்லை. எழுபதுகளோடத் தொடக்கத்துல அவரு எங்க வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்கு வந்தாரு! எனக்கு அவர ரொம்ப நல்லாத் தெரியும்.


ஒசாமா ஆழ்ந்த மதநம்பிக்கை கொண்டவரு! அவர் அப்படித்தான் வளர்ந்தாரு! தன்னுடைய வாழ்க்கையில் ரொம்ப ஆரம்ப கட்டத்திலேயே அவரு இந்த மாதிரியான வாழ்க்கையைத் தொடங்கிட்டாரு!
*******
ஒரு நாளைக்கு 5 தடவைக்கு மசூதிக்கு போகணும்னு வற்புறுத்துவாரு! எங்கள்ல பெரும்பானவங்க இரண்டு  அல்லது மூணு தடவைதான் தொழுகைக்கு போவோம்.

1976 இல் அவர் அப்துல்லா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் பயில்வதற்காக பதிவு செய்து கொண்டார். அரசியல் ஒசாமா பின்லேடனின் வாழ்க்கையில் இன்னமும் தனது பங்கை துவங்கவில்லை. ஆனால் பல்கலைக்கழகம் அவரை இஸ்லாமிய சகோதர கோட்பாடுகள் கொண்டவர் என்பதை வெளிச்சமிட்டுக் காட்டியது.

ஒசாமா பின்லேடனிடம் தாக்கத்தை ஏற்படுத்திய, எகிப்திய இஸ்லாமிய சகோதரத்துவத்தின் கோட்பாடுகள் கெய்ரோவில் உருவாயின. மக்கள் தொகை பெருக்கம் அதிகமாக இருந்த இந்த பல கலாச்சாரம் நிறைந்த நகரம், எகிப்தின் தலைநகரமாக இருந்ததோடு, அரேபிய உலகின் அறிவு மையமாகவும் திகழ்ந்தது. சவுதி அடிப்படை வாதத்தால் தாக்கமடைந்த இந்த சகோதரத்துவக் கோட்பாடு, காலணி ஆதிக்கம், வறுமை மற்றும் அநியாயத்துக்கு எதிரான ஒரு இயக்கமாக உருப்பெற்றது.

இந்த இயக்கம் ஒரு பேரியக்கமாக மாற்றமடைந்து, அது பாரம்பரிய இஸ்லாத்தை, இஸ்லாமிசம் என்று அறியப்படும் ஒரு அரசியல் கோட்பாடாக உருமாற்றம் அடையச்செய்து விட்டது.


இப்ப இங்கு இருக்கிற நிறைய இஸ்லாமியர்கள், இஸ்லாம் என்ற வார்த்தையை புறக்கணிக்கத்தான் விரும்புறாங்க! ஏன்னா? அது அவங்க எதிரிகளால பயன்படுத்தப்படுகிற வார்த்தையா எடுத்துக்கறாங்க! அது ஒரு சரியான வார்த்தை தான்! ஏன்னா? நீங்க அது மூலமா இஸ்லாத்தை பத்தி பேசறதுக்குப் பதிலா, வேற ஒன்னை பத்தி பேச்ப்போறீங்கறது தெளிவாயிடுது!.

ஆனா இந்த இஸ்லாம் மதத்தோட ஆன்மீக நிறைகள் இழந்து சூனியமாகி காலியாயிடுச்சி! அந்த ஆன்மீக நிறைகள் இருந்த இடத்துல, ஒரு ஆய்வு விளக்கம் புகுந்துடுச்சு! ஒரு புரட்சிகரமான போர்க்கத்திய ஆய்வு விளக்கத் தத்துவம் மார்க்சிய வாதிகள், லெனினிய வாதிகளை எப்படி விவரிப்பாங்களோ? சோசலிச வாதிகளை அல்லது எதேச்சதிகார வாதிகளை அது போன்ற வேறு எதையும் எப்படி வர்ணிப்பாங்களோ? அதே மாதிரி இஸ்லாமிய வாதிகளை வர்ணிக்கிறாங்க!


இஸ்லாமிய சகோதரத்துவம், இஸ்லாமிய அடிப்படை வாதத்துடனும், இருபதாம் நூற்றாண்டின் அரசியல் தத்துவங்களுடனும் சேர்ந்து இரண்டற கலந்து விட்டது. இஸ்லாமிய சகோதரத்தில் இருந்த முன்னணி அறிவுத்திறத்தோடு, தனது சொந்த சிந்தனைகளையும் கலந்து, அல்கொய்தாவுக்கு வடிவம் கொடுத்த ஒரு நபர் “”சையத் குத்தூப்”” (Sayyid Qutb)



அவரு! இஸ்லாமிய இயக்கத்தோட லெனினா?அப்படியும் இருக்கலாம். சையத் குத்தூப்போட பங்கு இல்லாம இன்னைய இஸ்லாமிய கோட்பாடுகளும், இஸ்லாமிய வாதிகளோட கருத்துக்களும், ஜிகாத்திய வாதியோட எண்ணங்களும் இப்ப இருக்கற மாதிரி இருந்திருக்குமா? என்பதை நம்மால நினைச்சுக்கூடப் பார்க்கமுடியாது.


குத்தூப் எகிப்திய கல்வித்துறை அமைச்சகத்தில் ஒரு அதிகாரியாக பணியாற்றி வந்தார். சிறுகதைகள் நாவல்கள் மற்றும் அரசியல் கட்டுரைகள் எழுதுபவராகவும் இருந்தார். இஸ்ரேல் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்கனவே அரேபிய மற்றும் இஸ்லாமிய மனப்பான்மையை அமெரிக்காவுக்கு எதிராக விஷமாக மாற்றியிருந்தன.


1940 களோட பிற்பகுதியில, பாலஸ்தீனத்துக்குள்ள யூதர்கள் குடியேறினதை வைச்சி மேற்கத்திய நாடுகளுக்கும், அமெரிக்காவுக்கும் எதிரான அபிப்பிராயத்துக்கு வந்திருக்கார்னு அவரோட மேலதிகாரிங்களுக்கு கடுமையான எச்சரிக்கையுணர்வு அதிகரிச்சது. அதனால இந்த பிரச்சினையிலேயிருந்து குணப்படுத்த அவரை அமெரிக்கா முழுக்க இருக்கிற கல்வி முறைகளை கத்துகிட்டு வரத்துக்காக அமெரிக்காவுக்கு அனுப்பிவைப்பது தான் அறிவுப்பூர்வமான வழின்னு அவங்க நினைச்சாங்க!


அவரு கடைசியா கொலரோடோவில (Colorado) இருக்கிற கிரிலேக்கு (City of Greeley) வந்து சேர்ந்தாரு! இந்த இரண்டு வருஷங்கள் அவரோட மூளையில மேற்கைப்பத்தி பதுக்கிவைக்கப்பட்டத் தகவல்கள் அவரோட படிப்படியான முன்னேற்றத்துல முக்கிய பங்கு வகிக்குது. அவரு 1948 இல அமெரிக்கா வந்தாரு ஆனா திரும்பி போகும் போது முதல்ல இருந்ததைவிட மேற்கத்திய நாடுகள் மேல அதிக விரோதத்தோட அம்ரிக்காவை விட்டுப்போனாரு!


மேற்கத்திய உலகின் தாக்கத்தால் முகம்மது நபி பிறப்பதற்கு முன்பு இருந்த உருவ வழிபாடுகளை கொண்ட ஜகல்லயா (ஜஹில்லியா-Jahiliyyah) என்ற புறமதத்தைச் சார்ந்த நிலைக்கு அரபு நாடுகள் தள்ளப்பட்டுவிட்டதென,  ஒரு தீர்மானமான நம்பிக்கையுடன் குத்தூப் எகிப்துக்குத் திரும்பினார்.
************ 
இஸ்லாமிய இலக்கியத்துல அந்த ஒரு வார்த்தைக்கு ஒரு பலமான அர்த்தம் இருக்கு, அதுக்கு மடமை இல்லைன்னா அகந்தை, அதாவது திமிர்னு ஒரு அர்த்தம் இருக்கு. புறமதத்தவர்களுக்கு இருக்கும் அகந்தை காரணமா அவங்க கடவுளைப் பத்தின உண்மையை, அதாவது முகம்மது நபியோட இறைவாசகங்களில இருக்கிற உண்மையை ஏத்துக்கறதில்லை.

குத்தூப் இந்த பிரத்தியேகமான சொல்லுக்கு முழுசா வேற அர்த்தம் கொடுத்தாரு! ஜஹிலியா(Jahiliyyah) என்ற வார்த்தைக்கு எகிப்தின் கெய்ரோவில (Cairo) சமகாலத்தில இருக்கிற சமூக கலாச்சாரத்தை நவீன சமூகமா மாறியிருக்கும்னும், அதன் மேற்கத்திய உருவமும் தோற்றமும்..........
************
...தொடரும்..பகுதி-2
...நன்றி; தமிழ் டிஸ்கவரித் தொலைக்காட்சி...03.05.2011-ஜிகாத்-அல்கொய்தா பின்னணியில் இருக்கும் மனிதர்கள் மற்றும் கொள்கைகள்

Monday, 9 May 2011

ஜிகாத்-அல்கொய்தா பின்னணியில் இருக்கும் மனிதர்கள் மற்றும் கொள்கைகள்...பகுதி-3



 ஜிகாத்...JIHAT-3
புஷ்.....

“”உளவுத்துறை மூலமாக கிடைத்த ஆதாரங்கள் மூலமாகவும், இப்போது நம் காவலில் இருக்கும் நபர்கள் கொடுத்த வாக்குமூலங்கள் மூலமாகவும், சதாம் உசேன், அல்கொய்தா உள்ளிட்ட பல தீவிரவாத இயக்கங்களுக்கு, உதவிகள் செய்தும் பாதுகாப்பு அளித்தும் வருவதாக தெரியவந்துள்ளது.””

அமெரிக்கர்களோட கவனம் என்னை நோக்கி திரும்பர வரைக்கும், அவங்க வேதனையையும் வலியையும் கொஞ்சம் கொஞ்சமா! அதிகரிச்சுகிட்டேயிருப்பேன் என்று பின்லேடன் சொல்றாரு! அவங்க கிட்ட அணு ஆயுதம் இருந்தா அவங்க அதை பயன்படுத்துவாங்க! அதைத்தான் முதல் தாக்குதல் ஆயுதமா பயன்படுத்தறதோட நோக்கமாக இருக்கும்.

புஷ்....

“”அம்ரிக்கா அராசங்கள் ஐ.நா சபை பாதுகாப்புக் குழுவிடம், பிப்பரவரி 5 ஆம் தேதி நடப்பு உண்மைகளை, பரிசீலனை பண்ணுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. பயங்கரவாதிகள் குழுக்களோடு ஈராக்கிற்கு இருக்கும் தொடர்பு சம்பந்தமான உளவுத்துறையின் தகவல்களை உள்துறைச் செயலர் பௌல் இப்போது விளக்குவார்.

“”ஈராக்கிற்கும், அல்கொய்தா எனும் பயங்கரவாத வலைப்பின்னலுக்கும் இடையில கொடூர நோக்கத்தோட கூடியப் பிணைப்பு இருக்குங்கறதுக்கான திடமான ஆதாரங்கள் நமக்கு கிடைச்சிருக்கு!. அதாவது இது பழமைவாதிகள் இயக்கங்களுக்கும், நவீன கொலைகார வழிமுறைக்குமான பிணைப்பு! அதொட இது ஒன்னும் பெரிய ரகசியம் இல்லை.

காலின் பௌல் ஒரு நிழலாக இருக்கும் ஜோடானைச் சேர்ந்த பயங்கரவாதி மூலமாக ஈராக்கின் சதாம் உசைனுக்கும் அல்கொய்தாவுக்கும் இருக்கும் தொடர்பை விளக்கினார்.

ஈராக் இன்னைக்கு ஒசாமா பின்லேடனுக்கும் அவரோட தளபதிகளோட உடந்தையா இருக்கருவருமான அபு முசாப் அல் ஜர்க்காவி (Abu Musab al-Zarqawi) என்கிற தலைமையில இயங்குற ஒரு கொடூரமான பயங்கரவாத அமைப்பை களத்தில இறக்கிவிட்டிருக்கு.



ஜர்க்காவி உண்மையில் அல்கொய்தா உறுப்பினர் அல்ல. அத்துடன் செனட்டின் உளவுத்துறைக் குழுவுக்கு சதாம் உசைனுடன் எந்த தொடர்பும் இல்லை என்று உறுதி செய்திருந்தது.

ஆப்கானிஸ்தான்ல இருந்த காலகட்டங்கள்ல கூட அபு முசாப் அல் ஜர்க்காவி எப்பவும் பின்லேடன் கிட்டேயிருந்து தனித்து சுதந்திரமா இழங்கிறதுல ரொம்ப விருப்பமா இருந்தாரு.

பின்லேடன் அவரை அல்கொய்தாவுக்கு பணியாற்ற அழைச்சாரு! அவர் அல்கொய்தாவில சேர மறுத்துட்டாரு! பின்லேடன் அவரை ஏழு தடவைக்கு மேல கூப்பிட்டும் மறுத்தாட்டாரு!

அவரு அல்கொய்தாவில சேரவேயில்லை. அவருக்குன்னு சொந்தமா முகாம்களும், சொந்தமா அபிப்பிராயங்களும், சொந்தமா ஆதரவாளர்களும் இருந்தாங்க!

அவரு அல்கொய்தாவிலேயிருந்து விலகியே இருந்ததோட ஆப்கானிஸ்தானுல இருந்தபோது பின்லேடனுக்கு அவரோட மேலாதிக்கத்தை ஏத்துகிட்டு அவருக்கு கட்டுபட்டு நடக்கிறதா சபதம் செஞ்சு கொடுக்கவுமில்லை.

செப்டம்பர் ,11 க்குப் பிறகு, அமெரிக்கர்கள் தலிபான் ஜர்க்காவி மீதும் அவருடைய ஆதரவாளர்கள் அடங்கிய சிறிய படையணியினர் மீதும் தாக்குதல் நடத்தியபோது, அவர்கள் வடக்கு ஈராக்கிற்குள் தஞ்சமடைந்தனர்.

அமெரிக்கர்கள் ஈராக்கிற்குள் படையெடுப்பு நடத்தியபோது, ஜர்க்காவி தானே சுயமாக பின்லேடன் அல்லது அல்கொய்தா அடையாளங்கள் எதுவுமில்லாமல் தனிப்பட்ட யுத்தத்தை தொடங்கினார்.

கணக்கற்ற அளவில் பொறுப்பேற்காத வகையில் ஜர்க்காவியின் ரத்த வெறியாட்டம் நடைபெறாதவரையில் அல்கொய்தாவுக்கு அதில் பங்கு இருந்ததில்லை. அது அல்கொய்தாவையே உறுத்தியது.

மேற்கத்திய உளவுத்துறையால் இடைமறித்து கைப்பற்றப்பட்ட ஒரு கடிதத்தில், ஈராக்கில் ஜிகாத் தந்துகொண்டிருக்கும் ஒரு மகத்தான ஆதரவை இழந்துவிடவேண்டியது வரும் என்று ஜர்க்காவிக்கு எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது.

அந்த கடிதம் பொதுமக்களை படுகொலை செய்யறதை நிறுத்தணும்னு ஜவாஹிரியால ஜர்க்காவிக்கு அனுப்பப்பட்டிருந்தது. ஜர்க்காவி அதனால ரொம்ப கோவப்பட்டு ஜவாஹிரிகிட்ட “”நீங்க ஒன்னும் எனக்கு உபதேசம் பண்ணவேண்டாம், எனக்கு உத்தரவு போடவேண்டாம். நீங்க யுத்த களத்தில இருந்து ரொம்ப தூரத்துல இருக்கீங்க, உங்களுக்கு எதுவும் தெரியாதுன்னு”” சொல்லிட்டாரு!

இந்த கருத்து முரண்பாடுகள் இருந்தாலும், ஜர்க்காவிக்கு அல்கொய்தாவின் அஙகிகார ஆதாரம் தேவைப்பட்டது.

அவங்க ரொம்ப சாதாரணமா ஒரு குறிப்பிட்ட காலம் வரைக்கும் பேச்சுவார்த்தை நடத்திகிட்டு இருந்தாங்க. தனது அமைப்புக்கு சர்வதேச தீவிரவாத அங்கிகாரம் கிடைக்காத நிலையில ஜர்க்காவி இருந்தாரு! அது கடற் கொள்ளையரோட கொடி மாதிரி, கொடியை உயர்த்தினா நீங்க யார்னு எல்லாருக்கும் தெரிஞ்சுடும். தன்னோட பிரயோர்த்தனங்களுக்கு அந்த முத்திரை வேணும்னு விரும்பினாரு!

அந்த பேரம் எப்படி? முடிந்தது என்பது நமக்கு தெரியாமல் இருந்தாலும், அது இரு தரப்புக்கும் நன்றாக பொருந்தி வந்தது. தங்களுடைய மலையக மறைவிடத்திலிருந்தே ஈராக்கிற்கு அல்கொய்தாவின் பகுதி மீது தாங்கள் ஆதிக்கம் செலுத்தி அதை கட்டுக்குள் வைத்திருப்பதாக காட்டிக்கொள்ள பின்லேடனுக்கும் ஜவாஹிரிக்கும் அது சாத்தியமாயிற்று. அத்துடன் ஈராக்கில் நடப்பவற்றுக்கும் தாங்கள் தான் பொறுப்பு என்று கூறிக்கொண்டார்கள். ஜர்க்காவியும் ஈராக்கில் இருக்கும் அல்கொய்தாவிற்கு தான் தான் தலைவர் என்று கூறிக்கொள்ள அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவருடைய இறுதிக்கு நாள் குறிக்கப்பட்டது. அமெரிக்க ராணுவம் த்ங்களுடைய விசேஷப் படையணி இறுதியாக கண்டுபிடித்து விட்டதாக அறிவித்துவிட்டது. 2006 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒரு குண்டு அவருடைய வெறியாட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

புஷ்....
“”ஜர்க்காவி இறந்துட்டாரு! அவரு இல்லாம இந்த பயங்கரவாதிகளோட கிளர்ச்சியை சுலபாமா நடக்காதுன்னு நாம எதிர்பார்க்கலாம். ஆனால் ஈராக்கில நடக்கிற அந்த அவசியத்தேவையான கஷ்டமான பணித் தொடர்ந்து நடந்துகிட்டிருக்கு!””

ஒசாமா பின்லேடன் எது நடக்கணும்னு எதர்பார்த்தாரோ? அதே வகையில தான் அமெரிக்காவோட செயல்பாடுகள் எல்லாம் நடந்திகிட்டி,ருந்தது.

அது இரண்டு முஸ்லிம் நாடுகளுக்கு எதிரான முழு அளவில நடந்த யுத்தாமாயிருந்த்து. அது அல்கொய்தாவுக்கு புது உறுப்பினர்களை சேர்க்கறதுக்கு உதவியாவும் அதோட மதக்கோட்பாட்டை நிறுவ வசதியாவும் அது அமைஞ்சது. அதைத்தான் அவர் விரும்பியிருந்தார்னா? அவரு என்ன? எதிர்பார்த்தாரோ? அது அப்படியே நடந்தது.

ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் நீண்ட காலமாக நடந்து வரும் இது மாதிரியான போர்கள் பின்லேடனுடைய ஒட்டு மொத்த யுக்திக்கு சாட்சியாக அமைந்து உள்ளன.

மேற்கத்திய உலகமான ஐரோப்பா, மற்றும் அமெரிக்காவோட வலுவான அவங்க சொந்த மண்ணுல போய் சண்டை போடறது ரொம்ப ரொம்ப கஷ்டமான காரியம்ணு அவரு எங்கிட்ட சொல்லியிருக்காரு! அதனால அவங்க அமெரிக்காவ தஙவகளுக்கு சேதம் இல்லாத இடத்துல சண்டைக்கு இழுக்கணும்னு திட்டம் போட்டிருக்காங்க!

பின்லேடன் இதை ரத்தம் சிந்தி தீர்க்க இயலாத ஒரு போராட்டம நிலை என்று குறிப்பிட ஆரம்பிச்சாரு! அதுமட்டுமில்லாம அமெரிக்க ராணுவத்தை தன்னால நிச்சயமா தோற்கடிக்க முடியாதுண்ணு ரொம்பத் தெளிவா உணர்ந்துகிட்டாரு! அதனால நம்மால தாக்குப் பிடிக்க முடியாத அளவுக்கு பொருளாதாரத்தை அதிகளவு பயன்படுத்தற அளவுக்கு இருக்கிற மாதிரியான முறையில அவர் தாக்கவேண்டியிருந்தது. பின்லேடன் எல்லார் கிட்டேயும், நான் செய்யவேண்டியது எல்லாம் இந்த அல்கொயதா பேனர்ல யாராவது இரண்டு பேரை உலகத்துல எந்த பக்கத்துக்கு அனுப்பினாலும், அமெரிக்க அவங்களை பின்தொடர்ந்து போகும், ராணுவத்தை அனுப்பி பணத்தை செலவு செய்யும்னாரு! அவரு நினைச்சா மாதிரி நாங்க ஒசாமா பின்லேடனுக்கு எதிரா கணக்கு வழக்கு இல்லாத அளவுக்கு பணத்தை தண்ணியா செலவு பண்ணியாச்சு! அதொட இந்த ஈராக் யுத்தத்துல இந்த பொருளாதாரம் ரத்தக் களறியாடிச்சி. இந்த கோணத்துல பொருளாதார ரீதியா ரத்தம் சிந்தி தீர்க்க இயலாத ஒன்றன போராட்ட நிலை என்று வர்ணிக்கிறது சரியானது தான்.

பின்லேடன் எங்கிருக்கிறார் என்று நமக்குத் தெரியாது? பாக்கிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதி ஒரமாக இருக்கும் பழங்குடியினர் வசிக்கும் மலைப்பகுதிகளில் மூன்று ராணுவங்கள் அவரைத் தேடிக்கொண்டிருக்கின்றன. இது ஒரு காடு போன்ற நாடு. அதில் கிட்டத்தட்ட எல்லா கட்டிடங்களும் சிறிய கோட்டைப் போன்று இருக்கின்றன.

எங்கெல்லாம் அடிப்படைவாதிகள் இருக்கிறார்களோ? அங்கெல்லாம் நிச்சயமாக ஒரு உள்ளூர் தலிபான் இருப்பார்.

பின்லேடனை உயிருடனோ? பிணமாகவோ பிடித்து தருபவருக்கு, இரண்டு கோடியே ஐம்பது லட்சம் டாலர் வெகுமதியாக அறவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னமேயே அவருடைய தலைக்கு விலை வைக்கப்பட்டிருந்தது. அவர் அதை சட்டை செய்தது இல்லை.

ஒசமா...
“”அமெரிக்கா பண்த்தை வழிபடறதோட, எல்லோரும் அதைப்போலவே இருப்பாங்கன்னு நினைக்கறாங்க! நான் அந்த வெகுமதி அறிவிப்பு பலன் தரும்னு நினைச்சிருந்தா உடனே என்னுடைய மெய்க்காப்பாளர்களை மாத்திருவேன்னு அல்லாகிட்டை சப்தம் பண்ணினேன். ஆனால் இதுவரைக்கு நான் ஒருத்தரைக்கூட மாத்தினது இல்லை.””

சரித்திரத்திலேயே முதன் முறையாக பாக்கிஸ்தான் ராணுவம், இங்கு ராணுவத்திலிருந்து 80,000 துருப்புகளை ஆயத்தமாக நிறுத்தியது. பல ஆயுத பிரயோக மோதல்களுக்குப் பிறகு, அது சிறதளவு பின்வாங்கும்படி நிர்பந்திக்கப்பட்டது. ஆனால் பாக்கிஸ்தானின் ராணுவத் தலைமையானது, பின்லேடன் இப்பொழுது செயல்பட்டு கொண்டிருக்கும், ஒரு பயங்கரவாத இயக்கத்துக்கு தலைமை வகிக்கவில்லை என்று அறிவித்தது.



பாக்கிஸ்தான் ராணுவத் தலைமை.....

பொதுமக்கள் மனங்கள்ளேயும், இதயங்கள்ளேயும் அது சட்டவிரோத இயக்கம்ணு பெரிசா பதிஞ்சிருக்கு! அல்கொய்தா தலைமை அது எங்கிருந்தா   லும் சரி அவங்களால இன்டர்நெட் மூலமாவோ இல்லை ரேடியோ மூலமாவோ, டெலிபோன் மூலமாவோ தொடர்பு கொள்ள முடியாத நிலையில இருக்காங்க! ஏன்னா அவங்க தீவிர கண்காணிப்பில இருக்காங்க! அல்கொய்தா தலைமை ஒரு தகவல் அனுப்பி அதற்கு பதில் போய் சேர வே கிட்டத்தட்ட இரண்டு மாசத்துக்கு மேல ஆயிடுச்சி! ஏன்னா? எல்லாமே மானிடர்கள் தான் கொண்டு போயிருக்காங்க!

அல்கொய்தா கிட்டத்தட்ட சமாதி கட்டப்பட்ட நிலையில் தான் இருக்குங்கறதை நாங்க நிறையவே உறுதிப் படுத்திக்கிட்டோம். அதனோட முதுகெலும்பு உடைக்கப்பட்டாச்சி. அது தன்னோட படைகளோட தொடர்பு கொள்ள முடியாது. அது தனிமைப் படுத்தப்பட்டாச்சு. இப்போ அது சாதரண அமைப்பா தான் இருக்கும்ணு நான் நம்பறேன்!

அல்கொய்தாவின் வீடியோ அது இன்னமும் செயல் பட்டுகொண்டிருக்கும் ஒரு அமைப்பாக தெரிகிறது என்றுதான் காட்டுகிறது. ஆனால் அல்கொய்தா இப்போது அல்கொய்தா வாதமாகவும் ஆகி வருகிறது. அதாவது உலகில் சுயமாக தொடங்கப்படும் பயங்கரவாத இயக்கங்களுக்கு ஒரு உந்துதலாக இருக்கிறது. 1998 இல் பின்லேடனை பேட்டி கண்ட தொலைக்காட்சி நிருபரான ஜான் மில்லர் தற்போது எப் பி ஐ (FBI) யில் பணியாற்றி வருகிறார்.

நீங்க ஒரு பயங்கரவாதி விஷயமாகவோ இல்லை மாபியா குடும்ப விஷயமாகவோ இல்லை ஒரு தலைமையகத்தை வைச்சிகிட்டு இயங்கற அமைப்பு விஷயமாகவோ வேலை செய்யறீங்கன்னா அதோட மையத்தை கவனிக்கணும். அவைகளோட தகவல் தொடர்பை கவனிக்கணும். அவைகளோட தலைமையை பின்தொடரணும். அங்க கண்காணிக்க எந்த மையமோ இல்லை. ஏன்னா? அந்த மையம் வேற எங்க வேண்டுமானாலும் இருக்கலாம்.

நாம அல்கொய்தாவை ஒரு கட்டுகுள்ள இயங்கற அமைப்பா இல்லாம அழிச்சிட்டோம்னா ஒருவிதத்துல அதுல சேர்ரவங்களுக்கு தேவைப்படறது எல்லாம் ஒரு கருத்தும், லேப்டாப்பும் போதுங்கற அளவுக்கு அதை ஒரு நிறுவனக் கிளையா மாத்திட்டோம்.

வலைத் தளமும் 5000 ஜிகாதிய இணையத் தளங்களும் முடிந்தளவு தொலைதூரங்களுக்கு, அதாவது பாலி, மேட்ரிட்,  கசாபிளாங்க், இஸ்தான்பூல் மற்றும் இலண்டனில் இருக்கும் தீவிரவாதிகளுக்கு அல்கொய்தாவின் கொள்கைகளை பரப்பி வருகின்றன.

நடந்து முடிந்த சம்பவங்களின் தொகுப்பு, ஈராக், காசா, லெபனான் ஆகிய இடங்களில் அடக்குமறையை கேள்விக்குறியாக்கியதோடு, இஸ்லாமியப் பிரதான ஒட்டத்தில் ஒரு அங்கமாக, மதத்துக்கான புனிதப் போராக, தற்கொலைத் தாக்குதலுக்கு தயாரான, அவர்களின் எண்ணிக்கை பெருகிவருவது போல தோன்றியது.

நாங்க மக்களை எச்சரிக்கை பண்ணியாகணும். அவங்க தங்களோட கடந்த காலமான பின்லேடன் மற்றும் ஜவாஹிரியோட வழிகளை பின்பற்றக் கூடாது. அவங்க எந்தளவுக்கு அடக்கு முறைக்கும், மிரட்டலுக்கும் ஆளாகியிருந்தவங்களா இருந்தாலும் நாம குரானோட போதனைகளை கடைப்பிடிக்கணும், இந்த தவறான விளக்கங்களை ஏத்துக்க கூடாது. நான் அவங்களோட வன்முறை நிறைஞ்ச வழிகளை ஆதரிக்க மாட்டேன். ஆனா ஏன் குரானுக்கு தவறான விளக்கம் கொடுத்தாங்கன்னு புறிஞ்சிகிட்டேன்.. ஏன்னா? அவங்களுக்கும் இஸ்லாமிய நாடுகளுக்கும் இழைக்கப்பட்ட கொடுமைகளும் வன்முறைகளும், அதாவது,  ஹூம்மா அது என்னை பாதிக்குது.

நாங்க எதை நம்புறமோ? அதுக்காக எல்லாத்தையும் துற்க்க தயாராக இருக்கேன். இங்க ஜனநாயக ரீதியா தேர்ந்தெடுக்கப்பட்ட அராசாங்கங்கள், காலங்காலமா உலகம் பூரா இருக்கும் எங்க மக்களுக்கு எதிரா கொடுமைகள் பண்ணிகிட்டே இருக்கீங்க! அது எல்லாத்துக்கும் நீங்க தான் நேரடியா பொறுப்பேத்துகிட்டு அவங்களை அணைத்துக் காட்டணும். எங்க வார்த்தைகட்கு அந்தளவுக்கு அர்த்தம் உண்டு. அதோட ரத்தம் சிந்தாம இருக்கறதுக்கு நாங்க ஒண்ணும் கோழைகள் இல்லை.

ஒன்பது பதினொன்னுக்கப்புறம் (9/11) பின்லேடன் அமெரிக்காவத் தாக்காம இருந்ததுக்கு காரணம் என்னென்னா? கூட்டாளிகள் அந்த இரட்டை கோபுரத் தகர்ப்புக்கு முன்னாடி வரைக்கும் அவர் அமெரிக்கர்களை போதுமான அளவு எச்சரிக்கலைன்னு பின்லேடனை அதிகளவு விமர்சனம் பண்ணியிருக்காங்க! அதனால் நாங்க எங்க கொள்கையை மாத்திக்கலைன்னா மறுபடியும் தாக்குதலுக்கு ஆளாவோம்னு, பின்லேடன் அமெரிக்க மக்களுக்கு தனிப்பட்ட முறையில ஆறு தனித்தனி எச்சரிக்கை செய்திகளை வெளியிட்டிருக்காரு! அதனால் அது உண்மையான்னு சோதிச்சு பார்த்துக்கலாம், அவரு அதை பண்ணியிருக்காரு!. அவர் அமெரிக்க மக்கள் தலைவரா இருக்கற அதிபர் புஷ்ஷூக்கு மூணு வேறுபட்ட சமயங்கள்ல இஸ்லாம் மதத்துக்கு மாறச்சொல்லி சந்தர்ப்பம் கொடுத்திருக்காரு! நான் உங்க வழிகாட்டியா இருப்பேன்னும் சொல்லியி,ருக்காரு! இப்ப மேற்கத்திய நடைமுறைக்கேற்றார் போல் பார்த்தா இந்த இரண்டு விஷயமுமே ராம்ப தமாஷாத்தான் தெரியும். ஆனா இந்த இரண்டு கோரிக்கையுமே யுத்தம் நடத்த நபி காரணமா சொன்ன வசனங்களை பூர்த்தி பன்றதா இருக்கு!

ஒன்னு அவர்ங்களை எச்சரிக்கை பன்றது.
இரண்டு மதம் மாற அவங்களுக்கு சந்தர்ப்பம் கொடுக்கறது.

அடுத்து மூனாவது பிரச்சினையா கண்டுபிடிச்சு எடுத்துகிட்டது ரொம்ப பிரபலமான அரேபிய ஷேக் ஒருத்தர் பெருவாரியா படுகொலை செய்யக்கூடிய ஆயுதங்களை, அதுவும் குறிப்பா அணு ஆயுதங்களை பயன்படுத்தறது சம்பந்தமா போட்டுகிட்ட ஒரு ஒப்பந்தம். அது அணு ஆயுதங்களை பயன்படுத்தி ஒரு கோடி அமெரிக்கர்களை கொல்றதற்கு முஜாகிதினுக்கு அதிகாரம் கொடுத்திருக்கு! இப்ப அவரால எந்த கோணத்திலேயும், எதை வைச்சும் எதை வேணும்னாலும் பண்ண முடியும். அதோட அவங்க நம்மள அமெரிக்காவிலத் தாக்க தயாராக இருக்காங்க என நான் நினைக்கிறேன்.

ஒசாமா பின்லேடன் ஒரு யுத்தத்தை மேற்கத்திய உலகுக்கு எதிராக கட்டவிழ்த்து விட்டிருக்கிறார். அந்த யுத்தம் மேற்கத்திய பாதிப்பு எதுவும் இல்லாத ஒரு இஸ்லாமிய சாம்ராஜ்ய ஸ்தாபிதத்துடன் தான் முடிவடையும் என்று கூறியிருக்கிறார். அதற்கு ஒரு கெடுநாளும் குறித்து இருக்கிறார். அது 2020 ஆம் ஆண்டு. ஒரு காலத்தில் அவர் ஆப்கானிஸ்தானிலிருந்த பொழுது, இஸ்லாமியர்களை தனது ஜிகாத்தில் வந்து சேரும்படி அழைப்பு விடுத்தார். இப்போது மிகத்தீவிரமான ஜிகாத் விளக்கத்தை உலகம் முழுமைக்கும் அவர்கள் கொண்டு செல்லவேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

ஒசாமா....

“”கடவுள் எனக்கு உதவி செய்வார் என நான் நம்பறே! அதோட இறை நம்பிக்கை உள்ளவங்களை ஜிகாத்தை ஏத்துக்க வைப்பாரு! நம்ம மதம் வெற்றியடைய நாம இதைத்தான் செய்யணும்னு கடவுள் விரும்பறாரு!””
 ??????????????

,நன்றி டிஸ்கவரி சேனல். தமிழில்.ஒளிபரப்பியது..02.05.2011  குறிப்பு ஒசாமா பின்லேடன் அமெரிக்க உளவுப்படையால் கொல்லப்பட்டதும் அன்றுதான் ...அதிகாலை பாகிஸதான்...அப்போதாபாத் நகரில்.