Pages

Thursday, 23 June 2011

சமச்சீர் கல்வி: "சோ"வுக்கு வந்த சந்தேகம்!

   
 


ள்ளிகள் திறந்தன் பாடம் நடைபெறவில்லை. ஆசிரியர் வந்தார், அமர்ந்தார். என்ன பாடம் சொல்லிக்கொடுப்பது என்று அவருக்கும் தெரியவில்லை. உச்சநீதிமன்ற உத்தரவின்படி சமச்சீர் கல்விப் பாடத்திட்டங்களை ஆராய வேண்டும். அதன்பின்னர் புதிய புத்தகங்கள் தயார் செய்யப்படுமா? அதற்கு எவ்வளவு காலமாகும்? குறைந்த பட்சம் இன்னும் மூன்று மாதங்களுக்கு ஆசிரியர்களும் மாணவர்களும் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருப்பார்கள்.

     ஏற்கனவே பள்ளிகள் திறப்பது பாதி மாதம் தள்ளிப்போய்விட்டது. புதிய பாடத்திட்டங்கள் மாணவர்களின் கரங்களில் தவழ இன்னும் பலமாத காலமாகும் என்றால் இந்த ஆண்டுபடிப்புப் பாழ் என்று அர்த்தம். தமிழகம் இதுவரை இத்தகைய விசித்திரமான, விநோதமான நிலைமையைச் சந்தித்ததில்லை.

     இந்த அவல நிலைக்கு அடிப்படைக் காரணம் என்ன? இன்றைய புதிய அரசு அமைந்ததுமே ஒரு காரியம் செய்தது. புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம் செல்வி ஜெயல்லிதா தலைமையில் நடைபெறுகிறது. அடுத்தநாள் மீண்டும் கூடுகிறது. சமச்சீர் கல்விப் பாடத்திட்டத்தை நிறுத்தி வைப்பது என்று தீர்மானிக்கிறது. காரணம் சமச்சீர் கல்விக்கான பாடத்திட்ட்ங்கள் தரமற்றவை என்று விளக்கம் தருகிறார்கள்.

     அமைச்சரவைக் கூட்டங்களின் இடைப்பட்ட காலம் இருபத்தி நான்கு மணி நேரம். அதற்குள் சமச்சீர் கல்வித் திட்டப்பாடங்கள் தரமற்றவை என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். இருக்கட்டும். அடுத்து என்ன செய்ய வேண்டும்? அதனை ஆராய கல்வியாளர் குழு வேறு அமைக்க முன்வந்திருக்க வேண்டும்.

     சமச்சீர் கல்வித் திட்டத்தை பத்தாம் வகுப்பு வரை செயல்படுத்திக்கொண்டே பாட புத்தகங்களில் உள்ள குறைகளை நீக்கி நிறைவு செய்திருக்க வேண்டும். ஆனால் என்ன முடிவு கண்டார்கள்? பழைய பாடத்திட்டங்களையே நடத்துவது என்று அவசர அவசரமாக அச்சடிக்க ஆரம்பித்து விட்டார்கள். பழைய பாடத்திட்டங்கள் என்றால் சமச்சீர் கல்வித் திட்டம் தொடர வேண்டும் என்று ஏற்கனவே உச்சநீதிமன்றம் ஒருமுறைக்கு இருமுறை தீர்ப்பளித்து விட்டது.

     சமுதாயத்தில் நால்வருணம் என்பது போல பழைய பாடத்திட்டங்களும் நால் வருணம் கொண்டவை. நான்கு வகையான பாடத்திட்டங்கள் கொண்டவை எனவேதான் அது கூடாது என்று சமச்சீர் கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தார்கள். கல்வியிலும் சமத்துவம் காண்பது தான் அதன் லட்சியம்.

     சமச்சீர் கல்வித்திட்டம் கூடாது என்று தொடர்ந்து போராடுகிறவர்கள் தனியார் கல்வித்துறை வியாபாரிகள் தான். அவர்கள் கல்வியை பணம் கொழிக்கும் வர்த்தகமாகக் கருதுகிறவர்கள். எல்லாப் பள்ளிகளிலும் ஒரே பாடம்-ஒரே தேர்வு என்றால் அவர்களுடைய கஜானா வறண்டு விடும். எனவே சமச்சீர் கல்வியை அவர்கள் எதிர்கிக்றார்களென்றால் புரிந்து கொள்ளமுடியும். ஆனால் அ.தி.மு.க அரசின் இரண்டாம் நாள் அமைச்சரவைக்கூட்டத்திலேயே சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைப்பது என்று எடுத்த அவசர முடிவைத்தான் நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை.

     சிலர் வுயர்வகைக் கல்வி பெறுவதைத் தடுப்பதற்காகவே சமச்சீர் கல்வித் திட்டம் கொண்டுவர்ப்பட்டதாகப் பெருமளவில் பேசப்பட்டதாக 'துக்ளக்' சோ கூறுகிறர். ஒரு வேளை அவரைப் போன்றவர்களுக்கு ஏற்பட்ட அச்சத்தால் தான் சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்த தமிழக அரசு முன்வந்ததோ என்று எண்ண இடமிருக்கிறது.

     'சோ' கூறும் அந்தச் சிலர் உயர்கல்வி பெறுவதைப் போல அனைவருக்கும் அதே கல்வி கிடைக்கவேண்டும் எனபது தான் சமச்சீர் கல்வியின் லட்சியம்.

     சமச்சீர் கல்வித் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தனியார் கல்வி கனதனவான்கள் உயர்நீதிமன்றத்தை நாடினர். டெல்லி உச்சநீதிமன்றம் நோக்கி ஒடினர். முந்தைய கலைஞர் அரசு செயல்படுத்திய சமச்சீர் கல்வித் திட்டத்தை ரத்து செய்ய முடியாது என்று அந்த நீதிமன்றமும் நல்ல தீர்ப்பு வழங்கியது. அதன்பின்னர் தான் அவர்கள் ஒய்ந்தனர்.

     ஆனால் சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைப்பது என்று  அ.தி.மு.க அர,சு எடுத்த முடிவு அவர்களுக்கு கிடைத்த புதையல்.


     ஆனால் மக்கள் அதனை ஏற்கவில்லை. சமச்சீர் க்லவித் திட்டத்தை ரத்து செய்யாதீர் தொடர்க என்று தமிழகம் தழுவிய அளவில் குரல் எழும்பியது. அதன் எதிரொலியை சென்னை உயர்நீதிமன்றத்தில் கேட்டோம்.

     சமச்சீர் கல்வியைத் தமிழக அரசு நிறுத்தி வைப்பதை எதிர்த்து உய்நீதிமன்றத்தில் பல்வேறு அமைப்புகளும் வழக்குத் தொடர்ந்தன. சமச்சீர் கல்வித் திட்டத்தை தொடரவேண்டும் என்றும் ஏற்கனவே திட்டமிட்டபடி பத்தாம் வகுப்புவரை அந்தப் பாடங்களைத்தான் நடத்தவேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

     அதன்பின்னராவது அ.தி.மு.க அரசு சமச்சீர் கல்வித் திட்டத்தை செயல் படுத்த முன்வந்திருக்க வேண்டும். ஆனால் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அவசர அவசரமாக உச்சநீதிமன்றத்திற்கு ஓடியது. எப்படியும் சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்த வேண்டும் என்ற முனைப்போடு தான் அ.தி.மு.க அரசு செயல்படுகிறது என்ற எண்ணம் வலுப்பெற்றது.

     சமச்சீர் கல்வித்திட்டம் தொடர வேண்டும்.  வேண்டுமானால் பாட்த்திட்டங்களை பரிசீலனை செய்யங்கள் என்று தமிழக அரசிற்கு உச்சநீதிமன்றம் அறிவுரை கூறியிருக்கிறது. அதற்காக ஒரு குழு அமைக்க வேண்டும் என்றும் அந்தக் குழுவில் யார் யார் இடம்பெற வேண்டும் என்றும் உத்தரவிட்டிருக்கிறது.

     மாநிலத்தை எத்தனையோ பிரச்சினைகள் எதிர்நோக்கியிருக்கின்றன.  தேர்தல் காலத்தில் மக்களுக்கு  அ.தி.மு.கழகம் எவ்ளவோ வாக்குறுதிகளை அளித்திருக்கிறது. அதனை விடுத்து குளவிக் கூட்டில் கை வைத்தது போல சமச்சீர் கல்வித் திட்டத்தின் மீது ஏன் கைவைத்தது?

     சமச்சீர் கல்வித் திட்டம் செயலுக்கு வருவதை இனி தடுக்க முடியாது என்ற நிலை வந்த போது கல்விக் கூட வணிகர்கள் என்ன செயதனர்? பாடத்திட்டங்களில் ஒட்டை உடைசல்கள் என்றனர். அதே வாதத்தைத்தான் 'துக்ளக்' சோவும் சொல்கிறார். சமச்சீர் கல்வி வந்தால் எல்லோரும் தரம் தாழ்ந்த கல்வி ஏற்க வேண்டிய நிலை ஏற்படும் என்கிறார்.  அவர்களுடைய வாதங்களைத்தான் இன்றைய தமிழக அரசும் முன்வைத்தது.  வேண்டுமானால் தேவையற்ற பாடங்கள் என்று கருதுவதை நீக்கிவிடுங்கள் என்று ஆன்றோரும் சான்றோரும் அரசிற்கு அறிவுரை கூறினர்.   இன்றைக்குப் பாட புத்தக்ங்கள் இல்லாமலே, என்ன படிக்கப்போகிறோம் என்று தெரியாமலே மாணவர்கள் பள்ளிக்குச் செல்கிறார்கள்.  இந்த நிலை எத்தகைய எண்ணத்தை ஏற்படுத்தும்.

     சமச்சீர் கல்வித் திட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வைத்த வாதம் என்ன?  பாட புத்தகங்களில் கலைஞர், கனிமொழியின் படைப்புகள் இடம் பெற்றிருக்கின்றன என்பது தான்.  அந்தப் பாடங்களை நீக்குவது பற்றி தமக்கு ஆட்சேபணை இல்லை என்று கலைஞரும் சொல்லிவிட்டார்.  சமச்சீர் கல்வியில் நாட்டம் கொண்டோரும் சொல்லிவிட்டனர்.

     குப்பன் வீட்டுப் பிள்ளைக்கும் கோமான் வீட்டுப் பிள்ளைக்கும் ஒரே சமச்சீர் கல்வி என்பதனை வசதி படைத்தவர்களும் ஆதிக்க சமூகத்தினரும் தான் விரும்பவில்லை.  பிறப்பால் ஏற்றத் தாழ்வுகள் இருப்பது போல கல்வியிலும் ஏற்றத்தாழ்வுகள் இருப்பதுதான் தங்களுக்கு கவுரவம் என்று நினைப்பவருகளும் எதிர்க்கிறார்கள.  இந்த நிலையில் சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைப்பத்ற்கான மசோதாவை சட்டமன்றத்திலும் நிறைவேற்றி விட்டார்கள்.  சட்டமன்றம் நிறுத்தி வைக்கலாம்.  ஆனால் சமச்சீர் கல்வித் திட்டம் தொடர வேண்டும் என்று ஏற்கனவே உச்சநீதிமன்றமே அறிவுறுத்திவிட்டது.

     உச்சநீதிமன்றத்தை  தமிழக அரசு நாடியதைத் தொடர்ந்து தனியார் பள்ளி நிர்வாகங்களும் படையெடுத்தன. சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி பழைய பாடங்களையே நடத்துவது என்று தமிழக அரசு எடுத்த முடிவை செயல்படுத்த வேண்டும் என்பது அவைகளின் கோரிக்கை. அவைகளின் மனுக்களை விசாரிக்காமலே உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.  சமச்சீர் கல்வித் திட்டம் செல்லும் என்று ஏற்கனவே தீர்ப்பளித்துவிட்ட பின்னர் இந்தக் கோரிக்கை தேவையற்றது என்று தெரிவித்திருக்கிறது.

     சமச்சீர் கல்வி இல்லையென்றால் அரசு பள்ளி மாணவர்கள் ஒரு ஜாதி, மெட்ரிக்குலேஷன் பள்ளி  மாணவர்கள் ஒரு ஜாதி, மத்திய அரசின் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்கள் வேறொரு ஜாதி என்ற நிலைதான் உருவாகும்.

     ஒரு சிலரு உயர்வனக் கல்வி பெறுவதைத் தடுப்பதற்குத்தான் சமச்சீர் கல்வித் திட்டம் என்ற 'சோ' போன்றவர்களின் சந்தேகங்களைப் போக்குங்கள்.  அந்த ஒரு சிலருக்கும் மனக்குறை வேண்டாம்.  அதே சமயத்தில் இந்த ஆண்டே, சமச்சீர் கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கையையும் பரிசீலியுங்கள்.

     அ.தி.மு.கழகம் இன்றைக்கு ஆட்சி பீடம் ஏறியிருப்பதில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு சிறப்பான பங்கு உண்டு. அரசு ஊழியர்கள், வங்கி, இன்சூரன்ஸ் போன்ற பொதுத்துறை ஊழியர்களின் வாக்குகளை அந்தக் கட்சிதான் திரட்டி தந்தது.

     சமச்சீர் கல்வி என்பது கோபாலபுரத்து சரக்கு அல்ல.  சமச்சீர் கல்விக்காக இரண்டு கமுயூனிஸ்டு கட்சிகளும் நீண்ட நெடுங்காலமாகப் போராடி வந்தன.

     சமுதாயத்தில் ஜாதி பேதமற்ற சமத்துவம் என்பதுதான் தந்தை பெரியாரின் கொள்கை.  அந்தக் கொள்கையின் அடிப்படையில் தான் கல்வயிலும் சமத்துவம் வேண்டும் எனபதற்காக கலைஞர் அரசு சமச்சீர்திருத்தக் கல்வித் திட்டத்தைச் செயல்படுத்த முன்வந்தது.

     எனவே இப்பொதைய பாடத்திட்டங்கள் குறைபாடுகள் உள்ளவை என்று கருதினால் புதிய பாடத்திட்டங்களை தயார் செய்யுங்கள்.  ஆனால் அந்த பாடத்திட்டங்கள் சமச்சீர் கல்வித் திட்டத்தை திறம்படச் செயல்படுத்துவதாகவும், செழுமைப்படுத்துவதாகவும் அமையவேண்டும்.

     ஒரு சிலருக்கு மட்டுமே உயர்ந்த கல்வி என்ற வெளிச்சம் இதுவரை இருண்ட கண்டத்தில் இருக்கும் மக்களின் வீடுகளையும் எட்டிப் பார்க்க வேண்டும் எனபதே சமச்சீர் கல்வியின் சித்தாந்தமாகும்.

..........சோலை ...நக்கீரன் ஜூன்22-24,2011

*******************

பொது ஜனம்; இது என்ன சோ முண்ட கல்ப்பைத்தனமா ஐடியா பண்ணுது.....

பொது ஜனம்; அது பார்ப்பன கோஷ்டிக்காக ஐடியா பண்ணுது.......உயர் கல்வி எனபது இந்த கோஷ்டிக்கு மட்டும் தான் இருக்கணும்னு நினைக்குது. எல்லோருக்கும் உயர் கல்வி என்பது தான் சமச்சீர் என்பது அந்த முண்டகலப்பைக்கு முன்பே தெரியும். இருந்தாலும் அதோட பார்ப்பன டகால்டி வேலை தான் இதெல்லாம். அது பாப்பாத்திக்கும் இதோட உளுத்துப்போன ஐடியாவை சப்ளைப் பண்ணுது.....

பொது ஜனம்; இது ஐடியாக் கொடுக்கலைன்னா அதுக்கு தெரியாதா? 

பொது ஜனம்; ஏன் தெரியாது! கேடிகளுக்கு கேடிவேளைத்தானே தெரியும். இது கேடி லேடி.....

பொது ஜனம்; பழையப் பாடப்புத்தகம் வேணும்னா அதையும் எல்லா தனியார் மெட்ரிக் பள்ளிக்கூடத்துக்கும் சமச்சீரா ஆக்குமா? 

பொது ஜனம்; அது எப்படி ஆக்கும்!? அது தான் உதவாத படிப்பு என்று இதுங்களாகவே முடிவு கட்டிடுச்சே! இப்ப புரியுதா! கேடி லேடியோட நோக்கம் என்னவென்று!

பொது ஜனம்; அப்படியே பழைப்பாடப்புத்தகத்தை எல்லா பள்ளிகளும் சமமா பின்பற்றணும்னா இந்த கொள்ளக்காரப் பள்ளிக்கூடங்கள் ஒத்துக்குமா? அப்புறம், இந்த கொள்ளக்காரப் பள்ளிக்கூடங்க, கேடி லேடியோட ரகசியமாப் போட்டு கொண்ட ஒப்பந்தம் என்னாவது...?

Wednesday, 22 June 2011

சமச்சீர் கல்விக்கான மாணவர்கள் போராட்டம்! வலுக்கட்டும்! ஜெயலலிதாவின் அராஜகம் ஒழியட்டும்!



சமச்சீர் கல்வி குழுவில் தனியார் பள்ளி முதலாளிகளை நியமித்ததற்கு கண்டனம்: 300 மாணவர்கள் கைது
சமச்சீர் கல்வி ஆய்வு குழுவில் தனியார் பள்ளி முதலாளிகளை நியமித்த அதிமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து, இந்திய மாணவர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய அளவில் முற்றுகை போராட்டங்கள் நடைபெற்றன.


சென்னையில் பள்ளி கல்வி இயக்குனர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் கைது செய்தனர். 

சமச்சீர் கல்வியை அமல்படுத்தாமல் நிறுத்தும் முயற்சியில் அதிமுக அரசு ஈடுபட்டு வருவதை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு முற்றுகை ஆர்ப்பாட்டம் நûபெற்றது. சென்னையில் பள்ளி கல்வி இயக்குனர் அலுவலகம் முன்பு முற்றுகை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய இந்திய மாணவர் சங்க மாநில தலைவர் கனகராஜ், தமிழ்நாட்டில் முழுமையான சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே நடைமுறைப்படுத்த வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவில் கல்வியாளர்களுக்கு பதிலாக தனியார் பள்ளி முதலாளிகளை நியமித்து உள்ளார்கள். அதனை வாபஸ் வாங்க வேண்டும். நடுநிலையான  

கல்வியாளர்களை நிபுணர் குழுவில் நியமிக்க வேண்டும். ரவிராஜ பாண்டியன் அறிவித்துள்ள தனியார் பள்ளிகளுக்கான கட்டணம் அதிகப்படியாக இருக்கிறது.  இந்த கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் என்றார். 

...நக்கீரன் 21.06.2011

*************************  

பொது ஜனம்; மாணவர்களும் வகுப்புகளை புறக்கணித்து பெருவாரியாக போராட்டத்தில் குதித்துள்ளார்களேய்யா!

பொது ஜனம்; இது தமிழகம் முழுவதுமான அனைத்து கல்லூரி போராட்டமாக விரைவில் மாறும்! அவங்க இந்த விஷயத்தை  கையில எடுத்தா தான் சரியா வரும்! இன்னும் தமிழ ஆசிரிய , பேராசிய பெருமக்களும்  கலந்து கொண்டு நாடு தழுவிய ஸ்டிரைக் அனவுன்ஸ் பண்ணனும்!

பொது ஜனம்; இது மீண்டும் டெஸ்மா, எஸ்மா! கொண்டு வருமேய்யா!


பொது ஜனம்; கொண்டு வரட்டும்! அரசு வேலை நடக்க வேணாமா? ஒத்துழையாமை இயக்கம் என்னாச்சு! அதை நடைமுறைப்படுத்திட்டாப் போச்சு!

பொது ஜனம்; வெள்ளைக்காரனுக்கு எதிரா காந்தி கொண்டு வந்தது மாதிரியா? அந்தளவுக்கு ஆயிடுச்சா! 

பொது  ஜனம்; அப்ப வெள்ளைக்காரங்களுக்கு எதிரா! இப்ப கொள்ளைக்கா,ங்களுக்கு எதிரா!

பொது ஜனம்;பின்னே இங்கே என்ன! ஜனநாயக ஆட்சியா நடக்குது! சர்வாதிகாரமில்லே நடக்குது! அதுவும் மத்திய அரசின் கீழே இயங்கும்  ஒரு மாநில அரசு!


பொது ஜனம்; ஆமா அதிகாரிங்க! அரசு பணியாளர்கள் எல்லாம் மனிதர்கள் தான! குடும்பஸ்தனுங்க கீ கொடுத்தா இயங்குற மிஷினா? என்ன? இல்லை எல்லோருமே அதிமுக தொண்டர்களா? இல்லை ஜெயல்லிதாவோட அடிவருடிகளா? வேலை முடிஞ்சவுடனே எல்லோரும் வீட்டுக்குத் தானேய்யா போயாகணும்! குடும்பத்தை கவனிச்சு தானே ஆகணும்!  


பொது ஜனம்; இது சாதாரணமா முடியாது! இன்னும் பெரிசா போகும்னு சொல்லு! ரைட்டு! அடிச்சு தூள் கிளப்பட்டும்!

கொள்ளையர்களுக்கு மறுவாழ்வு அளித்த ஜெயலலிதாவுக்கு நன்றியோ! நன்றி!-கொலை கொள்ளையர்...

மனைவியின் கண் முன் கணவனை கொலை செய்து விட்டு தங்க நகைகள் கொள்ளை

விழுப்புரத்தில் மனைவியின் கண் முன் கணவனை கொலை செய்து விட்டு தங்க நகைகளை கொள்ளை அடித்துச்சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

விழுப்புரம் நாராயணன் நகரைச் சேர்ந்தவர் தீனதயாளன். நேற்று (20.06.2011) இரவு தனது குடும்பத்தினருடன் அவர் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது 4 பேர் கொண்ட கொள்ளை கும்பல், வீட்டின் பூட்டை உடைத்து தூங்கிக் கொண்டிருந்த தீனதயாளனையும், அவரது மனைவி லட்சுமியையும் எழுப்பி பீரோ சாவியை கேட்டுள்ளனர். 

சாவியை கொடுக்க மறுத்ததால் லட்சுமியை கயிற்றால் கட்டிவிட்டு, தீனதயாளன் தலையில் உருட்டுக்கட்டையால் தாக்கினர். இதில் தீனதயாளன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் பீரோவில் இருந்த 15 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

...நக்கீரன் 21.06.2011
********************

பொதுஜனம்; என்னய்யா கொள்ளைக்காரங்க நன்றி சொல்லியிருக்காங்க! 

பொது ஜனம்; கொள்ளைக்கார்ங்க தினம் ஜெயலலிதா படத்தை கும்பிட்டு விட்டுத் தான் கொலை கொள்ளைகளை அடிக்கப்போறாங்க! எல்லா அடிதடியும் ஆட்சிக்கு வந்த நாளிலேயே ஸ்டார்ட் ஆயிடுச்சி! ஜெயலலிதா ஆட்சி வந்தா தான்ய்யா கொள்ளையடிக்கமுடியும்? நிலத்தை மடக்க முடியும்? தைரியமா லஞ்சம் வாங்க முடியும்? தைரியமா! பட்டப்பகலிலே கொள்ளை அடிக்க முடியும்! தடுக்கரவங்களை போட்டுத்தள்ள முடியும்! என்று எல்லா சமூக விரோதிகளும் முன்னாடியே பப்ளிக்கா பேசிக்கிட்டாங்க! அது தான் இப்ப நடக்குது!

பொது ஜனம்; ஆமாய்யா! தேர்த்தலுக்கு முன்னாடியே பலர் இப்படி பப்ளிக்கா பேசிகிட்டு இருந்தாங்க!


பொது ஜனம்; விழுப்புரம் கொலை நடந்தவுடனே! விழுப்புரம் மாவட்டத்து எஸ்.ஐ., இன்ஸ்பெக்டர் என அனைவரையும் கூண்டோடு மாத்திட்டாங்களே!நடவடிக்கையைத்தான் உடனே உடனே எடுக்கிறாங்களே!


பொது ஜனம்; இந்த நடவடிக்கை எவனுக்கு வேணும்? கொள்ளையடிச்ச பொருள் திரும்ப கிடைச்சுடுமா? இல்லை போன உசிரு திரும்ப வந்துடுமா? மசிறு தான் வரும்!

பொது ஜனம்; ஓ இது தான் நடவடிக்கையா? இந்த நடவடிக்கைக்கு தினம் ஒருத்தரை போட்டுத்தள்ளனும் போல இருக்கே!

பொது ஜனம்;அதான் தினம் ஒருத்தரை கொள்ளைக்காரங்க போட்டுத்தள்ளுராங்க!

பொது ஜனம்; ஆமா! கொள்ளைக்காரரும் அதிமுக தொண்டர் தானே! வாக்காளர் தானே! அவ்வளவு சீக்கிரம் விட்டுற முடியுமா? எல்லா மணல் கொள்ளையும் அவங்க தான் மன்றாங்க! சூதாட்ட, டிஸ்கோ கிளப் நடத்தறதும் அவங்க தான்! முன்னாடி சாராயக்கடையை ஏலம் எடுத்து ஒரு ஒட்டு ஒட்டினாங்க! இப்ப வெறும் கள்ளச்சாராயம், அரிசி கடத்தல், மணல் கொள்ளை இது மாதிரி தான் பண்ணமுடியுது. ரேஷன் கடைகளிலே கூட மாவட்டப்பிரதிநிதிகளோட அட்டகாசம் தாங்க முடியலைய்யா! அம்மா! அம்மா!  இன்னு சொல்லியே லஞ்சப் பால் குடிக்க வந்துடறானுங்க!

பொது ஜனம்; ஜனநடமாட்டம் உள்ள பகுதியில் நடந்து போறவரு கிட்டேயே பணத்தை அபேஸஃ பண்ணிட்டு தைரியமா போறாங்களேய்யா! கொள்ளைக்காரங்க கூட அரசாங்கம் ஒப்பந்தம் ஏதாவது போட்டிருக்குமா?  


பொது ஜனம்; இவ்வளவும் பார்த்துகிட்டு ஜெயலலிதா அரசாங்கம் என்னத்தை கிழிக்குதாம்?


பொது ஜனம்; பசங்க படிக்கிற பாடப்புத்தகத்தை கிழிக்குது! அல்பம்! இது இந்த மாதிரி விஷயத்துக்குத்தான் லாயக்கு! இப்படி இருந்தா அப்படித்தான் நடக்கும்! பாதிப்பு பப்ளிக்குத்தான்! நல்லா அனுபவிக்கட்டும்!
 
பொது ஜனம்; மொத்தத்துல ஜெயலலிதா வந்ததுனால கொள்ளைக்காரங்களுக்கு மறுவாழ்வு கிடைச்சிறுச்சு! இனி தினம் ஒரு கொள்ளை!, தினம் ஒரு கொலைன்னு! எல்லா ஊர்லேயும் பார்க்கலாம்!

Sunday, 19 June 2011

படிச்சு ஒண்ணும் கிழிக்க வேணாம்! படிக்காமயே கிழிக்க நாங்க இருக்கோம்! எங்க அதிமுக ஆட்சியை வேணுன்னா காரித்துப்பிக்கோ!




சமச்சீர் கல்வி பாட புத்தகங்களை கிழிக்கும் பணி
சமச்சீர் கல்வி பாடப்புத்தகத்தில் பாடங்களை கிழிக்கவும், மையிட்டு அழிக்கவும் கத்தரிக்கோல், ஸ்டீல் ஸ்கேல், பிளேடு, கருப்பு மார்க்கர் பேனாவுடன் இன்று ஆஜராகும்படி ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ‘கிழிக்கும்’ பணிக்கு வராத ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

தமிழகத்தில் 1 மற்றும் 6&ம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வியை இந்த ஆண்டும் தொடர சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. 1 மற்றும் 6&ம் வகுப்புகளுக்காக அச்சிடப்பட்டுள்ள சமச்சீர் கல்வி தமிழ், அறிவியல், சமூக அறிவியல் பாடப் புத்தகங்களில் கடந்த திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள், சிலரது கவிதைகள் இடம் பெற்றுள்ள பக்கங்களை கிழிக்கவும், சில பக்கங்களை கருப்பு மையால் மறைக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. புத்தகத்தின் பின்பக்கத்தில் உள்ள செம்மொழி மாநாடு ‘லோகோ’வை பச்சை நிற ஸ்டிக்கரால் மறைக்கவும் ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பச்சை நிற ஸ்டிக்கர்களை தேவையான அளவு பள்ளிக்கல்வித் துறையே ஆசிரியர்களுக்கு வழங்கியுள்ளது.

ஆனால் பக்கங்களை கிழிப்பதற்கு தேவையான பிளேடு, கத்தரிக்கோல், பாடங்களை மறைக்க கருப்பு நிற மார்க்கர் பேனா, ஸ்டீல் ஸ்கேல் ஆகிய பொருட்களை ஆசிரியர்களே கொண்டு வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. 
பல மாவட்டங்களில் ‘கிழிப்பு’ பணி நேற்றே தொடங்கியது. ஒன்றரை கோடி புத்தகங்கள் இருப்பதால் ஒரேநாளில் பணி முடியவில்லை. இன்று ஞாயிற்றுக்கிழமை என்றாலும் புத்தக கிழிப்பு பணியில் ஈடுபட ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள் இன்று பணியில் ஈடுபட்டனர்.


......நக்கீரன் 19.06.2011

**************************

பொது ஜனம்; அய்ய்ய! இது என்னய்யா! முழு  மென்டல் பன்றமாதிரி இருக்குது! 

பொது ஜனம்; ஆமாய்யா! அந்த பொம்பளை ஒரு மனநோயாளிய்யா! குழந்தைகளுக்கு வருகின்றதை விட அதிகமான காண்டு பிடிச்ச வேலைகளை அதிகம் பண்ணும்! அது எப்பவுமே அப்படித்தான்!  அது இருக்க வேண்டிய இடமே வேற! வெடிக்கற அளவுக்கு பிரசர் வேற!

பொது ஜனம்; சரி இதுக்கு எதுக்கு ஆசிரியர்களை வேலை பார்க்க வைக்கணும் இதுவும் அரசின் கொள்கை முடிவா? இது அராஜாக முடிவா இருக்குதே? விட்டா ஆசிரியர்களை "கக்கூஸ்" கழுவ விடுவாங்க போலிருக்கே! ஏன் அவங்க கூட்டமைப்பு என்ன பண்ணுது!

பொது ஜனம்; ஜெயலலிதா பேசாம நிறைய உடற்பயிற்சி பண்ணலாம்! தேவைப்பட்டா நல்ல மென்டல் டாக்டரையும் சந்திச்சு ஆலோசனை பண்ணலாம். யோகா பண்ணலாம்! ஆனா அது நிறைய யாகம் மட்டும் தான் பண்ணும்! இப்படியே இருந்தவங்க நிறையப் பேர் மென்டல் முத்திப்போய் தற்கொலை பண்ணி கூட இருக்காங்க! கேள்விப்பட்டிருக்கேன்!

பொது ஜனம்; ஏன் அப்படி! சில பேர் வாழ்க்கையிலே நிறைய பாதிக்கப்பட்டிருப்பாங்க! அவங்கெல்லாம் இது மாதிரிதான் மாறிடுவாங்க!

பொது ஜனம்; அதுக்கு ஜனங்க தான் கிடைச்சாங்களா!

பொது ஜனம்; நடிகையா இருக்கும்பொழுது நிறைய மிஸ்யூஸ் பண்ணி பெண்களை மனதளவில் கொடுமைப்படுத்தறது இனைனக்கு வரைக்கும் நடந்துகிட்டு தானே இருக்குது. அந்த காலத்தில நிறைய நடந்திருக்கும்! 

பொது ஜனம்; ஆமாய்யா எம்.ஜி.ஆர் காலத்தில "டி.ஜி.பி"யா இருந்த மோகன் தாஸ் கூட "தி "எம்.ஜி.ஆர்"- "தி மேன் அன் தி மித்" (The man and the Myth) என்ற சுயசரிதை புத்தகத்திலே இது பற்றியெல்லாம் குறிப்பிட்டு இருக்காருய்யா! எம்.ஜி.ஆர் எப்படி பெண்களோட தொடர்புகளை ஏற்படுத்தி இருந்தார்! என்பதை அவங்களை எப்படி? கையாண்டார்? என்பதையும் குறிப்பிட்டு இருக்கிறார். அதே மாதிரி ஜெயலலிதா அதிமுக வில "என்டர்" ஆன பீரியட்ல எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவை சம்பந்தபடுத்தி பச்சை பச்சையா செய்திகள் வந்துது. இதையெல்லாம் யாருமே பெரிசா கண்டுக்கலை. இது அதிமுக வில இருந்த பலருக்கும் தெரிந்த விஷயம். 

பொது ஜனம்; ஆமாய்யா! ஆர்.எம்.வீரப்பன், ஜெயலலிதா மோதல் மேட்டர் கூட பெரிசா அப்ப பேசப்பட்டுகிட்டு இருந்தது. அது ஊரறிந்த விஷயமாச்சே!. பஸ்ஸூக்களே "வீ" ("V","VV" )சர்வீஸ் " "ஜெ" ("J","JJ") சர்வீஸ் என  விட்டாங்களே! அந்த பஸ்ஸூங்க அதி வேகத்தில போய் கொள்ளைப் பேத்தை கொன்னுது!

பொது ஜனம்; கரெக்ட்! இது மாதிரி பல விஷயங்களிலே பாதிக்கப்பட்டவங்க மன நோயாளியா மாறுவது சகஜம். அது தான் உண்மையா இருக்கும்! 

பொது ஜனம்; எம்.ஜி.ஆர் செத்தப்ப கூட, ஜெயலலிதா எம்.ஜி.ஆர் தலைமாட்டில இருந்ததுக்கு எல்லோரும் திட்டினாங்க! தலைமாட்டில நின்னுகிட்டு எம்.ஜி.ஆர் வாயை அடிக்கடி ஜெயலலிதா துடைச்சுகிட்டே இருந்தது. இதை அதிமுக ஆளுங்களே! பயங்கரமா திட்டினாங்க!  அப்புறம் எம்.ஜி.ஆர் வளர்ப்பு மகன் பெயர் கூட சுதாகரனா, சுகுமாறனோ! பேர் சரியாத்  தெரியலை எல்லோரும் சேர்ந்து எட்டிக் கூட உதைச்சாங்க!

பொது ஜனம்; எம்.ஜி.ஆர் வாயை துடைச்சிகிட்டு இருந்தாங்கன்னா! பொஞ்சாதி தான் துடைக்கணும்! அப்ப.....???????????????

பொது ஜனம்; அதுதான் பெரிய சர்ச்சைக்கான காரணமே! அப்ப மோர்ல விஷம் கலந்து எம்.ஜி.ஆரை  கொன்னுட்டாங்க! இவங்க கொன்னுட்டாங்க! அவங்க கொன்னுட்டாங்க! என்று ஜெயலலிதா தரப்பும் எம் ஜி ஆரோட அதிகராப்பூர்வ மனைவியான ஜானகி தரப்பினருக்கும் பெரிய "வாரே" நடந்து ஊரே நாறி கிட்டு இருந்தது.

பொது ஜனம்; ஆமாம்! ஆமாம்! அதனால தானே இரண்டு அணி உருவாச்சு! அப்புறம் ஜெயலலிதாவை அசிங்கமா, பச்சை பச்சையா வெளிப்படையா "வைப்பாட்டி" என்று திட்டினவங்க எல்லாம் ஒன்னா சேர்ந்துகிட்டாங்க! அப்புறம் காலிலேயும் விழுந்தாங்க! 

பொது ஜனம்; இப்ப புரியுது! ஆனா அதுக்காக பொது மக்களை எதுக்கு வாட்டி வதைக்கணும்! ?

பொது ஜனம்; இதெல்லாம் கூடவா அந்த மோகன்தாஸ் புக்குல போட்டிருந்தது! அப்படியே பார்த்த மாதிரி சொல்றியே!

பொது ஜனம்; முண்டம்! நீ இப்படி கேள்வி கேப்பேன்னு தெரியும்! இது அத்துனையும் அப்ப இருந்த தூர்தர்ஷன், அதான்! "சென்னை தொலைக்காட்சி" அப்ப இந்த ஒரு தொலைக்காட்சி தான். நேரடியா ஒளிபரப்பாக்கிட்டு இருந்தாங்க! எம்.ஜி.ஆர் மறைந்த செய்தி வந்ததிலேயிருந்து எம்.ஜி.ஆரை கொண்டு போய் அடக்கம் பன்றவரைக்கும் இடைவிடாமல் தொலைக்காட்சியில ஒளிபரப்பினாங்க! இப்ப இருக்கிற எந்த தொலைக்காட்சியும்  அப்ப கிடையாது  தொலைக்காட்சின்னா தூர்தர்ஷன் மட்டும் தான்!. அதுல கிளியரா ஜெயலலிதா வை எட்டி உதைச்சது பதிவாகியிருக்கு! அதை திருப்பி திருப்பி அப்ப ஒளிபரப்பு பண்ணிகட்டேயிருந்தாங்க!

பொது ஜனம்; ஆமா! இது ஊருக்கே தெரிந்த விஷயம். பத்திரிகைகளிலும் வந்தாச்சு!

பொது ஜனம்; ஒரு மாநில முதலமைச்சர் மறைவுக்கு இந்தியாப் பூரா "லீவு" விட்டது எம்.ஜி.ஆருக்கு மட்டும் தான்! தமிழ்நாட்டில மூணு நாளைக்கு லீவு விட்டாங்க! கரெக்ட்! அப்ப ஒளிபரப்பினாங்க சரிதான்!

பொது ஜனம; அதாவது நம்ம இவ்வளவு கஷடப்பட்டது இந்த மக்களால தான் அதனால நாம ஒரு நாள் பதவிக்கு வந்தா! இது மாதிரி அழிச்சாட்டியம் பண்ணி நம்மளை வெறுப்பேத்தின! எல்லோரையும் நாமும் வெறுப்பேத்தனும் என்று நினைக்கிற மனப்பான்மை சிலருக்கு வந்துடும். அதுமாதிரியும் இந்த பொம்பளைக்கு வந்திருக்கும்! ஒரு காலத்துல நம்மை எத்தனை பேர்? இழிவுப்படுத்தினாங்க? அதுனால! இப்படி! பழிவாங்கும்! போக்கு ஆட்டோமேட்டிக்கா வந்திருக்கும்!

பொது ஜனம்; அப்ப இந்த "மென்டலுங்க" கூடத்தான் நாம காலத்தை ஓட்டணும்! ஓட்டு போட்டதிற்காக ஒட்டணுமா?

பொது ஜனம்; இதுமாதிரியெல்லாம் எந்த ஆட்சியிலேயும் பண்ணிதில்லையேயா? காமராஜர், ராஜாஜி, பக்தவச்சல்ம, அண்ணாதுரை, கலைஞர் ஆண்டிருக்கிறார்! எம்.ஜி.ஆர் ஆண்டிருக்கிறார் அவரு அச்சடித்த புத்தகத்தை ஒன்னும் மாத்தலியே வேணுன்னா அந்த பாடம் படிக்காதிங்க என்று சுற்ற்றிக்கையைத்தான் பள்ளிக் கூடத்துக்கு அனுப்புவாங்க! அதுலேயிருந்து கேள்வி கேக்கமாட்டாங்க! இது என்ன மென்டல் தனமான செயல்! 

பொது ஜனம்; ஓ அதுக்குத்தான் வக்கீல் நோட்டீஸ் விட்டிருக்காங்களா?  என்ன இதுங்க மென்டல் மனநிலையை மாத்திக்கும்மா என்ன? பார்க்கலாம்!

பொது ஜனம்; ஆசரியர்களை கீழ்த்தரமா இந்த வேலையை வாங்கறது மகா தப்பு! இவங்க யார்? 

பொது ஜனம்; அதிமுக வோட அராஜக  வேலைக்கு  அரசு டீச்சருங்களை எப்படி வேலை வாங்க முடியும்? இதுக்காகவே ஸ்டிரைக் பண்ணலாம்!

பொது ஜனம்; சூரியன் கூடத்தான் தினமும் உதிக்குது அதை பார்க்கவே கூடாது அது "தேர்தல் சின்னம்னு"  தடைச் சட்டம் கூட "லூசுத்தனமா" இதுங்க போட்டாலும் போடுங்க!

அதிமுக ஆட்சியின் அலங்கோலம்- கருப்பு சட்டைக்கே கல்தா கொடுத்த காக்கிகள்!


 நீதிக்குத் தண்டனையா? கொல்லப்பட்ட வக்கீல்!

காக்கி சட்டைகளுக்குகும் கருப்புக் கோட்டுகளுக்கும் இடையே, மீண்டும் உரசல் தீயை உண்டாக்கிக் கொண்டிருக்கிறது அந்தப் படுகொலை. படுகொலையானவர் சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் சங்கரசுப்புவின் மகன் சதீஷ்குமார்.
     கொலைக்குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்யவேண்டும் என்று காவல் துறையைக் கண்டித்து கோர்ட்டுகளைப் பறக்கணித்தும் போராட்ட்களத்தில் குதித்து வருகின்றனர். வழக்குரைஞர்கள் தமிழகம் முழுக்க கோர்ட் நடவடிக்கைகள் ஸ்தம்பிக்கத் தொடங்கியிருக்கிறது.

     சென்னை அண்ணாநகரில் வசிக்கும் வழக்கறிஞர் சங்கரசுப்பு, 35 வருடங்களுக்கு மேலாய் வழ்க்காடி வருகிறார். சீனியர் வழக்கறிஞர் தகுதிக்காக, 2 நீதிபதிகளும் 2 சீனியர்களும் பரிந்துரைக்க வேண்டும் என்பதால், சீனியர் தகுதியையே மறுத்துவிட்டவர் சங்கரசுப்பு. 80-களில் நக்ஸல் இயக்கத்தைச் சேர்ந்த பாலன் மேடையில் பேசிக்கொண்டிருந்தா போது, அவரைக்கைது செய்த தேவாரம் தலைமையிலான டீம், அவரை நடுக்காட்டில் வைத்து சுட்டுக்கொன்றது. இந்த வழக்கில் தானாக ஆஜராகி, அது போலி எனகவுன்டர் என நிருபித்து, காவலதுறைக்கு கண்டனத்தையும் பாலன் குடும்பத்துக்கு நஷ்டயீட்டையும் வாங்கிக்கொடுத்தவர் சங்கரசுப்பி. இடது சாரித் தோழர்கள் யாராவது பொய்க் குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டால், அவர்களுக்காக ஆஜராகிவிடுவது இவரது இயல்பு. மனித உரிமை ஆர்வலரான இவர், ஃபீஸைப் பற்றி யோசிக்காமல் பாதிக்கப்பட்டவர்களுக்காக அழுத்தமாக குரல் கொடுக்கக்கூடியவர்.

      சங்கரசுப்புவின் மனைவி மயிலம்மாள் அஞ்சல் துறை அதிகாரியாகப் பணியாற்றிவரிகிறவர். இந்தத் தம்பதிகளுக்கு சதீஷ்குமார் உள்ளிட்ட இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். சட்டப்படிப்பை முடித்து வேலை தேடிக்கொண்டிருந்த 24 வயதே ஆன சதீஷ்குமாரின் படுகொலை அவரது குடும்பத்தைத் தாண்டி, பலரையும் பதை பதைக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

     என்ன நடந்த்து என வழக்குரைஞர் சங்கர சுப்புவிடமே நாம் கேட்டோம். கலங்கிய விழிகளோடு பேச ஆரம்பித்த அவர்...

     "ஒரு தகப்பனாக நானும் என குடும்பத்தினரும் படும் வேதனைகளை வார்த்தைகளால் விரிக்கமுடியாது. குடும்பத்தோட குற்றாலத்துக்கு டூர் போய்ட்டு 6-ந்தேதி தான் நாங்க சென்னை திரும்பினோம். மறுநாள் காலை என் மனைவியை டூவீலர்ல கொண்டுபோய் அவங்க அலுவங்கத்தில் வட்டுவிட்டு வந்த சதீஷ், அன்னைக்கு நைடவரை வீட்லதான் இருந்தான். சைட் 9 மணிக்கு ஃபாஸ்ட் ஃபுட்ல சாப்பிட்டு வர்றேன்னு போனான். போய் ரொம்ப நேரம் ஆகியும் அவன் திரும்பலை. உடனே அவன் சொல்லைத் தொடர்பு கொண்டோம். ரிங் போய்க்கிட்டே இருந்த்து. உடனே எஸ்.எம்.எஸ் அனுப்பினோம். அதுக்கும் அவங்கிட்ட இருந்து பதில் இல்லை. விடிய விடிய பதட்டாமா அங்க இங்கன்னு தேடிப்பார்த்தோம். மறுநாள் காலை 7 மணிக்கு திருமங்கலம் போலீஸ் ஸ்டேஷன்ல புகாரைக் கொடுக்கப்போனேன். ரெண்டுமணி நேரம் கழித்து வரச்சொன்னாங்க. மறுபடியும் போய் புகாரைக்கொடுத்து எஃப்ஐ ஆரே போட்டாங்க. மதியம் 2 மணிக்கு ஒரச்சொன்னாங்க. இப்படி அலையவிட்டுதான் எஃப்ஐஆரே போட்டாங்க. இதுக்குப்பறிகும் அவங்க விசாரிக்கிற மாதிரி தெரியலை.

     அண்ணாநகர் டி.சி யைப் பார்த்தேன். செல் நம்பரை வச்சி டிரேஸ் பண்ணுங்க சார்னு கேட்டுக்கிட்டேன். அதுக்கப்புறம் சீயாளம் தொரு டவர் எல்லையில் இருப்பதா கண்டுபிடிச்சாங்க. வேறு எதையும் செய்யலை.

     9-ந்தேதி காலை கமிஷனர் திரிபாதியை சந்திச்சி விசாரணையைத் துரிதப்படுத்தச் செய்யுங்கன்னேன். 24 வயசுப் பையன்தானே தானா திரும்பி வந்துடுவான்னு அலட்சியமா சொன்னார். நான் பலருக்கு எதிரா வழக்காடியிருக்கேன். என் மீது அவங்க கோபமா அருக்காங்க. அதனால் அவங்க மூலம்ரென் பையனுக்கு பிரச்சினை வந்துடுமோன்னு பயமா இருக்கு. வழக்கை சைபர் கிரைமுக்கு மாத்தினா,ஈஸியா செல்போன் மூலம் கண்டுபிடிச்சிடலாம்னு வாதாடினேன். இதன் பிறகும் நிறைய அலையவிட்டார்களே தவிர, வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. அன்னைக்கு சைட் ஒரு மணிக்கு, என் மகள், சதீஷ் குமாரை வழக்கம் போல் தொடர்பு கொள்ள முயன்றாள். எதிர்முனையில் திடீரென்று அந்த போன் ஆன் ஆனது. பேசியவர் ஒரு போலீஸ்காரர். 'இந்த செல் யாருடையது? இந்த செல்லும் ஒரு டூவீலரும் ஐ.சி.எஃப். வடக்கு காலனி ஏரிக்கரையில் இருந்ததுன்னு அவர் சொல்ல. பதறியடிச்சிகிட்டு ஓடினோம். ஆனா பையன் கிடைக்கவே இல்லை.

     மறுநாளான 10-ந் தேதி என் மகனை கண்டுபிடித்து ஒப்படைக்கவேண்டும் என்று ஹேப்பியஸ் கார்ப்பஃ மனுவை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தேன். நீதிமன்றமோ ஸபெஷல் டீம் போட்டு தேடும்படி உத்தரவிட்டது. இதன்பிறகும் பெயரளவுக்கே அந்த ஏரியில் தேடினாங்க. 13-ய்தேதி வரே தேடல் என்ற பெயரில் பாவலா பண்ணினாங்க. கடைசியில 13-ந்தேத சாயந்திரம் தான் என மகன் சடலமா கண்டுபிடிக்கப்பட்டான். மிகக் கொடூரமா கொன்னுருக்காங்க சார். இதை செஞ்சது இரு இன்ஸ்பெக்டர்கள் தான்" என்றவர்  சோகத்தில் பேசமுடியாமல் தத்தளித்தார்.

     யார் அவர்கள்? அவர்கள் எதற்காகக் கொல்லவேண்டும்? என்றோம்.

     வழக்குரைஞர் சங்கரசுப்புவோ " திருமுல்லை வாயில் போலீஸ் ஸ்டேஷன்ல இருந்த ரியாஸூதீனும், கண்ணனும் தான். இவங்களோட இன்னொரு பக்கம் கொடூரமானது. விசாரணைக் கைதிகளை கொடூரமா அடிச்சி சித்திரவதை பண்ணி கணம் பிடுங்குவதில் கொடுமைக்காரர்கள். கும்மிடிப்பூண்டி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.சுதர்சனத்தைக் கொலை பண்ணிய கொள்ளையனான ஓம் பிரகாசை பிடிக்க உ.பிக்குப் போன இவங்க ரெண்டு பேரும், அவனைப் பிடிக்க முடியாததால், அவனோட டிகிரி படிச்சிக்கிட்டு இருந்த அண்ணன் மகன்கள் ரெண்டுபேரை பிடிச்சி, கொடூரமா எனகவுன்டர் என்ற பெயரில் படுகொலை பண்ணிய ஆளுங்க இவங்க" என்றவர் மேலும் தொடர்ந்தார்.

     திருமுல்லைவாயிலைச் சேர்ந்த அருண்குமாரை திருட்டுக்குற்றச்சாட்டை சுமத்தி, சட்டவிரோதமா காவலில் வைத்து இவங்க சித்தரவதை பண்ணியதோட, அவர்ட்ட இருந்து நகைகளையும் பணத்தையும் பிடுங்கியபடியே இருந்தனர். இதையறிந்த நான் அவரைக் கண்டுபிடிக்கணும்னு ஹேப்பியஸ் கார்ப்பஸ் மனுபோட்டதோட, இந்த இரண்டு காக்கிகளின் அயோக்கியத்தனத்தையும் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கோண்டுபோனேன். இந்த வழக்கில் இருந்து ஒதுங்கும்படி பலமுறை அவங்க மிரட்டினாங்க. நான் விடலை. கடைசியில் நீதிமன்றம் இந்த இரண்டு காக்கிகளுக்கும் 25 ஆயிரம் ரூபாய் வீதம் அபராதம் போட்டதோட, துறை ரீதியாவும் நடவடிக்கை எடுக்கும்படி தீர்ப்பளித்தது. இதில் கொதித்துப்போன அவங்க, இதற்கான மோசமான விளைவை விரைவில் சந்திப்பே. உனக்கும் குடும்பம் இருக்கு. மறந்துடாதே'ன்னு மிரட்டினாங்க. சொன்னமாதிரியே என்னை பழிவாங்க, என் அப்பாவி மகனைக் கொன்னுட்டாங்க. அந்தக் கொலைகாரப்பாவிகளை விடமாட்டேன். சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை வாங்கிக்கொடுத்துட்டு தான் ஓய்வேன்" என்றார் கண்ணீர் பொங்க.

     இவரது குற்றச்சாட்டுகள் பற்றி சம்பந்நப்பட்ட காக்கி அதிகாரிகளான ரியாஸூதீன், கண்ணன் ஆகியோரிடம் கேட்டபோது அவர்கள் பேச மறுத்தனர். அவர்கள் தரப்போ "இவங்க நிரபராதிகள். ஒரு வழக்குரைஞரை பழிவாங்க யாராவது அவர் பையனை கொல்வாங்களா?" என்கிறார்கள் ஆதாங்கத்தோடு.

     கொல்லப்பட்ட, தன் மகனின் பிரேத பரிசோதனையின் போது, தன் சார்பில் ஒரு டாக்கடரையும் வீடியோ எடுக்கும் அனுமதியையும் கோர்ட் மூலம் பெற்ற சங்கரசுப்பி, போஸ்ட் மார்ட்ட ரிப்போர்ட்டை யாரும் மாற்றிவிடாதபடி உஷாராய் இருந்தார். இதைத்த தொடர்ந்து 'சதீஷ்குமார் படுகொலைதான் செய்யப்பட்டிருக்கிறார். கொல்லப்பட்ட பிறகு தண்ணீரில் வீசப்பட்டிருக்கிறார்' என்ற ரீதியில் போஸ்ட்மார்ட்ட ரிப்போர்ட்டை அரசுத்த தரப்பு உயர்நீதிமன்றத்தில் 16-ந்தேதி தாக்கல் செய்தது. சங்கரசுப்பு வேண்டுகோளின்படி, இந்தக் கொலை வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்திருக்கிறது நீதிமன்றம்.

     போராட்டக்களத்தில் இருக்கும் வழக்குரைஞர்கள் சார்பில் பேசிய பிரசாத்தோ ”சதீஷை லாக்கப்பில் வைத்து சித்திரவதை செய்து கொன்ற மாதிரிதான் உடல் இருக்கு. வழக்குரைஞர்களைக் குறிவைத்து நடத்தப்படும் இதுபோன்ற கொடூர தாக்குதல்கள் தடுக்கப்பட்டாக வேண்டும். வழகுகுரைஞர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது. கொலை பாதக காக்கி அதிகாரிகளை உடனடியாகக் கைதுசெய்யவேண்டும். இல்லையேல் எங்கள் போராட்டம் ஒயாது" என்கிறார் ஆவேசமாக.

      நீதிக்காக போராடியவரின் அப்பாவி மகனைக் கொன்ற கொலைபாதகர்களை விரைவாக சி.பி.ஐ கண்டுபிடிக்க வேண்டும்.

.........-பிரகாஷ்.
.....நக்கீரன் 18-21 ஜூன் 2011

***************************
பொது ஜனம்; எல்லா ஆட்சியிலும் தானய்யா காட்டுமிராண்டிகளா இருக்கானுங்க! 

பொது ஜனம்; இல்லைய்யா ஆட்சியாளர்களைப் பார்த்து இவனுக மாறிடுவானுங்க! ஆட்சியில் இருப்பவங்களே காட்டுமிராண்டியா, எதைப்பத்தியும் கவலைப்படாத இருக்கும் பொழுது இவங்களுக்கும் தன்னால தைரியம் வந்துடும். முன்னாடி சின்ன சின்ன தப்பா செஞ்சிட்டு இருப்பாங்க! இந்த மாதிரி ஆட்சி வந்தவுடன் புள்ளா இறங்கிடுவானுங்க!

பொது ஜனம்; வக்கீல்ங்க மட்டும் சும்மாவா?

பொது ஜனம்; இல்லைய்யா இருக்காங்க! சின்ன வாய்க்கா தகராறு என்று போனா ஈவு இரக்கமில்லாம சொத்தையே காலி பண்ணிட்டுதான் விடுவாங்க! அது தெரியும்! இவரு! பாவம்யா மக்களுக்காக வாதாடியிருக்கவருய்யா! இந்த மாதிரி சாம்ன்யரை பத்தி கவலைப்படற வக்கீலுங்க சில பேருங்க தான இருக்காங்க!

பொது ஜனம்; இவங்களுக்கே இந்த மாதிரி துன்பம் வரும்பொழுது, இவங்களும் நாம ஏன் நியாயமா? நடக்கணும்? நடந்து என்ன ஆச்சு என் புள்ளைய தான் பறிகொடுக்கவேண்டியதாச்சு என்று  மாறிட வாய்ப்பு  இருக்கு!  அது தவறும் இல்லை! ஆனா இவங்கெல்லாம் இல்லையென்னா எப்படிய்யா நாடு கொஞ்சமாவது அமைதியா இருக்கும்!  இவங்களுக்காகவே இன்னும் பல அப்பாவிங்க இருப்பாங்க! அவங்களை எப்படி காப்பாத்த முடியும்? இவங்கதான் அவங்களை காப்பாத்தணும்!

பொது ஜனம்; ஆமாய்யா!டைவர்ஸ் கேஸுக்கு உள்ளே வந்தா முதியோர் பென்சன் வரைக்கும் இழுத்துட்டு நம்பளை போண்டியாக்கிட்டு போயிடுவாங்க! இந்த வக்கீல்கள்!

பொது ஜனம்; ஆனா இவர்! மனித உரிமைக்காக வாதாடியவர்ய்யா! காவல்துறை அட்டூழியத்தை எதிர்த்தவர்யா! நாட்டில பல தொடைநடுங்கி வக்கீல்கள் இருக்காங்கய்யா! அவங்களோட குறிக்கோள்கள் எல்லாம் அப்பாவிங்க கிட்டேபணத்தை பிடுங்கறது மட்டும்தான்யா!

பொது ஜனம்; பாவம்யா! இவரு புகார் கொடுக்கறதுக்கே எப்படி கஷடப்பட்டிருக்காரு! நம்க்கெல்லாம் இது மாதிரி வந்தா தாங்குவோமா? இந்த தொந்தரவிலேயே தூக்கு மாட்டிக்கவேண்டியது தான். என்ன அலைக்கழிப்பு! என்ன துயரம்! யாருக்கும் வரக்கூடாதுய்யா! அவர் குடும்பத்துக்கு இரங்கலை தெரிவிச்சக்கணும்யா!. 

பொது ஜனம்; ஆனா அவருடைய குடும்பத்துக்கு, அவருடைய மகனுக்கு இந்த கொடுமை நிகழ்ந்திருப்பது சம்பந்தமில்லாத நமக்கே துடிக்கிறதே!

பொது ஜனம்; ஏன் சம்பந்தமில்லை! அவரு நம்ம சாதி தானே! நம்ம குலம் தானே! மனித சாதி! மனித குலம்! நமக்கு நிகழ்ந்தால் தானா? நாளைக்கு நமக்குத்தான்? அதுவும் இந்த ஆட்சியில்நிச்சயம்!

பொது ஜனம்; ஆமா! இதெல்லாம் எவன் நினைக்கிறான்!?

பொது ஜனம்; ஏய்யா இந்த "மூணு பாதி" கமிஷ்னர் கூட இந்தளவுக்கு இழுத்தடிச்சிருக்கே ஏன்? இது டகால்டி வேலைப்பண்ணி, தொலைந்து போன குழந்தையை வேறொருவர் கண்டுபிடிச்சா, தான் கண்டுபிடிச்சதா தூக்கி, முத்தம் கொடுத்து டி.வி கேமரா முன்னாடி நடிக்கிறது மட்டும் தான் இந்த மூணு பாதியோட வேலையா? இந்த மாதிரி கொடூரக்கொலையை கண்டுபிடிக்கிறது அந்த மூணு பாதியோட வேலை இல்லையா?

பொது ஜனம்; ஒரு வேளை கொலை செய்யப்பட்டவர் 24 வயதுடையவர் என்பதால், முத்தம் கொடுத்து நடிக்க முடியாது என்று கண்டுபிடிக்காமல் இருந்திருப்பார்.

பொது ஜனம்; கொலைசெய்தது காக்கிகள் தானே! அதனால் கண்டுபிடிக்காதே! ஆட்சிக்கு கெட்டப்பெயர் இழுத்தடி! என்று குண்டம்மா கிட்டேயிருந்து உத்தரவு வந்திருக்கும்! 

பொது ஜனம்; போலீசுக்கு 1 மணிநேரத்திலேயே எல்லா விஷயமும் தெரிஞ்சிட்டிருக்கும். எல்லா ஜாதகமும் உடனே உடனே அதுங்க கைக்கு வந்துடும்!  அதே போல உடனே உடனே கட்டு கட்டா பணமும் கைக்கு வந்து இருக்கும்! 


பொது ஜனம்; அதுவும் டெக்னாலஜி காலத்திலே செல்போன் வேறு வைச்சிருக்கார்.  யார்? போன் பாண்ணங்க! எப்போ போன் வந்தது, எப்பத்தலேயிருந்து காணாம போனார், அதுக்கப்புறம் யார்? யார்? போன்பண்ணாங்க  என்று பார்த்தாலே மேட்டர் முடிஞ்சது! ஆள் மொத்தபேரையும் பிடிச்சுடலாம்! இதுங்க சும்மா வோ வோ வோ வோ .....காட்டுதுங்க! இதுங்க டகால்டி நமக்கே தெரியும் பொழுது வக்கீலுங்களுக்கு தெரியாதா? அவங்களுக்கு எல்லா இடத்திலேயும் தொடர்பு இருக்குது!

பொது ஜனம்; அந்த 24 வயது பிள்ளை அவர்களுடைய அப்பா அம்மாவுக்கு குழந்தை தானே! இந்த "மூணு பாதி" கமிஷனருக்கு தெரியாதா? இதுக்கு இதுமாதிரி நடந்தா தெரியும்!

பொது ஜனம்; எல்லாம் அதுவாகவே நடக்கும்! யாரும் எந்த பாவத்திலேயிருந்தும் தப்ப முடியாது! 

பொது ஜனம்; இதுங்க என்ன? வானத்திலேயிருந்து குதித்ததா? நம்ம உருவாக்கினது தானேய்யா இந்த காவல் துறை! இதுங்க கண்டிபிடிப்பு விஷயங்கள் எல்லாம் நாம கண்டுபிடிச்சது தானேய்யா! மக்கள் உருவாக்கினது தான் எல்லாமே!

பொது ஜனம்; முக்காவாசி குற்றங்களோட புலனாய்வுத் தகவல்கள் பொது மக்கள்கிட்டேயிருந்து தான் இதுங்களுக்கு கிடைக்கிறது.

பொது ஜனம்; ஏய்யா! அவரு! நக்சலைட்டுக்கெல்லாம் வாதாடியிருக்காரே! அது மட்டும் சரியா?

பொது ஜனம்; முண்டம்! "வாஞ்சி நாதனை" தூக்கி வைச்சி கொண்டாடுரே! நக்சலைட்டை மட்டும் திட்டுரே! வாஞ்சி நாதன் என்கிற பார்ப்பு என்ன பண்ணுச்சு? அகிம்சையை கடைபிடிச்சுதா? அதுக்கு நூற்றாண்டு கொண்டாடுரே?  அந்த கொலைகார பார்ப்பானை மட்டும்  தியாகி என்கிறே!

பொது ஜனம்; ஆமாய்யா! அது மட்டும் என்ன? நியாயம்? கம்யூனிசம் தானேய்யா....இதுவும்.....

பொது ஜனம்; எதுவாக இருந்தா என்னய்யா? காந்தியை கொன்றவர்களுக்கு வாதாடலே! கோட்சேவை புனிதனாக கொண்டாடலே! பார்ப்பானுங்க!


பொது ஜனம்; இதை சும்மா விடக்கூடாது! இது வக்கீலுகளின் பாதுகாப்புக்கு மட்டுமல்ல, பொது மக்களின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலான விஷயம். லேசுல விடக்கூடாது! உடனடியா கண்டிபிடிச்சு தண்டிக்கணும். காக்கிகளின் முகமூடிகளை கிழிக்கணும். மரண தண்டனை வாங்கி கொடுக்கணும்! எத்தனை பேரை என்கவுன்டர் பண்ணியிருப்பாங்க! ஈவு இரக்கமில்லாம! அதுவும் நம்ம கிட்டேயே சம்பளம் வாங்கி குடும்பம் நடத்திட்டு, நம்பளையே அநியாயமா போட்டுத்தள்ளுவாங்க! எல்லா குற்றங்களுக்கும் காரண கர்த்தா இவங்க தான்!

பொது ஜனம்; சும்மா விடுவாங்களா? வக்கீல்கள்! நீதியை எதிர்பார்த்து காத்திருப்போம்!





Saturday, 18 June 2011

ஊரையும், உச்சநீதிமன்றத்தையும் ஏமாத்த நிபுணர் குழு!

  

சமச்சீர்க் கல்வி குழுவில் மாற்றம் வேண்டும்: ராமதாஸ்

சென்னை, ஜூன் 17: உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சமச்சீர் கல்வி குறித்து முடிவெடுப்பதற்காக தமிழக அரசு அமைத்துள்ள 9 பேர் கொண்ட குழுவை மாற்றி அமைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிóக்கை விடுத்துள்ளார்.இது குறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி சமச்சீர் கல்வி குறித்து முடிவெடுப்பதற்காக தமிழக அரசின் சார்பில் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில் கல்வியாளர்கள் என்ற பிரிவில் டி.ஏ.வி. குழும பள்ளிகளின் நிறுவனர் ஜெயதேவ், பத்மசேஷாத்ரி பாலபவன் பள்ளிகளின் முதல்வர் ராஜலட்சுமி பார்த்தசாரதி ஆகியோர் சேர்க்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிóக்கிறது.இவர்கள் இருவரும் சென்னையிலேயே அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளின் முதலாளிகள் ஆவர். கல்வியாளர் என்பதற்கான எந்த வரையறையும் இவர்களுக்கு பொருந்தாது. லட்சக்கணக்கில் நன்கொடையும், கட்டணமும் தரும் பணக்காரர்களுக்காக மட்டுமே பள்ளிகளை நடத்தும் இவர்களுக்கு ஏழைகள் படும்பாடு குறித்து எதுவும் தெரியாது.சமச்சீர் கல்வி முறை குறித்து அறிந்த ஏராளமான கல்வியாளர்கள் இருக்கும்போது தனியார் பள்ளிகளைச் சேர்ந்த இருவரை நியமித்திருப்பது வியப்பளிக்கிறது.இந்த விஷயத்தில் தமிழக அரசு நடுநிலைப்போக்கை கடைப்பிடிக்க வேண்டும். 9 பேர் கொண்ட குழுவிலிருந்து தனியார் பள்ளி முதலாளிகளை நீக்கிவிட்டு, சமச்சீர் கல்வி குறித்து நன்கறிந்த கல்வியாளர்களை நியமிக்க வேண்டும் என்று ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

.....தினமணி 17.06.2011

************
பொது ஜனம்; இந்த நிபுணர் குழு ஊரை ஏமாத்தறதுக்கு அமைச்ச குழுவா இருக்குதே!

பொது ஜனம்; தனியார் பள்ளிக் கொள்ளைக்காரன் , தனியார் நிறுவன் முதலாளிகள் எல்லாம் எப்போது கல்வியாளர்கள் ஆனார்கள்?  அவன் எப்படி சமச்சீர் கல்வியை வரவேற்பான்! அவன் தான் இதை ஆரம்பத்திலேயிருந்தே இதை எதிர்க்கிறானே! அவன் எப்படி? சிறந்த கல்வியாளரா இருக்க முடியும்?

பொது ஜனம்; கவர்ன்மென்ட் ஸ்கூலும் தனியார் ஸ்கூலும் ஒன்னாயிட்டா எப்படிய்யா மக்கள்கிட்டேயிருந்து துட்டு பிடுங்க முடியும்? கவர்ன்மென்ட் ஸ்கூல் பசங்க அசால்ட்டா மார்க்கு எடுப்பானுங்களே! அதனால தான் அவன் பயப்படறான்!

பொது ஜனம்; ஆமாம்! இந்த பசங்களும் சும்மா இருக்காதுங்க! நீய்ம் நானும் ஒன்னு! இப்ப உன் வாயில மண்ணு! என்று வாயில தூக்கி வைச்சிடுங்க! 

பொது ஜனம்; ஜெயலலிதான்னா சும்மாவா?

பொது ஜனம்; திருட்டுத்தனத்துக்கு டாக்டர் பட்டம் கொடுத்தா! அது ஜெயலலிதாவுக்குத்தான் கொடுக்க முடியும்!

பொது ஜனம்; ஏற்கனவே அதுக்காகத்தான் அது வாங்கி வைச்சிருக்குது!

பொது ஜனம்; ராமதாஸ் சொல்லியிருக்கிறது படி பார்த்தா ஜெயலலிதா மக்களையும், உச்சநீதிமன்றத்தையும் ஏமாத்தறதுக்கு தான் இந்தக் குழுவை அமைச்சு இருக்குது! இதை ஏத்துக்கவே கூடாது! 

பொது ஜனம்; அப்ப இன்னும் பாடப்புத்தகங்கள் வெளியாகிறது இன்னும் தள்ளிப்போகும்! ஐய்யா......ரொம்ப ஜாலி.....! எக்சாம் இல்லாம அடுத்த வகுப்புக்கு பாஸ்....பேசாம "பார்ட் டைம் ஜாப்" ஏதாவதுக்கு பசங்க போயிருக்கலாம்!

பொது ஜனம்; ஒரு தனியார் ஸ்கூல் கொள்ளைக்கார பாப்பாரக் கிழவி கூட இதுல கலந்துக்குதாமே! அதுக்கு என்ன தெரியும்? அது இதுக்கு முன்னாடி இருந்த நிபுணர் குழுவில இருந்துதா? 

பொது ஜனம்; "பத்மா ஷேஷாத்திரி"ன்னு ஊரை கொள்ளையடிக்கிற ஸ்கூல் நடத்துதே! அதுவா? அந்த கிழவி எப்படி? நியாமா? சமதர்மமா நடந்துக்கும்!

பொது ஜனம்; நியாயமா? அரசுப் பள்ளிக் கல்வியாளர்களைத்தானே நியமிச்சிருக்கணும்?
பொது ஜனம்; உச்சநீதிமன்றமே இதற்கான நிபுணர் குழு நபர்களையும் நியமிச்சு இருக்கணும்!

பொது ஜனம்; சின்ன பசங்களுக்கு ஜாலிப்பா! சின்ன பசங்களுக்கு ஓட்டுரிமை கொடுத்தா ஜெயலலிதாவுக்கு தான் ஒட்டுப் போடுவாங்க! படிக்காம ஸ்கூல் போகறதுக்கு வழிவகுத்த ஜெயலலிதாவுக்கு பெரிய ஓஓ... போடுவாங்க!

பொது ஜனம்; தேர்தல் ஆணையர் குரேஷி அதுக்கும் ரெடி பண்ணிட்டு இருக்காரு! 16 வயசுலேயே ஒட்டு போடலாம் என்று ஒரு திட்டம் வைச்சி இருக்காராம்! ஆனா குடிக்க மட்டும் கூடாது! ஆனா! திருடலாம்! திருட்டுத்தனம் பண்ணலாம் தப்பில்லை!


பொது ஜனம்; இந்த மாதிரி கொள்ளைக்கார ஸ்கூல்ல படிச்சவன் எவனாவது ஆரய்ச்சியாளனா? கண்டுபிடிப்பாளனா? வந்திருக்கானா? கவர்ன்மென்ட் ஸ்கூல்ல படிச்சவன் தான் வந்திருக்கான்! 

பொது ஜனம்; இந்த மாதிரி கொள்ளைக்கா, ஸ்கூல்ல படிச்சு வந்தவன் வரிஏய்ப்பு பண்ணி துட்டு சம்பாதிச்சு இருப்பான்! சுயநலவாதியா செத்து இருப்பான்! இல்லை எவனையாவது சாகடிச்சு இருப்பான்!

பொது ஜனம்; அவங்களுக்கும் சேர்த்துதானய்யா இந்த சமச்சீர் கல்வி! இது அந்தப் பள்ளிக்கூடத்துக்குத்தான் அதிக நன்மை! என்ன ஒன்னு இனிமேல் அவனுங்க மக்களை ஏமாத்திப் பணம் பிடுங்க முடியாது!  அதுக்காகத்தான் இதை வலிந்து தடுக்கிறானுங்க! இதை அந்த பள்ளிக்கூடம் நடத்துற கூட்டமைப்பு தலைவனே தொலைக்காட்சியிலே ஒத்துகிட்டான். ஈனம் மானம் கெட்டவன்!

பொது ஜனம்; ஆமாய்யா! இது ஏமாத்தறதுக்குத்தான்! இன்னும் பழைய பாடப்புத்தகம் அச்சடிக்கிறதை நிறுத்தலையாமே! அது பாட்டுக்கு அச்சடிக்க சொல்லி அச்சடித்துகிட்டு இருக்கிறாங்களாம்! எப்படியும் இந்த பாடத்தை தான் அமல் படுத்துவோம்! அதனால் கவலைப்படாம அச்சடிங்க! என்று டெண்டர் விட்ட அச்சகங்களுக்கு அதிமுக தரப்பில் இருந்து உத்தரவாம்!

பொது ஜனம்; விடக்கூடாது இரண்டுல ஒன்னு பார்த்துறணும்! என்ன தைரியம் மக்களின் ஏகோபித்த எதிர்ப்பையும் மீறி ஒரு அராஜக அரசு செயல்படுதுன்னா சும்மா விடலாமா? அரசே ஸ்தம்பிக்கிற அளவுக்கு போராட்டம் நடத்தணும்! இனி மக்களுக்கு எதிரா அவங்க வாயைத் திறக்க கூடாது. நீதிமன்றமும் இதை சும்மா விடக்கூடாது!

பொது ஜனம்; லயோலா கருத்துக்கணிப்பும் அதைத்தான் தெரிவிச்சிருக்கு! அதிமுக அரசு மீது மக்கள் கடுமையான அதிருப்தியில இருக்கிறதா?  கருத்து கணிப்பை வெளியிட்டிருக்காங்க! 

பொது ஜனம்; கொஞ்ச நாளுக்குள்ளேயே நல்லா பட்டுட்டாங்க! போலிருக்குது!

Friday, 17 June 2011

அதிமுக அமைச்ச நிபுணர் குழு நியாயமாக இருக்குமா? இல்லை கூட்டு களவாணித்தனம் பண்ணுமா?


சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களை ஆராய சாரங்கி தலைமையிலான நிபுணர் குழுவை அமைத்தது தமிழக அரசு!




சென்னை; தமிழகத்தில் சமச்சீர் கல்வியை ஆராய்வதற்காக சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி 9 பேர் கொண்ட நிபுணர் குழுவை அரசு அமைத்துள்ளது. தலைமைச் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் குழுவில் இடம் பெறும் பிரதிநிதிகள் பெயர்களையும் அரசு அறிவித்துள்ளது. சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் அளித்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு அப்பீல் செய்தது. அப்பீல் மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், ‘1 மற்றும் 6ம் வகுப்புக்கு சமச்சீர் கல்வி தொடர வேண்டும். மற்ற வகுப்புகளுக்கான சமச்சீர் கல்வியை நிபுணர் குழு ஆய்வு செய்து இரண்டு வாரத்தில் சென்னை ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதன் மீது ஒரு வாரத்தில் விசாரணை நடத்தி ஐகோர்ட் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என கூறியது.

கோடை விடுமுறை முடிந்து கடந்த 15ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. எந்தப் பாடத் தொகுப்பு என்பது தெரியாததால் வகுப்புகளில் மாணவர்களுக்கு செயல்வழி கற்றல் முறையில் இலக்கணம், பொதுக் கணக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி 9 பேர் கொண்ட நிபுணர் குழுவை நியமித்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அரசு இன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:  பள்ளி மாணவர்களுக்கு தரமான மற்றும் சமமான கல்வி வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கில், 2010ம் ஆண்டு தமிழ்நாடு சமச்சீர் பள்ளிக் கல்வி முறை சட்டத்தில் அதிமுக அரசு திருத்தம் கொண்டுவந்தது. இந்த சட்டத் திருத்தத்தை எதிர்த்து ஒரு சிலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த ஐகோர்ட், அரசின் திருத்த சட்டத்துக்கு இடைக்கால தடை விதித்தது. இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் சிறப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.

தமிழக அரசின் இந்த சிறப்பு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், கடந்த 15ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில், ‘பாடத்திட்டத்தின் தரம் மற்றும் பாட நூல்களின் தரம் ஆகியவை குறித்து ஆராய தலைமைச் செயலாளர் தலைமையில், இரு மாநில பிரதிநிதிகள், இரு கல்வியாளர்கள், பள்ளிக் கல்வித்துறை செயலாளர், பள்ளிக் கல்வி இயக்குனர் ஆகியோரை உறுப்பினராக கொண்டு ஒரு குழு அமைக்க வேண்டும்’ என்று தெரிவித்தது. இந்தக் குழு தனது அறிக்கையை ஜூலை 6ம் தேதிக்குள் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டு இருந்தது. சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு இணங்க 9 பேர் கொண்ட குழுவை அரசு நியமித்து உத்தரவிடுகிறது.

குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள் விவரம்:

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி, குழுவின் தலைவராக இருப்பார். மத்திய இடைநிலைக் கல்வி வாரிய முன்னாள் இயக்குனர் (கல்வி) ஜி.பாலசுப்பிரமணியன், சென்னை லேடி ஆண்டாள் மெட்ரிகுலேஷன் பள்ளியின் முன்னாள் முதல்வர் விஜயலட்சுமி சீனிவாசன், கல்வியாளர்கள் தரப்பில் சென்னை கோபாலபுரம் டிஏவி பள்ளிகள் குழுமத்தின் நிறுவனர் மற்றும் செயலாளர் சி.ஜெயதேவ், பத்மா சேஷாத்ரி பாலபவன் பள்ளிகள் முதல்வர் மற்றும் இயக்குனர் ராஜலட்சுமி பார்த்தசாரதி, தேசிய என்சிஇஆர்டி சார்பில் டெல்லியில் உள்ள அறிவியல் மற்றும் கணிதவியல் கல்வித் துறையின் பேராசிரியர் பி.கே.திரிபாதி, டெல்லி சமூக அறிவியல் துறையின் பேராசிரியர் அனில் சேத்தி, பள்ளிக் கல்வித் துறை செயலாளர் சபீதா ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தக் குழுவின் உறுப்பினர் செயலராக பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் வசுந்தராதேவி இருப்பார்.

இவ்வாறு அரசு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்தக் குழு, சமச்சீர் கல்வி குறித்து ஆய்வு நடத்தி ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யும். அதன் அடிப்படையில் தமிழகத்தில் சமச்சீர் கல்வியை அமல்படுத்துவது குறித்த இறுதி உத்தரவை ஐகோர்ட் அறிவிக்கும்.

...தினகரன் 17.06.2011
****************
பொது ஜனம்; என்னய்யா இப்படி நிபுணர் குழு அமைச்சது மக்களுக்கு சரியான நிபுணர் குழுவா? இல்லை ஜெயலலிதாவின் மக்கள் விரோத வீம்புக்கு அமைச்ச சாதகமான நிபுணர் குழுவா?

பொது ஜனம்; ஏன் அப்படிசொல்றே?

பொது ஜனம்; பின்னே எப்படிய்யா? இந்த நபர்கள் அனைவரையும் உச்சநீதிமன்றம் நியமிக்கலியே! நிபுணர் குழு அமைக்கவேண்டும் என்ற தீர்ப்பு மட்டும் தானே வழங்கியிருக்குது! இதற்கான நபர்களை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை குற்றவாளிகள் கிட்டேயே தானே விட்டு இருக்குது! இது எடுக்கும் ஆய்வு எப்படி? நியாயமானதாக இருக்கும்!?

பொது ஜனம்; இந்த நிபுணர் குழு நபர்களை அதிமுகவுக்கு சாதகமாக சொல்லுகிறவர்களை வைத்துக் கொள்ளுவார்களே!

பொது ஜனம்; அது எப்படிய்யா? அவ்வளவு நிச்சயமா சொல்றே?

பொது ஜனம்; யோவ்! முண்டம்! அவங்க தான் சல்லிசா முடிக்கவேண்டிய மேட்டரை! வீம்பு பண்ணி மக்கள் பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லைன்னு நம்ம மசிருக்கு! என்னாச்சின்னு மேல் முறையீடு பண்ணி இன்னைக்கு இந்தளவு அக்கிரமம் பண்ணிகிட்டு இருக்குதுங்களே! 

பொது ஜனம்; ஆமாம்! வேதாரண்யத்தில் 1 லடசம் சமச்சீர்  புக்கை வேறு கொளுத்தினாங்க! இன்னும் நிறைய அநியாம் பண்ணிகிட்டுதான் இருக்காங்க!

பொது  ஜனம்; இருக்கட்டுமேய்யா! எப்படி இருந்தாளும்! சமச்சீர் கல்வியை அமல் படுத்தி தானே! ஆவணும்! அது தானே உச்சநீதிமன்ற தீர்ப்பு!

பொது ஜனம்; அது தான் ஒன்னாம் வகுப்புக்கும் ஆறாம் வகுப்புக்கும் புத்தகம் அனுப்பியாச்சே! (அப்படின்னு சொல்லியிருக்குதுங்க!)

பொது ஜனம்; மீதி வகுப்புகளுக்கு எந்த பாடம் நடத்தலாமன்னு நிபுணர் குழு சொல்றதை வைச்சித்தான் என்று ஒரு பிட்டை போட்டிருக்கே! இது அதுங்களுக்கு போதுமே! 

பொது ஜனம்; சரிய்யா இந்தக் குழுவை வைச்சி மிரட்டி சமச்சீர் கல்வி சரியில்லை வேணாம்! என்று  இப்போதைக்கு சாத்தியமில்லை! இன்னும் பல வருடம் தேவைப்படுது என்று அறிக்கை சமர்ப்பிக்க சொல்லிடுச்சின்னா!

பொது ஜனம்; கரெக்ட்! அதானால இப்போதைக்கு பழைய புத்தகமே  அமல் படுத்தலாம் என்று சொல்லிட்டாங்கன்னா என்ன பண்ணுவாங்க!

பொது ஜனம்; எப்படிய்யா! அதிமுக திருட்டுத்தனம் மொத்தத்தையும் நேர்ல பாத்தா மாதிரி சொல்றீங்க!

பொது ஜன்ம; ஆமாம்! சட்டங்கள் எல்லாமே இந்த திருட்டுத்தனத்துக்கு வழி விட்டுத்தான் இயற்றப்பட்டது மாதிரியே இருக்குது!

பொது ஜனம்; அது எப்படிய்யா? சட்டம் இயற்றும் பொழுதே முழுத்திருட்டுத்தனத்தையும், ஒட்டையையும் கணக்கில் எடுத்து ஒரு அரசால் இயற்ற முடியும்?

பொது ஜனம்; அப்ப இதுக்கு முன்னாடி அதை தமிழக அரசு அமைச்ச குழு பொய் என்பதை எப்படியும் நிருபிக்கணுமே! திமுக அரசு அமைச்ச நிபுணர் குழு அனைவரையும் குப்பையில்  தள்ளப்படுவாங்களே! 
பொது ஜனம்; சரி!இதை எப்படி? கோர்ட்டு ஏத்துக்கும்? 

பொது ஜனம்; ஒரு வேளை! அதிமுக அமைச்ச நிபுணர் குழுதான் சரி! என்று  நீதிமன்றம் தீர்ப்பு கூறினா? அதிமுக சார்பு தீர்ப்பா ஆகாதா? அதை மறுஆய்வுக்கு உட்படுத்தப்படாதா? விசாரணைப்பண்ணப்படாதா?

பொது ஜனம்; இதை திமுக அரசு இருக்கும் பொழுதே ஏன் கூறவில்லை என்ற கேள்வி வராதா?

பொது ஜனம்; அப்ப திமுக அரசு அமைச்சது மட்டும் சாதகமாக இருக்காதா? என்று கேப்பாங்களே!

பொது ஜனம்; அதிமுகவையும் இதேமாதிரி தான் குற்றம் சாட்டிக் கேப்பாங்க! திமுக நிபுணர் குழுவில் இருந்த கல்வியாளர்கள் யாரையும் இதில் ஈடுபடவைக்கவில்லையே!

பொது ஜனம்; அப்ப ஜெயலலிதா மீண்டும், இந்த கல்வியை முடக்கத்தான், தனியார் பள்ளிக்கு சாதகமாக தீர்ப்பு வாங்கும் டகால்டி வேலைக்குத்தான் முயற்சி பண்ணிகிட்டு இருக்குது!

பொது ஜனம்; இதை உடனடியாக பெற்றோர் ஆசிரியர் கூட்டமைப்பு, பொது பள்ளிகள் மேடை அமைப்புகள் இதிலும் கேவியட் மனு போட்டு நடுநிலையாக ஆராய்ந்து மக்களுக்கு சாதகமான தீர்ப்பை கொண்டு வரமுயல வேண்டும்!

பொது ஜனம்; பிழைகள் வந்தால் பரவாயில்லை! பிழைகள் சுற்ற்றிக்கைகள் மூலம் நீக்கலாம்!

பொது ஜனம்;ஒரு வேளை முழுவதும்சரியில்லை என்று அதுமுக அராஜக அரசு கூறினால்?

பொது ஜனம்; அது எப்படி முடியும்? ஒன்னாவதுக்கும் ஆறாவதுக்கும் சமச்சீர் கல்வி அமல்படுத்தியாச்சே! அது மட்டும் சரியாக இருக்கும் பொழுது இது மட்டும் எப்படி சரியில்லாமல் போகும்!

பொது ஜனம்; உச்சநீதிமன்றம் இந்த விஷயத்தை கவனிக்கத்தவறிவிட்டதே! ஒன்னாவதும் ஆறாவது பாடத்தையும் அதே நிபுணர் குழு தானே ஆராய்ந்து அமல் படுத்தியது.

பொது ஜனம்; ஒரே கன்பியூஷன்யா!

பொது ஜனம்; இதையெல்லாம் தெரிஞ்சும் எதுக்கு உச்சநீதிமன்றம் அவங்க கிட்டேயே அதிகாரம் கொடுத்து, அவங்க தலைமைச்செயலாளர் கீழே நிபுணர் குழு அமைக்கணும்! இது ரொம்ப  போங்கா இருக்குதே!

பொது ஜனம்; அது எப்படிய்யா? அவ்வளவு சல்லீசா தீர்ப்பு கூறிடுவாங்க! குறை சொன்னாங்கன்னா! அவங்க! கேக்கமாட்டாங்களா? இது ஏன் அந்த திமுக அரசு நிபுணர் குழுவுக்கு தெரியாமப் போனது என்று?

பொது ஜனம்; இல்லைய்யா! இதையும் கோர்ட்டு அரசின்  கொள்கை முடிவு என்று சொல்லிட்டாங்கன்னா?

பொது ஜனம்; அப்படின்னா இது முந்தய திமுக அரசின் கொள்கை முடிவு ஆகாதா? ஒரு மாநில அரசின் கொள்கை முடிவு எத்தனை ஆண்டு காலம் அமலில் இருக்கும்? நாள்கணக்கிலா, வரா கணக்கில? அல்லது மாதக்கணக்கிலா? அல்லது வருடக்கணக்கிலா?  இல்லை இன்னொரு கட்சி ஆட்சிக்கு வரும்வரையா? அப்படியென்றால் உச்சநீதிமன்றத்தை கூட, தீர்ப்பைக்கூட அடிக்கடி மாற்றிக்கொண்டேயிருக்கலாம்! ஏன்னா அதுவும் கொள்கை முடிவு தானே!

பொது ஜனம்; டெல்லியிலே!
எவ்வளவு கட்சி ஆட்சிக்கு வந்து! வந்து! போயிருக்கிறது! என்னய்யா புடலங்கா இந்திய அரசியல் சட்டம்!

பொது ஜனம்; ஒரேயொரு அரசு! அதுவும் தமிழக அரசு! அதுவும் ஒரே விஷயத்துக்கு! இத்தனை விதமான கொள்கை முடிவா? என்று நீதிபதிக்கு தெரியாதா? என்ன? அவரு என்ன படிக்காத பட்டிக்காடா? குண்டம்மா போல!


பொது ஜனம்; அதானே! கொள்கை முடிவு அடிக்கடி மாறிக்கொண்டேயிருக்குமா? அதுவும்  மக்களை பாதிக்கின்ற வகையில் எவ்வளவு தடவை வேண்டுமானாலும் சட்டத்தை திருத்திக்கொண்டேயிருக்கலாமா? அடுத்து வருபவர் இதையும் மாத்துவரா? அதுக்கு எதுக்கு நிபுணர் குழு? மக்கள் குழுவோட இவங்க எவரும்  கலந்துக்கவே மாட்டாங்களா? பெரும்பான்மையான மக்களின் கருத்தை கேக்கவே மாட்டாங்களா? நாங்க தானே இவங்களை ஒட்டு போட்டு தேர்ந்தெடுத்தோம்! 

பொது ஜனம்; ஹிஹி........தோத்தவங்களுக்கும், ஜெயியியியியிச்ச்ச்ச்ச்சவங்களுளுக்கும் மக்களாகிய நாங்க தான் ஓட்டு போட்டோம்! எல்லோருமே தமிழக மக்கள் தான்! நாங்க நினைச்சா எப்பவேணும்னா! இறக்குவோம்!