Saturday, 30 July 2011
கலைஞரோடு ஒரு பயணம்!
இடுகையிட்டது
நம்பி
நேரம்
9:11 pm
0
கருத்துரைகள்
லேபிள்கள்:
ஓளியும்ஒலியும்,
திராவிட இயக்கம்,
திராவிடம்
சமச்சீர் கல்வி! உண்மையை ஒத்துக்கொண்ட அரசு!
காலாண்டு பரிட்சை நடக்குமா நடக்காதா?, முழு ஆண்டு பரிட்சைக்குள் பாதி புத்தகத்தையாவது படிக்க முடியுமா, முடியாதா? - தவிப்பும் குழப்பமுமாக இருக்கிறார்கள் தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்கள். சமச்சீர் கல்வி விவகாரத்தில், தமிழக அரசு வழக்கறிஞரே குழம்பிப்போனதை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆச்சரியத்தோடு பார்த்த நிலைமையும் ஏற்பட்டது.
இந்த ஆண்டு சமச்சீர் கல்வியைக் கொண்டு வருவதில்லை என்பதில் பிடிவாதமாக இருக்கும் ஜெ. அரசு, சமச்சீர் கல்வியை அமல்படுத்த வலியுறுத்திய உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அரசு நிலைக்கு ஆதரவாக மெட்ரிக் பள்ளி சங்கங்களும் முறையீடு செய்தன. உயர்நீதிமன்றத் தீர்ப்பிற்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்த உச்சநீதிமன்றம், ஆகஸ்டு 2-ந் தேதிக்குள் சமச்சீர் பாட்ப்புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கவேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதுவரை இந்த உத்தரவை நடைமுறைப்படுத்துவதற்கான பணி தொடங்கப்படவில்லை என்பதுடன், இணையதளத்தில் இருந்த சமச்சீர்கல்விப் பாடங்களும் அகற்றப்பட்டுவிட்டன. ஜெ. அரசின் நிலைப்பாடு என்ன என்பது எல்லோருக்கும் தெளிவாகத் தெரிந்துள்ள நிலையில் தான் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை ஜூலை 26-ந் தேதி தொடங்கியது.
நீதியரசர்கள் ஜே.எம்.பாஞ்சால், தீபக் வர்மா, பி.எஸ். சவுகான் ஆகியோர் அடங்கிய மூவர் பெஞ்ச் முன் நடந்த விசாரணையில், தமிழக அரசின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் பி.பி. ராவ்வை நோக்கி சரமாரியான கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினார்கள். நீதிமன்ற உத்தரவுகள் தான் இறுதித் தீர்ப்பு என்றபிறகும் தமிழக சட்டமன்றத்தில் சட்டதிருத்தம் கொண்டு வந்ததற்கு என்ன காரணம்? இது அரசின் அதிகாரத்தை மீறிய செயல் இல்லையா? என்பது உள்ளிட்ட கேள்விகள் சீறின. 27 -ந் தேதியும் வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்தபோது தமிழக அரசு வழக்கறிஞரான பி.பி. ராவ், "இது போன்ற சட்டதிருத்தம் தேவையில்லை எனத் தெளிவான -துணிவான -சுதந்திரமான சட்ட ஆலோசனை அரசுக்கு வழங்கப்படவில்லை. தேவையில்லாத வேலைகளைச் செய்ததால், தேவையில்லாத பிரச்சினகளை நாங்களே (அரசு) தேடிக்கொண்டோம் என்பது தான் உண்மை "என்றார். நீதிபதிகளும், சமச்சீர் கல்விக்கு ஆதரவாகப் போராடும் பெற்றோர் -மாணவர் சார்பிலான வழக்கறிஞர்களும் தமிழக அரசு வழக்கறிஞரின் ஒப்புதல் வாதத்தால் ஆச்சரியமும் குழப்பமும் அடைந்தனர்.
மதியமும் தொடர்ந்த வாதத்தின் போது, தன்னுடைய கருத்துக்கள் சொந்தக்கருத்துதான் என்றும் தமிழக அரசின் சட்ட ஆலோசகர்கள் மீது உயர்ந்த மதிப்பு வைத்திருப்பதாகவும் பி.பி. ராவ் சொன்னார். எனினும், சம்ச்சீர் கல்வி விவகாரத்தில் ஜெ. அரசின் போக்கு எப்படி இருக்கிறது என்பதை நீதிமன்றஃத்தில் பதிவு செய்துவிட்டது அரசு வழக்கறிஞரின் வாதம் என்கிறார்கள் பெற்றோர்-மாணவர்களுக்கான வழக்கறிஞர்கள்.
பாடத்திட்டத்தை தேசிய-சர்வதேச அளவில் உயர்த்தவிருப்பதாகவும் அதனால் அடுத்த ஆண்டு தான் (2012-13) சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த முடியும் என்றும் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ள ஜெ.அரசு, அதற்கான டைம் டேபிளையும் கொடுத்துள்ளது. புதிய அறிவிக்கை வெளியிட ஒரு வாரம், அட்வைசரி கவுன்சில் அமைக்க ஒரு வாரம், பள்ளிக்கான அடிப்படை கட்டமைப்பு -பாடம் நடத்துவதற்கான கருவிகள் -ஆசிரியர் விகிதம் உள்ளிட்டவற்றை முடிவு செய்ய ஒருவாரம், புதிய பாடத்திட்டம் பற்றி முடிவு செய்ய ஒரு வாரம், அந்தப் பாடத்திட்டத்தை வடிவமைக்க 2 மாதம் என செப்டம்படர்வரை பல்வேறு பணிகள் இருப்பதாகவும், பாடத்திட்டம் உருவாக்கப்பட்டதும் அதை இணையதளத்தில் வெளியிட்டு, கல்வியாளர்கள்- பெற்றோர் - பெற்றோர் -பொதுமக்களின் கருத்தைக் கேட்பதற்கு 2 வார அவகாசம் தேவைப்படும் என்றும், இதன்பின் பாடங்களை எழுதி, மறு ஆய்வு செய்ய 4 மாத காலமும், புத்தகங்களை அச்சிட மேலும் 4 மாத காலமும் தேவைப்படுவதால் 2012 மே மாதம்தான் தரமான சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் தயாராகும் என்றும் தெரிவித்துள்ளது. ஆகஸ்டு 2-க்குள் புத்தகங்களை வழங்குவதற்கான அவகாசம் போதாது என அரசுத் தரப்பு தெரிவித்த்தால் 5-ந் தேதி வரை அவகாசம் தந்துள்ளது உச்சநீதிமன்றம்.
ஜெ. அரசின் இழுத்தடிப்பு நடவடிக்கைகளை நன்கறிந்த பெற்றோர்-மாணவர் சார்பிலான வழக்கறிஞர்கள் 28-ந் தேதியன்று தங்களின் வலுவான வாதங்களை எடுத்து வைத்தனர். இதனிடையே, தமிழகத்தின் பல பகுதிகளிலும் சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி மாணவர்களின் போராட்டம் வலுவடைந்து வருகிறது.
சி.பி.எம்.மின் இந்திய மாணவர் சங்கம், சி.பி.ஐ.யின் இந்திய மாணவர் பெருமன்றம், ம.க.இ.க.வின் புரட்சிகர இளைஞர்-மாணவர் அமைப்புகள் தீவிர போராட்டங்களை நடத்திவரும் நிலையில், சமச்சீர் கல்வியைக் கொண்டு வந்த தி.மு.க. இப்போது போராட்டக்களத்திற்கு வந்துள்ளது.
ஜூலை 29-ந் நேதியன்று தமிழக மாணவர்கள் தங்கள் பள்ளி-கல்லூரிகளை புறக்கணிக்க வேண்டுமென்றும் பெற்றோரும் அலுவலகங்களைப் புறக்கணிக்க வேண்டுமென்றும் தி.மு.க. தலைமைக் கழகம் அறிவித்ததுடன், தி.மு.க. இளைஞரணி-மாணவரணி சார்பில் அனைத்து பள்ளி கல்லூரிகள் முன்பாகப் போராட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. ரொம்பவும் தாமதமான போராட்ட அறிவிப்பு என்ற எண்ணம் தி.மு.க.வினர் மத்தியிலேயே உள்ளபோதும், 27-ந் தேதி இரவு வரை போராட்டத்திற்கான ஏற்பாடுகளை பல மாவட்டங்களிலும் மேற்கொண்டனர்.
சட்டக்கல்லூரி, கலைக்கல்லூரி மாணவர்களுடன் பல கட்டங்களாக ஆலோசனைகள் நடத்தப்பட்டன. மீடியாக்களின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் என்னென்ன போராட்ட யுக்திகளை கையாளலாம் என்று விவாதிக்கப்பட்டது என்கிறார்கள் தி.மு.க. இளைஞரணி-மாணவரணி நிர்வாகிகள்.
அரசியல் கட்சிகளின் போராட்டங்களுக்கு அப்பாற்பட்டு, தமிழகத்தின் எதிர்காலத் தலைமுறை சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால், சமச்சீர் கல்வி விஷயத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பே பெற்றோர்-மாணவர் மனதில் எதிர்பார்ப்பையும் முக்கியத்துவத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
--நமது நிருபர், நக்கீரன் 2011 ஜூலை 30-ஆக.02
************************
பொது ஜனம்; ஜெ. சர்வதேச அளவில் தமிழகக் கல்வியைக் எவ்வளவு அக்கறையா உச்சநீதிமன்றத்தை ஏமாத்தியாவது கொண்டுவரணும்னு! நினைக்குது! இதை இந்த ஜனங்க புறிஞ்சிக்க மாட்டேங்கதுங்களே!
பொது ஜனம்; இந்த பொம்பளையை நல்லா புறிஞ்சிகிட்டுத்தான் 29 ந் தேதி போராட்டம் பண்ணாங்களோ!
பொது ஜனம்; போலீசை விட்டு மாணவர்களின் போராட்டத்தை தடுக்குதேப்பா!
பொது ஜனம்; தடுத்தா மட்டும் சும்மா விட்டுருவாங்களா? போலீஸ்காரன் புள்ளைங்களும் படிக்குது இல்லே! அவங்களுக்கும் சேர்த்து தானே இந்த போராட்டம்! அ.தி.மு.க அள்ளக்கைங்களோட புள்ளைங்களுக்கும் சேர்த்துதான்.
இடுகையிட்டது
நம்பி
நேரம்
4:45 pm
0
கருத்துரைகள்
லேபிள்கள்:
. தமிழகச் செய்திகள்,
அரசியல்,
குறுஞ்செய்திகள்
Wednesday, 27 July 2011
தமிழக அரசில் "தரமான" ( தகுந்த) நபர்கள் இல்லை!...தமிழக அரசு வக்கீல்! உச்சநீதிமன்றத்தில் சேம் சைடு கோல்!
நீதிமன்ற நேரத்தை விரயம் செய்துவிட்டது தமிழக அரசு - சமச்சீர் கல்வி வழக்கில் அரசு வழக்கறிஞர் வாதத்தால் பரபரப்பு
கல்வி, சட்டத்துறையில் தமிழக அரசுக்கு உரிய ஆலோசனைகளை வழங்க தகுதியான நபர்கள் இல்லை என்றும் சட்டத்தில் திருத்தம் செய்து நீதிமன்ற நேரத்தை விரயம் செய்துவிட்டதாகவும் சமச்சீர் கல்வி வழக்கில் அரசு வழக்கறிஞர் வாதிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடப்பாண்டிலேயே சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
இந்த வழக்கில் இன்று 2வது நாளாக தமிழக அரசு வழக்கறிஞர் பி.வி.ராவ் வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தமிழக அரசு எந்த நோக்கத்திற்காக சமச்சீர் கல்வி திட்டத்தில் சட்டத் திருத்தம் கொண்டு வந்தது என்று கேட்டனர்.
சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்த பிறகும் சட்டத் திருத்தம் ஏன் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த தமிழக அரசின் வழக்கறிஞர் பி.பி.ராவ், கல்வி, சட்டத்துறையில் தமிழக அரசுக்கு உரிய ஆலோசனைகளை வழங்க தகுதியான நபர்கள் இல்லை என்றார்.
அவ்வாறு ஆலோசனைகள் வழங்காததால் தமிழக அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளது என்றும் ராவ் வாதிட்டார்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் ஏற்கனவே வழங்கிய தீர்ப்பில் சமச்சீர் கல்வித் திட்டத்தை 2011ஆம் ஆண்டோ அதற்கு பிறகோ அமல்படுத்தலாம் என்று கூறியதை ராவ் சுட்டிக்காட்டினார்.
நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் அளித்த தீர்ப்பை புரிந்து கொள்ளலாம் தமிழக அரசு சட்டத் திருத்தம் செய்து நீதிமன்றத்தின் நேரத்தை விரயம் செய்துவிட்டது என்றார்.
தமிழக அரசு மீதே அரசு வழக்கறிஞர் கூறிய புகாரால் உச்ச நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து வாதிட்ட வழக்கறிஞர் ராவ், சமச்சீர் கல்வியை நடப்பாண்டில் செயல்படுத்த முடியாது என்றார்.
அடுத்த ஆண்டோ அல்லது அதற்கு அடுத்த ஆண்டோ அமல்படுத்தலாம் என்று அரசின் வாதம் தொடர்ந்து நடைபெற்றது.
நடப்பாண்டிலேயே சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
இந்த வழக்கில் இன்று 2வது நாளாக தமிழக அரசு வழக்கறிஞர் பி.வி.ராவ் வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தமிழக அரசு எந்த நோக்கத்திற்காக சமச்சீர் கல்வி திட்டத்தில் சட்டத் திருத்தம் கொண்டு வந்தது என்று கேட்டனர்.
சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்த பிறகும் சட்டத் திருத்தம் ஏன் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த தமிழக அரசின் வழக்கறிஞர் பி.பி.ராவ், கல்வி, சட்டத்துறையில் தமிழக அரசுக்கு உரிய ஆலோசனைகளை வழங்க தகுதியான நபர்கள் இல்லை என்றார்.
அவ்வாறு ஆலோசனைகள் வழங்காததால் தமிழக அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளது என்றும் ராவ் வாதிட்டார்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் ஏற்கனவே வழங்கிய தீர்ப்பில் சமச்சீர் கல்வித் திட்டத்தை 2011ஆம் ஆண்டோ அதற்கு பிறகோ அமல்படுத்தலாம் என்று கூறியதை ராவ் சுட்டிக்காட்டினார்.
நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் அளித்த தீர்ப்பை புரிந்து கொள்ளலாம் தமிழக அரசு சட்டத் திருத்தம் செய்து நீதிமன்றத்தின் நேரத்தை விரயம் செய்துவிட்டது என்றார்.
தமிழக அரசு மீதே அரசு வழக்கறிஞர் கூறிய புகாரால் உச்ச நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து வாதிட்ட வழக்கறிஞர் ராவ், சமச்சீர் கல்வியை நடப்பாண்டில் செயல்படுத்த முடியாது என்றார்.
அடுத்த ஆண்டோ அல்லது அதற்கு அடுத்த ஆண்டோ அமல்படுத்தலாம் என்று அரசின் வாதம் தொடர்ந்து நடைபெற்றது.
...வெப்துனியா 27.07.2011
*****************************
பொது ஜனம்; தமிழக அரசில் கல்வி, சட்டம் பத்தி தெரிஞ்ச தகுதியான ஆட்கள் இல்லைன்னு! அரசாங்க வக்கீலே சொல்றாரே! அப்ப! எப்படி? சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்களின் தரத்தைப் பற்றி ஆராய முடியும்?
பொது ஜனம்; அப்ப தமிழக அரசில இருக்கிற தரமில்லாதவங்க தான், சமச்சீர் பாடப்புத்தகத்தை தரமில்லைன்னு சொல்லி டகால்டி பண்ணியிருக்காங்க! யாருக்காக?
பொது ஜனம்;எல்லாம் மெட்ரிக் பள்ளி முதலாளிகளுக்காகத்தான்!
பொது ஜனம்; அப்ப தமிழக அரசில இருக்கிற தரமில்லாதவங்க தான், சமச்சீர் பாடப்புத்தகத்தை தரமில்லைன்னு சொல்லி டகால்டி பண்ணியிருக்காங்க! யாருக்காக?
பொது ஜனம்;எல்லாம் மெட்ரிக் பள்ளி முதலாளிகளுக்காகத்தான்!
பொது ஜனம்; அடப்பாவிங்களா! சின்ன புள்ளைங்க கிட்ட கேட்டாக் கூட, அதுங்க இதப்பத்தி சொல்லிக் கொடுத்து இருக்குமே! இந்த லட்சணத்தில இந்த பொம்பளை 2 மாசமா பசங்க படிப்பை பாழாக்கிடுச்சே! இதுக்கு வாந்தி பேதி வர!
பொது ஜனம்; இந்த அலப்பறைக்குத்தான், பெத்தவங்க வயிறை எரியவைச்சுதா!
பொது ஜனம்; பள்ளிக்கூடம் சரியா நடக்காதனாலே புள்ளைங்க ஹோமோ செக்ஸ் வரைக்கும் போய் ஒரு 7 வயசு குழந்தை கொலையாயிடுச்சு! செஞ்சது எல்லாம் சின்னப்பசங்க தான்!
பொது ஜனம்; பாடப்புத்தகம் இருந்தா ஒரு வேளை கவனம் சிதறாமல் இருந்திருக்கலாம்!
பொது ஜனம்; பாடப்புத்தகம் இருந்தா ஒரு வேளை கவனம் சிதறாமல் இருந்திருக்கலாம்!
பொது ஜனம்; ஆமாய்யா! இரண்டு மூன்று புள்ளைங்க விளையாடப்போய், குளத்தில மூழ்கி செத்துடுச்சுங்க!
பொது ஜனம்; பல பசங்க ஸ்கூல் கட்டடிச்சுட்டு ஊர் சுத்த போயிடுச்சுங்க! படின்னாலும் புக்குதான் இல்லையேண்டு சொல்லுதுங்க! "புக்கு இல்லாம எதுக்கு படி படின்னு உயிரை வாங்கறீங்கண்டு" சொல்லுதுங்க!
பொது ஜனம்; எல்லா நாசத்தையும் 2 மாசத்தில உருவாக்கிடுச்சுய்யா! இதை லேசுல விடக்கூடாதுய்யா! உச்சநீதிமன்றம் இதுக்கு சரியான தண்டனை வழங்கனும். ஒன்றரை கோடி புள்ளைங்களோட வாழ்க்கையில விளையாடிய குற்றத்துக்கு தண்டனையை அனுபவிச்சே ஆகணும்.
பொது ஜனம்; இட்லர் இருந்தாக் கூட இந்த மாதிரி பண்ணியிருக்க மாட்டான்யா!
பொது ஜனம்; இட்லர் இருந்தாக் கூட இந்த மாதிரி பண்ணியிருக்க மாட்டான்யா!
இடுகையிட்டது
நம்பி
நேரம்
3:06 pm
0
கருத்துரைகள்
லேபிள்கள்:
. தமிழகச் செய்திகள்,
அரசியல்,
குறுஞ்செய்திகள்
Thursday, 21 July 2011
சமச்சீர் கல்வி! அரசை விளாசிய நீதிபதிகள்!
30 நாட்களாக படிப்பதற்கு பாடப்புத்தகங்களே இல்லாமல் தங்கள் எதிர்காலம் என்னவாகுமோ? என இருளில் தத்தளித்துக் கொண்டிருந்த ஒரு கோடியே இருபத்தைந்து லட்சம் மாணவர்கள் வாழ்வில் சென்னை உயர்நீதிமன்றம் ஒளியேற்றியுள்ளது.
தலைமை நீதிபதி இக்பால், சிவஞானம் ஆகியோர் அடங்கிய முதல் பெஞ்ச் அந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை திங்களன்று படிக்க ஆரம்பித்தபோது நேரம் சரியாக 12.50 மணி... "தமிழகத்தில் அமைந்துள்ள புதிய அரசு தி.மு.க. அரசு கொண்டுவந்த சமச்சீர் கல்வித் திட்டத்திற்கு திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்றிய சட்டம், ' இந்திய மக்கள் அனைவரும் சமமான கல்வி பெற வேண்டும். 'அது அவர்களின் அடிப்படை உரிமை' என்கிற இந்திய அரசியல் சாசனம் 14-வது பிரிவுக்கு எதிரானது. எனவே தமிழக அரசு நிறைவேற்றிய அந்தச் சட்டத்தை ரத்து செய்கிறோம்" என உரத்த குரலில் மைக்கை கூட உபயோகிக்காமல் தலைமை நீதிபதி சொன்னபோது நெரிசல் மிகுந்திருந்த கோர்ட் அறையில் பரபரப்பு பற்றிக் கொண்டது.
அதற்குப்பிறகு நீதிபதி என்ன சொல்கிறார் என கேட்கமுடியாத அளவிற்கு முணுமுணுப்புகள் நிறைந்திருந்தன. அரசு வழக்கறிஞராக இந்த வழக்கில் ஆஜரான வெங்கடேசன், "நாங்கள் இந்த வழக்கில் எங்கள் பக்கம் இருக்கும் நியாயங்களை விளக்க ஒரு மனு தாக்கல் செய்வதற்காக கல்வித்துறை செயலாளரிடம் கையெழுத்துப் பெற முயற்சித்துக் கொண்டிருந்தோம். அதற்குள் தீர்ப்பு வந்து விட்டது" என்றார். அதற்கு நீதிபதிகள் 'உங்களுடைய தலைமை வழக்கறிஞரான அட்வகேட் ஜெனரல் எங்கே' என கேட்டார்கள். 'இதோ நான் வந்துவிட்டேன்' என அட்வகேட் ஜெனரல் நவநீதிகிருஷ்ணன் ஓடிவந்தார்.
'இந்த தீர்ப்பை தற்காலிகமாக நிறுத்தி வையுங்கள். நாங்கள் அப்பீலுக்கு போகப்போகிறோம்' என்றெல்லாம் வேக வேகமாக பேசினார். ' நீங்கள் எதை வேண்டுமென்றாலும் தாக்கல் செய்யுங்கள். யார் வேண்டுமென்றாலும் அப்பீல் செய்யலாம். இரண்டு நாட்களுக்குள் எதுவும் நடக்கலாம்' என்றார்கள் நீதிபதிகள். கடந்த முறை இதேபோன்று சமச்சீர் கல்வி திட்ட சட்டதிருத்தத்திற்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்தபோது இரண்டே நாளில் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டிற்கு போய் அப்பீல் செய்து உயர்நீதிமன்றம் விதித்த தடையை விலக்கியதை மறைமுகமாக குத்திக்காட்டி நீதிபதிகள் பேசியதை கேட்ட அரசு தரப்பு அதிர்ச்சியடைந்தது.
கோர்ட் வளாகத்திலிருந்த என்.சி.ஆர்.பிரசாத் போன்ற சீனியர் வழக்கறிஞர்கள் 'தமிழக அரசின் சட்டதிருத்தத்தையே கோர்ட் ரத்து செய்தபிறகு அரசுக்கு கூடுதல் நேரம் வழங்கத்தேவையில்லை' என எடுத்துச் சொன்னார்கள். அதோடு அரசு நீதிமன்றத்தில் கோரிக்கை வைப்பதை கைவிட்டு விட்டது.
தீர்ப்புன் விவரங்கள் மெதுவ்வாக வெளியே வர அரம்பித்தது. ' தி.மு.க. அரசு அச்சடித்து வைத்துள்ள புத்தகங்களை ஜூலை மாதம் 22-ந்தேதிக்குள் மாணவர்களுக்கு வழங்கி ஆசிரியர்கள் பாடங்களை நடத்த வழிவகை செய்யவேண்டும். சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டுதலின்படி தமிழக அரசால் நியமிக்கப்பட்ட கல்வி வல்லுநர்கள் அடங்கிய கமிட்டியைச் சேர்ந்தவர்கள் மூன்று மாதத்திற்குள் சமச்சீர் கல்வி புத்தகங்களில் எவற்றையெல்லாம் சேர்க்கவேண்டும், நீக்க வேண்டும்' என ஆலோசனைகளை சொல்லலாம்.
சமச்சீர் கல்வி என்பது குழந்தைகளின் எதிர்காலத்தை நல்லபடியாக உருவாக்கும் என்கிற நம்பிக்கையோடு அந்தத் தீர்ப்பை முடித்துள்ள நீதிபதிகள். சமச்சீர் கல்வி எப்படி கடந்த ஆட்சிகாலத்தில் உருவானது என்பதை தெளிவாகவே விளக்கியிருக்கிறார்கள்.
'சமச்சீர் கல்வியை அமல்படுத்த 2006-ம் ஆண்டு முதல் கல்வியாளர் முத்துக்குமரன் தலைமையிலான கமிட்டி விரிவான ஆராய்ச்சி மேற்கொண்டது. அதன்பிறகு விஜயகுமார் ஐ.ஏ.எஸ் தலைமையில் ஒரு நபர் கமிட்டி அமைக்கப்பட்டது. அதன் பரிந்துரையின் பேரில் கல்வியாளர்கள் கொண்ட பல நபர் கமிட்டி அமைக்கப்பட்டது. அது நான்காண்டுகள் விரிவான ஆராய்ச்சியை மேற்கொண்டப் பிறகே 2010-ம் ஆண்டு சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. ஆகவே இன்றைய தமிழக அரசும் மெட்ரிக்குலேசன் பள்ளிகளும் சமச்சீர் கல்வியை முந்தைய அரசு ஏனோ தானோவென்று கொண்டு வந்தது என்று கூறுவதை ஏற்கமுடியாது. கடந்த அரசு அமல் படுத்திய சமச்சீர் கல்வியை எதிர்த்து உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. சமச்சீர் கல்வியை ஆதரித்து தான் கோர்ட்டுகள் இதுவரை தீர்ப்பளித்தன. ஆகவே இன்றைய அரசால் நேரடியாக சமச்சீர் கல்வியை ரத்து செய்யமுடியாது. ஆகவே மறைமுகமாக ஒரு சட்டத்திருத்தத்தின் மூலம் செய்ய முயற்சித்திருக்கிறார்கள். நேரடியாகவோ, மறைமுகமாகவோ சமச்சீர் கல்வியை அரசு ரத்து செய்ய முடியாது' என தமிழக அரசை விளாசி தள்ளியுள்ளனர்.
'இந்த தீர்ப்பு சமூகநீதிக்கும் வர்க்க பேதமற்ற சமூகம் உருவாவதற்கு பெருமளவில் வழிவகுக்கிறது' என்கிறார் வழக்கறிஞர் பாலு. 'இதை தமிழக அரசு பிரச்சினையாக எடுத்துக்கொள்ளாமல் தமிழக அரசு இதை பாசிட்டிவ் ஆக பார்க்க வேண்டும். இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டுக்கு போகக் கூடாது' என்கிறார் பிரபல கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.
'ஆனால் நாங்கள் அப்பீலுக்கு போகப் போகிறோம்' என தமிழக அரசு தரப்பு சொன்னதை கேட்டு பெற்றோர்களும், மாணவர்களும் அதிர்ந்து போயிருக்கிறார்கள்.
...பிரகாஷ்..நக்கீரன் ஜூலை 20-22--2011
*******************
பொது ஜனம்; கலைஞர் கூட இதை தோல்வியா எடுத்துக்க வேணாம்னு! இத்தோட விட்டுரு! காண்டுல மக்களை சாகடிக்க வேணாம்னு சொல்லியிருக்காரே! அப்பக் கூட வேணும்னுட்டு திமிருத்தனமா இந்த "சொர்ணாக்கா" மீண்டும் சுப்ரீம் கோர்ட் போயிருக்குதே!
பொது ஜனம்; கலைஞர் மட்டுமா சொன்னாரு! எல்லாக் கட்சித்தலைவர்களும் தான் சொன்னாங்க! ராமதாஸ் ஒரு படி மேல போய் மக்கள் சாபத்துக்கு ஆளாகாதே! என்று கூட சொன்னாரு!
பொது ஜனம்; கலைஞர் சொன்னதற்காகவே இது சுப்ரீம் கோர்ட் போகும்! கலைஞர் தேவையில்லாம இதை உசுப்பி விட்டிருக்காரு!
பொது ஜனம்; "மக்கள்" பாதிக்கப்படக்கூடாதுன்னு சொல்லியிருக்காரு! இதுக்காக ஒரு பெரிய கட்சித்தலைவரு! சும்மா இருக்க முடியுமா? அவருக்கு லட்சக்கணக்கானத் தொண்டர்கள் இல்லையா?!
பொது ஜனம்; அதானே! இந்த பொம்பளை அவரு!சொல்றதுக்கெல்லாம் ஆப்போசிட்டா செய்யும்னா! என்ன பண்ணமுடியும்?
பொது ஜனம்; ஆப்போசிட்டா செய்யறதுன்னா! எப்படி? கலைஞர் நல்லா நீடுழி வாழணும்னு! இதை வாழ்த்துனா! உடனே இந்த மானஸ்தி "மடார்னு! மண்டைய போட்டுருமா!"?
பொது ஜனம்; அப்ப கலைஞரை உடனடியா வாழ்த்த சொல்லணும்!
பொது ஜனம்; ஆந்திராவில தெலுங்கானாவுக்கு இப்ப நடக்குது பாரு! அது மாதிரி இங்கு நடக்கணும் அப்பதான் இது அடங்கும்!
பொது ஜனம்; கூடிய சீக்கிரம் இங்கேயும் நடந்துரும்!
பொது ஜனம்; மொத்தத்தில இந்த இரண்டு நீதியரசர்களும் மக்கள் மனசுல நின்னுட்டாங்கப்பா! இவங்களை என்னைக்கும் மக்கள் மறக்கமாட்டாங்க! இவங்க! எங்கிருந்தாலும் நல்லா இருக்கணும்!
பொது ஜனம்; மொத்தத்தில இந்த இரண்டு நீதியரசர்களும் மக்கள் மனசுல நின்னுட்டாங்கப்பா! இவங்களை என்னைக்கும் மக்கள் மறக்கமாட்டாங்க! இவங்க! எங்கிருந்தாலும் நல்லா இருக்கணும்!
இடுகையிட்டது
நம்பி
நேரம்
10:52 am
1 கருத்துரைகள்
லேபிள்கள்:
. தமிழகச் செய்திகள்,
அரசியல்,
குறுஞ்செய்திகள்
அ.தி.மு.க. வினர் கதறல் புகார்! நிலமோசடியில் சிக்கும் அமைச்சர்!
ஜெ. 10-ஆம் தேதி ஒரு பரபரப்பு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அதில் ..."2006 முதல் 2011 வரையிலான தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தனியார் நிலங்கள் அபகரிப்பு மற்றும் கட்டாய விற்பனை பெருமளவில் நடந்ததை தமிழக மக்கள் அறிவார்கள். நில அபகரிப்பு தொடர்பாக கடந்த ஆட்சியில் புகார் அளிக்கப்பட்டிருந்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 1-7-2011 வரை நில அபகரிப்புத் தொடர்பாக வந்திருக்கும் புகார்களின் எண்ணிக்கை 1440" என்ற ரீதியில் காட்டம் காட்டிய ஜெ...
"இது குறித்து தகுந்த விசாரணை மேற்கொள்வதற்காக காவல்துறையில் தனியாக சிறப்புப் பிரிவு ஒன்றை காவல்துறை தலைமை அலுவலகத்திலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏற்படுத்த நான் ஆணையிட்டுள்ளேன். நிலமோசடியில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதோடு மீட்கப்பட்ட நிலங்கள் உரியவர்களிடம் சட்டப்படி வழங்கப்படும்" என்றும் தெரிவித்திருக்கிறார்.
இதைத் தொடர்ந்து தி.மு.க. புள்ளிகளை மட்டும் குறிவைத்து விறுவிறுப்பாக களவமறிங்கிய காக்கிகள், நில மோசடி வழக்கில் கோவை தி.மு.க துணை மா.செ. ஆனந்தனை கைது செயதனர். திருவாண்ணாமலை மாவட்ட தி.மு.க துணைச்செயலாளரும் எக்ஸ் எம்.எல்.ஏ.வுமான ஆரணி சிவானந்தத்தை கைது செய்ய தேடிக்கொண்டிருக்கிறது. கொடைக்கானல் தி.மு.க சேர்மன் முகமது இப்ராகிமை கைது செய்து சிறையில் அடைத்தது. வீரபாண்டியார், அவர் மகன் வீரபாண்டி ராஜா, மதுரை மேயர் தேன்மொழி போன்ற தி.மு.க புள்ளிகளின் மீது வழக்கைப்பதிவு செய்ததோடு மு.க.அழகிரியின் மனைவி காந்தி, மாஜி மந்திரி நேரு மீதும் புகாரை வாங்கியிருக்கிறது.
இது ஒரு புறம் இருக்க... திருவண்ணாமலை மாவட்ட ர.ர.க்களோ "கட்சிக்காரர்களாகிய எங்களிடமே ஜெ. சொன்ன காலகட்டத்திலேயே... நிலமோசடியில் ஈடுபட்ட ஒருவரை அமைச்சராக உட்கார வைத்து அழகு பார்க்கும் கார்டன், அவர் மீதான நிலமோசடிப் புகார்களையும் விசாரிக்க உத்தரவிடுமா?" என கதறியபடி குரல் எழுப்ப...இதை அவரால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பலரும் வழிமொழிந்து வருகிறார்கள்.
பொதுமக்களும் ர.ர.க்களும் 'நிலமோசடி ஆசாமி' என சுட்டு விரலை நீட்டுவது வணிகவரித்துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியைத்தான். அவர் மீதான புகார்களை -நில மோசடிப் புகார்களை பார்ப்போம்.
மோசடிப் புகார்-1 :
2008-2009-ல் தலைமைச் செயலாளர் அந்தஸ்த்தில் இருந்து, ஓய்வு பெற்றவர் ஐ.ஏ.எஸ். அதிகாரியான கே.சம்பத்குமார். இவர் கல்லூரி ஒன்றைத் தொடங்க ஆசைப்பட்டார். இதற்காக அங்குள்ள நாயுடு மங்கலத்தில், தன் மனைவி கீதா மற்றும் மகன் சஞ்சீவ்புமார் ஆகியோர் பெயரில் 18 ஏக்கர் நிலத்தை வாங்கினார். அதே பகுதியில் ஆதிமூலம் எனபவர் நடத்தி வந்த திருமண மண்டபத்தையும் லீசுக்கு எடுத்து, மொத்த இடத்திலும் 2009-ல் இந்தியன் கலை அறிவியல் கல்லூரியைத் தொடங்கினார். இதை திருவண்ணாமலை கல்வி அறக்கட்டளை என்ற பெயரில் நடத்த ஆரம்பித்தார். இந்த நிலையில் தான் அக்ரி வடிவத்தில் இவருக்கு சனி பிடித்தது. அது என்ன என்பதை அவரே வருத்தத்தோடு விவரிக்கிறார்.
"இந்த அறக்கட்டளையில் உறுப்பினராக இருந்த என் கல்லூரி கால நண்பர் ஜெயராமனோ இந்த டிரஸ்ட்டில் குரியகோஸ் என்ற பாதிரியாரையும் தம்பிராஜா எனபவரையும் அப்போது எம்.எல.ஏ.வாக இருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் மனைவி விஜயகுமாரியையும் உறுப்பினரா சேர்க்கச் சொன்னார். மரியாதைக்குரிய ஆட்கள்னு நினைச்சி அவர்களை டிரஸ்ட் உறுப்பினராக்கினேன். அந்த நிலத்தின் மதிப்பு 2 கோடி வரை உய்ர்ந்ததையும், எங்கள் கல்லூரியில் நிறைய மாணவர்கள் சேர்ந்ததையும் பார்த்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கல்லூரியை அபகரிக்கும் முயற்சியில் இறங்கிட்டார். என்னை கல்லூரிப் பக்கமே வரவிடாமல் ரவுடிகள் மூலம் தொந்தரவு கொடுத்தார். பிறகு கல்லூரியில் மாணவர்கள் கட்டிய கட்டணத்தையும் சருட்டத்தொடங்கிவிட்டார். கல்லூரியை விரிவாக்கம் செய்ய என் ஊட்டி நில்த்தை வைத்து வங்கியில் நான் கடன் வாங்கிய 6 கோடி ரூபாயையும் தன்னிடம் கொடுக்க வேண்டும்னு அடியாட்களை வைத்து மிரட்ட ஆரம்பித்தார் அக்ரி. இவரது டார்ச்சர் அதிகமானதால், எம் நடராஜனின் சகோதரர் ராமச்சந்திரனிடம் இந்தப் பிரச்சினையைக் கொண்டு போனேன். என் மகன், சசிகலாவின் உறவினர் வீட்டில் பெண் எடுத்ததால் இந்த முடிவுக்கு வந்தேன்.
ராமச்சந்திரனின் மயிலாப்பூர் வீட்டில் பஞ்சாயத்து நடந்தது. அப்போது, டிரஸ்ட்டில் இருந்த விஜயகுமாரியை தன் மனைவியே இல்லைன்னு அக்ரி சத்தியம் செய்ததோடு என் விஷயத்தில் இனி தலையிடமாட்டேன்னு உறுதிகொடுத்தார்" என்றபடி மினரல் வாட்டரை வாயில் சரித்துக் கொண்டவர், தொடர்ந்து சொல்ல ஆரம்பித்தார்.
" ஆனால் அதன்பிறகும் அக்ரி சும்மா இருக்கலை. கல்லூரியை அடியாட்கள் மூலம் கைப்பற்றிக் கொண்டதோடு மற்றொரு இடத்தில் இருந்த என் மகன் சஞ்சீவ் குமாரின் நிலத்தையும் ஆக்கிரமித்துக் கொண்டார். இதே பகுதியில் இருந்த அரவிந்தர் பள்ளியையும் ஆதிமூலம் என்பவரிடமிருந்து பிடுங்கிக் கொண்டதோடு, அரவிந்தர் பள்ளி கட்டிடத்துக்கு என் கல்லூரியைக் கொண்டுபோகத் திட்டமிட்டார்.
எங்கள் கல்லூரி, வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்துடன் இணைந்தது எனபதால், அங்கிருந்த அதிகாரிகளின் துணையோடு அக்ரியின் இடம் மற்றும் முயற்சியை எப்படியோ தடுத்திட்டேன். இதோடு நிறுத்தாத அக்ரி என் கல்லூரியை டம்மியாக்குதற்காக அப்போதைய தி.மு.க அமைச்சர் எ.வ.வேலு மூலம் முயற்சி செய்து அரவிந்தர் பள்ளியில் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியைத் தொடங்கினார். இப்படி பலவகையிலும் அக்ரி டார்ச்சர் செய்ததால், கடந்த தி.மு.க ஆட்சியிலேயே அவர் மீது காவல் துறையில் புகார் கொடுத்தேன். போலீஸ் அப்போது அக்ரி மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால்... வேறு வழியின்றி அக்ரி மீது நீதிமன்றத்தில் வழக்கு போட்டிருக்கிறேன்" என தனது துயர அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.
மோசடிப் புகார்-2 :
அ.தி.மு.க. மாவட்டப் பிரதிநிதியான சி.மூர்த்தி ரியல் எஸ்டேட் பிஸினஸில் கொடு கட்டிப் பறக்கிறவர். இவர் திருவண்ணாமலை புறநகர் பகுதியான பாரதி நகரில் நான்கரை ஏக்கர் நிலத்தை வாங்கி, பிளாட் போட்டு ஒரு செண்ட் 22 ஆயிரத்து 500 ரூபாய் வீதம் விற்பனை செய்துவந்தார். இவரையும் அக்ரி விட்டுவைக்கவில்லை.
மூர்த்தியின் அனுபவத்தை அவரது குரலிலேயே கேட்போம். "என்னிடம் நான் நிரணயித்த விலைக்கே பிளாட் வாங்கிக்கொள்வதாக சொல்லி 50 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து அக்ரிமென்ட் போட்டுக்கொண்ட அக்ரி கிருஷ்ணமூர்த்தி, மீதத்தொகையை 30 நாளில் கொடுத்துவிடுவதாகச் சொன்னார். ஆனால் 3 வருடம் ஆகியும் பணத்தைக் கொடுக்காமல் இழுத்தடித்தார். இதனால் கட்சித் தலைமையிடம் பலமுறை புகார் கொடுத்தேன். இதை கட்சி விசாரிக்கும் போதெல்லாம் என்னை கடுமையாக மிரட்ட ஆரம்பித்தார் அக்ரி. இதனால் பயந்துபோன நான் சசியின் உறவினர்களான டாக்டர் வெங்கடேஷ், மிடாஸ் மோகன் ஆகியோரிடம் சென்று முறையிட்டேன். இதன் பிறகு செண்டுக்கு 13 ஆயிரம் என அடிமாட்டு விலைக்கு என் பணத்தை செட்டில் செய்தார். நிலமோசடி, கட்டாய விற்பனை, கூலிப்படை மூலம் மிரட்டுவது என அத்தனை தாதாத்தனத்திலும் இறங்கிய அக்ரியை, அமைச்சராக்கியிருப்பதை எங்கள் கட்சிக்காரர்களாலேயே ஜீரணிக்கமுடியவில்லை" என்கிறார் காட்டமாக.
மோசடிப் புகார்-3 :
திருவண்ணாமலை கோயில் அறங்காவலராக இருந்தவர் சிவாஜி. இவருக்குக் கோடிக்கணக்கில் சொத்துக்கள் இருக்கிறது. இந்த நிலையில் 2009-ங் சிவாஜி நோய்வாய்ப்பட்டு இறந்துபோக, அவரது சொத்துக்களில் ஒரு பகுதி அவரது மகள் தனலட்சுமிக்கு வருகிறது. தனலட்சுமிக்கும் அரவிந்தன் எனகிற இளைஞருக்கும் காதல் மலர, அரவிந்தன் கட்டிய புடவையோடு அழைத்துப்போய் 2010 ஜூலையில் தனலட்சுமிக்குத் தாலி கட்டுகிறார். இதன் பிறகு நடந்ததை தனலட்சுமியே விவரிக்கிறார்.
"நான் காதல் திருமணம் செயதுகொண்டதை அறிந்த எங்கள் உறவினரும் அ.தி.மு.க. நகர செயலாளருமான கனகராஜ், ஒரு அடியாட் படையோடு எங்களைத் தீர்த்துக்கட்டப் பார்த்தார். உயிருக்கு பயந்து போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்த நாங்கள் கனகராஜ் மீது புகார் கொடுத்தோம். போலீஸ்காரர்களோ 'பயப்படாதீங்க அந்தக் கும்பலை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்' என்று ஆறுதல் சொன்னார்கள். அப்போது அக்ரி கிருஷ்ணமூர்த்தி போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் பண்ணினார். அதன்பின் போலீஸின் போக்கே மாறிவிட்டது. எங்களை மிரட்ட ஆரம்பித்துவிட்டார்கள். அதோடு நிறுத்தாமல் போலீஸ் துணையோடு எங்களை இரவு 8 8 மணிக்கு சார் பதிவாளர் அலுவலகத்துக்குக் கொண்டு போனார்கள். அங்கு எனக்கும் என் அப்பாவின் சொத்துக்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று மிரட்டி பத்திரத்தில் கையெழுத்து வாங்கினார்கள். உயிருக்கு பயந்து நானும் கையெழுத்துப் போட்டுக்கொடுத்துவிட்டேன். இப்போது அக்ரி அமைச்சரானதால், மிக தைரியமாக கனகராஜூம் சேர்ந்து கொண்டு எங்களுக்கு சொந்தமான சொத்துக்களை விற்றுக்கொண்டிருக்கிறார்கள். எங்கள் அம்மா செல்வி, அக்கா சாந்தி, தம்பி முருகன் ஆகியோரையும் இந்தக் கும்பல் மிரட்டி வாயை அடைத்துவிட்டது. நில மோசடியை விசாரிக்கும் சிறப்புப் பிரிவு போலீஸில் நாங்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் கனகராஜ் மீது புகார் கொடுக்க இருக்கிறோம். எங்களுக்கு நீதி வேண்டும்" என்கிறார் கவலை பொங்க.
தி.மு.க.வினர் மீது குறி வைத்துப் பாயும் நில மோசடி வழக்குகள் அ.தி.மு.க. அமைச்சர் மீதும் பாயுமா? இல்லையெனில் தி.மு.க.வினர் மீது பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஜெயலலிதா இறங்கியுள்ளார் என்பதே நூற்றுக்கு நூறு உண்மையாகும்.
அமைச்சரின் விளக்கம்!
அக்ரி மீதான குற்றச்சாட்டுகளுக்கு அவரது விளக்கத்தை அறிய அவரை நேரில் சந்திக்க தொடர்ந்து முஞன்றோம். 4-வது நாள் தலைமைச் செயலகத்தில் அமைச்சரின் அறையில் உள்ள ஒரு பெர்சனல் அறையில் சந்தித்தார்.
"நான் நன்றாக செயல்படுவதாக அம்மா நம்புகிறார். அதனால் தான் உணவுத்துறையை விட வெயிட்டான வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறையை (இரண்டுமே செம "மால்" உள்ள துறை) எனக்குக் கொடுத்தார். அதனால் உங்களை நான்கு நாட்கள் அலைய வைத்தேன் ஸாரி..." என சொன்னவரிடம், அவர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை அடுக்கினோம். அனைத்தையும் அமைதியாகக் கேட்டுக்கொண்டவர், "நான் எனது சகோதரரை டி.எஸ்.பி. யாக ஃபுட் செல்லுக்கு நியமிக்கவில்லை. அதைச் செய்தது அம்மா தான். அம்மா அப்படிச் செய்தால் என் மீது புகார் வரும் என நான் சொன்னதால் அவனை, வேறு துறைக்கு மாற்றினார்கள். ஆட்சிக்கு வந்து சில நாட்களில் கோடிக்கணக்கான ரூபாய் வாங்கி கடன்களை நான் அடைத்ததாகப் புகார்கள் ஏற்கனவே அம்மாவின் கவனத்திற்கு வந்துள்ளது. அது தவறு என நிருபிக்க வங்கி ஸ்டேட்மெண்ட்டை வாங்கி வைத்துள்ளேன்" என ஒரு ஸ்டேட்மெண்ட்டைக் காட்டினார். "ஐ.ஏ.எஸ். அதிகாரி சம்பத்குமாருக்கும் எனக்கும் இடையில் பிரச்சினை உள்ளது. அரவிந்தர் பள்ளியை நான் மிரட்டி வாங்கவில்லை. அரவிந்த் எனபது என் மகனின் பெயர். யாரையும் நான் மிரட்டி அடிமாட்டு விலைக்கு எதையும் வாங்கவில்லை. நகரச் செயலளர் கனகராஜ் செய்யும் நில மோசடிகள் பற்றி எனக்கு எதுவும் தெரியாது" என்றார் பகிரங்கமாகவே.
........பிரக்காஷ்...நக்கீரன்..ஜூலை 20-22-2011
********************
பொது ஜனம்; ஆமாம் தலைவி மோசடிப் பண்ணலாம் அள்ளக்கை மோசடிப்பண்ணக்கூடாதா? இது என்ன? போங்கா! இருக்குதே!
பொது ஜனம; இதுதான் போயஸ் கார்டன் போங்கு!
பொது ஜனம்; ஜெயலலிதா கிட்ட மோசடி, ஊழல் செய்யற விஷயத்தில கூட "சமச்சீர்" இல்லை. "நான் மட்டும் தான் மோசடி, ஊழல் செய்யணும்!" நான் பார்த்து பிச்சை போட்டா நீ வாங்கிக்க!
பொது ஜனம்; ஒண்டிக்கட்டையே மோசடி பண்ணும் பொழுது, புள்ளக் குட்டிக்காரன் மோசடி பண்ண மாட்டானா!
பொது ஜனம்; என்னய்யா ஆளாளுக்கு வக்காலத்து வாங்கறீங்க! நீங்க ஏதுனா மோசடி பண்ணியிருக்கீங்களா!
பொது ஜனம்; அந்தம்மா பெரியப் பதவிக்கு, எவ்வளவு வேணுமோ? வேண்டியதை கொள்ளையடிச்சுகிட்டும். குட்டியமைச்சருக்கு,தொண்டர்களுக்கு கால்வாசியாவது கொள்ளையடிக்க விட்டுக்கொடுக்க கூடாதா?
பொது ஜனம்; நில மோசடி சிறப்புப்பிரிவே அதிமுக வுக்காகத்தான் அந்த பொம்பளை அமைச்சிருக்கும்! எங்கே! நம்மளை விட இவனுங்க ஸ்பீடாப் போய் சிறுதாவூர், கொடைக்கானல், டான்சின்னு நம்மளையே மிஞ்சிடுவானுங்கன்னு மறைமுகமாக இந்த பிரிவை அமைச்சிருக்கும்! இது தெரியாம இதுங்க மாட்டிக்கிச்சுங்க!
பொது ஜனம்; திருப்பதிக்கே லட்டு! மோசடிக்கே! மோசடி!
பொது ஜனம்; அ.தி.மு.க அமைச்சரவையே படு மோசடியான அமைச்சரவை போலிருக்குது! 2 மாசத்துக்குள்ளேயே இரண்டு மோசடி அமைச்சர்களா! இன்னும் குப்பைய கிளருனா! நிறைய வண்டி வண்டியா வரும்!
இடுகையிட்டது
நம்பி
நேரம்
2:40 am
0
கருத்துரைகள்
லேபிள்கள்:
. தமிழகச் செய்திகள்,
அரசியல்,
குறுஞ்செய்திகள்
Sunday, 17 July 2011
பெரிய தமாஷ்!
சூரிய கிரணம் படத்தில் சூரியன் படம் ஸ்கெட்ச் கொண்டு அழிப்பாம். கிரகணம் ஏற்படுவதே சூரியன், பூமி, சந்திரன் நேர்கோட்டு வருகை. இது நூற்றாண்டுகளாக நடக்கும் பாடம். சூரியன் தி.மு.க சின்னம் அழி என்றால் எப்படி புரிய வைப்பது? செம்மொழி மாநாட்டில் நிற்கும் வள்ளுவர் கலைஞர் கட்சியாம். அமர்ந்திருக்கும் திருவள்ளுவர் அம்மா கட்சியாம். நிற்பவர் மீது பச்சை ஸ்டிக்கர். ஐயா! வள்ளுவர் எந்தக் கட்சி?
-தேர்தல் சின்னங்கள் ஏதும் பாடப்புத்தகத்தில் வரக்கூடாது என்றால் ஊன்றிப் பார்த்தால் ஒரு படமும் அச்சிடமுடியாது. தாவரவியல் பாடத்தில் 'இலைகள்' இல்லா செடி போடனும். பாரதியார் முரசு பாடலுக்கு 'முரசு' போட முடியாது. மாம்பழ பாப்பா பாட்டில் 'மாம்பழம்' படம் போட முடியாது. 'இ' என்ற எழுத்தை போதிக்க 'இலை' படம் போடுவதும் அரிச்சுவடி தவறு.
சமச்சீர் கல்வி பெயர் மட்டுமே. உண்மை சமத்துவம் இல்லை. பாடத்திட்டம் மட்டும் சமமாக்கிவிட்டு பிற இனங்கள் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு. சமமாக்க விதிகள் தேவை.
அரசே அரிசிக்கு மானியம். கேஸூக்கு மானியம். அரசியல் சாசனப்படி இலவச கல்வி சேவைக்கு மெட்ரிக் ஆசிரியைக்கு 50% ஊதியம் மானியமாக தந்து மீதி 50% நிர்வாகம் எனக் கூறி சமமாக்கலாமே? சம உழைப்பு, சம கூலி அரசியல் சாசன விதி இல்லையா?
சமச்சீர் கல்வியை விட மெட்ரிக் பாடத்திட்டம் தரம் உயர்ந்தது என வாதம் புரியும் மெட்ரிக் நிர்வாகிகள் தரமான கல்விக்கு ஊதியம் கூடுதலாக (சமச்சீரைவிட) நிர்ணயிக்கணும். ஆனால் 1000, 2000 தானே ஊதியம் தருகிறீர்!
மெட்ரிக் ஆசிரியைக்கு வார விடுமுறையும் இல்லை. ஞாயிறும் தனி வகுப்பு எடுக்கப் போகணுமாம். அரசு விடுமுறை, கலெக்டர் விடுமுறை -கேட் -ஐ பூட்டிவிட்டு உள்ளே வகுப்பு நடக்கும். கொத்தடிமைகள்! வாய் திறந்தால் உடனே டிஸ்மிஸ்தான். அரை வயிறு கஞ்சிக்கும் ஆபத்து. எம்.ஏ., பி.எச்.டி., டாக்டர் பட்டம் பெற்றவர் எல்லோரும் 1000, 2000தான் ஊதியம். கொத்தடிமைகள் தான். குறைந்தபட்சம் ஊதியம் நிர்ணயம் அவசியம்.
-நக்கீரன் ஜூலை 9-12 வாசகர் அ.ஜோசப்சாமி, கும்பகோணம்.
இடுகையிட்டது
நம்பி
நேரம்
6:18 pm
0
கருத்துரைகள்
லேபிள்கள்:
. தமிழகச் செய்திகள்,
அரசியல்,
குறுஞ்செய்திகள்
Thursday, 14 July 2011
இந்தியப்பள்ளிகள் வரலாற்றில் முதல் முறையாக பாடங்களே இல்லாத பள்ளிகள் தமிழகத்தில்-உங்கள் பிள்ளைகளை சேர்க்கத் தவறாதீர்!
பாடங்களே! இல்லாத பள்ளிகள்!
குலக்கல்வி போற்றும் ஜெயலலிதாவின் சரித்திர சாதனை!
பேராசிரியர் சுப.வீ
....நன்றி! கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி!
Tweet
இடுகையிட்டது
நம்பி
நேரம்
12:26 am
0
கருத்துரைகள்
லேபிள்கள்:
. தமிழகச் செய்திகள்,
அரசியல்,
ஓளியும்ஒலியும்
Subscribe to:
Posts (Atom)










