Pages

Thursday 1 April, 2010

பெண்ணுரிமைச் சட்டங்கள்-2











இயல்புப் பாதுகாவலர்;

இந்து மதத்தைச் சேர்ந்த இளவருக்கே, அல்லது அவருடைய சொத்துக்கோ, இயல்புப் பாதுகாவலர் என்பவர்.

திருமணமாகாத பெண்ணாக இருந்தால், தந்தை இயல்புப் பாதுகாவலர் ஆவார்.

ஐந்து வயது நிறைவடையாத பெண் இளவரைப் பொறுத்த வரை சாதாரணமாக, தாயின் பொறுப்பில்தான் அத்தகைய பெண் இளவர் இருந்தாக வேண்டும்.

முறைதவறிப் பிறந்த திருமணமாகாத பெண்ணாக இருந்தால், அவருடைய கணவர் இயல்புப் பாதுகாவலராவர்.

தந்தை உயிரோடு இருக்கும்போது, தாயார் இயல்புப் பாதுகாவலராக இயங்க முடியுமா?

இளவரையும் இளவரின் சொத்துக்களையும் பாதுகாப்பதில் அக்கறைக் கொள்ளாது இருந்தால், இளவர் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தந்தை முற்றிலும் பாராமுகமாக இருந்தால், தாய், தந்தையர் இடையே ஏற்படும் உடன்பாடு காரணமாக, தாயாரின்  முழுப்பொறுப்பில் இளவர் விடப்படுவாரானால்,
1. தாயாரும் இளவரும் வசிக்கும் இடத்தைவிட்டு  தந்நை சொலைவில் இருப்பதன் காரணமாகவோ, அல்லது
2. உடல் ரீதியாகவோ, அல்லது மன ரீதியாகவோ, தகுதியிழந்து விட்டதின் காரணமாகவோ,
3. தந்தை இளவர் நலத்தில் அக்கறை கொள்ள இயலாதிருப்பாரானால்,

மேற்கண்ட சந்தர்ப்பங்களில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புப்படி (AIR 1999 SC 1149) தந்தை உயிருடன் இருக்கும்போதே, தாயார் இயல்புப் பாதுகாவலராக இயங்க முடியும்.

இச்சட்டம்-
சமயத்தால் இந்துவாக இருப்போருக்கப் பொருந்தும், வீரசைவர், லிங்காயத் அல்லது ஆரிய சமாஜம், பிரார்த்தனா, சமாஜம், பிரம்மோ சமாஜத்தை பின்பற்றுகிறவர் உள்ளடங்கலாக, இந்து சமயத்தச் சார்ந்தவர்களுக்குப் பொருந்தும், புத்த மதத்தையோ, அல்லது சீக்கிய மதத்தையோ சார்ந்தவர்கள் மற்றும், முஸ்லீம், கிருத்துவ, பார்சி மற்றும் யூத மதத்தைச் சாராதவர், இச்சட்டம் அமலில் உள்ள பகுதியில் குடியிருந்தால், அத்தகையவருக்கும் பொருந்தும்.


இயல்புப் பாதுவாலருடைய அதிகாரங்கள்;
1. இந்து மதத்தைச் சார்ந்த இளவருடைய இயல்புப் பாதுகாவலர், அந்த இளவரின் நன்மைக்காக அவசிநமான, நியாயமான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரம் பெற்றிருப்பார். இளவரின் சொத்தைப் பெற்றுத்தருவதற்கும், பாதுகாப்பதற்கும், அதே போன்று உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கும் அதிகாரம் பெற்றிருப்பார். ஆனால், இளவரைக் கட்டுப்படுத்தும் வகையில் உடன்பாடு எதுவும் செய்ய அதிகாரம் பெற்றிருக்கமாட்டார்.

2. இயல்புப் பாதுகாவலர், நீதிமன்றத்தின் முன் அனுமதியின்றி, இளவருக்குரிய சொத்தை அடைமானம் வைக்கவோ, விற்கவோ, தானம் செந்நவோ, உரிமை மாற்றம் செய்யவோ கூடாது. 5 வருட காலத்திற்கு அதிகமாக சொத்தை குத்தகைக்கு விடுதல் கூடாது. கெண் இளவர், 18 வயது பூர்த்தியடைந்த பின்பு, மேலும் ஒரு வருடத்திற்கும் கூடுதலாக குத்தகைக்கு விடுதல் ஆகாது.

3. மேற்கூறிய உட்பிரிவு (1) மற்றும் (2)க்கு முரணாக ஏதேனும் அசையாச்சொத்தை இயல்புப் பாதுகாவலர் விற்றால், அந்த விற்பனையை செல்லத்தகாததாக ஆக்கலலாம், பெண் இளவரோ, அல்லது அவரின்கீழ் உரிமை உரிமை கோருபவரோ, அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளலாம்.

4. பெண் இளவருக்கு அவசியம் என்றாலொழிய, பயனளிக்ககூடியதென எளிதில் தெரிந்தாலொழிய, நீதிமன்றம், உட்பிரிவு (2)ல் கூறப்பட்ட காரியங்களுக்கு அனுமதி அளிக்கக்கூடாது.

உயில் வழிப் பாதுகாவலர் மற்றும் அவருடைய அதிகாரங்கள்;
 ஒரு இந்து சமயத்தைச் சார்ந்த தந்தை, தன்னுடைய சட்டப்பூர்வமான பெண் இளவர் குழந்தைகளுக்கு, அல்லது அவர்களது சொத்துக்களுக்கு உயிலின் மூலம் ஒரு பாதுகாவலரை நியமிக்க முடியும். அப்பாதுகாவலர், உயில் வழிப் பாதுகாவலர் எனப்படுவார்.தந்தை இறந்து, தாய் உயிருடன் இருந்தால், உயில்வழிப்பாதுகாவலர் நியமனம் செல்லாது. ஏனெனில் தாய் இரண்டாவது இயல்பு பாதுகாவலர் ஆவார். தந்தை எந்த உயில் சாசனமும் எழுதாமல் இறந்துவிடாடல், தாய் உயில் மூலம் பாதுகாவலரை நியமிக்க முடியும். தாயும் உயில்வழிப்பாதுகாவலரை நியமிக்காமல் இறந்துவிட்டால் தந்தை எழுதிவைத்த உயில்வழிப் பாதுகாவலர் நியமனம், இயக்கம் பெறும்.

இயல் பாதுகாவலராக இயங்க உரிமை பெற்ற இந்து விதவைப்பெண் ஒருவள் இளவருக்காகவோ, அல்லது அவரின் சொத்துக்களுக்காகவோ அல்லது இரண்டிற்காகவோ, பாதுகாவலரை நியமிக்க முடியும். அதே போன்று, இயல்புப் பாதுகாவலராக இயங்க, தந்தை தகுதி இழந்தவராயின், இயல்புப் பாதுகாவலராக இயங்க உரிமை பெற்ற இந்துத் தாய் ஒருவள், மேற்கண்ட நோக்கங்களுக்கு, உயில் வழிப் பாதுகாவலரை இயல்புப் பாதுகாவலராக இயங்க உரிமை பெற்ற இந்து தாய் ஒருவள் மேற்கண்ட நோக்கங்களுக்கு உயில்வழிப் பாதுகாவலரை நியமிக்க முடியும். முறைதவறிப்பிறந்த இளவர் குழந்தைகளுக்கு, இயல்புப் பாதுகாவலராக இயங்க உரிமை பெற்ற இந்துப் பெண் ஒருவள், இந்த இளவர்களுக்கோ, அல்லது அவரின் சோத்துக்கோ, அல்லது இரண்டுக்குமோ, உயில் வழிப் பாதுகாவலரை நியமிக்கமுடியும்.

அவ்வாறு உயில் சாசனம் மூலம் நியமிக்கப்பட்ட பாதுகாவலர், இளவரின் தந்தையோ, அல்லது தாயோ இறந்தபிறகு, இளவர் குழந்தைகளுக்குச் சட்டப்படியான பாதுகாவலராக, உயில் மற்றும் சட்டப்படியான அனைத்து அதிகாரங்களையும் பெற்று இயங்க முடியும்.

அவ்வாறு உயில் சாசனம் மூலம் நியமிக்கப்பட்ட பாதுகாவலர், இளவரின் தந்தையோ, அல்லது தாயோ இறந்தபிறகு இளவர் குழந்தைகளுக்குச் சட்டப்படியான பாதுகாவலராக, உயில் வழி மற்றும் சட்டப்படியான அனைத்து அதிகாரங்களையும் பெற்று இயங்க முடியும்.

அந்த இளவர் பெண்ணின் பாதுகாவலருடைய அதிகாரங்கள், அப்பெண்ணுக்குத் திருமணம் ஆனதும் அற்றுப்போகும்.
ஒரு இளவர் மற்றொரு இளவருக்கோ, அல்லது அவருடைய சொத்திற்கோ, பாதுகாவலராக இருக்க முடியாது.

இச்சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு, எவரும் நடைமுறையில் மெய்யான பாதுகாவலர் என்ற அடிப்படையில், இந்து இளவருடைய சொத்திற்கோ, அல்லது இளவலருக்கோ, பாதுகாவலராக இயங்க இயலாது.


நீதிமன்றத்தின் அதிகாரங்கள்;

கூட்டு குடும்பச் சொத்தில் இந்து இளவருக்குப் பங்கு இருந்து, அக்கூட்டுக் குடும்பச் சொத்தை, அக்கூட்டுக் குடும்பத்தின் தலைவர் பாரமரித்து வரும் பட்சத்தில், அக்கூட்டுக் குடும்பச் சொத்தில்  இளவருக்கு உண்டான பிரிவினையாகாத பங்கின்மூதி, இளவலின் பாதுகாவலர் எந்தவித உரிமையும் கொண்டாட முடியாது. ஆனால் உயர்நீதிமன்றம், அத்தகைய பிரிவினையாகாத பங்கிற்குக் கூட பாதுகாவலரை நியமிக்கும் அதிகாரம் பெற்றிருக்கும்.

நீதிமன்றும், ஒரு நபரை, இந்து இளவருடைய பாதுகாவலர், என்று அறிவிக்க, அல்லது நியமிக்க வேண்டுமெனில், அந்த இளவரின் நலன் மட்டுமே அதற்கு அடிப்படையாக இருக்கவேண்டும்.

இளவர் ஒருவரைப் பொறுத்து செய்யப்படும் பாதுகாவலர் நியமனம், அந்த இளவரின் நலனுக்கு உக்ந்ததல்ல, என்று நீதிமன்றம் கருதினால், சட்டத்தின் வகைமுறைகளின்படி, தானே பாதுகாவலராக இருக்க வேண்டும், என்று யாரும் உரிமை கோர முடியாது.


......தொடரும்.....பெண்ணுரிமைச் சட்டங்கள்-3