Pages

Thursday, 30 June, 2011

திருடர்கள்! அமைத்த விசாரணை கமிஷன்!புதிய தலைமைச் செயலகத்தை பயன்படுத்தாமல் இருப்பதற்காக
திட்டமிட்டு விசாரணை கமிஷன் அமைத்துள்ளனர்
கருணாநிதி அறிக்கைசென்னை, ஜுன்.30-

புதிய தலைமைச் செயலகத்தை பயன்படுத்தாமல் இருப்பதற்காக திட்டமிட்டு விசாரணை கமிஷன் அமைத்துள்ளனர் என்று கருணாநிதி கூறியுள்ளார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதிய தலைமைச் செயலகம்

"புதிய தலைமைச் செயலகக் கட்டுமானம் குறித்து எழுந்துள்ள புகார்கள் பற்றி விசாரிப்பதற்காக நீதிபதி தங்கராஜ் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது'' என்று ஏடுகளில் செய்தி வந்துள்ளது. புதிய தலைமைச் செயலகக் கட்டுமானம் குறித்து இதுவரை யாரும் புகார்கள் கொடுத்ததாக எந்தச் செய்தியும் ஏடுகளிலே வரவில்லை. தமிழக அரசினரே தங்களுக்குத் தாங்களே புகார் வந்ததாக செயற்கையாகக் கூறிக் கொண்டு, அந்தப் புகார்களை விசாரிப்பதற்காக விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்திருக்கிறார்கள்.

ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ள அந்த புதிய தலைமைச் செயலகத்தில் வந்து குடிபுகாமல் இருப்பதற்காக - தமிழக அரசின் சார்பில் கட்டப்பட்ட அந்த மாளிகையைப் பயன்படுத்தாமல் இருப்பதால் தன்னை பொதுமக்கள் இழித்துரைக்கக் கூடும் என்பதை நன்குணர்ந்த ஜெயலலிதா; அந்தக் குற்றச்சாட்டிலிருந்து தப்பிப்பதற்காகத்தான் திட்டமிட்டு இப்படியொரு விசாரணை கமிஷனை அமைத்துள்ளார் என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்றாகவே உணர்வார்கள்.

முதல்-அமைச்சர் தங்கும் அறை

விசாரணைக்கான வரையறைகளாக கட்டுமானத் தரத்தில் குறைகள் - கட்டுமானப் பணியை முடிக்கத் தேவையில்லாத கால தாமதம் - கட்டுமானத்தின் போது பல முறைகேடுகள் - தேவையில்லாத செலவினங்கள் என்றெல்லாம் இட்டுக்கட்டி கூறப்பட்டுள்ளன. தேவையில்லாத செலவினங்கள் என்று விசாரணையாம்!

முதல்-அமைச்சர் ஜெயலலிதா டெல்லிக்குச் சென்று ஒரு நாள் பிரதமரை மரியாதைக்காக சந்திக்கச் சென்றார் என்பதற்காக முதல்- அமைச்சர் தங்கும் அறையே மாற்றம் செய்யப்பட்டது, சாலையே புதிதாக போடப்பட்டது; இதற்காக தனியாகச் செலவழிக்கப்பட்டது எவ்வளவு?

தி.மு.கழக ஆட்சியில் கட்டப்பட்ட தலைமைச் செயலகத்தைப் பயன்படுத்த மறுத்து; மீண்டும் செம்மொழி தமிழாய்வு நூலகத்தை அப்புறப்படுத்திவிட்டு, அங்கே சட்டமன்றப் பேரவையை உருவாக்குவதற்காக செய்யப்பட்ட செலவு எவ்வளவு? பழைய தலைமைச் செயலகத்திலேயே தொடர்ந்து செயல்படுவதற்காக செய்யப்பட்ட செலவுகள் எவ்வளவு? சாதாரண பயணிகள் செல்லும் விமானத்தைப் பயன்படுத்தாமல் தனியார் விமானத்தை முதல்-அமைச்சர் கையாளுவதால் ஏற்படும் செலவுகள் எவ்வளவு? இந்த வீண் செலவுகளைப் பற்றியெல்லாம் விசாரணைகள் வேண்டாமா?

இவ்வாறு தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

...தினத்தந்தி 30.06.2011

*********************

பொது ஜனம்; ஜெயலலிதாவின் ஊழலுக்கு துணை போன "கேடி"யரசன் எப்படி? "நீதியரசரா" மாறி இந்த விஷயத்தை விசாரிக்க முடியும். 


பொது ஜனம்; இது கேசுக்கூடவே தங்கியிருக்குதே! இந்த தங்கமான "தங்கு" ராஜா! இது முறைகேடாயிற்றே! 


பொது ஜனம்; குத்தவாளிகளை நீதிபதி தனியா பார்க்குறதே தப்பு! அவர்களோட சேர்ந்து வேறே தங்கியிருக்குது! இதுக்கு பேசாம கேடியாவே இருந்திருக்கலாம்! எதுக்கு மக்களின் கடைசி நம்பிக்கையான இந்த புனிதமான "நீதிபதி" பதவியை தேர்ந்தெடுக்கணும்! பிழைக்கறதுக்கு தொழிலா இல்லை!


பொது ஜனம்; இந்தக் "கேடி"க்கு இந்த "லேடி" துணைக் கேக்குதா!


பொது ஜனம்; இது மாதிரி குத்தவாளிங்க கூட தங்கினதுனாலே இதுக்கு "தங்க"ராஜ் என்று பெயர் வந்திருக்கும்!

பொது ஜனம்; இந்த ஆளு எல்லாம் சுப்ரிம் கோர்ட்டுக்கு ஜட்ஜா போயிருந்தா என்ன ஆகியிருக்கும்! கீழ் கோர்ட்டிலேயே எல்லாத்தையும் முடிச்சிக்க வேண்டியது தான்! மேல் முறையீட்டுக்கெல்லாம் யாரும் போகமாட்டாங்க!


பொது ஜனம்; நீதிமன்றத்துல வழக்குல நீதிபதி  சார்பு நிலை கொண்டிருந்தாலே, அதாவது வழக்குக்கு சம்பந்தப்பட்டவரான வாதி, பிரதிவாதி இரண்டு பேருல யாருக்காவது உறவினராக!, நண்பராக! இருந்தது தெரிந்ததுன்னாலே அந்த வழக்கை விசாரிக்கிற நீதிபதி தானாகவே  விலகிடுவாங்களே! நீதிமன்ற வழக்கமாயிற்றே!


பொது ஜனம்; குற்றவாளியே குற்றத்தை விசாரிக்கிற முறை தான் ஜெயலலிதா பின்பற்றுவது.  திருடனே திருட்டை விசாரிப்பது  கொலைகாரனே கொலையைப் பற்றி விசாரிப்பது எல்லாம் ஜெயலலிதாவின் பாணி. ஏன்னா ஜெயலலிதாவே டான்சி நிலைத்தை திருடிய திருட்டு ஆள் தான் குற்றத்துக்கு குற்றம் மேட்சாயிடும்.


பொது ஜனம்; இது நன்றி மறவாமையப்பா! ஜெயலலிதாவை டான்சிலேயிருந்து விடுவிச்சதுக்கு நன்றி மறக்காம இந்த பொம்பளை செஞ்சுது! இப்ப விசாரிக்கப்போறதுக்கும் சேர்த்து நன்றி மறக்காம இந்த பொம்பளை கவனிக்கவேண்டிய விதத்துல கவனிச்சிடும்! அதுல மட்டும் தன் கெட்டிக்காரத்தனைத்தை பயன்படுத்தும்! வேற ஒன்னுத்துக்கும் பயன்படுத்தாது! இருந்தா தானே!


 பொது ஜனம்; செலவீனங்கள் குறைத்து, ஆடம்பரமில்லாமல் இந்த அராஜக அதிமுக அரசு செயல்படும் என்று இந்த "அராஜக பொம்பளை" பேட்டி கொடுத்துதே! இதுவே எக்கச்சக்கமா செலவு பண்ணுதே! தனி விமானம்! தனி ரோடு! கலக்குது போ!


பொது ஜனம்; இந்தியப் பிரதமர் கூட இந்தளவுக்கு பயன்படுத்த மாட்டார் போலிருக்குதே!


பொது ஜனம்; இதுக்குப் பெயர் தான் முள்ளை மூள்ளால் எடுத்தல் டெக்னிக்! குற்றவாளியை வைத்தே குற்றவாளியை வைத்தே கண்டுபிடிப்பது!........................? இதை இப்ப அரசியல் சட்டத்துல சேர்த்திருக்காங்க!


பொது ஜனம்; ஓ அப்படியா! மொத்தத்தில இது திருடர்கள் கூட்டமைப்பு அமைத்த விசாரணைக் கமிஷன்!

Wednesday, 29 June, 2011

ஜெ. அரசின் லஞ்ச வேட்டை ஆரம்பம்...பம்..பம்..பம்..!
 27 கோடி வசூல்
 
"தி.மு.க. ஆட்சியில் தொழில் நசிந்து போனது என்ற கருத்து பரப்பப்பட்டது.  ஆனல் இப்போதைய 'ஜெ' ஆட்சியில் தொழிலே நடத்த முடியாது போல ஆகிவிட்டது.  இவர்கள் ஆட்சிக்கு வந்து ஒரே மாதத்தில் வலுக்கட்டாயமாக எங்களை குறிவைத்து கழுத்தில் சுருக்கு கயிறு மாட்டுவது போல 'இவ்வளவு கொடு' என நெருக்கி விட்டார்கள்.  இப்படி தமிழகம் முழுக்க உள்ள கிரஷர் (கல்குவாரி) உரிமையாளர்கள் குமுறும் செய்தி நமக்கு எட்ட நிஜத்தைத் தோண்டினோம்."


     தமிழகம் முழுக்க ஆயிரக்கணக்கான கல்குவாரிகள் 27 மாவட்டங்களில் உள்ளன.  சில மாவட்டங்களில் இருபது முப்பது குவாரிகளும், பல மாவட்டங்களில் நூற்றுக்கணக்கிலும் இவை நடைபெற்று வருகிறது.  ஒவ்வொரு குவாரிக்கும் பத்து வருடம் கல் உடைக்க மட்டுமே அனுமதி... மீண்டும் தேவையென்றால் அவர்களுன் லைசென்ஸ்ஐ நீடிக்க வேண்டும்.  அப்போது அதிகாரிகளுக்கு பல லட்சம் லஞ்சம் கொடுத்தால் தான் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு தொழில் நடத்த அனுமதி கிடைக்கும்.  அதேபோல் ஒவ்வொரு மாதமும் லாரிகளுக்கு பர்மிட் வாங்கவேண்டும்.  ஜல்லி, கிரஷர் கற்களை லாரிகளில் விற்பனைக்கு அனுப்ப பர்மிட் அவசியம்.  இதை ஒவ்வொரு மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குநர் என்ற அதிகாரிதான் வழங்குவார்.  இது தான் இத்தொழிலின் நடைமுறை.  இந்த மாதம் பர்மிட் வாங்கப் போன கிரஷர் உரிமையாளர்களிடம் ஒவ்வொரு மாவட்ட அதிகாரிகளும் 'அமைச்சரைப் போய் பார்த்துவிட்டு வாங்க அப்புறம்தான் பர்மிட் வழங்கப்படும்' என கூற, அந்த சூட்சுமம் பிறகுதான் வெளிப்பட்டுள்ளது.

     இனி நடந்தவற்றை நாம் சந்தித்த பல்வேறு கிரஷர் உரிமையாளர்கள், அசோசியேஷன் நிர்வாகிகள் 'பெயர்', புகைப்படம் எதுவும் வேண்டாம்.  உண்மை இதுதான்' என விரவாகக் கூறினார்கள்.

     "அ.தி.மு.க. ஆட்சியில் தொழில்துறை மற்றும் கனிம வளத்துறை அமைச்சராக இருப்பவர் உடுமலைப்பேட்டை சண்முகவேல்.  நல்ல மனிதர் எளிமையானவர் என்ற பெயரெல்லாம் இவருக்கு உண்டு.  அப்படித்தான் நாங்களும் நம்பினோம்.  ஆனால் அவரைச் சந்தித்தபோது மிக கறாராகவும் மிரட்டும் தொனியிலும் நடந்துகொண்டார்.  'கிரஷர், குவாரி தொழிலைப் பற்றி எனக்கு நல்லா தெரியும்.  ஏன்னா நானே மடத்துக்குளத்தில் குவாரி வைச்சு 
20 X 10 மிஷின் போட்டுள்ளேன்.  என்ன வருமானம் என்பது எனக்கு நல்லா தெரியும்.  ஒவ்வொரு மாவட்டத்திலேயும் கிரஷர் உரிமையாளர் அசோசியஷன் வெச்சிருக்கீங்க.  நீங்களே வசூல் செஞ்சு ஒரு மாவட்டத்துக்கு இரண்டு கோடி கொடுத்துடுங்க.  நீங்களும் பொழைக்கணும் நாங்களும் பொழைக்கணும்' என ஒரே பேச்சில் முடித்துக்கொண்டார்.
     
     'ரொம்ப அதிகமா கேட்கறீங்க, அவ்வளவு முடியாதுங்க' என நாங்க கெஞ்சிக்கேட்டபிறகு, இறுதியாக ஒரு கோடி என தலா ஒவ்வொரு மாவட்டத்துக்கும் முடிவானது.  குவாரிகள் அதிகம் உள்ள இருபத்தி ஏழு மாவட்டத்திற்கும் இருபத்தி ஏழுகோடி. 'பணம் தரமுடியாது என கூறும் கிரஷர் உருமையாளர்களின் பர்மிட்டை ரத்து செய்யச் சொன்னதாக' அமைச்சர் கூறியதை மாவட்ட அதிகாரிகளும் எங்களிடம் கூறிவிட்டனர்.  எங்க தொழிலை பொறுத்தவரை நூறு சதவீதம் சரியா செய்யமுடியாது.  பாறைகளை உடைக்க வெடிமருந்து பயன்படுத்த வேண்டும்.  அதிகாரிகள் பார்த்து தடை செய்யப்பட்ட அல்லது அனுமதி பெறாமல் வெடிமருந்து வைத்துள்ளதாக எங்களை கைது செய்யவும் முடியும்.  லாரிகளுக்கு பர்மிட் பொறுத்தவரை நூறு லோடு, இருநூறு லோடு என பர்மிட் வாங்குவோம்.  ஆனால் தொள்ளாயிரம் லோடு, ஆயிரம் லோடு அனுப்புவோம்.  இதுவெல்லாம் சின்ன அட்ஜஸ்ட்மெண்ட்தான்.  பரமிட் இல்லையென்று ஆர்.டி.ஓ, தாசில்தாரை விட்டு லாரியை பிடித்துக் கொண்டு போவார்கள்.  இப்படி பல பிரச்சினைகள் இத்தொழில் உள்ளன.  இதனால் தான் அமைச்சரின் உத்தரவுக்கு நாங்கள் அடிபணிய வேண்டியுள்ளது.

     சரி, ஒருமுறைதான் கேட்கிறார் என நாங்கள் நினைத்தோம்.  தென்மாவட்டத்தைச் சேர்ந்த உரிமையாளர்கள் அமைச்சரை சந்தித்தபோது, பத்து வருடம் லைசென்ஸ் எனபதை இருபது வருடமாக நீடித்து தாருங்கள் என கேட்டுள்ளனர்.  'அதையெல்லாம் அம்மாவிடம் பேசி நான் முடித்து தாரேன்.  நீங்கள் இப்போது போல ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு ஒருமுறை மாவட்டத்திற்கு 'ஒன் சி' கொடுத்து விடுங்கள்' என கூறியுள்ளார்.  இனி ஆறு மாதத்திற்கு ஒருமுறை ஒவ்வொரு மாவட்டமும் ஒரு கோடி கொடுக்க வேண்டுமாம்" -என தலையில் அடித்துக்கொள்ளாத குறையாக கூறினார்கள் கிரஷர் உரிமையாளர்கள், அசோசியேஷன் நிருவாகிகளாக உள்ள அ.தி.மு.க. ர.ர. மற்றும் தி.மு.க. உ.பி.க்கள்.     சின்ன சின்ன அளவில் குவாரி நடத்தும் கிரஷர் உருமையாளர்கள் முதல் பெரிய அதிபர்கள் வரை தனித்தனியாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள கனிம வளத்துறை அதிகாரியே ஒரு நிறுவனம் எவ்வளவு கொடுக்க வேண்டும் என பட்டியல் போட்டு கொடுத்துள்ளார்.  அதன்படி சிறு கிரஷர் நிறுவனங்கள் 35 ஆயிரம், அடுத்து 50 ஆயிரம், தொடர்ந்து 1 லட்சம்... பெரிய நிறுவனங்கள் இரண்டு, மூன்று, நான்கு லட்சங்கள் என பங்குத்தொகை போல பிரித்து ஒரு மாவட்டத்திற்கும் ஒரு கோடிக்கும் குறையாமல் வசூல் செய்யும் கொறுப்பை அந்தந்த மாவட்ட அசோசியேஷன் நிர்வாகிகளிடம் ஒப்படைத்துள்ளார் கனிமவள அதிகாரி.

     கடந்த ஒருவாரமாக தமிழ்நாடு முழுக்க கிரஷர் நிறுவனங்களிடம் வசூல் மிக தீவிரமாக நடந்து வருகிறது.  சில மாவட்டங்களில் அமைச்சரிடம் செட்டில் மெண்ட் முடிந்து விட்டது.  இம்மாத இறுதியில் 30-ந்தேதிக்குள் எல்லாம் ஒப்படைத்துவிடவேண்டும் என கெடு வைத்துள்ளனர்.  தலைமைச் செயலகத்தில் அமைச்சர் சண்முகவேல் அலுவலகத்தில் ஒருவாரமாகவே கிரஷர் உரிமையாளர்கள் கூட்டமாக உள்ளது.  27-ந்தேதி வரை இருபது மாவட்டங்கள் தங்கள் கணக்குகளை ஒப்படைத்து விட்டனர்.

     இவ்வளவு கஷ்டப்பட்டு 'உழைத்த' தொழில் அமைச்சர் சண்முகவேலு திங்களன்று ஊரகத் தொழில் அமைச்சராக மாற்றப்பட்டு விட்டார்.  கணக்கில் குளருபடியோ ?

...ஜீவா தங்கவேல்
.............நக்கீரன் 2011-6-29--7-01
****************

பொது ஜனம்; வேலூர்ல மணல் மாபியா கலைகட்டுது இங்கே இது வேறையா! சக்கை போடு போடறாங்க போல இருக்குது!

பொது ஜனம்; அந்தம்மாதான் சொல்லுச்சே தன்னுடைய அல்லக்கைகள் எள்ளுன்னா எண்ணையா இருப்பாங்க என்று பேட்டியில சொல்லுச்சே! அதான் ஒரு கை பார்க்கிறாங்க! அதான் முன்பே தெரியுமே கொள்ளையர்களுக்கு மறுவாழ்வு அளித்தவர் ஜெயலலிதா தான்! அவர் இருக்கிறவரை பணம் மானாவாரியா புரளும்! பஞ்சமும் மானாவாரியா புரளும்!

பொது ஜனம் பஞ்சம்  மக்கள் கிட்டே புரளும், 'பணம்' இந்த மாதிரி மாபியா கேங்குங்க கிட்டே, இந்த மாதிரி அல்லக்கைங்க கிட்டே புரளும். 

பொது ஜனம்;ஒவ்வொரு அரசாங்க அலுவலகத்திலே, ரேஷன் கடைகளிலே புகுந்து ஊழியர்களை அடிக்கிற அளவுக்கு அல்லக்கைங்க  போயிட்டாங்களே! பொம்பளை ஊழியர்களை பச்சை பச்சையா திட்ட ஆரம்பிச்சுட்டானுங்களே! 

பொது ஜனம்; எல்லா கடத்தல்களும் இந்த அல்லக்கைங்களே பண்ணுது! தலைவி வழியை அல்லக்கைங்களும் பின்பற்றுது. பாரேன்! ஒரு மாசம் கூட ஆவலை அமைச்சர் அம்மாவுக்காக என்ன மாதிரி சூப்பரா  டீல் பண்ணியிருக்குது!

பொது ஜனம்; ஜெயலலிதா வந்தாலே அரசங்கத்துக்கு, மக்களுக்கு என ஒரே மொத்தமான ஆப்புதான்!

.பொது ஜனம்; இந்த ரேஞ்சுக்கு வசூல் பண்ணா என்னாவரது! அதுக்குத்தான்  லோக்பால் மசோதாவில பிரதமரை சேர்க்க கூடாது என்று சொல்லுச்சா!

பொது ஜனம்; ஒன்னும் ஆகாது! தி.மு.க அரசு வைச்சுட்டுப்போன கடனுக்காக வசூல் பண்ணேன் என்று சொன்னாலும் சொல்லும்! நம்பறதுக்குத்தான் மக்கள் இருக்காங்களே!


மக்களை கழட்டி விட்டாலும் விடுவேன்! தனியார் பள்ளிகளை ஒருபோதும் கழட்டி விடமாட்டேன்-ஜெயலலிதா

 'சமச்சீர் கல்வி' தரமற்றது! ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல்!

சென்னை சமச்சீர் கல்வி தரமற்றது. இதுகுறித்து ஆராய்ந்த கமிட்டி ஒரு வாரத்தில் ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனுத்தாக்கல் செய்துள்ளது. சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும் என்று கோரி சென்னை தியாகராயர் நகரை சேர்ந்த பிரின்ஸ் கஜேந்திரபாபு உள்ளிட்ட பலர் உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தாக்கல் செய்தனர். 


இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் தமிழக அரசு கல்வித்துறை செயலாளர் சபீதா சார்பில் அரசு சிறப்பு வக்கீல் சம்பத் உயர் நீதிமன்றத்தில் நேற்று பதில் மனுத் தாக்கல் செய்தார். 

அதில் கூறியிருப்பதாவது் சமச்சீர் கல்வி தொடர்பாக கடந்த ஆண்டு சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டம் தவறானது.


மத்திய அரசின் கட்டாய கல்வி சட்டத்துக்கு எதிரானது. மத்திய அரசின் கட்டாய கல்வி சட்டம்தான் மூலச்சட்டம் இந்த சட்டத்துக்கு விரோதமாக சமச்சீர் கல்வி சட்டம் உள்ளது. இந்த மூலச்சட்டத்தை கவனத்தில் கொள்ளாமல் கடந்த அரசு சமச்சீர் கல்வி சட்டத்தை கொண்டு வந்தது. ஈசெ?ஈசெ?தேசிய பாடத் திட்டம் வடிவமைப்பு விதி 2005ன்படி சமச்சீர் கல்வி தரமற்றது. 

இதுதவிர சமச்சீர் கல்வியில் பல குறைபாடுகள் உள்ளது என்று கல்விக்கான தேசிய கவுன்சில் தமிழக அரசுக்கு கடந்த 2009ம் ஆண்டு நவம்பர் மாதம் 24ம் தேதி கடிதம் எழுதியது. அதை கடந்த அரசு ஏற்கவில்லை. இதுதவிரஇ கடந்த ஆண்டு சமச்சீர் கல்வி வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் அரசுக்கு பல பரிந்துரைகள் செய்தது. 

அதாவது சமச்சீர் கல்வி புத்தகம் தொடர்பாக ஆய்வு செய்ய புதிய கமிட்டி அமைக்க வேண்டும். அந்த கமிட்டி அங்கீகரிக்கப்பட்ட புத்தகங்கள் பட்டியலை வெளியிட வேண்டும் என்ற பரிந்துரையை கடந்த அரசு அமல்படுத்தவில்லை. இதற்காகஇ மே மாதம் 15ம் தேதி கெடு விதித்தது. அதை கடந்த அரசு மீறியுள்ளது. புத்தகத்தை தேர்ந்தெடுக்கும் உரிமை தனியார் பள்ளிகளுக்கு உள்ளது என்று மத்திய அரசின் மூலச்சட்டம் கூறுகிறது. இதை கடந்த அரசு மீறி செயல்பட்டுள்ளது. 

மூலச்சட்டத்தின் விதிமுறைகளை நடைமுறைப்படுத்தாமல் சமச்சீர் கல்வி சட்டத்தை அமல்படுத்த முடியாது. ஈசெ?ஈசெ?சமச்சீர் கல்வி வழக்கு தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீடு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் சமச்சீர் கல்வி தொடர்பாக ஆய்வு செய்ய ஒரு கமிட்டி அமைக்க வேண்டும் என்றும்இ அந்த கமிட்டி 3 வாரத்தில் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.; அதன்படிதமிழக அரசு கமிட்டியை அமைத்தது. இந்த கமிட்டி இரவுஇ பகலாக சமச்சீர் கல்வியை ஆய்வு செய்து வருகிறது. வரும் 5ம் தேதிக்குள் (ஒரு வாரத்துக்குள்) உயர் நீதிமன்றத்தில் அறிக்கையை தாக்கல் செய்யும். எனவே மனுதாரரின் குற்றச்சாட்டு ஏற்புடையதாகாது. 

சமச்சீர் கல்வி என்பது மாணவர்களுக்கு உதவுவதாக இருக்க வேண்டும். தற்போதுள்ள சமச்சீர் கல்வி மாணவர்கள் வளர்ச்சிக்கு தரமானதாக இல்லை. சமச்சீர் கல்வியை நாங்கள் முழுவதுமாக ரத்து செய்யவில்லை. அதை நிறுத்தி வைக்கத்தான் சட்டத்திருத்தம் செய்துள்ளோம். அதை எப்பொழுது வேண்டுமானாலும் அமல்படுத்தலாம்.

மத்திய அரசின் மூலச்சட்டத்துக்கு விரோதமாக சமச்சீர் கல்வி இருப்பதால் 1 கோடியே 35 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். 200 கோடி ரூபாய் வீண் செலவு என குற்றச்சாட்டு மிகைப்படுத்தப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் கூறியுள்ளது. இந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வருகிறது

.....தினகரன் 29.06.2011
****************************

பொது ஜனம்; என்னய்யா நிபுணர் குழு அறிக்கையே இன்னும் தாக்கல் ஆகவில்லை அதுக்குள்ள தமிழக அரசின் நிலைப்பாட்டை கோர்ட்டுல தெரிவிச்சிடுச்சே! அப்ப உச்ச நீதிமன்ற தீர்ப்பு அம்போ தானா?


பொது ஜனம்;நிபுணர் அறிக்கை எப்படி? இருக்கும்ணு! ஜெயலலிதா முன்னாடி கோர்ட்டுக்கு நேரிடையாவே தெரிவிச்சிடுச்சி! இதுவே ஒரு நீதிமன்ற அவமதிப்பு!


பொது ஜனம்; நிபுணர் அறிக்கையே அடுத்த வாரம்தானே! தாக்கல் ஆகப்போகுது! அதுக்குள்ள எப்படி சமச்சீர் கல்விச்  சட்டம் தவறானது! என்று மீண்டும் மீண்டும் கூறமுடியும்?பொது ஜனம்; கோர்ட்டு இது குறித்து அறிக்கை கேட்கவில்லையே! சமச்சீர் கல்வி சரி என்று தீர்ப்பு கூறியாச்சே! சமச்சீர் கல்வி தீர்வு செய்யப்பட்ட சமாச்சாரம்!  பொது ஜனம்; சமச்சீர் கல்வி சட்டம் தவறானது என்றும் சொல்லுது. சமச்சீர் கல்வியை எதிர்க்கலேன்னும் சொல்லுது! அப்ப சமச்சீர் கல்வி எனபது என்ன?பொது ஜனம்; மூலச்சட்டத்துக்கு எதிரானது! என்று ஜெயலலிதா கூறியிருக்குதே! மூலச்சட்டத்துல சமச்சீர் கல்வி வேணான்னு சொல்லப்பட்டிருக்குதா!  இல்லை சமச்சீர் கல்வியைக் கொண்டு வருவது தவறு! என்று சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறதா! இருந்தா காட்ட சொல்லுமே பார்ப்போம்!பொது ஜனம்; கட்டாயக் கல்விச்சட்டத்தையே தமிழக அரசு இன்னும் தமிழகத்தில் அமல் படுத்தாம இருக்கே! அது வந்து ஆறுமாசமா ஆச்சு!  அதுக்கே வழக்குப் போட்டுத்தான் கேக்க வேண்டியிருக்குது! வந்துவுடன் அதுக்கு சட்டம் போட்டிருந்தா இது அக்கறையுடன் செயல்படுது என்று சொல்லலாம்! இது இருக்கறதையும் நாசமாக்கிறதுக்கு வந்திருக்குது!பொது ஜனம்; தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாக நடப்பது! அவங்களை கொள்ளையடிக்க விடுவது! மக்களை கட்டண சுமையில் தள்ளுவது! இது தான் அதோட அகராதியில சமச்சீர் கல்வியாக இருக்கும்!


பொது ஜனம்; இதுக்கா! இரவுப் பகலா ஆய்வு செய்தாங்களாம்!


பொது ஜனம்; அதுல உள்ள குறைகளைத்தானே சுட்டிக்காட்ட சொன்னாங்க! இவங்க எப்படி? சமச்சீர் கல்வியே தவறு! உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரா  கூறமுடியும்! பொது ஜனம்; மே 16 ந்தேதி அதிமுக அமைச்சரவையில 1 மணிநேரத்துல ஆய்வு செஞ்சு அறிவிச்சதைத்தான் திருப்பி அப்படியே இப்பொழுதும் தெரிவிக்கிறாங்க! இதுக்கு இரவுப் பகல் எல்லாம் ஒன்றும் தேவையே இல்லை! அதே 1 மணிநேரத்துல டிஸ்கஷன் பண்ணது தான்! அதனால தான் அறிக்கைக்கு முன்னாடியே அரசு தரப்பு முடிவை கோர்ட்டுல மீண்டும் தாக்கல் பண்ணிட்டாங்க! பொது ஜனம்; அதாவது  கோர்ட்டு எத்தனை தடவை சொன்னாலும் நான் மீண்டும்! மீண்டும்! சட்டத்தை மீறித்தான் செயல்படுவேன்! என்னை யார்? என்ன செய்யமுடியும்? என்ற மமதை! பொது ஜனம்; இதனால் தான் இது லோக்பால் மசோதாவில பிரதமரை சேர்க்கக்கூடாதுன்னு ரொம்ப அக்கறையா சொல்லுது. இந்த மாதிரி மமதையாக நடக்க அந்த மசோதாஅனுமதிக்காது.பொது ஜனம்; அப்ப ஏனைய மாநிலங்கள் எல்லாம் பொதுப்பாடத்திட்டத்தை, ஒரே மாதிரியா அமல் படுத்தியிருக்குதே! அவங்க எல்லாம் முட்டாள்களா? இது ஒண்டிதான் புத்திசாலியா?பொது ஜனம்; ஏதோ! நீதிமன்றத்தால நல்லா வாங்கி கட்டிக்கப்போகுதுன்னு நினைக்கிறேன்! பொது ஜனம்; அப்ப இன்னும் மிகப்பெரிய போராட்டம் இருக்குதுன்னு சொல்லு! தமிழக மக்கள் இன்னும் அதிகமாக அவதிப்படணும்!பொது ஜனம்; இந்த சட்டம் அமலுக்கு வரும்பொழுது இது இந்த மாதிரியெல்லாம் எதிர்க்கட்சியாக இருந்த பொழுது ஒரு முறைக் கூட சொல்ல்லியே! இப்ப எதுக்கு இது மாதிரி சொல்லுது! பொது ஜனம்; அப்பவேதான் தனியார் பள்ளிகள் வழக்குப் போட்டாங்களே! அப்பவே உச்சநீதிமன்றத்திலே தள்ளுபடி ஆயிடுச்சே! இது சொல்ற அத்தனையும் தனியார் பள்ளிகளின் கோரிக்கைகளைத்தான் தன்னுடைய அராஜக அரசின் கொள்கையாக கோர்ட்டுல வெளிப்படுத்துது. கோர்ட்டு இதை ஒருபோதும் அனுமதிக்க கூடாது. பொது ஜனம்; முதலில் உச்ச நீதிமன்றமே இதற்கான நிபுணர் குழுவின் உறுப்பினர்களை நடுநிலையாக நியமிச்சிருக்கணும்! சமச்சீர் கல்வியை எதிர்க்கிற அதிமுக அரசிடமே, நிபுணர் அறிக்கை தயாரிப்பதற்கான அனுமதியை கொடுத்து இருக்க கூடாது. 


பொது ஜனம்; நீதிமன்றமும் இவங்க! எந்த நிலையில் இருக்கிறாங்க! என்பதை தெரிஞ்சுக்கறதுக்காக இந்த வாய்ப்பை தெரிஞ்சே கொடுத்து இருக்கும்! இந்த அறிக்கையைப் பார்த்தாலே இதுங்க பவுசு தெரிஞ்சுடுமே!பொது ஜனம்; இந்த விஷயத்துல எல்லோரும் ஒன்று சேர்ந்து போராடணும் லேசுல விட்டுரக்கூடாது! நீதிமன்றம் இதன் ஒவ்வொரு விஷயத்தையும் ஆராய்ந்து பார்க்கணும்! இதை உருவாக்கிய  கல்வியாளர்களும் கோர்ட்டில் வாதாடணும்! அப்பத்தான் மக்களுக்கான நீதி கிடைக்கும்! இந்த அரசின் அராஜகப் போக்குக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடியும்!பொது ஜனம்; இனி மக்கள் புரட்சி தான்! பார்த்துக்கலாம்! எவ்வளவு தூரம் போகுதோ போகட்டுமே!  எங்கே போயிடப்போகுது!..............!!!!

Tuesday, 28 June, 2011

பிரதமர், முதல்வர்கள் எல்லாம் எந்திரன்களா? -மாநில முதல்வரே ஊழல் பண்ணும் பொழுது! பிரதமர் மட்டும் எப்படி ஊழல் பண்ணாம இருப்பார்.....!


நிழல் அரசாங்கம் உருவாக வழிவகுத்து விடும்:
லோக்பால் விசாரணை வரம்புக்குள் பிரதமரை சேர்க்கக்கூடாது
ஜெயலலிதா பேட்டி


சென்னை, ஜுன்.28-

லோக்பால் அமைப்பின் விசாரணை வரம்புக்குள் பிரதமரை சேர்க்கக்கூடாது, அப்படி சேர்ப்பது, நிழல் அரசாங்கம் உருவாக வழிவகுத்து விடும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறினார்.

லோக்பால்

முதல்-அமைச்சர் ஜெயலலிதா, ஒரு தனியார் ஆங்கில சேனலுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அதில் கேட்கப்பட்ட கேள்விகளும், அவற்றுக்கு ஜெயலலிதா அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- லோக்பால் அமைப்பின் விசாரணை வரம்புக்குள் பிரதமரையும் சேர்க்க வேண்டும் என்பது பற்றி சர்ச்சை நிலவுகிறதே? இதுபற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:- லோக்பால் அமைப்பின் விசாரணை வரம்புக்குள் பிரதமரை சேர்க்கக்கூடாது என்பதுதான் எனது கருத்து. பிரதமர் ஏற்கனவே ஊழல் தடுப்பு சட்டத்துக்கு உட்பட்டவர்தான். அவரை சி.பி.ஐ. விசாரிக்க முடியும்.

இந்த நிலையில், லோக்பால் விசாரணை வரம்புக்குள் அவரை சேர்த்தால், தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லி, தன்னை தற்காத்துக்கொள்வதிலேயே அவர் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டி இருக்கும். அவரால் சிறப்பாக செயல்பட முடியாது. இதனால், பிரதமரின் அதிகாரம் வலுவிழந்து விடும்.

வெளிநாடுகளால் ஆபத்து

அரசாங்கத்துக்கு நிகராக, நிழல் அரசாங்கம் உருவாக இது வழிவகுத்து விடும். பிரதமர் மீதான குற்றச்சாட்டு பொய் என்று நிரூபிக்கப்பட்டால் கூட, அவரது பதவியின் அதிகாரம் வலுவிழந்து விடும். மேலும், இந்த மசோதாவை பயன்படுத்தி, வெளிநாடுகள் இந்தியாவை சீர்குலைக்கும் ஆபத்து உள்ளது.

இந்த விஷயத்தில், நான் தனிநபரை ஆதரிக்கும் நோக்கத்தில் இக்கருத்தை சொல்லவில்லை. பிரதமர் பதவி என்ற அமைப்புக்கு ஆதரவாகவே சொல்கிறேன். பிரதமராக இருப்பவர், முழு அதிகாரத்துடன் இல்லாவிட்டால், அவரால் சிறப்பாக செயல்பட முடியாது. பிரதமரின் அதிகாரத்தை எதுவும் வலுவிழக்க செய்துவிடக்கூடாது.

இருப்பினும், இந்த விவகாரத்தில், இறுதியான லோக்பால் வரைவு மசோதா, பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, தமிழக அரசு தனது கருத்தை தெரிவிக்கும்.

காங்கிரசுக்கு ஆதரவு

கேள்வி:- காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தருவதாக கடந்த ஆண்டு அறிவித்தீர்களே?

பதில்:- அது அந்த சமயத்துக்கு மட்டும் தெரிவித்த ஆதரவு. மத்திய அரசில் இருந்து தி.மு.க. வெளியேறினால், மத்திய அரசுக்கு ஆதரவு தருவதாக சொன்னேன். கூட்டணி நிர்ப்பந்தம் காரணமாக, அப்போதைய தொலைத்தொடர்புத்துறை மந்திரி ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயங்குகிறதோ என்ற எண்ணத்தின் அடிப்படையில், காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவித்தேன். ஆனால் அந்த ஆதரவை காங்கிரஸ் ஏற்கவில்லை. தேர்தல் தோல்விக்கு பிறகுகூட, தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

சோனியாவுடன் சந்திப்பு

கேள்வி:- காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்திப்பீர்களா?

பதில்:- சோனியாவை சந்திக்கும் திட்டம் ஏதும் இல்லை. காங்கிரஸ் கட்சி இன்னும் தி.மு.க.வுடன் கூட்டணியில் இருக்கும்போது, அப்படி செய்வது முறையல்ல.

கேள்வி:- காங்கிரசுடன் இணைந்து செயல்பட வாய்ப்புள்ளதா? ராகுல் காந்தி, பிரதமர் ஆக வாய்ப்புள்ளதா?

பதில்:- அந்த சூழ்நிலை வரும்போது, அதுபற்றி சொல்கிறேன். மாநில நலனுக்காக மத்திய அரசுடன் இணைந்து செயல்பட விரும்புகிறேன்.

தேசிய அரசியல்

கேள்வி:- தேசிய அரசியலில் ஈடுபடுவீர்களா?

பதில்:- அத்தகைய விருப்பம் ஏதும் இல்லை. ஆனால் எந்த பொறுப்பு கொடுக்கப்பட்டாலும் அதில் திறம்பட செயல்படுவேன். வாழ்க்கையை அது வரும் வகையிலேயே ஏற்றுக்கொள்வேன். அரசியலில் நுழைய வேண்டும் என்றோ, தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஆக வேண்டும் என்றோ நான் ஒருபோதும் எண்ணியது இல்லை. ஆனால் எப்படியோ ஆகிவிட்டேன்.

கேள்வி:- உங்கள் லட்சியம் என்ன?

பதில்:- இந்தியா, `சூப்பர் பவர்' ஆக வேண்டும் என்பதுதான் எனது லட்சியம். அதற்கான செயல்திறன் நமக்கு உள்ளது. அதற்காக, வலிமையான, தேசபக்தி கொண்ட தலைவர் நமக்கு வேண்டும்.

இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.

..........தினத்தந்தி 27.06.2011
**********************
பொது ஜனம்; என்னய்யா ஜெயலலிதா தன்னை முன்னிருத்தி எஸ்கேப் ஆவருதுக்காக பிரதமரை சேர்க்க கூடாதுன்னு சொல்லுதே! 


பொது ஜனம்; இது எப்படியெல்லாம் சட்டத்தை ஏமாத்துது! எத்தனை தடவை உய்ர்நீதிமன்றத்தையும், உச்சநீதிமன்றத்தையும் ஏமாத்துச்சு!. என்னைக்காவது சட்டத்துக்குட்பட்டு நடக்கணும்னு நினைச்சு இருக்குதா? இல்லை நீதிமன்றத்துக்கு தவறாம ஆஜராகனும்னு நினைத்து  இருக்குதா? கர்நாடகாவில ஒரு தடவையாவது ஆஜராகி இருக்குதா?பொது ஜனம்; ஆமாம், இது பதவியில இருந்தா பதவியை வைச்சு கேசுல இருந்து எப்படி  தப்பிப்பது என்பதை பற்றியே யோசிக்கும். பதவியில இல்லைன்னா கொடைக்கானல் பங்களாவில ரெஸ்ட் எடுத்துகிட்டு கோர்ட்டுக்கு வாய்தாவை எப்படியெல்லாம் இழுத்தடித்து வாங்குவது என்பதை பற்றி யோசிக்கும்! இதைத்தானே இவ்வளவு நாளும் பண்ணிகிட்டு வருது.  
பொது ஜனம்; கரெக்ட்! இதுவே இந்தளவுக்கு! பண்ணும்பொழுது, பிரதமரின் கீழே இருக்கும் சிபிஐ எப்படி? பிரதமரை சுதந்திரமா விசாரிக்கும். ரொம்ப புத்திசாலித்தனமா  ஐடியா சொல்றதா நினைச்சு தன்னுடைய பதவிக்கு வரும் ஆபத்தை தவிர்க்க பார்க்குது. இந்த டகால்டி வேலை எல்லாம் இங்கே ஒத்துவராது.பொது ஜனம்; ஆமாய்யா! முன்னால் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் ரிட்டயர் ஆனதும் எலக்சன்ல காங்கிரஸ் சார்பில காந்திநகர்ல நின்னு தோத்தாரு! அப்புறம் என்ன? நேர்மை! 

பொது ஜனம்; ஆமாய்யா! அவர் தேர்தல் ஆணையரா பொறுப்புல இருந்தப்ப தேர்தல் விதிமுறை மீறல்களுக்காக கட்சிகள் மேல் எடுத்த நடவடிக்கை எல்லாம் பாராபட்சமானதா  தான் எடுத்துக்கணும்!.பொது ஜனம்; ஆமா! இப்பக்கூட முன்னால் தேர்தல் ஆணையர் எம.எஸ் கில் காங்கிரஸ் அமைச்சரவையில விளையாட்டுத்துறை அமைச்சரா இருக்காரு! இவங்க எல்லாம் தன்னாட்சி அமைப்பில வேலை பார்த்தவங்க தான்! அப்ப வேலை பார்க்கும்போதே காங்கிரஸ் ஆதரவாத்தான் வேலை பார்த்து இருப்பாங்க! அதை வேலையை விட்டதும் கன்பார்ம் பண்ணிட்டாங்க! என்ன சரியா?
பொது ஜனம்; தமிழக தேர்தல் ஆணையரா இருந்த மலைச்சாமி. ஜெயலலிதாக் கூட முட்டி மோதிக்கிட்டும் இருந்தாரு! அப்புறம் அதிமுக எம்.பி யா இருக்கலையா! இவங்கெல்லாம் எப்படி ஆட்சியாளருக்கு எதிரா செயல்படுவாங்க?


பொது ஜனம்; இன்னும் சுப்ரீம் கோர்ட் நீதிபதி தான் கட்சியில சேரல! இன்னும் கூடிய சீக்கிரம் அவங்களும் கட்சியில சேர்ந்துருவாங்க! 

பொது ஜனம்;பதவி வேணும்னா போய் கட்சியில சேர்ந்துக்குங்க! இந்த மாதிரி மக்களுக்கான அரசின் நடுநிலையான பொறுப்புக்கு வராதீங்க! இதுல ஒரு கால் அதுல ஒரு கால்னு இருக்காதீங்கய்யா!ஏதாவது ஒன்னுத்துக்கு ஆசைபடுங்கய்யா!


பொது ஜனம்; சிபிஐ இயக்குநரை நியமிப்பது பிரதமரின் அலுவலகம்.  அது தன்னாட்சி பெற்ற அலுவலகம்  தான்! ஆனால் அதன்  இயக்குநரை நியமிப்பது யார்?  பிதரமர் அலுவலகம் தானே! அப்புறம் எப்படி அவரே பிரதமரை விசாரிப்பார். சும்மா ஒப்புக்கு வேணுன்னா விசாரிப்பார். 

பொது ஜனம்; யோவ்! பிரதமரா? இருந்தா என்ன? முதலமைச்சரா இருந்தா என்ன? உச்சநீதிமன்ற நீதிபதியா இருந்தா என்ன? தேர்தல் ஆணையரா? இருந்தா என்ன? சிபிஐ இயக்குநரா இருந்தா என்ன? எல்லோருமே மனிதர்கள் தான் இயந்திரங்கள் அல்ல. இயந்திர மனிதர்கள் அல்ல. 


பொது ஜனம்; ஆமாம்! இயந்திரங்கள் என்றால் எல்லாம் ஒரே மாதிரியான சரியான புரோகிராம் பண்ணி ஓரே சீராக இயங்கும்! ஆனால், இந்த மனதர்கள், அவரவர் எண்ணத்திற்கேற்ப, அரசியல் சூழ்நிலைக்கேற்ப செயல்படுபவர்கள், ஆட்சி, கட்சி செல்வாக்கு, பதவி என்பவைகள் இவர்களின் செயல்பாடுகளை நிர்ணயிக்கின்றன. ஆகையால் தவறுவது நிச்சயம்! 100 சதவீதம் நிச்சயம்! இவர்களின் தவறுகளினால் மக்கள் பாதிக்கப்படக்கூடாது! அதற்குத் தான் இந்த லோக்பால் மசோதா!


பொது ஜனம்; அந்நிய நாடுகளிடம் வலுவிழந்துவிடும் என்று ஜெயலலிதா சொல்லியிருக்குதே! முழு அதிகாரத்தோட செயல்படமுடியாதுன்னு சொல்லியிருக்குதேய்யா!


பொது ஜனம்; எப்பா! என்னா அக்கறை! இங்கே பிள்ளைங்களோட கல்வியை குப்பையில போட்டு, தமிழக மாணவர்கள் திக்கற்று நிற்கிற மிக உன்னதமான காரியத்தை, முழு அதிகாரத்தோடு பண்ணி, இந்திய மாநிலங்கள் மட்டுமல்லாமல்,  உலக நாடுகளே காரிமுழியிற வேலையை பண்ணிட்டு, அக்கறை படறதப் பார்! இதுக்குப் பேர் தான் முதலைக்கண்ணீர்.! 


பொது ஜனம்; மக்கள் என்ன படிக்கணும்னு முடிவு பன்றது கூட நான் தான் முடிவு பண்ணுவேன்! என்று மிக மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்திய ஜெயலலிதாவுக்கு இதைப்பற்றிக் கூற என்ன யோக்கியதை இருக்குது!


பொது ஜனம்;அந்நிய நாடுகளிடம் வலு இழக்கட்டும்! வலு இழந்துடும்னு  பயம் இருக்கணும்யா! அதுக்குத்தான்யா லோக்பால்! படிக்கலைன்னா பரிட்சைல பெயில் ஆயிடுவே!  என்ற பயமிருந்தா படி! பாஸ் ஆவு! இல்லைன்னா பெயில் தான் ஆவனும்! பெயில் ஆகி தண்டனையை அனுபவி! மீண்டும் நல்லா படி!  பாஸ் ஆகு! மக்கள் ஆகிய நாங்கள் தானேய்யா உங்களை பிரதமராக்கினோம். எங்களுக்கு ஒரு நீதி உனக்கு ஒரு நீதியா!? நல்லா போங்கா இருக்குதே!


பொது ஜனம்; ஆமாய்யா! திருடினா போலீஸ் பிடிக்கும், தண்டனை என்ற பயம் இருந்தா தான் திருட்டு நடக்காம இருக்கும்! ஒரளவுக்காவது குறையும்! இல்லைன்னா கொள்ளைக்காரி ஆட்சிடா! யாரு வேணுன்னா கொள்ளயடிக்களாம்னு கிளம்பிடுவாங்க! கொலை பண்ண கிளம்பிடுவானுங்க! இப்ப அது தானே நாட்டில நடந்துகிட்டு இருக்குது! ஒரே மாசத்துல 137 கொலை தமிழ்நாட்டுல.....என்ன நான்ஞ் சொல்றது!

பொது ஜனம்; போலீசே திருடினா! லஞ்சம் வாங்கினா? கொலை, கொள்ளை செஞ்சா?

பொது ஜனம்;அவங்களை தண்டிக்க இன்னொரு பெரிய போலீஸ் பிடிக்கணும்! (விஜிலன்ஸ்) இப்படித்தான் உருவாக்கி கட்டுப்படுத்தணும்! அவங்களும் (விஜிலன்ஸ்) பண்ணா அவங்களுக்கும் மேல...அப்படியே வுட்டுக்கணே போகணும்! வேற வழி!


பொது ஜனம்; ஆமாய்யா! இந்த பொம்பளை எதுக்கோ திருக்குசு வேலை பன்றதுக்காக இந்த ஐடியாவை கொடுக்குதுய்யா! கர்நாடகாவில இழு இழு இழுத்துகிட்டு இருக்குது. போதாக்குறைக்கு பிரண்டு ச்சிகலாவுக்கும் சேர்த்து 15 வருஷமா இழுக்குது! இது கொடுக்குற ஐடியா! இதை காப்பாத்திக்கிறதுக்குத்தான்! இது ஏதோ புரளி வித்தைக் காட்டுது! ஏமாந்திரப்புடாது!


பொது ஜனம்; ஆமாய்யா! முன்னால் உச்சநீதிமன்ற நீதிபதிக் கூட, சொத்துக் கணக்கை அனைத்து நீதிபதிகளும் வெளியிடணும்கிறதுக்கு, இப்படித்தான் நான் வெளியிடமாட்டேன்னு ஒட்டாரம்பண்ணாரு! நீதிபதிகள் தகலறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் வரமாட்டாங்கன்னாரு! நாங்கள் எல்லாம்  விசாரணைக்கு அப்பாற்பட்டவங்க! அப்புறம் மக்கள் எதிர்த்த உடனே அடங்கிப்போயிட்டாரு! 


பொது ஜனம்; இவங்களே எப்படி? ஆட்டமேட்டிக்கா இவங்களை உயர்த்திக்கிறாங்க! இவங்களுக்கு இந்த உயர்வை கொடுத்தது மக்கள்! மத்தபடி இவங்களும் மக்களில் ஒருவர் தானே! மக்களின் சட்டதிட்டங்கள் அனைவருக்கும் ஒன்று தான்! இது தான் மக்களாட்சி தத்துவம்!

பொது ஜனம்; ஆமாம்! இந்தியாவில் குடியரசுத்தலைவர் பெயரால், அதாவது இந்தியாவின் முதல் குடிமகன் பெயரால் நடைபெறும் ஆட்சி தானே!

பொது ஜனம்; அப்படின்னா வீம்புக்குன்னா பிரதமரை இழுப்பாங்களேய்யா! 

பொது ஜனம்; இப்ப மட்டும் இழுக்கலையா! அதுக்கு வரையைரை வைக்கணுமே தவிர லோக்பாலுக்குள்ள வராம பன்றது நல்லதல்ல! 


பொது ஜனம்;அமாய்யா! ஆதாரம் காட்டி கொண்டுவரணும். அதுக்கு பல நபர்கள் கொண்ட மக்கள் குழு அமைக்கணும் அந்த குழுவில அனைத்து தரப்பினரும் இடம்பெறணும். அந்தக் குழுவில் ஆதாரங்களை பரிசீலனை செய்தபின் பிரதமர் விசாரணக்குட்படுத்தப்படுவார் என்ற விதியை வேணுன்னா ஏற்படுத்தலாம்.


பொது ஜனம்; யோவ்! லோக்பால் குழுவே அந்த மாதிரி அமைப்புத் தானே!

பொது ஜனம்; இதற்கு மட்டும் மேல் குழு என்ற சிறப்புக் குழு வைத்து பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளலாம். இல்லை அந்தக் குழுவிலேயே பிரதமரை விசாரிக்கும் உயர்மட்டக் குழு என்று ஒரு பிரிவை ஏற்படுத்தலாம்.


பொது ஜனம்; அப்ப பிரதமர் ஒன்றும் எந்திரன்! அல்ல! அவரையும் இதுல கண்டிப்பா கொண்டுவரனும்கற!

பொது ஜனம்; பிரதமர் வந்துட்டா! ..........முதல்வரும் இதுல வந்துருமில்லே!

Sunday, 26 June, 2011

மம்தா மக்களை மதிக்குது.....ஜெயலலிதா மக்களை மிதிக்குது...
மேற்கு வங்காளத்தில் சமையல் கியாஸ் விலை ரூ.16 குறைந்தது
செஸ் வரியை வாபஸ் பெற்றார், மம்தா

கொல்கத்தா, ஜுன்.26-
மேற்கு வங்காளத்தில் சமையல் கியாஸ் மீதான செஸ் வரியை மம்தா பானர்ஜி வாபஸ் பெற்றுள்ளதால், அங்கு கியாஸ் விலை சிலிண்டருக்கு ரூ.16 குறைந்தது.

ஆதரிக்க மாட்டோம்

மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

டீசல், மண்எண்ணெய், சமையல் கியாஸ் ஆகியவற்றின் விலை, கணிசமாக உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த விலை உயர்வு எனக்கு பெரிதும் வேதனை அளிக்கிறது. இதற்கு என்னுடைய எதிர்ப்பை ஏற்கனவே தெரிவித்து விட்டேன். இதுபோன்ற நடவடிக்கையை எனது கட்சி ஒருபோதும் ஆதரிக்காது.

வரி வாபஸ்

இந்த விலை உயர்வை மத்திய அரசு அறிவித்தவுடன், எனது அரசின் நிதி மந்திரி அமித் மித்ராவுடன் ஆலோசனை நடத்தினேன். அதில், மேற்கு வங்காளத்தில் சமையல் கியாஸ் சிலிண்டர் மீது வசூலிக்கப்பட்டு வரும் செஸ் வரி, 16 ரூபாயை வாபஸ் பெறுவது என்று முடிவு செய்தேன். இந்த முடிவு, உடனடியாக அமலுக்கு வருகிறது. அந்த செஸ் வரியை எனது அரசு வசூலிக்காது.

எனவே, மேற்கு வங்காளத்தில் கியாஸ் விலை உயர்வு, 50 ரூபாய்க்கு பதிலாக 34 ரூபாயாக இருக்கும். இதனால், மாநில மக்களுக்கு சிலிண்டருக்கு 16 ரூபாய் மிச்சம் ஆகிறது. இதன்மூலம் அவர்களின் சுமை குறையும் என்று நம்புகிறேன். இதுதொடர்பான அறிவிக்கை, 27-ந் தேதி வெளியிடப்படும்.

செஸ் வரி வாபஸ் மூலம், அரசுக்கு ரூ.75 கோடி இழப்பு ஏற்படும். இருப்பினும், வேறு வருவாய் ஆதாரங்கள் மூலம் இந்த இழப்பை சரிக்கட்டி விடுவோம்.

கம்ïயூனிஸ்டுகள் மீது தாக்கு

மேற்கு வங்காளத்தில், கம்ïனிஸ்டுகள் ஆட்சியில் இருந்தபோது, சமையல் கியாஸ் மீதான செஸ் வரியை குறைக்க சொன்னபோது, அவர்கள் குறைக்கவில்லை. அவர்கள் இதை வைத்து அரசியல் செய்யவே விரும்பினர். ஆக்கப்பூர்வமாக எதுவும் செய்யவில்லை. ஆனால் எங்களால் அப்படி இருக்க முடியாது.
இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.

...தினத்தந்தி 26.06.2011
*************
பொது ஜனம்; ஆமாய்யா மேற்கு வங்க முதல்வர் மம்தா மக்கள் வேதனையை புரிஞ்சிகிட்டு தன்னுடைய மாநில வரியைக் குறைச்சுகிட்டு கேஸ் விலையை குறைச்சு ஒரளவுக்கு மக்கள் வேதனையை தற்காலிகமா போக்கியிருக்குது. இங்கேயும் ஜெயலலிதான்னு ஒன்னு இருக்குது, குறைக்கவே மாட்டேன்னு ஒரேயடியா குரைக்குது. பொது ஜனம்; ஆனா அது மட்டும் மக்கள் வரிப்பணத்தை பாழாக்குது! இது வீணாக்குற பணத்துலை இந்த கேஸ் விலைக்கான, டீசல், மண்ணெண்ணெய்க்கான வரியைக் குறைப்பதுஅவ்வளவு கடினமான விஷயமா?

பொது ஜனம்; அதானே! முதல்ல மக்களுக்கு வேண்டியதை செய்! அப்பறமா இதோட அக்கப்போறை வைச்சுக்க வேண்டியது தானே!


பொது ஜனம்; இந்த நல்லெண்ணம் இருந்தா எப்படிய்யா அக்கப்போர் பண்ணமுடியும்? அதுக்கு எங்க நேரம் இருக்குது.? இது மக்களை துன்பப்படுத்தி வேடிக்கை பார்க்கற கும்பலை சேர்ந்தது.பொது ஜனம்; இது என்னய்யா விலை ஏத்துனா ஒருபா, இரண்டு ரூபான்னு ஏத்த மாட்டாங்களா? 50,100 ன்னுதான் விலை ஏத்துவாங்களா?


பொது ஜனம்; ஒருபா, இரண்டு ரூபா எல்லாம் செல்லாத நோட்டா ஆக்கிட்டாங்களா! ஆனா தொழிலாளர்களோட வருமானம் மட்டும் 5 வருஷம் பத்து வருஷம்னு அப்படியே ஒரே மாதிரி இருக்கும். இன்னும் பல பேர் மாத வருமானம் ரூபா 600 லதான் காலத்தை ஒட்டறாங்க! 

பொது ஜனம்; அவங்க யாரும் வெளியில வந்து போராட மாட்டாங்க! போராடுறவுங்க இப்ப 40000, 50000 சம்பளக்காரங்க மட்டும் தான்!


பொது ஜனம்; இந்த அன்றாடக் காய்ச்சிகளுக்காவது மாநில வரியைக்குறைக்கணும்!.


பொது ஜனம்; இதுக்கு முன்னாடி கலைஞர் கூட இரண்டு முறை குறைத்து இருக்காரேய்யா! இப்ப இவ்வளவு விலை உயர்வு கேஸ் சிலிண்டருக்கு உயர்த்தியிருக்காங்க! அதுவும் பலருக்கு இலவச கேஸ் அடுப்பு வேற கொடுத்து இருக்காங்க! அவங்களுக்கு மண்ணெண்ணையையும் கேன்சல் ஆயிட்டு இருக்கும்! இதெல்லாம் இதுக்கு தெரியுமா இல்லையா!?


பொது ஜனம்; இது சமையலறைக்குத்தான் போகலை, ஏழைங்க வீட்டுல எப்படி? அடுப்பெறியும் என்பது கூடவா தெரியாது!. 


பொது ஜனம்; இலவச அரிசி கொடுத்துட்டு பொங்கி துன்றதுக்கான கேஸ் சிலிண்டரை வாங்கிறதுக்கு கால் வாசி வருமானத்தை காலி பன்ற மாதிரி விலை இருந்தா எப்படிய்யா சமாளிப்பாங்க!? 


பொது ஜனம்; தாலிக்கு தங்கம் தரும்பொழுது வருமான வரம்பை ரூபாய் 2000 ம்னு குறிப்பிட்டு ஏதோ வேண்டா வெறுப்பா கொடுத்துட்டு இருக்குதே! அப்ப  இதுக்கு தெரியவேணாமா?  மக்களோட வருமானம் என்னென்னு!?


பொது ஜனம்; அப்ப எப்படி? ஆடு மாடெல்லாம் தரப்போகுது!?  லேப்டாப், பேன், மிக்சி, கிரைண்டர், மினரல் வாட்டர் வேற தறேன்னு சொல்லியிருக்குது! எப்படி கொடுக்கும்!? 

பொது ஜனம்; அதுல தானேய்யா இதுங்களுக்கு ஒரு "கட்டிங்" வரும்! இதுல என்னத்தை வரும்?, அரசாங்கத்துக்கு வேற வருவாய் இழப்பு!


பொது ஜனம்; பணம் ஒரு பொருட்டே இல்லைன்னு உயர்நீதிமன்றத்தில சம்ச்சீர் கல்விப் பாடப்புத்தகங்களை குப்பையில போடறத்துக்கு சொல்லுச்சே! ஜெயலலிதா அரசு! ஏன்? இந்த மதிப்புக் கூட்டு வரியை குறைச்சு பணம் ஒரு பொருட்டே இல்லைன்னு நிருபிக்கலாமே!


பொது ஜனம்; அது தன்னோடத் திருட்டுகோட்டுத் தனத்துக்காக கோர்ட்டுல தெரிவிச்சது.  அது என்னைக்கு பேசின மாதிரி நடந்து இருக்குது.!

பொது ஜனம்; முதல்ல பசங்க படிக்கிற ஸ்கூலுக்கு மினரல் வாட்டரை சப்ளை பண்ண சொல்லு! இப்ப இருக்கிற தண்ணீர் பற்றாக்குறைக்கு எல்லோருக்குமே  வாட்டர் சப்ளை பண்ணனும்!. அப்புறமா மினரல் வாட்டர் சப்ளை பண்ணலாம்! 


பொது ஜனம்;அதெல்லாம் இது பண்ணுமா? எனபது சந்தேகமே! சும்மா கண்துடைப்புக்கு அதிமுக ஆளுங்களுக்கு தந்துவிட்டு மத்தவங்களுக்கு டாட்டா காட்டிடும்!


பொது ஜனம்; மத்த மாநிலங்களை பாத்தாவது இது திருந்தாதா? 


பொது ஜனம்; மேற்கு வங்க மம்தா பானர்ஜி மக்களை மதிக்குது அதனால தான் ஒவ்வொரு அரசு அலுவலகத்துக்கும் நடந்து சென்று ஆய்வு நடத்துது. பந்தா பண்ணாம இருக்குது!.  இது (ஜெயலலிதா) மக்களை காலில போட்டு மிதிக்குது. வீம்புக்குன்னா மக்கள் நலத்திட்டங்களை முடக்குது.   இதுக்கும் அதுக்கும் உள்ள வித்தியாசம் அது தான். பொது ஜனம்; இது எதிர்க்கட்சியா இருந்து என்ன? பண்ணுச்சு கொடைக்கானலிலே ரெஸ்ட் எடுத்துகிட்டு இருந்தது.  அது பன்றதை தான் பண்ணிகிட்டு இருக்கும்!

Saturday, 25 June, 2011

ஏழை மக்களின் உயிர்களோடு விளையாடுவது "ஜெயலலிதாவின் சூப்பர் ஸ்பெஷாலிட்டி"
சேலத்தில் 3 மாதமாக சிகிச்சை பெற்று வந்த
சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி நோயாளிகள் `திடீர்' வெளியேற்றம்
மூடப்படுவதாக வதந்தி பரவியதால் பரபரப்புசேலம்,ஜுன்.25-

சேலத்தில் 3 மாதமாக சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியில் இருந்து சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் திடீரென வெளியேற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி

சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருச்சி, விழுப்புரம் உள்பட 8 மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.145 கோடி செலவில் சேலத்தில் `சூப்பர் ஸ்பெஷாலிட்டி' ஆஸ்பத்திரி கொண்டுவரப்பட்டது. மத்திய அரசு நிதி ரூ.120 கோடி, மாநில அரசு ரூ.25 கோடி பங்களிப்பில் கட்டப்பட்டது.

இந்த ஆஸ்பத்திரியின் நோக்கமே தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு நிகராக நவீன சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதே. ஆஸ்பத்திரி கடந்த ஆண்டு(2010) ஆகஸ்ட் 20-ந் தேதி தொடங்கி வைக்கப்பட்டாலும் இன்னும் கட்டிடப்பணியே முழுமை பெறவில்லை. மேலும் நவீன சிகிச்சைக்கான பல உபகரண கருவிகளும் பொருத்தப்படவில்லை. ஆஸ்பத்திரி பணியாளர்கள், டாக்டர்கள் நியமனம் போன்றவையும் முழுமை அடையவில்லை

பொதுப்பணித்துறை வசம்

மத்திய அரசின் பொறியாளர்கள் மேற்பார்வையில் கட்டப்பட்டு வரும் இந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி முதலில் பொதுப்பணித்துறை வசம் ஒப்படைக்கப்பட வேண்டும். அதன் பின்னர்தான் சேலம் அரசு ஆஸ்பத்திரி நிர்வாகம் வசம் ஒப்படைக்கப்படும். இவை இரண்டும் இதுவரை நடக்கவில்லை.

இருந்தபோதிலும் கடந்த 3 மாதமாக சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியின் விபத்து மற்றும் அறுவை சிகிச்சை பிரிவு மட்டும் ஒரு மாதிரிக்காக இயக்கப்பட்டு வந்தது. 16 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் பலர் `டிஸ்சார்ஜ்' ஆகி வீடுகளுக்கு திரும்பினர்.

திடீர் வெளியேற்றம்

8 நோயாளிகள் மட்டும் விபத்து மற்றும் அறுவை சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு அவர்கள் உடனடியாக அங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியில் நோயாளிகள் யாரும் அனுமதிக்கப்பட வில்லை.

இதனால், சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியை கைகழுவி விட திட்டமிட்டிருப்பதாக வதந்தி பரவியது. இந்த வதந்தியை ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்த நோயாளிகளின் உறவினர்கள் சிலர் பரப்பி இருப்பதாக கூறப்படுகிறது.

இது குறித்து சேலம் அரசு ஆஸ்பத்திரியின் மருத்துவ அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

காரணம் என்ன?

சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியின் பணிகள் இன்னும் முழுமைபெறவில்லை. நவீன கருவிகளும் இன்னும் பொருத்தப்படவில்லை. ஆனாலும் விபத்து மற்றும் அறுவை சிகிச்சை பிரிவை மட்டும் ஒரு டிரையலுக்காக பயன்படுத்தப்பட்டு வந்தது. அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் படிப்படியாக சிகிச்சை பெற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

அதே வேளையில் நோயாளிகள் பயன்படுத்திய கழிவறையில் தேக்கம் ஏற்பட்டு சுத்தமாக இல்லை. நோயாளிகளின் எண்ணிக்கையும் 4 பேருக்குள்ளாக இருந்ததால், அவர்களை அங்கிருந்து அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றம் செய்தோம். யாரோ தவறான தகவலை சொல்லி மக்களையும் நோயாளிகளையும் திசை திருப்ப முனைந்திருக்கிறார்கள்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

.....தினத்தந்தி 25.06.2011

*************

பொது ஜனம்; ஆட்டைக்கடிச்சி மனிசனைக்கடிச்சி இப்போ ஒட்டுமொத்தமா ஏழைகள் வாழ்வுக்காக கட்டப்பட்ட நவீன மருவத்துவமனையையும் இந்த பொம்பளை கையை வைக்க ஆரம்பிச்சிடுச்சி. இந்த மக்கள் விரோதத்துக்கு சரியான பதிலடி என்றால், இந்த சமூக விரோத ஆட்சிக்கு எதிராக அரசியல் சட்டப்பிரிவு 356 ஐ பயன்படுத்துவது தான்.

பொது ஜனம்; அப்படின்னா?

பொது ஜனம்; ஆட்சி கலைப்பு தான்! மக்கள் எப்படிப்போனாலும் பரவாயில்லை என்ற அதிமுக ஆட்சியை கலைப்பது தான் மக்களை பாதுகாக்கும் வழி! இந்த ஆட்சியின் கோரப்பிடியிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கு இதை விட்டால் வேறு வழியில்லை.

பொது ஜனம்; ஏழைகள் வசதி படைத்தவர்களுக்கு சமமாக பயன்பெறும் அனைத்து திட்டங்களையும் இந்த ஜெயலலிதா ஆட்சி தடை செய்கிறதே! மக்களின் உயிரோடு விளையாடுகின்ற அளவுக்கு வந்துவிட்டது. சமச்சீர் கல்வியில் ஆரம்பித்து, கலைஞர் காப்பீட்டு திட்டம் என தொடர்ந்து இது மாதிரியே பண்ணிக்கொண்டு வரும் இந்த ஆட்சியை கவர்னரிடம் மனு கொடுத்து கலைக்க சொல்வது தான் சிறந்தது. இந்த பிரிவை பயன்படுத்தமாட்டார்கள் என்பதால் தான் இந்த ஆட்சி மிக மோசமான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. நாட்டில் ஜனநாயக ஆட்சி நடைபெறுகிறதா? அல்லது சர்வாதிகார ஆட்சி நடைபெறுகிறதா? என்பதே தெரியவில்லை. எந்த மாநிலத்திலேயும் இது மாதிரி மக்கள் அத்தியாவசங்களை  யாரும் தடைசெயவது இல்லை. பொதுக்கல்வியையும் தனக்கு சாதகமாக தடை செய்து, ஒட்டு மொத்த மக்களின் பிள்ளைகளின் வாழ்க்கையோடு விளையாடும் அதிகாரத்தை எந்த அரசியலமைப்பு இந்த ஜெயலலிதாவிற்கு வழங்கியிருக்கிறது எனபது தெரியவில்லை?. நீதிமன்றங்கள் இதை எப்படி வேடிக்கை பார்க்கிறது?

பொது ஜனம்; இந்த விஷயத்தை உயிரைக் கொடுத்தேனும் தடுக்கவேணும். தனியாருக்கு தாரை வார்க்க நினைக்கும் இந்த நிலைக்கு அனைத்து தரப்பினரும் ஈடுபடவேண்டும். இதற்கும் அந்த பொம்பளை தேவையில்லாத காரணத்தை வைத்திருக்கும்.அத்தனையும் திருட்டுத்தன காரணங்கள் தான்.

பொது ஜனம்; மக்கள் பயன்பாட்டிற்காக இந்த மாதிரி மருத்துவமனைகள் எவராவது கட்டமாட்டார்களா? என்று இருந்த நிலையை மாற்றி கடந்த கலைஞர் அரசு கட்டியதை இந்த அரசு வேண்டுமென்றே முடக்குகிறது. இதையெல்லாம் அதிமுக  தேர்தல் அறிக்கையில் கூறவேயில்லை. இப்படி கூறியிருந்தால் மக்கள் அதிமுக வை முற்றிலும் புறக்கணித்து இருப்பார்கள்.

பொது ஜனம்; ஆமாய்யா! ஆட்சிக்கு வந்த 30 நாளில மொத்தம் 137 கொலைகள் நடந்திருக்கு! இது தான் இதுங்க ஆட்சிக்கு வந்து பண்ண சாதனை! மத்தவங்களுக்கு தினம் வேதனை!  எங்கு பார்! ஓரே கலவரம்! சாலை மறியல்! பெற்றோர்களின் குமுறல்! கல்வியின்றி திரியும் மாணவர்களின் பரிதாப நிலை! அத்தனையும் இந்த பொம்பளை வேடிக்கை பார்த்து சிரிச்சிகிட்டு இருக்குது! நிச்சயம்!  இந்த ஆட்சியை கலைத்தே தீரணும்!

பொது ஜனம்; ஆட்சிக்கு ஒரு மாதத்தில் 137 என்றால் ஒரு நாளைக்கு 5 கொலைகள் வீதம் நடைபெற்றிருக்கின்றன.

பொது ஜனம்; ஆமாய்யா! இதுல அதிக பட்சமா 11 கொலைகள் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்றுள்ளன. அடுத்து விழுப்புரம் மாவட்டத்தில் 11 கொலைகள்.  மொத்த பேரும் தங்க நகைகளை குறிவைத்தே வர்றாங்களே! கொள்ளையடிச்சு அப்படியே சேட்டுகிட்டே கொடுத்து, அப்படியே நகைக்கடைக்கு திருப்பி போயிடுது போல இருக்கே!


பொது ஜனம்; ஆமாய்யா! "அட்சய திருதியை" அன்னைக்கு நகை வாங்கி  வைச்சது கூட இந்த ஒரு மாசத்தில கொள்ளை போயிடுச்சிய்யா!

பொது ஜனம்; போற போக்குல பார்த்தா மக்கள் புரட்சி தான் வெடிக்கும் போல இருக்குது. எகிப்துல நடந்தது இந்த தமிழகத்துக்கு தேவைப்படுவதாக தெரிகிறது. அப்படித்தான் நடக்கவேண்டுமென்றால் அதை யார்? தடுக்க முடியும்?

பொது ஜனம்; இந்த மாதிரி மக்களின் வரிப்பணத்தை வீணாக்கிவிட்டு பெரிசா மத்திய அரசிடம் சண்டை போடுதே இந்த பொம்பளை! நாட்டுக்கு யார் நல்லது பண்ணா என்னய்யா! இது தான் பண்ணலை அடுத்தவங்க பன்றதையும் மரை கழண்ட மாதிரி இது எதுக்கு தடுக்குது!?

பொது ஜனம்; அதுதான் அந்த பொம்பளையோட "சூப்பர் ஸ்பெஷாலிட்டி"


வரியை குறைக்க சொல்ல தார்மீக உரிமை மத்திய அரசுக்கு இல்லை....பொதுமக்கள் வரியே வீணாக்க எனக்கு அதிக உரிமையுண்டு-ஜெயலலிதாடீசல், சமையல் கியாஸ், மண்எண்ணெய்
விலை உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும்
ஜெயலலிதா வலியுறுத்தல்

சென்னை, ஜுன்.25-

டீசல், சமையல் கியாஸ், மண்எண்ணெய் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று ஜெயலலிதா கூறினார்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கண்டிக்கத்தக்கது

மத்திய அரசு டீசலுக்கான விலையை லிட்டருக்கு 3 ரூபாயும், சமையல் எரிவாயுவின் விலையை சிலிண்டர் ஒன்றுக்கு 50 ரூபாயும் மற்றும் மண்எண்ணெய் விலையை லிட்டருக்கு 2 ரூபாயும் நள்ளிரவு முதல் உயர்த்தி உள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது ஆகும்.

பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கி விட்டதால், பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது உயர்த்தி வருகின்றன. பெட்ரோல் விலை ஏற்றம் இரு சக்கர வாகனங்கள் மற்றும் சீருந்துகள் (கார்) ஆகியவைகளைப் பயன்படுத்தும் நடுத்தர வர்க்க மக்களை பாதிக்கிறது.

ஆனால், டீசல் விலை உயர்வு, ஏழை, எளியோர் உட்பட அனைத்து தரப்பு மக்களையும் வெகுவாக பாதிக்கும். சரக்குகள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பெரும்பாலும் தரை வழியாக லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன. டீசல் விலை ஏற்றத்தினால் சரக்கு போக்குவரத்திற்கான கட்டணம் பல மடங்கு உயரும். இது, அனைத்து தரப்பு மக்களையும், குறிப்பாக, ஏழை, எளிய மக்களை வெகுவாக பாதித்து விடும்.

விலை உயரும்

விலைவாசி உயர்வினால் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த டீசல் விலை உயர்வினால் அனைத்துப் பொருட்கள் மற்றும் காய்கறிகளின் விலைகள் உயர்ந்து விடும். மக்களின் வருவாய் ஒரே அளவில் இருக்கும் நிலையில், இது போன்ற டீசல் விலை உயர்வால் ஏற்படும் விலைவாசி உயர்வை மக்களால் எப்படி எதிர் கொள்ள இயலும்?

மக்களால் தாங்க இயலாது

அனைத்து தரப்பு மக்களும் எரிபொருளாக பயன்படுத்தும் சமையல் எரிவாயுவும் சிலிண்டர் ஒன்றுக்கு 50 ரூபாய் வீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வளவு அதிகமான விலை உயர்வை மக்களால் தாங்க இயலாது.

ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் மண்எண்ணெய் விலையும் லிட்டருக்கு 2 ரூபாய் வீதம் உயர்த்தப்பட்டுள்ளது ஏற்றுக் கொள்ளவே முடியாத ஒன்றாகும். ஒட்டு மொத்த விலைவாசி உயர்வு உள்ள இந்த நிலையில், இந்த மண்எண்ணெய் விலை ஏற்றம் ஏழை, எளிய மக்களை மிகவும் வாட்டி வதைக்கும்.

திரும்ப பெற வேண்டும்

எனவே, டீசல், சமையல் எரிவாயு மற்றும் மண்எண்ணெய்க்கான விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று நான் வலியுறுத்த விரும்புகிறேன்.

டீசல் மீதான கலால் வரி 2 சதவீதம், கச்சா எண்ணெய் மீதான சுங்க வரி 5 சதவீதம் என சொற்ப அளவில் கலால் மற்றும் சுங்க வரி குறைக்கப்பட்டு, அதைப் போன்று மாநில அரசால் விதிக்கப்படும் மதிப்பு கூட்டு வரி குறைக்கப்பட வேண்டும் என மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.

மத்திய அரசுக்கு உரிமை இல்லை

மக்களுடன் நேரடித் தொடர்பு கொண்டு, மக்கள் வளர்ச்சிப் பணிகளுக்காக அதிகம் செலவிடுவது மாநில அரசு தான். மாநில அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது மதிப்பு கூட்டு வரி மட்டும் தான். எனவே, டீசல், சமையல் எரிவாயு மற்றும் மண்எண்ணெய் ஆகியவற்றின் விலையை மிக அதிகமாக உயர்த்தியுள்ள மத்திய அரசுக்கு, வரியைக் குறைக்கும்படி மாநில அரசுகளுக்கு அறிவுரை வழங்க எந்த தார்மீக உரிமையும் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

.....தினத்தந்தி 25.06.2011

*********************
பொது ஜனம்; டீசல் விலையையும், சமையல் கேஸ் விலையையும் உயர்த்தியது அநியாயம் தானேய்யா! ஆனா அதுக்கு இந்த பொம்பளை கொடுத்திருக்கிற அறிக்கை தான்ய்யா இன்னும் அதிகமான அநியாயமா இருக்குது!

பொது ஜனம்; என்ன? அப்படி அறிக்கை அநியாயமா விட்டுடுச்சு!

பொது ஜனம்; நீ மாநில அரசு வாட் வரியை குறைச்சு மக்களை காப்பாத்த வேண்டியது தானேய்யா? இதுக்கு முன்னாடி கலைஞர் அரசு வரியை குறைச்சு மக்களை காப்பாத்தலை....மத்திய அரசோட மல்லு கட்டிகிட்டா இருந்தாரு!

பொது ஜனம்:; அவங்க விலையை ஏத்துவாங்க? அதுக்காக ஜெயலலிதா இங்க வரியை குறைச்சு நஷ்டமடையனுமா? அந்த பொம்பளை  எவ்வளவு வரிப்பணத்து மேல அக்கறையிருந்து சொல்லியிருக்குது! அதை பாராட்டமாட்டேங்கற!


பொது ஜனம்; தூ.....ஏன் ? ஜெயலலிதா 216 கோடி ரூபா சமச்சீர் கல்வியை கிடப்பில போட்டு மக்கள் வரிப்பணைத்தை நாசமாக்கலியா?  இதற்கு தார்மீக உரிமையை எவன்? கொடுத்தது?

உச்சநீதிமன்றம் தீர்ப்பு சொல்லிய பிறகும், கோர்ட்டை அவமதித்து, பழைய பாடப்புத்தகத்தை அச்சடிப்பதை நிறுத்தாம இன்னும் பணத்தை கொடுத்து அச்சடித்து கொண்டிருக்கிறதே இது வீண் செலவு இல்லையா? இது மக்கள் பணம் இல்லையா?  இதன் தார்மீக உரிமையை எவன் கொடுத்தது?

பொது மக்களின் உயிரை காப்பாத்தறதுக்காக ஏழை மக்களுக்காக 145 கோடி ரூபா செலவில் கலைஞர் அரசால் கட்டப்பட்ட சேலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை, வேண்டுமென்றே பேஷன்டுகளை வெளியே துரத்தி மூடிடுச்சே!  இது அநியாயம் இல்லையா? இதற்கு அனுமதியை எவன் கொடுத்தது?

பொது ஜனம்; இதெல்லாம் மக்கள் வளர்ச்சிப் பணி என்று எந்த முண்டம் சொன்னது!?

பொது ஜனம்; இந்த முண்டம் மட்டும் தான் சொன்னது. இது அறிவாளி முண்டம்! அராஜக முண்டம்!

பொது ஜனம்; அதானே! 645 கோடி ரூபாவில கட்டின தலைமைச்செயலகத்தை மூடி, செம்மொழி நூலகத்தையும் குப்பையில போட்டுதே! திருப்பி பழைய தலைமைச்செயலகத்தையும் , சட்டமன்றத்தையும் மாத்துறதுக்கு செலவு பண்ணுச்சே! இந்த பணமெல்லாம் வீண் இல்லையா! இதெல்லாம் மக்கள் பணத்தை வீணடிக்கிற செயல் இல்லையா! இதற்கு எவன் தார்மீக உரிமையை இந்த பொம்பளைக்கு கொடுத்தது.?

மாநில அரசு மத்திய அரசின் மான்யத்தில் இயங்குகிறது என்பது இந்த பொம்பளைக்கு தெரியாதா?  இல்லை இதெல்லாம் மக்களுக்கு தெரியாது என்பது இந்த பொம்பளையோட நினைப்பா?

பொது ஜனம்; என்னப்பா ஏழை மக்களின் நிலைமையை எண்ணிப்பார்த்து, அவர்களுக்காகவே தன் வாழ்க்கையையும் முதலமைச்சர் சம்பளத்தையும் தியாகம் செஞ்சது!  அதுக்கு சம்பளமா 1 ரூபா தான் வாங்குச்சு! எவ்வளவு கரிசனத்தோடு அது அறிக்கை விட்டிருக்குது! இந்த பொம்பளையை இப்படி போட்டுத் தாக்குறீங்களே!

பொது ஜனம்; ஆமாம்! அந்த பொம்பளை முதலமைச்சர் சம்பளத்தை தியாகம் பண்ணி 1991 க்கு முன்னாடி இரண்டு கோடியா இருந்த சொத்தை எவ்வளவு? சிக்கனமா 1991-1996 க்குள்ளேயே 5 வருஷத்திலே 66 கொடியே 65 லட்சமா மாத்திச்சு! இந்த மாதிரி வறுமையில வாழ்ந்து சொத்து சேர்க்கிற யோக்கியதை எவனுக்கு இருக்கு! அதை தப்பா பேசாதப்பா! நாக்கு அழுகிப்போயிடும்!

பொது ஜனம்; இவ்வளவு சிக்கனமா வருமானத்தை ஈட்டின ஜெயலலிதாவுக்கு தமிழ்நாட்டு அரசின் வருவாய் பிரச்சினையை சீர் செய்யத் தெரியாதா? மத்திய அரசு ஏத்தினா என்ன? மாநில வாட் வரியைக் குறைச்சி மக்களைக் காப்பாத்த தெரியாதா? என்ன?  60 ரூபாயை 66 கோடியா மாத்தினவங்களுக்கு இது சாதாரணம்யா? என்னமோ அறிக்கை விட்டு சும்மனாங்காட்டியும் நெஞ்சை நக்கறிங்களே! அப்புறம் நல்லா வருது என் வாயில!

பொது ஜனம்; என்னதுய்யா 60 ரூபா 60  கோடி? சும்மா எதனாச்சும் சொல்லாதே!

பொது ஜனம்; மாதம் ஒரு ரூபா சம்பளம்னா 60 மாசத்துக்கு 60 ரூபா அதை சொல்றான்யா இந்தாளு! 5 வருஷத்துக்கு 60 மாசம்தானே! 5 வருஷத்துலே 60 ரூபா சம்பாதிச்சு 66 கோடியா மாத்தின அப்பாடக்கர் பொம்பளைக்கு இந்த விலைவாசி உயர்வு எல்லாம் எம்மாத்திரம்? இதை மறைச்சு, இது விலைவாசியில இருந்து தப்பிக்கிறதுக்கு முதலைக்கண்ணீர் விடுதேன்னு சொல்றான்!

பொது ஜனம்; ஆமா! இதை வைச்சே இது பஸ் கட்டணத்தை எல்லாம் ஏத்திடும்! விலைவாசி உயர்வுக்கு இது தான் காரணம் என்று சொல்லிடும். இது வரியை மானாவாரியா வீணாக்கும் மக்களுக்காக வரியைக் குறைன்னா குறைக்காது! பதிலுக்கு "வள்" "வள்" னு ....குறைக்கும் ஏட்டிக்கு போட்டி போட்டு மக்கள் மண்டையை உருட்டும்! நல்லா வந்து சேர்ந்துக்குதுய்யா!

பொது ஜனம்; அப்ப இந்த பொம்பளைக்கு மட்டும் எவ்வளவு வேண்னாலும் மக்களை பணத்தை வீணடிக்கிறதுக்கு இந்திய அரசியலமைப்பு தார்மீக உரிமையை நிறைய வாரி வழங்கியிருக்கிறதுன்னு சொல்லு! அப்படியென்றால் தமிழ்நாடு தனி நாடா? என்னய்யா! இது லூசு அரசியலமைப்பா இருக்கு!

பொது ஜனம்; பாவம்யா மக்கள்! எல்லா கன்றாவிகளையும் அவங்க தாய்யா சுமக்கணும்! இன்னும் முக்காவாசிப்பேறுக்கு குறைந்த பட்ச ஊதியமே இல்லை! எப்படிய்யா வாங்கற சம்பளத்தை வாடகை கொடுத்துகிட்டு ஸ்கூல் பீசுக்காக இந்த பொம்பளையோட அநியாயத்துக்கெல்லாம் போராடிகிட்டு குடும்பத்தை சமாளிக்கப்போறாங்க! நிறைய தற்கொலை தான் நடக்கும் போலிருக்கேய்யா! மக்களை மக்கள் தான்யா காப்பாத்திக்கணும்! போட்டாங்கள்ள அவங்க தான் அனுபவிக்கணும்!Thursday, 23 June, 2011

திருட்டுகோட்டை வைச்சுதான் திருட்டை ஒழிக்க முடியும்! - இது அ.தி.மு.க பாலிசி!

 நில ஆக்கரிமிப்பு
சட்டசிக்கலில் சட்ட அமைச்சர்!
  
டந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க வேட்பாளர்களிலேயே அதிக பணக்காரர் என அறிவித்து முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பனைத் தோற்கடித்து இன்று சட்டத்துறை அமைச்சராகியுள்ளார் இசக்கி சுப்பையா.

    ஜெ.தனது சொத்துக்கள் என அறிவித்த 51 கோடியை விட பத்து கோடி அதிகமாக 61 கோடி என அறிவித்ததன் பின்னணியில் ஏராளமான வில்லங்கமான புகார்களும் விவகாரமான கோர்ட் வழக்குகளும் இந்த சட்டத்துறை முழுதையும் கையாளும் அமைச்சருக்கு எதிராக இருக்கிறது என சொல்கிறார்கள், இவர் குடியிருக்கும் சென்னை கே.கே.நகர் பொதுமக்கள்.

     "இவர் ஒரு வழக்குரைஞர் என இவர் அமைச்சர் ஆன பிறகுதான் எங்களுக்குத் தெரியும்.  இவரது தகப்பனார் இநக்கி, சாலை போடும் பணிகளை செயத ஒப்பந்தக்காரர்.  இவரும் தகப்பனார் வழியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய பணிகளை செய்த ஒப்பந்தக்காரர்.  காலப்போக்கில் பணம் சேர்ந்த பிறகு, தினமும் ஒரு வெளிநாட்டுக் காரில் பறக்கும் மீட்டர் வட்டி சினிமா ஃபைனான்னசியராக மாறினார்.  சேர்ந்த பணத்தை வைத்து எங்கள் பகுதியில் பிரிச்சினைக்குரிய சொத்து விவகாரத்தில் தலையிடுவார்.  பிறகு அதை அதிக விலைக்கு விற்றுவிடுவார்.  இவருக்கு எதிராக வழக்குகள் பதிவாகியுள்ளன.  இப்பொழுது இவர் சட்ட்த்துறை அமைச்சராகியுள்ளதால் அந்த வழக்குகளின் தலையெழுத்து என்னாகுமோ என பயந்து கொண்டிருக்கிறோம்"  என்கிறார்கள் பொது மக்கள்.

வழக்கு 1:  தொடுத்திருப்பவர் ஜெயபாலன்

     எங்கள் கே.கே.நகர் பகுதி ஒரு காலத்தில் சினிமா ஸ்டுடியோக்கள் இருந்த பகுதி.  காலப்போக்கில் அந்த ஸ்டுடியோக்கள் கைப்பற்றி வைத்திருந்த அரசு நிலங்கள் எல்லாம் பொது மக்களுக்கு அரசால் வழங்கப்பட்டன.

     அந்த நிலங்களுக்கு மத்தியில் ஒரு இருபது அடி ஆழம் கொண்ட குளம் இருந்தது.  பத்து கிரவுண்ட் மதிப்புள்ள இந்தக் குள்த்தின் இன்றைய மதிப்பு 30 கோடி ரூபாய்.   அதன்மீது இசக்கி சுப்பையா கண் வைத்தார்.  ஒவ்வொரு முறை அ.தி.மு.க ஆட்சி வரும்போதும் ஒரு விவாகராத்தை அந்த நிலவிவிகாரத்தில் அரங்கேற்றுவார்.  1991-96-ல் அ.தி.மு.க ஆட்சியின் போது அந்த பொது குளத்தை சுற்றி காம்பவுண்ட் சுவர் கட்டி தனது பெயருக்கும் தனது குடும்பத்தார் பெயருக்கும் சட்டவிரோதமாக ஒதுக்கிக்கொண்டார்.  அடுத்து
அமைந்த தி.முக. ஆட்சியில் குடிசை மாற்று வாரியத் தலைவராக இருந்த அம்புஜ்சர்மா என்கிற ஐ.ஏ.எஸ் அதிகாரி, இந்த ஒதுக்கீடு சட்டவிரோதம் என ரத்து செய்தார்.

     2001-2006-ல் மீண்டும் அமைந்த அ.திமு.க ஆட்சியின் போது ரௌடிகள் பட்டாளத்துடன் வந்து அந்த இடத்தை ஆக்கிரமித்தார்.  அதை எதிர்த்து குடியிருப்புவாசிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அந்த வழக்கில் 'அம்புச்சர்மா ஐ.ஏ.எஸ். பிறப்பித்த சட்டவிரோத ஒதுக்கீடு ரத்து ஆணை பற்றிய பைலே காணவில்லை' என குடிசை மாற்று வாரியத்தை சென்னை உயர்நீதிமன்றத்திலேயே சொல்ல வைத்தார்கள்.  அதை கேட்டு திகைத்துப்போன தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, 'இந்த வழக்கு விரிவான சட்ட ரீதியான தீர்வுக்கு தகுதியான வழக்கு என தீர்ப்பளித்தார்.  அதன் அடிப்படையில் நாங்கள் இசக்கி சுப்பையா எப்படியெல்லாம் அரசு நிர்வாகத்தை ஏமாற்றுகிறார் என விரிவான வழக்கை ஐகோர்ட்டில் தாக்கல் செய்து வழக்காடிக் கொண்டிருக்கிறோம்.  இந்த முறை சட்டத்துறை அமைச்சரான பிறகு கோர்ட்டுகளை மதிக்காமல் இந்த நிலத்தை தி.நகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகருக்கு 30 கோடி ரூபாய்க்கு விற்று, இங்கு பெரிய அபார்ட்மெண்ட் கட்உம் வேலையில் ஈடுபட்டுள்ளார்" என்கிறார் விஜயராகவபுரம் பொதுநலச் சங்கத் தலைவரான ஜெயபால்.

     "இந்த அராஜகத்தை எதிர்த்து தொடர்ச்சியாக போராடுவாதால் ஒருமுறை கே.கே.நகர் பகுதி திமுக பிரமுகர் தனசேகரன் மூலமாக என்னிடம் பஞ்சாயத்து பேச வந்தார் இசக்கி சுப்பையா.  தனசேகரன் வீட்டில் நடந்த அந்த பஞ்சாயத்தில் எங்கள் மக்களுக்கு ஒரு சமூகநலக்கூடம் கட்ட்த்தான் போராடுகிறேன் என நான் எடுத்துச் சொன்னபோது, இசக்கி சுப்பையா தனது தலைமுடியை தொட்டுக்காட்டி, இதைக்கூட உன்னால் புடுங்க முடியாது' என தனசேகரன் முன்னிலையில் என்னை மிரட்டினார்" என்கிறார் ஜெயபால்.வழக்கு  2 : தொடர்ந்திருப்பவர் செல்வம்

இவர் அசோக்நகர் சௌந்திரபாண்டியன் தெருவில் உள்ள இசக்கி சுப்பையாவின் பங்களாவிற்கு பின்புறம் வசிப்பவர்.  "எனது அத்தை முனியம்மாளுக்கு வாரிசு இல்லாததால் 16-வது அவென்யு, கன்னியப்பா நகரில் உள்ள மனை எண் 247-ஐ என் பெயருக்கு எழுதிக்கொடுத்தார்.  அதன்படி தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்திற்கு முழுபணம் செலுத்தி 1992-ல் முழு விற்பனை பத்திரத்தையும் கட்டினேன்.  அதைத்தொடர்ந்து மின்சாரம், வீடு கட்டும் அனுபதி ஆகியவற்றைப் பெற்றேன்.  அதன்பிறகு இந்தச் சொத்தில் தலையிட்டார் இசக்கி சுப்பையா.  என் அத்தையை மூளைச் சலவை செய்து அவருக்கு வெறும் 11 லட்ச கொடுத்ததாக எழுதி வாங்கிக்கொண்டு என்மீது வழக்குத் தொடர வைத்தார்.  எங்கள் குடும்பத்தில் சொத்துக்காக குழப்பத்தை உருவாக்கிய சுப்பையாவின் ஆட்கள் எனது அத்தையை அவரது சொந்த ஊரான செஞ்சிக்கு பக்கத்தில் இறக்கிவிட்டு வந்தார்கள்.  அவர் அங்கேயே மரணமடைந்துவிட்டார்.  அவர் என்மேல் தொடுத்த வழக்கும், நான் எனது சொத்து விவாகாரம் குறித்து தொடுத்த வழக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.  அந்த நிலத்தை இப்பொழுது வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையிலேயே வேறொருவருக்கு விற்றுவிட்டார்.  இப்பொழுது அமைச்சராகிவிட்டதால், 'சமரசமாகிப் போகலாம், 5 லட்சம் பிச்சை போடுகிறேன் என சொல்கிறார் இசக்கி சுப்பையா" என்கிறார் செல்வம்.

     வழக்கு   3 : தொடர்ந்திருப்பவர் யூசுப் (விடுதலை சிறுத்தை பொருளாளர்)

     "எங்கள் அசொக் நகர் 86-வது தெரி முனையில் 4,000 சதுர அடி நிலம் ஒன்று உள்ளது.  அது பொது மக்கள் உபயோகத்திற்காக அரசு ஒதுக்கிய நிலம்.  அதன் இன்றைய மதிப்பு 5 கோடி ரூபாய்.  அதை தனியார் சிலர் தி.மு.க. புள்ளிகள் உதவியுடன் ஆக்கிரமிக்க முயன்றார்கள்.  அதை எதிர்த்து நான் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து போராடி வருகிறேன்.  அந்த நிலத்தின் மீது இசக்கி சுப்பையாவிற்கு எப்போதும் ஒரு கண் இருந்து வந்தது.

     'பொது நல வழக்கை விலக்கிக்கொள், நான் அந்த நிலத்தை வாங்கிக் கொள்கிறேன்' என புரோக்கர் மூலம் என்னை மிரட்டினார் இசக்கி சுப்பையா'' என குற்றம் சாட்டுகிறார் யூசுப்.

     'இவை மட்டுமல்ல... அந்தப்பகுதியில் உள்ள சாமி ஒயின்ஸ் கட்டிடம் மற்றும் மணலி செல்லும் சாலையில் ஒரு பள்ளிக் கட்டிடம் என அபகரிக்க முயல்கிறார் இசக்கி சுப்பையா' என்கிற புகார்கள் ஆங்காங்கே பேட்டுக்கொண்டிருக்கிறது.

     'தி.மு.க.வினர் சட்டவிரோதமாக ஆக்கிரமித்த நிலங்களை மீட்க சட்டத்துறை மூலமாக நடவடிக்கை எடுப்பேன்' என அறிவித்துள்ள ஜெ.  அ.தி.முக. வின் சட்டத்துறை அமைச்சர் செய்துள்ளதாக எழுந்துள்ள சட்டவிராத ஆக்கிரமிப்புகள் பற்றிய புகார்களுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார் எனபதறிய சம்பந்தப்பட்ட ஏரியா மக்கள் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள்.

-பிரகாஷ்
படங்கள் ஸ்டாலின்....
...நக்கீரன் ஜூன் 22-24, 2011
**************************

பொது ஜனம்; என்னய்யா இந்த சட்ட அள்ளக்கை ஜெயலிதாவை விடப் பெரிய கையா இருக்கும் போல இருக்குதே! 

 

பொது ஜனம்; எதை வைச்சு சொல்றே!  ஜெயலலிதாவை விட 10 கோடி சொத்து அதிகமாக வைச்சிருக்குதே! அதே வைச்சா....? அது தேர்தல் கமிஈனுக்காக காட்டப்பட்ட  கணக்குய்யா! பினாமி எல்லாம் இதுல வராது! வந்தா தேர்தல்ல நிக்க முடியாது!

பொது ஜனம்; ஜெயலலிதா இரண்டு ரூபா சம்பளம் வாங்கியிருந்தா இந்த சட்டத்தை விட கொஞ்சம் அதிகமாக சொத்து சேர்ந்திருக்கும்! ஆனா அது ஒரு ரூபா மட்டும் தான் சம்பளம் வாங்குச்சு!  அதானால இந்த சட்ட அள்ளக்கை சொத்தை விட பத்துக் கோடி குறைவா ஜெயல்லிதாவுக்கு இருக்கு! அதுக்காக இந்த சட்டம் பீய்த்திக்கவேணாம்! சீக்கிரமா லீடிங் ஆயிடும்!

பொது ஜனம்; சரி தலையைப்போல் தான் வாலும் இருக்குது! விடு விடு....

பொது ஜனம்; திமுக வை கவனிக்கிறதுக்கு முன்னாலே அதிமுக வை நிறைய கவனிக்கணுமே அவங்கதான் இதிலேயெல்லாம் படு ஸ்பீடு.

பொது ஜனம்; அதெப்படி அவங்க அட்டூழியத்தை அவங்களே எப்படி கவனிச்சுப்பாங்க! பெங்களூர் நீதிமன்றத்துக்கே ஆட்டம் காட்டறவங்களாச்சே!

பொது ஜனம்; இந்த லட்சணத்தில தான் திமுக ஆட்சிகாலத்தில் அபகரித்த நிலத்தை மீட்போம்! என அறிவிச்சிருக்கா! இந்த பொம்பளை!

பொது ஜனம்;  ஜெயலலிதா அபகரித்த சிறுதாவூர் நிலத்தை யார் மீட்பது!?  இப்ப இசக்கி கொள்ளையடிச்சதை எப்படி மீட்கறது!? கொள்ளையடிக்கப் போறதையும் எப்படி தடுக்கறது!?

பொது ஜனம்; தெரியலேயேப்பா! அதுவா நடக்கும் விடு! ஒரு வேளை கொள்ளையை வைச்சு! கொள்ளையைத் தடுப்பாங்களோ! என்னவோ! அதுக்குள்ள பாதி இடம் காணாம போயிடுமே!


சமச்சீர் கல்வி: "சோ"வுக்கு வந்த சந்தேகம்!

   
 


ள்ளிகள் திறந்தன் பாடம் நடைபெறவில்லை. ஆசிரியர் வந்தார், அமர்ந்தார். என்ன பாடம் சொல்லிக்கொடுப்பது என்று அவருக்கும் தெரியவில்லை. உச்சநீதிமன்ற உத்தரவின்படி சமச்சீர் கல்விப் பாடத்திட்டங்களை ஆராய வேண்டும். அதன்பின்னர் புதிய புத்தகங்கள் தயார் செய்யப்படுமா? அதற்கு எவ்வளவு காலமாகும்? குறைந்த பட்சம் இன்னும் மூன்று மாதங்களுக்கு ஆசிரியர்களும் மாணவர்களும் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருப்பார்கள்.

     ஏற்கனவே பள்ளிகள் திறப்பது பாதி மாதம் தள்ளிப்போய்விட்டது. புதிய பாடத்திட்டங்கள் மாணவர்களின் கரங்களில் தவழ இன்னும் பலமாத காலமாகும் என்றால் இந்த ஆண்டுபடிப்புப் பாழ் என்று அர்த்தம். தமிழகம் இதுவரை இத்தகைய விசித்திரமான, விநோதமான நிலைமையைச் சந்தித்ததில்லை.

     இந்த அவல நிலைக்கு அடிப்படைக் காரணம் என்ன? இன்றைய புதிய அரசு அமைந்ததுமே ஒரு காரியம் செய்தது. புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம் செல்வி ஜெயல்லிதா தலைமையில் நடைபெறுகிறது. அடுத்தநாள் மீண்டும் கூடுகிறது. சமச்சீர் கல்விப் பாடத்திட்டத்தை நிறுத்தி வைப்பது என்று தீர்மானிக்கிறது. காரணம் சமச்சீர் கல்விக்கான பாடத்திட்ட்ங்கள் தரமற்றவை என்று விளக்கம் தருகிறார்கள்.

     அமைச்சரவைக் கூட்டங்களின் இடைப்பட்ட காலம் இருபத்தி நான்கு மணி நேரம். அதற்குள் சமச்சீர் கல்வித் திட்டப்பாடங்கள் தரமற்றவை என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். இருக்கட்டும். அடுத்து என்ன செய்ய வேண்டும்? அதனை ஆராய கல்வியாளர் குழு வேறு அமைக்க முன்வந்திருக்க வேண்டும்.

     சமச்சீர் கல்வித் திட்டத்தை பத்தாம் வகுப்பு வரை செயல்படுத்திக்கொண்டே பாட புத்தகங்களில் உள்ள குறைகளை நீக்கி நிறைவு செய்திருக்க வேண்டும். ஆனால் என்ன முடிவு கண்டார்கள்? பழைய பாடத்திட்டங்களையே நடத்துவது என்று அவசர அவசரமாக அச்சடிக்க ஆரம்பித்து விட்டார்கள். பழைய பாடத்திட்டங்கள் என்றால் சமச்சீர் கல்வித் திட்டம் தொடர வேண்டும் என்று ஏற்கனவே உச்சநீதிமன்றம் ஒருமுறைக்கு இருமுறை தீர்ப்பளித்து விட்டது.

     சமுதாயத்தில் நால்வருணம் என்பது போல பழைய பாடத்திட்டங்களும் நால் வருணம் கொண்டவை. நான்கு வகையான பாடத்திட்டங்கள் கொண்டவை எனவேதான் அது கூடாது என்று சமச்சீர் கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தார்கள். கல்வியிலும் சமத்துவம் காண்பது தான் அதன் லட்சியம்.

     சமச்சீர் கல்வித்திட்டம் கூடாது என்று தொடர்ந்து போராடுகிறவர்கள் தனியார் கல்வித்துறை வியாபாரிகள் தான். அவர்கள் கல்வியை பணம் கொழிக்கும் வர்த்தகமாகக் கருதுகிறவர்கள். எல்லாப் பள்ளிகளிலும் ஒரே பாடம்-ஒரே தேர்வு என்றால் அவர்களுடைய கஜானா வறண்டு விடும். எனவே சமச்சீர் கல்வியை அவர்கள் எதிர்கிக்றார்களென்றால் புரிந்து கொள்ளமுடியும். ஆனால் அ.தி.மு.க அரசின் இரண்டாம் நாள் அமைச்சரவைக்கூட்டத்திலேயே சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைப்பது என்று எடுத்த அவசர முடிவைத்தான் நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை.

     சிலர் வுயர்வகைக் கல்வி பெறுவதைத் தடுப்பதற்காகவே சமச்சீர் கல்வித் திட்டம் கொண்டுவர்ப்பட்டதாகப் பெருமளவில் பேசப்பட்டதாக 'துக்ளக்' சோ கூறுகிறர். ஒரு வேளை அவரைப் போன்றவர்களுக்கு ஏற்பட்ட அச்சத்தால் தான் சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்த தமிழக அரசு முன்வந்ததோ என்று எண்ண இடமிருக்கிறது.

     'சோ' கூறும் அந்தச் சிலர் உயர்கல்வி பெறுவதைப் போல அனைவருக்கும் அதே கல்வி கிடைக்கவேண்டும் எனபது தான் சமச்சீர் கல்வியின் லட்சியம்.

     சமச்சீர் கல்வித் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தனியார் கல்வி கனதனவான்கள் உயர்நீதிமன்றத்தை நாடினர். டெல்லி உச்சநீதிமன்றம் நோக்கி ஒடினர். முந்தைய கலைஞர் அரசு செயல்படுத்திய சமச்சீர் கல்வித் திட்டத்தை ரத்து செய்ய முடியாது என்று அந்த நீதிமன்றமும் நல்ல தீர்ப்பு வழங்கியது. அதன்பின்னர் தான் அவர்கள் ஒய்ந்தனர்.

     ஆனால் சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைப்பது என்று  அ.தி.மு.க அர,சு எடுத்த முடிவு அவர்களுக்கு கிடைத்த புதையல்.


     ஆனால் மக்கள் அதனை ஏற்கவில்லை. சமச்சீர் க்லவித் திட்டத்தை ரத்து செய்யாதீர் தொடர்க என்று தமிழகம் தழுவிய அளவில் குரல் எழும்பியது. அதன் எதிரொலியை சென்னை உயர்நீதிமன்றத்தில் கேட்டோம்.

     சமச்சீர் கல்வியைத் தமிழக அரசு நிறுத்தி வைப்பதை எதிர்த்து உய்நீதிமன்றத்தில் பல்வேறு அமைப்புகளும் வழக்குத் தொடர்ந்தன. சமச்சீர் கல்வித் திட்டத்தை தொடரவேண்டும் என்றும் ஏற்கனவே திட்டமிட்டபடி பத்தாம் வகுப்புவரை அந்தப் பாடங்களைத்தான் நடத்தவேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

     அதன்பின்னராவது அ.தி.மு.க அரசு சமச்சீர் கல்வித் திட்டத்தை செயல் படுத்த முன்வந்திருக்க வேண்டும். ஆனால் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அவசர அவசரமாக உச்சநீதிமன்றத்திற்கு ஓடியது. எப்படியும் சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்த வேண்டும் என்ற முனைப்போடு தான் அ.தி.மு.க அரசு செயல்படுகிறது என்ற எண்ணம் வலுப்பெற்றது.

     சமச்சீர் கல்வித்திட்டம் தொடர வேண்டும்.  வேண்டுமானால் பாட்த்திட்டங்களை பரிசீலனை செய்யங்கள் என்று தமிழக அரசிற்கு உச்சநீதிமன்றம் அறிவுரை கூறியிருக்கிறது. அதற்காக ஒரு குழு அமைக்க வேண்டும் என்றும் அந்தக் குழுவில் யார் யார் இடம்பெற வேண்டும் என்றும் உத்தரவிட்டிருக்கிறது.

     மாநிலத்தை எத்தனையோ பிரச்சினைகள் எதிர்நோக்கியிருக்கின்றன.  தேர்தல் காலத்தில் மக்களுக்கு  அ.தி.மு.கழகம் எவ்ளவோ வாக்குறுதிகளை அளித்திருக்கிறது. அதனை விடுத்து குளவிக் கூட்டில் கை வைத்தது போல சமச்சீர் கல்வித் திட்டத்தின் மீது ஏன் கைவைத்தது?

     சமச்சீர் கல்வித் திட்டம் செயலுக்கு வருவதை இனி தடுக்க முடியாது என்ற நிலை வந்த போது கல்விக் கூட வணிகர்கள் என்ன செயதனர்? பாடத்திட்டங்களில் ஒட்டை உடைசல்கள் என்றனர். அதே வாதத்தைத்தான் 'துக்ளக்' சோவும் சொல்கிறார். சமச்சீர் கல்வி வந்தால் எல்லோரும் தரம் தாழ்ந்த கல்வி ஏற்க வேண்டிய நிலை ஏற்படும் என்கிறார்.  அவர்களுடைய வாதங்களைத்தான் இன்றைய தமிழக அரசும் முன்வைத்தது.  வேண்டுமானால் தேவையற்ற பாடங்கள் என்று கருதுவதை நீக்கிவிடுங்கள் என்று ஆன்றோரும் சான்றோரும் அரசிற்கு அறிவுரை கூறினர்.   இன்றைக்குப் பாட புத்தக்ங்கள் இல்லாமலே, என்ன படிக்கப்போகிறோம் என்று தெரியாமலே மாணவர்கள் பள்ளிக்குச் செல்கிறார்கள்.  இந்த நிலை எத்தகைய எண்ணத்தை ஏற்படுத்தும்.

     சமச்சீர் கல்வித் திட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வைத்த வாதம் என்ன?  பாட புத்தகங்களில் கலைஞர், கனிமொழியின் படைப்புகள் இடம் பெற்றிருக்கின்றன என்பது தான்.  அந்தப் பாடங்களை நீக்குவது பற்றி தமக்கு ஆட்சேபணை இல்லை என்று கலைஞரும் சொல்லிவிட்டார்.  சமச்சீர் கல்வியில் நாட்டம் கொண்டோரும் சொல்லிவிட்டனர்.

     குப்பன் வீட்டுப் பிள்ளைக்கும் கோமான் வீட்டுப் பிள்ளைக்கும் ஒரே சமச்சீர் கல்வி என்பதனை வசதி படைத்தவர்களும் ஆதிக்க சமூகத்தினரும் தான் விரும்பவில்லை.  பிறப்பால் ஏற்றத் தாழ்வுகள் இருப்பது போல கல்வியிலும் ஏற்றத்தாழ்வுகள் இருப்பதுதான் தங்களுக்கு கவுரவம் என்று நினைப்பவருகளும் எதிர்க்கிறார்கள.  இந்த நிலையில் சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைப்பத்ற்கான மசோதாவை சட்டமன்றத்திலும் நிறைவேற்றி விட்டார்கள்.  சட்டமன்றம் நிறுத்தி வைக்கலாம்.  ஆனால் சமச்சீர் கல்வித் திட்டம் தொடர வேண்டும் என்று ஏற்கனவே உச்சநீதிமன்றமே அறிவுறுத்திவிட்டது.

     உச்சநீதிமன்றத்தை  தமிழக அரசு நாடியதைத் தொடர்ந்து தனியார் பள்ளி நிர்வாகங்களும் படையெடுத்தன. சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி பழைய பாடங்களையே நடத்துவது என்று தமிழக அரசு எடுத்த முடிவை செயல்படுத்த வேண்டும் என்பது அவைகளின் கோரிக்கை. அவைகளின் மனுக்களை விசாரிக்காமலே உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.  சமச்சீர் கல்வித் திட்டம் செல்லும் என்று ஏற்கனவே தீர்ப்பளித்துவிட்ட பின்னர் இந்தக் கோரிக்கை தேவையற்றது என்று தெரிவித்திருக்கிறது.

     சமச்சீர் கல்வி இல்லையென்றால் அரசு பள்ளி மாணவர்கள் ஒரு ஜாதி, மெட்ரிக்குலேஷன் பள்ளி  மாணவர்கள் ஒரு ஜாதி, மத்திய அரசின் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்கள் வேறொரு ஜாதி என்ற நிலைதான் உருவாகும்.

     ஒரு சிலரு உயர்வனக் கல்வி பெறுவதைத் தடுப்பதற்குத்தான் சமச்சீர் கல்வித் திட்டம் என்ற 'சோ' போன்றவர்களின் சந்தேகங்களைப் போக்குங்கள்.  அந்த ஒரு சிலருக்கும் மனக்குறை வேண்டாம்.  அதே சமயத்தில் இந்த ஆண்டே, சமச்சீர் கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கையையும் பரிசீலியுங்கள்.

     அ.தி.மு.கழகம் இன்றைக்கு ஆட்சி பீடம் ஏறியிருப்பதில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு சிறப்பான பங்கு உண்டு. அரசு ஊழியர்கள், வங்கி, இன்சூரன்ஸ் போன்ற பொதுத்துறை ஊழியர்களின் வாக்குகளை அந்தக் கட்சிதான் திரட்டி தந்தது.

     சமச்சீர் கல்வி என்பது கோபாலபுரத்து சரக்கு அல்ல.  சமச்சீர் கல்விக்காக இரண்டு கமுயூனிஸ்டு கட்சிகளும் நீண்ட நெடுங்காலமாகப் போராடி வந்தன.

     சமுதாயத்தில் ஜாதி பேதமற்ற சமத்துவம் என்பதுதான் தந்தை பெரியாரின் கொள்கை.  அந்தக் கொள்கையின் அடிப்படையில் தான் கல்வயிலும் சமத்துவம் வேண்டும் எனபதற்காக கலைஞர் அரசு சமச்சீர்திருத்தக் கல்வித் திட்டத்தைச் செயல்படுத்த முன்வந்தது.

     எனவே இப்பொதைய பாடத்திட்டங்கள் குறைபாடுகள் உள்ளவை என்று கருதினால் புதிய பாடத்திட்டங்களை தயார் செய்யுங்கள்.  ஆனால் அந்த பாடத்திட்டங்கள் சமச்சீர் கல்வித் திட்டத்தை திறம்படச் செயல்படுத்துவதாகவும், செழுமைப்படுத்துவதாகவும் அமையவேண்டும்.

     ஒரு சிலருக்கு மட்டுமே உயர்ந்த கல்வி என்ற வெளிச்சம் இதுவரை இருண்ட கண்டத்தில் இருக்கும் மக்களின் வீடுகளையும் எட்டிப் பார்க்க வேண்டும் எனபதே சமச்சீர் கல்வியின் சித்தாந்தமாகும்.

..........சோலை ...நக்கீரன் ஜூன்22-24,2011

*******************

பொது ஜனம்; இது என்ன சோ முண்ட கல்ப்பைத்தனமா ஐடியா பண்ணுது.....

பொது ஜனம்; அது பார்ப்பன கோஷ்டிக்காக ஐடியா பண்ணுது.......உயர் கல்வி எனபது இந்த கோஷ்டிக்கு மட்டும் தான் இருக்கணும்னு நினைக்குது. எல்லோருக்கும் உயர் கல்வி என்பது தான் சமச்சீர் என்பது அந்த முண்டகலப்பைக்கு முன்பே தெரியும். இருந்தாலும் அதோட பார்ப்பன டகால்டி வேலை தான் இதெல்லாம். அது பாப்பாத்திக்கும் இதோட உளுத்துப்போன ஐடியாவை சப்ளைப் பண்ணுது.....

பொது ஜனம்; இது ஐடியாக் கொடுக்கலைன்னா அதுக்கு தெரியாதா? 

பொது ஜனம்; ஏன் தெரியாது! கேடிகளுக்கு கேடிவேளைத்தானே தெரியும். இது கேடி லேடி.....

பொது ஜனம்; பழையப் பாடப்புத்தகம் வேணும்னா அதையும் எல்லா தனியார் மெட்ரிக் பள்ளிக்கூடத்துக்கும் சமச்சீரா ஆக்குமா? 

பொது ஜனம்; அது எப்படி ஆக்கும்!? அது தான் உதவாத படிப்பு என்று இதுங்களாகவே முடிவு கட்டிடுச்சே! இப்ப புரியுதா! கேடி லேடியோட நோக்கம் என்னவென்று!

பொது ஜனம்; அப்படியே பழைப்பாடப்புத்தகத்தை எல்லா பள்ளிகளும் சமமா பின்பற்றணும்னா இந்த கொள்ளக்காரப் பள்ளிக்கூடங்கள் ஒத்துக்குமா? அப்புறம், இந்த கொள்ளக்காரப் பள்ளிக்கூடங்க, கேடி லேடியோட ரகசியமாப் போட்டு கொண்ட ஒப்பந்தம் என்னாவது...?