நிழல் அரசாங்கம் உருவாக வழிவகுத்து விடும்:
லோக்பால் விசாரணை வரம்புக்குள் பிரதமரை சேர்க்கக்கூடாது
ஜெயலலிதா பேட்டி
சென்னை, ஜுன்.28-
லோக்பால் அமைப்பின் விசாரணை வரம்புக்குள் பிரதமரை சேர்க்கக்கூடாது, அப்படி சேர்ப்பது, நிழல் அரசாங்கம் உருவாக வழிவகுத்து விடும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறினார்.
லோக்பால்
முதல்-அமைச்சர் ஜெயலலிதா, ஒரு தனியார் ஆங்கில சேனலுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அதில் கேட்கப்பட்ட கேள்விகளும், அவற்றுக்கு ஜெயலலிதா அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- லோக்பால் அமைப்பின் விசாரணை வரம்புக்குள் பிரதமரையும் சேர்க்க வேண்டும் என்பது பற்றி சர்ச்சை நிலவுகிறதே? இதுபற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்:- லோக்பால் அமைப்பின் விசாரணை வரம்புக்குள் பிரதமரை சேர்க்கக்கூடாது என்பதுதான் எனது கருத்து. பிரதமர் ஏற்கனவே ஊழல் தடுப்பு சட்டத்துக்கு உட்பட்டவர்தான். அவரை சி.பி.ஐ. விசாரிக்க முடியும்.
இந்த நிலையில், லோக்பால் விசாரணை வரம்புக்குள் அவரை சேர்த்தால், தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லி, தன்னை தற்காத்துக்கொள்வதிலேயே அவர் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டி இருக்கும். அவரால் சிறப்பாக செயல்பட முடியாது. இதனால், பிரதமரின் அதிகாரம் வலுவிழந்து விடும்.
வெளிநாடுகளால் ஆபத்து
அரசாங்கத்துக்கு நிகராக, நிழல் அரசாங்கம் உருவாக இது வழிவகுத்து விடும். பிரதமர் மீதான குற்றச்சாட்டு பொய் என்று நிரூபிக்கப்பட்டால் கூட, அவரது பதவியின் அதிகாரம் வலுவிழந்து விடும். மேலும், இந்த மசோதாவை பயன்படுத்தி, வெளிநாடுகள் இந்தியாவை சீர்குலைக்கும் ஆபத்து உள்ளது.
இந்த விஷயத்தில், நான் தனிநபரை ஆதரிக்கும் நோக்கத்தில் இக்கருத்தை சொல்லவில்லை. பிரதமர் பதவி என்ற அமைப்புக்கு ஆதரவாகவே சொல்கிறேன். பிரதமராக இருப்பவர், முழு அதிகாரத்துடன் இல்லாவிட்டால், அவரால் சிறப்பாக செயல்பட முடியாது. பிரதமரின் அதிகாரத்தை எதுவும் வலுவிழக்க செய்துவிடக்கூடாது.
இருப்பினும், இந்த விவகாரத்தில், இறுதியான லோக்பால் வரைவு மசோதா, பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, தமிழக அரசு தனது கருத்தை தெரிவிக்கும்.
காங்கிரசுக்கு ஆதரவு
கேள்வி:- காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தருவதாக கடந்த ஆண்டு அறிவித்தீர்களே?
பதில்:- அது அந்த சமயத்துக்கு மட்டும் தெரிவித்த ஆதரவு. மத்திய அரசில் இருந்து தி.மு.க. வெளியேறினால், மத்திய அரசுக்கு ஆதரவு தருவதாக சொன்னேன். கூட்டணி நிர்ப்பந்தம் காரணமாக, அப்போதைய தொலைத்தொடர்புத்துறை மந்திரி ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயங்குகிறதோ என்ற எண்ணத்தின் அடிப்படையில், காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவித்தேன். ஆனால் அந்த ஆதரவை காங்கிரஸ் ஏற்கவில்லை. தேர்தல் தோல்விக்கு பிறகுகூட, தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
சோனியாவுடன் சந்திப்பு
கேள்வி:- காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்திப்பீர்களா?
பதில்:- சோனியாவை சந்திக்கும் திட்டம் ஏதும் இல்லை. காங்கிரஸ் கட்சி இன்னும் தி.மு.க.வுடன் கூட்டணியில் இருக்கும்போது, அப்படி செய்வது முறையல்ல.
கேள்வி:- காங்கிரசுடன் இணைந்து செயல்பட வாய்ப்புள்ளதா? ராகுல் காந்தி, பிரதமர் ஆக வாய்ப்புள்ளதா?
பதில்:- அந்த சூழ்நிலை வரும்போது, அதுபற்றி சொல்கிறேன். மாநில நலனுக்காக மத்திய அரசுடன் இணைந்து செயல்பட விரும்புகிறேன்.
தேசிய அரசியல்
கேள்வி:- தேசிய அரசியலில் ஈடுபடுவீர்களா?
பதில்:- அத்தகைய விருப்பம் ஏதும் இல்லை. ஆனால் எந்த பொறுப்பு கொடுக்கப்பட்டாலும் அதில் திறம்பட செயல்படுவேன். வாழ்க்கையை அது வரும் வகையிலேயே ஏற்றுக்கொள்வேன். அரசியலில் நுழைய வேண்டும் என்றோ, தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஆக வேண்டும் என்றோ நான் ஒருபோதும் எண்ணியது இல்லை. ஆனால் எப்படியோ ஆகிவிட்டேன்.
கேள்வி:- உங்கள் லட்சியம் என்ன?
பதில்:- இந்தியா, `சூப்பர் பவர்' ஆக வேண்டும் என்பதுதான் எனது லட்சியம். அதற்கான செயல்திறன் நமக்கு உள்ளது. அதற்காக, வலிமையான, தேசபக்தி கொண்ட தலைவர் நமக்கு வேண்டும்.
இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.
..........தினத்தந்தி 27.06.2011
**********************
பொது ஜனம்; என்னய்யா ஜெயலலிதா தன்னை முன்னிருத்தி எஸ்கேப் ஆவருதுக்காக பிரதமரை சேர்க்க கூடாதுன்னு சொல்லுதே!
பொது ஜனம்; இது எப்படியெல்லாம் சட்டத்தை ஏமாத்துது! எத்தனை தடவை உய்ர்நீதிமன்றத்தையும், உச்சநீதிமன்றத்தையும் ஏமாத்துச்சு!. என்னைக்காவது சட்டத்துக்குட்பட்டு நடக்கணும்னு நினைச்சு இருக்குதா? இல்லை நீதிமன்றத்துக்கு தவறாம ஆஜராகனும்னு நினைத்து இருக்குதா? கர்நாடகாவில ஒரு தடவையாவது ஆஜராகி இருக்குதா?
பொது ஜனம்; ஆமாம், இது பதவியில இருந்தா பதவியை வைச்சு கேசுல இருந்து எப்படி தப்பிப்பது என்பதை பற்றியே யோசிக்கும். பதவியில இல்லைன்னா கொடைக்கானல் பங்களாவில ரெஸ்ட் எடுத்துகிட்டு கோர்ட்டுக்கு வாய்தாவை எப்படியெல்லாம் இழுத்தடித்து வாங்குவது என்பதை பற்றி யோசிக்கும்! இதைத்தானே இவ்வளவு நாளும் பண்ணிகிட்டு வருது.
பொது ஜனம்; கரெக்ட்! இதுவே இந்தளவுக்கு! பண்ணும்பொழுது, பிரதமரின் கீழே இருக்கும் சிபிஐ எப்படி? பிரதமரை சுதந்திரமா விசாரிக்கும். ரொம்ப புத்திசாலித்தனமா ஐடியா சொல்றதா நினைச்சு தன்னுடைய பதவிக்கு வரும் ஆபத்தை தவிர்க்க பார்க்குது. இந்த டகால்டி வேலை எல்லாம் இங்கே ஒத்துவராது.
பொது ஜனம்; ஆமாய்யா! முன்னால் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் ரிட்டயர் ஆனதும் எலக்சன்ல காங்கிரஸ் சார்பில காந்திநகர்ல நின்னு தோத்தாரு! அப்புறம் என்ன? நேர்மை!
பொது ஜனம்; ஆமாய்யா! அவர் தேர்தல் ஆணையரா பொறுப்புல இருந்தப்ப தேர்தல் விதிமுறை மீறல்களுக்காக கட்சிகள் மேல் எடுத்த நடவடிக்கை எல்லாம் பாராபட்சமானதா தான் எடுத்துக்கணும்!.
பொது ஜனம்; ஆமா! இப்பக்கூட முன்னால் தேர்தல் ஆணையர் எம.எஸ் கில் காங்கிரஸ் அமைச்சரவையில விளையாட்டுத்துறை அமைச்சரா இருக்காரு! இவங்க எல்லாம் தன்னாட்சி அமைப்பில வேலை பார்த்தவங்க தான்! அப்ப வேலை பார்க்கும்போதே காங்கிரஸ் ஆதரவாத்தான் வேலை பார்த்து இருப்பாங்க! அதை வேலையை விட்டதும் கன்பார்ம் பண்ணிட்டாங்க! என்ன சரியா?
பொது ஜனம்; தமிழக தேர்தல் ஆணையரா இருந்த மலைச்சாமி. ஜெயலலிதாக் கூட முட்டி மோதிக்கிட்டும் இருந்தாரு! அப்புறம் அதிமுக எம்.பி யா இருக்கலையா! இவங்கெல்லாம் எப்படி ஆட்சியாளருக்கு எதிரா செயல்படுவாங்க?
பொது ஜனம்; இன்னும் சுப்ரீம் கோர்ட் நீதிபதி தான் கட்சியில சேரல! இன்னும் கூடிய சீக்கிரம் அவங்களும் கட்சியில சேர்ந்துருவாங்க!
பொது ஜனம்;பதவி வேணும்னா போய் கட்சியில சேர்ந்துக்குங்க! இந்த மாதிரி மக்களுக்கான அரசின் நடுநிலையான பொறுப்புக்கு வராதீங்க! இதுல ஒரு கால் அதுல ஒரு கால்னு இருக்காதீங்கய்யா!ஏதாவது ஒன்னுத்துக்கு ஆசைபடுங்கய்யா!
பொது ஜனம்; சிபிஐ இயக்குநரை நியமிப்பது பிரதமரின் அலுவலகம். அது தன்னாட்சி பெற்ற அலுவலகம் தான்! ஆனால் அதன் இயக்குநரை நியமிப்பது யார்? பிதரமர் அலுவலகம் தானே! அப்புறம் எப்படி அவரே பிரதமரை விசாரிப்பார். சும்மா ஒப்புக்கு வேணுன்னா விசாரிப்பார்.
பொது ஜனம்; யோவ்! பிரதமரா? இருந்தா என்ன? முதலமைச்சரா இருந்தா என்ன? உச்சநீதிமன்ற நீதிபதியா இருந்தா என்ன? தேர்தல் ஆணையரா? இருந்தா என்ன? சிபிஐ இயக்குநரா இருந்தா என்ன? எல்லோருமே மனிதர்கள் தான் இயந்திரங்கள் அல்ல. இயந்திர மனிதர்கள் அல்ல.
பொது ஜனம்; ஆமாம்! இயந்திரங்கள் என்றால் எல்லாம் ஒரே மாதிரியான சரியான புரோகிராம் பண்ணி ஓரே சீராக இயங்கும்! ஆனால், இந்த மனதர்கள், அவரவர் எண்ணத்திற்கேற்ப, அரசியல் சூழ்நிலைக்கேற்ப செயல்படுபவர்கள், ஆட்சி, கட்சி செல்வாக்கு, பதவி என்பவைகள் இவர்களின் செயல்பாடுகளை நிர்ணயிக்கின்றன. ஆகையால் தவறுவது நிச்சயம்! 100 சதவீதம் நிச்சயம்! இவர்களின் தவறுகளினால் மக்கள் பாதிக்கப்படக்கூடாது! அதற்குத் தான் இந்த லோக்பால் மசோதா!
பொது ஜனம்; அந்நிய நாடுகளிடம் வலுவிழந்துவிடும் என்று ஜெயலலிதா சொல்லியிருக்குதே! முழு அதிகாரத்தோட செயல்படமுடியாதுன்னு சொல்லியிருக்குதேய்யா!
பொது ஜனம்; எப்பா! என்னா அக்கறை! இங்கே பிள்ளைங்களோட கல்வியை குப்பையில போட்டு, தமிழக மாணவர்கள் திக்கற்று நிற்கிற மிக உன்னதமான காரியத்தை, முழு அதிகாரத்தோடு பண்ணி, இந்திய மாநிலங்கள் மட்டுமல்லாமல், உலக நாடுகளே காரிமுழியிற வேலையை பண்ணிட்டு, அக்கறை படறதப் பார்! இதுக்குப் பேர் தான் முதலைக்கண்ணீர்.!
பொது ஜனம்; மக்கள் என்ன படிக்கணும்னு முடிவு பன்றது கூட நான் தான் முடிவு பண்ணுவேன்! என்று மிக மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்திய ஜெயலலிதாவுக்கு இதைப்பற்றிக் கூற என்ன யோக்கியதை இருக்குது!
பொது ஜனம்;அந்நிய நாடுகளிடம் வலு இழக்கட்டும்! வலு இழந்துடும்னு பயம் இருக்கணும்யா! அதுக்குத்தான்யா லோக்பால்! படிக்கலைன்னா பரிட்சைல பெயில் ஆயிடுவே! என்ற பயமிருந்தா படி! பாஸ் ஆவு! இல்லைன்னா பெயில் தான் ஆவனும்! பெயில் ஆகி தண்டனையை அனுபவி! மீண்டும் நல்லா படி! பாஸ் ஆகு! மக்கள் ஆகிய நாங்கள் தானேய்யா உங்களை பிரதமராக்கினோம். எங்களுக்கு ஒரு நீதி உனக்கு ஒரு நீதியா!? நல்லா போங்கா இருக்குதே!
பொது ஜனம்; ஆமாய்யா! திருடினா போலீஸ் பிடிக்கும், தண்டனை என்ற பயம் இருந்தா தான் திருட்டு நடக்காம இருக்கும்! ஒரளவுக்காவது குறையும்! இல்லைன்னா கொள்ளைக்காரி ஆட்சிடா! யாரு வேணுன்னா கொள்ளயடிக்களாம்னு கிளம்பிடுவாங்க! கொலை பண்ண கிளம்பிடுவானுங்க! இப்ப அது தானே நாட்டில நடந்துகிட்டு இருக்குது! ஒரே மாசத்துல 137 கொலை தமிழ்நாட்டுல.....என்ன நான்ஞ் சொல்றது!
பொது ஜனம்; போலீசே திருடினா! லஞ்சம் வாங்கினா? கொலை, கொள்ளை செஞ்சா?
பொது ஜனம்;அவங்களை தண்டிக்க இன்னொரு பெரிய போலீஸ் பிடிக்கணும்! (விஜிலன்ஸ்) இப்படித்தான் உருவாக்கி கட்டுப்படுத்தணும்! அவங்களும் (விஜிலன்ஸ்) பண்ணா அவங்களுக்கும் மேல...அப்படியே வுட்டுக்கணே போகணும்! வேற வழி!
பொது ஜனம்; ஆமாய்யா! இந்த பொம்பளை எதுக்கோ திருக்குசு வேலை பன்றதுக்காக இந்த ஐடியாவை கொடுக்குதுய்யா! கர்நாடகாவில இழு இழு இழுத்துகிட்டு இருக்குது. போதாக்குறைக்கு பிரண்டு ச்சிகலாவுக்கும் சேர்த்து 15 வருஷமா இழுக்குது! இது கொடுக்குற ஐடியா! இதை காப்பாத்திக்கிறதுக்குத்தான்! இது ஏதோ புரளி வித்தைக் காட்டுது! ஏமாந்திரப்புடாது!
பொது ஜனம்; ஆமாய்யா! முன்னால் உச்சநீதிமன்ற நீதிபதிக் கூட, சொத்துக் கணக்கை அனைத்து நீதிபதிகளும் வெளியிடணும்கிறதுக்கு, இப்படித்தான் நான் வெளியிடமாட்டேன்னு ஒட்டாரம்பண்ணாரு! நீதிபதிகள் தகலறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் வரமாட்டாங்கன்னாரு! நாங்கள் எல்லாம் விசாரணைக்கு அப்பாற்பட்டவங்க! அப்புறம் மக்கள் எதிர்த்த உடனே அடங்கிப்போயிட்டாரு!
பொது ஜனம்; இவங்களே எப்படி? ஆட்டமேட்டிக்கா இவங்களை உயர்த்திக்கிறாங்க! இவங்களுக்கு இந்த உயர்வை கொடுத்தது மக்கள்! மத்தபடி இவங்களும் மக்களில் ஒருவர் தானே! மக்களின் சட்டதிட்டங்கள் அனைவருக்கும் ஒன்று தான்! இது தான் மக்களாட்சி தத்துவம்!
பொது ஜனம்; ஆமாம்! இந்தியாவில் குடியரசுத்தலைவர் பெயரால், அதாவது இந்தியாவின் முதல் குடிமகன் பெயரால் நடைபெறும் ஆட்சி தானே!
பொது ஜனம்; அப்படின்னா வீம்புக்குன்னா பிரதமரை இழுப்பாங்களேய்யா!
பொது ஜனம்; இப்ப மட்டும் இழுக்கலையா! அதுக்கு வரையைரை வைக்கணுமே தவிர லோக்பாலுக்குள்ள வராம பன்றது நல்லதல்ல!
பொது ஜனம்;அமாய்யா! ஆதாரம் காட்டி கொண்டுவரணும். அதுக்கு பல நபர்கள் கொண்ட மக்கள் குழு அமைக்கணும் அந்த குழுவில அனைத்து தரப்பினரும் இடம்பெறணும். அந்தக் குழுவில் ஆதாரங்களை பரிசீலனை செய்தபின் பிரதமர் விசாரணக்குட்படுத்தப்படுவார் என்ற விதியை வேணுன்னா ஏற்படுத்தலாம்.
பொது ஜனம்; யோவ்! லோக்பால் குழுவே அந்த மாதிரி அமைப்புத் தானே!
பொது ஜனம்; இதற்கு மட்டும் மேல் குழு என்ற சிறப்புக் குழு வைத்து பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளலாம். இல்லை அந்தக் குழுவிலேயே பிரதமரை விசாரிக்கும் உயர்மட்டக் குழு என்று ஒரு பிரிவை ஏற்படுத்தலாம்.
பொது ஜனம்; அப்ப பிரதமர் ஒன்றும் எந்திரன்! அல்ல! அவரையும் இதுல கண்டிப்பா கொண்டுவரனும்கற!
பொது ஜனம்; பிரதமர் வந்துட்டா! ..........முதல்வரும் இதுல வந்துருமில்லே!
No comments:
Post a Comment