சமச்சீர் கல்வி: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு
சமச்சீர் கல்வி திட்டத்தை தமிழக அரசு நிறுத்தி வைத்துள்ளதற்கு இடைக்கால தடை விதித்துள்ள சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய உள்ளது.
சமச்சீர் கல்வித் திட்டத்தை தமிழக நிறுத்தி வைத்ததை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால் கொண்ட அமர்வு, தமிழக அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வி சட்ட திருத்தத்துக்கு நேற்று இடைக்கால தடை விதித்தது.
நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், மாணவர்களின் நலன் கருதி பழைய கல்வி முறையை அமல்படுத்த இந்த நீதிமன்றம் அனுமதி மறுக்கிறது. தமிழக அரசு கொண்டு வந்த சட்ட மசோதாவுக்கு இடைக்கால தடை விதிப்பதாக கூறினார். 2011-12ஆம் கல்வியாண்டில் 1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி முறையையே அமல்படுத்த வேண்டும். அதே நேரம் சமச்சீர் கல்வி பாட புத்தகங்களில் தேவையான பக்கங்களை நீக்கவோ, சேர்க்கவோ தமிழக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு இந்த நீதிமன்றம் தடை விதிக்கவில்லை. இந்த வழக்கில் அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தனர்.
இந்தப் பிரச்சனையில் தமிழக அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக இன்று முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது. உயர் நீதிமன்ற உத்தரவால் சமச்சீர் கல்வி முறையை மீண்டும் அமலுக்கு கொண்டு வர வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
எனவே உயர் நீதிமன்றத்தின் இடைக்கால தடையை நீக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய உள்ளது. நீதிமன்ற தீர்ப்பை அடுத்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சி.வி.சண்முகம், தலைமைச் செயலர் தேவேந்திரநாத் சாரங்கி பள்ளிக் கல்வித்துறை செயலர் சபீதா ஆகியோர் நேற்றிரவு அவசர ஆலோசனை நடத்தினர்.
அப்போது நீதிமன்ற தடையை நீக்க கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகுவது பற்றி கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டது. உயர் நீதிமன்ற உத்தரவு அரசுக்கு கிடைத்த பின்பு இன்று மீண்டும் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. அப்போது இறுதி முடிவு எடுக்கப்படும். என்றாலும் பள்ளிகள் வருகிற 15ஆம் தேதி திறக்கப்படும் என்ற அறிவிப்பில் எந்த மாற்றமும் இல்லை என்று பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கிடையே உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான நடவடிக்கையில் தமிழக அரசு வழக்கறிஞர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்காக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அரசு வழக்கறிஞர்களுடன் டெல்லி விரைந்துள்ளார்.
தற்போது உச்ச நீதிமன்றத்துக்கு கோடை கால விடுமுறை என்றாலும் விடுமுறை கால அமர்வில் மேல்முறையீடு செய்து 15ஆம் தேதி பள்ளி திறப்பதற்குள் நல்ல முடிவை பெற்று விடுவோம் என்று அரசு வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்தார்.

.....வெப்துனியா 11.06.2011
********************
பொது ஜனம்; என்னய்யா இது ?
பொது ஜனம்; ஜெ அரசு உச்சநீதிமன்றத்தை ஏமாத்த திட்டம் போட்டு வாதம் வைக்கப்போற விஷயமாம்? செய்தியில் போட்டுக்காட்டினாங்க! அதாவது பழைய பாட்த்திட்ட புத்தகங்கள் அச்சிட்டு வீணாப்போகும் நிலையில் உள்ளதாம் அதனால் அரசுக்கு நஷ்டமாம்!
பொது ஜனம்; என்னப்பா இது! உயர் நீதிமன்றத்தில் "பணம் ஒரு விஷயமேயில்லைன்னு சொல்லிட்டு" டெல்லிக்குப்போய் டகால் டி அடிக்கிறாங்க!
பொது ஜனம்; எதுக்கு? 200 கோடிக்கு மேலே செலவு செஞ்சு ஏற்கனவே அச்சடித்து மாணவர்களுக்கு ரெடியா இருக்கிற சமச்சீர் புத்தகத்தை வீணாக்கணும்? என்று உயர்நீதிமன்றம் கேட்ட கேள்விக்கு ஜெயலலிதா அரசு சொன்ன துப்பு கெட்ட பதில் தானே!
பொது ஜனம்; ஆமாம்! உங்க சொந்தப்பணமா இந்த 200 கோடி என்று நீதிபதிக்கூட மறைமுகமா? ஜெயலலிதா அரசு வக்கீலைப் பாரத்து கேட்டாரே? அப்பக் கூட வெட்கமேயில்லாமல் வாங்கி கட்டிக்கொண்டு வந்துமா? இந்த மாதிரி பைல் பண்ணுதுங்க!
பொது ஜனம்; எப்படியாவது நீதிமன்றத்தை ஏமாத்தணும்? அப்படி ஏமாத்தியாவது இந்த சமச்சீர் கல்வியை நிறுத்தணும், மக்களை துன்புறுத்தனும் இது தான் ஜெயலலிதாவின் நோக்கம்!
பொது ஜனம்; நீதிமன்றத்தை ஏமாத்தறது ஜெயலலிதாவுக்கு கை வந்த கலைப்பா! சொத்து குவிப்பு வழக்கை எவ்வளவு ஆண்டா இழுத்தடிக்குது இதுலேயிருந்து தெரிஞ்சுக்கலாமே!
பொது ஜனம்; இவங்க தானே ஆட்சிக்கு வந்த வுடனே அவசர அவசரமா பத்து நாளைக்குள்ள தெரிஞ்சே அரசு பணத்தை வீணாக்குனாங்க!
பொது ஜனம்; சமச்சீர் புத்தகங்கள் எல்லாம் உலகத் தரமா இல்லையாம்பா! அதையும் உச்சநீதிமன்றத்துகிட்டே சொல்லப்போறாங்களாம்!
பொது ஜனம்; பழைய புத்தகம் மட்டும் உலகத்தரத்துல இருக்குதாம்மா? இதை எந்த கல்வியாளர் சர்ட்டிபிகேட் கொடுத்தார்? அவரு அட்ரசை கொஞ்சம் உச்சநீதிமன்றத்துகிட்டேயே சொல்ல சொல்லுமே பார்ப்போம்!
பொது ஜனம்; நீதிமன்றத்தில இப்படி அல்பமா ஒரு அரசாங்கமே பொய் சொல்லலாமாய்யா!? ச்சே1 ச்சே! நீதிமன்றத்து மேல இருந்த மரியாதையே கெடுக்கிறாங்கய்யா!?
பொது ஜனம்; நீதிமன்றத்தில இப்படி அல்பமா ஒரு அரசாங்கமே பொய் சொல்லலாமாய்யா!? ச்சே1 ச்சே! நீதிமன்றத்து மேல இருந்த மரியாதையே கெடுக்கிறாங்கய்யா!?
பொது ஜனம்; சரி! அந்த "உலகத்தர" பழையப் பாடப் புத்தகத்தை ஏன்? அவசர அவசரமா யாரையும் கேக்காம ஆட்சிக்கு வந்த பத்து நாளைக்குள்ள அச்சடிச்சாங்களாம். கல்வி இவங்க இஷ்டமா? அவ்வளவு பெரிய அப்பா டக்கரா இந்தம்மா!
பொது ஜனம்;இருக்கும்! எல்லாத்தையும் கரைச்சு குடிச்சு வாந்தி எடுத்தவங்களாயிருக்கும்!
பொது ஜனம்; "உலகத் தரம்" என்றால் என்ன? அது மாதிரி எங்கேயிருக்குது!
பொது ஜனம்;இவங்க! உலகத்தர பாடத்தை எல்லாம் படிச்சவங்களா? அதை எல்லாம் படிச்சிட்டுத்தான் அரசியலுக்கு வந்தாங்களா?
பொது ஜனம்; ஜெயலலிதாவின் அரஜாக ஆட்சி வந்ததுலேயிருந்து கோர்ட்டுங்க எல்லாம் பரபரப்பாயிடுச்சுய்யா! வக்கீல்களுக்கு நிறைய வருமானம் வர ஆரம்பிச்சுடுச்சு! கோர்ட்டுல கேஸ் கட்டுங்க ஜாஸ்தியாயிடுச்சு!
பொது ஜனம்; யோவ்! எல்லோராலேயும் வக்கீலுக்கு பீஸ் கொடுத்து மாளாதுய்யா! இல்லாத மக்கள் எங்கப் போவங்க? ஆளை வெட்டிப் போட்டுட்டு மயிராச்சுனு போயிடுறானுங்க! குத்தவாளிங்க! காவல் துறை நடவடிக்கையே எடுக்க மாட்டேங்குது! லாக் அப் டெத் வேற......வரிசையா எங்க பார்த்தாலும் கொலை, கொள்ளை ஒரே அமர்க்களமா இருக்குது!.....எண்ணி ஒரு மாதங்கூட ஆவலை.....எல்லாம் கோர்ட்டுக்கு போய் "ஆட் கொணர்வு" மனு போட்டுத்தான் போலீசை நடவடிக்கை எடுக்க வைக்கிறாங்க!
பொது ஜனம்; இதையெல்லாம் கவனிக்கறதுக்கு எங்கப்பா நேரம் இருக்குது! சமச்சீர் கல்வியை எப்படி கவுக்கலாம்! எனபதற்கே நேரம் சரியா இருக்குது!
பொது ஜனம்; ஆமாம்! இது மாதிரியெல்லாம் கோர்ட்டுக்கு போக ஏழை! பாழையால முடியுமா?
பொது ஜனம்; விடுய்யா! மக்கள் இன்னும் நிறைய அனுபவிக்கணும் போல இருக்கு! .....பார்க்கலாம்....இன்னும் என்னென்ன? அட்டூழியங்கள் நடக்குதுன்னு!?
பொது ஜனம்; உச்சநீதிமன்றம் இந்த டகால்டிகெல்லாம் மசிந்திடுமா? இவங்க! ஏற்கனவே தந்த உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரா இல்லை இந்த புத்தகத்தை அச்சடித்து இருக்காங்க! இது கோர்ட்டு அவமதிப்பு! பேசாம இவங்க மேல் கோர்ட்டு அவமதிப்பு என்று கூறி சரியான தண்டனை கொடுக்கணும்!
பொது ஜனம்; ஆமாம்! ஆணவ ஆட்சிக்கு சரியான சவுக்கடி கொடுக்கணும்! உச்சநீதிமன்ற தீர்ப்பு அனைத்து மாநில அரசுக்கும் ஒரு பாடமா! இருக்கணும்! நீதிமன்றம் தான் மக்களின் நம்பிக்கை என்பதை உச்சநீதிமன்றம் நிருபிக்கணும்!
பொதுஜனம்; உச்சநீதிமன்றம் இந்த அவமதிப்புக்கு தண்டனையா தமிழக சட்டமன்றத்தை ஆறு மாத காலத்துக்கு முடக்கிப்போடலாம்!
பொதுஜனம்! ஆமாம்! இந்த பொதுவான, மக்கள் ஆதரவான, கல்வி சம்பந்தமான விஷயத்துக்கே இவ்வளவு விரோதமா செயல்படறவங்க மத்த விஷயங்களுக்கு என்னென்ன? பண்ணுவாங்க? மக்களை இன்னும் அதிகமாத் தான் கொடுமைப்படுத்துவாங்க! இதை சும்மா விடக்கூடாது.
பொது ஜனம்; பெற்றோர்களும், ஆசிரிய பெருமக்களும், கல்வியாளர்களும், நடுநிலையாளர்களும் சும்மா விட்டுருவாங்களா? என்ன?
பொது ஜனம்; விடு விடு....நீதி மக்கள் பக்கம் தான்!
பொது ஜனம்; மக்களுக்கு ஓரு மண்ணும் தெரியாதுண்ணு நினைக்குதுங்க போல! நம்ம யாரு!?
No comments:
Post a Comment