Pages

Wednesday, 1 June, 2011

மாறன் பதவி விலகவேண்டும், நான் மட்டும் பதவியிலேயே இருப்பேன்!

 தயாநிதியை பிரதமர் பதவி விலகச் சொல்ல வேண்டும்: ஜெயலலிதா


சென்னை, ஜூன் 1: தன் மீதுள்ள குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள தயாநிதி மாறனை பிரதமர் பதவி விலகச் சொல்ல வேண்டும் என்று ஜெயலலிதா இன்று பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.முதல்வர் ஜெயலலிதா இன்று காலை பத்திரிகையாளர் சந்திப்பின்போது தெரிவித்ததாவது...தனியார் பள்ளிகள் கட்டண விவகாரத்தில் அதிக கட்டணம் வசூலிப்பதாக பெற்றோர்கள் தரப்பில் இருந்து புகார் வந்தால், உடனடியாக தொடர்புடைய பள்ளிகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.தயாநிதி மாறன் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் பற்றிய கேள்விக்கு பதில் அளித்த முதல்வர், தயாநிதி மாறன் பிரதமரைச் சந்தித்துப் பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தயாநிதி மாறன் தன் மீதுள்ள குற்றச்சாடுகளை எதிர்கொள்ளும் வகையில் அவர் பதவி விலக வேண்டும். பிரதமர் அவரிடமிருந்து பதவி விலகல் கடிதத்தைக் கேட்டுப் பெற வேண்டும் என்றார்.டிஜிபி நட்ராஜ் விஷயத்தில், ஆணை பெறப்பட்டவுடன் தகுந்த முடிவு மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.

...தினமணி 01.06.2011
****************
பொது ஜனம்; ஊழல் குற்றசாட்டு வந்தாலே பதவி விலக சொல்லும் ஜெயலலிதா, மட்டும் தண்டனை பெற்றாலும் பதவி விலகமாட்டேங்குதே!


பொது ஜனம்; அது தான் மேல் கோர்ட்டுல விட்டுட்டாங்களே! சில கேஸ்ல தான் அவங்க மந்திரிங்க தண்டனை அடைஞ்சாங்க! ஜெயலலிதா தப்பிச்சுகிட்டதே!


பொது ஜனம்; பத்து வருஷத்துக்கு மேலேயே வருமானத்துக்கு அதிகமாக  சொத்து குவித்த வழக்குக்கு மட்டும் டிமிக்கி கொடுத்து கிட்டு இருக்குதே இது ஏன்? இதுக்காக ஜெயலலிதா ஏன் பதவி விலக கூடாது?


பொது ஜனம்; கடந்த ஜ்ந்து வருடம் கர்நாடகாவில் நடந்த ஜெயலலிதாவின்  சொத்து குவிப்பு வழ்க்குக்கு ஆஜரான் வக்கீல் தான் இப்போதைய அட்கேட் ஜெனரல்.  அதாவது தமிழக அரசு வக்கீல். இது மட்டும் ரொம்ப சுத்தமான விஷயமா?


பொது ஜனம்; இது ஜெயலலிதாவின் வழக்கமான ஊழல் பாணி தானேய்யா? அது தமிழக அரசு டான்சி நிலத்தை தனியாருக்கு வித்துட்டு அதில் போட்ட கையெழுத்து தன்னுடையது இல்லை என்று உச்சநீதிமன்றத்திலேயே டகால்டி பண்ணுச்சு! அதையே உச்சநீதிமன்றத்திலே செமத்தியா  4 திட்டு திட்டிட்டு  நீதிபதி விட்டுட்டாங்க!


பொது ஜனம்; அப்ப அந்த கையெழுத்தை யார் போட்டாங்க? அதை கண்டு பிடிக்கலையா? 


பொது ஜனம்; ஜெயலலிதாவின் ஆவி வந்து போட்டிருக்கும்?


பொது ஜனம்; அது எப்படிப்பா? ஜெயலலிதாவால மட்டும் 1 ரூபா சம்பளம் வாங்கிகிட்டு இவ்வளவு சொத்து சேர்க்க முடிந்தது? அதன் ரகசியம் என்ன?


பொது ஜனம்; அவ்வளவு சிக்கனமா குடும்பம் நடத்தி காட்டிச்சு? நீயும் அது மாதிரி சிக்கனமா குடும்பம் நடத்திப்பார் தெரியும் ?


பொது ஜனம்; ஓ இப்படியா....10 பைசா வீட்டு வாடகை, 10 பைசா மளிகை சாமான், 10 பைசா பெட்ரோல் செலவு, 10 பைசா மருத்துவ செலவு, பாக்கி 60 பைசாவை பேங்கில போட்டு, அதுல கிடைக்கிற வட்டிய வாங்கி குடும்பம் நடத்துனாங்களா? அந்த சேமிப்பை வைச்சு தான் இவ்வளவு சொத்துக்களை கஷ்டப்பட்டு வாங்கினாங்களா? சிறுக சேமித்து பெருக வாழ் என்கிற மாதிரி வாழ்ந்தாங்களா?


பொது ஜனம்; அவங்க எல்லாம் பைசா கணக்குல தான் சொத்துக்களை வாங்கினாங்க! கொடைக்கானல் எஸ்டேட், திராட்சை தோட்டம், சிறுதாவூர், பங்களா, மிடாஸ் ஆலை எல்லாம் இப்படி பைசாவில தான் வாங்கினாங்களா? பொது ஜனம்; இருக்கும்! இந்த வழக்கின் தீர்ப்பில தான் இது பற்றி தெளிவாத் தெரியும். எல்லாம் நீதிமன்றத்தின் கையில தான் இருக்குது. இது அதனால தான் டிமிக்கி கொடுக்குது.

 
பொது ஜனம்; இதுவே ஊழிலிலே இருக்குது! இதுக்காக தண்டனை அனுபவிச்சது. ஆனா! மத்தவங்களை மட்டும் பதவி விலக சொல்லுதே! இது பதவி விலக வேண்டியது தானே!பொது ஜனம்; அது தான் ஜெயலலிதாவின் தகிரியம்னு சொல்றாங்க!


பொது ஜனம்; இதுக்கு பேரு தைரியமா? வெடகங்கெட்டத் தனம்.

No comments: