10 ஜூன், 2011 - பிரசுர நேரம் 11:42 ஜிஎம்டி
இலவச கலர் டிவி திட்டம் ரத்து
தமிழகத்தில் முந்தைய திமுக அரசு கொண்டுவந்திருந்த திட்டங்களில் மேலும் ஒன்றை ரத்து செய்யும் விதமாக இலவச கலர் டிவி திட்டத்தை கைவிடுவது என ஜெயலலிதா தலைமையிலான புதிய அதிமுக அரசு அறிவித்துள்ளது.
இலவச கலர் டிவி திட்டத்தின் ஆறாவது சுற்றில் விநியோகிப்பதற்காக சுமார் 7 லட்சம் டிவி பெட்டிகளுக்கு தமிழக அரசு கொடுத்திருந்த ஆர்டர்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார்.
ஆனால் இந்த ஆறாம் சுற்றில் விநியோகிப்பதற்காக ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட ஒரு லட்சத்துக்கும் அதிகமான டிவி பெட்டிகள், அனாதை ஆசிரமங்கள், அங்கன்வாடிகள் போன்ற இடங்களுக்கு வழங்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
முந்தைய திமுக அரசின் இலவச வீட்டுத் திட்டம், மருத்துவ காப்பீட்டுத் திட்டம் போன்றவற்றையும் ஜெயலலிதா அரசு ஏற்கனவே ரத்து செய்து மாற்றுத் திட்டங்களை அறிவித்துள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.
*******************
பொது ஜனம்; இலவச கலர் டீவி திட்டம் ரத்து செய்துட்டாங்களாமே!
பொது ஜனம்; அதை ரத்து செய்துக்கட்டும் வாங்கின டீவி 1,21,000 டீவியை சம்ம்பந்தமே இல்லாதவங்களுக்கு கொடுக்கப்போரதா அறிவிச்சிருக்கே அது எப்படி நியாயமாகும்! ஆஸ்பிட்டலுக்கும், ஊராட்சிகளுக்குமா இந்த டீவியை கொடுக்கப்போறே அப்ப இதுக்கு முன்னாடி ஊராட்சிகளுக்கு கொடுத்த டீவி எல்லாம் என்ன ஆச்சு! மக்களுக்காக கொண்டு வந்த திட்டத்தை எப்படி கண்ட மேனிக்கு தூக்கி கொடுக்க முடியும். அப்ப பேன், மிக்சி, கிரைண்டரையும் ஊராட்சிகளுக்கும், நகராட்சிகளுக்கும், பார்க்கு, ஆஸ்பிட்டல்னு கொடுத்திடலாமே! இதுக்கு எதுக்கு ஒரு திட்டம். இதையும் வீணாக்கத்தான் செய்யுமா? இந்த அரசு!
பொது ஜனம்; ஆமா! இது 2001-2006 இல் கொண்டு வந்த இலவச சைக்கிள் திட்டத்தை அடுத்த வந்த திமுக அரசு ரத்து செய்ததா? இல்லையே! அப்ப இதை மட்டும் ஏன்? இந்த பொம்பளை ரத்து செய்யணும்? போதாக்குறைக்கு வாங்கி வைச்ச டீவியையும் மிச்சம் இருக்கிற வாங்காத மக்களுக்கு கொடுக்காம குப்பையில போடற மாதிரி, சட்டசபையிலே அறிவிப்பு வெளியிட்டிருக்கே! என்னப்பா இது அரசு நடத்தது. அராஜகம் இல்லை நடத்துது.
பொது ஜனம்; இதுக்கும் நீதிமன்றத்திலே தான் வழக்கு போட்டு கேக்கணும்!
பொது ஜனம்; வேற வழி நீதிமன்றம் தான் வழி!
No comments:
Post a Comment