Pages

Saturday, 25 June 2011

ஏழை மக்களின் உயிர்களோடு விளையாடுவது "ஜெயலலிதாவின் சூப்பர் ஸ்பெஷாலிட்டி"




சேலத்தில் 3 மாதமாக சிகிச்சை பெற்று வந்த
சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி நோயாளிகள் `திடீர்' வெளியேற்றம்
மூடப்படுவதாக வதந்தி பரவியதால் பரபரப்பு



சேலம்,ஜுன்.25-

சேலத்தில் 3 மாதமாக சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியில் இருந்து சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் திடீரென வெளியேற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி

சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருச்சி, விழுப்புரம் உள்பட 8 மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.145 கோடி செலவில் சேலத்தில் `சூப்பர் ஸ்பெஷாலிட்டி' ஆஸ்பத்திரி கொண்டுவரப்பட்டது. மத்திய அரசு நிதி ரூ.120 கோடி, மாநில அரசு ரூ.25 கோடி பங்களிப்பில் கட்டப்பட்டது.

இந்த ஆஸ்பத்திரியின் நோக்கமே தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு நிகராக நவீன சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதே. ஆஸ்பத்திரி கடந்த ஆண்டு(2010) ஆகஸ்ட் 20-ந் தேதி தொடங்கி வைக்கப்பட்டாலும் இன்னும் கட்டிடப்பணியே முழுமை பெறவில்லை. மேலும் நவீன சிகிச்சைக்கான பல உபகரண கருவிகளும் பொருத்தப்படவில்லை. ஆஸ்பத்திரி பணியாளர்கள், டாக்டர்கள் நியமனம் போன்றவையும் முழுமை அடையவில்லை

பொதுப்பணித்துறை வசம்

மத்திய அரசின் பொறியாளர்கள் மேற்பார்வையில் கட்டப்பட்டு வரும் இந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி முதலில் பொதுப்பணித்துறை வசம் ஒப்படைக்கப்பட வேண்டும். அதன் பின்னர்தான் சேலம் அரசு ஆஸ்பத்திரி நிர்வாகம் வசம் ஒப்படைக்கப்படும். இவை இரண்டும் இதுவரை நடக்கவில்லை.

இருந்தபோதிலும் கடந்த 3 மாதமாக சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியின் விபத்து மற்றும் அறுவை சிகிச்சை பிரிவு மட்டும் ஒரு மாதிரிக்காக இயக்கப்பட்டு வந்தது. 16 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் பலர் `டிஸ்சார்ஜ்' ஆகி வீடுகளுக்கு திரும்பினர்.

திடீர் வெளியேற்றம்

8 நோயாளிகள் மட்டும் விபத்து மற்றும் அறுவை சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு அவர்கள் உடனடியாக அங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியில் நோயாளிகள் யாரும் அனுமதிக்கப்பட வில்லை.

இதனால், சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியை கைகழுவி விட திட்டமிட்டிருப்பதாக வதந்தி பரவியது. இந்த வதந்தியை ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்த நோயாளிகளின் உறவினர்கள் சிலர் பரப்பி இருப்பதாக கூறப்படுகிறது.

இது குறித்து சேலம் அரசு ஆஸ்பத்திரியின் மருத்துவ அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

காரணம் என்ன?

சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியின் பணிகள் இன்னும் முழுமைபெறவில்லை. நவீன கருவிகளும் இன்னும் பொருத்தப்படவில்லை. ஆனாலும் விபத்து மற்றும் அறுவை சிகிச்சை பிரிவை மட்டும் ஒரு டிரையலுக்காக பயன்படுத்தப்பட்டு வந்தது. அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் படிப்படியாக சிகிச்சை பெற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

அதே வேளையில் நோயாளிகள் பயன்படுத்திய கழிவறையில் தேக்கம் ஏற்பட்டு சுத்தமாக இல்லை. நோயாளிகளின் எண்ணிக்கையும் 4 பேருக்குள்ளாக இருந்ததால், அவர்களை அங்கிருந்து அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றம் செய்தோம். யாரோ தவறான தகவலை சொல்லி மக்களையும் நோயாளிகளையும் திசை திருப்ப முனைந்திருக்கிறார்கள்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

.....தினத்தந்தி 25.06.2011

*************

பொது ஜனம்; ஆட்டைக்கடிச்சி மனிசனைக்கடிச்சி இப்போ ஒட்டுமொத்தமா ஏழைகள் வாழ்வுக்காக கட்டப்பட்ட நவீன மருவத்துவமனையையும் இந்த பொம்பளை கையை வைக்க ஆரம்பிச்சிடுச்சி. இந்த மக்கள் விரோதத்துக்கு சரியான பதிலடி என்றால், இந்த சமூக விரோத ஆட்சிக்கு எதிராக அரசியல் சட்டப்பிரிவு 356 ஐ பயன்படுத்துவது தான்.

பொது ஜனம்; அப்படின்னா?

பொது ஜனம்; ஆட்சி கலைப்பு தான்! மக்கள் எப்படிப்போனாலும் பரவாயில்லை என்ற அதிமுக ஆட்சியை கலைப்பது தான் மக்களை பாதுகாக்கும் வழி! இந்த ஆட்சியின் கோரப்பிடியிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கு இதை விட்டால் வேறு வழியில்லை.

பொது ஜனம்; ஏழைகள் வசதி படைத்தவர்களுக்கு சமமாக பயன்பெறும் அனைத்து திட்டங்களையும் இந்த ஜெயலலிதா ஆட்சி தடை செய்கிறதே! மக்களின் உயிரோடு விளையாடுகின்ற அளவுக்கு வந்துவிட்டது. சமச்சீர் கல்வியில் ஆரம்பித்து, கலைஞர் காப்பீட்டு திட்டம் என தொடர்ந்து இது மாதிரியே பண்ணிக்கொண்டு வரும் இந்த ஆட்சியை கவர்னரிடம் மனு கொடுத்து கலைக்க சொல்வது தான் சிறந்தது. இந்த பிரிவை பயன்படுத்தமாட்டார்கள் என்பதால் தான் இந்த ஆட்சி மிக மோசமான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. நாட்டில் ஜனநாயக ஆட்சி நடைபெறுகிறதா? அல்லது சர்வாதிகார ஆட்சி நடைபெறுகிறதா? என்பதே தெரியவில்லை. எந்த மாநிலத்திலேயும் இது மாதிரி மக்கள் அத்தியாவசங்களை  யாரும் தடைசெயவது இல்லை. பொதுக்கல்வியையும் தனக்கு சாதகமாக தடை செய்து, ஒட்டு மொத்த மக்களின் பிள்ளைகளின் வாழ்க்கையோடு விளையாடும் அதிகாரத்தை எந்த அரசியலமைப்பு இந்த ஜெயலலிதாவிற்கு வழங்கியிருக்கிறது எனபது தெரியவில்லை?. நீதிமன்றங்கள் இதை எப்படி வேடிக்கை பார்க்கிறது?

பொது ஜனம்; இந்த விஷயத்தை உயிரைக் கொடுத்தேனும் தடுக்கவேணும். தனியாருக்கு தாரை வார்க்க நினைக்கும் இந்த நிலைக்கு அனைத்து தரப்பினரும் ஈடுபடவேண்டும். இதற்கும் அந்த பொம்பளை தேவையில்லாத காரணத்தை வைத்திருக்கும்.அத்தனையும் திருட்டுத்தன காரணங்கள் தான்.

பொது ஜனம்; மக்கள் பயன்பாட்டிற்காக இந்த மாதிரி மருத்துவமனைகள் எவராவது கட்டமாட்டார்களா? என்று இருந்த நிலையை மாற்றி கடந்த கலைஞர் அரசு கட்டியதை இந்த அரசு வேண்டுமென்றே முடக்குகிறது. இதையெல்லாம் அதிமுக  தேர்தல் அறிக்கையில் கூறவேயில்லை. இப்படி கூறியிருந்தால் மக்கள் அதிமுக வை முற்றிலும் புறக்கணித்து இருப்பார்கள்.

பொது ஜனம்; ஆமாய்யா! ஆட்சிக்கு வந்த 30 நாளில மொத்தம் 137 கொலைகள் நடந்திருக்கு! இது தான் இதுங்க ஆட்சிக்கு வந்து பண்ண சாதனை! மத்தவங்களுக்கு தினம் வேதனை!  எங்கு பார்! ஓரே கலவரம்! சாலை மறியல்! பெற்றோர்களின் குமுறல்! கல்வியின்றி திரியும் மாணவர்களின் பரிதாப நிலை! அத்தனையும் இந்த பொம்பளை வேடிக்கை பார்த்து சிரிச்சிகிட்டு இருக்குது! நிச்சயம்!  இந்த ஆட்சியை கலைத்தே தீரணும்!

பொது ஜனம்; ஆட்சிக்கு ஒரு மாதத்தில் 137 என்றால் ஒரு நாளைக்கு 5 கொலைகள் வீதம் நடைபெற்றிருக்கின்றன.

பொது ஜனம்; ஆமாய்யா! இதுல அதிக பட்சமா 11 கொலைகள் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்றுள்ளன. அடுத்து விழுப்புரம் மாவட்டத்தில் 11 கொலைகள்.  மொத்த பேரும் தங்க நகைகளை குறிவைத்தே வர்றாங்களே! கொள்ளையடிச்சு அப்படியே சேட்டுகிட்டே கொடுத்து, அப்படியே நகைக்கடைக்கு திருப்பி போயிடுது போல இருக்கே!


பொது ஜனம்; ஆமாய்யா! "அட்சய திருதியை" அன்னைக்கு நகை வாங்கி  வைச்சது கூட இந்த ஒரு மாசத்தில கொள்ளை போயிடுச்சிய்யா!

பொது ஜனம்; போற போக்குல பார்த்தா மக்கள் புரட்சி தான் வெடிக்கும் போல இருக்குது. எகிப்துல நடந்தது இந்த தமிழகத்துக்கு தேவைப்படுவதாக தெரிகிறது. அப்படித்தான் நடக்கவேண்டுமென்றால் அதை யார்? தடுக்க முடியும்?

பொது ஜனம்; இந்த மாதிரி மக்களின் வரிப்பணத்தை வீணாக்கிவிட்டு பெரிசா மத்திய அரசிடம் சண்டை போடுதே இந்த பொம்பளை! நாட்டுக்கு யார் நல்லது பண்ணா என்னய்யா! இது தான் பண்ணலை அடுத்தவங்க பன்றதையும் மரை கழண்ட மாதிரி இது எதுக்கு தடுக்குது!?

பொது ஜனம்; அதுதான் அந்த பொம்பளையோட "சூப்பர் ஸ்பெஷாலிட்டி"


No comments: