Pages

Wednesday, 1 June 2011

பெற்றோரை தற்காலிகமாக பாதுகாத்தது மதுரை கிளை உயர்நீதிமன்றம்....




 தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கத் தடை


மதுரை, ஜூன்.1: தனியார் பள்ளிகளில் கடந்த ஆண்டு கோவிந்தராஜன் கமிட்டி நிர்ணயித்த கல்விக் கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்க மதுரை உயர்நீதிமன்றக் கிளை தடை விதித்துள்ளது.தனியார் பள்ளிகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் வந்ததையடுத்து இதுதொடர்பாக ஆய்வுசெய்ய நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டியை முந்தைய அரசு நியமித்தது.


கோவிந்தராஜன் கமிட்டியும் தனியார் பள்ளிகளுக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்து அரசுக்கு அறிக்கை அளித்தது. எனினும் கோவிந்தராஜன் கமிட்டி நிர்ணயித்த கட்டணம் குறைவாக இருப்பதாக தனியார் பள்ளிகள் குறைகூறின.இந்த நிலையில் கோவிந்தராஜன் அந்த கமிட்டி தலைவர் பதவியில் இருந்து விலகினார்.அவரைத் தொடர்ந்து நீதிபதி ரவிராஜபாண்டியனை கமிட்டித் தலைவராக அரசு நியமித்தது.


அந்தக் கமிட்டியும் தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டணம் தொடர்பான முடிவை அறிவிக்கும் கட்டத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது.புதிய அரசு பதவியேற்றதும், கல்விக் கட்டண நிர்ணய விவகாரத்தில் அரசு தலையிடாது என்றும், நீதிபதி ரவிராஜபாண்டியன் சமர்ப்பிக்கும் அறிக்கையை அரசு அமல்படுத்தும் என்றும் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். 


எனினும் தனியார் பள்ளிகள் கேட்டுக்கொண்டால் கல்விக் கட்டண நிர்ணய விவகாரத்தில் அரசு தலையிடும் என்றும் ஜெயலலிதா தெரிவித்திருந்தார்.இந்த நிலையில் கடந்த ஆண்டு கோவிந்தராஜன் கமிட்டி நிர்ணயித்த கல்விக் கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்க மதுரை உயர்நீதிமன்றக் கிளை இன்று தடைவிதித்தது.

 ....தினமணி 01.06.2011
***************** 

பொது ஜனம்; இந்த இடைக்கால உத்தரவினால் பெற்றோர்களுக்கு ஒரு தற்கால நிம்மதி கிடைத்திருக்கிறது. ஆனால் இது நிரந்தரமான நிம்மதியாக மாற்றப்படவேண்டும்.


பொது ஜனம்; ஆமாம்பா! இவங்க வாயைக்கட்டி வயத்தைக்கட்டி சேர்த்தை பணத்தை எல்லாம் இந்த கல்வி கொள்ளைக்காரங்க மொத்தமா மக்களிடமிருந்து கொள்ளையடிக்க ஆரம்பிச்சுட்டாங்கப்பா!


பொது ஜனம்; ஒரே தவணையில் ஒரு வருடக் கட்டணம் முழுவதையும் கட்ட சொல்லி மாணவரை வலியுறுத்துவதையும் தடை செய்திருக்கிறதப்பா! நீதிமன்றம்.


பொது ஜனம்; ஏறக்குறைய 90 சதவீதப் பள்ளிகளில் கோவிந்தராஜன் கமிட்டிக்கு எதிராகத்தான் வசூலிக்கிறாங்கப்பா! தம்மாத்துண்டு பள்ளி! அதுவும் தட்டிக்கட்டி, ஒரே ஹாலில் தான் தொடக்கல்வி  பிரி கே ஜி யிலிருந்து 5 வது வகுப்பு வரை நடத்துதுங்க. அது கிட்டதட்ட 3000 ரூபா அதிகமாக பீஸ் வாங்குதுங்க!. கமிட்டி நிர்ணயித்த கட்டணமே ஆயிரம் ரூபா தான்!


பொது ஜனம்; நகரத்திலேயே இப்படின்னா! கிராமத்துல சொல்லவே வேணா! பிள்ளைங்க விளையாடறதுக்கு கூட இடமில்லை! பிள்ளைங்க  சாப்பிடறதுக்கு கூட இடமில்லை. வீடு தான் பள்ளியே! இந்த நிலையிலேயே இவங்க இப்படி அநியாயமா வசூலிக்கிறாங்க! இன்னொரு பள்ளியிலே அங்கிகாரமே அரசு ரத்து பண்ணிடுச்சி ஆனா பீஸ் 7000 ரூபா வாங்கறாங்க! 

பொது ஜனம்; பீஸ் கூட தனித்தனியா பிரிச்சு வாங்கரதில்லே மொத்தமா இவ்வளவு பீஸ் அவ்வளவு தான் போடறாங்க! எதெதுக்கு எவ்வளவு? பீஸ்? எனபதையெல்லாம் போடறேதேயில்லை! கேட்டா வேறு ஸ்கூல்ல போய் சேர்த்துக்க என்று சொல்றானுங்க!


பொது ஜனம்; கிரிமினல் நடவடிக்கைகளை பள்ளி நடத்துறவங்களே செய்ய ஆரம்பிச்சுட்டாங்கன்னா! அந்த பள்ளியில படிக்கிற மாணவர்கள் எப்படி நல்ல மாணவர்களா! எதிர்காலத்தில வருவாங்க!



பொது ஜனம்; முதல்லே சொன்னேனப்பா இந்த ஆட்சியில நீதிமன்றங்கள் தான் மக்களை பாதுகாக்கணும். நீதியரசர்களை நம்பித்தான் மக்கள் இருக்கிறார்கள். ஜெயலலிதாவையெல்லாம் நம்ப முடியாது. அதனால தான் தலைமச்செயலகத்தை ஐகோர்ட் காம்பவுண்டுள்ள கொண்டு போயிட்டா நல்லா இருக்கும். அடிக்கடி கோர்ட்டுக்கு போயிட்டு வர வசதியாக இருக்கும்.

பொது ஜனம்; புகார் வந்தா நடவடிக்கை எடுப்போம் என்று முதல்வர் ஜெயலலிதா சொல்லியிருக்கேப்பா! இதுவரைக்கும் புகாரே வரவில்லை என்று சொல்லியிருக்கே!

பொது ஜனம். போய் மெயிலை பார்க்கசொல்லு, எக்கச்சக்கமா? புகார் வந்திருக்கும்! ஒவ்வொரு பள்ளியின் அரஜகத்தையும் ஏற்கனவே பெற்றோர்கள் நேரிலும் புகார் அளித்திருக்கிறார்கள். இன்னும் அனுப்பிக்கொண்டேயிருக்கிறார்கள். இப்பக்கூட தொலைக்காட்சியில பெற்றோர் போராட்டங்களை எல்லாம் காட்டறாங்களே! இந்தம்மா என்ன எதையுமே பார்க்கறதேயில்லையா! பேர்ப்பர் கூட பார்க்கரதில்லை போலிருக்குதே!

பொது ஜனம்; புகார் வராமையா! பெற்றோர் சங்கம் நீதிமன்றம் சென்றது. என்னய்யா இது முழு பூசணிக்காயை, இன்னொரு முழு பூசணிக்காயிலேயே மறைக்கற மாதிரி இருக்குது. அப்படித்தான் இருக்குது ஜெயலலிதாவின் அறிக்கை.....

பொது ஜனம்; இவங்க இப்படி ஏமாத்திகிட்டு இருப்பாங்க! என்று தெரிந்து தான் நீதிமன்றம் இந்த தடை உத்தரவை பிறப்பித்தது. பெத்தவங்க பயத்தையும் கொஞ்சம் போக்கியிருக்கிறது.  நீதிக்கு ஒரு ஓஓஓ.....

பொது ஜனம்; இதோட விடக்கூடாது மீறியும் இந்த பள்ளிகள் பெறோரிடம் பீஸ் வாங்கும்! அரசு உடனடியாக இந்த பள்ளிகளின் அங்கிகாரத்தை ரத்து பண்ணி நீதிமன்ற அவமதிப்பாக கருதி நிர்வாகிகளை கைது செய்து உள்ளே தள்ளணும்.

பொது ஜனம்; இந்த ஜெயலலிதா அரசு அதையெல்லாம் செய்யாதுப்பா! அவங்களுக்கு கொடிதூக்கும்! புகாரே வராத மாதிரி அறிக்கை விடுதே! 

பொது ஜனம்; புகாரே வரவேக்கூடாதுன்னு எச்சரிக்கை விடறாங்களா!
பொது ஜனம்; பார்க்கலாம்! என்ன பண்ணுதுன்னு!

No comments: