Pages

Thursday, 31 December, 2009

நமது மூதாதையர் ஒரு லெமூர்!

உலகில் தோன்றிய அனைத்து உயிரினங்களும் தனித்தனியாக தோன்றியவைகள் அல்ல. அனைத்தும் ஒரு உயிரினத்தின் தொடர்ச்சியான பரிணாம வளர்ச்சியே என்று வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியவர், உயிர் பரிணாமத்தின் தந்தை (Father of evolution) எனப் போற்றப்படும் சார்லஸ் டார்வின் என்பது அனைவருக்கும் தெரியும். ஆயினும் இதை அவர் 150 ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட பொழுது அத்தனை எளிதில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.


அன்றைய காலத்தில் மிகுந்த சர்ச்சைகளை எழுப்பியது. இது டார்வினுக்கு எதிராக விக்டோரியா மகாராணியார் ஆட்சிக் காலத்திலேயே விமர்சிக்கப்பட்டது. அதற்கு காரணம் அதை நிருபிக்க அவரிடம் எந்த ஆதாரமும் கைவசம் அப்போது இல்லை. மனதனின் மூதாதையர் (Ancestor) ஒரு குரங்கு என்ற மிக சர்ச்சைக்குரிய விஷயத்தை நிருபிக்குமாறு அவரிடமே சண்டையிட்டனர்.

அதற்கு முற்றுப்புள்ளி வைக்க 1974 ஆம் ஆண்டுதான் ஒரு கல் படிமம் (fossil slab) கிடைத்தது. அது லூசி என்ற பெண் மனித குரங்கின் படிமம் தான் அது. அதை ஆராய்ந்தவர் டாக்டர் டொனால்டு ஜோகன்ஸ். அந்த மனித குரங்கு கல் (Primate) படிமத்தின் வயது 35 லட்சம் ஆண்டுகள். அந்த குரங்கு வாழந்த காலம் அத்தனை லட்ச காலத்திற்கு முந்தையது.

அதன் பின் தற்பொழுது 2007 ஆம் ஆண்டு ஒரு கல் படிமம் கண்டுபிடிக்கப்பட்டு நிருபிக்கப்பட்டுள்ளது. இது பாதிக்குரங்கு (Prosimian- before ape)  எனப்படும் இனமாகும். இதை நிருபித்தவர் ஜோன் ஹோரம் (Joen Horum) என்னும் நார்வே புதை படிவ ஆராய்ச்சியாளர் (Palaeantologist). இது உண்மையில் 2007 இல் கண்டுபிடிக்கவில்லை. அதற்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டவை. அதாவது 1983 இல் ஜெர்மனியின் மெசல் பிட் என்னும் படிம புதை குழியில் கண்டெடுக்கப்பட்டவை. ஆனால் எல்லாவற்றிலும் இருக்கும் வணிக நோக்கு இதிலும் இருந்ததால் இது கிடைக்க இவ்வளவு தாமதமாயிற்று. இது சற்று சுவராசியமானவை..........


இந்த மெசல் பிட்டில் பொழுதுபோக்கிற்காகவும், வணிகத்திற்காகவும் ஈடுபடும் வணிக நிறுவனத்தினர் பலர் அகழ்ந்து கொண்டிருக்கும் பொழுது இந்த படிமமும் கிடைத்தது. இது அந்த வணிகர் விலை பேச ஆரம்பித்தார் பலரிடம். ஆனால் இதன் மதிப்பு கூடுவதைக்கண்டும், இதற்கு பலர் போட்டி போடுவதைக்கண்டும், இதற்கு மாற்றாக போலியாக படிமங்களை உருவாக்கி விற்று காசு பார்க்க ஆரம்பித்தனர்.

இது மாதிரி போலியான படிமம் ஒன்று ஜெர்மன் மியூசியத்திற்கும் கிடைத்தது. அதை கொண்டு சென்று ஆராய்ந்த பொழுது இது போலியானது என்று அறிந்து இதன் அசலைத் தேடி அலைந்தனர். பலன் இல்லை. இதை பல நாட்கள் ஆராய்ந்து பின் எப்படியோ மோப்பம் பிடித்த ஜோன் அதன் அசல் இருக்கும் இடம் மற்றும் வைத்திருக்கும் நபரை கண்டு பேரம் பேசினார். கடைசியாக 10 லட்சம் டாலர் என்ற ஒப்பந்தம் இறுதியானது.

இது சர்வதேச ஆய்வாளர்களின் ஒப்பந்தங்களுடன் கூடியது. இதன் மாதிரியை முதலில் ஆரய்ந்தனர். பிறகு அசல் எனப்படுபவையும் எக்ஸ் ரே கதிர் மூலம் ஆராய்ந்தார். அதில் அது உண்மையானதுதான் என்று அறிந்ததுடன். (போலியில் எலும்பு மஜ்ஜைகள் தெரியாது) அதை வாங்கி தன்னுடைய நார்வே மியூசியத்திற்கு கொண்டு சென்றார் ஜோன்.

அதை அவரின் ஆய்வுக்குழுவினர் பலவகையில் ஆராய்ந்தனர். இந்த படிமத்தின் பெயர் எடா (Ida). இது ஜோனின் 6 வயது மகளின் பெயர் தான். இவர் பெண்ணின் பெயரை ஒரு குரங்கிற்கு வைத்தார். மூதாதையருக்குத் தானே வைத்தார். இது ஒரு லெமூர் (Lemur) இனக் குரங்கு (தேவாங்கு போன்று இருக்கும்). இதன் வயது சுமார் 4 கோடியே 70 லட்சம் ஆண்டுகள். வால் 24 செமீ நீளம் கொண்டது. (இதன் வால் ஒன்னரை மீட்டர் நீளம் வளரக்கூடியது). கால்கள் கட்டை விரலுடன் மனிதனின் விரல்களைப் போன்று அமைந்துள்ளது. அதே போன்று நடக்கக்கூடியது ஆகும். அதாவது பாதிக்குரங்கு. இதை மேலும் முப்பரிமான சோதனைக்கு உட்படுத்த ஜெர்மனிக்கு எடுத்துச் சென்ற போது (அங்கு தான் இந்தளவுக்கு வசதிகள் உள்ளது) பல அரியத் தகவல்கள் கிடைக்கப்பெற்றன. மனிதனை போன்ற பற்கள், தாடைகள் இவற்றிற்கும் ஒத்திருந்ததினை கண்டனர்.

இது ஒரு பெண் குரங்கு மேலும் இதன் வயது 8 மாதம், (மனிதனின் 6 வயதிற்கு சமம்). இது இறந்தது இரவு நேரத்தில். மெசல் பிட் ஏரியில் நீர் அருந்த செல்கையில் இது கார்பன் டை ஆக்சைடு வாயு தாக்கி அதனால் மயக்கமுற்று, அந்த தண்ணீருக்கு அடியில் சென்று மாட்டிக்கொண்டு மடிந்து கல்படிமம் ஆனது. அந்தப் பகுதிகளில் எரிமலைகள் இருந்திருந்ததினால் இந்த நிகழ்வு  நடந்திருக்கின்றது. எரிமலை எனபது பூமியின் மையப்பகுதி நெருப்பு குழம்பு என்பது தெரியும் அது மேல் பகுதியில் உள்ள நீரை, நெருப்பு அடைந்தவுடன் வினைபுரிந்து ஆவியாதல் நடைபெறுகிறது. அந்த ஆவி வெளியேற முடியாமல் திணறிக்கொண்டிருக்கையில், ஒருநாள் வெடிப்பது தான் எரிமலை.

அப்போது பூமியில் இருக்கும் நீரும் வெளிவரும். அப்படி வெளியேறிய நீர், நீர் நிலைகளாக எரிமலைகளின் பக்கத்தில் , பல வேதிபொருட்கள் கலந்த அமில ஏரியாக அமைந்திருப்பது வழக்கம். நெருப்பு குழம்பு நீர் நிலைகளை அடைந்தாலும் அந்த நீர் நிலை அமில ஏரியாக மாறும். இந்த நீர் நிலைகளை கந்தக ஏரி என்று கூட அழைப்பர். இப்போதும் அது போன்ற ஏரிகள், எரிமலைகள் உள்ள நாடுகளில் உள்ளன. அது தெரியாமல் எடா குரங்கு நீர் அருந்த வந்ததால், வாயுத் தாக்கத்தால், இந்த இறப்பு நேர்ந்து  கல் படிமமாகிவிட்டது, என்ற ஆய்வு முடிவை  தெரிவித்துள்ளனர், இந்த ஆய்வாளர்கள்.

எப்படியோ சார்லஸ் டார்வின் மறைந்து பல ஆண்டுகள் ஆயினும் அவர் கூறியவைகளை நிருபிக்க இப்போது ஆதாரங்கள் உதவியது. இது போன்று பல படிமங்களை பல செல்வந்தர்கள் தங்கள் வீட்டு படுக்கையறையிலும், வரவேற்பறையிலும் அழகுக்காகவும், பெருமைக்காகவும் வைத்துள்ளனர். இவற்றையெல்லாம் தந்தால் பல ஆய்வுகளை மேற்கொள்ள ஏதுவாக இருக்கும் என்று டாக்டர் ஜோன் தெரிவிக்கின்றார்.

காந்தியத்துக்கு  சம்பந்தமில்லா விட்டாலும் காந்தியின் கைத்தடி, கண்ணாடி போன்றவைகளை அதிக ஏலத்தில் வாங்கி வீட்டிற்குள் பெருமைக்காக வைத்திருக்கும் செல்வந்தர்கள், இந்த கலபடிமங்களையும் வாங்கி வைத்திருப்பதனால் என்ன பயன்?. இம்மாதிரி ஆராய்ச்சியாளர்களுக்கு கொடுத்துதவினால் மனித குலத்திற்கு வேண்டிய ஆய்வுகள், இந்த பூமியில் ஏற்பட்ட அதிசயங்களை ஆராய உதவும். உணர்வார்களா?

நன்றி டிஸ்கவரி சேனல்.

Wednesday, 30 December, 2009

இந்திய தேசிய நுகர்வோர் (பூசல்கள்) குறை தீர்ப்பாணையம்
இந்திய தேசிய நுகர்வோர் (பூசல்கள்) குறை தீர்ப்பாணையம் (National Consumer Disputes Redressal Commission) நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986, (Consumer Protection Act, 1986) இன் படி இந்தியாவின் நுகர்வோருக்கு ஏற்படும் குறைகள் மற்றும் பூசல்களை களையவும். நேர்மையற்ற, மனசாட்சியற்ற வணிக நோக்கர்களிடமிருந்து நுகர்வோர்களை பாதுகாக்கவும் இவ்வாணையம் இந்திய அரசால் கட்டமைக்கப்பட்டது.
நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் நுகர்வோரின் இன்னல்களை, துயர்களை துடைக்கும் பொருட்டு மற்றும் அதற்கான வடிவமைக்கப்பெற்ற சட்டத்தை அமல்படுத்தும் ஆணையமாக கடந்த சில ஆண்டுகளில் செயல்பட்டுவருகின்றது. இவ்வாணையம் மக்களின் குறைகளை விரைவில் தீர்க்க அணுகும் ஊர்தியாகவும், மக்களை பாதுகாக்கவும் மற்றும் செலவில்லாத குறை தீர்ப்பாணையமாகவும் மக்கள் அணுகும் விதத்தில் செயல்படுகின்றது.

இச்சட்ட அமலினால் நுகர்வோர் விற்பனையாளர்களிடம் எச்சரிக்கையுடனும்,   விழிப்புடன் இருக்க தங்களை தீர்மானித்துக் கொள்கின்றனர்.

இச்சட்ட அமலுக்கு முன் வாடிக்கையாளர்கள் விழிப்புடனும் அல்லது வாங்குபவர்கள் விழிப்புடன் இருக்கவேண்டும் என்ற நிலையில் நுகர்வோர்கள் தள்ளப்பட்டிருந்தனர்.


குறை தீர்வு மன்றம்

இச்சட்டம் வகுத்துள்ள நிபந்தனையின்படி மைய நுகர்வோர் பாதுகாப்பு மன்றம் ஒன்றை மைய அரசின் நுகர்வோர் குறை தீர்வு அமைச்சக அமைச்சர் தலைமையிலும்,  மாநிலத்தில் மாநில நுகர்வோர் குறை தீர்வு அமைச்சக அமைச்சரின் தலைமையிலும்  நுகர்வோர் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் பொருட்டு மன்றம் அமைத்திடல் வேண்டும். அம்மன்றம் நுகர்வோருக்கு ஏற்படும் குறைகளை களைந்திட அல்லது தீர்வு கண்டிட வேண்டும்.
கட்டமைவு
தேசிய நுகர்வோர் ஆணையம் 1988  ஆம் ஆண்டில் கட்டமைக்கப்பட்டது. இதன் தலைமை பொறுப்பை அமர்வு அல்லது ஒய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஏற்றிருப்பார். தற்பொழுது தலைமை பொறுப்பை ஏற்றிருப்பவர் நீதியரசர் அசோக் பான். இவர் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆவார். இவர் தலைவராகவும் அவருடன் கூடிய ஒன்பது பேர் உறுப்பினர்களாகவும் உள்ளனர்.

ஆணையத்தின் ஏற்பாடு
 • இச்சட்டம் வழங்கியுள்ள முன்னேற்பாடுகள் பொருட்கள் அதே நேரத்தில் சேவைகளையும் உள்ளடக்கியதாக இருக்கின்றது.
 • பொருட்கள் என்பவை எவரொருவர் அல்லது கூட்டு சேர்ந்தோ தயாரிப்பது அல்லது உருவாக்குவது மற்றும் அதனை மொத்த வணிகர் ம்ற்றும் சில்லரை வணிகரின் மூலமாக நுகர்வோருக்கு விற்பது. 
 • சேவைகள் என்பவை போக்குவரத்து, தொலைபேசி, மின்சாரம், கட்டுமானம், வங்கி சார்ந்த (நிதி மனை சார்ந்த-பண இலேவாதேவி), காப்பீடு, மருத்துவ சிகிச்சை இன்னும் பல.,
 • சேவைகளாக பொதுவாக கூறுமிடத்து வாழ்க்கைத் தொழிலர்களான (Professionals) மருத்துவர்கள், பொறியாளர்கள், கட்டடக் கலைஞர்கள், வழக்குரைஞர்கள் இன்னும் பல., இது போன்றவைகளையும் குறிக்கின்றன.
  புகார் அளிக்க
  புகாரை நுகர்வோர் எழுத்துமூலமாக ஆணையத்திற்கு நேரிடையாகவோ அல்லது நுகர்வோரின் அதிகாரம் பெற்றவர் எவரும் அளிக்கலாம். அவர் வழக்குரைஞராக இருக்கவேண்டும் என்பதில்லை.  வழக்குகளையும் (புகார் தாரர்) நுகர்வோரே வழக்காடலாம் அல்லது அதிகாரம் பெற்ற எந்தவோரு நபரும் வழக்காடலாம். மனுதாரருக்கு (நுகர்வோருக்கு) துணை நிற்பவர் (உடன் உறைபவர்) எவரும் இலர் என்பதையுணர்ந்து, அப்புகாரின் நேர்மையைக் கருதி ஆணையமே வழக்குப் பிரதிநிதிகளை நியமிக்கின்றது . இம்முறை மேல்முறையீட்டிலும் பின்பற்றுகின்றது.

  புகார் ஏற்கும் முறை
  மாவட்ட ஆயம்                              ரூபாய் இருபது இலட்சம் வரை
  மாநில ஆணையம்                      ரூபாய் ஒரு கோடி வரை
  தேசிய ஆணையம்                      ரூபாய் ஒரு கோடிக்கு மேல் உள்ளவைகள்

  குறிப்பு இதனுள் அடங்கிய பொருள்களின்  மற்றும் சேவைகளின்  மதிப்புகளை அந்த குறிப்பிட்ட பொருள் சேவை இவைகளின் விலை மதிப்பை குறிப்பதாகும். இதன் பொருளை இலவச சேவைகளுக்கோ, ஒப்பந்த அடிப்படையில் சுய தேவைகளுக்காக ஏற்படுத்துகின்ற பொருளின் மதிப்பைக்குறிப்பதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. சேவை என்பதற்கு மேற்கூறிய விளக்கத்தை ஒரு சுட்டிக்காட்டுபவையாக  எடுத்துக் கொள்ளவேண்டுமே தவிர எல்லாம் அதனுள் அடங்கியதாக  எடுத்துக் கொள்ளக்கூடாது.

  கட்டணம் கிடையாது
  நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் மிகவும் மலிவான மாற்று இன்னல் நீக்கும் வழியாக நுகர்வோருக்கு ஏற்கனவே ஏற்பட்ட இன்னல்களை நீக்குவனவாக உரிமையியல் தீர்வின் மூலம் அவர் துயர்களை துடைக்கின்றது. புகார் / மேல் முறையீடு / மனு தாக்கல் செய்வதற்காக இச்சட்டம் வகுத்துள்ளபடி அவர்களிடம் (நுகர்வோரிடம்) எந்தவித கட்டணமோ, செயல் கட்டணமோ வசூலிப்பது கிடையாது.  காலவிரயமின்றி
  இதன் சட்டமுறைமைகள், எளிமையானதாகவும், சுருக்கமானதாகவும் இருப்பதாலும், இதன் பெருமுயற்சி தீர்வு காண்பதையே நோக்கமாக கொண்டிருப்பதால் இதன் வழக்குகள் வெகு விரைவில் தீர்வு காணப்படுகின்றன, வெகு விரவில் முடிக்கப்படுகின்றன.

  மேல்முறையீடு
  நுகர்வோருக்கு மாவட்ட ஆயத்தின் தீர்வு திருப்தியளிக்கவில்லையென்றால் மேல்முறையீட்டுக்கு மாநில ஆணையத்தை அணுகலாம் அதிலும் திருப்தியளிக்கவில்லையென்றால் தேசிய ஆணையத்தை அணுகலாம்.

  தேசிய ஆணையம் அமைந்துள்ள இடம்
  தேசிய ஆணையத்தின் பதிவு அலுவலகாமக புது தில்லி, ஜன்பத், உள்ள ஜன்பத் பவனில் பி பிரிவு (பி விங்) 7 வது தளத்தில்  அமைந்துள்ளது. ஆணையம் சனி, ஞாயிறு மற்றும் மைய அரசு விடுமுறை நாட்களைத் தவிர, அனைத்து நாட்களிலும் திங்கள் முதல் வெள்ளிவரை காலை 10 மணி முதல் 5 மணி வரை இயங்கும். ஆணையத்தை தொலைபேசி மூலம் அணுகுவதற்கு ஏதுவாக கீழ்கண்ட எண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 011-23712109, 23712459, 23389248. தொலை நகல் 23712456.  ஆணையங்கள் நுகர்வோரின் நண்பனாக மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய ஆணையங்கள் செயல்படுகின்றன.
   நூல் ஆதாராம் Consumer Protection Act, 1986-K.S,Mahalingam. மற்றும் நூகர்வோர் தமிழ் சட்ட நூல்கள், மத்திய அரசு இணையதளம்.

  இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986 (The Consumer Protection Act, 1986 ) இந்தியாவில் வாழும் மக்களின் நுகர்வுத் தன்மையை பாதுகாக்கும் பொருட்டு இந்திய அரசால் ஏற்படுத்தப்பெற்றச் சட்டமாகும். ஜூலை 1, 1987 முதல் இச்சட்டம் அமலுக்கு வந்த்து.
  இச்சட்டம் 1991 மற்றும் 1993 களில் திருத்தச் சட்டங்களாக வெளிவந்தன். நுகர்வோர் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் விதமாகவும், அதன் செயற்பாடுகள், முக்கியத்துவங்கள் அதிகரிக்கப்பட்டு டிசம்பர், 2002 இல் புதிய திருத்தச்சட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டு, மார்ச் 15, 2003 புதிய பரிமானங்களுடன் வெளியிடப்பட்டு அமலுக்கு வந்த்தது.
  இதன்படி வடிவமைக்கப்பட்ட விதிகள் நுகர்வோர் பாதுகாப்பு விதிகள், 1987 என அழைக்கப்படுகின்றன. இந்த விதிகள் மார்ச் 5, 2004  முதல் நாட்டுக்கு அறிமுகம் செய்யப்ப்ட்டது.

  முக்கிய கூறுகள்
  • இச்சட்டம் மைய அரசால்  விலக்கு அளிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளைத் தவிர ஏனைய எல்லா பொருட்களுக்கும், சேவைகளுக்கும் இச்சட்டம் பொருந்தும்.
  • அனைத்துறையின் எதுவாயினும், தனியார் மற்றும் பொதுத் துறை மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் அல்லது தனி நபர் இவை யாவரையும் கட்டுப் படுத்தும். இச்சட்டம் வகுத்துள்ளதின்படி இவர்கள் நட்டஈடு வழங்க அதே சமயத்தில் தடை செய்யவோ,தண்டணை  வழங்கவோ வழி செய்கின்றது.
  • நுகர்வோரை போற்றிப் பேணுகின்ற உரிமைகளாவன;-
  (1) உடலுக்கும், உடமைக்கும் தீங்கு விளைகின்ற வகையில் வணிக நோக்கில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளிடமிருந்து நுகர்வோர் தங்களை பாதுகாத்துக்கொள்ளும் உரிமை. (2) பொருட்கள் மற்றும் சேவைகளின் தரம், எடை, வீரியம், கலப்படமற்ற, தரநிர்ணயம் மற்றும் விலை அறிந்து கொள்ளவும், நேர்மையற்ற வணிகத்தினரிடமிருந்து நுகர்வோர் தங்களை தற்காத்துக் கொள்ளும் உரிமை. (3) மலிவு அல்லது போட்டி விலைகளில் கிடைக்கும் பலதரப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகள் குறித்த நம்பகத்தன்மையை நுகரவோருக்கு உறுதிபடுத்துதல் உரிமை. (4) மலிவான சலுகை விளம்பரங்கள் மற்றும் ஊடகங்களினால் இழுக்கப்பட்டு, அதன் பலனை வணிகத்தினர்கள் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டதை தெரிவிக்கும் உரிமை (5) நேர்மையற்றை வணிகத் தொழிலினால் அல்லது மனச்சாட்சியற்ற சுரண்டல்களினால் ஏற்பட்ட பாதிப்பினால் நுகர்வோர் குறைதீர்க்கும் மையத்தை நாடுதல் உரிமை.

  Tuesday, 29 December, 2009

  கொலைகாரி...?  பிரேசிலின் வாண்டரர்ஸ் சிலந்தி,  (Brazilian wanderers spider) உலகிலேயே மிக கொடிய விஷம் உள்ள சிலந்தி.  இந்த சிலந்தி தாக்கினால் அதன் விஷம் மனிதனின் நரம்பு மண்டலத்தை தாக்கி, இரத்த அணுக்களை தாக்கி இருதயத்தை செயலிழக்கவும் செய்யும். இச்சிலந்தி தாக்கி உயிருடன் இருந்தால் ஆண்மைக்குறைபாடும் ஏற்படும். இதன் விஷம் ஆண்மைக்குத் தூதுவனாக கருதப்படும் நைட்ரிக் அமிலத்தை அதிகப்படுத்தும், அதன்மூலம் இரத்த ஒட்டத்தை அதிகமாக்கும். இதன் உச்சநிலையாக ஆண்மை பை விரிந்து (Priapism) அங்கேயே தங்கி மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் என்று அமேசான் காடுகளில் விஷப்பூச்சிகளின் ஆராய்ச்சி மேற்கொண்ட ஸ்டீவ் என்ற ஆராய்ச்சியாளர் கூறுகின்றார். பிரேசில் காடுகளில் வாழும் சட்டாரே மாவே என்ற பழங்குடியினரும் இதை உறுதிப்படுத்துகின்றனர்.

  இவ்வகை சிலந்திகள் அமேசான் காடுகளில் தான் அதிகம் இருக்கின்றது. உலகில் வாழும் 50,000 சிலந்தி வகைகளில் இச்சிலந்தி வகையே அதிக நஞ்சு கொண்டவை.சமயங்களில் காலணிகளில் (சூக்களில்) மறைந்திருப்பது தெரியாமால் அணிவதால் இச்சிலந்தியின் தாக்குதலுக்கு மனிதர்கள் ஆளாவதுண்டு. குழந்தைகளும் இந்த தாக்குதலுக்கு ஆளாவதுண்டு. இப்பழங்குடியின மக்களை இவ்விஷங்கள் அவ்வளவாக பாதிப்பதில்லை. காரணம் இவர்கள் அதற்குரிய சில எறும்புகளை கொண்டு தங்கள் உடலில் விஷமேற்றுதல் மூலம் தங்கள் உடல்களை இந்த தாக்குதலுக்கு எதிராக இருக்கு தயார் படுத்தி கொள்கின்றனர். இதற்கு பயன் படும் எறும்பு புல்லட் எறும்பு என்று அழைக்கப்படுகின்றது. இந்த புல்லட் எறும்பில் ஒன்று கடித்தாலே மனிதன் இறந்து விடுவான். அதில் அந்தளவுக்கு விஷம். இதை தங்கள் உடலில் கடிக்கவைப்பதன் மூலம் இவர்களின் உடல்கள் விஷ எதிர்ப்புக்கு ஆளாகின்றது. இந்த சிலந்தியின் அறிவியல் பெயர்படி இதை கொலைகாரி (Murderess) என்றழைக்கின்றனர். இந்தியாவில் இவ்வகை சிலந்திகள் காணப்படுவதில்லை என்றாலும், சில இந்திய சிலந்திகளினால் ஒவ்வாமை ஏற்பட வாய்ப்புண்டு.

  ஷூ, காலணிகளிக்குள் ரச கற்புரங்களை அவ்வப்பொழுது போட்டு வைத்தாலும், மற்றும் காலணிக்கென்று தனியானதொரு அறைகொண்டு (அதிலும் ரச கற்பூரம் போட்டு) பாதுகாத்தோமானால் இப்புச்சிகள் காலணிகளிடம் நெருங்காது. ஷூக்கள், காலணிகள் அணிவதற்கு முன் வழக்கமாக அவற்றை கீழே தரையில் ஒரு மூறை தட்டி, குச்சி கொண்டு துழவி (கையினால் சுத்தம் செய்யாமல்) சுத்தம் செய்து அணிந்து கொள்ளவேண்டும். குழந்தைக்ள ஷூ அணியும் பொழுது பெற்றோர்கள் சிறப்பு கவனம் எடுத்து கொள்ளவேண்டும். குழந்தைகளுக்கும் இம்முறைப்படி எச்சரிக்கையுடன் கையாளப் பழக்கப்படுத்தவேண்டும். பெரும்பாலும் வீட்டில் அதிக அடைசல்கள் இருந்தால் இம்மாதிரி பூச்சிகள் வீட்டை நெருங்கும்.இம்மாதிரி பூச்சிகளால் குழந்தைகளே அதிக பாதிப்படைவர். ஷூவில் தேள் இருந்தது தெரியாமல் அப்படியே அணிவித்து பள்ளிக்கு அனுப்பியதால், குழந்தைகள் பாதிப்புக்குள்ளான சம்பவங்கள் உண்டு. குழந்தைகளுக்கு அந்த பூச்சி கடிப்பதை, கொட்டுவதைக்கூட சொல்லத்தெரியாது. செருப்பு கடிப்பதாகத்தான் சொல்லும். பெற்றோர்கள் கவனமுடன் இருப்பது நன.

  நன்றி டிஸ்கவரி சேனல்


  Monday, 28 December, 2009

  நான் ஏன் கண்டுபிடித்தேன்?  மிக்கைல் கலாஷ்னிக்கோவ் (Mikhail Timofeyevich Kalashnikov,) என்ற பெயர் கொண்டவரும், நவம்பர் 10, 1919 ரஷ்யாவில் பிறந்தவருமான, இவர், ரஷ்ய ராணுவத்தில் சிறு படைக்கலன்களை வடிவமைப்பவராக (Small Arms Designer) பணிபுரிந்தார்.  இவர் வடிவமைத்தவற்றுள் மிகவும் புகழ்பெற்றது தான் ஏ கே 47 வகை தாக்குதல் துப்பாக்கி (Assault Riffle) ((அ)எந்திரத் துப்பாக்கி என்று அழைக்கப்படும்-Machine Gun) இவரை கலாஷ்னிக்கோவ் என்று சுருக்கமாக அழைப்பர்.

  1938 ல் ரஷ்ய செஞ்சேனைப் படைப்பிரிவில் கட்டாயமாக சேர்க்கப்பட்ட இவர். அங்கே பீரங்கி வண்டியின் கம்மியர் (Mechanic) மற்றும் ஒட்டுநர் (Driver) பணியாளராக பணிபுரிந்துவந்தார். ரஷ்யாவின் குறிப்பிடத்தக்கப் பின்னடைவான பிரயன்ஸக் தாக்குதலில் ரஷ்யப் படைகள் மிகவும் மோசமான நிலையில் பின் வாங்கின. இந்தத் தாக்குதலே இத்துப்பாக்கியை உருவாக்கக் காரணமாயிற்று.

  இந்த போருக்குப்பின் ஏற்பட்ட உடல்நலக்குறைவால் கலாஷ்நிக்கோவ் 6 மாதம் ஒய்வில் இருக்கும் நிலை ஏற்பட்டது, இவர் மருத்துவமனையில் இருக்கும் சமயத்தில் பல வீரர்கள் படையில் பயன்படுத்தும் துப்பாக்கிகளின் செயல்பாடுகள் குறித்து புகார் தெரிவித்ததை அறிந்தார். ரஷ்யப் படைகளிடம் உறுதியான, செயல் திறன் கொண்ட துப்பாக்கிகள் இல்லா நிலைக்கு ரஷ்யப் படைகள் தள்ளப்பட்டதை உணர்ந்து, இவரை நவீன ரக துப்பாக்கி தயாரிக்க பணித்தது. இதற்காக அவருக்கு எந்தவித சலுகையும், விடுப்பும் அளிக்க மறுத்து விட்டது ரஷ்ய ராணுவம். இருப்பினும்,  எந்திரத்துப்பாக்கி வடிவமைக்கும் எண்ணம் கொண்டார். உடல் நலிவடைந்த நிலையில் இருந்த நிலையிலும் இதில் உறுதியாக இருந்தார். இதனிடையே இவர் உருவாக்கிய முதல் எந்திரத்துப்பாக்கி இராணுவத்தினாரல் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. (காரணம் முதலிலேயே பாராட்டி விட்டால், அடுத்த முயற்சி இருக்காது என்பதால் தான். இது பிறகு தான் அவருக்குத் தெரியும். இருந்தாலும் கொஞ்சம் ஒவர்.) ஆனால் இவரின் முயற்சியைக் கண்காணித்தது.

  1942 முதல் இவர் செஞ்சேனைப் படைப்பிரிவின் தலைமையகத்துக்காக துப்பாக்கிகளை வடிவமைக்கும் பிரிவில் உதவி புரிந்துக் கொண்டிருந்தார். 1944 இல் புதிய வாயுவினால் செயல்படக்கூடிய சிறிய துப்பாக்கியை அப்போது பயன்படுத்தப்பட்டு வந்த துப்பாக்கியின் முன் மாதிரியை வைத்து உருவாக்க ஆரம்பித்து 1946 ல் தாக்குதல் துப்பாக்கிகளை வடிவமைக்கும் நிலைக்குத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டார். அவர் உருவாக்கிய அடிப்படை பலத் துப்பாக்கிகளை வடிவமைக்கும் முன் மாதிரியை உருவாக்கியது. இதன் உச்சநிலையாக 1947 ல் ஏகே-47 வகை (தானியங்கி கலாஷினிகோவ் மாதிரி 1947) தாக்குதல் துப்பாக்கி உருவாகியது. இதன் பின் கலாஷினிகோவ் மிகவும் பிரபலமாகப் பேசப்பட்டார்.

  இரண்டாம் உலகப்போருக்குப்பின் சோவியத் இராணுவத்தின் சிறிய படைக்கலன் பொது வடிவமைப்பாளராக பதவி உயர்வுபெற்றார். இவருடைய வடிவமைப்பு ஜெர்மனியின் யுகோ ஷிமெய்சர் மற்றும் வெர்னர் குருனர் வடிவமைப்புகள் 1950களில் சேர்க்கப்பட்டது.(ஜெர்மனியைத் தோற்கடித்தவர்களிடமிருந்தே)  பின்னாளில் குழுத் தானியங்கி படைக்கருவிகள் ஏகே-47 க்கும் மேலான ஆர் பி கே (ருக்நாய் பியுல்மியாட் கலாஷ்னிக்கோவ் - இலகு எந்திரத்துப்பாக்கி) மற்றும் பி கே (பியுல் மியாட் கலாஷ்நிக்கோவா-கலாஷ்நிக்கோவ் எந்திரத் துப்பாக்கி) வகைத் துப்பாக்கிகளும் வடிவமைக்கப்பட்டது.

  இந்த துப்பாக்கியின் வியத்தகு செயல்பாடுகள் தான் வியட்நாம் போரில் வடவியட்நாமுக்கு வெற்றியைத் தேடித்தந்தது. அமெரிக்காவுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. இரண்டாம் உலகப்போரில்அமெரிக்காவுக்கு மிகப்பெரிய பாதிப்பு எதுவும் இல்லை. வியட்நாம் போரில் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்தது. இரண்டாம் உலகப்போரில் ரஷ்ய ராணுவத்தினரின் பயன்பாட்டுக்காக தயாரிக்க முற்பட்டு, 1947 இல் தான் இறுதியடைந்தது. இந்த ஆயுதம். இரண்டாம் உலகப்போர் முடிந்த பின் தான் பயன்பாட்டுக்கே வந்தது. ஆனாலும் ரஷ்யர்களுக்கு அவ்வளவாக பயன்படவில்லை பிற நாடுகளுக்குத்தான் அதிகமாக பயன்பட்டது.

  1949 கலாஷ்நிக்கோவ் துப்பாக்கித் தயாரிப்புகளுக்காக தன்னை முழுமையாக உட்படுத்திக்கொண்டார். ரியுச்சர்ஸ் தொலைக்காட்சிக்கு அளித்தப் பேட்டியில்

  தன்னுடைய தாயரிப்புகள் தரமுள்ளதாகவம், நல்ல பெயர்க்காகவும், நல்ல விஷயங்களுக்காகவும் பயன்படவேண்டும் என்று விரும்புகின்றேன்.

  கலாஷினிகோவ் துப்பாக்கிகள் மிகப்பிரபலமானத் துப்பாக்கியாகப் பலராலும் அறியப்பட்டதால் அவருடையப் பெயரும் அதே அளவிற்கு உயர்ந்தது என்றால் மிகையாகாது. அதன் பலனாக அவர் அதன் 1997- 50 ஆண்டுப் பொன் விழாவின் போது கூறியவை:

  நான் என் படைப்புகளுக்காகப் பெருமையடைகின்றேன் அதே வேளையில் அதைத் தீவிரவாதிகளும் , சமூக விரோதிகளும் அப்பாவி மக்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுவதைக் கண்டு மிகுந்த வேதனை அடைகின்றேன். அதைக் கண்டுபிடித்தமைக்கும் மிகுந்த வேதனை அடைகின்றேன். இந்த நிலை தெரிந்திருந்தால் இதை கண்டுபிடித்திருக்கமாட்டேன். இனி விவசாயிகளுக்கு பயனளிக்கும் விதமாக எந்திரங்களை வடிவமைக்கவிருக்கிறேன். அதன் மூலம் அவர்கள் வாழ்வும் நாட்டின் வளவும் பெருகும்.

  என்று ஜெர்மனியில் பேசினார்.

  கலாஷ்னிக்கோவ் இரு முறை சோசலிச தொழிலாளர்களின் மாவீரன் (Hero of the Socialist Labours) என்றப் பட்டத்தைப் பெற்றுள்ளார்.தொழில்நுட்ப அறிவியலில் உயர்தர முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். சரி இவ்வளவு பெரிய கண்டுபிடிப்புகளை உருவாக்கியுள்ளாரே, நிச்சயம் உலகப் பணக்காரர்களின் வரிசையில் இடம் பெற்றிருப்பாரா? என்றால் இல்லை. இதுவரை 10 கோடிக்கும் மேலான தாக்குதல் துப்பாக்கிகள் (Assault Riffles) தயாரிக்கப்பட்டு வலம் வந்துக்கொண்டிருக்கும் நேரத்தில், அவர் அதற்காக எந்தப் பயனும் அடைந்ததில்லை. அவர் சன்மானமாகப் பெற்றுக் கொண்டிருப்பது மாநில ஒய்வூதியம் மட்டுமே. (இவர்களை போன்றவர்கள் இருந்தால் ரஷ்யா ஏன்? உயராது). இவருடைய படைப்புகளுக்கு தனி வணிகச் சின்னங்களை (branded logo) உருவாக்கி, ஜெர்மன் நிறுவனம், அவற்றை தயாரிப்புகளின் மேல் பொறித்து வெளியிடுகின்றன. அதில் ஒன்று ஏ கே 74.

  (ஆதாரம் தேவநேயப்பாவணர் நூலக்ம் மற்றும் அவரின் வாழ்க்கை வரலாறு இணையத்தளம்)

  Sunday, 27 December, 2009

  ஆரியம் என்பது மரியாதை, பார்ப்பன சோவின் புளுகு
  பார்ப்பன துக்ளக் புத்தகத்தில் பார்ப்பனர் சோவினால் எழுதப்படுவது,  ஆரிய வேதங்களின் புனிதத்தை பற்றி கேள்வி பதிலாக அளித்து வருவது, சோவின் பார்ப்பனீய ஆதரவு அப்பட்டமாக தெரிகின்றது. இது ஆச்சரியமான விஈயமில்லை என்றாலும், அந்த பத்திரிகைக்கு பெயர் துக்ளக் என்பதற்கு பதிலாக ஆரியப் பார்ப்பனீயம் என்றே பெயர் வைத்திருக்கலாம். இந்த பத்திரிகையை பார்ப்பனர்கள் தவிர வேறு எவரும் வாசிப்பதில்லை. ஆகையால் இதை இப்போது இணையத்திலும் வெளியிட்டு பரப்புரை செய்கின்றனர். பார்ப்பன ஆதரவாளர்கள் சிலர்.

  இதோ துக்களக்கில் சோ ஆரியப் பார்ப்பனீயத்தை எப்படி பாதுகாக்கின்றார். அதை எப்படி ஆதரிக்கின்றார் என்பது இது ஒரு உதாரணம்......(இது மாதிரி நிறைய இடங்களில் ஆதரித்து கட்டுரையை தொடர்ந்து கொண்டிருக்கின்றார்)

  கே 18. கண்ணம்மா என் காதலியில், பாரதியார், " ஆரியப் பெண்களுக்கு திரைகளுண்டோ என்கிறார். ஆரியர், திராவிடர் என பிரிவுகள் இருப்பதை பாரதியார் ஒப்புக் கொள்வதாகத் தானே இதற்கு அர்த்தம்?

  ப. திராவிட என்பது பிரதேசத்தைக் குறிக்கிற சொல். பூகோள ரீதியானது. 'ஆரிய' என்பது மரியாதையைக் குறிப்பது; இனத்தை அல்ல. ஆகையால் பாரதி பாடலில் வருவது இனப்பிரிவு பற்றியோ, ஜாதிப் பிரிவு பற்றியோ அல்ல.  பாரதியார் ஆரியப் பெண்களுக்கு திரைகளுண்டோ? என்று கூறியிருக்கின்றாரே என்று கேட்ட கேள்விக்கு சோ அளிக்கும் பதில் தான் மேற்குறிப்பிடப்பட்டவை. ஆரியம் என்பது மரியாதை சொல்? அது யாருக்கு மரியாதை சொல என்பதை அவர் விளக்கவில்லை. தாழ்த்தப்பட்டவர்கள் எனக் கூறப்படுபவர்களுக்கா? இல்லை ஒட்டு மொத்த திராவிட சமூகத்தவருக்கா? என்றால் இல்லை. பார்ப்பனர்களுக்கு மரியாதை எனபதாகத்தான் அவர் வெளியிடுகிறார். பார்ப்பனர்களுக்காக எழுதப்பட்ட  வேதங்களில் உள்ள புனிதங்களைப் ப்ற்றி ஒரு பார்ப்பனர் சொல்லுவதில் எந்த ஆச்சரியமுமில்லை.


  பார்ப்பனர்கள் பிர்மாவின் தொடையில் பிறந்தவர்கள் என்று வேதங்களில் குறிப்பிடப்பட்டிருந்தால் சோ அந்த வேதநூலை அவரே கொளுத்த சொல்லியிருப்பார். ஒருவேளை திராவிடர்களை பற்றி உயர்வாக எழுதியிருந்தாலும் திராவிடர்கள் அதை ஆதரிக்க மாட்டார்கள். திராவிடர்கள் பார்ப்பனர்களைப் போல இழிவான எண்ணம் கொண்டவர்கள் அல்லர்.  ஏன்? மனிதனை எந்த வகையிலும் பிரிக்க நினைக்காதவன் திராவிடன். மனிதனை மனிதனாகத்தான் பார்க்கவேண்டும் என்று நம்புபவன். ஆகையால் தான் திராவிடன் எப்போதுமே உயர்ந்தவனாக இருக்கின்றான். அவனை பிரிக்க சூழ்ச்சி செய்யும் ஆரியன் தான் மீண்டும் மீண்டும் மிரட்டி இந்த வேதங்களை அவனிடமே விளக்கி கொண்டிருக்கின்றான், மிகத் தாழ்ந்தவனாக காட்டிக் கொண்டிருக்கின்றான்.. பார்ப்பனன் நம்ப வேண்டும் என்பதற்காக அல்ல. அவன் குழந்தையாக இருக்கும்போதே அவரின் (பார்ப்பனரின் பார்ப்பன பெற்றோர்கள்) பெற்றோர்கள் அந்த நம்பிக்கை நஞ்சை ஊற்றிவிடுகிறார்களே! ஆகையால் அவர்களின் இளமைக்காலத்திலேயே அவர்கள் அறிந்தது தான். சோவே கண்டுபிடித்ததா? இதெல்லாம் என்றால் இல்லை. இதுவும் அவரின் தாய் தந்தையர் விதைத்தது தான்.


  பரம்பரை பரம்பரையாக ஆரியர்கள் இந்த வஞ்சகத்தை சூத்திரர்கள் என்று அவர்கள் வேதத்தால் அழைக்கப்படும் (எப்போதும் உயரியவர்களாக இருக்கும்) திராவிடர்களிடத்தில் புகுத்திக் கொண்டே வருகின்றனர். அதற்கு ஆரிய மொழி சமஸ்கிருதத்தையும் துணைக்கு வைத்துக்கொள்கின்றனர். இந்த டெக்னாலஜி உலகத்திலும் இதை இன்னும் தைரியமாக ஆரியர்கள் அதுவும் திராவிடர்கள் கண்டுபிடித்த டெக்னாலஜியைக் கொண்டே புகுத்த முனைகிறார்கள் என்றால். அவர்கள் எண்ணம் என்ன? என்பது இதன் மூலம் தெள்ளத் தெளிவாகின்றது.


  பார்ப்பன சோ வேதங்களை பற்றி உயர்வாக எழுதுவதற்கு காரணம் இதுதான், அவரின் தாய் தந்தையர் குழந்தை சோவுக்கு வேதத்தில் உள்ள அவரின் ஜாதியை பற்றி உயர்வாக கூறி நம்பிக்கையை வளர்த்ததினால் அந்த பார்ப்பனர்களுக்காக வாதடுகிறார். இதே அந்த வேதத்தில் பார்ப்பனரை பற்றி தரக்குறைவாக தாழ்த்தப்பட்டவனாக உருவகப்படுத்தி எழுதி இருந்தால் சோ அந்த வேதத்தை முதல் ஆளாக நின்று கொளுத்த சொல்லியிருப்பார், இப்போது திராவிடர்களானத் தமிழர்கள் கொளுத்த சொல்லுகிறார்கள். அவ்வளவுதான் வித்தியாசம்-   (துக்ளக்- வேதம் பற்றிய சோ கேள்வி பதில்கள்)

  இந்த ஆரியப் பார்ப்பனீய வேதத்தை, இனியும் நம்பி மோசம் போகாதீர்! திராவிடர்களே! தமிழர்களே!

  Saturday, 26 December, 2009

  மரணபயத்தின் எதிர் விளைவுகளே கடவுள் நம்பிக்கைகள்
  ஆம் முன்பு பயன்படுத்தி வந்ததை நாம் அப்படியே பின்பற்றி வருவது தான் நம்பிக்கைகள் எல்லாம். தாமாக எவருக்கும் எந்த நம்பிக்கைகளும் வந்துவிடுவதில்லை. முதன் முதலில் தந்தையை யார் அறிமுகப்படுத்துகிறார். தாய். அவர் சொல்லாமல் இவர் தான் தந்தை என்று எவருக்கும் தெரிய வாய்ப்பில்லை. அதை போன்றவைதான் மதங்களும், அதை சார்ந்த கடவுள்களும். நீங்கள், இருக்கும் கடவுள்களின் உருவங்கள் (எந்த மதக்கடவுள்களின் உருவங்கள் ஆனாலும்) தான் என்றில்லை,  எந்த ஒரு புதிய உருவத்தையும் காட்டி சிறு குழந்தையை வணங்க சொல்லுங்கள். முதல்ல குழந்தை ஏன்? வணங்க வேண்டும்? (வணங்குதல் என்றாலே தெரியாது) அப்படியென்றால் என்ன? இது என்னது? என்று தான் கேட்கும். ஏன் அதை வணங்கா விட்டால் அடிக்க கூட செய்வோம். அப்போதும் ஆட்டம் காட்டிவிட்டு செல்லத்தான் செய்யும். பிள்ளைகளை வன்முறையில்லாமல் கண்டிக்க பேய் பிசாசுகளை அறிமுகப்படுத்துகின்றோம். இப்படி ஆரம்பிப்பது தான் நம்பிக்கைகள்.

  அதைப்போல  ஒரு வீட்டில் தாடியுடன் இருக்கும் பெரியாரையும், விவேகானந்தர் (இன்னும் சில படங்கள்) காட்டி இந்த மாதிரி செய்தால் இவரிடம் சொல்லி விடுவோம், அவர் வந்ததும் உன்னை தண்டிப்பார் என்று அந்த குழந்தையின் சேட்டையைத் வன்மையின்றி தடுக்க தாய், தந்தையர் ஏற்படுத்திய செயலை குழந்தை தவறாக உருவகப்படுத்தி கொண்டு விட்டது.  நடு இரவில் அந்த  உருவத்தை கனவாக கண்டு, அவர் (பெரியார்) என்னை துரத்தி வருகின்றார், நான் எந்த தவறும் செய்யமாட்டேன், அவர் என்னை பார்க்கிறார், அவரை மூடுங்கள் என்று அலர ஆரம்பித்து விட்டது. பின் துணிய மூடிய பிறகுதான் தூங்க ஆரம்பித்தது. (ஒன்றை நினைத்து கொண்டிருக்கையில், அதுவே கனவாக வரும்)

  இப்படித்தான் குழந்தைகளுக்கு நம்பிக்கைகள் பலரால் ஊட்டப்பட்டு வளருகின்றன. எந்தக் குழந்தையும் அதுவாக நம்பிக்கைகளை வளர்த்துக் கொள்வதில்லை. அப்படித்தான் வேதங்கள், மதநம்பிக்கைகள், உயர்வான எண்ணங்கள், உயர்சாதி, தாழ்ந்த சாதி, மொழிப்பற்று என்ற எண்ணம் எல்லாமே. ஏன் அனைத்து மனித மாச்சர்யங்களும், யாராவது கற்று கொடுத்தால் தான் வரும்.

  ஏன்? மரணங்கள் என்றால் என்ன? என்று குழந்தைக்கு தெரியாது? காரிய வீட்டிற்கு செல்லும் குழந்தை எல்லோரும் அழுவதை பார்த்து அதுவும் அழுகின்றது. அதை பார்த்ததும் அனைவரும் அழுவதை நிறுத்திவிட்டு குழந்தையைத்தான் சமாதனப்படுத்துவார்கள். அதேபோன்று அந்த சவத்தை கண்டு அது அஞ்சுவதும் இல்லை, மாறாக அதன் மீதே ஏறி ஆடும், அதை எழுப்பும். ஏன் என்றால் அதற்கு மரணம் என்றால் என்ன என்று தெரியாது.அதைத்தான், அந்த வயதை இளங்கன்று பயமறியாத வயது என்று கூறுகின்றனர். (பெரிய மனிதனுக்கு அந்த சவத்தை பார்த்தாலே பயம், ஆனால். சுடுகாட்டிலேயே பல குடும்பங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அந்த குழந்தைக்கு அது மாதிரி நம்பிக்கைகளை வளர்த்திருக்கமாட்டார்கள் அந்த பெற்றோர்கள்.)

  அதே குழந்தைக்கு மரணம் என்பதை அறிந்தவுடன் பயம் என்று ஒன்று வந்து விடுகின்றது. மரணம் எப்படி இருக்கும்?  ஏன் அழுகிறார்கள்? என்று  தாய் தந்தையரை பார்த்து கேட்கும் குழந்தையின் கேள்விக்கு, ""இதுவரை அதை அனுபவிக்கமுடியாது, யாரும் அனுபவித்தது கிடையாது, அதுதான் முடிவு. இயற்கையிலிருந்து தோன்றியவை எல்லாம் இயற்கையை அடைவது வாடிக்கை "",  என்பது தான் பதிலாக இருக்கும். இன்னும் சிலர் ""இறைவனிடம் அடைவது"" என்றும், இன்னும் சிலர் முன்பு மறைந்த உறவினர்களின் பெயரைக் குறிப்பிட்டு அவர்களிடம் சென்றடைவது தான் மரணம்""  என்றும் ஒப்புக்கு சப்பாக ஒன்றை கூறுவார்கள். உடனே அந்த குழந்தைக்கு அங்கிருந்து பயமும், அது குறித்த தேடல்களும் ஆரம்பித்துவிடும். வளர்ந்தவுடன் அந்த கேள்விக்கு விடை தேட அதுவும் முற்படுகின்றது. அவ்வாறு தேடுதலின் படி அவரவர்க்கு கிடைத்தவைகளின் மூலம் நம்பிக்கை ஒன்று ஏற்படுகிறது. அந்தந்த நம்பிக்கைகளின் படிஎழுந்தவைகளே இத்தனை கடவுள்கள்.

  இப்படி புறப்பட்டவர் தான் புத்தர் (மரணம்,....இதை பார்த்து தியானம் மேற்கொண்டார்). இப்படி புறப்பட்டவர் தான் இராமலிங்க அடிகளார், விவேகானந்தர் (மிக சமீபமாக). அவர்கள் இருக்கும் பொழுதே ஆரிய இந்து மதம் இருந்தது, ஆரிய வேதமும் இருந்தது. அவருக்கும் இந்த மத நம்பிக்கைகளை அவரின் தாய் தந்தையர் விதைத்திருந்தனர், குருமார்கள் இருந்தனர். அதை ஏற்றுக்கொள்ள மனமில்லாமல் புறப்பட்டவர்கள் தான் இவர்கள். அவர்கள் இதிலிருந்து வேறு பட்டு ஒரு புதிய தத்துவங்களை அறிமுகப்படுத்தினர். அப்போது இவர்களுக்கு கிடைத்த பட்டம் கடவுள் நம்பிக்கையற்றவன் என்பது தான். இன்னும் சிலர் பார்ப்பன துவேசி என்று ஒரு படி அதிகம் போய் விமர்சித்தனர்.

  இன்னும் சமீபமாக தந்தை பெரியார் ஆன்மீகவாதியாக புற்ப்பட்டு, இவைகளை ஒதுக்கியப்பின் பகுத்தறிவுவாதியானவர். ஆன்மீகத்தில் கண்டவைகளை கொண்டு அவர் உருவாக்கியது தான் ""கடவுளை மற மனிதனை நினை""........இப்படி நினைத்தாலும் மரணத்தை சந்தித்து தான் ஆகவேண்டும். இப்படி நினைக்காவிட்டாலும் மரணத்தை மனிதன் சந்தித்து தான் ஆக வேண்டும் என்ற கோட்பாடுதான் இது. (மரணம் வரும்போது வரட்டும், அதுவரை ஏதாவது உருப்படியாக இந்த உலகுக்கு செய் என்பது தான்...) இது சிலருக்கு விருப்பமானதாக இருக்கிறது சிலருக்கு விருப்பமானதாக இல்லை. அதாவது விருப்பமில்லாதவர்கள் இன்னும் தேடுகிறார்கள் அவ்வளவு தான்...

  கற்பனையாக இது நடந்தால் என்று வைத்து கொண்டால்.......  இரு குழந்தைகளை தேர்ந்தெடுத்து (சற்று நினைவு தெரிந்தவுடன்) ஒன்றை காட்டில் வளருமாறு அனுப்பினோமானால், ஒரு 18 வருடம் கழித்து அந்த காட்டில் வளரும் குழந்தை  மொழி தெரியாமல், எந்த நம்பிக்கைக்கும் ஆட்படாமல் மிகத் தெளிவாக அந்த சூழலுக்கு ஏற்ப வளர்ந்து விடும்.  பேய், பிசாசு, கடவுள் போன்ற எந்த அச்சத்தையும் கொண்டிராமல் இருக்கும். இங்கிருந்து வளர்ந்த குழந்தை எல்லாவித நம்பிக்கைகளுடன், பயங்களுடனும் வளர்ந்திருக்கும்.


  இதெல்லாம் அறியாதவர்கள் அல்ல நாம் என்பதை அறியாத ஆன்மீக வாதிகள்,  மதங்களையும், கடவுள்களையும் என்னமோ இவர்களுக்கு மட்டும் கடவுள் என்று ஒன்று வந்து அருள்பாலித்தது போல் தத்துவங்களை பொழிந்து தள்ளுவார்கள். ( கடவுளுக்கே இன்னும் காஸ்டியும் மாற்றாமல் (costume changing) இருக்கின்றோம், என்பதை உணராமால். இதுவே பண்டைய ராஜா காலத்து உடைகள் தான், வேல், கதாயுதம்....நகைகள்..... இப்போது எல்லாம் ஏ கே 47, ஜீன்ஸ், டீ சர்ட்.....) இவர்களும் ஒரு காலத்தில் குழந்தையாக இருந்ததை மறந்து விட்டு. நாம் ஏதாவது கேட்டால் நீங்கள் அந்த நம்பிக்கையில் இருந்து பாருங்கள என்று நமக்கே புத்திமதி சொல்லுவார்கள்.  இந்த அதிமேதாவித்தன ஆன்மீகவாதிகள். மீறி ஏதாவது கேட்டால் இதை உணரமுடியுமா? அதைப் போல் தான் இதையும் உணர்ந்து கொள்ளவேண்டும்? இதனால் என்ன பயன்? ஒன்றும் இல்லை. (உணர்ந்தது போல் நடித்தாலும் மண்டையை போட்டு தான் ஆகவேண்டும். ஒதுக்கினாலும் மண்டையைப் போட்டு தான் ஆகவேண்டும்.)


  இப்படி நம்பிக்கைகள், கோட்பாடுகள் அவரவர் கண்டுபிடிப்புகளின் படி உருவாகிக்கொண்டே வருகின்றது. தத்துவங்களும் உருவாகிக்கொண்டே வருகின்றது. இவையெல்லாம் மரணபயத்தை அடிப்படையாக கொண்டே உருவாகின்றது. இந்தியாவை பொறுத்தவரை பெரும்பான்மையானவரின் ஒரே மதம் இந்து மதம் அப்புறம் எப்படி? இத்தனை விதமான தத்துவங்கள். இத்தனை விதமான குருமார்கள். இன்று அவரவர் ஏற்படுத்திய தத்துவங்கள ஒவ்வொன்றும் ஒவ்வொரு மதங்களாகிவிட்டன. அந்த காலத்தில் அவ்வளவுதான் பகுத்தறிவு. அவ்வளவுதான் அவர்களால் சிந்திக்க முடிந்தது, அவ்வளவுதான் முடியும். (இந்த காலத்திலும் டெக்னாலஜியை பயன்படுத்தி கொண்டு ஆரிய பார்ப்பனர்கள் மீண்டும் மீண்டும் அதே வேதங்களை புகுத்துகின்றார்களே, அதை விடவா?).   இப்படி இன்னும் மரண பயத்தை நோக்கி புறப்படுபவர்கள், ஏதாவது சிந்தித்து கொண்டுதான் இருப்பார்கள். இன்னும் புதிய புதிய தத்துவங்கள் வந்து கொண்டுதான் இருக்கும்.

  இப்படித் தேடிக்கொண்டிருப்பதற்குள் வேற்று கிரகத்திலிருந்து புறப்பட்டு வரும் மனிதர்கள் வேறொன்றை கொண்டு வந்து புகுத்தி விடுவார்கள். (அவர்கள் மனிதர்களா? ). அவர்கள் இன்னும் 150 வருடங்களுக்குள் வந்து சேருவார்கள் என்பது கேரள விஞ்ஞானியின் இ.எஸ்.பி (Extra Sensational Power). (செய்தி விஜய் டி.வி) ஆனால் ஆராய்ச்சிக்காக வியாழனுக்கு நாம் ராக்கெட்டை அனுப்பிவிட்டோம். அவர்கள் பார்ப்பதற்கே மிக பயங்கரமாக இருக்கின்றனர். (அவர்களுக்கு இங்கிருப்பவர்கள் பயங்கரமாகத் தெரியலாம்) அவர்கள் என்ன மதத்தை கொண்டு வரப்போகின்றனரோ? எந்த என்ன சாதியை கொண்டு வரப்போகின்றார்களோ? எந்த கடவுளை கொண்டு வரப்போகின்றார்களோ? என்ன மொழியை கொண்டு வரப்போகின்றார்களோ? என்ன புத்தகத்தை கொண்டுவரப்போகின்றார்களோ?அல்லது இங்கு வந்து தான் புத்தகம் எழுதப்போகின்றார்களோ?.....இல்லை இங்கிருப்பவர்களோடு போர் புரியப்போகின்றார்களோ?.. எதிர்காலத்தினர் தான்..... பார்க்கப்போகின்றனர்......

  Friday, 25 December, 2009

  பேசும் கலை வளர்ப்போம்- 3

   பேசும் கலை வளர்ப்போம் 
  3

    தமிழை, இயல்-இசை-கூத்து என மூன்றாகப் பிரித்துள்ளனர்.
  நமது முன்னோர். எண்ணிலடங்கா ஆண்டுகட்கு முன்பு, 
  மனிதர்கள் நிர்வாணமாகத் திரிந்து கொண்டிருந்து, 
  பின்னர் இலை தழைகளைக் கட்டிக்கொண்டு, 
  இடுப்புக்குக் கீழே மட்டும் உறுப்புகளை மறைத்துக் கொண்டிருந்த 
  அந்தக் காலத்தில் இயல் என்பது முதலாவதாகவும், 
  இசையென்பது இரண்டாவதாகவும், கூத்து என்பது
  மூன்றாவதாகவும் அமைந்திருக்க  முடியாது. சொற்களை 
  அடிப்படையாகக் கொண்டது இயல்! ஒலியை 
  அடிப்படையாகக் கொண்டது இசை! 
  அசைவுகளை அடிப்படையாகக் கொண்டது கூத்து!..

       மனிதன், தொடக்க காலத்தில் மொழியறிவே 
  இல்லாதவனாகத்தானிருந்தான். கல்லையோ மரத்தையோ, 
  மலையையோ, ந்தியையோ கண்டபோது அவற்றுக்கெல்லாம் 
  அவன் பெயர் எதுவும் வைக்கவில்லை. அதனால் 
  சொற்கள் தோன்றிட வேண்டிய அவசியமே இல்லை. 
  சைகைகள் வாயிலாகத்தான் மனிதர்கள் ஒருவருக்கொருவர் 
  எதையும் உணர்த்திடத் தலைப்பட்டனர். கைகளை 
  அசைத்து, தலைகளை ஆட்டி ஊமைகளைப் போலத்தான் 
  அவர்கள் வாழ்க்கையை நடத்தினர். 

       அதன் பிற்கு தொலைவில் இருப்பவரை அழைப்பதற்கு 
  ஒருவிதமான ஒலியையும், அருகில் இருப்பவரைத் தம் பக்கம் 
  திரும்பச் செய்வதற்கு ஒருவிதமான ஒலியையும் எழுப்பினர். 
  ''ஏ'' ''ஓ''  ''ஈ'' இப்படி ஒலிக்குறிப்புகள் வாயிலாகவே 
  ஒருவரோடொருவர் தொடர்பு கொண்டனர். மூன்றாவது 
  கட்டமாகத்தான் மனித சமூதாயம் தான் வாழ்ந்த 
  அந்தந்தப் பகுதிகளுக்கேற்ப சொற்களைப் 
  பயன்படுத்த தொடங்கியிருக்கிறது!

      இயல், இசை, கூத்து என்பதில் இப்போது ''இயல்'' 
  முதல்வரிசையில் இருந்தாலுங்கூட, மனிதன் 
  தோன்றி வளர்ந்து பல மாறுதல்களைக் பெற்றிடாத 
  தொடக்க காலத்தில் அசைவுகள்-சைகைகள் மூலம் 
  வாழ்க்கையை நகர்த்தியதால் கூத்து என்பதுதான் அப்போது 
  முதலிடத்தை வகித்திருக்கிறது. ஒலியை அடிப்படையாகக் 
  கொண்ட இசை, அப்போதும் சரி-இப்போதும் சரி; 
  நடு இடத்திலேயே இருக்கிறது, மூன்றாவது இடத்தில்
  இருந்த இயல், சொற்களின் அடிப்படையில் இயங்குவதால்-
  அந்தச் சொற்களின் இசைக்கும் தேவைப்பட்டு, 
  அதே போல கூத்துக்கும் தேவைப்பட்டு, 
  முதல் இடத்தில் வந்து உட்கார்ந்துகொண்டது.

     அந்த சொற்களைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துவதன்
  மூலமே எழுத்துக்கலையையும், பேச்சுக்கலையையும் 
  திறமையாகக் கையாள முடியும். சொற்களைத் 
  தேர்ந்தெடுப்பது என்றால் அகராதியை வைத்துக் 
  கொண்டு செற்களை மனப்பாடம் செய்து, அவற்றை
  நமது பேச்சில் எப்படியெப்படிக் கதிய வைப்பது 
  என்று முயற்சி மேற்கொள்வது அல்ல!

    நிறைய நூல்களைப் படிப்பதாலும், நாளேடுகள், 
  கிழமை ஏடுகள், திங்கள் ஏடுகளைப் படிப்பதாலும்
  புதிய புதிய சொற்கள் நமக்கு ப் புதிய சொற்கள் நமக்கப் 
  பழகிப் போய்விடுகின்றன. நாம் பேசும் போது அவைகள், 
  தானாகவே வலிய வந்து விழவேண்டும். வாக்கியத்துக்கு
  வாக்கியம் பொருத்தமான சொற்களை மேடையில் 
  ஏறி நின்றுகொண்டு தேடக்கூடாது. ஓரளவு நாமே ஒரு 
  அகராதியாக விளங்கிட வேண்டும். பேரகராதியாக
  விளங்க முடியாவிட்டாலும் நிறைய
  சொற்களைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.


      சங்க இலக்கிய நூல் ஒன்றுக்கு உரையெழுதக்கூடிய 
  அளவுக்குச் சொற்களைப் புரிந்து வைத்துக் கொள்ள 
  வேண்டிய அவசியம் பேச்சாளருக்குத் தேவையில்லை! 
  அதற்காக அத்தனை சொற்களையும் தெரிந்து வைத்துக் 
  கொள்ள வேண்டாமென்று நான் கூறவும் மாட்டேன். 
  அவற்றையும் தெரிந்து வைத்துக் கொண்டால் அவர்கள்
  மேலும் ஆற்றல் மிக்க பேச்சாளர்காளாக ஒளிவிட முடிய்ம். 
  அதுமட்டுமின்றி வளர்ந்து வரும் அறிவுலகத்தில் 
  நாள் தோறும் புதிய புதிய சொற்கள் பிறந்து 
  கொண்டேயிருக்கின்றன. அவற்றையேல்லாம் அறிந்து 
  வைத்துக் கொள்ள வேண்டியது ஒரு பேச்சாளனின் கடமையாகும்.  

      முன்பெல்லாம்  அவர்கள் எவ்வளவு பெரிய 
  பேச்சாளர்களாக இருந்தாலும், தலைவர்களாக 
  இருந்தாலும் மேடையில் ஏறியதும் சில நிமிடங்கள் 
  பீடிகை போட்டுவிட்டுத்தான் பேசுவார்கள்.


      ''"அடியேன் பேசப்போகும் விஷயத்தில் குற்றம்
  குறைகள் இருக்கலாம். அப்படி இருக்குமேயானால்
  சபையோர்களகிய நீங்கள், எப்படிப் பாலையும்,
  தண்ணீரையும் கலந்துவைத்தால் அன்னப்பட்சியானது 
  பாலை மட்டும் பருகிவிட்டு, தண்ணீரை விட்டு 
  விடுகிறதோ அதைப்போல எனது பேச்சில் உள்ள 
  நிறைகளை மட்டும் எடுத்துக் கொண்டு குறைகளை
  விட்டுவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.""


      இதுபோலத்தான் பழங்காலத்துப் பேச்சுக்கள் 
  அமையும். நான் தொடக்கத்தில் மேடையில் 
  பேசும்போது, இதே பீடிகையை வேறொரு உவமை 
  கூறிப் பேசியிருக்கிறேன்.


     ''"அவையோர்களே! சர்க்கரையையும் மணலையும் 
  கலந்து, எப்படி எறும்பானது மணலைவிடுத்துச் 
  சர்க்கரையை மட்டும் தின்றிடுமோ அதைப்போலவும்-
  இரும்புத் தூளையும் மரத்தூளையும் கலந்து வைத்தால், 
  எப்படிக் காந்தமானது இரும்புத்தூளை மட்டும் இழுத்துக் 
  கொள்ளுமோ அதைப் போலவும்-என் பேச்சில்
  குறைகளைத் தள்ளிவிட்டு, நிறைகளை 
  ஏற்றிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.""


   இப்படி அன்னத்தையும் பாலையும் மாற்றி ஏதோ 
  புதுமை செய்துவிட்டதாக நான் 
  எண்ணிக்கொண்டிருந்த காலம் அது!.


    அப்போதும் கூட இளைஞர்களாக இருக்கும் 
  பேச்சாளர்கள் தாங்கள் பேசுவதற்கு மேடையில் 
  ஏறியதும் தலைவருக்கும் அவையோருக்கும் வணக்கம் 
  தெரிவித்துவிட்டு,
  ''அறிவிலும் அனுபவித்திலும் 
  முதிர்ச்சி அடையாத நான் பேசுவதிலும் குற்றம் 
  குறைகள் இருந்தால் மன்னித்துவிட வேண்டுகிறேன்'' 
  என்று பேச்சைத் தொடங்கினால், அந்த இளைஞரிடம் 
  அவையோருக்கு ஒரு அன்பும் பாசமும் நிச்சயம் ஏற்படும். 


  மனப்பாடம் செய்து கொண்டு மேடையேறுகிற பல 
  இளைஞர்கள், பாடம் செய்ததைப் பரபரப்புடன்
  ஒப்புவிக்கும் போது இடையில் சிறு தடங்கள் 
  ஏற்பட்டாலும் திகைத்துப்போய் நின்று, மீண்டும் 
  மனப்பாடம் செய்ததைத் தொடக்கத்திலிருந்து கூற 
  முனைவார்கள்! அவர்களுடைய மூளையில் 
  பெரிய விஷயங்களை ஏற்றாமல்-நாட்டு நடப்பில் 
  அவர்களுக்குத் தெரிந்திருக்கிற விஷயங்களை 
  மட்டுமே பதிய வைக்க வேண்டும். அப்பொழுதுதான், 
  தாங்கள் என்ன பேசுகிறோம் என்பது அவர்களுக்கே புரியும்.


  ""ஏதென்சு நகரத்து அறிவுக் கிழவன் சாக்ரடீசைப் போல்
  -பொதுவுடைமைப் பூங்காவுக்குக் கருத்து விதையிட்ட
  காரல் மார்க்சைப்போல்-இருளில் ஒளி கண்ட 
  இங்கர்சாலைப் போல்-தன்மானச் சிங்கம் 
  தந்தை பெரியார் விளங்கினார்.""


  இப்படி எழுதி கொடுத்ததை மனப்பாடம் செய்து
  மேடையில் பேசுகிற இளம் பேச்சாளருக்கு, சாக்ரடீஸ்
  என்றால் என்றால் யார்? என்று தெரிந்திருக்க 
  வேண்டுமல்லாவா? மார்க்ஸ் பற்றியும் இங்கர்சால்
  பற்றியும் அந்த இளம் பேச்சாளர் உணர்ந்திருக்க 
  வேண்டுமல்லாவா?


  அதனால் பெரியார் விழாவில் பேசுகின்ற இளம்
  பேச்சாளருக்கு, எதைக் கற்றுத் தந்தால் மனத்தில்
  பதியுமோ? அதை மட்டும் 
  கற்றுத்தர வேண்டும்.


  ""பெரியார், சாதிகள் ஒழிய வேண்டுமென்று 
  பாடு பட்டவர்! பிர்மாவின் முகத்திலே ஒரு சாதியும்,
  தோளிலே ஒரு சாதியும், தொடையிலே ஒரு சாதியும், 
  காலிலே ஒரு சாதியுமாக மனிதர்கள் பிறந்தார்கள் ,
  என்பதைப் பெரியார் மறுத்து எல்லோரும் 
  ஒரே குலம்தான்-மனிதகுலம்தான்"" 
  என்று முழங்கினார்.


  இப்படி எளிய முறையில் எளிய நடையில் இளம் 
  பேச்சாளர் பயிற்சி பெற்றால்தான், அவர் உதடுகள் 
  உச்சரிக்கிற வார்த்தைகளுக்கும் அவரது 
  உள்ளத்திற்கும் சம்பந்தம் இருக்க முடியும். அப்படித் 
  தொடர்பு இருந்தால்தான் உணர்ச்சியோடு அந்தக்
  கருத்துக்களைச் சொல்ல முடியும்.


  வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் 
  என்னை அவரது தொகுதிப் பாராட்டு விழாவுக்கு 
  அழைத்துச் சென்றிருந்தார். முதல் நிகழ்ச்சியில் 
  பேசும் போது அவர் குறிப்பிட்டார். ...

  ""தொகுதி மக்களே! 
  தேர்தல் நேரத்தில் உங்களுக்கு ஒரு பெரிய வாக்குறுதி!
  கொடுத்திருந்தேன்!. அதாவது! என்னை ஜெயிக்க வைத்தால்,
  கலைஞரை அழைத்து வருவதாக! இப்போது 
  அவரை அழைத்துவந்து வாக்குறுதியை 
  நிறைவேற்றி விட்டேன்"" என்று!


  அடுத்து நான் பேசும்போது,
  ""என்னை அழைத்து வருவது என்பதற்காக அளிக்கப்பட்ட
  வாக்குறுதி அப்படியொன்றும் பெரிதல்ல! மலிவான 
  வாக்குறுதிதான்! நான் எப்போதும் மக்களைச் சந்தித்துக் 
  கொண்டே இருப்பவன்"" 
  எனக் குறிப்பிட்டேன்.


  பிறகு அதே தொகுதியில் இன்னொரு இடத்தில் 
  கூட்டம்! அந்தச் சட்டமன்ற உறுப்பினர் அங்கேயும் 
  என்னை வரவேற்றுப் பேசினார். என்ன பேசினார், 
  தெரியுமா?


  ""தொகுதி மக்களே! தேர்தல் நேரத்தில் உங்களுக்கு
  மலிவான வாக்குறுதி கொடுத்திருந்தன். அதுதான், 
  என்னை ஜெயிக்க வைத்தால், கலைஞரை 
  அழைத்து வருவேன் என்ற வாக்குறுதி!""


  இப்படிச் சொன்னதும் என்னருகே இருந்தவர்கள் 
  திடுக்கிட்டனர். நான் சிரித்துக் கொண்டேயிருந்தேன். 
  நான் அந்தத் தொகுதியில் முதல் கூட்டத்தில் அடக்க 
  உணர்வோடு பயன்படுத்திய அந்தச் சொல்லைத்தான், 
  தானும் குறிப்பிடவேண்டுமென்று அந்த உறுப்பினர் 
  கருதிக் கொண்டதால் ஏற்பட்ட விளைவு அது!


  'மலிவு' என்ற சொல்லுக்குக்கூடப் பொருள் புரியாத நிலை! 
  மனத்தில் நினைத்தது வேறு! 
  உதட்டில் வெளிப்பட்டது வேறு!


  இதிலிருந்து , சொற்களை நிறைய அறிந்திருப்பதும்-
  உள்ளத்திற்கும் உச்சரிக்கப்படும் சொற்களுக்கும் 
  தொடர்பு இருக்கவேண்டுமென்பதும் பேச்சாளர்களுக்கு 
  முக்கியமான தேவைகள் எனபது 
  உணரப்படுகிறதல்லவா?


  ----கலைஞர் மு. கருணாநிதி


  இன்னும் வரும்- 4


  Thursday, 24 December, 2009

  தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005

  தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 (சட்டம் இல. 22/2005) இந்திய நாடாளுமன்றத்தால் அரசிடம் உள்ள தகவல்களை மக்கள் உரிமையுடன் அறிந்து கொள்வதை ஏதுவாக்க உருவாக்கப்பட்ட சட்டம் ஆகும்.
  இச்சட்டம் டிசம்பர் மாதம் 2004,ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டு மே 11, 2005,  மக்களவையிலும், மே 12, 2005,ஆம் ஆண்டு மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.
  ஜூன் 15 2005 குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டது. ஜூன் 21, 2005, அரசுப் பதிவியழில் வெளியிடப்பட்டு அக்டோபர் 12,2005 ஆம் நாள் முதல் நடைமுறைக்கு வந்தது.
  இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவின் பிறப் பகுதிகள் அனைத்திற்கும் பொருந்தும். இதன்படி ஒவ்வொரு இந்தியக் குடிமகனும்/மகளும் தகவல் பெறும் உரிமை பெற்றவர்கள்.
  நோக்கம்

  அரசு அதிகாரிகள் தங்களது செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டிருப்பதும், ஊழலைக் கட்டுப்படுத்தி தவிர்ப்பதும், அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள் மற்றும் துறைகள், மக்களுக்குத் தேவையானத் தகவல்களைத் தரக் கடமைப்பட்டுள்ளதை உறுதிசெய்வதும் தகவல் பெறும் சட்டத்தின் நோக்கங்களாகும்.

  தகவல் கொடுக்கும் கடமை

  அரசாங்கம் சார்ந்த அல்லது அரசு உதவிப் பெறும் நிறுவனங்கள், துறைகள், அலுவலகங்கள் அனைத்தும் தங்களைப் பற்றிய தகவல்களைத் தாமாகவே முன்வந்து மக்களுக்கு கொடுக்க வேண்டும். குறிப்பாக தகவல்களை பெறும் நோக்கோடு மக்கள் தங்களிடம் கேட்கும்பொழுது தகவல்களை அளிக்கவேண்டியது அரசு, நிறுவன அலுவலர்களின் கடமை என் இச்சட்டம் கூறுகின்றது.

  தகவல்

  தகவல் என்றால் பிரிவு 2 (1) இன் படி பதிவேடுகள் ,
  ஆவணங்கள், குறிப்பாணைகள், மின்னஞ்சல்கள், கருத்துரைகள், அறிவுரைகள், செய்தி வெளியீடுகள், சுற்றறிக்கைகள், ஆணைகள், நாள்விவரக் குறிப்பேடுகள், ஒப்பந்தங்கள், அறிக்கைகள், தாள்கள், மாதிரிகள், மாதிரிப் படிவங்கள், மின்னியக்க வடிவில் பதிவு செய்யப்பட்டுள்ளத் தகவல்கள் மற்றும் நடைமுறையில் உள்ள வேறு சட்டத்தின் கீழ் அரசு அலுவலர்கள் (அதிகாரிகள்) மேற்பார்வையிடும் அதிகார வரம்புக்குள் வரும் எவ்விதமான தனியார் குழுமமாக இருந்தாலும் அவைத் தொடர்பான செய்திகளும், தகவல்களும் இதில் அடங்கும்.  விண்ணப்பம்

  தகவல் பெற விரும்பும் நபர் ஆங்கிலம் அல்லது இந்தி அல்லது விண்ணப்பம் செய்யப்படும் நிலப்பகுதியின் அலுவல் மொழியில் எழுத்து வடிவிலோ அல்லது மின்னஞ்சல் வழியாகவோ தகவலின் விவரங்களைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.   •  விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட பொது அதிகார அமைப்பின் மத்தியப் பொதுத் தகவல் அலுவலருக்கோ (அதிகாரிக்கோ) அல்லது மாநிலப் பொதுத் தகவல் அலுவலருக்கோ (அதிகாரிக்கோ) அல்லது


   • மத்திய உதவிப் பொதுத் தகவல் அலுவலருக்கோ(அதிகாரிக்கோ) அல்லது மாநில உதவிப் பொதுத் தகவல் அலுவலருக்கோ (அதிகாரிக்கோ) அனுப்பலாம்.
  குறிப்பு-; தகவல் கோரும் விண்ணப்பத்தாரர், அத்தகவல் பற்றிய விபரங்களையும் அவரைத் தொடர்புக் கொள்வதற்கான முகவரியையும் தவிர வேறு விவரங்கள் எதையும் கொடுக்க வேண்டியதில்லை.
  காலக்கெடு-; விண்ணப்பம் கிடைத்த 30 நாட்களுக்குள் சம்பந்தப்பட்வர் பதில் அளிக்கவேண்டும். குறிப்பு-; அவசரத் தகவல்கள் என்றால் 48 மணி நேரத்துக்குள் சம்பந்தப்பட்டவர் பதிலளிக்கவேண்டு  தகவல் பெறக் அ கொடுக்கக் கூடாதவை
  இந்திய குடிமக்கள் எவருக்கும் பிரிவு 8 (1) இன் கீழ் பின்வரும் தகவல்களைக் கொடுக்கவேண்டிய அவசியமில்லை.   • () இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு நாட்டின் பாதுகாப்பு போர் யுக்திகள், நாட்டின் அறிவியல் மற்றும் பொருளாதார நலன், வெளி நாடுகளின் உறவு இவற்றைப் பாதிக்கும் குற்றம் புரியத் தூண்டுதலாக அமையும் தகவல்கள்,


   • () நீதிமன்றம், தீர்ப்பாயம் இவை வெளிப்படையாகத் தடை செய்துள்ளத் தகவல்கள் அல்லது நீதிமன்ற அவமதிப்பை உண்டாக்கும் தகவல்கள்.


   • () நாடாளுமன்றம் மற்றும் மாநில சிறப்புரிமைகளை மீறுமை செய்யும் தகவல்கள்.


   • () வாணிக நம்பகத் தன்மை, வியாபார இரகசியங்கள், அறிவு சார் சொத்துடைமை இவை வெளிப்படுத்தப்பட்டால் அது மூன்றாம் தரப்பினரின் சந்தைப் போட்டிக்குக் குந்தகம் விளைவிக்கும் தகவல்கள். இத்தகவல்கள் பெரும்பான்மை மக்களுக்கு இன்றியமாயதது என்று தகுத வாய்ந்த அதிகார அமைப்பு மனநிறைவு அடைந்தாலன்றி அத்தகவல்களை வெளியிடக் கூடாது.


   • () ஒருவருடைய பொறுப்புரிமை தொடர்பு உறவால் கிடைத்த தகவலை, பெரும்பான்மை மக்களின் நலனுக்கு இன்றியமையாதது என, தகுதிவாய்ந்த அதிகார அமைப்பு மனநிறைவு அடைந்தாலன்றி அத்தகவலை வெளியிடக்கூடாது.


   • () வெளிநாட்டு அரசுகளிடமிருந்து இரகசியமாகப் பெற்றத் தகவல்கள்.


   • () ஒரு நபரின் வாழ்வு அல்லது உடல் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படுத்துவதை, தகவலின் மூலத்தை அடையாளப்படுத்துவதை அல்லது சட்டம் நடைமுறைப்படுத்துவதை அல்லது பாதுகாப்பு நோக்கங்களுக்காக இரகசியமாக்கஃ கொடுக்கப்பட்ட உதவிக்கு ஆபத்து விளைவிப்பதை ஏற்படுத்தும் தகவல்கள்.


   • () புலனாய்வை அல்லது குற்றவாளிகளைக் கைது செய்வதை அல்லது அவர்கள் மீது குற்ற வழக்குத் தொடர்வதைத் தடை செய்யும் தகவல்கள்.


   • () அமைச்சரவை செயலர்கள் மற்றும் பிற அலுவலர்கள் (அதிகாரிகள்) கலந்தாய்வுகளின் பதிவேடுகள் உள்ளிட்ட அமைச்சரவை ஏடுகள் வெளிப்படுத்தப்படுவதிலிருந்து விலக்குப் பெறுகின்றன.

    • குறிப்பு-; அமைச்சரவை முடிவுகள் எடுத்த பின்னர், அம்முடிவுகள் அவற்றிற்கான காரணங்கள், பின்புலங்கள் இவைகள் தடை செய்யப்பட்ட தகவல்களாக இல்லாதிருந்தால் பொது மக்களுக்குத் தெரிவிக்கலாம்.

   • () பொது செயல்பாட்டிற்கு, பொது நலனிற்கு தொடர்பில்லாத தனி நபரின் அந்தரங்கத்தில், நியாமற்ற முறையில் தலையீடு செய்யும் தனிநபரோடுத் தொடர்புடையத் தகவலைத் தெரிவித்தல் கூடாது.நாடாளுமன்றத்திற்கோ, மாநில சட்டப் பேரவைக்கோ மறுக்கப்படாத ஒரு தகவல் தனிநபருக்கும் மறுக்கப்படக் கூடாது.
  அபராதம்

  இச்சட்டத்தின்படி தவறு செய்த தகவல் அலுவலர்கள் (அதிகாரி) மீது நடவடிக்கை எடுத்து அபராதம் வழங்கும் அதிகாரம் என்பது மத்தியத் தகவல் ஆணையம் அல்லது மாநிலத் தகவல் ஆணையத்திடம் உள்ளது.

  நூல் ஆதாரம்- தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005-செபமாலை ராசா