Pages

Wednesday, 9 December, 2009

செல்களின் கட்டுபாடற்ற வளர்ச்சியினால்........!
புற்றுநோய் எப்படி வருகின்றது தெரியுமா?  உடம்பில் கட்டி மாதிரி வருகின்றதுதான் புற்றுநோய். புற்றுநோய் வைரஸ் கிருமிகளாலோ, பாக்டீரியாக்களாலோ வருவது இல்லை. புற்றுநோய் என்பது  நம்ம உடம்பில் இருக்கின்ற செல்கள் கட்டுப்பாடு இல்லாமல் (undifferentiated cells grow in undifferentiated manner- கலைஞானி கமல் ஒருபட்த்துல சொல்ற மாதிரி....ஆ வசூல்ராஜா MBBS) வளர்ச்சியடைந்து கட்டிகளாய் மாறிவிடுவதுதான். இந்தப் பற்றுநோய் உடம்பினோட எந்த பாகத்திலும் வளரும். செல்கள் கட்டுப்பாடு இல்லாம வளருவதற்க்கு இன்னும் காரணம் கண்டுப்பிடிக்கப்படவில்லை.

ஒருவருக்குப் புற்றுநோய் வருவதற்க்கும், வராததற்க்கும் காரணம் ஒருவர் உடம்பில் இருக்கின்ற மரபணுக்கள்தான் (ஜீன்தான்). ஒரு குழந்தை பிறக்கும்பொழுதே அதனோட இத்தனையாவது வயதில் புற்றுநோயை

 உண்டாக்கக்கூடிய சாத்தியம் உள்ள மரபணு (ஜீன்) ஒளிந்திருக்கும். புற்றுநோய் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். வயது வித்தியாசம் கிடையாது. (சமீபத்தில் ஒரு 7 வயது குழந்தையை அடையாறு புற்று நோய் மருத்துவமனையில் பார்த்தேன். கண்களங்கி விட்டேன்)அடுத்ததாக ரத்தபுற்றுநோய் (ப்ளட் கேன்சர்) நோய் முற்றும்போது இருமல் அதிகமா வரும். இருமல் அதிகமாகும்போது ரத்தம் வெளிப்படறதை தடுக்கமுடியாது. ஒவ்வொரு மனிதனுக்கும் ரத்த்ததில் குறிப்பிட்ட அளவு RBC எனப்படும் ரத்த சிவப்பணுக்கள் இருக்கணும், அதே மாதிரி WBC எனப்படும் ரத்த வெள்ளை அணுக்கள் இருக்கணும். உதாரணத்துக்கு ஒருத்தரின் உடம்பில் உள்ள ஒரு க்யூபிக் மில்லி மீட்டர் ரத்தத்தில் ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் வரையிலான (RBC) ரத்த சிவப்பு அணுக்கள் இருக்கலாம். இந்த அளவையும் தாண்டினால்தான் ஒருவர்க்கு ரத்த புற்றுநோய். நோய் வந்த ஆரம்ப நிலையாக இருந்தால் குணப்படுத்தலாம். நோய் முற்றிவிட்டால் குணப்படுத்தும் வாய்ப்பு குறைவு. இந்நோயை முற்றிலுமாக குணப்படுத்தக்கூடிய அளவுக்கு மருந்துகள் கண்டுப்பிடிக்கப்படவில்லை.

புற்றுநோயின் அறிகுறிகள்;

எந்த புற்றுநோயாக இருந்தாலும் முதல் அறிகுறி ஓயாத இருமல். உடம்பின் ஏதாவது ஒரு பகுதியில் புண்வந்து ஆறாமல் இருப்பது, தொண்டையில் வலி, உணவு விழுங்கும்போது சிரமம். பேசும்போது குரல் மாற்றம் உடம்பில் உள்ள மச்சங்கள் திடீரென்று நிறம் மாறிப்போவது, ...இப்படி எத்தனையோ அறிகுறிகளை சொல்லிக்கிட்டே போகலாம். பரம்பரை சோயாகக்கூட வரலாம்.

இந்தியாவைப் பொறுத்தவரைக்கும் இந்தப் புற்றுநோயை வலிய வரவழைத்துக் கொள்பவர்கள் தான் அதிகம். புகையிலை, வெற்றிலை பாக்கு, பீடி, சிகரெட், மூக்குப் பொடி இந்த வஸ்துகள் எல்லாம் நம்ம நாட்டிலே உபயாகமாகிற மாதிரி வேற எங்கேயும் உபயோகப்படறது இல்லை. ஒருத்தர் தொடர்ந்து ஐந்து வருடம் உபயோகப்ப்படுத்தி வந்தால் அவரருக்குக் கண்டிப்பாக புற்றுநோய் வரும் என்பது மருத்துவ துறையில் சொல்லப்படும் தகவல்.

இந்திய மக்கள்தொகையில் 20 பேருக்கு ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாகப் புள்ளி விவரம் சொல்லுகின்றது. அதே மாதிரி பெண்களில் 15 பேரில் ஒருவர்க்கு மார்பகப்புற்றுநோயும், கர்ப்பப்பை புற்றுநோயும் இருக்கின்றது. நாற்பது வயதுக்கு மேற்பட்ட பெண்கள் 'பெப்ஸி மியர்' பரிசோதனை செய்துகொண்டால் புற்றுநோய் இருக்கா? இல்லையா? என்று தெரிந்துக் கொள்ளலாம். 'பெப்ஸி மியர்' சோதனை என்றால் கர்ப்பப்பையில் இருக்கும் திரவத்தை ஒரு துளி எடுத்து இந்த பரிசோதனைக்கு உட்படுத்தினால் அதில் புற்றுநோய் செல்கள் இருக்கா? இல்லையா? என்பது தெரிந்துவிடும்.

சிகிச்சைகள்

புற்றுநோயை குணப்படுத்த முன்று வகையான சிகிச்சைகள் பின்பற்றப்பட்டு வருகின்றது.

1. மருந்துகள் மூலம் குணப்படுத்துவது

 2. லேசர் கதிரியிக்க சிகிச்சை

3.அறுவை சிகிச்சை.

லேசர் சிகிச்சை முறைதான் அதிகமான புற்றுநோயாளிகளுக்கு தரப்படுகின்றது. மனித உடம்பில் புற்றுநோய் பரவியிருக்கின்ற இடத்தில் லேசர் கதிர்களைப்  செலுத்தி அந்த இடத்தில் இருக்கிற புற்றுநோய் செல்களை அழிப்பார்கள். இந்த கதிர்களை முன்று நிமிடங்களிலிருந்து ஐந்து நிமிடம் வரை செலுத்துவார்கள். வாரத்தில் நான்கு நாட்களுக்கு ஒரு முறை ஆறு வாரங்களுக்கு இந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த முறையில் நோயோட வீரியத்தைக் கட்டுப்பாடுக்குக் கொண்டு வரலாம். அதன் மூலமா நோயாளியின் வாழ்நாளை அதிகப்படுத்தலாம். லேசர் சிகிச்சை முறை முடிந்ததுமே ஒரு நோயாளிக்கு மருந்து, மாத்திரை தருவதுதான்.

 மருந்துகள் மூலம் சிகிச்சை பெறுபவர்கள்  மருத்துவர்கள் அறிவுறைபடி மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு வந்தால் முற்றிலுமாக குணமாக வாய்ப்பு இருக்கும்.

அடுத்ததாக அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்துவது, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மோசமான நிலையில் ஒரு உடல் உறுப்பு இருந்தால் அதை அறுவை செய்வதின் (operation) மூலமா நீக்கிவிடுவார்கள். இந்த முறைதான் கடைசி கட்டம். புற்றுநோயை முற்றிலுமாக ஒழிக்க சாத்தியம் இல்லை.


இதெல்லாம் யாருக்கும் வரமால் இருக்கவேண்டும் அதுவே அனைவரது விருப்பமாகட்டும். இந்த உலகை விட்டு போவதற்குள் இவ்வளவு கொடூரமா? வேண்டவே வேண்டாம். இந்த நோய்களை தான் பணக்கார நோய்கள் என்கின்றனரா?. ஆனால் இவைகளை எவரும் விரும்புவதில்லை. நோயற்ற வாழவே குறைவற்ற செல்வம்.

No comments: