Pages

Sunday 27 December, 2009

ஆரியம் என்பது மரியாதை, பார்ப்பன சோவின் புளுகு




பார்ப்பன துக்ளக் புத்தகத்தில் பார்ப்பனர் சோவினால் எழுதப்படுவது,  ஆரிய வேதங்களின் புனிதத்தை பற்றி கேள்வி பதிலாக அளித்து வருவது, சோவின் பார்ப்பனீய ஆதரவு அப்பட்டமாக தெரிகின்றது. இது ஆச்சரியமான விஈயமில்லை என்றாலும், அந்த பத்திரிகைக்கு பெயர் துக்ளக் என்பதற்கு பதிலாக ஆரியப் பார்ப்பனீயம் என்றே பெயர் வைத்திருக்கலாம். இந்த பத்திரிகையை பார்ப்பனர்கள் தவிர வேறு எவரும் வாசிப்பதில்லை. ஆகையால் இதை இப்போது இணையத்திலும் வெளியிட்டு பரப்புரை செய்கின்றனர். பார்ப்பன ஆதரவாளர்கள் சிலர்.

இதோ துக்களக்கில் சோ ஆரியப் பார்ப்பனீயத்தை எப்படி பாதுகாக்கின்றார். அதை எப்படி ஆதரிக்கின்றார் என்பது இது ஒரு உதாரணம்......(இது மாதிரி நிறைய இடங்களில் ஆதரித்து கட்டுரையை தொடர்ந்து கொண்டிருக்கின்றார்)

கே 18. கண்ணம்மா என் காதலியில், பாரதியார், " ஆரியப் பெண்களுக்கு திரைகளுண்டோ என்கிறார். ஆரியர், திராவிடர் என பிரிவுகள் இருப்பதை பாரதியார் ஒப்புக் கொள்வதாகத் தானே இதற்கு அர்த்தம்?

ப. திராவிட என்பது பிரதேசத்தைக் குறிக்கிற சொல். பூகோள ரீதியானது. 'ஆரிய' என்பது மரியாதையைக் குறிப்பது; இனத்தை அல்ல. ஆகையால் பாரதி பாடலில் வருவது இனப்பிரிவு பற்றியோ, ஜாதிப் பிரிவு பற்றியோ அல்ல.



பாரதியார் ஆரியப் பெண்களுக்கு திரைகளுண்டோ? என்று கூறியிருக்கின்றாரே என்று கேட்ட கேள்விக்கு சோ அளிக்கும் பதில் தான் மேற்குறிப்பிடப்பட்டவை. ஆரியம் என்பது மரியாதை சொல்? அது யாருக்கு மரியாதை சொல என்பதை அவர் விளக்கவில்லை. தாழ்த்தப்பட்டவர்கள் எனக் கூறப்படுபவர்களுக்கா? இல்லை ஒட்டு மொத்த திராவிட சமூகத்தவருக்கா? என்றால் இல்லை. பார்ப்பனர்களுக்கு மரியாதை எனபதாகத்தான் அவர் வெளியிடுகிறார். பார்ப்பனர்களுக்காக எழுதப்பட்ட  வேதங்களில் உள்ள புனிதங்களைப் ப்ற்றி ஒரு பார்ப்பனர் சொல்லுவதில் எந்த ஆச்சரியமுமில்லை.


பார்ப்பனர்கள் பிர்மாவின் தொடையில் பிறந்தவர்கள் என்று வேதங்களில் குறிப்பிடப்பட்டிருந்தால் சோ அந்த வேதநூலை அவரே கொளுத்த சொல்லியிருப்பார். ஒருவேளை திராவிடர்களை பற்றி உயர்வாக எழுதியிருந்தாலும் திராவிடர்கள் அதை ஆதரிக்க மாட்டார்கள். திராவிடர்கள் பார்ப்பனர்களைப் போல இழிவான எண்ணம் கொண்டவர்கள் அல்லர்.



ஏன்? மனிதனை எந்த வகையிலும் பிரிக்க நினைக்காதவன் திராவிடன். மனிதனை மனிதனாகத்தான் பார்க்கவேண்டும் என்று நம்புபவன். ஆகையால் தான் திராவிடன் எப்போதுமே உயர்ந்தவனாக இருக்கின்றான். அவனை பிரிக்க சூழ்ச்சி செய்யும் ஆரியன் தான் மீண்டும் மீண்டும் மிரட்டி இந்த வேதங்களை அவனிடமே விளக்கி கொண்டிருக்கின்றான், மிகத் தாழ்ந்தவனாக காட்டிக் கொண்டிருக்கின்றான்.. பார்ப்பனன் நம்ப வேண்டும் என்பதற்காக அல்ல. அவன் குழந்தையாக இருக்கும்போதே அவரின் (பார்ப்பனரின் பார்ப்பன பெற்றோர்கள்) பெற்றோர்கள் அந்த நம்பிக்கை நஞ்சை ஊற்றிவிடுகிறார்களே! ஆகையால் அவர்களின் இளமைக்காலத்திலேயே அவர்கள் அறிந்தது தான். சோவே கண்டுபிடித்ததா? இதெல்லாம் என்றால் இல்லை. இதுவும் அவரின் தாய் தந்தையர் விதைத்தது தான்.


பரம்பரை பரம்பரையாக ஆரியர்கள் இந்த வஞ்சகத்தை சூத்திரர்கள் என்று அவர்கள் வேதத்தால் அழைக்கப்படும் (எப்போதும் உயரியவர்களாக இருக்கும்) திராவிடர்களிடத்தில் புகுத்திக் கொண்டே வருகின்றனர். அதற்கு ஆரிய மொழி சமஸ்கிருதத்தையும் துணைக்கு வைத்துக்கொள்கின்றனர். இந்த டெக்னாலஜி உலகத்திலும் இதை இன்னும் தைரியமாக ஆரியர்கள் அதுவும் திராவிடர்கள் கண்டுபிடித்த டெக்னாலஜியைக் கொண்டே புகுத்த முனைகிறார்கள் என்றால். அவர்கள் எண்ணம் என்ன? என்பது இதன் மூலம் தெள்ளத் தெளிவாகின்றது.


பார்ப்பன சோ வேதங்களை பற்றி உயர்வாக எழுதுவதற்கு காரணம் இதுதான், அவரின் தாய் தந்தையர் குழந்தை சோவுக்கு வேதத்தில் உள்ள அவரின் ஜாதியை பற்றி உயர்வாக கூறி நம்பிக்கையை வளர்த்ததினால் அந்த பார்ப்பனர்களுக்காக வாதடுகிறார். இதே அந்த வேதத்தில் பார்ப்பனரை பற்றி தரக்குறைவாக தாழ்த்தப்பட்டவனாக உருவகப்படுத்தி எழுதி இருந்தால் சோ அந்த வேதத்தை முதல் ஆளாக நின்று கொளுத்த சொல்லியிருப்பார், இப்போது திராவிடர்களானத் தமிழர்கள் கொளுத்த சொல்லுகிறார்கள். அவ்வளவுதான் வித்தியாசம்-   (துக்ளக்- வேதம் பற்றிய சோ கேள்வி பதில்கள்)

இந்த ஆரியப் பார்ப்பனீய வேதத்தை, இனியும் நம்பி மோசம் போகாதீர்! திராவிடர்களே! தமிழர்களே!

No comments: