Pages

Tuesday, 29 December 2009

கொலைகாரி...?







பிரேசிலின் வாண்டரர்ஸ் சிலந்தி,  (Brazilian wanderers spider) உலகிலேயே மிக கொடிய விஷம் உள்ள சிலந்தி.  இந்த சிலந்தி தாக்கினால் அதன் விஷம் மனிதனின் நரம்பு மண்டலத்தை தாக்கி, இரத்த அணுக்களை தாக்கி இருதயத்தை செயலிழக்கவும் செய்யும். இச்சிலந்தி தாக்கி உயிருடன் இருந்தால் ஆண்மைக்குறைபாடும் ஏற்படும். இதன் விஷம் ஆண்மைக்குத் தூதுவனாக கருதப்படும் நைட்ரிக் அமிலத்தை அதிகப்படுத்தும், அதன்மூலம் இரத்த ஒட்டத்தை அதிகமாக்கும். இதன் உச்சநிலையாக ஆண்மை பை விரிந்து (Priapism) அங்கேயே தங்கி மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் என்று அமேசான் காடுகளில் விஷப்பூச்சிகளின் ஆராய்ச்சி மேற்கொண்ட ஸ்டீவ் என்ற ஆராய்ச்சியாளர் கூறுகின்றார். பிரேசில் காடுகளில் வாழும் சட்டாரே மாவே என்ற பழங்குடியினரும் இதை உறுதிப்படுத்துகின்றனர்.

இவ்வகை சிலந்திகள் அமேசான் காடுகளில் தான் அதிகம் இருக்கின்றது. உலகில் வாழும் 50,000 சிலந்தி வகைகளில் இச்சிலந்தி வகையே அதிக நஞ்சு கொண்டவை.சமயங்களில் காலணிகளில் (சூக்களில்) மறைந்திருப்பது தெரியாமால் அணிவதால் இச்சிலந்தியின் தாக்குதலுக்கு மனிதர்கள் ஆளாவதுண்டு. குழந்தைகளும் இந்த தாக்குதலுக்கு ஆளாவதுண்டு. இப்பழங்குடியின மக்களை இவ்விஷங்கள் அவ்வளவாக பாதிப்பதில்லை. காரணம் இவர்கள் அதற்குரிய சில எறும்புகளை கொண்டு தங்கள் உடலில் விஷமேற்றுதல் மூலம் தங்கள் உடல்களை இந்த தாக்குதலுக்கு எதிராக இருக்கு தயார் படுத்தி கொள்கின்றனர். இதற்கு பயன் படும் எறும்பு புல்லட் எறும்பு என்று அழைக்கப்படுகின்றது. இந்த புல்லட் எறும்பில் ஒன்று கடித்தாலே மனிதன் இறந்து விடுவான். அதில் அந்தளவுக்கு விஷம். இதை தங்கள் உடலில் கடிக்கவைப்பதன் மூலம் இவர்களின் உடல்கள் விஷ எதிர்ப்புக்கு ஆளாகின்றது. இந்த சிலந்தியின் அறிவியல் பெயர்படி இதை கொலைகாரி (Murderess) என்றழைக்கின்றனர். இந்தியாவில் இவ்வகை சிலந்திகள் காணப்படுவதில்லை என்றாலும், சில இந்திய சிலந்திகளினால் ஒவ்வாமை ஏற்பட வாய்ப்புண்டு.

ஷூ, காலணிகளிக்குள் ரச கற்புரங்களை அவ்வப்பொழுது போட்டு வைத்தாலும், மற்றும் காலணிக்கென்று தனியானதொரு அறைகொண்டு (அதிலும் ரச கற்பூரம் போட்டு) பாதுகாத்தோமானால் இப்புச்சிகள் காலணிகளிடம் நெருங்காது. ஷூக்கள், காலணிகள் அணிவதற்கு முன் வழக்கமாக அவற்றை கீழே தரையில் ஒரு மூறை தட்டி, குச்சி கொண்டு துழவி (கையினால் சுத்தம் செய்யாமல்) சுத்தம் செய்து அணிந்து கொள்ளவேண்டும். குழந்தைக்ள ஷூ அணியும் பொழுது பெற்றோர்கள் சிறப்பு கவனம் எடுத்து கொள்ளவேண்டும். குழந்தைகளுக்கும் இம்முறைப்படி எச்சரிக்கையுடன் கையாளப் பழக்கப்படுத்தவேண்டும். பெரும்பாலும் வீட்டில் அதிக அடைசல்கள் இருந்தால் இம்மாதிரி பூச்சிகள் வீட்டை நெருங்கும்.இம்மாதிரி பூச்சிகளால் குழந்தைகளே அதிக பாதிப்படைவர். ஷூவில் தேள் இருந்தது தெரியாமல் அப்படியே அணிவித்து பள்ளிக்கு அனுப்பியதால், குழந்தைகள் பாதிப்புக்குள்ளான சம்பவங்கள் உண்டு. குழந்தைகளுக்கு அந்த பூச்சி கடிப்பதை, கொட்டுவதைக்கூட சொல்லத்தெரியாது. செருப்பு கடிப்பதாகத்தான் சொல்லும். பெற்றோர்கள் கவனமுடன் இருப்பது நன.

நன்றி டிஸ்கவரி சேனல்


No comments: