Pages

Thursday 3 December, 2009

ஆயுள்காப்பீடடு திட்டத்தில் சேருவதற்கு பொய் தான் பிராதனமான தகுதி, பலர் அறியாத பின்னணி....

முத்தமிழ் மன்றத்தில் நண்பர் ஜெய்சங்கர் ( ஜெயங்கொண்டார்) பாலிசி எடுத்தால் மட்டும் போதுமா? என்ற தலைப்பில் ஆனந்த விகடனில் வந்தவைகளை, நல்ல தகவல்களாக பதிவிட்டுள்ளார், மிகவும் அவசியமானத் தகவல்கள். ஆனால் பல பின்னணித் தகவல்களை ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தை சார்ந்த எவரும் தெரிவிப்பதில்லை. நானும் சில குறைவான பின்னணித் தகவலை தருகின்றேன் அதற்கு மேல் தந்தால் நிறுவனம் சண்டைக்கு வந்தாலும் வந்து விடும். இருந்தாலும் இதனால் பாதிக்கப்படுபவரகள் அதிகமிருப்பதால், அடிக்கடி சர்ச்சைகள் வேறு நிகழ்கின்றது, இதனை தெளியவைப்பது நல்லது. சற்று நீளமானதாக இருந்தாலும் இதை ஒரு முறைவாசித்து நினைவில் வைத்து கொள்ளுங்கள். உங்களுக்கு எப்பொழுதாவது உதவும்.




பெரும்பாலும் இந்த உண்மைகள் முகவர்களுக்கு , அதைவிட வளர்ச்சி அதிகாரி, மற்றும் ஆயுள் காப்பீட்டு நிறுவன ஊழியர்களுக்கு அத்துப்படி. முகவர்கள் ஆயுள் காப்பீட்டு ஊழியர்கள் அல்ல என்பதை அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டும். அவர் ஒரு மூன்றாம் நபர். அவர்களை ஆயுள் காப்பீட்டு நிறுவன்ம் அப்படி பயன் படுத்தி கொள்வதற்கான காரணம். அவர்கள் பாலிசிதாரர்களின் உடல் நிலை, வருமானத் தேவை, அவர்களின் மொத்தப் பின்னணியையும் தெரிந்து வைத்திருப்பார் என்ற காரணத்தால்தான். அவரே தகுதியான பாலிசிதாரரை ஆயுள் காப்பீட்டுக்கு முன்மொழிகின்றார். ஏன் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் உள்ளவர்களே தெரிந்து வைத்திருக்க கூடாதா அல்லது முன் மொழியக் கூடாதா? என்றால் தொழில் சம்பந்தபட்டவர்களே சான்று அளிக்க முடியாது. எப்படி உங்களுடைய உறவினர் உங்களுக்கு சாட்சி கையெழுத்து போட முடியாதோ? , நீதிமன்றத்தில் சாட்சி சொல்லமுடியாதோ? அதுபோலத்தான், போட்டால், சொன்னால் செல்லாது. ஆகையால் முகவர் ஒரு மூன்றாம் நபர், ஆனால் முக்கியமான நபர். அவரே முதன்மை ஆயுள் கணிப்பாளர் (primary underwriter), அவர் கொடுக்கும் தகவலகளின் அடிப்படையிலேயே முன்மொழிவுப்படிவம் பூர்த்தி செய்யப்படுகின்றது. நினைவிற் கொள்க அது முன்மொழி படிவம், விண்ணப்பம் அன்று. ஆயுள் காப்பீடு என்பது விண்ணப்பம் செய்து பெறுவது அல்ல. உங்கள் உடல் நிலைத் தகுதியை நிர்ணயித்த பிறகே, உங்கள் பொருளாதார நிலையை, சமுதாய அந்தஸ்தை நிருபித்த பின்னரே தருவது. (சமுதாய அந்தஸ்து ? போக்கிலி, கூலிப்படையினர், மரண் தணைடணை கைதி, அனைத்து சமுதாய விரோதி......(சமுதாய விரோதி= அனைத்து குற்றங்களும் அடங்கும, வரி ஏய்ப்பாளர்......) இவர்களுக்கு காப்பீடு கொடுக்கப்படுவதில்லை, தூக்கு தண்டனை கைதிக்கு மிக அதிக பிரிமியத்தொகை கட்ட வேண்டும். சமுதாய விரோதிகளின் வருமானத்தையும் கணக்கில் எடுத்து கொள்ள முடியாது) ஆயுள் காப்பீட்டில் போடப்படுகின்ற எந்த ஒரு கருப்பு பணமும் வெள்ளையாகிவிடும். (clause 10 (10D...A.... என்று வரும்....)



இதை நிர்ணயிக்கத் தகவல்களை அந்த படிவத்தில் பூர்த்தி செய்கின்றீர்கள் இதை நீங்களே பூர்த்தி செய்யலாம் அப்பொழுது இதில் கேட்கப்படும் பல கேள்விகளுக்கு பதிலளிக்கமுடியும். ஆனால் பாலிசி கிடைக்குமா? என்பது சந்தேகமே? கிடைக்கும், அவர் உங்களுக்கு கூறியத் தொகையில் கிடைக்காது. இதை மாரல் சமுதாயத்தில் அவருடைய தகுதி (ஹெசார்ட்-Moral Hazard), உடல் தகுதி (ஹெல்த் ஹெசார்ட்-Health hazard) என்ற விதியின் கீழ் வருகின்ற கூடுதல் பிரிமியத்தொகையையும் சேர்த்து வசூலிப்பர். அது மாதிரியான கேள்விகளுக்கெல்லாம் நீங்கள் ஆமாம் என்று எழுதி கையொப்பமிடுவீர்கள். ஆயுள் காப்பீட்டை பொய் சொல்லித்தான் எடுக்கின்றீரகளா? முழுக்க முழுக்க ஆமாம் என்றே சொல்வேன் அதுவே உண்மை. அதில் கண்டிப்பாக பதிலளிக்க வேண்டிய கேள்விகள்


  • * நீங்கள் புகை பிடிப்பவரா?
  • * மது அருந்துவரா? எவ்வளவு?
  • * புகையிலையை எந்த வகையிலேனும் பயன்படுத்துகிளீரா?
  • * நீங்கள் உடல் எதிர்ப்பு மருந்துகளை செலித்தியுள்ளீரா? எப்பொழுது?
  • * எப்பொழுதாவது விபத்து நேர்ந்தது உண்டா?
  • * எவ்வளவுநாள் மருத்துவமனையில் தங்கி இருந்தீர்கள்? எந்த நோய்க்காக?
  • * காசநோய், எய்ட்ஸ் போன்ற நோய்கள் தாக்கிஈயவரா?
  • * அறுவைசிகிச்சை செய்து கொண்டீரா?...........
  • * ரத்த கொதிப்பு, மாரடைப்பு?


இப்படி கேள்விகள் போகும் இதற்கெல்லாம், பெரும்பான்மையானவர்கள் நியாயவாதிகளாக? எல்லா உண்மையையும் எழுதுவார்கள்? (அது தான் நல்லது) உடனே இதெல்லாம் உறுதி படுத்த பல மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த படுவார்கள். அதன் செலவும் உங்கள் தலையில் தான் விழும்.



உடனே புகை பிடிக்காதவர்கள் எல்லாம், எனக்கு எந்த பழக்கமும் இல்லையப்பா? என்று பெருமூச்சு விட்டால்? அடுத்த கேள்வி தயாராக இருக்கின்றது?




  • * உயரம், எடை, மார்பளவு, விரியும் பொழுது, சுருங்கும் பொழுது........
  • * அப்புறம் நாடித் துடிப்பு இது மருத்துவர் நிர்ணயிப்பது. அதுவும் வளர்ச்சி அதிகாரி சொல்கின்ற படிதான் அவர் போடுவார். உங்கள் நாடியைப் பிடித்தாலே அனைத்தும் ஒரளவுக்குத் தெரிந்து விடும். அதன் கணக்கீட்டை (ரீடிங்) எழுதினால் பிரிமியம் தொகை எங்கோ எகிரிவிடும்.
  • * ஆகையால் மொத்தத்திற்கும் ஒரே நாடித்துடிப்பு, அதாவது 72 துடிப்புகள் ஒரு நிமிடத்திற்கு என்று எழுதுவார். உங்கள் வயதிற்கேற்ப அவரிடம் நிர்ணயிக்கபட்ட உயர, எடை அட்டவணை குறிப்புகள் இருக்கும் அதன்படி அனைத்தையும் எழுதிக் கொடுப்பார்கள். இதற்கு அவருக்கு 200 ரூபாய்.....500...... என்று பீஸ் போகும். இதை ஆயுள் காப்பீடு கொடுத்து விடும். (அதுவும் உங்கள் பணம் தான் பிரிமியத்தில் இருந்து தான் கொடுக்கின்றார்கள்) இப்பொழுது புரிகின்றதா? மருத்துவர்களின் சேவை மனப்பான்மையை......? (அவர்கள் எவ்வளவோ......இது சும்மா).

அதற்கு பிறகு உங்களுடைய குடும்ப வராலாறு அதில் யார் யார் என்று குறிப்பிடும் பொழுது, அவர்கள் தற்பொழுது உயிருடன் இருக்கின்றார்களா? என்ற கேள்வி எழும். அப்பொழுது இறந்து விட்டார் என்றால் அதற்கான உண்மைக் கராணத்தை கூறவேண்டும். அதில் உண்மைக் காரணமாக சிலவற்றை கூறினால் கூடுதல் பிரிமியல் செலுத்த ஆளாக்கப்படுவீர்கள்? அது பரம்பரை நோயாக ஆயுள் காப்பீட்டுக் கழகம் கண்க்கில் எடுத்து கொள்ளும். இங்கேயும் பொய்தான் கூறப்படும்.


முகவர் முதல் பிரிமியத் தொகை மட்டும் உங்களிடமிருந்து பெற்று கட்டலாம். அது கட்டாயம். அடுத்த பிரிமியம் உங்களிடமிருந்து வாங்கிச் சென்று கட்ட வேண்டியதில்லை. இதில் பல பேர் அவரை வேலையாளாக நியமிக்கின்றனர். பலர் அவர்களின் வீட்டு வேலைகளுக்கு கூட அவர் உதவியை நாடுகின்றனர். அவர் ஒரு ஆலோசகர், ஆயுள் கணிப்பாளர். இது பாலிதாரர்களின் தவறு. குடும்ப மருத்துவர், குடும்ப வழக்குரைஞர்..... போன்று உங்களுக்கு பிடித்தமானவர்களை நியமித்து கொள்ளலாம், பிறரையும் நாடலாம். தவறில்லை, பாலிசி ஆலோசனைக்கு அவரை நீங்கள் கேள்விகள் கேட்கலாம், தெரியாவிட்டால் கேட்டு தெரிந்து வர சொல்லலாம். வளர்ச்சி அதிகாரிக்கும் பல விசயங்கள் தெரியாது.



உங்கள் வங்கிக்கு நீங்கள் தானே போகின்றீர்கள்? அது போலத்தான் உங்கள் பாலிசயையும் நீங்கள் தான் சென்று செலுத்த வேண்டும். முகவரின் பணி, உங்களை எவ்வளவு நாளாகத்தெரியும் உங்களுக்கு என்ன வேலை, சம்பளம் எவ்வளவு? போன்றத் தகவல்களை அவர் ஒரு அறிக்கையை கையொப்பத்துடன் (Agent confidential report) சம்ர்ப்பிப்பார். வளர்ச்சி அதிகாரியும் (Devlopment Officer confidential Report) அதேபோன்று, முகவர் அறிக்கையை வைத்து  களப்பணியில் ஆராய்ந்து விட்டு சான்றளிப்பார். (அப்படி யாரும் களப்பணி செய்வதில்லை). வளர்ச்சி அதிகாரி ஒரு இரண்டாம் நிலை ஆயுள் கணிப்பாளர் (Secondary Underwriter). அவர் ஒரு மத்திய அரசு நிறுவன ஊழியர் (Govt servant). இந்த அறிக்கையெல்லாம் உங்கள் பாலிசி கோப்போடு எப்பொழுதும் ஆயுள் காப்பீட்டு அலுவலக்த்தில் இருக்கும். உங்களுக்கு காப்பீட்டு சம்பந்தமாக குறை இருந்தால் காப்பீட்டு நிறுவனத்தை தான் அணுகவேண்டும் அல்லது வளர்ச்சி அதிகாரியைத்தான் அணுகவேண்டும். அவர்கள் தான் அதற்கு பொருப்பானவர்கள் ஆகின்றனர். குறை நீருபீக்க பட்டால் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். முகவர் தண்டிக்கப்படமாட்டார், மகவர் அவர்கள் காட்டிய வழியிலேயே காப்பீட்டு முகவாண்மை செய்கின்றார். முகவர் உங்களுக்கும், நிறுவனத்துக்கும் பாலமாக (Mediam) மட்டுமே இருக்கின்றார். அதற்கு மேல் அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை. அவர் ஆயுள் காப்பீட்டு ஊழியரும் இல்லை. ஆகையால் நீதிமன்றம் அவரை கணக்கில் எடுத்து கொள்ளாது என்பதை நினைவிற்கொள்க. அவர் ஒரு மூன்றாம் நபர்.


பாலிசியை திரும்ப அளிக்கலாம்


எல்லாம் முடிந்து பாலிசி உங்களுக்காக ஏற்கப்பட்டு 9 இலக்க எண்கள் கொடுக்கப்படும். அதுவே உங்கள் பாலிசி எண். அது மாற்றத்தக்க எண் அல்ல. (யுனிக்). அந்த பத்திரம் உங்கள் கைக்கு விரைவு தபாலில் வரும் வந்தவுடன் உங்களுக்கு சொன்ன அத்தனை தகவலும் பாலிசியின் பின்புறம், முன்புறம் எல்லாம் குறிப்பிட்டிருக்கும் நன்றாக படித்து பாருங்கள், புரியவில்லை என்றால் முகவரை கூப்பிட்டு அல்லது வளர்ச்சி அதிகாரியை கூப்பிட்டு அல்லது உங்களுக்கு யார் நம்பிக்கையானவர்? என்று நம்புகிறீர்களோ? அவர்களை விட்டு வாசிக்க செய்து புரிந்து கொள்ளுங்கள், தகவல்கள் சரி இல்லையென்றால், அல்லது ஏமாற்று வேலை என்று உங்களால் கருதப்பட்டால் உடனே அதை 60 நாட்களுக்குள் திருப்பி கொடுத்து உங்கள் பணத்தை திரும்ப பெற்று கொள்ள வேண்டும். அதில் மருத்துவ செலவு கழித்து கொள்ளப்படும். இது இப்பொழுது நடைமுறையில் உள்ளது முன்பு கிடையாது.



விபத்துக்காப்பீடுக்காக உங்களிடமிருந்து 1 ரூயாய் கூடுதலாக ஒராயிரத்துக்கு என்று வசூலிப்பார்கள், அதை பொது நிறுவனமொன்றில் வைப்பாக வைத்து காப்பீடு பெறுகின்றனர். ஆயுள் மட்டும் தான் அயுள் காப்பீடு. விபத்துகாப்பீடு பொது காப்பீட்டு சட்டத்திட்டங்களின் படிதான் கிடைக்கும் அதையும் ஆரம்பத்திலேயே சொல்லி விடுவார்கள். வாகனத்தில் செல்லும் போது ஏற்படும் விபத்துக்கள் எதிர்பாராதது அது மட்டுமே கணக்கில் எடுத்து கொள்ளப்படும். நீங்களே ஆபத்து என்று தெரிந்து ஆபத்தான் தொழிற்சாலைகளில் பணி புரிபவர்கள், ஆபத்து நிறைந்த தொழில் என்று தனியாக குறிப்பிட்டு அதற்கு தனியாக பிரிமியம் கட்டவேண்டும். இதை தவிர்ப்பதற்காகவே இதை குறிப்பிடாமல் விடுவார்கள். அதற்கு தொழிலின் தன்மையை கணிப்பது..... ஆக்குபேசனல் ஹசார்ட் (Occupational Hazard) என்று பெயர்.


பிரிமியம் கட்ட சொல்லி வற்புறுத்துவது



இதனிடையே ஒரு மிகப்ப பெரிய குறைபாடு (உள்குத்தும்) மக்களிடையே உள்ளது. இதை கண்டிப்பாக சொல்லியே ஆகவேண்டும். இதற்கு பெயர் ஆயுள் காப்பீட்டு கழகத்தில் ரிபேட் (Rebate) என்பார்கள். இது முழுக்க முழுக்க லஞ்சம் வாங்குவது. யார்? வாங்குவது பாலிசிதாரர்? யார் கொடுப்பது? முகவர். ஏன் கொடுக்கின்றார் ஆயுள் காப்பீட்டு கழகத்தின் வணிக போட்டியினால், இந்த உந்துதலை, ஊக்குவிப்பை வளர்ச்சி அதகாரிகள் மூலம் முகவர்களை உந்துகின்றனர் (இதெல்லாம் முகவர்கள் பணம்). இந்த சட்டவிரோதமான ரிபேட் என்ற சிஸ்டத்தை உருவாக்கியது காப்பீட்டு கழகமும் அதன் நிர்வாகமும் தான் காரணம். இதெல்லாம் வாங்கவில்லை என்றுதான் பாலிசிதாரர்களான நீங்கள் கையொப்பமிடுகின்றீர்கள். (கையொப்பமிடும் பகுதியில் ஒரு பத்தி தனியாக இது பற்றி குறிப்பிடபட்டிருக்கும்) இன்னும் பல பேர் குறிப்பாக தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்கள் 180 மி.லி (குவார்ட்டர்) மதுவுக்கெல்லாம் பாலிசி போடுகின்றனர். இது ஊதியத்தில் பிடித்தம் செய்து எடுக்கும் பாலிசி, அவர்களுக்கு என்ன பாலிசி? என்றே தெரியாது. இதற்கு தொழிற்சாலையில் உங்கள் சம்பள பட்டுவாடா செய்யும் ஊழியரும் ஆதாயம் அடைந்திருப்பார். மேலாளர் கூட ஆதாயம் அடைந்திருப்பார். இது முறையற்ற வணிகம். இதற்கு குற்றவாளி மக்களே? நேர்மையாக பணிபுரிந்து ஒய்வு பெற்றவர்கள் கூட இந்த காசிற்கு ஆசைபடுகின்றனர். அவர்களே கூறியதை கேட்டிருக்கின்றேன். உங்களுக்கு அந்த பாலிசியினால் என்ன பயன் என்பதை மட்டுமே ஆராயவேண்டும். அவரின் ஆதாயத்தை தெரிந்து கொள்ளவேண்டும், அதற்கு ஆசைப்படக் கூடாது. அது முகவருக்கு நிறுவனம் தரும் ஊதியம். அது என் பணம் என்று வாதாடினால் அவர் எதற்கு உங்களுக்காக இந்த பணியில் ஈடுபடவேண்டும். (இப்படி பலபேர் வாதிடுகிறார்கள்). ஆயுள் காப்பீட்டில் 72க்கும் மேலான காப்பீடுதிட்டங்கள் உள்ளன. எல்லாமே எண்களால் பிரிக்கப்பட்டிருக்கும். எந்த பாலிசி என்று உடனே யாரும் அறிந்து கொள்ள முடியாது. இது பற்றியெல்லாம் முகவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். இதுமாதிரி முறையற்ற ரிபேட் முறையில் பாலிசி எடுத்தால் இந்த தகவல்கள் சரியாக உங்களுக்கு தெரிவிக்கமாட்டார்கள். உங்கள் நோக்கமே வேறொன்றில் இருக்கும் பொழுது இதை பற்றியெல்லாம் யோசிக்க மறந்து விடுவீர்கள். இதனால் எழும் பிரச்சினைகளே நீதிமன்றத்தில் வந்து தடுமாறுகின்றது.


முகவாண்மை செய்பவர்கள்



முகவாண்மை வேலையில்லா திண்டாட்டத்தை ஒரளவு போக்குகின்றது என்று வேண்டுமானால் சொல்லாலாம். ஆனால் இன்று பாக்கெட் மணிக்காக செல்வந்தர்களும் இப்பணியை செய்கின்றனர். வங்கி மேலாளர்கள் எல்லாம் ஒய்வு பெற்ற வயதில் செய்கின்றனர். பல அரசு ஊழியர்கள் மற்றும் அரசு பள்ளி ஆசிரியர்கள் (இது தவறு) பினாமி பெயரில் செய்கின்றனர், கோயில் பார்ப்பன அர்ச்சகர்கள், பார்ப்பன பெண்கள் இதில் சக்கை போடு போடும் நபர்கள். (ஆனால் சூத்திரர்கள் அவ்வளவாக வெற்றி பெறுவதில்லை ஏதோ ஒன்றிரண்டு ). இங்கும் ஜாதிய வெறிகள் தலை தூக்கி கொண்டு ஆடுகின்றதை கண்கூடாகப் பார்க்கலாம். ஆனால் சமுதாயம் திருந்தி விட்டது என்று பீய்த்தி கொள்பவர்களுக்கு இது ஒரு சான்று.


முகவர் மற்றும் வளர்ச்சி அதிகாரி ஊதியங்கள்



இதற்கு பிறகு முகவர் மற்றும் வளர்ச்சி அதிகாரியின் கமிசன்கள். இதை பற்றி தெரிந்து கொள்ள காப்பீடு எடுக்கும் ஒவ்வொருவருக்கும் அறிந்து கொள்ள உரிமையுண்டு.  முகவர் என்பவர் மூன்றாம் நபர் அவருக்கு உதவி புரிய ஒரு வளர்ச்சி அதிகாரி. முகவருக்கு நீங்கள் கட்டும் பிரிமியத்தில் இருந்து 1 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை ஒரு வருடத்திற்கு மட்டும் கிடைக்கும். அடுத்த வருடத்திலிருந்து 5 சதவீதம் மட்டுமே கிடைக்கும். பல முகவர்கள் முகவாண்மையை தொடர்ந்து செய்ய மாட்டார்கள் இடையில் நிறுத்தி விடுவார்கள்.  அதற்கு பொரும்பாலான காரணம் மேற்சொன்ன முறையற்ற வணிகம் தான் (ரிபேட்) முதல் காரணம். 


இரண்டாவது காரணம் அங்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுபாடுகள் அப்படி. வருடத்திற்கு 12 பாலிசிகள் கண்டிப்பாக பிடிக்கவேண்டும் இல்லையேல் முகவாண்மையை தொடர முடியாது. பணம் கொடுத்து ஒரு முகவரால் பாலிசிகள் தொடர்ந்து பிடிக்க முடியாது. அப்படி முறையற்ற வணிக முறையில் சேர்ந்த பாலிசி தாரர்களும் தொடர்ந்து பிரிமியத்தை செலுத்த மாட்டார்கள். அவர்கள் பணம் கட்டியிருந்தால் தானே அதை தொடர்வார்கள். இதனால் அவர் ஊதியம் பாதிக்கப்படும்.


மூன்றாவது முகவாண்மை செய்து கொண்டிருக்கும் பொழுது வேலை கிடைத்துவிடும் அப்படியே விட்டு விட்டு போய் விட வேண்டியதுதான் கமிசன் அவ்வளவுதான். பலரால் கெஞ்சி கெஞ்சி " போடா இந்த வேலையும் வேனா? ஒன்றும் வேனா, ஏமாத்தரவனை தான் இந்த உலகம் நம்பும்" என்று விட்டு போனவர்கள் நிறைய பேர். அவர்கள் கமிசன் எல்லாம் நிறுவனத்துக்குதான் லாபம்.

முகவர்கள்பிடித்து கொடுக்க கமிசன்
முகவர்களை பிடித்து கொடுக்க தனி கமிசனும் உண்டு.  இதை வளர்ச்சி அதிகாரிகளும், மேலாளர்களும் போட்டி போட்டு கொண்டு செய்வார்கள். இதில்ம் சட்டவிரோதமாக அரசு அதிகாரிகளும் பினாமி பெயரில் செயல்பட் அவர்களே வழி வகுக்கின்றனர்.அவர்களுக்கு காப்பீடு பற்றி ஒன்றுமே தெரியாது.  அப்படியே தெரிந்தாலும் சொல்ல மாட்டார்கள், இதில் அவர்கள் அதிகராத்தை பயன்படுத்தி பெரும்பாலான பாலிசிகளை பிடிக்கின்றனர்.  அல்லது கையூட்டு கொடுத்து. வணிகம் என்பது என்ன? ஏமாற்றுவது தானே என்பது அவர்கள் கூற்று. இதைத்தான் அவர்கள் மார்க்கெட்டிங் இன்டலிஜன்ஸ் என்று மாற்றி கூறுகின்றனர்.




பார்ப்பன் வளர்ச்சி அதிகாரிகளின் பார்ப்பன ஜாதி சாய்வு



  ரிபேட், முறையற்ற வணிகம் பேன்றவற்றை ஊக்குவிப்பது வளர்ச்சி அதிகாரிகள், இதிலும் பெரும்பாலும் பார்ப்பனர்களே, ஆயுள் காப்பீட்டு கழகத்தில் பெரும்பாலும் பார்ப்பனர்களின் ஆளுமைதான் அதிகமாக இருக்கும். பார்ப்பன பாசை பேசியே ஆளை மயக்கி விடுவார்கள்.  அதே போன்று அவர்களின் உதவியும் பார்ப்பன முகவர்களுக்கு உதவும் முகமாகவே இருக்கும்.ஆயுள் காப்பீட்டு நிறுவன அதிகாரிகளும், பார்ப்பன சாய்வு கொண்டிருப்பர். சூத்திர அதிகாரிகள் பொதுவாக செயல்படுவார்கள்.ஆனால் அவர்கள் எண்ணிக்கை மிக குறைவு.


 பாலிசிதாரர்களுக்கு வழங்கப்படும் தகவல்கள்

பாலிசிதாரர் களுக்குஅனைத்து தகவல்களும்  முகவர்கள் மற்றும் வளர்ச்சி அதிகாரிகளால் வழங்கப்பட வேண்டும். ஆனால் உங்களுக்கு அனைத்தும் கூறியாகி விட்டது என்று அந்த முன்மொழிவு படிவத்தில் கையொப்பமிட்டு விடுவார்கள், உங்களிடமும் கையொப்பம் வாங்கிவிடுவார்கள். முகவரோ வளர்ச்சி அதிகாரியோ இருவரும் தங்களுடைய கமிசன,எவ்வளவு  என அனைத்தையும் கூற வேண்டும். (அப்படி கூறினால் தான் நீங்கள் பங்கு கேட்கிறீர்கள். அது மிக மிகத் தவறு. அதை நிறுவனம் அவர்களுக்கு ஊதியமாக வழங்குகின்றது. உங்களுக்கு அவர் நல்ல முறையில் உதவுகின்றாரா? என்று மட்டும் பாருங்கள்.)

அவரின் காசை நீங்கள் பங்கு போட்டு கொண்டால் அவர் உங்களுக்கு வேலையை காண்பித்து விட்டு போவார். முதல் பிரிமியம் நீ கட்டு, இரண்டு கட்டு, 3 கட்டு , என்று கேட்பது, அல்லது முகவர் கொடுப்பது ஆயுள் காப்பீடு சட்டம் 41 1938 இன் படி  குற்றமாகும்., அபராதமும் உண்டு. உங்கள் காப்பீடு ரத்து செய்யும் அதிகாரமும் உண்டு. இப்பொழுதுதான் அதை கொஞ்சம் தீவிரமாக கண்காணிக்கின்றனர் என அறிகின்றேன். முன்பு இந்த கையூட்டு இல்லாமல் யாரும் பாலிசி எடுப்பது இல்லை. 100 க்கு 95 சதவீத பாலிசி தாரர்கள் இப்படித்தான் பாலிசி எடுத்து இருப்பார்கள்? இப்போதும் எடுக்கின்றார்கள் இது உண்மையா? இல்லையா? அப்புறம் நாம நாட்டை குறை சொன்னால் என்ன அர்த்தம். முகவருக்கு வேறு எந்த வருமானமும் கிடையாது. எல்லா செலவுகளும் அவர்தான் பார்த்து கொள்ளவேண்டும். வளர்ச்சி அதிகாரிக்கு நிரந்தர வருமானம் உண்டு.அதற்காக அவருடையதை கேட்காதீர்கள். உங்களுக்கு வேண்டியது பாலிசி, அதில் கவனமாயிருங்கள்.

முகவரின் உதவிகள்
முகவரை உங்கள் கேட்புரிமையின் (claim) பொழுது, அது இழப்பீடாகட்டும், முதிர்வாகட்டும் அவரை உதவிக்கு வைத்துக் கொள்ளலாம். இதெல்லாம் (ரிபேட்) அவரிடம் கையூட்டு வாங்காமல் இருந்தால், அவர் உங்களுக்கு உதவ முன்வரலாம் அது கட்டாயம் கிடையாது. முகவர் இல்லையென்றால் ஒன்றும் பாதகமில்லை. முகவர் உதவி புரிவது எல்லாம் ஒரு புரிதலிலேயே நடப்பது, இதனால் நீங்கள் இன்னும் சிலரை அறிமுகப்படுத்துவீர்கள் என்ற நோக்கத்துடன். நீங்களே கேட்புரிமையை வளர்ச்சி அதிகாரி, கிளை மேலாளரை அணுகி அந்த பிரிவில் மனு அளித்து பெற்று கொள்ளலாம்.

முகவர் பெறும் கமிசனுக்கு டி டி எஸ்

வளர்ச்சி அதிகாரிக்கு இதை விட கூடுதலாக மூன்று மடங்கு கமிசன் கிடைக்கும். அவருக்கு நிரந்தர ஊதியம் வேறு உண்டு. அவர் எங்கு வேண்டுமானாலும் இடமாற்றம் செய்து கொண்டு போகலாம், ஒரு வளர்ச்சி அதிகாரியின் கீழ் 300 இலிருந்து 1000 முகவர்கள் ஏன் அதற்கு மேலும் இருப்பார்கள் அவர்கள் எவ்வளவுக்கு எவ்வளவு பாலிசி பிடிக்கின்றார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு பணம். ஒரு நல்ல நிலையில் உள்ள முகவரே வருடத்திற்கு 3 லட்சத்திலிருந்து 10 லடசம் வரை சம்பாதிப்பார் (பல செல்வந்தர்கள் வாடிக்கையாளர்களாக இருப்பார்கள்- மேற்கூறிய முறையில் பாலிசி பிடித்திருப்பார்கள்). இதற்கு மேலும் போகும் இது எல்லா முகவருக்கும் சாத்தியமல்ல அப்படி என்றால் வளர்ச்சி அதிகாரிக்கு (அவருடைய குழுவில் இது மாதிரி அதிகப்படியான ஊதியம் பெரும் முகவர்கள் 10 இலிருந்து 30 வரை இருப்பார்கள் குறைந்த பட்சம்) என்ன வருமானம் என்று கணக்கு போட்டு கொள்ளுங்கள். அவர்களுக்கு எந்த ஒரு பெரிய வேலையும் கிடையாது. இந்த உள்குத்து வேலைகளை மட்டும் சொல்லிகொடுப்பார்கள், அல்லது ஏதாவது பெரிய பாலிசி பிடிக்க வேண்டுமொன்றால் முகவரோடு செல்வார்கள். முகவர்களால் ஆதாயம் இருக்கிறதல்லவா? இவர்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும், கிளை மேலாளர் உடபட..... அனைவருக்கும் இலாபம் இருக்கின்றது. இது தான் மக்களை ஏமாற்ற காரணம்.... முகவர்கள் மட்டும் காரணமல்ல. இன்னும் கேட்டால் பல விசயங்கள் அவர்களுக்கு தெரியவே தெரியாது. சொல்லி கொடுக்கவும் மாட்டார்கள். (குறிப்பு ; முகவர் கமிசன் டி டி எஸ் என்ற அடிப்படையில் ஒருவருடத்திற்கு 5000 த்திற்கு மேல் போனால் 10 % வரி பிடித்தம் செய்யப்பட்டே தரப்படுகின்றது. அது மட்டுமில்லாமல் முகவர் அவருடைய லைசன்சை 3 வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும். இது 300 ரூபாய் ஆகும். முன்பெல்லாம் இது 15 ரூபாய் தான் அகும். இப்பொழுது இதற்கு கட்டணம் அதிகரிக்கப்பட்டிருக்கின்றது.)


ஐ ஆர் டி ஏ (IRDA) கட்டுப்பாடுகள்

ஐ ஆர் டி ஏ இவர்களை அடக்குவதற்காக பல கட்டுப்பாடுகளை விதிக்கின்றது. ஆனால் அது எல்லாம் முகவர்களை பாதிப்பது போல் தான் உள்ளது. காரணம் ஐ ஆர் டி ஏ வளர்ச்சி அதிகாரிகாளின் ஊதியத்தை தேவையில்லாத அல்லது அதிகப்படியான ஊதியமாகவே கருதுகின்றது. பல விசயங்களில் ஜ ஆர் டி ஏ  வளர்ச்சிஅதிகாரிகளுக்கு பெறும் சலுகைகளை ரத்து செய்கின்றது. சமயத்தில் மாற்றமும் செய்கின்றது. ஆனால் அது முகவர்களுக்கு பாதகமாகவே முடிகின்றது. காரணம் வளர்ச்சி அதிகாரிகளின் வருமானத்தை தடுத்து விட்டால் முகவர்களுக்கு எந்தவித உதவியும் கிடைக்காது.....


முகவர்களுக்கும் வளர்ச்சி அதிகாரிகளுக்கும் உள்ள வேறுபாடு
. முகவரகள்தான் பாலிசி பிடிக்கவேண்டும். வேறு யாரும் பாலிசி பிடிக்க முடியாது. பாலிசி பிடிக்கவில்லை என்றால் லைசன்ஸ் ரத்தாகி விடும், அதற்கு பிறகு முகவாண்மை செய்ய முடியாது. பழைய பாலிசியின் வருமானமும் கிடைக்காது. ஆனால் வளர்ச்சி அதிகாரிகளுக்கு பணிபுரிந்தாலும் புரியாவட்டாலும் ஊதியம் உண்டு. ஆனால் அவர்கள் பாலிசி பிடிக்க முடியாது. இந்நிலையில் அவர்கள் பினாமி பெயரில் பாலிசிகளை பிடிப்பார்கள். நீங்கள் கிளைக்கு சென்று பாலிசி எடுத்தால் இம்முறையிலேயே வணிகம் நடைபெறும். இது ஆயுள் காப்பீட்டு, ஐ.ஆர்.டி.ஏ  சட்டப்படி தவறு. இதற்கு அவரை அந்த பதவயிலிருந்தும் நீக்கலாம்.


......விதிமுறைகளை வளர்ச்சி அதிகாரிகள் தான் சொல்லித் தரவேண்டும். அவர்களும் களத்தில் இறங்கி வேலை செய்யவேண்டும், ஆனால் அப்படி களத்தில் இறங்கி பணி செய்ய மாட்டார்கள். அவர்களுக்கு பல சலுகைகள், சிறப்பு ஆயுள் காப்பீடு பாதி கட்டணத்தில், அப்புறம் வீடு..... அவர்களுக்கென்று தனி சங்கம் வேறு உள்ளது. முகவருக்கு இந்த கமிசன் மட்டும் தான்.... வெற்றி பெறுபவருக்கு, (முறையற்ற வணிகத்தால் மட்டுமே முடியும்) சில பல சலுகைகள் உண்டு அதற்கு பல காலங்கள் காத்திருக்க வேண்டும்..  ரிபேட் கொடுக்காத ஒரு முகவர் வெற்றி பெறுவதே இல்லை. 


போலிங்

அங்கு எல்லா வகை ஊழியர்களுக்கும் தனித்தனி சங்கம்.அதே போன்று நீங்களே ஆயுள் காப்பீட்டு நிறுவனத்துக்கு சென்று கிளை மேலாளரை பார்த்தாலும் அவரும் வளர்ச்சி அதிகாரியைத்தான் நாடுவார். இது போலிங் எனப்படும். பல வளர்ச்சி அதிகாரிகள் இருப்பார்கள் சுழற்சி முறையில் தானாக வரும் பாலிசகள் அந்தந்த அதிகாரிகளுக்கு செல்லும் அவர் தனக்கு பிடித்த அல்லது பினாமி முகவர் பெயரில் பாலிசியை எடுப்பார் இது எதுவும் உங்களக்கு தெரியாது. அவருக்கு மூன்று வருமானம். (இதில் பல உள் விவகாராங்கள் உள்ளன (உள் குத்து)). இதற்கு நீங்களே ஒரு முகவரை பார்த்து பாலிசி விபரங்களை கேட்டு அணுகலாம். அதுமட்டுமில்லாமல் நாளை இது சம்பந்தமாக வழக்கு தொடுத்தாலும், முகவரிடம் எடுத்தது போல் நீதிமன்றத்திலும், ஐ ஆர் டி ஏ விலும் (IRDA ) கூறப்படும். மேலாளர் தான் பாலிசி எடுத்தாரர் என்று கூறமுடியாது. கூறினால் எடுபடாது. எப்படி போனாலும் முகவர் தான் உங்களுக்காக கையெழுத்து போட வேண்டும்.


முகவர்கள் தான் பாலிசி பிடிக்க வேண்டும் என்பது சட்டம். ஆயுள் காப்பீட்டில் மட்டும்தான் மற்ற பொது நிறுவனங்களில் அந்தளவுக்கு கிடையாது. ஏனென்றால் இதில் ஆயுள் சம்பந்த பட்டிருப்பதால்.







இனி காப்பீட்டில் என்னென்ன விதிமுறைகள், வழிமுறைகள் என்பதை பார்ப்போம்

கேட்புரிமை மற்றும் முதிர்வு (கிளைம்)



பாலிசி துவங்கி 2 வருடத்திற்குள் இறந்தால்-அந்த குறித்த காலத்திற்கு முன் கேட்கும் கேட்புரிமை (Early claim) என்று பெயர். அதற்கு விசாரணை, போர்ஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் என அனைத்தையும் கேட்பர். சந்தேக மரணம் அனைத்திற்கும் கேட்பதுண்டு. ஆனால் இந்த கேட்புரிமைக்கு தான் அதிக கெடுபிடி.


அதற்கு காரணம் ஒரு காப்பீடு எடுக்கும் பொழுது பெரும்பாலான செலவுகளை ஆரம்பத்தில் காப்பீட்டு நிறுவனம் செலவு செய்கின்றது, வளர்ச்சி அதிகாரி சம்பளம். ம்ற்றும் இதரப்படிகள், முகவர் சம்பளம், (அவர்களும் பணி செய்கின்றனர்), மருத்துவருக்கான கட்டணம், ஊழியர்களுக்கான ஊதியம்....... இன்னும் பல ......அதை ஈடுகட்ட இரண்டு வருட கால பிரிமியத் தொகை ஆகும், என்ற தோராய மதிப்பீடே காரணம்.. ஒருவர் இந்த காலத்திற்குள் இறந்தால் அது விசாரணக்குட்படுத்தப்படும். எதுவுமே இல்லையென்றால், உண்மையான சாலை விபத்து என்றால் பயப்படத்தேவையில்லை. (விகடன் பதிவில் கூறியிருப்பவை இதிலிருந்து வேறுபட்டவை) . ஒரு வேளை தற்கொலை என்றால் அதற்கும் விசாரணை மேற்கொள்ளப்படும். இதை நான் பயத்தோடுதான் குறிப்பிடுகின்றேன. பாலிசிக்காக ஒருவர் தற்கொலை புரிந்து கொண்டால் அது பல பேரின் பின்பற்றலுக்கு வழிவகுத்துவிடும். ஒருவருடைய இழப்பு அந்த குடும்பத்திற்கு மட்டுமல்ல ஆயுள் காப்பீட்டு நிறுவனத்திற்கும் பணவகையில் இழப்பு. பல நேரங்களில் கொலைகளில் கூட முடியும். (உ.தா. பலே பாண்டியா திரைப்படம் பார்க்கவும்) கேட்புரிமைகள் எவ்வளவு குறைவாக வருகின்றதோ அவ்வளவும் லாபத்தொகையாக முதிர்வின் போது பாலிசிதாரர்களுக்கு கிடைக்கும்.



(இதற்கு உதாரணம் மும்பை தாஜ் விடுதி (ஒட்டல்) தீவிரவாதிகள் தாக்குதல் சம்பவத்தில் அதிக உயிரிழப்பு கேட்புரிமைகள் வந்ததால் அந்த தனியார் காப்பீட்டு நிறுவனம் பொருளாதார சிக்கலில் தள்ளாடியது, விடுதியும் பாதிப்பான நட்சத்திர விடுதிக்கான கேட்டபுரிமைத் தொகையை கேட்டு காப்பிட்டு நிறுவனத்திடம் கோரியது..)



அதற்காக இரண்டு வருடத்திற்கு பின் ஒருவர் தற்கொலை புரிந்து கொள்ளலாமா? என்றால் அதுவும் தவறு? பிறகு ஏன்? இதில் ஒரு நம்பிக்கை பின்பற்றபடுகின்றது. தற்கொலை எண்ணத்துடன் காப்பீடு எடுத்திருப்பாரேயானால் அவர் இரண்டு வருடத்திற்கு பின் அந்த எண்ணத்தை மாற்றி கொண்டு விடுவார் என்று ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தால் மனோதத்துவ ரீதியாக நம்பபட்டு வருகின்றது.



பெண்ணிற்குரிய காப்பீட்டு கட்டுபாடுகள்


இவையெல்லாம் ஆண் பெண் இருபாலருக்கும் பின்பற்றப்படும் பொதுவான நடை முறைகள். ஆனால் பெண்ணை பொருத்த வரை இன்னும் அதிகமான கட்டுபாடுகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த இடத்தில் பெண்ணினத்தை கண்டு சற்று களங்கத்தான் வேண்டும். பேறு கால இடர் என்று அவர்களுக்கு உண்டு, அது அவர்களுக்கு மறுபிறவி. அந்த காலத்தில் பாலிசி எடுக்கப்படக்கூடாது. அப்படியிருந்தால் அதற்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். அதை கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். குறிப்பிடாவிட்டால் ஆனந்த விகடனில் தான் வரும். இழப்பீடு வராது.இன்னும் பல விசயங்களை அவர்கள் குறிப்பிட வேண்டும் அந்த விசயங்களை பல முகவர்கள் வெட்கப்பட்டு கொண்டு கேட்காமல் விட்டு விடுவார்கள். அதை மருத்துவருக்கு சொல்லுவன போன்று தாங்கள் தைரியமாக சொல்லலாம். இல்லையேல் நீங்களே வாங்கி அந்த கட்டங்களை பூர்த்தி செய்யலாம். அதிலும் சிக்கல் உண்டு அதை மாற்றி எழுத வேண்டும். இல்லையேல் மருத்துவ சோதனைக்கு உட்படுத்துவார்கள். கூடுதல் கட்டணம் வசூலிப்பார்கள். ஆகவே இங்கேயும் பொய்தான் பெரும்பாலும் அரங்கேறும். அதே போன்று தற்கொலைக்காக அதிகம் முயற்சிப்பவர்கள் பெண்கள். அவர்களுக்கு காப்பீடு கொடுக்கும் பொழுது கூடுதலான கவனம் செலுத்தப்படும். கிளாஸ் 4 B (clause 4 B Suicide attempt) என்று கூடுதலாக ஒரு படிவம் வேறு வைப்பார்கள். 18 வயதிலிருந்து 35 வயதுள்ள பெண்கள் வரைக்கும். இந்த காலத்தில் அவர்கள் தற்கொலை புரிவதற்கான மனநிலை இந்த இடைப்பட்ட காலத்திலேயே தோன்றுகின்றன. (இப்பொழுது தளர்த்தப்பட்டிருக்கின்றது, ஆனால் எச்சரிக்கையாய் இருப்பது நல்லது)


அறுவை சிகிச்சை..........


சீசேரியன் இந்த காலத்தில் சாதாரணம். (இதிலிருந்து சிலவற்றை தாங்களே உணர்ந்து கொள்ளலாம்) ஆனால் ஆயுள் காப்பீட்டில் இது ஒரு ஆயுள் குறைக்கும் காரணி (Risk factor). இனிமேலாவது பல மூத்தவர்கள், கிராமத்தவர்களை பின்பற்றி சுக மகப்பேறு பெரும் வழக்கத்தை பின்பற்றுங்கள். நேரம் நல்ல நேரமாக இருக்கவேண்டும், என்ற மூடநம்பிக்கைக்காக அறுவை முறை மகப்பேறை (சீசேரியன்) , மருத்துவர் கொடுத்த மகப்பேறு நாளுக்கு முன்னரே பெறுகின்றனர். ஒரு நாள், இரண்டு நாள் முன்னரே. குழந்தையை பெற்றெடுக்கின்றனர். என்ன கொடுமை...... இது ஆயுள் காப்பீட்டில் ஆயுள் குறைப்பு காரணி.......இதை குறிப்பிட்டால் கூடுதல் கட்டணம். ஆகையால் இதை யாருமே குறிப்பிட மாட்டார்கள். அதே போன்று கருக்கலைப்பு அதுவும் ஆயுள் குறைப்பு காரணி. எத்தனை முறை என்ற கேள்வி வேறு கேட்கப்பட்டிருக்கும். பெண்களைப் பொருத்தவரை காந்தி கூறியது போன்று பெண்கள் ஒரு பலவீனமான பாலினமாகவே கருதப்படுகின்றது.ஆயுள் காப்பீட்டிலும் அப்படித்தான். வீட்டில் இருக்கும் பெண்கள் (Home maker) மேல் அதிக தொகைக்கு காப்பீடு எடுக்க முடியாது. 10 ஆம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கும் இப்படித்தான். அரசு வேலை செய்யும், பெண்களுக்கே அதிக அளவில் பாலிசி எடுக்க அனுமதிக்கப்படுகின்றது. வருமான வரி கட்டும் பெண்களுக்கு சற்று கூடுதலான தொகைக்கு காப்பீடு செய்ய அனுமதிக்கப்படுகின்றது. தனிமையில் வாழ்பவர்களுக்கு, கைம்பெண் போன்றவர்களுக்கு குறைந்த காப்பீடே அனுமதிக்கப்படுகின்றது. காரணம் என்னவென்று நான் சொல்லி தெரியவேண்டியதில்லை.



என்னதான் கணவர் திருமணத்திற்கு முன்பே பாலிசி எடுத்ததிலிருந்து முன்மொழிபவராக (நாமினேசன்) பெற்றோரை குறிப்பிட்டருந்தாலும் மனைவிக்கே அந்த இழப்பீடு பணம் சொந்தம். ஆனால் அதை உடனடியக தெரியப்படுத்த வேண்டும். மனைவி புகார் பதிந்து விட்டால் அதை வேறு யாரும் வாங்க உரிமை கொண்டாட முடியாது. அதற்கு முன்பே திருமணத்தை பதிவு செய்திருப்பது நல்லது. கூடுதல் பலம். விவாகரத்து பெற்றவர் உரிமை கொண்டாட முடியாது. அவரே பணம் கட்டியிருந்தாலும். அதே போன்று குழந்தைகளுக்கு நீங்கள் (பெற்றார், காப்பாளர்) பணம் கட்டியிருநதாலும் அவர்கள் பருவம் அடைந்ததும் அந்த பணம் அவர்களுக்கே சொந்தம். அவர்கள் பெயரிலேயே காசோலைகள் வழங்கப்படும் இதற்கான படிவத்தில் முன்பே (clause 2 ab) கையொப்பம் வாங்கி விடுவர். (பாலிசி போடும் பொழுதே)



இலாபத்தொகை


இலாபத்தொகை ஆயுள் காப்பீட்டின் முழு லாபத்தொகையும் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்திலேயே சேர்க்கப்படுகின்றன. அதற்கான ராயல்டி, லாப சதவீதம் என்று அரசுக்கு எதுவுமே காப்பிட்டு நிறுவனங்கள் செலுத்துவதில்லை. இது எந்த ஒரு நிதி நிறுவன அமைப்பிலும் கிடையாது. அப்படியென்றால் அரசு ஏன் வரிச்சலுகை அளிக்கின்றது? . நீங்கள் கட்டும் 100 ,ரூபாய் பணத்தில் 20 ரூபாயை முதலிலேயே அரசுக்கு கொடுத்து விடுகின்றனர். வரிச்சலுகை 30 சதவீதம் என்றால் 30 ரூபாயை கொடுத்து விடுகின்றனர். மீதமுள்ள 70 ரூபாய் பணமும் ஆயுள் காப்பீட்டிலேயே முதலீடு செய்யப்படுகின்றது. இது எப்படி லாபத்தொகையாக மாறுகின்றது.பிற நிறுவனங்களுக்கு கடன் கொடுக்கின்றது தகுந்த அடமானத்துடன்,. அதன்பிறகு அரசுக்கே கடன் கொடுக்கின்றது. கேரளாவில் மிகப்பெரிய பொருளாதார சரிவு சென்ற நூற்றாண்டில் வந்தது நினைவிருக்கலாம் அப்பொழுது ஈ.கே நாயனார் முதலைமைச்சராக இருந்தார் என நினைக்கின்றேன். அவருடைய அரசு காலத்தில். அரசு கஜானவே காலி அரசு ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்கவே பணம் இல்லை. அப்பொழுது கடன் கொடுத்தது ஆயுள் காப்பீட்டு கழகம் தான். வட்டிக்குத்தான். அந்த வட்டி பாலிசிதாரர்களுக்கு முழுவதும் பங்கீட்டு கொடுக்கப்படும்.




வீட்டு கடன்

வீடு கட்ட கடன் கொடுப்பது ஆயுள் காப்பீட்டு கழகமல்ல. அது ஒரு காரபரேட் நிறுவனம் அதற்கும் ஆயுள் காப்பீட்டு நிறுவனம் கடன் கொடுக்கின்றது. அவர்கள் உங்களுக்கு வீடு கட்ட கடன் கொடுக்கின்றனர். அவ்வளவுதான். இதில் ஒரு ஆயுள் காப்பீட்டு மேலாளர் தலையிட்டு பெரிய ஊழுலுக்கு துணை போனதை சென்ற நூற்றாண்டின் செய்தியாக அறியலாம். அவரை கைதும் செய்திருக்கின்றது அரசு. ஆகையால் இது தனி.


பாலிசியின் மூலம்- 5 வருடத்திற்கு பிறகு (என்டோமன்ட் மட்டும் தான்-லோன் கிடைக்கும்) பாலிசி கடன் பெறலாம். அதற்கு அரையாண்டு வட்டியாக 8 சதவீதம் வசூலிக்கப்ப்டுகின்றது. இதிலிலெல்லாம் ஈட்டப்படும் வட்டியை சேர்த்து தான் உங்கள் கணக்கில் இலாபமாக வரவு வைக்கப்படுகின்றது. முதிர்வின் போது ஒன்று போல அனைவருக்கும் பகிர்ந்து கொடுக்கப்படுகின்றது. ஆகையால் இதுவே பாதுகாப்பானாது. ஆனால் அதிக வட்டிக்கு ஆசைப்படக்கூடாது. அதிக வட்டி என்பது யாராவது அதிக வட்டிக்கு கடன் வாங்கினால் தான் கிடைக்கும். அவரும் கடன் வாங்கிய பணத்தை திருப்பி செலுத்தினால் தான் கிடைக்கும். ஆயுள் காப்பீட்டு கழகத்தால் கொடுக்கப்படும் கடன்கள் எல்லாமே குறைந்த வட்டிக்கடன் தான். அதிக வட்டி முதலீடு, அதிக வட்டிக்கு கடன் இரண்டுமே நிரந்தர மற்றது. ஆகையால் அதிக வட்டி என்றாலே பணம் சுவாகா தான்.


காலாவதி

பாலிசி 6 மாதம் கட்டாமல் விட்டாலும் பயன்இழந்து விடும். அதை மீண்டும் புதிய பாலிசி போன்று புதுப்பிக்க வேண்டும். மருத்துவ சான்றிதழும் பெற வேண்டும். சில பேர் 6 மாதம் கணக்கு வைத்து கடைசி நாளில் போய் கட்டுவார்கள். காலாவதியாகியிருக்கும். 6 மாதம் என்பது 180 நாட்கள் என்ற கணக்கையே கணிப்பொறி எடுத்து கொள்ளும் என்பதை மறந்துவிடக்கூடாது. (ஆனால் இதையெல்லாம் அவர்கள் உங்களுக்கு விளக்கி கூற நேரமிருக்காது, நீங்கள் சணைடைதான் போட்டு கொண்டிருக்கவேண்டும் இதுதான் நடைபெறுகின்றது.) மாதக்கணக்கை வைத்து கடைசி நிமிடத்தில் பிரிமியம் கட்டச் சென்றால் காலாவதி ஆகியிருக்கும். நிச்சயமற்ற வருமானம் உடையவர்களுக்காக கூட பாலிசிகள் உண்டு. இரண்டு வருடம் ஒழுங்காக பிரிமியம் கட்டிய பின் தொடர்ந்து வரும் முன்று வருடங்கள் வரை தொடர்ந்து பணம் கட்டாமல் இருக்கலாம் அது காலாவதியாகாது. விவசாயிகளுக்காக கொண்டு வந்தது. அவ்வளவு பணமுடை இருந்தால் பிரிமியம் கட்டாமல் இருக்கலாம் அதற்குள் ஒவ்வொரு தவணையாக பொருமையாக கட்டலாம். இதெல்லாம் கூற மாட்டார்கள் ஏனென்றால் இதைக் காரணமாக வைத்து நீங்கள் பணம் செலுத்த மாட்டீர்கள். அந்த பாலிசியையும் உங்களுக்கு போட மாட்டார்கள். (நியு ஜனரக்ஷா)


பாலிசி


இரண்டு வகை தான். ஒன்று டெர்ம் இன்சூரன்ஸ் (இது தான் உணமையான காப்பீடு பாலிசி) இன்னொன்று என்டோமென்ட் (சேமிக்கும் மனப்பான்மை கொண்டோருக்காக, லாப நோக்கமுடையவர்களுக்காக), குழந்தைகளுக்கான பாலிசியும் சேமிப்பு நோக்கத்தில் தான் வழங்கப்படுகின்றது. (குழந்தைகளின் ஆயுளை நம்பி பெற்றோர்கள் வாழ வரும்புவதில்லை அந்த காரணத்தால்-இதிலெல்லாம் அதிக எதிர்பார்ப்பு கூடாது......)



டெர்ம் இன்சூரன்ஸ்- (Term Insurance) பணம் குறிப்பிட்ட காலவரை வரைக்கும் கட்டிக்கொண்டே வரவேண்டும். அந்த காலவரைக்குள் உயிரிழப்பு ஏற்பட்டால் முழு காப்பீட்டுத்தொகை கிடைக்கும். (1 லட்சம் பாலிசி என்றால் 1 லட்சம்) வேறு எதுவும் கிடைக்காது. பாலிசி காலம் வரை உயிரிழப்பு ஏற்படவில்லைஎன்றால் முதிர்வுத் தொகை என்று ஒன்றும் கிடையாது கட்டியபணமும் திருப்பி தரப்படமாட்டாது. பிரிமியம் மிக மிக குறைவு. மற்ற எல்லா வரிச்சலுகைகளும் உண்டு. ஒரு காலவரைக்குள் (Term) எல்லாம் முடிந்துவிடும்.



என்டோமென்ட- (Endowment) குறிப்பிட்ட காலவரை வரைக்கும் பணம் செலுத்தவேண்டும். அவர் அதுவரை வாழ்ந்தால்.கட்டிய முழுப்பணமும் திருப்பித் தரப்படும், காப்பீட்டுத் தொகையும் திருப்பித்தரப்படும்,( 1லட்சம் காப்பீடு என்றால் 2 லட்சம் வரை கிடைக்கும். இது காலவரைக்கு தகுந்தாறு போல் மாறுபடும்). இடையில உயிரிழந்தால் காப்பீடுத் தொகை முழுமையாகத் தரப்படும் அதுவரை கட்டிய பணமும் திருப்பித்தரப்படும். (இதை லாபத் தொகை என்று எடுத்து கொண்டாலும் சரி, கட்டிய பணம் என்று எடுத்து கொண்டாலும் சரி)




மேற்கண்ட இரண்டு பாலிசி வகைகளை சுற்றியே பல பாலிசிகள் உருவாக்கப்படுகின்றன. பெயர்கள் தான் வேறுபட்டிருக்கும், சில வாழ்வுகால பயன்கள் இடையிடேயே பிரித்து தருவார்கள் அவ்வளவுதான். அதில் உங்களுக்கு பிடித்தஅதை தேர்ந்தெடுத்து கொள்ளலாம். இதெல்லாம் காம்பினேசன் பாலிசிகள். என்று கூறப்படுகின்றன.




மருத்துவ பரிசோதனைகள்


பாலிசிகளின்  இடர்காப்பீட்டுத் தன்மைக்கேற்ப பாலிசிதாரர்கள் பாலிசி முன்மொழிவு படிவம் அளிக்கும் பொழுதே மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். இங்கேயும் முறையற்ற வகையிலேயே சோதனைகள் நடைபெறும். இதை சோதனை செய்யும் மருத்துவர் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் குழு மருத்துவர்கள் (Panel Board Doctors) என்றழைக்கப்படுகின்றனர். இதில் அவர்களின் சோதனைக்கான காப்பிட்டு வரையரையும் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தால் வழ்ங்கப்படுகின்றது. அதற்கு அவரிடமிருந்து பல பாலிசிகளை பிடுங்கி கொண்டு சென்றுவிடுவார்கள். பின்னே சும்மாவே, ஒன்னுமே செய்யாம காசு சம்பாதிப்பது என்றால் கசக்குதா?


அவர்களிடம் அனைத்து பாலிசிதாரர்களின் முன்மொழிவு படிவமும் அளிக்கப்படும் ஒவ்வொரு படிவத்துடன் வயதுக்கேற்ப நிர்ணயிக்கப்பட்ட உயர, எடை அட்டவணைப்படி குறிப்பிட்டு அணுப்புவார்கள். இதெல்லாம் (பார்முலாப் படி) தனி சூத்திரப்படி தான்  (இதை இதால பெருக்கு கூட 10 கூட்டிக்கோ) அதன்படி அவர் உயரம், எடை, மார்பு, விரிவளவு, சுருக்கம், நாடித்துடிப்பு 72/ நி என இவையெல்லாம் சோதனை செய்யாமலே போட்டுகொடுப்பார். இதற்கு அங்கு பாலிசிதாரர் வந்தது போல் கையொப்பம் போடுவார்கள். போலிக்கையொப்பம் தான். 


உடனே இரண்டு மூன்று மருத்துவர்கள் அது தவறு அவர் கையெழுத்தை நீங்க போடக்கூடாது என்று காந்தியவாதியாக காட்டிக் கொள்வார்கள். அப்படியென்றால் நீங்கள் சோதனை செய்தீர்களா? என்ற கேள்வி கேட்டால் வாயை மூடிக் கொள்வார். ஒருவரை சோதனை செய்யாமலே நீர் காசு வாங்கும் பொழுது நான் கையெழுத்து போட்டால் என்ன தப்புங்கறே? இப்பொழுது இதெல்லாம் செய்வதற்கு மருத்துவர்கள் தனியாக ஒரு குமாஸ்தாவை வைத்து மிக சிறப்பாக செய்கின்றனர். இது டோர் சர்வீஸ் முறையில் நடைபெறுகின்றது. ஈ ஒட்டுகின்ற மருத்துவர்கள் பெரும்பாலும் இதில் காசு சம்பாதித்துவிட்டு சென்று விடுவார்கள்.


வழக்கு என்று வந்தால் இவர்கள் செய்வது எல்லாம் போலி என்று நிருபித்து விடலாம். இவர்கள் கம்பிதான் எண்ணணும் ஆனால் மக்களே குறுக்கு வழியில் காப்பீடு (பாலிசி) எடுக்கும்பொழுது இது எப்படி சாத்தியம். அதனால் தான் அதன் வினையை நீதிமன்றத்தில் தீர்த்து கொள்கின்றனர். ஆரம்பத்திலிருந்து அனைத்துமே பொய்.


தவணைகள்

தவணைகள் ஒரே தவணையாகவும் மொத்த காலவரைக்கும் சேர்த்து செலுத்தலாம். இதற்கு முகவர் மற்றும் வளர்ச்சி அதிகாரிகளுக்கு அதிக கமிசன் கிடையாது.1 சதவீதம் அல்லது 2 சதவீதம் அவ்வளவுதான் கமிசன். அதற்கு பின் கமிசனே கிடையாது. வளர்ச்சி அதிகாரிக்கு சற்று கூடுதலாக கிடைக்கும். ஆகையால் இதை கூற மாட்டார்கள். அதை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு லாபமா? என்று பாருங்கள். மூன்று தவணை முறைகள் காலாண்டு, அறையாண்டு, வருடத்திற்கு ஒருமுறை. இதில் சிறப்பு தள்ளுபடிகள் அரையாண்டு, மற்றும் முழு ஆண்டுகளில் உள்ளது. மாதந்தோறும் தவணை செலுத்தலாம் இது 5 சதவீதம் கூடுதல் பிரிமியம் செலுத்த வேண்டும், காரணம் மாதந்தோறும் உங்களுக்காக பணியாற்ற வேண்டும், தகவல் அனுப்பவேண்டும் அதற்காகவே இந்த கட்டணம். முதல் கட்டணம் பாலிசியில் சேரும்பொழுது முகவரிடம் 3 தவணைகளை மொத்தமாகத் தரவேண்டும். காரணம் பாலிசி துவங்குவதற்கான நிர்வாக செலவுகள் அதிகமிருப்பதால். அதற்கு பிறகு நான்காவது மாதத்திற்கு பிறகு ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து கட்ட வேண்டும். காலந்தவறி கட்டினால் அபராதம் ஒவ்வொரு மாதமும் வசூலிப்பார்கள். இது ஒரு சிக்கலான தவணை முறை. அடிக்கடி மறந்து விடுவார்கள், பண முடைகள் வேறு வந்து சேரும்.



ஊதியத்திலேயே பிடித்தம் செய்து கட்டுவது. அதற்கு ஒரு நிறுவனத்தில் முதன் முறையாக இருந்தால் 20 பேர் சேர்ந்து (தனித்தனியான பாலிசி) ஆயுள் காப்பீட்டில் நுழைந்து அந்த நிறுவனத்திற்கென்று அடையாள குறியீட்டு எண்ணை பெறவேண்டும். அதற்கு பின் ஒவ்வொருத்தராக சேரலாம். இரண்டு மாத தவணைகள் மொத்தமாக செலுத்தி பாலிசி எடுக்க வேண்டும். நிறுவனம் மாறி விட்டால் உடனே தெரியப்படுத்த வேண்டும், நீங்கள் நீண்ட நாள் விடுப்பில் இருந்தாலும் ஊதியம் வராது, ஆகையால் இதற்கும் பணம் போய் சேராது. உங்கள் அலுவலகத்தில் உள்ளவர் மாதாமாதம் மொத்த ஊழியர்களின் தொகையையும் ஆயுள் காப்பீட்டு கிளைக்கு சென்று கட்டுவார். அதையெல்லாம் அவ்வப்பொழுது சரிபார்த்து கொள்ளவேண்டும். இல்லேயேல் பாலிசி பயனிழந்து விடும். அந்த காலகட்டங்களில் இடர் நேர்ந்தால் இழப்பீடு கிடைக்காது. இந்த மாதிரி முதலீட்டில் பல பேர் நீதிமன்றத்தை அணுகியுள்ளனர். அதனால் எந்த பயனும் விளையவில்லை. இதற்கு நீங்கள் உங்கள் முகவரை நேர்மையுடன் அணுகியிருந்தால் அவர் உங்களுக்கு கேட்காமலே உதவி புரிந்திருப்பார். காரணம் நீங்கள் பணம் கட்டினால் தான் அவருக்கு வருமானம் (கமிசன்).



காலவரை (Term)


பாலிசி காலவரை இது குறைந்த பட்சம் 5 வருடம் அதிக பட்சம் 45 வருடங்கள் உங்களுடைய உள்நுழையும் வயதிற்கு தகுந்தார் போல் மாறுபடும். ஒருவர் 0 வயசிலிருந்து அதிகபட்சமாக 65 வயது வரை பாலிசிகளில் நுழையலாம். அதற்கு பிறகு முதலீடுகளில் வேண்டுமானால், வர்த்தகம்....ஒரே தவணை.... நுழையலாம்.


புதுப்பித்தல்


ஒரு பாலிசிக்கு 6 மாதம் வரை (180 நாட்கள்) பிரிமியத் தொகை செலுத்தமலிருந்தால் பயனிழந்து விடும். அத்ற்கு பிறகு எத்தனை தவணை நிலுவையில் உள்ளதோ அத்தனையும் சேர்த்து, மருத்துவ சான்று பெற்று (பாலிசிக்கு ஏற்ப) இதிலும் சில விசயங்கள் பூர்த்தி செய்ய வேண்டும். இதில் முகவர் உங்கள் தகவல்களை ஏற்கனவே படிவத்தில் குறிப்பிட்ட தகவல்களை வைத்திருப்பார். அந்த தகவல்களோடு ஒத்து போகின்ற மாதிரி எழுதி கொடுத்து புதுப்பிக்க வேண்டும். இல்லையேல் அங்குள்ள ஊழியர்கள் சலிப்போடு உங்கள் கோப்புகளை எடுத்து பார்த்து, அது மாதிரி உங்களை அழித்தது தெரியாமல் மாற்ற சொல்லுவார்கள். உதாரணத்திற்கு உயரம், எடையளவு, கையொப்பம் இதெல்லாம் முகவரிடம் தனியாக கோப்புகளில் அவர் செலவில் வைத்திருப்பார். நடப்பில் இருக்கும் முகவராக இருந்தால். பணியை விட்டிருந்தால் நீங்கள்தான் முயற்சி செய்ய வேண்டும். நடப்பில் இல்லாவிட்டாலும் தகவலுக்காக நாடாலாம். பணம் கட்டவே முடியவில்லை என்றால் 5 வருட காலத்திற்குள் எப்பவாவது புதுப்பிக்கலாம் மொத்த தொகையும் கட்ட வேண்டியிருக்கும். அதற்கு புது பாலிசியே எடுப்பார்கள். பொதுவாக இம்மாதிரி பாலிசிதாரர்களுக்கு பாலிசி வழங்க ஆயுள் காப்பிட்டின் நிறுவன சட்டம் இடம் தருவதில்லை. ஆகையால் ஏற்கனவே பாலிசி காலவாதியாகிருக்கின்றதா? என்ற கேள்விக்கு இல்லை என்று பொய்யாக பதிலெழுத வேண்டியிருக்கும். ஆம் என்றால் சிக்கல் தான். புது பாலிசி தர மறுக்க நிறுவனத்துக்கு உரிமையுண்டு.


பாலிசி பத்திரம்



பாலிசி பத்திரம் தொலைந்து போனால் சிக்கல் அகையால் அதை பாதுகாப்பாக வைத்திருக்கவேண்டும். தொலைந்து போன பாலிசியை பிரமான பத்திரம் மூலம் நிருபிக்க வேண்டும். அதற்காக ஜாமின் கையெழுத்து ஊதியச் சான்றுடன் ஒருவர் போட வேண்டும்.(நிபந்தனைக்கு உட்பட்டது) இதற்கும் முகவர் துணையிருந்தால் மிகவும் எளிதாக முடித்துவிடலாம். அவர் கஷ்டப்படுவார் நீங்கள் வேறு வேலை பார்க்கலாம்.



யூலிப்

இவை பாலிசிகள் அல்ல. மறைமுக பங்கு வர்த்தகம். காப்பீட்டு நிறுவனத்தின் மேல் நம்பிக்கை கொண்டுள்ளதால் அதன்மூலம் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுகின்றனர். அதை காப்பீட்டு நிறுவனங்களே பார்த்து கொள்கின்றன. இந்த வருடத்தில் இவ்வளவு வரும் வராது என்று அரிதியிட்டு சொல்லமுடியாது. இது கையிலிருந்தால் வீணாக செலவாகிவிடும் என்று நினைக்கின்ற பணத்தினை இதில் முதலீடு செய்யலாம். இதை பலர் தவறாக புரிந்து கொண்டு பாலிசியாக எடுக்கின்றனர். இதுவும் மிக மிகத் தவறு. இது இழப்பீடு எதுவும் தராது. கூடுதலாக பிரிமியம் செலுத்து இழப்பீட்டுக்கு ஒரு பாலிசியை இணைத்து கொள்ளலாம். அதே போன்று நீங்கள் செலுத்தும் பண்ம் அனைத்தையும் முதீடாக பார்க்க முடியாது. நிறுவனத்தின் செலவுத்தொகை (Allocation Cost) போக மீதமுள்ளதையே முதலீட்டாக பயன்படுத்துகின்றனர், அந்த பணத்தையே பங்கு வர்த்தகத்திற்கு ஒதுக்குகின்றனர். அதையெல்லாம் தெரிந்து வைத்து கொள்ள வேண்டும். நான் 10000 கட்டினேன், கட்டினேன்.... ஒன்னுமே வரலை.... இவ்வளவு தானா? வரும்?...... என்று கேட்டு கொண்டிருக்க கூடாது. (10000 கட்டினால் 7250 ரூபாய்க்குத்தான் முதலீடு.....) இதை முதன் முதலில் தனியார் நிறுவனங்களே அறிமுகப்படுத்தின.


விபத்து காப்பீடு (Double Accident Benefit)



விருப்பமிருந்தால் பாலிசி எடுக்கும் பொழுது இதற்கும் சேர்த்து எடுக்கலாம் நல்லது. விபத்துக்காப்பீடு நீங்கள் கூடுதலாக செலுத்தும் 1 ரூபாய் பணம் இழப்பு ஏற்படும்பொழுது கூடுதலாக 1 லட்சம் கிடைக்கும். (காப்பீட்டுத் தொகைக்கு சம்மாக). இதை ஆயுள் காப்பீட்டு நிறுவனம் பொது நிறுவனத்தில் முதலீடு செய்து உங்கள் கணக்கில் வரவு வைத்து கொள்கின்றது.


இயலாமை Disability Benefit-



விபத்தினால் ஒரு கை, ஒரூ கால் ஊனமுற்று அல்லது நோயினால் பாதிக்கப்பட்டு, அவரால் எந்த பணியுமே செய்யமுடியாத பொழுது காப்பீட்டுத் தொகை அந்த செயலிழப்பு தன்மைக்கு ஏற்ப கொடுக்கப்படும்.



எந்த ஒரு பாலிசியும் நோய் வருவதற்கு முன்பே எடுக்கவேண்டும். நோய்வரப்போகின்றது நாம் உயிர் வாழ சாத்தியக்கூறுகள் இல்லை என்ற நிலையில் காப்பீடு எடுக்க முடியாது. எடுத்தால் பணம் கிடைக்காது கண்டுபிடித்து விடுவார்கள். மருத்துவ சான்று எல்லவற்றையும் காட்டி கொடுத்து விடும். இல்லாவிட்டால் மருத்துவர் கம்பி எண்ண வேண்டும். பலமருத்துவர்கள் இன்று வரை கம்பிஎண்ணி கொண்டிருக்கின்றனர். வருமுன் காப்பது தான் ஆயுள் காப்பீடு. அயுள் காப்பீடு ஒரு தலைக்கவசம்.



அதே போன்று இடையில் நிறுத்தினால் கட்டிய பணத்திலுருந்து இரண்டு வருட பிரிமியத் தொகையை கழித்து தான் தருவார்கள். காரணம் ஏற்கன்வே கூறியது. 5 வருடத்திற்கு மேல் கட்டிய பாலிசிக்குதான் ஒரளவுக்கு கட்டிய பணம் கிடைக்கும். ஒரு வருடம் இரண்டு வருடம் கட்டி விட்டுவிட்டால் ஒரு பணமும் வராது. ஆயுள் காப்பீடு கட்டுவதால் அரசுக்கு எந்த லாபமும் இல்லை. "நான் கட்டிய பணத்தை திருப்பி கொடு என்றால் பிடித்து கொண்டு கொடுக்கின்றாரே" என்று சண்டைப்போடக்கூடாது. இது நாள் வரை உமது பணத்தை பாதுகாத்து வைப்பதற்காக பணி புரிந்தார்களே அவர்களுக்கு யார்? சம்பளம் கொடுப்பது. எல்லாம இதிலிருந்து தான். எல்லாமே ஒரு கொடுக்கல் வாங்கல் தான் (மணி எக்ஸ்சேஞ்ச்)...... இங்கேயிருந்து வாங்கி அங்கே கொடுப்பது. அங்கேயிருந்து வாங்கி இங்கே கொடுப்பது. இது தான் ஆயுள் காப்பீடு......... பாதிக்கப்படாதவர்கள் பணங்களை சேர்த்து பாதிக்கப்பட்டவருக்கு கொடுப்பது. அனைவரும் ஒரே நேரத்தில் பாதிக்கப்படுவதில்லை. அதனால் தான் எவ்வளவு பேர்கள் முதலீடு செய்கின்றார்களோ அவ்வளவும் பாலிசிதாரர்களுக்குதான் இலாபம். யாரும் போடதீங்கோ? போடாதீங்கோ? குரல் கொடுத்தீர்கள் என்றால் அதில் முதலீடு செய்தவர்கள் அனைவருக்கும் நட்டம். மறைமுகமாக பலருக்கு செய்யும் துரோகம்.


அரசு ஆயுள் காப்பீட்டு கழகத்தின் (net owned fund) சேர்க்கப்பட்ட நிதி (பெயர் சரியாக தெரியவில்லை) என்று சொல்வார்களே அது 2007 வரை 1050 லட்சம் கோடி ரூபாய்கள்......இதில் எத்தனை சூழியம் போடவேண்டுமோ பார்த்து போட்டு கொள்ளுங்ள். பேருந்தின் பின்புறம் விளம்பரங்கள் ஒட்டப்பட்டிருக்கும் தற்செயலாக வண்டி நிற்கும் பொழுது காணலாம். இணையத்திலும் கணலாம்.

மேற் குறிப்பிட்டவைகள் எதுவும் இணையத்தில் இருக்காது..........





சரி இவ்வளவு தகவல்களையும் கூறினால் ஒருவர் காப்பீடு திட்டத்தில் சேருவார்களா? அது சந்தேகமே? ஆனால் தெரிந்து கொண்டுதான் சேரவேண்டும். சரி இனிமேலாவது தெரிந்து கொண்டு சேருங்கள். இதெல்லாம் தெரியாமல் அவர் காசு வாங்கி போட்டு கொண்டு சேர்ந்துவிட்டு ஆனந்த விகடனில் எழுதினால் என்ன? எதில் எழுதினால் என்ன? 

அதுமட்டுமில்லாமல் இப்பொழுது காப்பீட்டில் குறைந்த பட்ச காப்பிடை 1 லட்சமாக மாற்றிவட்டார்கள். அதற்கு முன் 1000, 5000, 10000..... என்று குறைந்தபட்ச காப்பீடாக இருந்தது இன்று 1 லட்சம் என்று ஆகிவிட்டது. இதற்கான பிரிமியத்தொகையும் பெரும்பான்மையரின் தனிநபர் வருமானத்தோடு ஒப்பீட்டு பார்த்தோமானல் மிக அதிகம் தான். ஆகையாலே அவர்களால் தொடர்ந்து பிரிமியங்களை செலுத்தமுடியவில்லை. பெரும்பான்மையர் இன்னும் குறைந்த பட்ச ஊதியமாக 2500 இன்னு வரை உள்ளது. 20 வருடங்களுக்கு முன்பும் 2500 இன்றும் 2500 என்ன நியாயம். இதிலிருந்து யாரும் ஏற்ற மறுக்கின்றனர். ஒருவரின் குறைந்த பட்ச வருமானம் 10000 என்று இருந்தாலொழிய இந்த காப்பீட்டு திட்டங்களில் ஏழை, மற்றும் நடுத்தர வர்க்கத்தால் சேர முடியாது. இம்மாதிரி மக்களே இந்நாட்டில் அதிகம். இவர்களை நம்பித்தான் வணிகம்.


பெரும்பாலானோர் ஆயுள் காப்பீட்டை முதலீட்டாக பார்க்கின்றனர். அதனால் அவர்களின் எதிர்பார்ப்பும் ஆதிகமாயிருக்கின்றது. ஆயுள் காப்பீடு என்பது காப்பீடுதாரர் வாழ்க்கையில் ஏறபடும் இடர்பாடுகளினால்,  கப்பீடுதாரர் குடும்பம் சந்திக்கும் பொருளாதார சரிவை சமாளிப்பதற்கு தரப்படும் பணம். இது நடுத்தர ஏழை மக்களுக்கு இது நிரம்ப பயனுள்ளது. செல்வந்தர்கள் இதை முதலீட்டாக பார்ப்பார்கள். ஆனால் நடுத்தர வர்க்கத்தினர் இதை ஒரு பாதுகாப்பு கவசமாகவே பார்க்க வேண்டும். அப்படி பார்த்தால் நிம்மதியாக இருக்கலாம். இனிமேலாவது கையூட்டு பெறாமல் பாலிசி எடுங்கள். எல்லாவற்றையும் கேட்டு தெரிந்து கொண்டு பாலிசியில் சேருங்கள். ஒரு நல்ல முகவாண்மைக்கு வழி விடுங்கள். நல்ல முகவரை வாழவிடுங்கள். இப்படியிருந்தால் யாரும் நீதிமன்றத்தை அணுக வாய்ப்பிருக்காது.






No comments: