Pages

Thursday, 31 December, 2009

நமது மூதாதையர் ஒரு லெமூர்!

உலகில் தோன்றிய அனைத்து உயிரினங்களும் தனித்தனியாக தோன்றியவைகள் அல்ல. அனைத்தும் ஒரு உயிரினத்தின் தொடர்ச்சியான பரிணாம வளர்ச்சியே என்று வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியவர், உயிர் பரிணாமத்தின் தந்தை (Father of evolution) எனப் போற்றப்படும் சார்லஸ் டார்வின் என்பது அனைவருக்கும் தெரியும். ஆயினும் இதை அவர் 150 ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட பொழுது அத்தனை எளிதில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.


அன்றைய காலத்தில் மிகுந்த சர்ச்சைகளை எழுப்பியது. இது டார்வினுக்கு எதிராக விக்டோரியா மகாராணியார் ஆட்சிக் காலத்திலேயே விமர்சிக்கப்பட்டது. அதற்கு காரணம் அதை நிருபிக்க அவரிடம் எந்த ஆதாரமும் கைவசம் அப்போது இல்லை. மனதனின் மூதாதையர் (Ancestor) ஒரு குரங்கு என்ற மிக சர்ச்சைக்குரிய விஷயத்தை நிருபிக்குமாறு அவரிடமே சண்டையிட்டனர்.

அதற்கு முற்றுப்புள்ளி வைக்க 1974 ஆம் ஆண்டுதான் ஒரு கல் படிமம் (fossil slab) கிடைத்தது. அது லூசி என்ற பெண் மனித குரங்கின் படிமம் தான் அது. அதை ஆராய்ந்தவர் டாக்டர் டொனால்டு ஜோகன்ஸ். அந்த மனித குரங்கு கல் (Primate) படிமத்தின் வயது 35 லட்சம் ஆண்டுகள். அந்த குரங்கு வாழந்த காலம் அத்தனை லட்ச காலத்திற்கு முந்தையது.

அதன் பின் தற்பொழுது 2007 ஆம் ஆண்டு ஒரு கல் படிமம் கண்டுபிடிக்கப்பட்டு நிருபிக்கப்பட்டுள்ளது. இது பாதிக்குரங்கு (Prosimian- before ape)  எனப்படும் இனமாகும். இதை நிருபித்தவர் ஜோன் ஹோரம் (Joen Horum) என்னும் நார்வே புதை படிவ ஆராய்ச்சியாளர் (Palaeantologist). இது உண்மையில் 2007 இல் கண்டுபிடிக்கவில்லை. அதற்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டவை. அதாவது 1983 இல் ஜெர்மனியின் மெசல் பிட் என்னும் படிம புதை குழியில் கண்டெடுக்கப்பட்டவை. ஆனால் எல்லாவற்றிலும் இருக்கும் வணிக நோக்கு இதிலும் இருந்ததால் இது கிடைக்க இவ்வளவு தாமதமாயிற்று. இது சற்று சுவராசியமானவை..........


இந்த மெசல் பிட்டில் பொழுதுபோக்கிற்காகவும், வணிகத்திற்காகவும் ஈடுபடும் வணிக நிறுவனத்தினர் பலர் அகழ்ந்து கொண்டிருக்கும் பொழுது இந்த படிமமும் கிடைத்தது. இது அந்த வணிகர் விலை பேச ஆரம்பித்தார் பலரிடம். ஆனால் இதன் மதிப்பு கூடுவதைக்கண்டும், இதற்கு பலர் போட்டி போடுவதைக்கண்டும், இதற்கு மாற்றாக போலியாக படிமங்களை உருவாக்கி விற்று காசு பார்க்க ஆரம்பித்தனர்.

இது மாதிரி போலியான படிமம் ஒன்று ஜெர்மன் மியூசியத்திற்கும் கிடைத்தது. அதை கொண்டு சென்று ஆராய்ந்த பொழுது இது போலியானது என்று அறிந்து இதன் அசலைத் தேடி அலைந்தனர். பலன் இல்லை. இதை பல நாட்கள் ஆராய்ந்து பின் எப்படியோ மோப்பம் பிடித்த ஜோன் அதன் அசல் இருக்கும் இடம் மற்றும் வைத்திருக்கும் நபரை கண்டு பேரம் பேசினார். கடைசியாக 10 லட்சம் டாலர் என்ற ஒப்பந்தம் இறுதியானது.

இது சர்வதேச ஆய்வாளர்களின் ஒப்பந்தங்களுடன் கூடியது. இதன் மாதிரியை முதலில் ஆரய்ந்தனர். பிறகு அசல் எனப்படுபவையும் எக்ஸ் ரே கதிர் மூலம் ஆராய்ந்தார். அதில் அது உண்மையானதுதான் என்று அறிந்ததுடன். (போலியில் எலும்பு மஜ்ஜைகள் தெரியாது) அதை வாங்கி தன்னுடைய நார்வே மியூசியத்திற்கு கொண்டு சென்றார் ஜோன்.

அதை அவரின் ஆய்வுக்குழுவினர் பலவகையில் ஆராய்ந்தனர். இந்த படிமத்தின் பெயர் எடா (Ida). இது ஜோனின் 6 வயது மகளின் பெயர் தான். இவர் பெண்ணின் பெயரை ஒரு குரங்கிற்கு வைத்தார். மூதாதையருக்குத் தானே வைத்தார். இது ஒரு லெமூர் (Lemur) இனக் குரங்கு (தேவாங்கு போன்று இருக்கும்). இதன் வயது சுமார் 4 கோடியே 70 லட்சம் ஆண்டுகள். வால் 24 செமீ நீளம் கொண்டது. (இதன் வால் ஒன்னரை மீட்டர் நீளம் வளரக்கூடியது). கால்கள் கட்டை விரலுடன் மனிதனின் விரல்களைப் போன்று அமைந்துள்ளது. அதே போன்று நடக்கக்கூடியது ஆகும். அதாவது பாதிக்குரங்கு. இதை மேலும் முப்பரிமான சோதனைக்கு உட்படுத்த ஜெர்மனிக்கு எடுத்துச் சென்ற போது (அங்கு தான் இந்தளவுக்கு வசதிகள் உள்ளது) பல அரியத் தகவல்கள் கிடைக்கப்பெற்றன. மனிதனை போன்ற பற்கள், தாடைகள் இவற்றிற்கும் ஒத்திருந்ததினை கண்டனர்.

இது ஒரு பெண் குரங்கு மேலும் இதன் வயது 8 மாதம், (மனிதனின் 6 வயதிற்கு சமம்). இது இறந்தது இரவு நேரத்தில். மெசல் பிட் ஏரியில் நீர் அருந்த செல்கையில் இது கார்பன் டை ஆக்சைடு வாயு தாக்கி அதனால் மயக்கமுற்று, அந்த தண்ணீருக்கு அடியில் சென்று மாட்டிக்கொண்டு மடிந்து கல்படிமம் ஆனது. அந்தப் பகுதிகளில் எரிமலைகள் இருந்திருந்ததினால் இந்த நிகழ்வு  நடந்திருக்கின்றது. எரிமலை எனபது பூமியின் மையப்பகுதி நெருப்பு குழம்பு என்பது தெரியும் அது மேல் பகுதியில் உள்ள நீரை, நெருப்பு அடைந்தவுடன் வினைபுரிந்து ஆவியாதல் நடைபெறுகிறது. அந்த ஆவி வெளியேற முடியாமல் திணறிக்கொண்டிருக்கையில், ஒருநாள் வெடிப்பது தான் எரிமலை.

அப்போது பூமியில் இருக்கும் நீரும் வெளிவரும். அப்படி வெளியேறிய நீர், நீர் நிலைகளாக எரிமலைகளின் பக்கத்தில் , பல வேதிபொருட்கள் கலந்த அமில ஏரியாக அமைந்திருப்பது வழக்கம். நெருப்பு குழம்பு நீர் நிலைகளை அடைந்தாலும் அந்த நீர் நிலை அமில ஏரியாக மாறும். இந்த நீர் நிலைகளை கந்தக ஏரி என்று கூட அழைப்பர். இப்போதும் அது போன்ற ஏரிகள், எரிமலைகள் உள்ள நாடுகளில் உள்ளன. அது தெரியாமல் எடா குரங்கு நீர் அருந்த வந்ததால், வாயுத் தாக்கத்தால், இந்த இறப்பு நேர்ந்து  கல் படிமமாகிவிட்டது, என்ற ஆய்வு முடிவை  தெரிவித்துள்ளனர், இந்த ஆய்வாளர்கள்.

எப்படியோ சார்லஸ் டார்வின் மறைந்து பல ஆண்டுகள் ஆயினும் அவர் கூறியவைகளை நிருபிக்க இப்போது ஆதாரங்கள் உதவியது. இது போன்று பல படிமங்களை பல செல்வந்தர்கள் தங்கள் வீட்டு படுக்கையறையிலும், வரவேற்பறையிலும் அழகுக்காகவும், பெருமைக்காகவும் வைத்துள்ளனர். இவற்றையெல்லாம் தந்தால் பல ஆய்வுகளை மேற்கொள்ள ஏதுவாக இருக்கும் என்று டாக்டர் ஜோன் தெரிவிக்கின்றார்.

காந்தியத்துக்கு  சம்பந்தமில்லா விட்டாலும் காந்தியின் கைத்தடி, கண்ணாடி போன்றவைகளை அதிக ஏலத்தில் வாங்கி வீட்டிற்குள் பெருமைக்காக வைத்திருக்கும் செல்வந்தர்கள், இந்த கலபடிமங்களையும் வாங்கி வைத்திருப்பதனால் என்ன பயன்?. இம்மாதிரி ஆராய்ச்சியாளர்களுக்கு கொடுத்துதவினால் மனித குலத்திற்கு வேண்டிய ஆய்வுகள், இந்த பூமியில் ஏற்பட்ட அதிசயங்களை ஆராய உதவும். உணர்வார்களா?

நன்றி டிஸ்கவரி சேனல்.

No comments: