Pages

Saturday, 5 December 2009

எலி ஒரு கிலி













மனிதனுக்கு வேண்டிய உணவு சராசரி அறுபது கலோரி. ஒரு எலிக்கு வேண்டிய உணவு சராசரி நானூற்றி ஐம்பது கலோரி, கிட்டத்தட்ட ஏழரை மடங்கு அதிகம். 1920-ல் எலித்தொகை வெறும் ஒன்பது கோடிதான். ஆனால் 1997-ல் எலித்தொகை 1500 கோடி. அதுக்குக் காரணம் எலியோட கர்ப்ப காலம் 28 நாள்தான். ஒரே பிரசவத்தில் ஏழெட்டு குட்டி போடும். ஒரு எலிக்குஞ்சு வளர்ந்து கர்ப்பமாகி குட்டி போட 11 வாரம் போதும். எலிகளை ஒழிக்கிறதுக்காக அரசாங்கம் என்னதான் நடவடிக்கை எடுத்தாலும் அதனோட பெருக்கம் தடைப்படாம இருக்கிறதுக்கு இன்னொரு முக்கியமான காரணம், ஒரு எலி நாலஞ்சு நாள் வனரக்கும்கூட உணவு கினடக்காம போனாலும் உயிரோடு இருக்கும். அதே மாதிரி தண்ணீர் குடிக்காமலும் ஏழு முதல் பத்து நாள் வரைக்கும் உயிர் வாழும். எலிகள் இப்படி உயிர் தாக்குப்பிடிக்கிறதாலத்தான் அதை அழிக்க முடிவதில்லை. எலிகள் குட்டிப்போட்டு பால் கொடுக்கும் (ம்ம்மல்ஸ்) நம்மை போன்ற பாலூட்டிகள் இனத்தை சேர்ந்தவை. எலியும் நம்ம இனம் என்கிறதாலே மனிதனைப் போலவே அதற்கும் யோசிக்கின்ற, பார்க்கின்ற திறன் இருக்கு. ஒரு வயல் வெளியில் எலிகளை கொல்வதற்காக உணவை விஷத்தோடு கலந்துவைத்தோமானால் சில எலிகள் சாப்பிட்டு உயிர்விடும். இனதப்பார்க்கின்ற மற்ற எலிகள் எச்சரிக்கையடைந்து வயலில் இலவசமாய் கினடக்கின்ற உணவு பக்கமாகப் போய் எட்டிக்கூட பார்க்காது. அது மட்டுமில்லை, இப்போதைய பரிணாம வளர்ச்சியில் சிலவகை எலிகள் விஷம் கலந்த உணனவ முகர்ந்து பார்த்தே ஒதுக்கிடும்.


மனிதனுக்கு உபயோகப்படாத ஒரே உயிரினம் இந்த எலி தான். எலியால
 மனிதனுக்கு கினடக்கிற தொல்லைகளை ஒரு பட்டியலே போடலாம். (இதையும் நம் விவசாயிகள் பஞ்சகாலத்தில் உணவாக உட்கொண்டனர்)


  • முதலாவது தொல்லை -உணவுப் பொருள் பாழாவது.


  • இரண்டாவது தொல்லை -வீட்டில் இருக்கிற வயர்கள், துணிகளை கடிச்சுகுதறி வைத்துவிடும்.


(இப்படி குதறி னவப்பதற்குக் காரணம் -எலிகளின் முன்பக்க இரண்டு பற்கள் வளர்ந்து கொண்டே போகும் தன்மை கொண்டவை. பற்கள் அதிகப்படியாய் வளர்ந்து நீண்டு விட்டால் அதை ஏதாவது ஒரு பொருளில் உராய்த்து (ராவி) பல்லின் நீளத்தை குறைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம்.)


  • மூன்றாவது தொல்லை-எலிகளின் உடலிலிருந்து நாள். ஒன்றுக்கு ஆயிரக்கணக்கானப்பொடி ரோமங்கள் உதிர்ந்து காற்றில் கலக்கின்றன. சிறிய (அடைப்பான) வீடுகளில் இருப்பவர்களுக்கு இதனால் (அலர்ஜி) ஒவ்வாமை நோய்கள், மற்றும் மனித நுரையீரல்களுக்குள் இந்தப் பொடியான ரோமங்கள் சென்று தங்குவதால் பல நோய்களுக்கு அஸ்திவராமாகிவிடும். 
  • நான்காவது தொல்லை இதன் கழிவுகளான புழுக்கைகள். ஒவ்வொரு புழுக்கையிலும் மில்லியன் கணக்கில் கிருமிகள். இந்த புழுக்கைகள் உணவு பொருள்களோடு கலக்கும்பொழுது அது நோய்களுக்கான சேமிப்பு கிடங்காக மாறிவிடும்.


  • ஐந்தவது தொல்லை; இருப்பதிலேயே இதுதான் முக்கியமான தொல்லை. உயிர்களை ஆயிரகணக்கில் பழிவாங்கக்கூடிய பிளேக் நோய் பரவுவதற்குக் காரணம் இந்த எலிகள்தான். பிளேக் நோய்க் கிருமிகள் எலிகளின் உடம்புகளை கேடயமாய் வைத்துக் கொண்டுதான் மனித உயிர்களை வீழ்த்தும்.


எலிகள் பற்றிய கூடுதல் தகவல்கள்


ஐதாராபாத்தில் இருக்கிற புகழ் பெற்ற சார்மினார் எதுக்காகக் கட்டப்பட்டது தெரியுமா.....?


ஒருகாலத்தில் ஐதாராபாத்தில் பிளேக் நோய் பரவி ஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கி ஊரே பீதியில் இருந்தது. ஐதாராபாத் மக்கள் அந்த பிளேக் நோயோடு போராடி வெற்றி பெற்றதன் அடையாளமாகத்தான் சார்மினார் கட்டப்பட்டது.


எலிகளை ஒழிக்க வழியே இல்லையா?
வழியே கிடையாது. பாம்புகளுக்கு எலி பிடித்தமான உணவு.  வயல்களில் எலிகளின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைவதற்கு காரணம் பாம்புகள் அதை பிடித்து தின்பதால். ஆனால் மனிதன் பாம்புகளை பார்த்தாலே அடுத்த நிமிடம் அடித்து கொன்றுவிடுகின்றான். இதனால் எலிகளின் எண்ணிக்கை  எப்படி குறையும்.


மொத்தத்தில் எலி என்றாலே கிலிதான்.


No comments: