Pages

Saturday, 29 January, 2011

மகரஜோதி மனிதர்களால் ஏற்றப்படுகிறதா? நம்ப மறுக்கும் தமிழக.....மூடநம்பிக்கையாளர்கள்!

சமீபத்தில் சபரிமலை மகரஜோதி பற்றிய சர்ச்சைகள் குறித்து ஒரு தனியார் தொலைக்காட்சியில் 26.1.11 அன்று வெளியிடப்பட்ட காட்சிகள் குறித்து...


சமீபத்தில் சபரிமலை அருகே புல்மேடுப் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் நூற்றுக்கணக்காணவர்களைப் பலிவாங்கியது...கட்டுக்கடங்காத கூட்டம் இருக்கிற இடத்தில் பாதுகாப்பு நடைமுறைகளை எப்படி மேற்கொள்வதுஎனபது குறித்து ஒரு கேள்வி முன்வைக்கப்பட்டது. இந்த கேள்வியைப் பின்தொடர்ந்து செல்லுகிறபொழுது எதிர்பாராத விதமாக இனொனொரு சர்ச்சையும் ஏற்பட்டது.
சபரிமலை ஐயப்பன் கோவில்....தென்னிந்தியாவின் புகழ்பெற்ற ஆன்மீகத் திருத்தலம்...இங்கு ஆண்டுதோறும் காட்சி தரும் மகரஜோதி தரிசனம்....யாத்திரிகர்களை பொருத்தவரை ஓர் அதிசயம்...அதுவும் தமிழக, கர்நாடக, ஆந்திர நம்பிக்கையாளர்களுக்கு மட்டுமே இது ஒர் அதிசயம்...
இதோ நேரில் பார்த்தது மாதிரி பொய் பேசி மக்களை உசுப்பேத்தும் மூடநம்பிக்கையாளரின் விளக்கம்....(அவருக்கு மக்கள் உயிரை பற்றி என்ன வந்தது... அவா உயிரோடு இருந்தால் போதாதா?)
மகரஜோதி எனபது...நிச்சயமாக..சத்தியமாக...(நிச்சயம்..சத்தியம் இரண்டும் வேறு வேறா...?) மனிதர்களால் ஏற்றப்படுவது அல்ல..தேவாதி தேவர்கள் இந்திர லோகத்தில் இருந்து அந்த ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இறங்கி, அவா அங்கே இறங்கி, அந்த டயத்துல தான் அவா அங்கே இறங்கறா...இறங்கி சுவாமியையும் சூரியனையும் ஆராதனை பண்ணி வழி காமிச்சி விட்டுட்டு அவா போய்டுவா.... இது நம்பிக்கைக்கு பாத்திரமான அனுபவ விஷயம் (மூடநம்பிக்கை என்று வந்து விட்ட பிறகு அனுபவம் எங்கே வந்தது...?) அங்கே நடப்பது தேவ ரகசியம். (மூடநம்பிக்கையாளருக்கு மட்டும்...கேரள மக்களுக்கு அல்ல...!)
மேலே கூறப்பட்ட மூடநம்பிக்கையின் பேரில் தான் இந்த ஆண்டும் (2011) ஜனவரி 14 ந் தேதி சபரிமலையில் லடசக்கணக்கான நம்பிக்கையாளர்கள் கூடியிருந்தனர். மகரஜோதி தரிசனம் முடிந்தது கூடியிருந்த நம்பிக்கையாளர்கள் புல்மேடு பகுதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 100 க்கும் மேற்பட்ட மக்களை பலி வாங்கின.
புல்மேடு பகுதியில் இறந்து போனவர்களின் குடும்பங்களுக்கு லட்சகணக்கில் உதவித்தொகை வழங்கப்பட்டது.இப்படியான கூட்ட நேரங்களில் எப்படிப்பட்ட பாதுகாப்பு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்ற விவாதங்களும் முன்வைக்கப்பட்டது. அதைவிட அந்த காட்டுப்பகுதியையே மூடிவிடலாமா? என்ற யோசனையும் சொல்லப்பட்டது.
இந்த விபத்துக்கான காரணம் குறித்த வழக்கு விசாரணை கேரள உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதில் நீதிமன்றம் எழுப்பிய மிக முக்கியமானதொரு கேள்வி தான் இத்தனை பெரிய சர்ச்சையினை ஏற்படுத்தியது.
நீதிமன்றம் எழுப்பிய இந்த கேள்வியும் இதற்கு கோவில் நிர்வாகம் தந்த பதிலும் தான் தற்போது ஐயப்ப நம்பிக்கையாளர்களிடேயே பெரும் பதட்டத்தையும், பலவிதமான அதிர்ச்சி அலைகளையும் ஏற்படுத்தியுள்ளன. இத்தனை பரபரப்பிற்கும் காரணமான மகரஜோதி தரிசனம் உண்மையிலேயே ஓர் அதிசயம் தான் எனபது யாத்திரிகர்கள் பலரது நம்பிக்கை.
ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 14 அன்று மட்டும் தான் மகரஜோதி தரிசனம் கிடைக்கும். இதனால் குறிப்பிட்ட அந்த நாளில் சபரிமலையில் லட்சக்கணக்கில் யாத்திரிகர்கள் கூடுவது வழக்கம். அந்த குறிப்பிட்ட நாளில் கடவுள் ஐயப்பனுக்கு அணிவிக்க திருவாபரணப் பெட்டி கோயிலுக்கு வந்து சேரும். மாலையில் கடவுளுக்கு தங்க ஆபரணம் அணிவித்து தீபாரதனை காட்டும் சமயம், சபரிமலையில் இருந்து கிழக்கு திசையில் அமைந்துள்ள காந்த மலை மீது ஒரு பிரகாசமான நட்சத்திரம் தெரியும். அதை தொடர்ந்து ஒரு தீபஜோதி ஒரு சிலநிமிடங்களுக்கு தோன்றி மறையும். இதுதான் மகரஜோதி தரிசனம். மூன்று முறை தோன்றி மறையும் மகர ஜோதியை கண்டு சபரிமலை முழுவதும் பக்தர்களால் முழங்கப்படும் சரண கோஷம் மலை முழுக்க எதிரொலிக்கும்.
 
...தமிழ் மூடநம்பிக்கையாளர்..
நட்சத்திரத்திற்கு பிறகு ஜோதி தெரியும் அது இங்கும் அங்கும் அசையாது...அது மலைகளுக்கு இடைப்பட்ட இடத்தில் தெரியும்...இது தமிழ் ஆள்....(மீண்டும் மீண்டும் தமிழ் ஆட்கள் மட்டுமே தெரிவிக்கும் தகவல்...மலையாளி அல்ல....)
ஒவ்வொரு ஜனவரி 14 ந் தேதி....சபரிமலையில் வானத்தில் தோன்றும் மகரவிளக்கு குறித்த விவாதம் நீண்டநாளகவே நடைபெற்று வருகிறது...சமீபத்தில் நடந்த சம்பவத்தால் இந்த விவாதம் சர்ச்சையாகவும் மாறியிருக்கிறது....
தற்பொழுது எது மகரஜோதி? எனபதில் தான் குழப்பம் ஏற்படுத்தி ஒரு புதுவிதமான சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது....அனைறயதினம் வானில் தோன்றும் பிரகாசமான நட்சத்திரம் தான் மகரஜோதி..அதை தொடர்ந்து வானில் தெரியும் தீபவிளக்கு தான் மகரவிளக்கு....இது பொன்னம்பல மேட்டில் ஒரு பழங்குடியினமக்களால் செய்யப்படும் ஒரு தீபராதனை சடங்கு....அதாவது மகரஜோதி என்பது புனித நடசத்திரம்...மகரவிளக்கு என்பது மனிதர்கள் ஏற்றிவைப்பது என சபரிமலை பூஜைப்பணிகளை செய்துவரும் தந்திரி குடும்பத்தினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். நட்சத்திரத்தை தொடர்ந்து வரும் தீப ஒளியே மகரஜோதி என பக்தர்களிடையே இன்றுவரை நம்பப்படும் அழுத்தமான நம்பிக்கை. அடர்ந்த காட்டுப்பகுதியான பொன்னம்பல மேட்டில் யாரும் தீபம் ஏற்றி பக்தர்களை நம்பவைக்கமுடியாது என்பதே பலரது உறுதியான (மூடநம்பிக்கை) கருத்து.
(இது அனைத்தையும் கூறுவது மூடநம்பிக்கையில் மூழ்கிகிடக்கும் தமிழர்கள் தான்...)100 க்கு 100 சதவீதம் தெய்வீகம் தான், உண்மையானது, நம்பிக்கையானது மனிதர்களால் ஏற்றப்படுவது அல்ல...குறிப்பாக அந்த காந்தமலைப்பகுதிக்கு சாதரணமாக யாரும் போக முடியாது...(இவர் போலனா யாரும் போகமுடியாதா...? ..ப்பூ...செவ்வாய் கிரகத்துக்கே போறான் மனிதன்...)
இன்னொரு மூடநம்பிக்கையாளர்...60 ஆண்டுகளாக சபரிமலை போய்வருகிறேன் ''நான் பார்த்த வரையில் ஜோதி உண்மையானது''
''ஜோதி இயற்கையானது தானே தவிர செயற்கையானது கிடையாது'' இதுவும் முடநம்பிக்கை தமிழ் பேசும் ஆளின் கூற்று....(இயற்கையெல்லாம் பொய்யாக போய்விட்டது...)

அப்படியானால் லடசக்கணக்கான பக்தர்கள் நம்பிக்கை பொய்யாகிப்போனதா? மகரஜோதி மனிதர்களால் தான் ஏற்றப்படுகிறதா? கோவில் நிர்வாகம் பூடகமாக இந்த விஷயத்தை பற்றி சொல்லியும் மூடநம்பிக்கையாளர்களோ இதனை ஏற்கத் தயாராக இல்லை....
அதனால் தான் கேரள அரசும் மகர ஜோதி குறித்து விசாரணை நடத்த மாட்டோம் என பகிரங்கமாக அறிவித்து விட்டது....
கேரள நம்பிக்கையாளர்களைப் பொருத்தவரை மகரஜோதி தரிசனம் ஒர் அதிசயமாகப் பார்க்கப்படுவதில்லை....ஆனால் தமிழக, ஆந்திர, கர்நாடக நம்பிக்கையாளர்களோ ஒளி வடிவமாக ஐயப்பனே காட்சி தருவதாக மகரஜோதி தரிசனத்தை பார்க்கின்றனர். 
கேரள மக்களின் மகரஜோதி நம்பிக்கைகளை பல ஆண்டுகளுக்கு முன்பே மாற்றியமைத்தது ஒரு காணொளி (வீடியோ) ஆதாரம்...அதை எடுத்து வந்து வெளியிட்டவர் தான் கேரள பத்திரிகையாளர் மனோஜ் கே புதியவிளா...அவர் தனியார் தொலைக்காட்சிக்குப் பல அதிர்ச்சிகரமானத் தகவலைக் கூறினார்.......
''நான் பொன்னம்பல மேட்டில மகரஜோதி ஏத்துற இடத்துக்கு போய்வந்தேன்...1989 இல் அங்கே என்ன நடக்கிறது? என்பதற்கான ஆதாரங்களை திரட்ட போயிருந்தேன்...திரும்பவும் 2000 த்தில் தொலைக்காட்சி பத்திரிக்கையாளராக அங்கே போய் அந்த இடத்தை எல்லாம் காணொளியில் ஒளிப்பதிவு செஞ்சேன்....
மகரஜோதி கொளுத்துகிற இடத்தையும் காணொளியில் பதிவு செஞ்சேன்...
கேரள தொலைக்காட்சியில் அந்த காணொளியை ஒளிபரப்பு செய்தோம்...
இதில இரண்டு விஷயம்...
ஒன்று அங்கு இருக்கிற ஆதிவாசி மக்கள்...சபரிமலை உற்சவத்தில் அவங்க தீபாராதனை காட்டி அவங்க வழிபட்டு வந்திருக்காங்க....
அது சபரிமலையில் இருந்து பார்க்கிறபொழுது ஆகாயத்தில் ஒரு அதிசயமான ஒளிதெரியற மாதிரி எல்லொரும் உணரந்தாங்க...அது ஒரு நம்பிக்கையாகவே மாறிடுச்சி...அதற்குப்பிறகு மலையில் மின்சார வயர்கள் (ஈ.பி லைன்) அமைச்ச காலகட்டத்தில ஆதிவாசி மக்களை அங்கிருந்து காலி பண்ணிட்டாங்க....
அதன்பிறகு ஆதிவாசி மக்கள் ஏற்றிய தீபராதனை ஏற்ற வழியில்லாத காரணத்தால் தேவஸ்தான துறையும் (தேவசம் போர்டும்), அரசும் சேர்ந்து தீபராதனையை கொளுத்த ஆரம்பிச்சாங்க...அது மட்டுமில்லாமல் ஊடகங்கள் (மீடியாக்கள்) மூலமாக காட்டும் பொழுது ஜோதி தெரிஞ்சது.....ஜோதி தெரிஞ்சது..ஜோதி தெரிஞ்சது....என்று ஒரு பெருவாரியான மூடநம்பிக்கையை உருவாக்கிட்டாங்க...(மாஸ் ஹிஸ்டிரியா). அதுதான் மகரஜோதி ஒரு அற்புதமான விஷயம் என்ற ஒரு பரபரப்பை ஏற்படுத்திடுச்சி...''''
பொன்னம்பல மேட்டில் தெரியும் ஜோதி விஷயம் பற்றிய மதிப்பீடுகள் கேரளாவிலும் ஆச்சர்யமான ஒன்றாகத்தான் கருத்ப்பட்டுவந்தது...
முதன்முதலாக பொன்னம்பல மேட்டிற்கு சென்று அந்த விஷயத்தை கண்டுபிடித்து வெளிப்படுத்தியப் பிறகே புதிய மாற்றத்தை கேரளாவிலும் ஏற்படுத்தியது என்று கூறுகிறார் மனோஜ்கே புதியவிளா...
''''சபரிமலையில் மகர சங்கராந்தி பூஜை நடக்கும் பொழுது...கிழக்கில ஒரு தீபம் தெரியும் ஒரு நட்சத்திரம் தெரியும் என்பது தான் ஒரு நம்பிக்கை...அந்த ஒளி தெரியும் பொன்னம்பல மேடு என்ற இடம் பூமியிலேயே இல்லை என்பதுதான் பலரது எண்ணம். அதானால் ஏற்படற பரபரப்பினால் கூடும் கூட்டத்தினால் ஏற்படும் நெரிசலினால்...1999 இல் 82 பேரும்...2011 இல் 102 பேரும் இறந்து போய்ட்டாங்க...(இந்த 82, 102 இதையும் நம்மாளுங்க கதை கட்டுனாலும் கட்டுவாங்க...இரட்டைப்படை...சொறி சிரங்கு படை என்று...எதற்கும் காத்து இருக்கலாம்...)''
இத்தனைக்கும் காரணம் மகரஜோதி ஒரு அதிசயம் அதை பார்க்கணுங்கற ஒரு எதிர்பார்ப்பு தான்...
கேரளத்தில் பகுத்தறிவுவாதிகள் சங்கம் மகரஜோதி ஏற்றும் இடத்தை கண்டுபிடித்து அதுபற்றிய தகவல்களை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என எல்லா மொழிகளிலும் சிறு கையேடு வெளியிட்டு பிரச்சாரம் நடத்தினாங்க. ""மகரஜோதி மனிதர்கள் தான் ஏத்தறாங்க"" அப்படிங்கற விஷயம் கேரள மக்கள் எல்லோருக்கும் தெரியும். அதனால தான் இப்படி இரண்டு பெரிய விபத்து கேரளத்தில் நடந்தும் அதில மலையாளிகள் பாதிக்கப்படவில்லை.
 
கடந்த ஈராயிரம் ஆண்டில் வெளியான இந்த காணொளி ஆதாரம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.
மகரஜோதி மனிதர்களால் தான் ஏற்றப்படுகிறதா? அப்படியென்றால் யார்? ஏற்றுகிறார்கள்?
சபரிமலை மகரஜோதி மனிதர்களால் ஏற்றப்படுகிறதா? அதன் உண்மை நிலையை மக்களிடம் தெரிவிக்க வேண்டும் என்று கேரள உயர்நீதிமன்றம் ஒரு நிர்பந்தத்தை முன்வைத்திருக்கிறது....
 
மக்களின் நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் பெரிதாக ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதில்லை...அதை விஞ்ஞான ரீதியாக அணுகுவதுமில்லை...ஆனால் இது சர்ச்சைக்கு ஆளான காரணத்தினால் இந்த இடத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறது.........
மகரஜோதி மனிதர்களால் ஏற்றப்படுகிறதா? அப்படியென்றால் யார்? ஏற்றுகிறார்கள்? என்ற இந்த கேள்விக்கு பதிலாக வந்தவர் தனவச்சபுரம் சுகுமாறன்...
 
''கேரள பகுத்தறிவுவாதிகள் சங்கத்தின் மூலமாக இந்த மகரஜோதி உண்மைகளை ஆராயவேண்டும் என்று முடிவெடுத்து முதல் முதலாக 1980 இல் முடிவு பண்ணோம்...1980 ஜனவரி 14 அன்று மூழியாறிலிருந்து 35 கிலோ மீட்டர் காட்டுப்பாதையில நடந்து போய் பம்பா அணை என்ற இடத்தைப் போய் சேர்ந்தோம்...அங்கிருந்து கொச்சி பம்பை என்ற இடத்திற்கு 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்து பொன்னம்பலமேடு என்ற இடத்திற்கு போய் சேர்ந்தோம். நாங்க போன சமயம் கேரள தேவஸ்தானத்தின் ஜீப் ஒன்றும், கேரள காவல் துறை ஜீப் ஒன்றும் நின்றிருந்தது. அப்பதான் மகரஜோதி கொளுத்துகிற இடத்தை பார்த்தோம். அடுத்து அந்த வழியாக வந்த மின்சாரத்துறை ஜீப்பில் ஏறி நாங்களும் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தோம்.
தேவஸ்தான துறை ஜீப்பில் ஒரு சாக்குப் பையில் 8, 10 கிலோ கற்பூரமும் ஒரு பாத்திரமும் எடுத்துட்டு வந்திருந்தாங்க..சாயந்தரம் ஒரு ஐந்தரை மணி இருக்கும் அங்கிருந்த பாறையில எல்லாத்தையும் வைச்சாங்க...அந்த இடம் வடக்கு கிழக்காக இருந்த்து..சபரிமலையில் இருந்து 2000 அடி உயிரத்தில் ஒரு புல் மேடாக கிடந்தது...அப்புறம் ஒரு பாத்திரத்தில கற்பூரங்களை நிரப்பி 6.40 மணிக்கு கொளுத்தி தூக்கி காமிச்சாங்க..மின்சாரத்துறையை (ஈ பி) சார்ந்த கோபிநாத் என்ற ஊழியர் தான் அந்த வருஷம் மகரஜோதியை ஏற்றிக் காண்பித்தவர் அணைத்து...அணைத்து மூன்று முறை மகரஜோதியை ஏற்றிக்காண்பித்தனர். இப்படித்தான் மகரஜோதியை ஏற்றிக்காண்பிக்கின்றனர் என்ற விஷயம் அன்றுதான் தெரிந்தது.
 
ஒருகட்டத்தில் யார்? மகரஜோதியை ஏற்றுவது? என்ற போட்டியால் ஏற்பட்ட குழப்பங்களால் இந்த உண்மைகள் வெளி உலகுக்கு அம்பலமானது எனகிறார் சுகுமாறன்.
 
1982 இல் பொன்னம்பலமேட்டுக்கு ஜனவரி 14 க்கு ஒரு நாள் முன்னாடியே அதாவது ஜனவரி 13 அன்றே சென்று 6.40 மணிக்கு நாங்க ஒரு மகரஜோதியை ஏற்றிவிட்டோம்...இது பற்றி மாத்ருபூமியில் யாரோ போலியாக மகரஜோதியை ஏற்றிவிட்டார்கள் என்று தலைப்புச் செய்தியே வெளியானது. வானொலியிலேயும் மகரஜோதி தெரிந்ததாக செய்தி சொன்னாங்க...உடனே இந்த விஷயத்தை தேவசம் போர்டு மறுத்திடுச்சி...அதற்கடுத்த நாள் 1982 ஜனவரி 14 ம் நாள் அந்த வருஷம் மகரஜோதியை ஏற்றியது காவல் துறை தான்.(போலிஸ்). தேவசம் போர்டு ஆட்கள் பொருட்களை எடுத்துட்டுப்போய் கொடுத்தாங்க போலிஸ் அதை ஏத்திச்சு. அன்னைக்கு ஏற்றும்பொழுது அங்கிருந்த புல்மேட்டில் தீப்பிடித்து விட்டது. அதை நாங்க எல்லோரும் ஒன்று சேர்ந்து தான் அணைச்சோம். இது பற்றி கேரள பத்திரிகையில் கூட செய்தி வந்துள்ளது.
அதறகடுத்து 1983 ம் ஆண்டும் போனோம் அப்போது அங்கே 30 க்கும் மேற்பட்ட காவலர்கள் ஆயுதத்தோடு வந்து எங்க எல்லோரையும் பலமாக தடியடி நடத்தி தாக்கினார்கள். எல்லோருக்கும் நல்ல அடி...எனக்கும் பலமான அடி மூன்று மாதம் ஆயுர்வேத சிகிச்சை எடுக்கிற அளவுக்கு அடி...இப்படியாக 1983 மகரஜோதி அமைந்தது..தொடர்ந்து பல வருடங்களாக மகரஜோதி சமயத்தில் பொன்னம்பல மேட்டுக்கு போய்ட்டுதான் இருக்கிறோம்...இப்போது 2011 இல் மகரஜோதி முடிந்த பிறகும் அங்கு போய் பார்த்தோம்...கடந்த 30...31 வருஷமாக தேவசம் போர்டு தான் மகரஜோதியை ஏத்திட்டு வர்றாங்க...
தற்போது சபரிமலை நிர்வாகம் மகரஜோதி என்பது காந்தமலை மீது தோன்றும் நடசத்திரம் மட்டுமே என்று இறுதியாக அறிவித்து உள்ளது...
மகரஜோதி, மகரவிளக்கு இரண்டும் வேற! வேற! என்று புது குழப்பத்தை தேவசம் போர்டு அறிவித்துள்ளது. அவங்க சொல்ற மாதிரி மகரஜோதி என்பது நட்சத்திரம்! என்ற பட்சத்தில் அதை பார்க்கிறதுக்கு சபரிமலைக்கோ, பொன்னம்பலமேட்டிற்கோ போக வேண்டியதில்லை...கேரளாவிலே எந்த பாகத்தில் இருந்து பார்த்தாலும் அந்த நட்சத்திரம் தெரியும்...! அதுமட்டுமில்லாமல் தென்னிந்தியாவில் எஙகிருந்து பார்த்தாலும் அந்த நடசத்திரம் தெரியும்! அதுவும் ஜனவரி 14 மட்டும் தான் தெரியும் என்று எந்த வானசாஸ்திரமும் சொல்லவில்லை...இப்படியெல்லாம் மக்களை யாரும் ஏமாத்தக்கூடாது....
காலம் காலமாக நம்பிக்கைகள் நொறுங்கும்பொழுது யாராலும் தாங்கவியலாது...எனபது நிதர்சனம்...என்று அந்த தொலைக்காட்சி முடித்திருக்கிறது...
இந்த சபரிமலை மகரஜோதி விஷயத்தில் மூன்று விஷயம் பேசப்படுகிறது...
தேவஸ்தான்ம் எங்களுக்கும் மகரஜோதிக்கும் சம்பந்தமில்லை என்று சொல்லியது....
அதே மாதிரி தேவஸ்தானமே மகரஜோதிங்கறது வேற..மகரவிளக்கு என்பது வேற..என்பதை மக்கள் குழப்பிக்கொள்ளக் கூடாது...என்று கூறியது
மூன்றாவது மக்களுடைய நம்பிக்கை சார்ந்த விஷயங்களை அறிவியல் ரீதியாக ஆராயத் தேவையில்லை என்று கேரள அரசும் கருத்து சொல்லியிருப்பது...
இதுவே ஒரு ஏமாத்துவேலையாக தெரிகிறது...எல்லாம் அங்கு குவியும் காணிக்கை (144 கோடி)  வருமானத்தை கணக்கில் எடுத்துக் கொண்டுதான் இதை மறைக்கிறார்கள் எனபது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது....இது மொத்தம் இது போன்ற தமிழக, ஆந்திர, கர்நாடக மூடநம்பிக்கையாளர்களால் சேருகிறது என்பது ஊரறிந்த விஷயம்....வரி ஏய்ப்பு எப்படி வசூலானால் என்ன,,,? நாட்டிற்கு தேவையான வருமானம் கிடைக்கிறதே...என்று கேரள அரசு நினைக்கிறதா? (சுவிஸ் வங்கியில் கருப்பு பணம் வைத்திருப்பவர்களை பற்றி வெளியிடத்தேவையில்லை என்பது மாதிரி...இதிலும் அரசு மெத்தனம் காட்டுகிறது...)

...நன்றி கேரள பகுத்தறிவுவாதிகள் சங்கம்..தனியார் தொலைக்காட்சி..நன்றி டெக் சத்தீஸ் இணையதளம்.... 

Wednesday, 26 January, 2011

பெண்ணியம் பற்றி அதிக அக்கறைப்படுபவர்களிடம் ஒரு சில கேள்விகள்....? கற்புக்கரசிகள் யார்...?
பெண்ணியம் பற்றி அதிக அக்கறைப்படுபவர்களிடம் ஒரு சில கேள்விகள்....? பெண்ணுக்கு சுதந்திரம் கொடுத்தால் என்ன ஆகும் எனப் பயப்படும் ஆணாதிக்க மனப்பான்மை கொண்டவரிடம் சில கேள்விகள்....?

பெண்ணுக்கு ஆண் சுத்ந்திரம் வழ்ங்க வேண்டுமா? அல்லது பெண்ணே சுதந்திரத்தை எடுத்துக்கொள்ளவேண்டுமா?

மனிதன் என்ற சொல்லுக்குள் அடங்கியவர்கள் தான் பெண், ஆண், திருநங்கைகள் என இம்மூவரும் .

இதில் மனிதவுரிமை எனபது இம்மூவருக்கும் சமமாக இருப்பது தான். இதை இவருக்கு வழங்கினால் என்ன? ஆகும்?......... அவருக்கு வழங்கினால் என்ன ஆகும்? என்று வினவுவதே தவறான ஆணாதிக்க மனப்பான்மை....? எவருடைய சுத்ந்திரத்தையும் எவரும் தட்டிப்பறிக்க முடியாது...இந்த மூன்று பாலினத்தின் சுதந்திரத்தை நிர்ணயிக்கும் உரிமை ஒரு பாலினத்திற்கு மட்டும் வழங்கப்படவில்லை.

மனிதவுரிமை என்ற நீர் நிறைந்த பாத்திரத்தில் அனைவரும் சுதந்திரத்துடன் நீர் பருகவே இந்த சமுதாயத்தில் அந்த பாத்திரம் உருவாக்கப்பட்டது. ஆனால் நிகழ்வில் அவ்வாறு நடைபெறுவதில்லை,,,,

ஆண் அந்த பாத்திரத்தை சுற்றி நின்று மறைத்துக்கொண்டு பெண் மற்றும் திருநங்கைகளுக்கு வழிவிடாமல், மனிதவுரிமை என்ற நீரைப்பருகவிடாமல்  மறைத்துக்கொண்டுள்ளனர், இதில் மீறி ஆணை விலக்கிக்கொண்டு மனிதவுரிமை பாத்திரத்தை அடையும் பெண்ணை பெரிய அதிசயத்துடன் பார்க்கும் பார்வை தான் இந்த சமுதாயத்தில் நிலவுகிறது.

பெண்ணுக்கு ஆண் சுதந்திரம் வழங்கத் தேவையேயில்லை, அந்த அதிகாரமும் அவனுக்கு இல்லை. அனைவரின் மனிதவுரிமையும் ஏற்கனவே அந்த பாத்திரத்தில் நிறைந்து இருக்கிறது. ஆகையால்

பெண்களே! உங்கள் சுதந்திரத்தை நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள்!

 யாரிடமும் இதற்காக கையேந்தாதீர்கள்!.

பெண்களின் சுயமரியாதையை பெண்கள் தான் காத்துக்கொள்ளவேண்டும்.

எந்த கட்டுப்பட்டித் தனத்திற்கும் ஆட்படத்தேவையேயில்லை. எந்த விமரசனத்தைப் பற்றியும் கவலைப்படத்தேவையில்லை.

பெண்ணியம் பற்றிப் பேசுபவர்கள் சிறு இனிஷியல் விஷயத்தைக் கூட மாற்றுவதில்லை, துறப்பதற்கு மனமில்லை,,,,

பெண், ஆண் திருமணம் புரிந்தால் பெண் தான் ஆணின் தலைப்பெழுத்தை (இனிஷியலை) சூட்டிக்கொள்கிறார். ஆண் அவரின் தகப்பனார் தலைப்பெழுத்தை அப்படியேத் தாங்கி கொண்டிருக்கிறார். பெண் தன் தந்தைப் பெயரின் தலைப்பெழுத்தைக் கூட வைத்துக்கொள்ள உரிமை இல்லை.

தம்பதியர் இருவரினால் பிறந்த பிள்ளைகளுக்கு கூட ஆணின் தலைப்பெழுத்து  (இனிஷியல்) மட்டுமே வைக்கப்படுகிறது.

 ஏன்? பெண், ஆண் என இருவரின் தலைப்பெழுத்தை வைத்தால் என்ன? இந்த உரிமைகளை கூட பகிர்ந்து கொள்ள மனமில்லாமல் வாய் கிழியப் பெண்ணியம் பற்றி பேசுபவர்கள் இந்த உலகில் இன்னும் உண்டு.


எங்கே? எந்த ஆணாவது பெண்ணின் தந்தைப் பெயரின் முதலெழுத்தை சூட்டிக்கொள்கிறார்களா?....ஆண் அவரின் தந்தையின் தலைப்பெழுத்துடன் (இனிஷியலுடன்) இருக்கட்டும், பெண் அவர் தந்தையின் தலைப்பெழுத்துடன் (இனிஷியலுடன்) இருக்கட்டும். இதில் என்ன மாறுபாடு வந்துவிடப்போகிறது. ஒற்றுமைகள் தான் வளரும். இதெல்லாம் சடங்குகள் அல்ல....சடங்குகள் என்ற பெயரில் வளர்க்கப்படும் ஆணாதிக்க மனப்பான்மைகள்.

குடும்பத்தலைவர் என்றால் பெண், ஆண் இருவரும் தான் குடும்பத்தலைவர்.


பெண் மட்டும் திருமணம் ஆனவுடன் பெண்ணின் தந்தையை அப்படியே கழற்றி விட்டுவிடவேண்டும். ஆனால் ஆணுக்கு மட்டும் பெண்ணின் தந்தை சம்பாதித்த சொத்து மட்டும் வேண்டும்.

கலப்புத்திருமணம் செய்து கொண்டவர்கள் கூட ரொம்ப பெரிய புரட்சி செய்துவிட்டதாக மார்தட்டிக்கொள்வார்கள்

. என்னப் பெரிய புரட்சி...ஆணின் சமயத்தைதான் பெண் வேண்டாவெறுப்புடன் பின்பற்றவேண்டும். ஆணின் சாதியக்கோட்பாட்டைத்தான் பெண் பின்பற்ற வேண்டும். அங்கேயே காதல் செத்துவிட்டது. இது சமய்ததிற்கான ஆட்சேர்ப்பேத் தவிர இது கலப்புத் திருமணம் அல்ல...

சமயத்தையும் சாதியையும் துறக்காமல் என்ன கலப்புத்திருமணம்? என்ன பெரிய புரட்சி..?

பெண் சுதந்திரத்துடன் அவரின் பிறப்பின் சமயத்தை தழுவ உரிமையிருக்கிறதா? அப்புறம் என்ன? ஈருடல் ஒர் உயிர். ''உனக்காக என் உயிரையும் விட்டுக்கொடுப்பேன் என்பதெல்லாம் சும்மா தானே....!.

பாரதியார் பெண்ணியம் பற்றி புரட்சியாக எழுதினார்....என்று பீய்த்திக்கொள்ளும் பெருமை பீய்த்தக்களையர்களும் உண்டு...

எங்கே! பாரதியார் பெண்ணியம் பற்றி கவிதை எழுதிவிட்டு அவர் வீட்டில் பெண்ணடிமைத்தனத்தைதான் பேணினார்.

இதைத்தான் விவேகானந்தரின் பெண் சீடரான நிவேதிதா அம்மையார் பாரதியாருக்கு சுட்டிக்காட்டினார்.

''உன்வீட்டில் உள்ள குப்பைகளை முதலில் அகற்று.... ஊர் குப்பைகள் தானாக அகன்று விடும்''.

''சாதிகள் இல்லையடி பாப்பா'' என்று பாடிய பாரதி....  மட்டும் பூணூலை மாட்டிக்கொண்டு தன்னுடைய பார்ப்பன ஜாதியை கெட்டியாகப்பிடித்து கொண்டிருந்தால்....சாதி ஒழிந்து விடுமா?....அல்லது பாரதியார் தான் பெரிய மனிதராக ஆகிவிடுவாரா? இல்லை அதை பாப்பாவுக்குத்தான் சொன்னேன் எனக்கில்லை என்ற அர்த்தமாகிவிடுமா?

நம்முள்ளத்திலேயே மிகப்பெரிய மூடநம்பிக்கை இருந்து கொண்டுதான் இருக்கிறது. நம் வீட்டுப்பெண்களையே நாம் மதிப்பதில்லை. இப்படித்தான் ஒரு தனியார் நிறுவனப் பணி நேர்காணலில் ஒருவரிடம் அந்த நிறுவனத்தாரால் கேள்வி கேட்கப்பட்டது.

''பெண்கள் எப்படி இருக்கவேண்டும்.''

அதற்கு விண்ணப்பத்தாரர்...கூறிய பதில்...

.''கற்புக்கரசிகளாக இருக்கவேண்டும்''.கணவனே கண் கண்ட தெய்வம் என்று இருக்கவேண்டும்''

 ''அப்படியா! கற்புக்கரசிகள் என்றால் என்ன? அப்படி யாராவது உள்ளார்களா?''

உடனே விண்ணப்பத்தாரர்.... கோப்பபட்டு

''என்ன இப்படி கூறுகிறீர்கள்....தமிழ் நாட்டில் கண்ணகி, நளாயினி, சாவித்திரி....இப்படி பலர் இருந்தனர்''என்று காணாத கற்புக்கரசிகளை பதிலாக தந்தார்.

என்னப்பா கோப்படுகிறாய்.!..இவ்வளவு பெரிய சமூகத்தில் 3 பேரை மட்டும்தான் கூறுகிறாய்....? அதுவும் காணாதவர்களை பற்றி மட்டும் தான் கூறுகிறாய்....
''ஏன்? நிகழ்வில் இருப்பவர்கள் யாரும் உன்நினைவிற்கு வர வில்லையா...?''

இப்படி சுட்டிக்காட்டியும் புரிந்து கொள்ள முடியாத அந்த மூட விண்ணப்பத்தாரர்....மறுபடியும் பழமைவாதத்தைதான் தன்பதிலாக வைத்தார்....

''இன்னும் நிறையா பேர் இருக்கிறார்கள்....எனக்கு நினைவில்லை....

அதைக்கேட்டு சிரித்த அந்த நேர்காணல் அதிகாரி....

''ஏனப்பா! உன் அம்மா....உன் ஆயா....உன் தங்கை....உன் அக்காள், உன் நெருங்கிய உறவினர்கள் என இவர்கள் எல்லாம் உன் நினைவுக்கு வரவில்லையா? அவர்கள் கற்புக்கரசிகள் இல்லையா...? உன்னை சுற்றி இருப்பவர்களைப் பற்றியே உனக்கு நினைவுக்கு வரவில்லை...தெரியாத கற்புக்கரசிகளைப் பற்றி நினைவில் வைத்துக்கொண்டு என்ன பயன்....''

அப்போது தான் அவருடையத் தவறு அவருக்கு புரிந்த்து....மண்டையை சொரிந்தார் பேண் வரும் அளவிற்க்கு....

இன்னும் சிலர் ஆட்டோவில் இப்படி எழுதி வைத்திருப்பார்கள்....
சீறும் பாம்பை நம்பு! சிரிக்கும் பெண்ணை நம்பாதே!

எங்கே சிரிக்கும் அம்மாவை நம்பமாட்டாயா? சிரிக்கும் உடன்பிறந்த சகோதரிகளை நம்ப மாட்டயா? சிரிக்கும் எந்த நெருங்கிய பெண் உறவினர்களையும் நம்ப மாட்டியா?

உன்னை உயிர்ப்பித்த தாய்க்குலம் சிரிப்பதைக் கூட நம்பாத நீ என்னத்திற்காக உயிர் வாழவேண்டும்.!

பெண்களை போகப்பொருளாக வர்ணிப்பதை தவிர இவர்களுக்கு வேறெதுவும் தெரியாது....

பெண்களை பொது இடத்தில் விளிப்பது கூட நாகரிகமற்ற முறையில் அவள், இவள் என்று தான் ஆண்களால் விளிக்கப்படுகிறார்...கணவனே கூட ''அவள் அப்படித்தான்'' என்று பொது இடத்திலேயே பலர் முன்னிலையிலேயே விளிக்கிறான்...பெண் தன் கணவனை எந்த இடத்திலும் ''அவன்'' என்று பொது இடத்தில் விளிப்பது கிடையாது. ''அவர்'' என்று தான் மரியாதையுடன் கூறுவார். அதே மரியாதையை பெண்ணுக்கு ஆண் அளிப்பதில்லை.

பெண்கள் மாதந்தோறும் துன்பமுறும் விஷயமான மாதவிடாய்...மறுஜென்மம் எடுக்கும் மகப்பேறுவைப் பற்றி பல ஆண்களுக்கு சிந்திக்க தெரியாது....உயிரைப்பிடித்து கொண்டு உயிர் உருவாக்கும் உன்னதத்தைப் பற்றி பல ஆண்கள் உணர்வதும் கிடையாது.

பெண்களுக்கு இயற்கையிலேயே துன்பம் அதிகம்! இதை உணர்ந்தவன் மனிதன்!

மேலே குறிப்பிட்டதைப் போலத்தான் இந்த பெண்ணியம் பற்றி கருத்து வைப்பவர்களும் தங்களை சுற்றி பெண்ணடிமைத்தனம் எந்தளவில் இருக்கிறது என்பதை உணராமல், அதை மாற்ற ஒரு சிறு முயற்சியும் எடுக்காதவர்கள், இன்னும் பெண்ணியம் பற்றி பேசிக்கொண்டிருக்கின்றனர். இதுவரை பெண்ணியம் பற்றி கருத்து வைத்தவர்கள் இந்த இடத்தைக்கூட தொட்டுக்காட்டியது கிடையாது. நம்மை சுற்றி இருப்பவைகளைப் பற்றி யாரும் கவலைப்படுவதே கிடையாதே! அடுத்த வீடு! அடுத்த நாடு! இதைப்பற்றி பேச சொன்னால் நாள் முழுதும் வாய் வலிக்கும் அளவுக்குப் பேசும் மனப்பான்மை தானே....நாட்டில் பெருத்து இருக்கிறது.

முதலில் பாரதியார் பாடல்களை உதாரணம் காட்டுவதை நிறுத்தவேண்டும்!. அவரே அவர் பாடலில் சுட்டிக்காட்டியபடி பின்பற்றி நடக்கவில்லை.

வேண்டுமென்றால் வியாபாரத்திற்கு அவர் பாடலைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.


ஒரு பெண் சமுதாயத்தில் பிறக்கும் பொழுதே திருமணத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு தான் அடிமையாகவே குழந்தையில் இருந்து வளர்க்கப்படுகிறார்...பெண் பிள்ளைகளுக்கு எல்லா வீட்டு வேலைகளும் இளமையிலேயே கற்றுத்தரப்படுகிறது. ஆண் பிள்ளைகளுக்கு மட்டும் ஆணாதிக்கம் கற்றுத்தரப்படுகிறது. பெண் இன்னொரு வீட்டிற்கு போகப்போகிறவர் என்ற எண்ணத்தில் தான் வளர்க்கப்படுகிறார். வீட்டில் உள்ள அனைவரது துணிகளையும் துவைப்பது முதல் சமையல் வேலை வரை பெண் தான் செய்யவேண்டும். அதன்பிறகு கல்வியிலும் கவனம் செலுத்தவும் வேண்டும், அதில் முதன்மை பெற வேண்டும்....

திருமணத்திற்கு பின்னும் ஆணாதிக்கத்தை எதிர்த்து போராடவேண்டும். பின்பு அதே பெண்ணே ஆணாதிக்க மனப்பான்மைக்கு உடன் பட்டவறாக மாற்றவும் படுகிறார். பெண்ணே பெண்ணிற்கு எதிரியாக மாறுவது இப்படித்தான்...அது தான் மாமியார் மருமகள் சண்டைகளாக மாறுவதற்கான காரணம். 

பெண் செய்யும் அத்தனை குற்றத்திலும் ஆண் சம்பந்தப்பட்டிருப்பான். பெண் தனித்து எந்த குற்றத்தையும் புரிந்ததில்லை....எந்த குற்றத்தின் பின்னணியிலும், எப்பொழுதும் ஒரு ஆண் சம்பந்தப்பட்டிருப்பான்....

(அது தந்தை, சகோதரன், காதலன், கண்வன், மகன், மச்சினன், மருமகன், பேரன்....என்று யாராவது ஒரு ஆடவன் சம்பந்தப்பட்டிருப்பான்)

பல சமயங்களிலும், புரணாங்களிலும் பெண்களை இழிவுப்படுத்தி தான் கூறப்பட்டுள்ளது...அதில் பார்ப்பன இந்து சமயம் மிக மோசம்...இன்னும் சில இதர சமயங்களிலும் அப்படித்தான் இழித்து ஆணாதிக்கத்திற்கு ஆதரவாக ஆண் மதவாதிகளால் வஞ்சகமாகப் புகுத்தி எழுதப்பட்டுள்ளது.

இன்னும் இதர சமயங்களில்.....

பாலியியல் தொழில் புரியும் பெண்களை கல்லால் அடித்து கொல்ல வேண்டும்....

''பெண் எப்படி தனியாக பாலியியல் தொழில் புரிய முடியும்!''

அந்த தொழில் புரிய காரணமான ஆணுக்கு எந்த தண்டனையும் கிடையாது....முதலில் இந்த தொழிலுக்கு காரணமான அந்த ஆணைத்தான் கல்லால் அடித்து கொல்ல வேண்டும்....(யாரையும் கொல்ல வேண்டாம்...சட்டம் சும்மா விடாது...)

அம்மாதிரி சமயக்குப்பைகளை தயக்கமில்லாமல் கொளுத்துங்கள்!

திரைப்படங்களும் இம்மாதிரி பெண்ண்டிமைத்தனங்களை காசுக்காக காட்சிப்படுத்திக் காட்டும். பெண்ணை கை நீட்டி அடிப்பது போன்ற காட்சிகளை, ஆணாதிக்கத்தை ஊக்குவிப்பது போல், ஆதரிப்பது போல் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். இக்காட்சிகளை முதலில் தணிக்கைத் துறையினர் அனுமதிக்க கூடாது. அப்படி அடிக்கும் திரைக்கலைஞர்களையும் மக்கள் ஆதரிக்க கூடாது.

பல உடன்பிறந்த சகோதரிகளைப் பெற்றிருக்கும் ஆண் கூட தன் தங்கை, அக்காள் எந்த காதலும் செய்துவிடக்கூடாது...எனபதிலேயே கவனத்துடன் இருக்கிறான்...

அவன் மட்டும் இன்னொருவரின் சகோதரிகளைப் பார்த்து ஜொல்லு விடலாம்...காதல் செய்யலாம் ...காதல் என்ற பெயரில் கயமைத்தனம் புரியலாம்..

தன் சகோதரிகள் எந்த ஆணையும் ஏறெடுத்து பார்க்க கூடாது. எந்த ஆணும் அவன் உடன்பிறந்த தமக்கைகளை ஏறெடுத்தும் பார்க்க கூடாது. பார்த்தால் அவனுக்கும் உதை, அவன் சகோதரிகளுக்கும் உதை.

.இதுதான் ஆணாதிக்கமனப்பான்மை....தனக்கு இருக்கும் அதே உணர்ச்சிகள் தான் அவன் சகோதரிகளுக்கும் இருக்கும் எனபதை ஏற்றுக்கொள்ள மனமில்லாதவர்கள் தான் இந்த உலகில் அதிகம்.


ஒரு ஆண் எத்தனை திருமணம் வேண்டுமானாலும் புரிந்து கொள்ளலாம். மனைவி இறந்த மறுநிமிடமே..!. மாறாக பெண்ணிற்கு உணர்ச்சிகளே இருக்க கூடாது. இளம் பெண்ணை திருமணம் புரிந்த கையோடு வீட்டில் விட்டு விட்டு தனியாக பொருள் சம்பாதிக்க வெளிநாடு சென்றாலும் கற்புடன் உணர்ச்சிகளை அடக்கிகொண்டு இருக்கவேண்டும். இவன் மட்டும் போகிற இடத்தில் எல்லாம் மேயலாம் கற்பாவது மண்ணாங்கட்டியாவது.


ஒழுக்கத்திற்கு கூட ஆணுக்கு பல விதிவிலக்குகள்...பெண்ணிற்கு மட்டும் தான் கற்பு..நெறி....

ஆணுக்கு அது தேவையே இல்லை...ஒழுக்கமும் தேவையே இல்லை...இதுதான் இந்த சமூத்தின் மூட நியதி...

பெண்ணியம் பேசுபவர்களே! முதலில் உங்கள் வீட்டுப் பெண்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்....நீங்கள் பழமைவாதிகளாக இருந்து கொண்டு ஊருக்கு உபதேசிக்கப் புறப்படாதீர்கள்....!

''பெண்'' குழந்தையில் இருந்து முதுமை அடையும் வரை அடிமையாகவே வாழ்கிறாள்! வாழவைக்கப்படுகிறாள்! ஆண்களால் அடிமைப்படுத்தப்படுகிறாள்...இதை எதிர்ப்பவர் வீட்டிலும் இந்த முறை பின்பற்றப்படுகிறது,,,,என்பது தான் உண்மை....முதலில் அதைக்களைய முற்படுங்கள்....

வீட்டிற்குள்ளே களையவேண்டிய பெண்ணடிமைத்தனங்கள் நிறைய உள்ளன...கன்னிகாதானம், வரதட்சணை, இனிஷியல், பெண்ணை வேலைக்காரியாக, கொத்தடிமையாக வளர்ப்பது,,,போன்ற நிறைய அடிமைத்தன விஷயங்கள் உள்ளன...

பெண்கள், திருநங்கைகள் அவர்களுடைய சுத்ந்திரத்தை எடுத்துக்கொள்ளும் பொழுது, ஆண்கள் அதை தடுக்காமல் அவர்களுக்கான வழியை அடைத்துக்கொள்ளாமல் வழிவிட்டாலேப் போதுமானது. 
....தகவலுக்காக.

Monday, 17 January, 2011

தமிழ் பொது தளங்கள் என்ற பெயரில் பல சட்டவிரோதங்கள்.........எச்சரிக்கை!

  

இன்று பல இளைஞர்கள் இம்மாதிரி தளங்களால் பாதிக்கப்படுகிறார்கள்...அவர்களிடமிருந்து திரட்டிய தகவல்களாக.....இம்மாதிரி தளங்களில் சிக்கி கொள்ளமால் சாதுர்யமாக விலகுவதற்கான சில வழிமுறைகள்....
பல பொது தளங்கள் தமிழ் -மன்றம்.... , முத்தமிழ்,,,, ஈகரை தமிழ்,,,,, யாழ் தமிழ்,,,,, அதிகாலை.... இன்னும் சில தமிழ் களஞ்சியங்களும்,,தமிழ்,என்ற அடைமொழியுடனும் தமிழர்களை இணைக்கும் உறவுப் பாலம் எனவும் கூறிக்கொண்டு இந்தியத் தமிழர்களையும், தமிழகத்தமிழர்களையும் அதன் தமிழ் இளைஞர்கள் மற்றும் இன்றைய இளையத் தலைமுறையினரையும் தவறான வழிகாட்டுதலுக்கு அழைத்து செல்லும் தளங்களாகவே இருக்கின்றன.  தமிழை எவ்வளவு கொச்சையாக எழுத கற்று கொடுக்க முடியுமோ? அந்த அளவுக்கு கற்று கொடுக்கவும் முயலுகின்றன....இளையத்தலைமுறையினருக்கு தீவிரவாத மனப்பான்மையை இளமையிலேயே கற்று கொடுத்து விடுகின்றன......

ஏற்கனவே இளைய சமுதாயத்தினர் உணர்ச்சிவயப்படக்கூடியவர்கள் அதில் மேலும் எண்ணையை ஊற்றுவது போல் இந்த வன்முறை செயல்களுக்கு தூண்டி விடிகின்றன. இந்த தளங்களின் செய்ல்கள் அனைத்தும் உள்நோக்கம் கொண்டதாகவே தெரிவிக்கிறது. இவைகள் ஒன்றுக்கு மேற்பட்ட பல நாடுகளில் தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்தினை ஆதரித்து எழுதுகிறார்கள். அந்த அமைப்பிலிருந்து கொண்டு எழுதுகின்றனர்.

இந்த மாதிரி தளங்கள் எல்லாம் எந்த நாட்டு சட்டதிட்டத்திற்கும் கட்டுபடுவதே இல்லை...கட்டுபடமாட்டேன் என்பதற்கு ஒரு பொது தளமா?  
மக்களை வன்முறைப் பாதைக்கு அழைத்து செல்லும். இந்த தளங்களில் எந்த ஒருங்கிணைப்பும் இல்லை..நல்ல நோக்கமும் இல்லை....மனிதனுக்கு  முதன்மையாக இருக்கவேண்டியவை மனித நேயம் அதை நேருக்கு நேராக எழுத்தின் மூலம் பங்களிக்கும் போதே பின்பற்றுவதுமில்லை...இவர்கள் என்ன பெரிய விஷயத்தை அலசிவிடப்போகிறார்கள்...? 

சமுதாயத்தில் அவர்களின் பங்களிப்பு மிக குறைவவாக உள்ளது என்ற எண்ணத்தை ஆரம்பதிதிலேயே சுட்டிக்காட்டிவிடுகிறது. இதெல்லாம் சில மேட்டுக்குடித்தன மனப்பான்மை கொண்டவர்கள் உட்கார்ந்த இடத்திலிருந்து அனைத்து விஷயங்களையும் தீர்க்கமாக கணிப்பதாக நினைத்து ஒருவர் கழிப்பறை சென்றதலிருந்து சிற்றுண்டி சாப்பிட்டது வரை எழுதுவார்கள். அதாவது டீக்கடையில் பேசிக்கொள்ளும்  அரசியல் போல...திண்ணையில் பேசிக்கொள்ளும் அரசியல் போல.....இன்னும் சில பேர் செய்யும் தொழில், (பள்ளி ஆசிரியர், கல்லூரி பேராசிரியர்...) புகைப்படம், தேசியக்கொடி எல்லாம் போட்டுக் கொண்டு எழுதுவார்கள்....அரசு ஊழியர் (பாரத ஸ்டேட் வங்கி மேலாளர்) என்று கூட போட்டுக்கொண்டு மதத்தீவிரவாதத்தை வலியுறுத்தி எழுதுகின்றனர்.. இவர்களே! இப்படி என்றால் இவர்களிடம் பயிலும் மாணவர்கள் எந்த லடசணத்தில் இருப்பார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம், இவர்கள் பள்ளியில் தீவிரவாதத்தை கற்றுக்கொடுக்கிறார்களா? அல்லது ஒழுங்கீனத்தை கற்றுத் தந்து மாணவர்களை கெடுக்கிறார்களா? அத்தனையும் மிகப்பெரிய குற்றம். அரசு ஊழியர்கள் இணையத்தில் பங்குபெறவேக் கூடாது, அவர் ஒரு பொது ஊழியர். இந்த எழவே தெரியவில்லை. (அவ்வளவு தைரியசாலியாம்) இதையெல்லாம் கூட அப்படியே ஸ்கிரின் ஷாட் எடுத்து அரசுக்கு தொழில் சார்ந்த நிறுவனங்களுக்கு அனுப்பிக்கொண்டே இருக்கலாம். இவர்களெல்லாம் எந்தளவில் நேர்மையாக தொழிலை கவனிக்கிறார்கள் நாட்டுக்கு எவ்வளுவு தீங்கு விளைவிக்கிறார்கள் என்பதற்கு இதுவே அப்பட்டமான சாட்சி. தமிழை காப்பாற்றும் அவதாரமாகவே காட்டிக்கொண்டு சாக்கடையாக எழுதும் எழுத்தை அவர்கள் குடும்பமே விரும்புமோ என்னவோ? 

இப்படி எல்லாம் எழுதுவதற்கு எதற்காக? இங்கு மக்கள் பார்க்கவேண்டும் ஒரு மிகப்பெரிய கொந்தளிப்பு வரவேண்டும்....கலவரம் வரவேண்டும் என்ற எண்ணத்தை தவிர வேறு என்ன நல்ல விஷயம் இருக்கிறது. 

இணையத்தில் வெளியிடுவது சுவரொட்டி, துண்டு பிரசுரம் போன்றது...அது வெட்ட வெளி... அவதூறாக இந்திய மக்களை பற்றியும், அங்கு இருக்கும் அரசியல் தலைவர்களை பற்றியும், அவர் சாகவேண்டும், இவர் சாக வேண்டும், ஏன் உயிரோடு இருக்கிறாய்? நீ ஏன் இன்னும் உயிருடன் இருக்கிறாய்...உயிர் ஒரு கேடா...? என்றெல்லாம் எழுதி சுவரில் அந்த நாட்டு சுவர்களில் எல்லாம் போஸ்டர் அடித்து ஒட்டினால்..அந்தந்த கட்சியில் இருக்கும் பல இலட்சம் தீவிர தொண்டர்கள் சும்மா இருப்பார்களா?...இல்லை காவல் துறை தான் சும்மா நின்று கை கட்டி வேடிக்கை பார்க்குமா? நீதித்துறைதான் சும்மா விட்டு விடுமா...? ஏப்பா இன்னும் கொஞ்சம் நல்லா எழுது? நாடு நல்லா இருக்கும் என்று தட்டிக்கொடுக்குமா?

பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு கவலைப்படும் பெற்றோர்கள் இதையெல்லாம் பார்த்தால் அவர்களுக்கே மிகப்பெரிய கலவரமும், கலக்கமும் தான் ஏற்படுகிறது. மகளே, மகனே நீ எந்த இடத்திலும் மாட்டிக்கொள்ளாதே நாடு இருக்கும் நிலைமையை பார்த்தால் மிகப்பயங்கரமாக போய்க்கொண்டிருக்கிறது. பெரிய பொறுப்பில் இருப்பவர்களுக்கே இந்த நிலைமை, பாதுகாப்பில்லை நாமெல்லாம் எம்மாத்திரம்? என்ற அச்சம் தான் தோன்றுமே தவிர? வேறெதுவுமே தோன்றாது. பணம் படைத்தவர்களுக்கு கவலை இல்லை...அவர்களுக்குத்தான் அதை வைத்து என்ன செய்வது என்று தெரியாத அளவிற்கு இருக்கிறதே....? அது தான் இந்த தகாத செயலையும் செய்து கொண்டிருக்கிறது. எந்த பெற்றோராவது இப்படி எழுதுவதை ஊக்குவிப்பார்களா?

இவர்களிடம் துளிகூட மனிதநேயமே இல்லாத பொழுது பிற நாட்டு அரசியலையும்  அங்கே மீறப்படும் மனிதவுரிமை மீறலைப் பற்றியும் இவர்கள் வாய்கிழிய கத்துவார்கள்.  இதை நிர்வகிப்பவர்களும் மிக மிகச்சிறியவர்கள், சமூதாயத்தோடு ஒன்றியவர்களும் இல்லை, என்பதாலும் ஒரு தீவிரக்கொள்கைக்கு ஆட்பட்டிருப்பதாலும் அந்த கருத்து எவ்வளவு வன்மையாக இருப்பினும் அதை அவர்கள் அறியாமலேயை அதன் பக்கம் சாயும் மனப்போக்கு கொண்டவர்களாகவும் அதனால் சமூதாயம் எக்கேடு கெட்டால் என்ன ? என்ற  மனப்போக்கும் இயற்கையாகவே வந்து விடுகிறது. அவர்களும் அப்படி எழுதுவதை அந்த எழுத்தை அவர்கள் எழுதாவிட்டாலும்  (இன்னொரு பெயரில் நுழைந்து கொச்சையாக எழுதுவார்கள்....தளமே அவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் பொழுது....இதெல்லாம் சர்வசாதாரணம்) பிறர் எழுதுவதை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மைக்கு வந்து விடுகிறார்கள். அதாவது நம்மாள் எழுதியிருக்கிறர்...என்ற சார்புக்கொள்கையுடன் அணுகுகின்றனர்...அநாகரிகமாக யார் எழுதினால் என்ன? அதில் என்ன? நம்மாள், சித்தாள், பெரியாள்.......கொத்தனார்......

இந்த மாதிரி எழுத்துக்களை .எதிர்ப்பவர்களுக்கு  தண்டனை கூட வைத்திருக்கிறார்கள்....இது என்ன? நீதிமன்றமா? அந்த ஐயாக்கள் என்ன நீதிபதிகளா? இந்த அதிகாரங்கள் எல்லாம் எவர்? இவர்களுக்கு வழங்கினார்களோ  தெரியவில்லை...?  (இந்த விஷயங்களே இவர்களுக்கு தெரியவில்லை)..அதற்கு இவர்கள் தகுதியானவர்கள் தானா? என்பதும் தெரியவில்லை? இவற்றை எல்லாம் உணராமல் எப்படி...சர்வாதிகார மனப்போக்குடன் எப்படி இந்த தளங்களை இணைப்பு பாலமாக கட்டி மக்கள் போக்குவரத்துக்கு திறந்து விடமுடியும் என்பதும் தெரியவில்லை.  அப்புறம் எப்படி ஊர்ல உள்ள மனிதவுரிமை மீறல்களை எல்லாம் கேள்வி கேட்க முடியும்...?

இதில் தெரியாமல் பங்கு பெறுபவர்களையும் இவர்களின் தீவிரவாத கொள்கைக்கு ஆதரவாக மாற்ற எண்ணம் கொண்டுள்ளனர்.

இதில் பங்குபெறுபவர்களின் மின்னஞ்சல் எல்லாம் அவர்களால் பிறருக்கு களவுத்தனமாக திருடித் தெரிவிக்கப்பட்டு...அந்த குழுவில் இடம்பெற்றிருப்பவர்களே ஒன்றிணைந்து அந்த தனிநபருக்கு தொல்லைகளுடன் கூடிய தொலைபேசித் தாக்குதலையும், மிரட்டல்களையும் கொடுக்கத் தயாராகிவிடுவார்கள்.

இம்மாதிரி தளங்களில்  தமிழக மக்கள் பங்கு பெறாமல் இருப்பதே நல்லது. அப்படியும் பங்கு பெற்றால் எச்சரிக்கையுடன் உள்நுழைந்து எந்த தகவலையும் பெயர் உட்பட எதையும் வெளியிடாமல் இருப்பது மிக மிக நல்லது. தொலைபேசி எண்கள் மற்றும் இதரத் தகவல்களை இவர்கள் மின்னஞ்சல் முகவரி மூலம் திருட முயற்சிப்பதாக தெரிகிறது. தனிமடல் மூலமும் பெற்று விடுவார்கள்.

இவர்களுக்குள் கூட்டிணைவு இருப்பதனையும் இந்த தளங்களை நிர்வகிப்பவர்களே பல இடங்களில் வெளிப்படுத்திக்கொள்வார்கள்...அதை உண்ணிப்பாக கவனித்து அந்த தகவல்களை அப்படியே சேமித்து வைத்தும், ஸ்கிரின் ஷாட் எடுத்தும் இந்திய அரசுக்கு தெரிவிக்கலாம்.


நமக்கு பிடிக்கிறதோ இல்லையோ ஒரு நாட்டின் அதிபரை நாகரிகமாக விளிப்பது தான் அறிவுடமை...அதற்கு பின் விமர்சனங்களை நாகரிகமாக வைக்கலாம்.....அந்தளவுக்கு பொறுமையில்லை என்றால் எதற்கு எழுதவேண்டும்....? அதற்கு எதற்கு ஒரு பொது தளம்...என்ற இணைப்பு...இதையெல்லாம்  கற்று கொடுக்கவா தளங்கள்...

.இவைகள் மக்களை சீரழிக்கும் அமைப்புகள். இளைஞர்களை பாழாக்கும் தளங்கள் இதை இந்திய அளவில் இவைகள் தணிக்கை செய்யப்பட்டு தடைசெய்யலாம். இவைகள் அந்த தள தனிநபர்களின், குழுக்களின் சார்புக்கொள்கைகளால், அந்த கொள்கையை வலியுறுத்தி இயங்குகின்றன. ஆகையால் இதையெல்லாம் முன்பே நாம் அறிந்துகொள்ள முடியாது. இந்த மாதிரி தளங்களை பலநாடுகள் தடைசெய்துள்ளன.

செருப்பால் அடிப்பேன்....துடைப்பக்கட்டையால் அடிப்பேன், முதலமைச்சர் நாயே!, பிரதமர் நாயே! அதிபர் நாயே! எம்.எல்.ஏ, எம்.பி நாய்களே, நரிகளே! தமிழ்நாட்டு நாய்களே! இந்திய நாய்களே! என்று  ஒருவருக்கு,  ஒரு தனிப்பட்ட குழுவிற்க்கு, தீவிரவாத இயக்கங்களுக்கு பிடிக்காதவரை, அரசியல் தலைவர்களை, நாட்டின் பிரதமர்களை, அமைச்சர்களை, மதிக்கத்தக்க எவரொருவரைப் பற்றியும் தரங்கெட்ட முறையில் எழுதினால் எதிரே இருப்பவர் அவருக்கு பிடிக்காத ஒருவரை பற்றிஅந்த தீவிரவாத தலைவரை பற்றி இதே மாதிரி ''செருப்பால் அடிப்பேன்'' என்று எழுதப்போகிறார்.....அப்படி எழுத தமிழகத்தை சார்ந்த சாமான்யர்கள் யாரும் பெரும்பாலும் முயற்சிப்பதில்லை...ஆனால் இதெல்லாம் சரி என்ற தவறான எண்ணத்திற்கு .அவர்களும், இளைய சமுதாயத்தினரும் மாறுவதற்கு நிச்சயம் இது வழிவகுக்குகிறது. 

இதில் எல்லாம் என்ன பெரிய கருத்து எழுதிவிட்டதாக மார் தட்டிக்கொள்ள முடியும்? எல்லோருக்கும் தான் பின்பற்றாளர்கள் இருப்பார்கள்...இந்த கொள்கையை, தலைவரை பின்பற்றுவர்கள் மட்டும் உள்ளே நுழைய வேண்டும் என்று போர்டா எழுதிப்போடப்பட்டிருக்கிறது. அல்லது செருப்பால் அடிக்கும் தளம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறதா? அப்படியிருந்தால் எவராவது அல்லது  பெண்கள்  உள்நுழைவார்களா? இதெல்லாம் தெரியாமல் நுழைந்துவிடுவது தான். அப்படியே தெரியாமல் உழைப்பையும் கொட்டிவிடுவார்கள்...சில தளங்கள் தமிழ் என்ற பெயரிலும் இன்னும் சில ஆபாச தளங்களுடன்  (இரண்டும் ஒரே ஐ.பி முகவரியில் இருக்கும்...காமலோகம்-தமிழ்மன்றம்..... ) தொடர்பு வைத்திருக்கிறது.

(இதையெல்லாம் அந்த தளத்தின் URL முகவரியைக்கொடுத்து இதன் ஐ.பி முகவரி எண்களை அறிந்து கொள்ளலாம்........எங்கேயிருந்து இயங்குகிறது எனபதனையும் தெரிந்து கொள்ளலாம்.. இங்கு சென்று அந்த தளத்தின் (யு ஆர் எல்) முகவரிகளை கொடுத்து...அந்த தளத்தின் ஐ.பி முகவரிகளை எண்களை தெரிந்து வைத்து கொள்ளலாம்...http://www.ip-adress.com/whois/)

இப்படியெல்லாம் எழுதுவதற்கு என்று ஒரு பொது தளம்...தேவையா? ஒரு அரசு அது சார்ந்த சட்டத்திட்டங்களை, இறையாண்மைகளை மதித்து நடக்காத தளம் என்று முன்பே பொதுவில் எச்சரிக்கை குறியீட்டுடன் தெரிவித்து விட்டால் யாரும் இம்மாதிரி தளங்களை நெருங்க மாட்டார்கள்.......இதை அரசும் கவனத்தில் எடுத்து கொள்ளவேண்டும். இம்மாதிரி தளங்களை முற்றிலும் தடை செய்யவேண்டும். இந்த மாதிரி தளங்களால் தீவிரவாதங்கள் தான் வளருகிறது. நாட்டின்  பாதுகாப்பு......?

                                                       
இதில் நிர்வாக அமைப்பை சார்ந்தவர்கள் பலரும் பல தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு கொண்டுள்ளனர். ஆகையால் இதில் அவர்களுக்கு வழிகாட்ட முடியாது. இதில பங்கு பெறாமல் நாம் தவிர்த்து கொள்ளலாம், எந்த அறிஞர் பெருமக்களும், ஆசிரியர் பெருமக்களும், முக்கியமாக பெண்கள் இந்த தமிழ் என்ற அடைமொழியை நம்பிவிடாமல் இருப்பதே நல்லது. இம்மாதிரி இணையத் தளத்தில் பங்கு பெறாமல் இருப்பதே நல்லது.

இப்போது எல்லோருக்கும் இது ஒரு சாக்காக போய்விட்டது ஈழம்...ஈழம்...ஈழம்....இதை கையிலெடுத்தால் பச்சை பச்சையாக எழுதலாம். அப்படி எழுதினால் உடனே ஈழத்தை தூக்கி கையில் கொடுத்து விடுவார்கள் என்ற மனப்பான்மையில் எழுதும் இம்மாதிரி தளங்களை என்னவென்று சொல்ல.....மாற்றானை மண்டியிடவைக்கும் எழுத்துக்களாலேயே ஒருவரை கவரமுடியும், ஒரு சமூகத்தை மாற்ற முடியும். அருவருக்கத்தக்க எழுத்துக்களாலும், அய்ய இப்படியுமா? என்று எழுதும் இம்மாதிரி தளங்கள் ''தமிழ்''  ''தமிழர்கள் '' என்ற போர்வையில் தமிழர்களை தவறான பாதையில் திசை திருப்ப முயல்வது வெட்கக்கேடானது.

இந்த தளங்கள்  தீவிரவாதத்துக்கு ஆள் சேர்க்கும் பணியினை செய்கிறதா? அல்லது இப்படியெல்லாம் செய்தால் கண்டிப்பாக ஈழம் கிடைத்துவிடும் என்ற கனவா? எங்கே எத்தனை பேர் இந்த எழுத்துக்களால் கவரப்பட்டு பின்னாடியே வந்து விட்டார்கள்.  எழுத்தே நம்மை பார்த்து காரி உமிழும் அளவுக்கு எழுதும் அநாகரிக போக்கை இந்த தளங்கள் கைவாடாது.

இப்படிப்பட்ட பொது தளங்களில் பங்கெடுக்காமல் இருப்பதே நல்லது...உழைப்பையும் வீணடிக்காமல் சொந்த வலைத்தளங்களிலேயே நாகரிகமாக எழுதலாம்....இந்தமாதிரி பொது தளங்களினால் பாதிக்கப்பட்டால், கருத்துக்கள் முறையற்ற வகையில், சட்டத்திற்கு விரோதமாக வெளியிட்டால் அந்தந்த நாட்டு இணையக் குற்றப்பிரிவு அல்லது இந்திய சைபர் குற்றப்பிரிவுக்கு அந்த தளங்களை தடை செய்ய புகார் அளிக்கவும் தயங்கக்கூடாது. 

ஒன்றுக்கு மேற்பட்டவர்களை ஒன்று சேர்த்து  நடத்தினாலே அது பொதுவாகிவிடுகிறது....ஒருவர் சொந்தம் கொண்டாட முடியாது....அதற்கான கட்டுப்பாடுகளும் பொதுவானதாக எவரொருவரையும் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்படாததாக அனைத்து நாட்டினருக்கும் உகந்ததாகத்தான் இருக்கவேண்டும் . அப்படியில்லாதவைகளை தைரியமாக அரசின் பார்வைக்கு கொண்டு செல்லலாம். வலைப்பதிவிலேயே நாகரிகமாக பலர் எழுதும்பொழுது இந்த பொது தளங்கள் எதற்கு? என்றே தெரியவில்லை.

இப்படியே விட்டதினால், இது எல்லைமீறிப்போய் இப்போது என்ன ஆகிவிட்டது என்றால் அவர்களுக்கு எதிராக யாராவது  கருத்து தெரிவித்து விட்டால் பொறுக்க மாட்டாமல் மின்னஞ்சல்களின் மூலம்  செல்பேசியின்  எண்ணை எப்படியாவது கண்டுபிடித்து நேரிடையாக கொலை மிரட்டல் செய்வது எதிர்ப்பு தெரிவித்தவரின் குடும்ப பெண்களிடம்  கொலை மிரட்டல் விடுவது என்பது  தொடர்கிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பல பேர். இதனால் பயந்த பலர் மனவுளைச்சலால் தற்கொலையும் புரிந்து கொள்வதாக செயதிகள் வருகின்றன. இதை இந்தியத் தலைமை நீதிபதியும் இதுபற்றி சுட்டிக்காட்டியுள்ளார்.

இம்மாதிரி தமிழ் என்ற அடைமொழியுடன்  இயங்கும் பொதுத்தளமாக இயங்கும் தீவிரவாத தளங்களை இளையத்தலை முறையினர் நெருங்காமல் இருந்தாலே அதிக பாதுகாப்பு. இம்மாதிரி தளங்களை அரசிடம் முறையிட்டு தடை செய்ய மக்களும் விழிப்புணர்வுடன் செயல்படவேண்டும். இதை முறையிடத் தயங்க கூடாது. இதனால் இனிவரும் நபர்களும் சந்ததியினரும் எச்சரிக்கையுடன் இருக்க வழிவகுக்கும். யார் கண்டது உறவுகளில் பலபேர் இதுபோல் இணையத்தளங்களில் மாட்டிக்கொண்டு அவதிப்படலாம்.

இதை நிர்வகிப்பவர்கள் அனைவரும் வெளிநாட்டினர், (தமிழகத்தில் இருந்து ஒருவரும் இது மாதிரி இணையத்தளங்களை துவங்கவில்லை போலும், துவங்கினால் இது மாதிரி தாக்கமுடியாது என்ற காரணமும் இருக்கலாம்) இதை வெளிநாட்டினர் அங்கிருந்து கொண்டு  நிர்வகிப்பதால் எதை வேண்டுமென்றாலும் எழுதலாம் என்ற மனப்பான்மையுடனும்...நம்மை யார்? கண்டுபிடிக்க போகிறார்கள் என்ற நினைப்புடனே இதை அவர்கள் அவர்களின் சுயபாதுகாப்புடன், சுயநலத்துடன் இயக்க ஆரம்பித்துள்ளனர்.

சில விதிகள் என்று ஒப்புக்குச்சப்பாக அந்த தளங்களில் வைத்திருப்பது  வெறும் கண்துடைப்புக்காத் அவர்களுக்கு சாதாகமாக வைக்கப்பட்டுரக்கும். அந்த விதிகளை அந்த தளத்தை நிர்வகிப்பவர்களே  பின்பற்றுவதில்லை. அவர்களும் பக்கசார்புடன் எழுதுபவர்கள் தானே. அந்த எண்ணத்தில் துவக்கப்பட்டது தான் இந்த தளங்கள்...ஏதாவது நடுநிலை அமைப்பா? இவர்களை தேர்ந்தெடுத்து அமர்த்துகிறது. அது மாதிரி எதுவும் இல்லை....இவர்கள் பார்வையில் எது  எது எல்லாம் சரி எனப்படுகிறதோஅதையெல்லாம் ஏற்றுக்கொள்ள வலியுறுத்துவார்கள். 

உழைப்பை திருட அவர்கள்  சில சாதுர்யங்களை வேண்டுமானால் பயன்படுத்தலாம். (முகவரிகளை அறிந்து கொள்ள தனிமடல் என்று தொடர்பு என்று ஆசை வார்த்தை காட்டுவார்கள்...வாயார புகழ்வார்கள்..எதையும் நம்பிவிடாமல்....)ஆகையால் அதிக எச்சரிக்கை மனப்பான்மையுடனே இந்த தளங்களை அணுகவேண்டும்.

அதாவது அவர்கள் பாதுகாப்பு ஏற்கனவே உறுதி (வெளிநாடு) செய்யப்பட்டிருக்கிறது  (அப்படி ஒரு நினைப்புடன்). இதில் தெரியாமல் அப்பாவித்தனமாக பங்குப் பெறுபவர்களின் பாதுகாப்பு அந்தந்த நிலப்பரப்பையும், அதன் சட்டத்திட்டங்களுக்கு ஏற்ப இருப்பதால் தெரியாமல் பங்கு பெறுபவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருக்கிறது. 

இந்த அறியாமையை அவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு சகட்டுமேனிக்கு எவரொருவரையும் (அவர்களுக்கு பிடிக்காதவர்களை) வெளுத்து வாங்குகின்றனர். அதாவது இந்தியாவின் மாநில முதலமைச்சர்கள், இந்தியாவின் பிரதமர், குடியரசுத்தலைவர் என அனைத்து நாட்டின், இந்திய நாட்டின் மதிப்புமிக்கவர்களை தாக்குதல் எண்ணத்துடன் கொலைகாரர்கள் என பெயரிட்டு எழுதுகின்றனர். தமிழக மக்களை கொச்சைப்படுத்தியும் எழுதுவது வாடிக்கையாகி விட்டது.

இதற்கு இப்படி வைத்துக்கொள்ளலாம் பிடிக்காதவர்களை தாக்கும் பொது மன்றம், தமிழ் தளம்...வருகிறவர்கள் எல்லாம் வந்து ஆளாளுக்கு எவ்வளவு முடியுமோ? அவ்வளவு பச்சை பச்சையாக தமிழில் எழுதினால் போதுமானது...அதாவது ஆபாசத்தளங்கள் போல.....அப்படி எழுதினால் குடும்பம் சீறும் சிறப்புமாக இருக்கும். அனைவரும் நம்மளை தெய்வமாக மதித்து பின்னாடியே வந்து விடுவார்கள் என்பது எல்லாம் என்ன மாதிரியான மனப்பான்மை....எனபது தெரியவில்லை....

இம்மாதிரி தீவிரவாதிகளின் அமைப்பாக செயல்படும் பொது தளங்களை உடனே கண்டறிந்து அரசும் உடனடியாக தடைசெய்யவேண்டும்.  இதில் மாட்டிக்கொண்டிருப்பவர்கள்....அனைவரும் அப்பாவி இளைஞர்கள்....இந்த பொது தமிழ் தளங்களின் நிர்வாகிகளும் இந்த தீவிரவாத அமைப்பில் உள்ளவர்களே....இதனால் தவறுதலான வழிகாட்டுதலுக்கு மக்கள் தள்ளப்படுவார்கள் எனபது நிதர்சனம். இதுமாதிரி எழுதும் தளங்களை கண்டறிந்தால் உடனடியாக அரசிடம் புகார் அளியுங்கள். அதை சட்டம் வலியுறுத்துகிறது.

மாட்டிக்கொள்ளாதீர்கள்...சட்டமே மக்களின் பாதுகாப்பு.... நாடு வகுத்துள்ள சட்டதிட்டத்தின்படி எழுதினாலே போதுமானது. 
(இம்மாதிரி தள்ங்கள் அது மாதிரி ஒழுக்கமாக எழுத விடாது.(இதுமாதிரி சட்டவிரோதமாக செயல்படும் பொது தமிழ் தளங்களை அரசும் கண்காணித்து கொண்டுதான் வருகிறது...சட்டவிரோதம் என்று தெரிந்தபிறகு அதில் ஈடுபடாமல் தவிர்ப்பது  தான் நாட்டின் பாதுகாப்பிற்கும், நமது பாதுகாப்பிற்கும் நல்லது...ஏதாவது அசாம்பாவிதம் என்றால் அனைவருமே விசாரணைக்குள் வருவது நிச்சயம்...அது வெளியில் தெரியாது)

(இந்த தளங்களின் பட்டியலை அவ்வப்பொழுது பல தளங்களில் வெளியிடப்படுகிறது...இங்கும் .......தகவல் கிடைத்தவுடன்...)

இந்திய அளவில் புகார் அளிக்கும்....மின்னஞ்சல் முகவரிகள்.....இந்திய சைபர் புலனாய்வுப் பிரிவு....

(இவ்வளவு கஷடப்படவேண்டுமா? அதற்கு வலைத்தளத்திலேயே...நமது முழு சுதந்திரத்துடன், அளவுடன், நாகரிகமாக எழுதலாம்.) இதுவும் சரியான வழிமுறைதான்.... அங்கு (பொது தளங்களில்) பங்குபெற்றுக்கொண்டிருக்கும் பொழுதே...(எப்படிபட்டவர்கள் எந்நெந்த நாட்டில் இருக்கிறார்கள் எனத் தெரிந்து கொள்ளவேண்டாமா? என்பவர்கள்) இங்கும் வலைப்பதிவில் ஒரு நகல் எழுதி வைத்துக்கொள்ளலாம் அந்த தளம் சரியான சட்டதிட்டங்களை கடைப்பிடிக்கவில்லை என்றால் வலைப்பதிவில் பதிவிட்டுக்கொள்ளலாம்.)
...........தகவலுக்காக...