Pages

Monday, 30 May, 2011

மாட்டினாரய்யா ஒரு அப்பாவி!

 
 
 
 மரியம் பிச்சை விபத்து : சிக்கியது லாரி  

 
திருச்சி : தமிழக சுற்றுச்சூழல் அமைச்சர் மரியம் பிச்சை 
கடந்த 23ம் தேதியன்றுசாலை விபத்தில் இறந்தார் 
அவரது கார் கன்டெய்னர் லாரியில் மோதி 
விபத்துக்குள்ளானது. மரியம்பிச்சை மரணம் 
குறித்து சிபிசிஐடி விசாரணை  நடத்தபடும் என்று 
ஜெயலலிதா தெரிவித்திருந்தார். 
 
சுங்க சாவடியில் பதிவான
வீடியோவை வைத்து கடந்த சில நாட்களாக தேடிய 
தீவிர தேடுதல் வேட்டையில் அந்த லாரி ஆந்திர 
மாநிலத்தை சேர்ந்தது என்று கிடைத்த தகவலையடுத்து 
லாரியை போலீசார் தனிப்படை 
அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் லாரி 
ஆந்திர மாநிலத்தில் 
சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
தனிப்படை போலீசார் 
லாரியை கொண்டு வர கொல்கத்தா
 விரைந்துள்ளனர் சி.பி.சி.ஐ.டி போலிசார். 
 
மேலும் அந்த லாரி தூத்துகுடியிலிருந்து ஜிப்சம் 
மூட்டைகளை ஏற்றி கொண்டு 
விஜயவாடா நோக்கி சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
லாரி ஓட்டுனரையும், உரிமையாளரையும் விசாரணைக்காக 
சென்னை கொண்டுவர முடிவு செய்துள்ளது சி.பி.சி.ஐ.டி.
 
....தினகரன் 30.05.2011 

*******************

பொது ஜனம்; இது என்னய்யா? முன்னாடி
 அக்கடான்னு 
போய்க்கிட்டிருந்த கன்டெய்னர்
லாரியில போய் மந்திரி மரியம் கார் 
கண்ணுமண்ணு தெரியாம 
ஒட்டியதினால
முட்டிகிட்டு விபத்து ஏற்பட்டா
லாரி ஒட்டுனரா பொறுப்பு!
 
பொது ஜனம்;  பாவம்பா! டிரைவரோட,
 பொண்டாட்டி 
பிள்ளைங்களை 
நடுத்தெருவுல நிக்கவைச்சுட்டாங்களா! 
காக்கிகள் வேறு, போட்டுத் தாக்கு, 
தாக்குன்னு தாக்கி
 விசுவாசத்தை காட்டி இருப்பாங்களே! 

பொது ஜனம்; இருப்பா பின்னே! 
சட்டம் ஒழுங்கை
 காப்பாத்த வேணாவா?

பொது ஜனம்; ஓ..... 
இது தான் சட்டம் ஒழுங்கா! 
இப்ப நல்லா தெரிஞ்சுகிட்டேன்!

பொது ஜனம்; எதிரே வந்த
 டிப்பர் லாரியில மோதாம 
தப்பிக்கறதுக்காகத்தான் 
வண்டியை லெப்டுல ஒடிச்சு 
இந்த கண்டெயன்ர் லாரியில
மோதிக்கிட்டாங்களாம். 
விசாரணை அறிக்கையை
பேப்பர்ல போட்டிருந்தது.

பொது ஜனம்; அப்ப இந்த 
லாரியில முட்டிகிடலனா
எதிரே வந்த டிப்பர் லாரியில 
மோதி கார்ல வந்த 
மொத்த பேரும், கார் 
டிரைவரோட சேர்ந்து எல்லோரும்
 மவுத்தாயிருக்கணும். (மரணம்)

பொது ஜனம்; லாரியால
 மரியத்தை தவிர மத்தவங்க எஸ்கேப்! 
ஆனா மரியம் மட்டும் மாட்டிகிட்டு
 மவுத்தாயிட்டாரு! (மரணம்)

பொது ஜனம்; ஆனா 
லாரிக்காரர் நின்னு இருக்கணும்ல....
அவரு ஏன் நிக்காம போய்ட்டாரு!

பொது ஜனம்; இங்க 
நேருக்கு நேர் மோதினாவே 
விபத்து ஏற்படுத்தினவங்க
 யாரும் ஸ்பாட்ல நிக்கறது 
இல்லை. எல்லோருமே ஹிட் அன் ரன்
தான். நின்னா சுத்தி இருக்கிற
 மக்கள் அடிச்சு கொன்னுற
மாட்டாங்களா? 
 
பொது ஜனம்; ஆனா  இந்த 
மரியம் கார் பின்னாடி 
இல்லை வந்து
முட்டிகிச்சு, விபத்து 
ஏற்படுத்தினது மரியம் தான்.
 இதுக்காக லாரி டிரைவர் 
எப்படி தைரியமா நிப்பாரு!
அதுவும் வெளி மாநிலத்துக்காரரு! 
எதுக்கு நிக்கணும்? 
 
பொது ஜனம்; அவரு (லாரி டிரைவரு)
  என்ன அதிமுக
பொதுச் செயலாளரா? தகிரியமா எதை 
வேணுன்னா செஞ்சிட்டு
வெக்கமில்லாம நிக்கறதுக்கு!

பொது ஜனம்; மரியம் கார்மேல 
 தான் தப்பு! 
அவரு 
வந்த கார் டிரைவரைத்தான்
உள்ளே பிடிச்சு போடனும். 

பொது ஜனம்; இதுக்கு போயா 
சிபிசிஐடி! விசாரணை! 
அம்மாம்...பெரிய ஆளா அவரு!

பொது ஜனம்; நாங்க பாரு 
எவ்வளவு ஷார்ப்பா இருக்கோம்!
என்று காட்டவேணாவா?

பொது ஜனம்; அதுக்காக 
அப்பாவியை புடிச்சிகிட்டா 
வருவே! உங்க 
அழிச்சாட்டியத்துக்கு 
அளவே இல்லை.


பொது ஜனம்; சரி சரி 
மரியத்துக்கு மட்டும் தானா?
 எல்லோருக்கும் சிபிசிஐடியா?

பொது ஜனம்; அப்படின்னா 
நிறைய கேஸ் இருக்குதே!
எல்லாத்துக்கும் சிபிசிஐடி விசாரணை
 வைக்கணுமே! தினம் 
ஹிட் அன் ரன் கேஸ் மாதிரியான 
விபத்து எக்கச்சக்கமா நடந்துகிட்டுதான்
இருக்கு!

பொது ஜனம்; ஆரம்பத்திலேயிருந்தே
 இதுங்க போல 
காண்பிச்சுகிட்டேதான் இருக்குதுங்க! 
 
பொது ஜனம்; ஆமாம மெரினாவில 
காணாம போன சிறுமியைக்கூட 
பெத்தவங்களே
 கண்டுபிடிச்சாட்டாங்க
இவங்க கண்டுபிடிச்சா மாதிரி இவங்க 
பேரை போட்டுகிட்டு 
மாறி மாறி போலிஸ்காரங்க
 கூட்டிகிட்டுபோய்
முத்தம் கொடுத்துகிட்டு இருந்தாங்க!
 
பொது ஜனம்; போல காட்டறதுன்னா? என்ன?
 
பொது ஜனம்; அதான் நங்கு காட்டறது! 
சின்னப்புள்ளைங்க மிட்டாய்
 வைச்சுக் காட்டுமே! 
 

பொது ஜனம்; ஆமாம்! அந்த 
குழந்தையின் பெற்றோரும் 
தொலைக்காட்சி பேட்டியில சொன்னாங்க!
 "குழந்தையை 
தூக்கி சென்றவரே 
 போன் பண்ணி குழந்தை ஜி.எச்.சில
 இருக்கிறதா போன் 
பண்ணி தெரிவிச்சிட்டார்" என்று
சென்னாங்க!  இவங்க அங்கே
போறதுக்குள்ளே
போலிஸ் தூக்கிட்டு போய் போல
காமிச்சிகிட்டு இருந்தது!
 
பொது ஜனம்; ஓ... போனை டேப் 
பண்ணி ஜி.எச்சுக்கு போயிருப்பாங்க! 

பொது ஜனம்; அப்புறம் ஏன்?
 அவர் மறைந்திருந்து 
ஜி.எச் இல (மருத்துவமனையில) 
விட வேண்டும்?
 
 
பொது ஜனம்; போலீஸ் பன்ற 
அலப்பரையை
 பார்த்து தான். 
மாட்டினா, அவகாசம் கொடுக்காம
கும்மாங் குத்து குத்தினாலும் 
குத்தும் இந்த காவல் துறை.  
கடத்துனேன்னு சொல்லு என்று 
மிரட்டினாலும் மிரட்டும் 
அப்பத்தானே மக்கள் கிட்ட போல 
காட்ட முடியும்.

பொது ஜனம்; மக்களைப் பத்தி
 எப்பவுமே இதுங்க
மட்டமாவே எடை போடும். ஒன்னும்
தெரியாதுன்னு.....

தனியார் பள்ளிகளுக்கு வைச்சிட்டாங்கய்யா ஆப்பு!

தனியார் பள்ளிகளைக் கட்டுப்படுத்த கடுமையான சட்டம்: மத்திய அரசு

புது தில்லி, மே 29: அதிக கட்டணம் வசூலிப்பது, மாணவர்களின் வீட்டுக்கு டீ.சி.யை தபாலில் அனுப்புவது போன்ற அராஜகத்தில் ஈடுபடும் தனியார் பள்ளிகளைக் கட்டுப்படுத்த கடுமையான சட்டத்தைக் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.தனியார் பள்ளிகளில் மிக அதிகமாக கல்விக் கட்டணம் வசூலிப்பது இப்போது நாடு முழுவதும் பொதுமக்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 


குழந்தைகளைப் பள்ளிகளில் சேர்த்து விட்டு கட்டணம் செலுத்த பெற்றோர்கள் படாதபாடுபட்டு வருகிறார்கள். இது தவிர பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் சரியான ஊதியம் தருவதில்லை.


இந்தப் பிரச்னையை மத்திய அரசு தீவிரமாக கவனத்தில் கொண்டுள்ளது.தொழில்நுட்பக் கல்வி, மருத்துவக் கல்வி, பல்கலைக்கழகங்கள் போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் நியாயமற்ற நடவடிக்கைகளைத் தடுக்கும் மசோதா ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இப்போது தனியார் பள்ளிகள் விஷயத்திலும் இதேபோன்ற சட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.மத்திய கல்வி ஆலோசனை வாரியத்தின் கூட்டம் தில்லியில் அடுத்த மாதம் நடைபெறுகிறது. இதில் இந்த சட்டம் குறித்து விவாதிக்கப்படுமென்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கூறியுள்ளது.


"பள்ளி மற்றும் இடைநிலைக் கல்வி அமைப்புகளில் நியாயமற்ற நடவடிக்கைகள் தடை மசோதா 2011' என்ற பெயரில் இந்த மசோதா நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது. இதன்படி தனியார் பள்ளிகள், மாணவர்கள் சேர்க்கையின் போது அளிக்கும் விளக்கக் குறிப்பிலேயே தங்கள் பள்ளியைப் பற்றிய முழு விவரம், பாடங்கள், பாடத்திட்டங்கள், பள்ளி விதிமுறைகள் என மாணவர்களின் பெற்றோருக்கு அனைத்து விதமான தகவல்களையும் அளிக்க வேண்டும்.

பள்ளியின் இணையதளத்திலும் இந்த விவரங்களை வெளியிட வேண்டும். உரிய ரசீது தராமல் மாணவர்களிடம் இருந்து கட்டணம் வசூலிப்பதை இந்த மசோதா முழுமையாகத் தடை செய்யும். விளம்பரங்கள் மூலம் பள்ளி பற்றி மிகையாக பிரசாரம் செய்வது, போதுமான திறமையற்ற ஆசிரியர்களை வைத்து பாடம் நடத்துவது போன்றவற்றையும் இந்த மசோதா தடை செய்கிறது.

விதிகளை மீறும் பள்ளிகளுக்கு அபராதம் விதிக்கவும், தேவைப்பட்டால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கவும் முடியும். 

தனியார் பள்ளிகள் அதிக அளவில் நன்கொடை வசூலிக்கின்றன. கட்டணம் என்ற பெயரில் உரிய ரசீது ஏதும் தராமல் பணம் வாங்குகின்றனர். அவர்கள் கேட்கும் கட்டணத்தை அளிக்க சிறிது தாமதமானாலும் மாணவர்களை வீட்டுக்கு அனுப்புவது, டீ.சி.யை கொடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றன. 

மேலும் அரசுத் தேர்வில் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக சில மாணவர்களை தேர்வு எழுத விடாமல் செய்வது, அவர்களை வேறு பள்ளியில் சேர்க்குமாறு பெற்றோர்களிடம் வலியுறுத்துவது போன்ற நடவடிக்கைகளிலும் தனியார் பள்ளிகள் ஈடுபடுகின்றன என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது.
....தினமணி 29.05.2011
*******************************
பொது ஜனம்; என்னய்யா இந்த தனியார் பள்ளிகளுக்கு நாடெங்கிலும் எதிர்ப்பு கிளம்பியதினால, மத்திய அரசு ஆப்பு வைக்க ஆரம்பிச்சிட்டாங்க!பொது ஜனம்; ஆமாய்யா அவனுங்க பன்ற அக்கப்போர் தாங்கலை...அவனுங்களே ஒரு பெரிய வர்க்க பேதத்தை நாட்டில உருவாக்கிடுவானுங்க போலிருக்குது....பொது ஜனம்; ஒரு பள்ளிக்கூடத்துல கூட "இது லோகிளாஸ் பீப்பில் படிக்கிற பள்ளி". அதுனால இங்கே வந்து "லா பாயின்ட்" பேசாதீங்கன்னு, ஒரு பெற்றோரை கண்டிச்சு கிட்டு இருந்தது ஒரு பள்ளி நிர்வாகம்!பொது ஜனம்; கல்வியில என்னய்யா "லோ கிளாஸ்", "ஹைகிளாஸ்", எல்லோராலேயும் கல்விபயில முடியும்? இவனுங்க யாரு? மக்களை பிரிக்கறதுக்கு?


பொது ஜனம்; அது சரி! இந்த பள்ளிகளை நடத்திரவன் எந்த கிளாசாம்?  இவங்களை வைச்சே ஹகிளாசா ஆவரதுக்கு திட்டம் போடறானா?பொது ஜனம்; ஆமாம்! அதானே! பெத்தவங்களுக்கு வேற டெஸ்ட வெக்கிறானுங்க! பெத்தவங்க படிக்கலைன்னா! பிள்ளைங்க படிக்க கூடாதா?பொது ஜனம்; இவங்க படிப்பாங்க! இவங்க படிக்கமாட்டாங்கன்னு! இவனுங்க யாரு முடிவு பன்றதுக்கு! இவனுங்க என்ன படிச்சு கத்தையா புடுங்கி! நாட்டை சீர் படுத்திட்டானுங்க! எதையெதை கண்டுபிடிச்சாங்க!? படிச்சிட்டு வெளியே போனவங்க தான் பெரிய வல்லுநராக கூட வராங்க!பொது ஜனம்; நாங்கதான் அறிவாளிகளை உருவாக்குறோம்னு சொல்ற இவனுங்க ஏன்? எதையுமே கண்டுபிடிக்க முடியலை?!

பொது ஜனம்; யோவ்! படிக்கட்டு எங்கேயாச்சும் மேலே ஏறுமா?


பொது ஜனம்; மண்ணாங்கட்டி!  யாரு சொன்னது! எஸ்குலேட்டர் (எந்திரப் படிக்கட்டு இல்லை) இல்லை! அது மேலேயும் ஏறும்! கீழேயும் இறங்கும்!
பொது ஜனம்; இவனுங்க பள்ளியில சேர்க்கும் பொழுதே "லோக்கிளாஸ்" என்ற பார்வையிலேயே சேர்க்கிறானுங்களே, படிக்கும் பொழுது அந்த அடித்தட்டு குடிமக்களின் பிள்ளைகளுக்கு கல்வி பயிற்றுவிக்கும் பொழுது எந்த மாதிரியான டிரிட்மென்ட் கொடுப்பானுங்க என்று இதிலிருந்தே தெரிஞ்சுக்கலாம்...


பொது ஜனம்; அம்பேத்காருக்கு நடந்தது இப்பவும் நடக்க ஆரம்பிச்சுடுச்சே!


பொது ஜனம்; இவனுங்களை சுண்ணாம்பு கால்வாயில வைச்சு சுடவேணாம்!


பொது ஜனம்; சுடணும் தான் யாரு சுடறது! சட்டத்தின் மூலம் சுடக்கூடியவங்க, "சுட" வேண்டியதை "சுட" ஆரம்பிச்சுட்டாங்களே! போதாக்குறைக்கு "நான் தலையிட மாட்டேன்னு", இவனுங்களுக்கு பச்சை கொடி காட்டிடுச்சி அந்த பொம்பளை!


பொது ஜனம்; ஆமாம்பா! பல பள்ளிகளிலே ரசீதே தர்றதில்லே.....அது என்ன டேபிளுக்கு கீழே வாங்குற பணமா? இந்த பள்ளி நடத்துறவங்க இப்படி அநியாய கொள்ளையை நடத்த ஆரம்பிச்சிட்டானுங்க! 


பொது ஜனம்; வீட்டுகள்ல கூட விதிகளை மீறிப் பள்ளி நடத்த ஆரம்பிச்சுட்டாங்க!, மொட்டை மாடியில, கொட்டா போட்டு பள்ளி நடத்த ஆரம்பிச்சிட்டானுங்க! ஆனா பீஸ் மட்டும் எக்கச்சக்கமா புடுங்கறாங்க! பொது ஜனம்; டீச்சருக்கு சம்பளமே சரியா கொடுக்கறதே இல்லை! அவங்களுக்கு, பிளஸ் 2 முடிச்சவங்க, டிகிரி முடிச்சவங்க, முதுநிலை முடிச்சவங்க என்று வாத்தியார்களுக்கு ஒரு குத்துமதிப்பா சேலரி போட்டுத்தர்றாங்க! 
பொது ஜனம்; ஆனா பெத்தவங்க கிட்டேயிருந்து பீஸ் மட்டும் மானாவரியா புடுங்கறாங்க! கேட்டா! அவங்களுக்கு சம்பளம் தர்றணும், பத்தலைன்னு சொல்றாங்க.பொது ஜனம்; தனியார் பள்ளியிலே எந்த டீச்சருக்கும் அதிகபட்சமா ஏழாயிரத்துக்கு மேல சம்பளம் இல்லை. குறைந்தபட்சம் ஆயிரத்து ஐநூறு ரூபாய் இன்னும் சில இடத்துல 750, 1000 ம்னு கொடுக்கறானுங்க!
பொது ஜனம்; இது எல்லா பள்ளிகளிலேயும் நடக்குது.

பொது ஜனம்; ஏம்பா அவங்க தான் வாத்தியாருங்க சம்பளத்தை, அரசாங்கத்தை தர சொல்லி கேக்கறாங்களே!
பொது ஜனம்; அப்படி தந்தா அது அரசாங்க பள்ளியாயிடும். அப்புறம் ப்பளிக் கிட்டே  பீசே வாங்க முடியாது. ஆனா! இதே நிலைமை நீடிச்சா அதான் நடக்கப்போகுது.


பொது ஜனம்; அரசு பள்ளி வாத்தியார்களுக்கு தரும் சம்பளத்தை எந்த தனியார் பள்ளிக்கூடங்களும் தர்ரது இல்லை. ஆனா நிறைய தர்ரோம்னு புளுகுரானுங்க! பீசை ஏத்திரதுக்கு இந்த வித்தை.
பொது ஜனம்; முதல்ல இந்த பள்ளிகளுக்கெல்லாம் தனித்தனியா போர்டு வைச்சு அரசாங்கத்துல நிர்வகிக்கிறாங்க பாரு! அதுவே தப்பு! எல்லாமே "பள்ளிக்கல்வி" இயக்குநகரகத்துக்கு கீழே தான் அனைத்தும் வரணும். அப்பதான் "சமச்சீர் கல்வி" என்பதின் அடையாளத்தை ஒரளவுக்கு எட்டியதாக அர்த்தம். மெட்ரிக்குலேசன். சிபிஎஸ்சி...இப்படி அப்படின்னு இருக்கக் கூடாது.


பொது ஜனம்; ஆமாம், அந்த போர்டுகளிலே பார்க்குற அரசாங்க அலுவலர்கள், மொத்தமே 4 பேரு கூட இல்லை. புகாரை விசாரிக்கறதுக்கு கூட ஆளே இல்லை. புகார் கொடுத்து நடவடிக்கை எடுத்து, பள்ளியை மூடினதா, அவனுங்களை உள்ளே தள்ளினதா ஒரு தகவலும் இதுவரைக்கும் வரலியே!
பொது ஜனம்;மாசா, மாசம் அவங்களுக்கு "கிம்பள" கவர் போகுது இல்லை. அப்பறம் எப்படி விசாரிப்பாங்க?!


பொது ஜனம்; இவனுகளுக்கு மொத்தமா ஆப்பு வைக்கிர மத்திய அரசு சட்டத்துக்கு ஒரு ஓஓஓ போடு!

Saturday, 28 May, 2011

முதல்ல மூன்று கேள்விக்கு பதில் சொல்லு.....?

சமச்சீர் கல்வி சட்டம் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மீறி செயல்பட அரசுக்கு அதிகாரம் உள்ளதா?

சென்னை : சமச்சீர் கல்வி திட்டம் தொடர்பாக ஐகோர்ட்டும் சுப்ரீம் கோர்ட்டும் தீர்ப்பளித்த பிறகு அதை மீறி செயல்பட அரசுக்கு அதிகாரம் உள்ளதா என்று ஐகோர்ட் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதுதொடர்பாக விரிவான விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். சமச்சீர் கல்வி நிறுத்தி வைக்கப்பட்டதை எதிர்த்து சென்னை மதுரவாயலை சேர்ந்த ஷியாம் சுந்தர் என்பவர், சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ராஜேஸ்வரன், வாசுகி முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கோர்ட்டில் நடந்த வாதம் வருமாறு:

மனுதாரர் வக்கீல் கே.பாலு: சமச்சீர் கல்வி திட்டம், தமிழகத்தில் உள்ள மாணவர்களின் நலனுக்காக கொண்டுவரப்பட்ட நல்ல திட்டம். அனைத்து மாணவர்களும் இதில் சமமான கல்வியை பெற முடியும். புதிய அரசு ஆட்சிக்கு வந்ததும் உடனடியாக இதை ரத்து செய்திருப்பது சட்டவிரோதமானது. நீதிபதிகள்: சமச்சீர் கல்வியை ரத்து செய்து அரசு ஏதேனும் உத்தரவு பிறப்பித்துள்ளதா?
கே.பாலு: அதிகாரப்பூர்வ உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து பத்திரிகைகளுக்கு செய்தியாக அனுப்பப்பட்டுள்ளது.

முன்னாள் கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.வில்சன்: ஓய்வு பெற்ற ஆசிரியர் மனோன்மணியன் சார்பாக சமச்சீர் கல்வி ரத்து எதிர்த்து தனியாக மனு தாக்கல் செய்துள்ளோம். எனது தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும். கடந்த ஆட்சியில் மாணவர் நலன் கருதி சமச்சீர் கல்வி கொண்டுவர உயர்நிலை கமிட்டி அமைக்கப்பட்டது. அது பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து இந்த திட்டத்தை கொண்டுவந்தது.

இதற்காக தனி சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தை ஐகோர்ட்டும் சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்துள்ளன. இந்நிலையில், சட்டத்தை மீறி அரசு செயல்பட முடியுமா? சமச்சீர் கல்வி சரியில்லை என அரசு கூறுவது தவறானது. 10&ம் வகுப்பு மாணவர்கள் ஏற்கனவே இந்த பாட புத்தகங்களை படிக்க தொடங்கிவிட்டனர். ரூ.200 கோடிக்கு புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு தயார் நிலையில் இருக்கும்போது இந்த திட்டத்தை கைவிட்டால் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படும். எனவே, சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தி வைக்க அரசுக்கு தடை விதிக்க வேண்டும்.

அட்வகேட் ஜெனரல் நவநீத கிருஷ்ணன்: இந்த வழக்கில் எந்த தடையும் விதிக்கக் கூடாது. ரூ.200 கோடி வீணாகிறது என கூறுவதை ஏற்கக் கூடாது மாணவரின் நலன்தான் இதில் முக்கியம். சமச்சீர் கல்வி திட்டம் மாணவர்கள் நலனுக்கு எதிரானது. சமச்சீர் கல்வி திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் இதர மாநில மாணவர்களுடன் போட்டி போடுவது கஷ்டம். இதனால்தான் தமிழக அரசு இந்த திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளது. இதில் புதிய கொள்கை முடிவு எடுக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

சமச்சீர் கல்வி திட்டத்தை அனைத்து மாணவர்களும் படிக்க வேண்டும் என கட்டாயப்படுத்த அரசு விரும்பவில்லை. மாணவர்கள், பெற்றோர் விருப்பப்படி தரமான கல்வி பெற அவர்கள் விரும்பிய பள்ளி மற்றும் பாடதிட்டததை தேர்வு செய்து கொள்ளலாம். அவர்களை கட்டாயப்படுத்துவது அடிப்படை உரிமையை பறிப்பதாகிவிடும். மேலும் சமச்சீர் கல்வியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் வாபஸ்தான் பெறப்பட்டது. சிபிஎஸ்இ மாணவர்கள் தனி பாட திட்டததை படிக்கிறார்கள். மாணவர்கள் நலன் கருதி புதிய கொள்கை முடிவு எடுக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. விரிவான பதில் மனு தாக்கல் செய்த அவகாசம் வேண்டும்.

கே.பாலு: புதிய புத்தகங்களை அச்சடிக்க டெண்டர்விட தடை விதிக்க வேண்டும். ஏற்கனவே ரூ.200 கோடிக்கு புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. அது வீணாகிவிடும். பி.வில்சன்: ஒரு சட்டத்தை மீறி புதிய கொள்கை முடிவு மூலம் செயல்பட அரசுக்கு அதிகாரம் இல்லை. ஐகோர்ட் தீர்ப்புக்கு எதிராக செயல்படவும் அரசுக்கு அதிகாரம் இல்லை.

நீதிபதிகள்: சமச்சீர் கல்வி திட்டம் தொடர்பான சட்டத்தை ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தபிறகு அரசு புதிய கொள்கை முடிவு எடுக்க முடியுமா? ஒரு சட்டம் இருக்கும்போது அதை மீறி அமைச்சரவை கூட்டத்தின் மூலமாக நடவடிக்கை எடுக்க முடியுமா? பொதுமக்கள் மற்றும் மாணவர் நலன் கருதி நல்ல முடிவை எடுக்க அரசுக்கு அறிவுரை கூறுகிறோம். இந்த சட்டத்தின் நோக்கம் சரியாக உள்ளது. தலைசிறந்த கல்வியாளர்கள் கொடுத்த அறிக்கையை ஒதுக்கித்தள்ள முடியாது. பதில் மனுவில் சரியான காரணத்தை கூறவேண்டும். ஏற்கனவே ரூ.200 கோடி செலவிடப்பட்டு புத்தகங்கள் தயாரித்துள்ள நிலையில் அரசு கொள்கை முடிவு எடுத்து புதிதாக புத்தகங்கள் அச்சடிக்க வேண்டுமா என்பதை விளக்க வேண்டும்.

எங்களின் 3 கேள்விகளுக்கு அரசு விரிவான பதில் கூறவேண்டும். 1. சமச்சீர் கல்வி தொடர்பான சட்டம் இருக்கும்போது அதற்கு எதிராக அரசு கொள்கை முடிவு எடுக்க முடியுமா? 2. சமச்சீர் கல்வி திட்டம் குறித்து ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு கூறியபிறகு அதை மீறி அரசு செயல்பட அதிகாரம் இருக்கிறதா? 3. ரூ.200 கோடி செலவிடப்பட்டு புத்தகங்கள் அச்சடிக்கப்பட்ட பிறகு மீண்டும் செலவழிப்பது சரியாகுமா? இந்த வழக்கில் வரும் 8&ம் தேதி அரசு விரிவான பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணை வரும் 8&ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. சுமார் 1 மணி நேரம் பரபரப்பாக விசாரணை நடந்தது.

.....;நன்றி தினகரன் 26.05.2011

*****************************
பொதுஜனம்; உயர்நீதிமன்றம் சரியா மூன்று கேளவிகளை கேட்டிருக்குதே...?

பொது ஜனம்; ஆமா! பின்னே இவங்க உயர்நீதிமன்றத்துக்கும், உச்சநீதிமன்றத்துக்கும் பாடம் சொல்ற அளவுக்கு போறாங்களே!

பொது ஜனம்; ஆமா அந்தம்மா யாருக்கு வேணுன்னா பாடம் சொல்லும்! ரொம்ப தகிரியமான பொம்பளை!

பொது ஜனம்; இதுக்குப் பெயர் தகிரியம்னு எவன் சொன்னது? நீதிமன்ற அவமதிப்பு!

பொது ஜனம்; மத்திய அரசு பள்ளிகளின் சி பி எஸ் சி கல்வியும் ஓன்றானா தான் சமச்சீர் கல்வி என்று அர்த்தம், என்று   முட்டுகட்டை போடறுதுக்குன்னே ஒரு கும்பல் ஒரு காரணத்தை கண்டுபிடிச்சி வைச்சிருக்குதே!

பொது ஜனம்; முதல்ல மாநில அரசுக் கல்வி முறையை சமச்சீராக்க சொல்லு, அப்புறம் மத்திய அரசுக்கல்விக்கு போகலாம்.

பொது ஜனம்; விட்டா இவங்க இரண்டு அரசு எதுக்கு? மாநில அரசு மைய அரசு என்று தனித்தனியா  ஒரே அரசு போதாதா? நானே இரண்டுத்துக்கும் சேர்த்து ஆட்சி புரிந்து, கொடைக்கானலில் சொத்து வாங்கின மாதிரி சிம்லா, டார்ஜிலிங் இங்கெல்லாம் கூட என்னோட பராக்கிரமம் பரவும் இல்லை. பாதி இந்தியாவும் என்கைக்கு வந்தாலும் வந்துவிடும். மக்களும் எனக்கு தைரியசாலி என்று பட்டம் கொடுத்துவிடுவார்கள். எப்படியும்! என்னை கோர்ட் தண்டிக்கப் போறது இல்லை. அவங்களுக்கும் பேப்பே, அவங்க அப்பனுக்கும் பேப்பே காட்டிடுவேன்!

பொது ஜனம்; மத்திய அரசுக்கல்வியும், மாநில அரசுக்கல்வியும் ஒன்னாயிருந்தா தான் சம்ச்சீர் கல்வி என்று ஒரு மெட்ரிக்குலேஷன் போர்டு சங்கத்தலைவனும் இதே கருத்தை சொல்லிகிட்டு இருக்கான். அவன் அதிமுக கொள்கை பரப்பு செயலாளரா மாறி இருக்கான்?

பொது ஜனம்; அவன் ஒரு பெற்றோரா!  இந்த கருத்தை வைப்பானா? ஒரு ஏழை மாணவனா? இந்த கருத்தை வைப்பானா? அவன் வியாபாரியா வேணுன்னா இந்த கருத்தை வைப்பான்?


பொது ஜனம்; ஏன் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் பணிபுரி\யும் ஆசிரியர்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையே! வெறும் நிர்வாகிகள் மட்டும் தான் இதை தடுக்க நினைக்கிறாங்க!

பொது ஜனம்; அவங்க எப்படி இதை எதிர்ப்பாங்க! மக்களிடம் வாங்கும் பணத்தை இவனுங்க பள்ளியில வேலை பாக்கிற டீச்சருக்கு கால்வாசிக் கூட சம்பளமா கொடுக்கறது இல்லை.

பொது ஜனம்; பீஸ் வாங்கறதுக்காக புள்ளைகளுங்கு, பரிட்சையிலே எந்தெந்த கேள்வி வரும் என்று முன்னாடியே கேள்விகளை அவுட்டாக்கி  எல்லோரையும் பாஸ் பண்ண வைக்கிற வேலையைத்தான் இந்த பள்ளிகள் நடத்துது.

பொது ஜனம்; ரேங்க் கூட கிடையாது. எல்லாம் ஏ, பி, சி.....என் கிரடுகள் தான் வழங்கப்படுகிறது.

பொது ஜனம்; இல்லைன்னா பீசை கட்டின மக்கள் சண்டைக்கு வருவாங்க இல்லை. இவ்வளவு பணத்தை கொடுத்துட்டு ஒன்னும் பிரயோசனம் இல்லை என்று......என் பிள்ளை மட்டும் பத்தாவது ரேங்கா? பீஸ் மாசா மாசம் சொளையா வாங்கலை...

பொது ஜனம்;..மேல்வகுப்பு வரும்பொழுது, இந்த பிளைளகளுக்கு ஒரு எழவும் தெரியாமல் இருக்கும். படிச்சதை வாந்தியெடுக்கும் பிள்ளையா மாணவனை ஆக்கி வைச்சிருக்கும், இந்த பள்ளிகள். இந்த பிள்ளைகளுக்கு எந்த புதிய சிந்தனையும் வளருவதில்லை. வெளியுலகமும் தெரிவதில்லை.பொது ஜனம்; இந்த ஆளு புத்தகத்தை அரசு அச்சடிக்க வைக்க கூடாது. தனியாரிடமும் கொடுத்து அச்சடித்து வெளியிட்டுக்கொள்ள உரிமையளிக்கவேண்டும். இதற்கு தடை போடுவது தனி மனித சுதந்திரத்தை மீறுவது ஆகும் என்று குரல் கொடுக்குதே!

பொது ஜனம்; அப்பத்தானே! 40 சதவீத கமிஷன்  தனியா புத்தகத்தின் மூலம் பெற முடியும்? இரண்டு கொள்ளை, ஒன்னு பீஸ், ஒன்னு புத்தக பீஸ் ...புத்தக கட்டணத்துல பாதி இந்த நிர்வாகங்களுக்கு! டீச்சர்களுங்கு பட்டை நாமம். மக்களுக்கும், மாணவர்களுக்கும் பட்டை நாமம்.

பொது ஜனம்; இந்த கருத்தை வலியுறுத்துற, அந்தாளு ஸ்கூல்ல என்ன அழகுல பாடம் சொல்லிக்கொடுக்கிறாங்க! என்று இதிலேயிருந்தே தெரிஞ்சிக்கலாம்.

பொது ஜனம்; அரசின் ஆரம்பக் கால கொள்கையே, கல்வி அரசிடம் இருக்க வேண்டிய ஒன்று. கல்வி இலவசமாக வழங்கப்படவேண்டிய ஒன்று. இந்தியாவின் ஒட்டு மொத்த மிகப்பெரிய மக்கள் தொகைக்கு அரசு மட்டுமே இந்த நாட்டின் கல்வி தேவையை இலவசமாக வழங்கி, பூர்த்தி செய்யமுடியாது. அதற்காக தனியாரிடம் பகிர்ந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டதினால் உருவானவைகள் தான் இந்த தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள். இதற்காக அரசிடம் பல மானியங்களை, இந்த தனியார் பள்ளிகள் பெறுகிறது. பள்ளிக்கான நிலம் முதற்கொண்டு அனைத்து விதமான சலுகைகளையும், பள்ளி நடத்த அரசிடமிருந்து இதன் நிர்வாகங்கள் பெறுகிறது. அது அனைத்தும் மக்கள் பணம்.பொது ஜனம்; மக்களிடம் பெற்றுகிட்டு மக்களுக்கு எதிரான கல்விக்கொள்கையை இந்தப் பள்ளிகள் ஆதரிக்கிறது வெட்க கேடானது. இதற்கு அதிமுக உடந்தை.

பொது ஜனம்; வியாபாரிக்கு வியாபாரம் தானே முக்கியம். மக்களைப்பத்தி என்ன கவலை...!

பொது ஜனம்; இந்த கல்வி நிறுவனங்களை எல்லாம் அரசே எடுத்துகிட்டா என்ன?

பொது ஜனம்; வங்கிகளை தேசியமயமாக்கப்பட்டது மாதிரியா? அது தான் இலக்கு!

பொது ஜனம்; அது மாதிரி செஞ்சா? இந்த அரசை பாராட்டுவாங்க! இது அவங்களோட சேர்ந்துகிட்டு மக்களை சுரண்ட பாடுபடுது. ஏதாவது கஷ்டத்துல வளர்ந்திருந்தா இதை பத்தி தெரியும். சோம்பேறி வாழ்க்கை வாழறதுக்கெல்லாம் என்ன தெரியப்போகுது.

பொது ஜனம்; அப்ப சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் ஒரு ஆரம்பம்......இது இன்னும் பல பரிமானங்களை எடுக்கவேண்டும். வசதிகளிலேயும் தனியாரைப்போல, அதாவது ஆய்வகம், விளையாட்டுக் கல்வி என எல்லாமே தனியார் பள்ளிகளைப்போல அரசு பள்ளிகளுக்கும் சமமாக வரவேண்டும். அதானே!


பொது ஜனம்; ஆமாம்! அதுக்கு ஏதாவது முயற்சி எடுத்தா இதை ஒரளவுக்கு நல்லாட்சி என்று சொல்லலாம்! இது ஆரம்பத்துக்கே வேட்டு வைக்குது! இதுக்கு குடும்பம் இல்லைன்னா யாருக்கும் குடும்பம் இல்லையா!

பொது ஜனம்; முன்னால் முதலமைச்சர் கூட அவர் எழுதின செம்மொழிப் பாட்டை எடுத்துட்டு வெளியிட்டுக்கோ, மாணவர்கள், பல கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து போராடி பெற்றது, சமச்சீர் கல்வியை நிறுத்தாதே, மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்காதே! என்று சொல்லிட்டாரப்பா! அப்புறம் என்னவாம்!

பொது ஜனம்;  வேணுன்னா இந்தம்மாவே ஒரு நல்ல பாட்டா எழுதி சேர்த்துகிட்டும் யாரு வேணாங்கறா! 


பொது ஜனம்; ஏம்பா நடிச்ச படத்திலேயிருந்து ஒரு பாட்டை எடுத்து இதுல சொறுகிடப்போறாங்கப்பா!

Thursday, 26 May, 2011

அதிமுக ஆட்சிக்கு வந்த 10 நாளில் இரண்டாவது படுகொலை.....!

கால் டாக்சி டிரைவர் வெட்டிக்கொலை!
 
சென்னை : ராயப்பேட்டையில் நள்ளிரவில் 
கால் டாக்சி டிரைவரை 
5 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொன்றது. 
சென்னை தாம்பரத்தில் 
வசிப்பவர் ஜெய்கணேஷ் (36). 
கால் டாக்சி டிரைவர். கடந்த வாரம் 
ஜெய்கணேஷின் தந்தை சுப்பிரமணியம் இறந்தார். 
அவருக்கு நேற்று 
முன்தினம் 8வது நாள் காரியம், ராயப்பேட்டை 
துலுக்கானம் தோட்டத்தில்
 உள்ள அண்ணன் சங்கரின் வீட்டில் நடந்தது.
அதனால் ராயப்பேட்டையில் வசிக்கும் அண்ணன் 
சங்கர் வீட்டுக்கு ஜெய்கணேஷ் 
வந்துள்ளார். மாலையில் தனது அம்மாவை 
பைக்கில் வெளியில் 
அழைத்துச் சென்று இரவில் வீடு திரும்பியுள்ளார்.
 நள்ளிரவு 12 மணிக்கு 
செல்போனில் தனது நண்பர்களிடம் பேசியபடி 
சங்கர் வசிக்கும் வீட்டின் 
தெருமுனையில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது, திருவான்மியூரைச்சேர்ந்த செந்தில், 
தனராஜ், ராபட், 
ரகு, கவிமணி ஆகிய 5 பேர் வந்து 
ஜெய்கணேஷை சரமாரியாக வெட்டினர். 
15க்கும் மேற்பட்ட 
இடங்களில் வெட்டினர்.
 அவரது அலறல் சத்தம் கேட்டதும் பக்கத்து வீட்டில் 
வசித்தவர்கள் ஓடி வந்தனர். 
அவர்கள் கொலையாளிகளை விரட்டினர். 
ஆனால் கொலையாளிகள் தப்பி விட்டனர்.
இதுகுறித்து ராயப்பேட்டை போலீசில் சங்கர்
 புகார் செய்தார். 
துணை கமிஷனர் 
கருப்பசாமி, உதவி கமிஷனர் வசந்தகுமாரி, 
இன்ஸ்பெக்டர் கந்தவேல் ஆகியோர் 
வழக்குப்பதிவு செய்து கொலையாளி கள்
 5 பேரையும் தேடி வருகின்றனர். 
போலீசார் நடத்திய விசாரணையில், 
முன்விரோதம் காரணமாக 
இந்தக் கொலை 
நடந்துள்ளது தெரியவந்தது. ஜெய்கணேஷ்,
 ராயப்பேட்டையில்தான் வசித்து வந்தார். 
அப்போது நண்பர்களுடன் சேர்ந்து 
அடிதடி வழக்குகளில் ஈடுபட்டார். 
 
 
போலீசார் 
அவரை ரவுடிகள் பட்டியலில் சேர்த்தனர். இதற்கிடையில், 
அதே பகுதியைச் சேர்ந்த
 பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
 திருமணத்துக்கு பிறகு அவர்,
 தாம்பரத்தில் வசித்து வந்தார்.
மேலும், ஜெய்கணேஷ் மனைவியின் 
தங்கையை திருவான்மியூரைச் சேர்ந்த செந்திலின்
 நண்பர் ஒருவர் காதலித்துள்ளார்.
 அதனால் ஆத்திரமடைந்த ஜெய்கணேஷ், 
செந்திலை மெரினாவில் 
வைத்து வெட்டியுள்ளார். அதற்கு பழிக்குப் பழி வாங்க, 
செந்தில் 
காத்திருந்ததாக கூறப்படுகிறது. 
 
இந்நிலையில், 
தந்தையின் காரியத்துக்கு 
வந்திருக்கும் தகவலை ராயப்பேட்டை யில் 
உள்ளவர்கள்தான் திருவான்மியூரில்
 வசிக்கும் செந்திலுக்கு தெரிவித்திருப்பார்கள்.
 செந்தில் தனது கூட்டாளிகளுடன் 
வந்து கொலை செய்திருப்பது தெரியவந்தது. 
செந்தில் மற்றும் கூட்டாளிகளைப் 
பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு ள்ளது.
...நன்.றி தினகரன் 26.05.2011 
******************************
 

பொது ஜனம்; இது என்னப்பா? ஆட்சிக்கு 
வந்த 10 நாளுக்குள்ளே 
கொலை, கொள்ளை, வழிப்பறி, செயின் பறிப்பு 
என்று எங்கும் 
ஒரே குதூகல அராஜகமா இருக்கே! 
அவங்க ஆளுங்களுக்கே பாதுகாப்பு
இல்லே போலிருக்கே!
 
பொது ஜனம்; ஆட்சியில என்னய்யா
 அவங்காளு, 
இவங்க ஆளு, நம்மாளுன்னு! 
எல்லோரும் தமிழக 
பொது மக்கள் தானப்பா!
 
பொது ஜனம்; இது உனக்கு தெரியுது! 
அதெல்லாம் பத்தி அவங்களுக்கு
தெரியுமா? என்ன?
 
பொது ஜனம்; என்னப்பா 
அதான் நிறைய ஐ.பிஎஸ் 
அதிகாரிகளையெல்லாம் 
மாத்தியிருக்காங்களே! 
இதுக்குள்ளே 
நீ எல்லாத்தையும் எதிர் பார்க்கறீயே!  
அவங்க தான் 
மந்திரிங்க கிட்டே
அதிமுகவுக்கு சாதகமா 
செயல்படக்கூடிய போலிஸ் 
அதிகாரிங்க, 
இன்ஸ்பெக்டர்ங்க, 
உதவி இன்ஸ்பெக்டர்ங்க 
லிஸ்ட்டை கேட்டு இருக்காங்களே! 

பொது ஜனம்; அப்பக்கூட மக்களுக்கு யார்?
 நன்மை செய்வார்னுங்கற
 லிஸ்ட்டை கேக்கலை!

பொது ஜனம்; அந்தளவு 
புத்திசாலித்தனத்தையெல்லாம் 
அவங்ககிட்ட
 எதிர் பார்க்க முடியுமா?
 
பொது ஜனம்; அப்ப இப்ப 
கொலை, கொள்ளை நடந்தா 
பரவாயில்லையா?
 ஆறு மாசத்துக்கப்புறம் எவ்வளவு பேர்
 உயிரோடு இருக்கிறாங்க என்ற 
கணக்கெடுத்து 
அப்புறமா? கேள்வி கேட்டுக்கலாம். 
இப்ப நேரம் எங்க இருக்குது!
 
பொது ஜனம்; ஆட்சிக்கு 
வந்ததுக்குள்ளேயே இவ்வளவு மக்கள் 
விரோதத்தை பன்றதுக்கு
மட்டும் நேரம் இருக்குதா?
 
பொது ஜனம்; கொலை கொள்ளையை, 
அதிகாரிகளா கண்டு 
பிடிக்கப்போறாங்க!
 
பொது ஜனம்; ஆட்சி மாறுனவுடனே காட்சி 
மாறிடும்ங்கறது 
இது தான் போல இருக்கு!
புற்றீசல் போல கிரிமனல்கள் வெளியே
 வர ஆரம்பிச்சட்டாங்களே!
எல்லோரும் எனகவுன்டர் தானா?
 
பொது ஜனம்; போலி என்கவுன்டர் பண்ணா? 
போலிஸ்காரங்களுக்கு
மரண தண்டனையாமே! உச்சநீதிமன்றம் 
சொல்லியிருக்கே! 
 
பொது ஜனம்; பின்னே கிரிமினல்களை 
அவங்களே உருவாக்குவாங்க!
அப்புறம் அவங்களே போட்டுத்தள்ளுவாங்க! 
இது தான் நாட்டைப் பாதுகாக்கற
லட்சணமா?
 
பொது ஜனம்; கிரிமினல்கள் ஏன் 
உருவாகுறாங்க? என்பதை 
கண்டுபிடிய்யா? எதனால உருவாகுறாங்க!
 மக்களுக்கு விரோதமாப்
போனா! மக்கள் அனைவரும் 
கிரிமினல்களா ஆனாக் கூட
ஆச்சரியப்படுவதற்கில்லை!
 
பொது ஜனம்; நீயே ஒரு குத்தவாளி...
ரொம்ப காலமா! கோர்ட்டுக்கு டிமிக்கி 
கொடுத்துகிட்டு இருக்கே! 
அப்பறம் தானே மத்தவங்களை 
குத்தம் சொல்ல முடியும்! 
 
பொது ஜனம்; ஏம்பா அது ரொம்ப தைரியமான 
பொம்பளைப்பா! 
வந்தவுடன்  என் முதல் வேலை சட்டம் 
ஒழுங்கை பாதுகாப்பது
தான் என்று அறிவிச்சுட்டு வந்தது. 
இதுமாதிரி யாரு சொல்லுவா!
 
பொது ஜனம்; ஆமாம் ஆமாம், 
விவரம் தெரிஞ்ச 
எவரும் இது மாதிரி
 சொல்ல முடியாது!
 
பொது ஜனம்; ரவுடித்தனம், கொலை,
 கொள்ளைகள் செய்யறவங்க
எல்லாம் தைரியமானவங்க தான்! 
இதுல என்ன பெரிய விஷயம் இருக்கு! 
 
பொது ஜனம்; அது தைரியமா 
இருந்தா என்ன?
 கோழையா இருந்தா என்ன? 
முதல்ல மக்களை பாதுகாக்கறதுக்கு 
நடவடிக்கை எடுக்க 
சொல்லுப்பா! அப்புறம் தைரியமா 
சுடுகாட்டுக்கு கூட தனியா
 போய்ட்டு வரட்டும்! 
யாரு! வேணாங்கறா! 

 
பொது ஜனம்; அதிகாரிகளை
 இந்த ஊரிலேயிருந்து 
அடுத்த ஊருக்கு மாற்றப்போரே!
இந்த மாவட்டத்திலேயிருந்து அடுத்த 
மாவட்டத்துக்கு! மாத்தப்போரே!
மாத்தினா மட்டும்!
 
பொது ஜனம்; அந்த மாவட்டத்துல 
மக்கள் இல்லையா! ஆட்டு 
மந்தைகளா இருக்குது! எல்லா 
இடத்துலேயும் மக்கள் தானாப்பா
 இருக்கறாங்க! 
 
பொது ஜனம்; தமிழ்நாட்டுல 
இருக்கற போலிசை வைச்சு
தானே சமாளிக்கணும்! யாரையும்
 வீட்டுக்கு அனுப்ப முடியாதே! 
 
பொது ஜனம்; நம்மளா! தேடிக்கிட்டது, 
இனி எல்லாவற்றுக்கும் 
நீதி மன்றத்துக்கு தான் 
போகனும் போல இருக்கே!
 
பொது ஜனம்; இல்லைன்னா! 
நாக்கையும், மூக்கையும் 
அந்த பொம்பளைக்காக
அறுத்துக்கணும்! அப்பதான் நல்லது
நடக்கும்! அது கூட 
அறுத்துக்கினவங்களுக்கு
மட்டும் தான்!

பொது ஜனம்; ஜெயலலிதாவுக்காக 
நாக்கை அறுத்த பெண்ணுக்கு அரசு
வேலை போட்டுக் 
கொடுத்திருக்காங்களே!
அதை வைச்சு சொல்றியா!
 
பொது ஜனம்; பேசாம 
தலைமைச்செயலகத்தை
 ஐகோர்ட் காம்பவுண்டுக்குள்ளே 
மாத்திட்டா நல்லா இருக்கும்!