Pages

Sunday 22 May, 2011

இருப்பதையும் கெடுப்பதற்கு தான் ஆட்சி மாற்றமா?......



சமச்சீர் கல்வித் திட்டம் நிறுத்தம்

இந்தக் கல்வியாண்டு முதல் நடைமுறைக்கு வரயிருந்த சமச்சீர் பாடத் திட்டத்தை நிறுத்தி வைத்துவிட்டு, பழைய பாடத் திட்டத்தையே தொடர தமிழக அரசு முடிவெடு‌த்துள்ளது.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் புனித ஜார்ஜ் கோட்டையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
த‌ற்போதைய சம‌‌ச்‌சீ‌ர் பாட‌த் ‌தி‌ட்ட‌ம் மாணவ‌ர்க‌ளி‌ன் க‌ல்‌வி‌த் தர‌த்தை உய‌ர்‌த்து‌ம் வகை‌யி‌ல் இ‌லலை. எனேவ, சமச்சீர் பாடத் திட்டத்தை மே‌ம்படு‌த்‌தி செயல்படுத்துவது குறித்து ஆராய வல்லுநர் குழு அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ள தமிழக அரசு, பள்ளிகள் பழைய பாடத் திட்டத்தையே தொடரலாம் என்றும் உத்தரவிட்டுள்ளது.
பழைய பாடப் புத்தகங்கள் அச்சிடுவதற்கு கால அவகாசம் தேவைப்படுவதால், ஜூன் 15ஆம் தேதி பள்ளிகளைத் திறக்கலாம் என்று தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 

.....நன்றி வெப்துனியா 22.05.2011 

****************************************************
 பொது ஜனம்; அப்படியென்றால் பணக்காரனுக்கு ஒரு கலவி! ஏழைக்கு ஒரு கல்வியா?  ஏழையும் வரிக்கட்டுகிறானே? அதுவும் அரசு கஜானாவுக்குத்தானே செல்கிறது!

பொது ஜனம்:  அடப்பாவிங்களா! மக்களின் மூலம் ஆட்சிக்கு வந்து , வந்த சில நாட்களிலேயே மக்களையே கீழேத்தள்ளும் ஆடசியை எப்படித்தான் பொறுத்துகொள்கிறார்களோ? அதற்கப்புறம் என்ன ஜனநாயகக் கொள்கை? எதிர்த்து வாக்களித்தவர்களை மக்களாகவே கணக்கில் எடுத்து கொள்வதில்லையா? இந்த மக்களாட்சி? 

அப்படியென்றால் இதற்கு முன் இருந்த ஆட்சியை ஆதரித்து வாக்களித்தவர்கள் ஆட்சியில் கொண்டுவந்தது தானே இந்த சமச்சீர் கல்வி?  முத்துக்குமரன் குழு பரிந்துரையின் பேரில் தானே இந்த சமச்சீர் கல்வி கொண்டுவரப்பட்டது. அந்த கமிட்டி பரிந்துரைத்த மூன்று விதமான வல்லுநர் குழுவின் வரைவுதிட்டங்களை வைத்து, மக்கள் கருத்தையும் கேட்டுத் தானே இந்த கல்வித்திட்டம் அமல்படுத்தப்பட்டது. சோதனை முறையில் 1 வது மற்றும் 6 ஆம் வகுப்புகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு மக்கள் வரவேற்புக்குப் பிறகு தானே விரிவுப்படுத்தப்பட்டது.

பொது ஜனம்: இதை அறிமுகப்படுத்தினால் தனியார் பள்ளிகளின் வணிக நோக்கு அடிப்பட்டு போய்விடும். தனியார் புத்தக நிறுவனங்கள் கொள்ளையடிப்பது தடுக்கப்பட்டுவிடும்.  இனிப்பள்ளிகளில் புத்தககட்டணம் என்று நிறையப்பணம் பிடுங்கலாம்.  அந்த புத்தகங்களுக்கு 30 சதவீதம் கமிஷன் தனியார் பள்ளிக்கும் விற்பனையாளர் மூலம் கிடைக்கும். அரசியல் வாதிகளுக்கும் சூட்கேஸ் போகும்! 

பொது ஜனம்; ஏழை எடுக்கும் மதிப்பெண்ணை பணக்கரானும் எடுத்தால் பணம் கட்டி எதுக்கு படிக்கவேண்டும்? என்று எல்லோரும் நினைத்துவிடுவார்கள? அனைவரும் அரசு பள்ளிகளுக்கு சென்றுவிடுவார்கள். இதனால் தனியார் பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்தப்படும், என்று அவர்களுக்கு ஆதரவாக எடுக்கப்பட்ட முடிவு தானே! இந்த சம்ச்சீர் கல்வி நிறுத்தம்!


பொது ஜனம்; இந்த விரோதத்தை செஞ்சால் என்ன? மிக்சியும், கிரைண்டரும், பேனும் கொடுத்தால் மக்கள் கம்முனு இருந்தறப்போறாங்க! 


பொது ஜனம்; அப்ப மாணவர்கள் கதி!


பொது ஜனம்; அதோ கதி தான்!


பொது ஜனம்; ஏற்கனவே பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் அனுப்பபட்டு விடுமுறையில் பயிற்சி அளிக்கப்பட்டு விட்டதே!


பொதுஜனம்; அதை பத்தி இவங்களுக்கு என்ன கவலை? அவங்களுக்கு என்ன? பிள்ளையா? குட்டியா? இல்லை கல்வியைப்பத்தி ஏதாவது தெரியுமா?


பொது ஜனம்: சரி மக்கள் வரிப்பணம் வீணாகிவட்டதே! 9 கோடிக்கும் மேலாக செலழிக்கப்பட்டுள்ளதாமே!


பொது ஜனம்; 1000 கோடியே வீணாகப்போவதைப் பற்றி கவலைப்படவில்லை...இந்த அல்ப கோடியைப்பத்தியாக் கவலைப்படப்போறாங்க!

பொது ஜனம்: அது தானய்யா! கல்வயின் நோக்கம்! கல்வி சமத்துவமாக இருக்கவேண்டும் என்பது தானே அனைத்து நாடுகளின் நோக்கம். 


பொது ஜனம்: உயர்நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை வரவேற்றுள்ள இத்திட்டத்தை, இதற்கு  தடை விதிக்க மறுத்துவிட்ட இத் திட்டத்தை எப்படி இந்த ஜெயலலிதா அரசு தடுத்து நிறுத்துகிறது.


பொது ஜனம்; இந்த அரசு, உச்சநீதிமன்றத்தையும், உயர்நீதிமன்றத்தையும் மதிக்கின்ற அரசா? உச்சநீதிமன்றத்தையே ஏமாற்றுகிற அரசு! எனக்கு இங்கிலிஷ் படிக்கத்தெரியாது? என்று கூறும்? தமிழ் படிக்கத்தெரியாது? என்றும்  மாற்றி மாற்றி கூறிக்கொண்டிருக்கும். சப்பைக்காரணத்தை சொல்லி வாய்தா வாங்கி கொண்டிருக்கும்!


பொது ஜனம்; இவர்கள் சுயநலத்திற்காகத்தான் மக்கள் பணமா? இதையெல்லாம் தேர்தல் வாக்குறுதியில் கொடுத்தார்களா? எதிர்த்து வாக்களித்தவர்கள் ஒரு கோடியே 46 லடசம் பேர் இருக்கிறார்களே! ஆதரித்து வாக்களித்தவர்கள் 1 கோடியே 90 லட்சம் பேர் தானே! அவர்கள் கருத்தையெல்லாம் இந்த அரசு சட்டை செய்யாதா? ஆதாரித்து வாக்களித்தவர்கள் அனைவரும் சமச்சீர் கல்வியை எடுக்க சொல்லியா வாக்களித்தார்கள்.


பொது ஜனம்; இந்த மக்கள் விரோதத்தை உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் தலையிட்டு தடை விதிக்குமோ?


பொது ஜனம்: பின்னே சமான்ய மக்களின் கடைசி நம்பிக்கை நீதிமன்றம் தானே!



பொது ஜனம்: இது என்ன பாசிச நடவடிக்கை? ஒரு வேளை தான் சர்ச் பார்க்கில் படித்ததினாலா?
பொது ஜனம்: தெரியவில்லை...? நம்முடைய பெற்றோர் வசதிபெற்றவர் அதனால் தான் நாம் படிக்கமுடிந்தது , வசதியற்றவர்கள், ஏழைகள் எக்கேடு கெட்டால் என்ன?  என்று நினைப்பவர்கள் எப்படி அரசியல்வாதியாக ஆக முடியும்? 

நாம் குப்பத்தில் பிறந்து,  இது மாதிரி சர்ச் பார்க்கில் படித்திருக்கமுடியுமா? என்பதை எண்ணிப்பார்ப்பவர் தான் சிறந்த மனிதனாகவே ஆகமுடியும்? மனிதனாகவே  ஆக முடியவில்லை அப்புறம் தானே அரசியல் வாதி? மனிதத்துக்கும் லாயக்கில்லை, அரசியலுக்கும் லாயக்கில்லை! சரி தானே!

பொதுஜனம்; அப்படியென்றால் அவருக்கு அரசியலும் தெரியவில்லை! மனிதமும் தெரியவில்லை? அப்படியென்றால் அப்புறம் எப்படி மக்கள் வருத்தமேயடையாத அளவுக்கு ஆட்சி நடத்துவேன்  என்று வெட்கமேயில்லாமல் பேட்டி கொடுக்கிறார்கள்?

பொதுஜனம்; சரி சரி , மக்களை காப்பவர்கள் எனக்கூறிக்கொள்ளும் கேப்டன்கள் இருக்கிறார்களா? இல்லையா? பொதுவுடமைக்காரர்கள் இருக்கிறார்களா? இல்லையா?  அவர்களும் இந்தக்கல்வி வர போராடியவர்கள் தானே! அப்படி சும்மா விட்டு விடுவார்களா? என்ன? இவர்களும் தானே சமச்சீர் கலவியைக்கொண்டுவரச்சொல்லி குரல் கொடுத்துக்கொண்டிருந்தவர்கள்? 

பொது ஜனம்; யோவ்! அது எந்த ஆட்சி இது எந்ந ஆட்சி.....முதுகெலும்பில்லாதவர்கள் கூட்டணீ!..இங்க குரல் கொடுத்தா தொண்டையைப் பிடிச்சுடுவாங்க இல்ல!

பொதுஜனம்: பணம்பிடுங்கும் இந்த பள்ளிகளின் ஆதரவை இந்த அரசு விரும்புகிறாதா? இல்லை அவர்களிடம் தனியாக கையூட்டு வாங்கிவிட்டதா?

பொது ஜனம்: யாருக்கு தெரியும்? வாங்கினாலும் வாங்கியிருக்கும்.

பொது ஜனம்; ஏற்கனவே இருந்த திட்டங்களை இன்னும் சிறப்பாக அமைப்பதற்காக ஆட்சி மாற்றமா? இருப்பதையும் கெடுப்பதற்கு தான் ஆட்சி மாற்றமா?

2 comments:

மதுரை சரவணன் said...

சமச்சீர் கல்வி விரைவில் வரும் ... வரசெய்வேம்..

மதுரை சரவணன் said...

சமச்சீர்கல்வி கொண்டு வர செய்வோம்..