Pages

Thursday 12 May, 2011

ஒசாமா முதல் திரைப்படம்...பகுதி-3



(ஜிகாத்-அல்கொய்தா பின்னணியில் இருக்கும் மனிதர்கள் மற்றும் கொள்கைகள்)

முஸ்லீம்கள் சிறுமையை பொறுத்துக்கக் கூடாதுன்னும் சொல்லுவாரு! இப்ப பின்லேடன் எண்ணங்கள் என்னவோ? அதெல்லாம் அவர் சொன்ன அடிப்படைகளா இருந்தது.


1979 இல் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. அது பின்லேடனுடைய கனவாகிய ஜிகாத் உண்மையாகும்படி அமைஞ்சது. அது இஸ்லாமிய உலகைத் தட்டி எழுப்பியதோடு, ஆயிரக்கணக்கான இளைஞர்களை ஆயுதம் ஏந்தும்படி தூண்டிவிட்டது. கிறிஸ்துமஸ் பண்டிகையன்று செம்படை ஆப்கானிஸ்தானிற்குள் எல்லை தாண்டி நுழைந்தது. ரஷ்யப்படைகள் அந்த நாட்டைத் திடீர் என்று ஆக்கிரமித்ததுடன், ஆப்கானியர்களுக்கு சிறு சந்தர்ப்பம் கூட அளிக்கவில்லை. இருபதாம் நூற்றாண்டில் ஒரு திருப்புமுனையான தேதியைத் தொடர்ந்து அமைந்த, அந்த யுத்தத்தை, அடுத்த உலக மகாப் பிரிவினைக்கு அடிகோலியத் துவக்கமாகவும், பனிப்போரின் கடைசி அங்கமாகவும், எதிர்காலத் தலைமுறைகள் தெளிவாக காண முடியும்.

அந்த காட்சிகளுக்கு பின்னணியில் அமெரிக்காவின் மத்திய உளவுப் பிரிவான சி.ஐ.ஏ ஒரு பெரும் மறைமுகமான நடவடிக்கையைத் தூண்டியது.


நாங்களும் (அமெரிக்கா), சவுதி அரேபியாவும் கோடிக்கணக்கான டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை, ஆப்கானியர்களுக்கு கொடுத்தோம். அதுவும் அவங்க கோபம் ரஷ்யர்கள் மேல திரும்புனா, அந்த நாடு பின்வாங்க நேரிடும் என்ற நம்பிக்கையில கொடுத்தோம்.


அந்த யுத்தம் தொடர்ந்து கொண்டே போகப்போக, பாக்கிஸ்தானில் கண்ணுக்கெட்டியத் தூரம் வரை அகதிகள் முகாமாக தென்பட்டன. ஆப்கானிய மக்களின் துன்பங்கள் ஒட்டு மொத்த உலக இஸ்லாமிய அமைப்பான ஹூம்மாவை அதிர்ச்சிக்கடலில் ஆழ்த்தியது.

ஹூம்மா (Ummah) என்பது முஸ்லீம்களின் உலக சமுதாய மையம். உலகில் ஒரு கோடி முஸ்லீம்களுக்கு கொடுக்கப்படும் நெருக்கடியானதும் மிக ஆழ்ந்த மதநம்பிக்கை கொண்ட முஸ்லீமுக்கு, தனது பக்கத்து வீட்டுக்காரர் தாக்கப்பட்டதும், போன்ற வலியையும் வேதனையையும் தனிப்பட்ட முறையில் தரும். ஹூம்மாவின் எந்தப் பகுதியைத் தாக்கினாலும், அது ஒட்டுமொத்த சமுதாயத்தையும் தாக்கியதாகும். மற்ற சாதாரணமானவர்களுக்கு பதிலாக ஒருமதவாதிக் கல்வியாளரான ஷேக் அப்துல் அசாம் (Abdullah Yusuf Azzam) என்பவர் ஹூம்மா அமைப்பை ஆக்கிரமிப்பாளருக்கு எதிராக, ஒரு எதிர்த்து நிற்கும் யுத்தத்தில் ஆதரவு தருமாறு, கோரிக்கை விடுத்தார். அது ஒரு யுத்தம். அதாவது, ஜிகாத்.

Right-click here to download pictures. To help protect your privacy, Outlook prevented automatic download of this picture from the Internet.

பின்லேடன் தன்னை எங்கப்பாகிட்ட தானாவே அறிமுகப்படுத்திக்கிட்டாரு!

ஹலோ என் பேர் பின் லேடன், எனக்கு இந்த ஆப்கான் ஜிகாத்தை பத்தி தெரிஞ்சிக்கணும்னாரு!

நான் சின்னப்பயனா இருந்தா நாள்லேயிருந்தே அது என்னென்னு? தெரிஞ்சிக்கணும்னு எதிர்பார்த்துகிட்டேயிருந்தேன்! எனக்கு ஒரு ஜிகாத்தாவோ? இல்லை புனித வீரனாவோ? ஆகணும்னு கனவு கண்டுகிட்டிருந்தேன்னாரு! அதானால எங்கப்பா அவருகூட உட்கார்ந்து நாலு மணிநேரத்துக்கும் மேல பேசிக்கிட்டிருந்தாரு! அந்த சந்திப்புக்கப்புறம், பின்லேடன் ஆப்கானிஸ்தானத்துக்கு வந்துட்டாரு!
 ************


1984 இல் அசாமை பின்பற்றி பாக்கிஸ்தானில் இருக்கும் பெஷாவருக்கு அவர் சென்றார். அது ஆப்கானிஸ்தானின் எல்லைக்கருகில் இருக்கும் ஒரு புழுதி நிறைந்த நகரம். அந்த நேரத்தில் அந்த செல்வந்தரான் இளம் அராபியர், தங்களத்உ நோக்கத்துக்காக நிதி திரட்டும் வேலையை செய்து கொண்டிருந்தார். பின்லேடன் அங்குள்ள ஒரு ஆங்கிலேயர் அரசு விடுதியில் முகாமை அமைக்க உதவி செய்து, அதற்காக அந்த பணத்தை செலவிட்டுக் கொண்டிருந்தார். அந்த அலுவலகம் அல்கொய்தாவுக்கு ஒரு முன்னோடி அலுவலகமாக இருந்தது. ஆனால் அதை துவக்குவதற்கு முன்பாக,அது இளம் தன்னார்வத் தொண்டர்களுக்கு, ஒரு அடையாள மாற்றம் செய்து கொள்ளும் இடமாகச் செயல்பட்டது. அவர்கள் பெஷாவருக்கு உதவிப்பணியாளர்கள், மருத்துவர்கள் அல்லது யுத்த வீரர்கள் போன்று ஜிகாத்துக்கு ஆதரவு தருவதாகப் பயணம் செய்து கொண்டிருந்தார்கள்.


அப்போது அங்கே ஒசாமா பின்லேடனை முதலில் சந்தித்த மனிதர்களில் ஒருவர் அல்ஜிரியாவைச் சேர்ந்த ஜிகாதியவாதி. அவர் பெயர் அப்துல்லா ஆன் ஆஸ். (Abdullah Anas) அவர் இன்னமும் ஒசாமா பின் லேடனை தன் நண்பராக மதித்து வருகிறார்.


அந்த சமயத்துல என்னோட கவனத்தை கவர்ந்த ஒன்னு என்னென்னா? அந்த மீட்டிங் முழுசும், அவர் அமைதியாவே உட்கார்ந்து இருந்தார். அந்த மீட்டிங் இரண்டு மூன்று மணிநேரம் நடந்தது. அதோட அவர் கொஞ்சமாத் தான் பேசினாரு! அதைப் பார்த்த எங்களுக்கு ரொம்பவே ஆச்சரியமாவே இருந்தது.


ஜிகாத்தின் தொட்க்க நாட்களில் அதில் இருந்தவர்கள், உயரிய லட்சியவாதிகளாக இருந்த காலகட்டமது. 1984 ஆம் ஆண்டு குளிர் கால்த்தில் அப்துல்லா ஆன் ஆஸ் முஜாகிதினோட விநியோக அணியில் சேர்ந்தார். முன்னணிக்கு பயணம் செய்து ஜிகாத்தை துவக்கியது என்பது ஒரு புனிதமான நோக்கத்துக்காகத்தான் என்று, தான் நம்பியதை பிரச்சாரம் செய்த முதல் மூன்று அராபியர்களில் இவரும் ஒருவர்.    


அந்த பயணம் எனக்கு மறுபிறப்பு மாதிரி இருந்தது. நம்மை நாட்டை மீட்டு, விடுதலைக்கிடைக்கப் போராடுற, ஆப்கானியி முஜைகிதினுக்கு (Mujahideen) நடுவுல நாம வாழறா மாதிரி இருந்த்து.அவங்களோட  ஒரு அங்கம் மாதிரி, நான் ரொம்பவே உணர ஆரம்பிச்சேன்.

*****************
உங்கத் துப்பாக்கி உங்கத் தோள்ல தொங்கும், அதோட, அதுக்காக நீங்க பெருமையும் படுவீங்க.
****************

பின்லேடன் ஜிகாத்துக்காக தானும் சண்டையிட விரும்பினார், அவர் நிதியுதவி திரட்டும் பணியை விரும்பவில்லை. ஆப்கானிஸ்தான் எல்லையிலிருந்து அதற்குள் பத்துமைல் தொலைவில் இருக்கும் கிராமமான ஜியாஜிக்கு (Jaji )அருகில் 1986 இல் அவர் தனது சொந்தமான சுதந்திரப் படையை உருவாக்கினார். அப்துல்லா ஆன் ஆஸ் இதுபோல பல புது முகாம்களை அமைப்பதில் பணத்தை விரயம் செய்வதுடன், தங்களது எதிர்ப்பு இயக்கத்தை வலுகீனப்படுத்திவிடும் என்று பின்லேடனே எச்சரித்தார்.




ஒரு மிகப்பெரியப் போர் நடந்துகிட்டிருக்கும்போது, அளவில்லாத பணமும், தளவாடங்களும் ஜியாஜிக்கு அனுப்பப்பட்டது. அது அவங்களுக்குப் போதுமானதா இல்லை. அவங்களுக்கு ஜியாஜியைவிட அதிகமாகத் தேவையிருந்தது. பன்ஷீர் பள்ளத்தாக்குக்குள (Panjshir Valley ) ரொம்ப உக்கிரமானப் போர் நடந்துகிட்டிருந்தது.  அதுமட்டுமில்லாம கந்தகார்லேயும் (Kandahar), அராத்துலேயும் (Arad) கூட ரொம்ப கடுமையானப்போர் நடந்துகிட்டு இருந்தது.


ஆனா ஒசாமா தன் சொந்த விஷயத்தை தானே கவனிச்சிக்கிற அளவுக்கு மிகுந்த பொருளாதார வசதிகளோட இருந்தாரு! அவர் அதை நடத்த யார்கிட்டேயும் பொருளுதவி கேக்கவேயில்லை. எல்லாம் அவரோட சொந்த கையிருப்பில் இருந்தே செலவுப் பண்ணிகிட்டிருந்தாரு!

**********************



பின்னர், 1987, ஏப்ரல் மாதம் எல்லையோரத்திலும் பெரும் தாக்குதல் ரஷ்ய ராணுவம் நடத்தியது.

***********************



ஜியாஜி கிராமம் அப்கானிஸ்தானுக்கும், பாக்கிஸ்தானுக்கும் இடையே கடந்து போறப் பாதையா இருந்தது. அதுதான் அப்கானிஸ்தானுக்குள்ள இடிபாடுகளை கடக்கறதுக்கு, ஒரு வழியா இருந்து வந்துருக்கு! அந்த வழியை ரஷ்யர்கள் தடுக்க விரும்புனாங்க!





முதல்தடவையாக அராபிய யுத்த வீரர்கள், ஒரு தனி அணியாக ரஷ்யர்களை எதிர் கொண்டார்கள்.

****************

பின்லேடன் அப்ப உண்மையாவே தலைமைப் பொறுப்புல இல்லை. அவர் தன்னோட தலைமை பொறுப்பை, ரொம்பத் திறமையுள்ள ராணுவத் தளபதியான, எகிப்திய உதவியாளர்கள்ல ஒருத்தர் கிட்ட விட்டுட்டாரு! ஆனா! எது எப்படியிருந்தாலும், எல்லாத்திலேயும் பின்லேட்ன ரொம்பத் தைரியமா போரிட்டாரு!

******************



ஜியாஜிக்கு எந்தவிதமான ராணுவ முக்கியத்துவமும் இல்லையென்றாலும், அது பின்லேடனை புகழ் வாய்ந்த முக்கியஸ்தராக்கியது.


*********************


அவர் ரொம்ப பிரபலமாயிட்டாரு! இதுவரைக்கும் முதல் முதலா பிரசுரமான அவரோட படங்கள் எல்லாமே நான் எடுத்தது தான். அதற்கப்புறம் ஒசாமா எல்லோருக்கும் தெரிஞ்ச ஒரு நபராயிட்டாரு!

**************



அன்றுவரை ஒசாமா பின்லேடன் எப்பொழுதும் ஒளிப்பதிவாளருக்கும், புகைப்படக்காரர்களுக்கும் முகத்தை காட்டாது திரும்பிய நிலையிலேயே இருப்பார். இந்த ஒளிப்பதிவாளர் உலகுக்கு செய்தியளிக்க விரும்புகிறாரா? என்று ஒசாமாவேக் கேட்கும்வரை, ஒருமாதமாக அவர் தன்னை படம் எடுப்பதை மறுத்து தவிர்த்து வந்திருக்கிறார். இப்படித்தான் அவர் உருவம் முதன் முறையாக படம் பிடிக்கப்பட்டது.


******************

ஒசாமா......

“”நம்பிக்கையையும், மதத்தையும் வரமாக வழங்கிய ஆண்டவனுக்கு, நன்றி செலுத்துகிறேன். அத்துடன் இந்த ஜிகாத்தை கொடுத்ததற்காகவும், அவருக்கு நன்றி! இது ஒரு நன்றிக்கடன்!””


*********************


அன்றிலிருந்து பின்லேடன், தன்னைபற்றி அபிப்பிராயத்தை உருவகப்படுத்த ஊடகத்தை பயன்படுத்திக்கொண்டார்.


*********************


அந்த சம்பவத்துகப்புறம் அராபிய முஜாகிதினை சேர்ந்தவங்க எல்லாருமே ரொம்ப பிரபலமாயிட்டாங்க. அராபிய முஜாகிதினுடைய எண்ணிக்கை பலமடங்கு பெருகி, அதுவும் ஒரு வருஷத்துக்குள்ளே மூணு மடங்காயிடுச்சி.

**********************



அவர் ஒரு ஒட்டுமொத்த அராபிய படையணியை உருவாக்க ஆசைப்பட்டாரு! ஒரு அவசர காலப் படையா! இந்த பயிற்சி பெற்ற வீரர்களை, உலகம் முழுக்க எந்த இடத்துல முஸ்லீம்கள் அச்சுருத்தப்பட்டாலும், அங்க கொண்டு போய் அவங்க பாதுகாப்புக்கு இருக்கிறா மாதிரி அமையணும்கிறது, அவரோட விருப்பம். பின்லேடனுக்கு ஏற்கனவே இருந்த, யோசனையிலிருந்து உருவானது தான் இந்த அல்கொய்தா”.



************************



ஆனால் எகிப்தில் இருந்து அய்மன் அல் ஜவாஹிரி வந்தபிறகு அதிலிருந்து பின்லேடனுடைய நோக்கம், நிரந்தரமாக மாற்றமைடந்துவிட்டது. அரசாங்கத்திற்கு எதிராக, சதி செய்த குற்றத்திற்காக மூன்று ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டு, 1996 இல் விடுதலையாகி, பாக்கிஸ்தானில் இருக்கும் பெஷாவருக்கு (Peshawar), அவர் வந்து சேர்ந்தார். அங்கு அவருடன் எகிப்தில் இருந்து வந்த சக தீவிரவாதிகளும், சேர்ந்து கொண்டனர்.

*********************

1986 இல், ஒரு கட்டத்தில், இளைஞனும், அரசியலில் மிகக்குறைந்த அளவே அனுபவம் உள்ளவருமான பின்லேடன், அப்போது அய்மன் அல் ஜவாஹிரியை சந்தித்தார்





ஒசாமா பின்லேடன் தீவிரவாதத்து மேல இச்சைக் கொள்ள ஆரம்பிச்சாரு! அய்மன் அல் ஜவாஹிரியை சந்திக்கறதுக்காக, பயங்கரவாதிகளோட காலங்கழிக்கத்துவங்கினாரு!



****************

ஜவாஹிரி தங்கிட்ட வந்த பின்லேடனை சந்திச்ச உடனே, அவருக்குள்ள இருந்த ஆற்றலை புறிஞ்சிக்கிட்டாரு! அதோட ஜவாஹிரிக்கு பின்லேடன் ரொம்ப நெருங்கின நண்பரா ஆனதோட, ஜவாஹிரிக்கு அதிக நம்பிக்கைக்கு உரியவராவும் ஆயிட்டாரு! ஜவாஹிரி அவருகிட்ட எழுச்சியடையற மாதிரியும், அறிவுப் பூர்வமாவும், மனோரீதியாவும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினாரு! ஜவாஹிரி கடைசியில பின்லேடனோட மூளையாவே மாறிட்டாரு!



****************

பயங்கரவாதத்தால் மட்டுமே எகிப்தில் இருக்கும் ஆட்சியை கவிழ்க்க முடியும், என்று ஜவாஹிரி நம்பத் துவங்கினார்.



குரான் சக இஸ்லாமியர்களின் ரத்தத்தை, இஸ்லாமியரே சிந்த வைப்பதை தடை செய்கிறது. ஆனால், தக்பீர் எனப்படும் முரண்பட்ட தெளிவில்லாத கோட்பாடு அந்த மாதிரி ரத்தம் சிந்துவதை ஞாயப்படுத்துகிறது.



*********************

அந்த வார்த்தையான தக்பீர் (takfir ) என்பது இப்ப அதிகளவில புழக்கத்துல வந்தாச்சு! அதோட அடிப்படையில மதத்துரோகம் என அறிவிக்கற ஒரு வார்த்தை. அதாவது யார்? இவங்களை அனுசரிச்சு போகலியோ அவங்களை மதநம்பிக்கையற்றவர்னு முடிவு பன்றதா அர்த்தம்.





***************

இஸ்லாத்தில் யார் முஸ்லிம்? என்றும், யார் அல்ல? என்றும் தீர்மானிக்கக்கூடியது கடவுள் ஒருவர் மட்டுமே!



***********************



ஒரு தீவிரவாதி அல்லது ஒரு பயங்கரவாதி தாங்களே ஒருத்தரை உண்மையான இஸ்லாமியன் இல்லைன்னு, அதுவும் அவரு உண்மையான மதநம்பிக்கையுள்ள இஸ்லாமியரா இருந்தாலும், தீர்ப்பளிக்கக்கூடியத் தகுதி தங்களுக்கு இருக்கறதா நம்பறாங்க! இதான் இப்ப இஸ்லாத்துக்குள்ள யுத்தம் ஆரம்பிச்சதுக்கான காரணம்.



*********************

ஜவாஹிரியும், அவரோட சக எகிப்தியர்களும், அதாவது தக்பீர் (takfir) சிந்தனையுள்ள எகிப்தியர்களும் தான், அவங்களால எதிர்காலத்துல என்ன? சாதிக்கமுடியும் என்ற சிந்தனைய பின்லேடன் மனசுக்குள்ள விதைச்சது.

*******************

யார்? வேணுன்னாலும் கொலை செய்யப்படலாம். இது அல்கொய்தாவுக்கும், இஸ்லாமியவாதி இயக்கத்துக்கும் சரித்திரத்தில திருப்புமுனையா அமைஞ்சது. அந்த இயக்கத்துக்குள்ள இந்த தக்பீர் (takfir ) கருத்து ஆழமா பதிஞ்சதுனால யாருக்கும் பாதுக்காப்பு இல்லைன்னு ஆயிடுச்சு!

***************
*******************


1988 இல் பின்லேடன் தொடர்ச்சியான பல கூட்டங்களை பெஷாவரிலிருந்த  தனது வீடுகளில் ஒன்றில் நடத்தினார். அந்த சந்திப்பின் அதிகாரப்பூர்வ குறிப்புகள் கிடைத்துள்ளன. ஜவாஹிரியையும் அவருடைய எகிப்திய ஆதரவாளர்களையும் பாராட்டிய பின்னர், ஒரு புதிய அமைப்பை உருவாக்குவதை அந்த குறிப்புகள் விவரிக்கின்றன.



************



அல்கொய்தாவின் பணிகள், 1988 செப்டம்பர் மாதம், 10 ந் தேதி துவங்கியது. அதனுடைய லட்சியம் கடவுளுடைய கட்டளைப்படி, அவருடைய மதத்தை வெற்றிகரமாக்குவதற்காக உயிர் வாழ்வது.



********************



ஜவாஹிரி இதுவரை அல்கொய்தாவில் சேரவில்லை, என்றாலும்  பின்லேட்ன் மீதான அவருடைய தாக்கம் மிகவும் ஆழமாகவும், தீவிரமாகவும் இருக்கிறது.



********************



அந்த தக்பீர் ( takfir ) என்ற கோட்பாடு, ஆழ்ந்த சமயப்பற்றோடு இருந்த, ஒரு சாதாரண இளம் இஸ்லாமிய மக்களை கூட்டம் கூட்டமா படுகொலை செய்யும் ஒரு கொலைகாரனா மாத்திருக்கு!



****************

ஒசாமா........
Right-click here to download pictures. To help protect your privacy, Outlook prevented automatic download of this picture from the Internet.

“”எனக்கும், உங்களுக்கும் ஜிகாத்தை பின்பற்றக் கூடிய வகையில ஆண்டவர் உதவி செய்வாருங்கற நம்பிக்கை எனக்கு இருக்கு! இது தான் நாம செய்யணும்னு கடவுள் விரும்பறாரு! அதாவது இந்த மதத்தை வெற்றியடைய செய்யணும்!””
**************************


...நன்றி; தமிழ் டிஸ்கவரித் தொலைக்காட்சி...03.05.2011-ஜிகாத்-அல்கொய்தா பின்னணியில் இருக்கும் மனிதர்கள் மற்றும் கொள்கைகள்


மதங்களை ஒழித்து, மனிதத்தை காப்போம்!

No comments: