Pages

Wednesday 11 May, 2011

ஒசாமா முதல் திரைப்படம்...பகுதி-2


(ஜிகாத்-அல்கொய்தா பின்னணியில் இருக்கும் மனிதர்கள் மற்றும் கொள்கைகள்)

..............முழுமையா நாசப்படுத்தியிருக்கும்னு விளக்கம் கொடுத்தாரு!


ஒரு சமூகம் வெளிப்பார்வைக்கு இஸ்லாமிய சமூகம் மாதிரி இருந்தாலும் உள்ளுக்குள்ள ஒரு புறமத சமுதாயமா வகைப்படுத்தற மாதிரிதான் இன்னமும் இருக்கமுடியும்னு இறுதியா சொன்னாரு! அதாவது அவர் இது மூலமா விளக்கமா புரியவைச்சது என்னென்னா? இந்த சமூகம் இஸ்லாமிய கோட்பாடுகள் படி காட்டிக்கிட்டாலும் அது இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு எதிரா நடந்துக்கலாம் என்கிறதை தான்.

இந்த முறைகேட்டையும், புறம்பான நடத்தையையும் மாற்றியமைக்க குதூப்புக்கு தென்பட்ட ஓரே வழி, மானூடச் சட்டங்களால் உருவாக்கப்பட்டதற்கு பதிலாக, கடவுளால் இயற்றப்பட்ட சட்டங்களை கொண்ட ஒரு இஸ்லாமிய குடியரசை நிறுவதுதான். எகிப்தின் புதிய மதச்சார்பற்ற ஆட்சியாளர்களுடனும், குத்தூப்பும் அவருடைய  சக இஸ்லாமிய மதவாதிகளும் தாங்கள் முரண்பட்டுகொண்டிருந்ததை வெளிப்படுத்தினர்.

மேற்கத்திய நாடுகளான உறவாலும் அதன் முன்னால் அரசர் பரூக் நாடுகடத்தப்பட்டது இன்னமும் தீர்க்கப்படாத கேள்வியாகவே உள்ளது.

1952 இல் ஒரு ராணுவ அதிகாரிகள் கூட்டம் எகிப்தின் ஆட்சியை கைப்பற்றியது. எகிப்தின் புதிய இரும்பு மனிதராக இருந்தவர் கேமல் அப்துல் நாசர் (Gamal Abdel Nasser Hussein). ஒட்டுமொத்த அரேபிய நாடுகளும், எகிப்தும் மதச்சார்பற்ற, தேசிய மற்றும் சோசலிச நாடுகளாக இருக்கவேண்டுமென்பது அவருடைய லட்சியமாக இருந்தது. அதாவது மெக்காவைவிட அவருடைய நோக்கு மாஸ்கோ மீது அதிகமாகப் பதிந்தது. தோல்வியில் முடிந்த ஒரு கொலை முயற்சியானது, இஸ்லாமிய சகோதரர்களை ஆயிரக்கணக்கில் வளைத்து கைது செய்ய நாசருக்கு போதுமான காரணமாக அமைந்தது. ஆறு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. பலருக்கு நீண்டகால கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. அவர்களில் ஒருவராக சையத் குத்தூப்பும் இருந்தார். இன்று அந்த இஸ்லாமிய சகோதரத்துவத்துக்கு தலைமை தாங்கி நடத்துபவர் அன்று குத்தூப்புடன் சிறையில் இருந்தார்.

அவரல் தன்னோட சகோதரர் கடுமையான சித்தரவதைகளுக்கு ஆளாக்கப்படுவதைப் பார்த்தார். மிக பலசாலியான மனிதனால கூட அந்த மாதிரி சித்தரவதையை தாங்க முடியாது.

நான் கைகால்களில விலங்குகளோட இருந்தேன். என் உடலில புழுக்கள் என் தசைகளை சாப்பிடுவதை பார்க்கமுடிஞ்சது. ஆனா அசையக்கூட முடியாது,

அவர் கூட சிறையில கூட்டமா இஸ்லாமிய சகோதரர்கள் இருந்தாங்க. அவங்க எல்லோரும் இதை எதிர்க்க ஆசைப்பட்டாங்க. ஆனா சிறை அதிகாரிகள் கையால சிறைக்கதவுகளை திறந்து விட்டு அவங்க எல்லோரையும் சுட்டுத்தள்ளினாங்க.. குத்தூப் இதை பார்த்து அதிர்ச்சியடைந்து, இந்தா மாதிரியான காரியத்தை, ஒரு சக இஸ்லாமியனுக்கு செய்யறவ, ஒரு உண்மையான இஸ்லாமியனா இருப்பானா? ன்னு தனக்குத்தானே கேட்டுக்கிட்டாரு!. அவங்க எல்லோரும் முஸ்லிம்கள் இல்லைன்னு முடிவு கட்டுனாரு.!. மனசுக்குள்ளே அவங்களை மதத்தை விட்டு தள்ளிவைச்சாரு!.

இந்த அனுபவம் அவரை சாலைகளில் அடையாள வாசகங்களை எழுத வைத்தது. மிகச்சுருக்கமாக, எளிமையாக, துல்லியமாக சொல்வதென்றால் அதை இஸ்லாமிய வாதிகளின் புரட்சி என்று கூறலாம்.

எங்களால ஜகல்லியா சமுதாயத்தோட சமாதானமா போகமுடியாது. அதனால் எங்களால எந்த விசுவாசமும் காட்டமுடியாது. இஸ்லாமிய ஜிகாத் மானிட இனத்தை இன்னொரு மனிதனுக்கு அடிமையாயிருக்கறதிலிருந்து விடுவிக்கறதால, அது ஆண்டவருக்கு செய்யற தொண்டாயிடுது.


இனைறய அல்கொய்தாவின் துணைத்தலைவராக இருக்கும் நபருக்கு, குத்தூப்பின் வாழ்க்கையும், கொள்கைகளும் மிகப் பலமான பாதிப்பை உருவாக்கியது.

அய்மன் அல் ஜவாஹிரி, 1951 ஆம் ஆண்டு கெய்ரோவில் பிறந்தார். ஜவாஹிரி ஒரளவிற்கு வசதி வாய்ப்புகள் நிறைந்த மனிதர்கள் வசிக்கக்கூடிய புறநகர்ப் பகுதியான மாடியில் (Maadi-Cairo sub urban place), கல்வியறிவு நிறைந்த மத்தியத்தரக் குடும்பத்தில் வளர்ந்தார். குத்தூப்பின் வழக்கறிஞராக இருந்த மவுஸ் அசாம் (Mahfouz Azzam) தான் ஜவாஹிரியின் தாய்மாமன்.

அய்மன் (ஜவாஹிரி) ரொம்ப அமைதியானவர். அதோட சில நண்பர்கள் மட்டும் தான் அவருக்கு இருந்தாங்க! ஆனா நிறைய படிப்பாரு! அவரு உண்மையிலேயே பெரிய அறிவாளி! அவரோட சிறு வயசிலேயே சையத் குத்தூப்போடயும் மத்தவங்களோடயும் சேர்ந்து மத அரசியல் சம்பந்தமான புத்தகங்களை நிறையப் படிப்பார். அவருக்கு எல்லா விஷயங்களிலேயும் ஆர்வம் ரொம்ப அதிகம்.


சையத் குத்தூப் ஒரு குடும்ப நண்பராக இருந்ததுடன், அவர் மீது நடந்த வழக்கும், கிடைத்த தண்டனையும், வாலிப வயதில் இருந்த அய்மன் அல் ஜவாஹிரிக்கு மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கின.

1965 இல் எகிப்திய அதிகாரிகள் குத்தூப்பை மீண்டும் கைது செய்தனர்.


நான் அந்த வழக்கு விசாரணை குறிப்புகளை படிச்சேன்! இந்த மனிதருக்கு தனக்கு மரணதண்டனை கண்டிப்பா விதிக்கப்படும்ணு நிச்சயமா தெரிஞ்சிருக்கு! நாசர் அரசு அவரை மறுபடியும் கைது செஞ்சி விசாரணைக்குட்படுத்தியதே தன்னைப் படுகொலை செய்யத்தான் என்பதை தெரிஞ்சிக்கிட்டாரு!


நாசரிலிருந்து கீழ்மட்டம் வரை குத்தூப் மரண தண்டனையை எதிர்த்து முறையீடு செய்வார்கள் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் அவர் அதை மறுத்துவிட்டார்.


தன்னோட கொள்கைகளும் கோட்பாடுகளும், தான் உயிரோட இருக்கறதை விட இறந்தாத்தான், அதிக பாதிப்பை ஏற்படுத்தும்னு, குத்தூப் பதில் கொடுத்தாரு!


தளபதி போர்ட் அலார்ம் அந்த மரண தண்டனை நிறைவேற்றப்படுவதை உறுதி செய்தார்.


அவர் ரொம்ப சத்தமா பேசுவாரு! கடவுளோட தீர்ப்பைத் தவிர மத்த தீர்ப்பை எல்லாம் பொய்யானது! என சொல்லிகிட்டேயிருந்தார். அவரை பின்பற்றி நடக்கிறவங்க, கடவுளோட தீர்ப்பை மட்டும் தான் நம்பியாகணும்ன சொல்லுவாரு!


குத்தூப்பின் மரண தண்டனை சிறைவேற்றப்பட்டது. அய்மன் அல் ஜவாஹிரிக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. பல ஆண்டுகளுக்குப் பின்னர் அந்த சம்பவம் தான் ஜிகாத்திய இயக்கத்தை பற்றவைத்த ஒரு தீப்பொறியாக அமைந்ததாக அவர் விவரித்தார்.


இந்த இளைஞன் தன்னோட பதினாறாவது வயசில, இந்த இஸ்லாமிய இயக்கத்துல சேர்ந்தான். சையத் குத்தூப்புக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதுக்கப்புறம் மக்கள், தங்களுக்கு ஏதாவது கெடுதல் நடக்குமோன்னு பயந்து அந்த இயக்கத்தை விட்டு ஒடிக்கிட்டிருந்தப்போ! இவன் போய் அதில சேர்ந்தான். அவன் அந்த பாதிப்பை விரும்பி அதில சேர்ந்தான். இதிலிருந்து அய்மன் அல் ஜவாஹிரியோட மனதிடம் எப்படியிருந்ததுன்னு நமக்கு காட்டுது.


தான் எழுதிய கட்டுரைகளில் ஜவாஹிரி இந்நாட்களில் சையத் குத்தூப்பின் கவிதை ஒன்றிலிருந்து கோடிட்டு காட்டயிருக்கிறார்.

“”சகோதரா! உனக்கெதிரே நின்றிருக்கும் பாதை!, ரத்தத்தால் நனைந்துள்ளது!. உனது தலையை இடதோ! அல்லது வலதோ! திருப்பாது நேரே சொர்க்கத்தை மட்டும் நோக்கி பார்ப்பாய்””


1967 இல் இஸ்ரேல் தனது எல்லைகளில் நிறைந்திருந்த மூன்று அரேபிய ராணுவங்களின் மீது ஒரு எதிர்பாராத கடுமையான தாக்குதலை நிகழ்த்தியது.


1967 ல நடந்த அந்த ஆறு நாள் தாக்குதல்ல, ஏழாவது நாள், நவீன கால அரேபியர்களால முகம்மது நபிக்கப்புறம் வந்த தலைவர்கள்ல, அடுத்த சக்தி வாய்ந்த, மகத்தான அரேபியரா இருக்கலாம்னு கருதப்பட்ட நாசருடைய செல்வாக்கு முறியடிக்கப்பட்டது. அரேபிய தேசிய வாதம் அவரோட சேர்ந்து அழிஞ்சு போச்சு! இது அரேபிய தேசியவாதத்துக்கு எதிரா நடந்த வாட்டர்லூ யுத்தம்!


இந்தளவுக்கான மாபெரும் தோல்வியால், விழிப்படைந்த இஸ்லாமிய புத்துணர்ச்சியானது, முஸ்லிம் உலகத்தையே அதிர வைத்தது. அதற்கான அரேபிய வார்த்தையான சாஹவாவுக்கு (Sahawa) "விழித்தெழுதல்" என்று அர்த்தம்.

நாசர் இறந்த பொழுது அவரோடு சேர்ந்து தேசியவாத கனவும் அழிந்தது. ஜவாஹிரி, அதை இது போல வர்ணிக்கிறார்.


1967 இல் நடந்த முறியடிப்புக்கு பிறகு, அதன் நேரடியான பாதிப்பினால் பலமக்கள், அதிலும் குறிப்பாக இளைஞர்கள் தங்கள் துவக்க கட்ட அடையாளத்திற்குத் திரும்பினார்கள். அதாவது நாகரிகமடைந்த இஸ்லாமிய நாட்டின் அங்கத்தினர்களாக மாறினார்கள்.


அந்த காலக்கட்டத்தில் தான் அப்துல்லா ஸ்லைப்பருக்கு ஜவாஹிரியின் குடும்பத்தினரையும், உறவினர்களையும் அறிந்து கொள்ள நேர்ந்தது.


அசாம் குடும்பம் ரொம்ப பிரபலமான குடும்பம், உண்மை என்னென்னா? நான் இஸ்லாமியனா மதம் மாறினவன். அவங்க ரொம்ப பாராட்டினாங்க! அதனால அவங்க மூலமா, நான் அய்மனை சந்திச்சேன். அவர் அப்பத்தான் திருமணம் பண்ணிகிட்டு, ஒரு மருத்துவ படிப்பையும் , மருத்துவக்கல்வி நிலையத்திலேயும் முடிக்கிற நிலைமையில் இருந்தாரு. அவரு மட்டும் தான் நான் என்ன நடக்குதுன்னு தெரிஞ்சக்கனும்கிறதுக்காக, உலகத்துக்குள்ளே ஒரு சுற்றுப்பயணாமா கூட்டிட்டுப் போனாரு.

நான் இளைஞர்கள் போஸ்டர்கள் தயார் பன்றதையும், ஹிஜாப் (hijab-muslim women traditional dress) எனப்படும் பெண்கள் பர்தாக்கள் தயாரிக்கறதையும், நான் பார்த்தேன். அங்க முழு நேரமும் செயல் விளக்கம் நடத்திகிட்டே இருந்தாங்க!


இஸ்லாமிய புத்துணர்ச்சி எல்லாப் பல்கலைக்கழகங்களையும் கூட அடைந்திருந்தது.


அவர் ஒரு தீவிரவாதின்னு நான், ரொம்ப நேரங்கழிச்சு உணர்ந்துகிட்டேன். பல்கலைக்கழக்ங்கள்ல பெருகிட்டு வந்த, இந்த இஸ்லாமியவாத மனோபாவத்துக்கு, அவர் ஒரு முக்கிய காரணகர்த்தான்னு நினைச்சேன்.

ஆனா ஒரு திடீர் புரட்சியில, ஆட்சியையே கைப்பற்றக்கூடிய அளவுக்கு, ஒரு ரகசிய இயக்கத்தை அவர் சேர்ந்தவர்னு, அப்ப நினைச்சு கூடப் பார்க்கலை.

ஜவாஹிரி தன் உண்மை நோக்கத்தை வெளியில தெரியாது, சாமர்த்தியமாக மறைத்து வந்தார். மருத்துவக் கல்லூரியில் நல்ல மாணவனாக, தாடியற்ற நவீன இளைஞனாக இருந்தார். ஆனால் நாசருக்கு, அடுத்த ஆட்சியாளருக்கு எதிரான கொலை சதியில், அவர் ராணுவ அதிகாரிகளை ரகசியமாக சேர்க்கத்துவங்கினார்.

டேவிட் முகாமில் இஸ்ரேலுடனான அமைதி ஒப்பந்தத்தில் அன்வர் சதாத் கையெழுத்திட்டார். அதனால் அவர் எகிப்துக்கும், இஸ்லாமுக்கும் துரோகமிழைத்தவராக, ஜவாஹிரி கருதினார்.


ஜவாஹிரி ஒரு புரட்சியாளர் என்கிறதோட இந்த அரசை, ஒரு சட்டவிரோதமானதுன்னு நம்பினார். அவரோட புட்சிகரமான கொள்கைகள் அவரோடப் பதினாறாவது வயசுல ஆரம்பிச்சது. இந்த ஆட்சியமைப்பைத் தூக்கியெறிய, ஆயுதப் போராட்டம், இல்லை ராணுவ அமைப்புதான் தேவைங்கற எண்ணம், அவரை ஆட்டி வைச்சது.


இஸ்லாமியத் தீவிரவாதிகளால வளர்ந்து வரும் அச்சுறுத்தலால் ஏற்பட்ட விழிப்புணர்ச்சி காரணமாக, அரசாங்கம் வழக்கமாக சந்தேகத்துக்குரியவர்களை கைது செய்யத் துவங்கியது. 1981 இல் ஜவாஹிரி ஏற்கனவேத் திட்டமிட்டு சேர்த்திருந்த, ராணுவத்திலிருந்த அதே பயங்கரவாதக் குழுவின் பகுதி, தாங்களும் பிடிபடுவதற்கு முன்பாக ஒரு திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்தது.


ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதத்தில் அன்வர் சதாத் (Muhammad Anwar Al Sadat ), ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்வதும் வழக்கம். அந்த நிகழ்ச்சிதிட்டமிட்டபடி வழக்கம்போல  நடைபெற்றது. ஆனால் அணிவகுப்பு மரியாதையேற்கும் மேடைக்கு முன்பாக ராணுவ வாகனங்களில் ஒன்று திடீரென்று நின்றபோது, பத்திரிகையாளர்களும், ஒளிப்பதிவாளர்களும் சிதறி ஒடினார்கள். நான்கு வீரர்கள் அந்த மேடையை நோக்கி தோட்டாக்களை மழையாக பொழிந்தார்கள். சதாத் இறந்து வீழ்ந்தவுடன் கொலைகாரர்களில் ஒருவன், ““நான் பேரோவைக் கொன்று விட்டேன்”” என்று உரத்தக்குரலில் கூவினான்.


ஜவாஹிரியும் அவரோட குழுக்களும் சையத் குத்தூப்போட கருத்துகளை படிச்சதால, அவங்க அந்த படுகொலையை, அவங்க புறிஞ்சிகிட்டபடி, இன்னொரு முஸ்லீமை மதநீக்கம் செய்யறதை ஞாயப்படுத்துனாங்க! அந்த தர்க்கத்துக்கு முதல்ல பலியானவரு அன்வர் சதாத். அவங்க அன்வர் சதாத் படுகொலையை ஞாயப்படுத்துனாங்க!. ஏன்னா? இனிமேலும் அவர் ஒரு இஸ்லாமியர் இல்லைன்னு அவங்க முடிவுப் பண்ணிட்டாங்க! அதனால அவர் வாழத்தகுதியில்லாதவர்ன்னும் அறிவிச்சாங்க!


காலத்தாமதமின்றி கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்ட நூற்றுக்கணக்கான இஸ்லாமிய மதவாதிகளில் அய்மன் அல் ஜவாஹிரியும் ஒருவர். ஜவாஹிரிக்கு அடுத்த அறையில் அடைக்கப்பட்டிருந்தவர் மன்டாசாத் அல் சையாத்.


அவங்க போலிஸ் உபயோகிக்கற தடி மாதிரி ஒன்னை உபயோகிச்சி எங்களுக்கு எலிக்டிரிக் ஷாக் கொடுத்தாங்க! எங்களோட ஈறுகள்ல, எங்க உதடுகள்ல, எங்க மார்புல, எங்க பிறப்புறுப்புகள் எல்லாத்திலேயும் அதிர்ச்சி கொடுத்தாங்க!  அவங்க எங்களை ஒரு நாற்காலி மேல நிக்கவைச்சி, அப்புறம் எங்க கைகளை பின்பக்கமா வைச்சி கட்டி அதை ஒரு கதவு முனையில இழுத்து கட்டிட்டாங்க, அப்புறம் அந்த நாற்காலியை நகர்த்திட்டாங்க!. உங்க கைகளோட ஆதாரத்துல, நீங்க அந்த கதவுல இருந்து தொங்கிகிட்டு இருப்பீங்க! அது கைகள்ல, ஒரு தற்காலிக வாதத்தை உருவாக்கிடும். சிலபேர் ஆயுள் முழுக்க வாதத்தால செயலிழந்து போயிட்டாங்க!.


அந்த உடல் ரீதியான சித்திரவதை மிகக்கொடுமையாக இருந்தாலும், மனரீதியாக இழிவுப்படுத்தி செய்த கொடுமைகள் தான் அதைவிட கொடுமையாக இருந்தன. ஜவாஹிரி மனம் பேதலித்து எல்லாப் பெயர்களையும் கூறிவிட்டார். அந்தச் சித்திரவதைகளை அனுபவித்தது ஜவாஹிரியின் மனதில் ஆறாத பழிவாங்கும் தாகத்தை தூண்டிவிட்டது. அவருடைய வழக்கு விசாரணையின்போது மிக வரம்பு மீறிய முரட்டுத்தனமாகவும் நடந்து கொண்டார்.
********************

ஜவாஹிரி....
நாங்க எங்க மதத்தை நம்பறோம் அதோட கொள்கைகளையும், அதை பின்பற்றி நடக்கிறதையும், நமிபிக்கையோடு செஞ்சு, ஒரு இஸ்லாமிய நாட்டையும், ஒரு இஸ்லாமிய சமூகத்தையும் ஸ்தாபிக்க எங்களால முடிஞ்சதை செஞ்சிட்டு வர்றோம்””

லாஹி...லாஹ...இல்ல்லா....லாஹி...லாஹ...இல்ல்லா

  எங்க மதத்துமேல எங்களுக்கு நம்பிக்கையிருக்கறதுக்காக நாங்க வருத்தப்படல, அதுமட்டுமில்லாம நாங்க, பல தியாகங்கள் பண்ணியிருக்கோம். இஸ்லாமுக்கு வெற்றி கிடைக்கிற வரைக்கும், இன்னும் பலத் தியாகங்கள் பண்ணத் தயாரா இருக்கோம்!

லாஹி...லாஹ...இல்ல்லா....லாஹி...லாஹ...இல்ல்லா


கிட்டத்தட்ட மூனுலிருந்து நாலு வருஷங்கள் வரைக்கும், ஜவாஹிரி சிறையில இருந்திருக்கார்னு நான் நினைக்கிறேன்.
அப்ப அவர் அனுபவிச்ச சித்திரவதைகளால, அவரோட மனசு உடைஞ்சு போனதோட, அதனால அவர் வாழ்க்கையே அந்த கணத்திலேயிருந்து கடுமையான மாற்றமடைஞ்சது. அவர் அந்த நாட்டை மன்னிக்கவோ? ஏன்? தன்னையேக் கூட மன்னிச்சிக்கலைன்னு நான் நினைக்கிறேன்.


எகிப்திய அரசாங்கம், இஸ்லாமிய சகோதரத்துவத்தை ஒட்டுமொத்தமாக நசுக்கிவிட முயற்சிகள் செய்தது. ஆனால் அந்த கொள்கைகளை அழிக்கமுடியவில்லை. இந்த செயலானது சவுதி அரேபியாவையும், இளம் ஒசாமா பின்லேடனையும் சென்றடைந்தது.



எகிப்து அரசாங்கம் தொடர்ந்த, இஸ்லாமிய சகோதரத்துவ அங்கத்தினர்கள் மேல் நடந்த அடக்குமுறைகளால் பலர் தலைமறைவானார்கள். இப்படி நாட்டை விட்டுவந்த பல முஸ்லிம் சகோதரர்கள், பின்லேடன் மாணவராக ஜெட்டா பல்கலைக்கழகத்தில் இருந்த பொழுது, கல்வி கற்பிக்க வந்தார்கள். அப்படி வந்தவர்களில் ஒருவர் தான் சையத் குத்தூப்பின் சகோதரரான முகம்மத் குத்தூப்.


சையத் குத்தூப்பின் சகோதரரான முகம்மத் குத்தூப் சிறையிலிருந்து வெளியே வந்ததும், நேரா சவுதி அரேபியா வந்து சேர்ந்தாரு! அவரு மத்தவங்களை கவரக்கூடியவரு! ஒரு எழுத்தாளராவும், தத்துவவாதியாவும், அவரோட கொள்கைகள்ல தன்னோட சகோதரர்களுக்கு அவர் சமமாக இருந்தாரு! ஜெட்டாவில அவர் விரிவுரைகள் கொடுப்பாரு! அதை பின் லேடன் போய் ஆர்வமா கேப்பாரு!


முஸ்லிம்கள் ரொம்ப ஆதிக்கத்தோட இருக்கணும்னும், தனித்துவத்தோட இருக்கணும்னும் முகம்மத் குத்தூப் அறிவித்து அழைப்பு விடுப்பாரு!.....

************
...தொடரும்..பகுதி-3
...நன்றி; தமிழ் டிஸ்கவரித் தொலைக்காட்சி...03.05.2011-ஜிகாத்-அல்கொய்தா பின்னணியில் இருக்கும் மனிதர்கள் மற்றும் கொள்கைகள்

No comments: