மரியம் பிச்சை கார் விபத்துக்குள்ளானது எப்படி?
தமிழக சுற்றுச் சூழல் துறை அமைச்சர் மரியம் பிச்சை விபத்தில் காலமானார். அவருக்கு வயது 60. 16.05.2011 அன்று அமைச்சராக பதவியேற்ற மரியம் பிச்சை, சென்னையில் இன்று எம்எல்ஏவாக பதவியேற்க இருந்தபோது இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
திருச்சியில் இன்று காலை முத்துரையர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, அமைச்சர் மரியம் பிச்சை, அமைச்சர் சிவபதி ஆகியோர் தனித் தனி காரில் சென்னைக்கு வந்துகொண்டிருந்தனர். மரியம் பிச்சையுடன் நண்பர் கார்த்திக்கேயன், அமைச்சரின் உதவியாளர் வெங்கடேசன், அதிமுக பிரமுகர்கள் சீனி, மகேஷ்வரன் ஆகியோர் சென்றனர். காரை டிரைவர் ஆனந்த் ஓட்டிவந்தார்.
சமயபுரம் அருகே பாடாலூர் என்ற இடத்தில் முன்னால் சென்றுகொண்டிருந்த டிப்பர் லாரியை காரி முந்தி செல்ல முயன்றது. அப்போது எதிரே வாகனம் ஒன்று வந்ததால் டிரைவர் காரை இடதுபுறமாக திருப்பினார். அப்போது அருகில் சென்றுகொண்டிருந்த டிப்பர் லாரி மீது அமைச்சரின் கார் வேகமாக மோதியது. இந்த விபத்தில் கார் முன்பகுதியில் அமர்ந்திருந்த அமைச்சர் மரியம் பிச்சை உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது உடல் உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த தகவல் கிடைத்ததும் அதிமுகவினர் மருத்துவமனையின் முன்பு குவிந்தனர்.
...நன்றி நக்கீரன் 23.05.2011
**************************
பொது ஜனம்: அதிமுக எத்தனை சீட்டுகளில் வெற்றிபெறும்.....ஜெயலலிதாவின் சுக்கிர திசை...வக்கிர திசையெல்லாம் கணித்த பிராடு பணிக்க ஜோதிடர்கள். இந்த அதிமுக மந்திரி மரியம் பிச்சையின் மரணத்தை மட்டும் முன்கூட்டியே கணிக்கத் தவறிவிட்டார்களே....? 7 நாள் தான் மந்திரியா இருந்திருக்காரு! அதுக்குள்ள மறைஞ்சு போயிட்டாரே! அவருக்கு நம்ம இரங்கலை தெரிவிச்சுக்கணும்பா.....
பொது ஜனம்; இதுக்கெல்லாம் கூடவா? கருத்து கணிப்பு போடுவாங்க! தேர்தல்ல பத்திரிகை காரங்க கருத்து கணிப்பு போடுவாங்க...அதை வைச்சு அப்படியே ஜோதிடர்கள் உல்டாப்பண்ணி புருடா விட்டுருப்பாங்க! சரி! அப்படியே! அவருடைய ஆயுளை கணிச்சிருந்தா மட்டும் என்ன ஆகியிருக்கப்போகுது...?
பொது ஜனம்: அவருக்கு பதில் வேறொருத்தரை தேர்தல்லை நிக்க வைத்திருக்கலாம் இல்லை.. இப்ப தேவையில்லாம இன்னைக்கு எம்.எல்.ஏ பதவியேற்புக்கு அபசகுனமா ஆயிடுச்சே....! அவர் குடும்பத்துல அவரை இழந்து இருக்க மாட்டாங்க இல்லை!
பொது ஜனம்: ஒரு வேளை பழைய தலைமைச் செயலகத்துல ஆவி புகுந்திருக்கோ! அதுக்கு ஒரு சாந்தி ஹோமம் நடத்தினா நல்லா இருக்கும்! அதுக்கு ஒரு 10 கோடி செலவுப்பண்ணிக்கூட அதையும் நடத்திப்புடலாம்.
பொது ஜனம்: ஏய்யா! ஒரு மந்திரி இறந்துருக்காரு! என்ன? இருந்தாலும் அவரும் மனுஷன் தானே! அவர் மறைஞ்சதுக்கு இப்படி மூடநம்பிக்கையில சேர்த்துக்கிறீங்களே! இது நல்லாவா இருக்கு!
பொது ஜனம்: நல்லா தான் இல்லை. அங்க மட்டும் என்ன வாழுதாம்?. மந்திரி மறைவிற்காக பதவியேற்வு விழாவை தள்ளிக்கூடவைக்கலியே! அவங்களே துக்கப்படல, துயரப்படல.....நல்ல நேரத்தை ஒதுக்கலை (இதை வுட்டா நல்ல நேரமும் இல்லை) இல்லை....அப்பறம் மத்தவங்க பட்டா என்ன? படாட்டி என்ன? மக்கள் ஏற்கனவே 10 நாளா பட்டுகிட்டிருக்கிற துயரத்துக்கிடையே மந்திரியின்... மறைவுத் துயரமும் மறைஞ்சு போச்சு அவ்வளவு தான்.
பொது ஜனம்: அப்ப தேர்தல் கமிஷனுக்கு வேலை ஆரம்ப ஆயுடுச்சு! இவ்வளவு சீக்கிரத்தில இடைத்தேர்தலா? எதுவுமே நிரந்தரமில்லேயேப்பா! இதை புறியவைக்கிறதுக்குத் தான் இந்த துயரமா?
பொது ஜனம்: ஆமா! அப்படியே புறிஞ்சிட்டாலும்.........
No comments:
Post a Comment