(ஜிகாத்-அல்கொய்தா பின்னணியில் இருக்கும் மனிதர்கள் மற்றும் கொள்கைகள்)
இது தான் ஒசாமா பின்லேடனுடைய முதல் திரைப்படம். 1989 இல் எடுக்கப்பட்டது. அதில் அவர் ஆப்கானிஸ்தானில் ரஷ்ய ஆக்கிரமிப்பை எதிர்த்து தான் செய்யும் போரில் கலந்து கொள்ள இஸ்லாமியரை வேண்டிக்கொள்கிறார். ஆக்கிரமிப்பை எதிர்த்த இந்த இளம் தலைவனை உலகிலேயே அதிகமாகத் தேடப்படும் பயங்கரவாதியாக எது மாற்றியது? இன்று தனது பிரதிநிதியாக இருக்கும் அய்மன் அல் ஜவாஹிரியின் தூண்டுதலுக்கு எப்படி அவர் ஆளாக்கப்பட்டார்?
இந்த மனிதர்கள் எப்படி? சாதாரண யுத்தமாக இருந்த ஒரு இஸ்லாமியக் கோட்பாட்டை மேற்கத்திய உலகுக்கு எதிரான பயங்கரவாத யுத்தமாக மாற்றினார்கள்? அத்துடன் தாங்கள் ஜிகாத் என்று கூறிக்கொள்ளும் ஒரு மரண எண்ணிக்கையை ஞாயப்படுத்த அமைதியையும், மகிமையும் வாய்ந்த இஸ்லாத்தை அல்கொய்தாவால் எப்படி? பயன்படுத்திக்கொள்ள முடிந்தது?
1998 இன் துவக்கத்தில் ஒசாமா பின்லேடன் தனது செயற்கைகோள் தொலைபேசியிலிருந்து தொடர்ச்சியாக பலமுறைத் தொட,ர்பு கொண்டார். அந்த அழைப்புக்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து வடக்கு லண்டனில் ஒரு புறநகர் பகுதியில் இருந்த வீதிக்கு சென்றிருப்பதை, அமெரிக்க சமிக்ஞை உளவுத்துறை கண்டுபிடித்து பதிவு செய்திருக்கிறது. அது ஒரு காலத்தின் அல்கொய்தாவின் லண்டன் பிரிவின் தலைவராக இருந்தவரின் இருப்பிடமாக இருந்துள்ளது.
1998 பிப்ரவரி 22 ந் தேதி மேற்கு லண்டனில் இருந்து வெளியாகும் ஒரு அரபு மொழி தினசரியான அல்கொர்ட்ஸ்க்கு (AL-Quads-AL Arabi) ஒரு செய்தியை பேக்ஸ் மூலம் அனுப்பினார். அதன் ஆசிரியர் ஒரு காலத்தில் ஒசாமா பின்லேடனை ஆப்கானிஸ்தானில் பேட்டி கண்டிருக்கிறார். ஆனால் அமெரிக்கர்களையும் யூதர்களையும் கொல்வதாக விடப்பட்ட அச்சுறுத்தல் செய்தி அடங்கிய பேக்சை எதிர்கொள்ள எதுவும் அவரை தயார் செய்திருக்கவில்லை.
""அமெரிக்கர்களையோ, அவர்களின் கூட்டணியில் இருப்பவர்களையோ, ராணுவத்தினரோ அல்லது பொது மக்களோ போரிடுவதும் கொல்வதும் உலகின் எந்தவொரு பகுதியில் இருக்கும் ஒரு இஸ்லாமியரின் கடமை.""
அது அப்படி திகில் அடிக்கவைச்சது. ரொம்ப ரொம்ப பயங்கரமான லெட்டர் அது. அப்பாவி மக்களை எந்தவொரு நியாயுமுமில்லாம கொல்றதுங்கிறது, ரொம்ப கொடுமை. இது இஸ்லாமோட கொள்கை இல்லை. அப்படி செய்யறது இஸ்லாத்துக்கு புறம்பானது. ஆனா அது ரொம்ப முக்கயமானதுங்கறதுனாலே, நான் அதை வெளியிட்டேன்.
மேற்கத்திய நாடுகள் மீதான அல்கொய்தாவின் போர் அறிவிப்பானது, ஆங்கிலேய பத்திரிகையுலகில் மிக்ச்சிறிய தாக்கத்தை மட்டுமே ஏற்படுத்தியது. ஒசாமா பின்லேடன் என்னும் இந்த அற்ப மனிதன் யார்? என்கிற அலட்சியம்.
மூன்று மாதங்களுக்குப் பிறகு உள்ளூர் பழங்குடியினர் போல வேடமணிந்து ஏ பி சி (ABC) செய்தி நிருபரான ஜான் மில்லர் இந்தக் கேள்விக்கு விடை கண்டுபிடிப்பதற்கான வழியில் சென்று கொண்டிருந்தார். அவரும் கனடாவைச் சேர்ந்த அவருடைய கேமரா மேனும் அல்கொய்தாவின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிக்குள் ஊடுருவிச் சென்றிருந்தனர்.
ஆனால் ஒவ்வொரு சாலைத் தடையிருக்கும் இடத்திலும், காவலாளிகள் கூடுதலான விரோத பாவத்துடனும், சந்தேகத்துடனும், இருக்கத் துவங்கினார்கள்.
அந்த காலத்துல அல்கொய்தா உலகளவில ஆரம்ப நிலையில இருந்த ஒரு பயங்கரவாத இயக்கமா இருந்தாலும், மத்த அதிகார மையங்கள் மாதிரி தான் செயல்பட்டது. எப்படின்னா? எங்க இரண்டு டிரைவரும், அத்தாட்சி காகிதங்களை கொண்டுவர மறந்துட்டதுனால, எங்களை எல்லா இடத்திலேயும் நிறுத்தி விசாரிச்சாங்க.
போகும்போது ஆட்கள் புதர்கள் பின்னாடி இருந்து ஒடி வந்தாங்க.
அவங்க கைகள்ல கிரானைட் லாஞ்சர்களும், ஆட்டோமெட்டிக் துப்பாக்கிகளும் இருந்தது. அவங்க வண்டியை நோக்கி ஒடி வந்து, வண்டி கதவை இழுத்து திறப்பாங்க. அது துரதிருஷடவசமா ஏம்பக்கமா இருந்தது. என் கண்ல டார்ச்சையோ, இல்லை பிளாஷ் லைட்டையோ அடிப்பாங்க. ஒரு துப்பாக்கி என் தலைல பதியும், ஒரு துப்பாக்கி என் விலால பதியும்.
எங்க இரண்டு பக்கத்திலே இருந்தும் எச்சரிக்கைக்காக அவங்க சுட்டாங்க. இருட்டல துப்பாக்கி வெடிக்கும் போது வர்ர வெளிச்சமும், அந்த துப்பாக்கி சுடும்பொழுது மேக்சினிலிருந்து வெளி வருகின்ற முப்பது ரவுண்டு தோட்டாக்களின் சத்தமும் கேட்டது. அப்ப எங்கம்மா சொன்ன வார்த்தைகள் தான் ஞாபகத்துக்கு வந்தது. யாருக்காக நீ போய் சாகணும்?. யார்? அந்த ஒசாமாங்கிறதுதான்?
நடுராத்திரில அந்த மலைமேல பெட்ரோல்ல இயங்குற ஜெனரேட்டர் மூலமா அதீத பிராகாசமான விளக்குகளை எரிய விட்டிருந்ததோட, அந்த இடத்துல ஒரு பெருங்கூட்டமே கூடியிருந்தது. எல்லாருமே முழுக்க முழுக்க ஆயுதங்களோட இருந்தாங்க.
*********
அது மூன்றாம் உலகயுத்தம் துவங்கிட்ட மாதிரி ஒரே ரகளையா இருந்தது. அதோட ஒசாமா அங்கு வந்து சேர்ந்தாச்சுன்னு தெரிஞ்சது. அப்புறம் திடீர்னு நடந்து வந்து கண் முன்னாலே நின்னாரு!
***********
நான தயாரா வச்சிருந்த பதினாறு கேள்விகளோட உக்கார்ந்திருந்தேன்! இது ராணுவ வீரர்கள் யுத்த களத்தில சண்டை போடற மாதிரி இல்லையே! இந்தப் போர்ல அப்பாவிக் குழுந்தைகளும் பெண்களும் தானே பாதிக்கப்பட்டிருக்காங்க! கோழைகளால செயல் வடிவம் கொடுக்கப்படற இந்த பயங்கரவாதத்தை எப்படி? நீங்க போர்னு சொல்லமுடியுது?
அதுக்கு அவர் உங்களை மாதரி ஒரு அமெரிக்கர் கிட்டேயிருந்து, இந்த மாதிரி வினோதமான கேள்வி வருதே! ன்னாரு!
ஒசாமா....
“”ஹிரோஷிமாவையும் (Hiroshima), நாகசாகியையும் (Nagasaki) அழிச்சி இந்த நிலைமைக்கு கொண்டு வந்தது, உங்க நாடு இல்லையா! இந்த இடத்துல இருந்தவங்க யுத்தத்தில ஈடுபடாத அப்பாவிப் பெண்களும், குழந்தைகளும் இல்லையா!
நாங்களும் நீங்க வகுத்த சட்டத்தை, அப்படியே கையிலெடுத்துகிட்டு, அதை உங்கமேல பிரயோகம் பண்ணிக் காட்டறோம். அவ்வளவு தான்.”” னாரு!
அதற்கு மூன்று மாதங்களுக்குப் பிறகு, ஒசாமா பின்லேடன் மேற்கத்திய நாடுகள் மற்றும் அமெரிக்காவுக்கு எதிரான இந்த யுத்தத்தில் இந்த முதல் தாக்குதலை தொடுத்தார்.
கென்யாவிலும், தான்சான்யாவிலும் அமெரிக்கத் தூதரகங்களுக்கு முன்பாக வெடிகுண்டுகள் வெடிக்கப்பட்டன. அந்த வெடிகுண்டு விபத்து 1 சி.ஐ.ஏ உளவாளியையும், 11 அமெரிக்கப் பிரதிநிதிகளையும் கொன்றது. 5000 க்கும் மேற்பட்ட ஆப்ரிக்கர்கள் படுகாயமடைந்ததுடன், 234 பேர் கொல்லப்பட்டனர்.
பின்லேடன் பயங்கரவாதத்தை நியாயப்படுத்த இஸ்லாத்தை நெறிபிறழ்வாக பயன்படுத்துவதாக பெரும்பாலான இஸ்லாமியர்கள் கருதுகிறார்கள்.
ஜிகாத் என்பதற்கு நேரடியான அர்த்தம், கடும்முயற்சி அல்லது போராட்டம். ஆகவே இஸ்லாம் கூறுவதின்படி, ஜிகாத் என்பது பாவங்களையும் தூண்டுதல்களையும் எதிர்த்து நடத்தும் அமைதியான போராட்டம். ஆனால் வாட்கொண்டு நடத்தும் ஜிகாத்துகளும் உண்டு.
ஏசுவையும், புத்தரையும் போல் அல்லாது தீர்க்கதரிசி முகம்மது, ஒரு வீரரும், ஆட்சியாளருமாக இருந்திருக்கிறார். அவர் படைகளுக்குத் தலைமை தாங்கிச் சென்று யுத்தங்களில் போரிட்டிருக்கிறார்.
முகம்மது நபி வரையறுத்த ஜிகாத், கிருஸ்தவ கோட்பாட்டின்படி சாதாரணமான யுத்தம் என்று கூறப்படுவதிலிருந்து, வேறுபட்டதல்ல.
ஒரு அமெரிக்க யூதர், அவர் எகிப்தில் வாழ்ந்த இஸ்லாம் மதத்தை தழுவியவர்.
""இஸ்லாமே, ஒரு யுத்த அடிப்படை சூழலிலே தான் பிறந்தது. சுய தற்காப்பிற்காக ஒருத்தர் போரிடலாம், அப்படிங்கறது தான் அந்த சமுதாயத்துக்கு நபிகள் நாயகம் வெளிப்படுத்திய உண்மை. ஆனா உங்க எதிரி அமைதியை நாடினா? அவரோட சமதானமா போகணும், ஏன்னா? ஆண்டவர் அதைத்தான் விரும்பறாரு! அதிலேயிருந்தும், நபிகளோட மத்த வாசகங்கள் மூலமாகவும், ஜெனிவா ஒப்பந்தத்தோட முதல் விதிகள் மாதிரியே இருக்கறதை, அதாவது பெண்களையும், குழந்தைகளையும் கொல்லக்கூடாதுன்னும், எதிரி சமாதானத்தை நாடுனா? அவனோட சமாதான ஒப்பந்தம் செஞ்சிக்கணும்கிறது தான் தெரியுது. இது தான் உண்மை.
மேலும் மக்கள் நடத்துற வழிபாட்டுத்தலங்களையும், தேவாலயங்களையும், யூத திருக்கோயில்களையும் நாம பாதுகாத்தாகணும்.
ஆனா பின்லேடன் பன்றது என்னென்னா? எல்லாத்தையும் தலைகீழாப் புரட்டி போடற வேலை தான்.""
1930 இல் ஏமனிலிருந்து சாதாரண கொத்தனார் ஒரு ஒட்டகப் பயண கூட்டத்தில் இணைந்து கொண்டார். வேலை தேடி அவர் சவுதி அரேபியா வழியாக, வடதிசையில் பயணித்து, செங்கடல் துறைமுகமான ஜெட்டாவிற்கு வந்தார். அது கிட்டதட்ட 1600 கி.மீ பயணம். அந்த தொலைவுக்கு அவர் நடந்தே பயணம் செய்திருக்கிறார். அவரது பெயர் முகம்மத் பின் லேடன். (Sheikh Mohammed bin Awad bin Laden)
கால ஓட்டத்தில் அவர் சவுதி மன்னர்களின் அபிமான ஒப்பந்தக்காரராகிவிட்டார். எண்ணெய் கண்டுபிடிப்பால் அந்த அரச குடும்பம் பெரும் பணக்காரர்களான அதே நேரத்தில், முகம்மத் பின் லேடனும் பெரும் பணக்காரர் ஆனார். அவருடைய கட்டுமான நிறுவனம் அந்த நாட்டிலேயே மிகப்பெரிய நிறுவனமாகியது. எந்தளவு என்றால்? இஸ்லாமியர்களின் புனித இடமான மெக்காவிலிருக்கும் மகா மசூதியை புனரதுராணம் செய்யும் பணியை மேற்கொள்ளும் அளவிற்கு கௌரவம் அடைந்தது.
சவுதி தங்களது இஸ்லாமிய அடிப்படை வாதமாகிய வகாபிசத்தை பரப்புவதற்காக வெளிநாடுகளில் பல்லாயிரக்கணக்கான மசூதிகளையும், மதக்கலவி கற்பிக்கும் பள்ளிகளையும் கட்ட பின்லேடன் குடும்பம் பெருமளவில் உதவிகள் புரிந்தது. 1967 இல் ஒரு விமான விபத்தில் காலமாவதற்கு முன் முகம்மத் பின் லேடன் 22 பெண்களை மணந்து 54 குழந்தைகளுக்குத் தந்தையாக விளங்கினார்.
அவர்களுடைய தந்தை இறந்த பொழுது 24 மகன்களில் ஒவ்வொருவரும் பல கோடிகளுக்கு அதிபதிகளாக விளங்கினார்கள். குடும்பத்தோடு விடுமுறையை கழிக்க சுவிடனுக்கு வந்திருக்கும் அந்த குழந்தைகளில் பெரும்பாலானவர்கள் மேற்கத்திய கலாச்சாரத்தில் அதிகம் ஊறியவர்கள். ஆனால் ஒரு தற்காலிக மனைவிக்கு முகம்மதுவின் 17 வது மகனாக பிறந்த ஒசாமா அந்த புகைப்பட்த்தில் காணப்படாதது ஒன்றும் தற்செயலாக நடந்தது அல்ல.
ஒசாமா ஆழ்ந்த மத நம்பிக்கை கொண்டவரு! அவர் தன்னை போட்டோ எடுக்கறதை விரும்பினதே இல்லை. எழுபதுகளோடத் தொடக்கத்துல அவரு எங்க வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்கு வந்தாரு! எனக்கு அவர ரொம்ப நல்லாத் தெரியும்.
ஒசாமா ஆழ்ந்த மதநம்பிக்கை கொண்டவரு! அவர் அப்படித்தான் வளர்ந்தாரு! தன்னுடைய வாழ்க்கையில் ரொம்ப ஆரம்ப கட்டத்திலேயே அவரு இந்த மாதிரியான வாழ்க்கையைத் தொடங்கிட்டாரு!
*******
ஒரு நாளைக்கு 5 தடவைக்கு மசூதிக்கு போகணும்னு வற்புறுத்துவாரு! எங்கள்ல பெரும்பானவங்க இரண்டு அல்லது மூணு தடவைதான் தொழுகைக்கு போவோம்.
1976 இல் அவர் அப்துல்லா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் பயில்வதற்காக பதிவு செய்து கொண்டார். அரசியல் ஒசாமா பின்லேடனின் வாழ்க்கையில் இன்னமும் தனது பங்கை துவங்கவில்லை. ஆனால் பல்கலைக்கழகம் அவரை இஸ்லாமிய சகோதர கோட்பாடுகள் கொண்டவர் என்பதை வெளிச்சமிட்டுக் காட்டியது.
ஒசாமா பின்லேடனிடம் தாக்கத்தை ஏற்படுத்திய, எகிப்திய இஸ்லாமிய சகோதரத்துவத்தின் கோட்பாடுகள் கெய்ரோவில் உருவாயின. மக்கள் தொகை பெருக்கம் அதிகமாக இருந்த இந்த பல கலாச்சாரம் நிறைந்த நகரம், எகிப்தின் தலைநகரமாக இருந்ததோடு, அரேபிய உலகின் அறிவு மையமாகவும் திகழ்ந்தது. சவுதி அடிப்படை வாதத்தால் தாக்கமடைந்த இந்த சகோதரத்துவக் கோட்பாடு, காலணி ஆதிக்கம், வறுமை மற்றும் அநியாயத்துக்கு எதிரான ஒரு இயக்கமாக உருப்பெற்றது.
இந்த இயக்கம் ஒரு பேரியக்கமாக மாற்றமடைந்து, அது பாரம்பரிய இஸ்லாத்தை, இஸ்லாமிசம் என்று அறியப்படும் ஒரு அரசியல் கோட்பாடாக உருமாற்றம் அடையச்செய்து விட்டது.
இப்ப இங்கு இருக்கிற நிறைய இஸ்லாமியர்கள், “இஸ்லாம்” என்ற வார்த்தையை புறக்கணிக்கத்தான் விரும்புறாங்க! ஏன்னா? அது அவங்க எதிரிகளால பயன்படுத்தப்படுகிற வார்த்தையா எடுத்துக்கறாங்க! அது ஒரு சரியான வார்த்தை தான்! ஏன்னா? நீங்க அது மூலமா இஸ்லாத்தை பத்தி பேசறதுக்குப் பதிலா, வேற ஒன்னை பத்தி பேச்ப்போறீங்கறது தெளிவாயிடுது!.
ஆனா இந்த இஸ்லாம் மதத்தோட ஆன்மீக நிறைகள் இழந்து சூனியமாகி காலியாயிடுச்சி! அந்த ஆன்மீக நிறைகள் இருந்த இடத்துல, ஒரு ஆய்வு விளக்கம் புகுந்துடுச்சு! ஒரு புரட்சிகரமான போர்க்கத்திய ஆய்வு விளக்கத் தத்துவம் மார்க்சிய வாதிகள், லெனினிய வாதிகளை எப்படி விவரிப்பாங்களோ? சோசலிச வாதிகளை அல்லது எதேச்சதிகார வாதிகளை அது போன்ற வேறு எதையும் எப்படி வர்ணிப்பாங்களோ? அதே மாதிரி இஸ்லாமிய வாதிகளை வர்ணிக்கிறாங்க!
இஸ்லாமிய சகோதரத்துவம், இஸ்லாமிய அடிப்படை வாதத்துடனும், இருபதாம் நூற்றாண்டின் அரசியல் தத்துவங்களுடனும் சேர்ந்து இரண்டற கலந்து விட்டது. இஸ்லாமிய சகோதரத்தில் இருந்த முன்னணி அறிவுத்திறத்தோடு, தனது சொந்த சிந்தனைகளையும் கலந்து, அல்கொய்தாவுக்கு வடிவம் கொடுத்த ஒரு நபர் “”சையத் குத்தூப்”” (Sayyid Qutb)
அவரு! இஸ்லாமிய இயக்கத்தோட லெனினா?அப்படியும் இருக்கலாம். சையத் குத்தூப்போட பங்கு இல்லாம இன்னைய இஸ்லாமிய கோட்பாடுகளும், இஸ்லாமிய வாதிகளோட கருத்துக்களும், ஜிகாத்திய வாதியோட எண்ணங்களும் இப்ப இருக்கற மாதிரி இருந்திருக்குமா? என்பதை நம்மால நினைச்சுக்கூடப் பார்க்கமுடியாது.
குத்தூப் எகிப்திய கல்வித்துறை அமைச்சகத்தில் ஒரு அதிகாரியாக பணியாற்றி வந்தார். சிறுகதைகள் நாவல்கள் மற்றும் அரசியல் கட்டுரைகள் எழுதுபவராகவும் இருந்தார். இஸ்ரேல் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்கனவே அரேபிய மற்றும் இஸ்லாமிய மனப்பான்மையை அமெரிக்காவுக்கு எதிராக விஷமாக மாற்றியிருந்தன.
1940 களோட பிற்பகுதியில, பாலஸ்தீனத்துக்குள்ள யூதர்கள் குடியேறினதை வைச்சி மேற்கத்திய நாடுகளுக்கும், அமெரிக்காவுக்கும் எதிரான அபிப்பிராயத்துக்கு வந்திருக்கார்னு அவரோட மேலதிகாரிங்களுக்கு கடுமையான எச்சரிக்கையுணர்வு அதிகரிச்சது. அதனால இந்த பிரச்சினையிலேயிருந்து குணப்படுத்த அவரை அமெரிக்கா முழுக்க இருக்கிற கல்வி முறைகளை கத்துகிட்டு வரத்துக்காக அமெரிக்காவுக்கு அனுப்பிவைப்பது தான் அறிவுப்பூர்வமான வழின்னு அவங்க நினைச்சாங்க!
அவரு கடைசியா கொலரோடோவில (Colorado) இருக்கிற கிரிலேக்கு (City of Greeley) வந்து சேர்ந்தாரு! இந்த இரண்டு வருஷங்கள் அவரோட மூளையில மேற்கைப்பத்தி பதுக்கிவைக்கப்பட்டத் தகவல்கள் அவரோட படிப்படியான முன்னேற்றத்துல முக்கிய பங்கு வகிக்குது. அவரு 1948 இல அமெரிக்கா வந்தாரு ஆனா திரும்பி போகும் போது முதல்ல இருந்ததைவிட மேற்கத்திய நாடுகள் மேல அதிக விரோதத்தோட அம்ரிக்காவை விட்டுப்போனாரு!
மேற்கத்திய உலகின் தாக்கத்தால் முகம்மது நபி பிறப்பதற்கு முன்பு இருந்த உருவ வழிபாடுகளை கொண்ட ஜகல்லயா (ஜஹில்லியா-Jahiliyyah) என்ற புறமதத்தைச் சார்ந்த நிலைக்கு அரபு நாடுகள் தள்ளப்பட்டுவிட்டதென, ஒரு தீர்மானமான நம்பிக்கையுடன் குத்தூப் எகிப்துக்குத் திரும்பினார்.
************
இஸ்லாமிய இலக்கியத்துல அந்த ஒரு வார்த்தைக்கு ஒரு பலமான அர்த்தம் இருக்கு, அதுக்கு மடமை இல்லைன்னா அகந்தை, அதாவது திமிர்னு ஒரு அர்த்தம் இருக்கு. புறமதத்தவர்களுக்கு இருக்கும் அகந்தை காரணமா அவங்க கடவுளைப் பத்தின உண்மையை, அதாவது முகம்மது நபியோட இறைவாசகங்களில இருக்கிற உண்மையை ஏத்துக்கறதில்லை.
குத்தூப் இந்த பிரத்தியேகமான சொல்லுக்கு முழுசா வேற அர்த்தம் கொடுத்தாரு! “ஜஹிலியா” (Jahiliyyah) என்ற வார்த்தைக்கு எகிப்தின் கெய்ரோவில (Cairo) சமகாலத்தில இருக்கிற சமூக கலாச்சாரத்தை நவீன சமூகமா மாறியிருக்கும்னும், அதன் மேற்கத்திய உருவமும் தோற்றமும்..........
************
...தொடரும்..பகுதி-2
...நன்றி; தமிழ் டிஸ்கவரித் தொலைக்காட்சி...03.05.2011-ஜிகாத்-அல்கொய்தா பின்னணியில் இருக்கும் மனிதர்கள் மற்றும் கொள்கைகள்
No comments:
Post a Comment