Pages

Wednesday 25 May, 2011

சமச்சீர் கல்வி ரத்து உத்தரவை எதிர்த்து போராட்டம் வலுக்கிறது!....உயர்நீதிமன்றத்தில் வழக்கு!


சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தி வைக்கும் மாணவர் நலனுக்கு எதிரான அதிமுக அரசின் உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ஷ்யாம் சுந்தர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், நிபுணர் குழுவின் பரிந்துரையை ஏற்றே சமச்சீர் கல்வி திட்டம் செயல்படுத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு 1 மற்றும் 6ம் வகுப்பில் அறிமுகப்படுத்தப்பட்டு, தற்போது மற்ற வகுப்புகளுக்கும் சேர்த்து 200 கோடி ரூபாய் அளவுக்கு புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தி வைக்கும் அதிமுக அரசின் உத்தரவு மாணவர் நலனுக்கு எதிரானது என்றும், அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த பொதுநல மனு 25.05.2011 அல்லது 26.05.2011 அன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மனுதாரரின் வழக்கறிஞர் சக்திவேல்,

சமச்சீர் கல்வி முறை திட்டத்தை நிறுத்தி வைத்ததைத்தொடர்ந்து நாங்கள் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளோம். சமச்சீர் கல்வி முறை திட்டத்தை நிறுத்தி வைப்பதினால் மாணவர்கள் மத்தியிலும், பெற்றோர்கள் மத்தியிலும் நிறைய குழப்பங்கள் ஏற்படுகிறது. இதனால் மாணவர்கள் சமுதாயத்தினர் பாதிக்கப்படுகின்றனர். இதனைத் தொடர்ந்து சமச்சீர் கல்வி முறை திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதற்காக மனுதாக்கல் செய்துள்ளோம் என்றார். 

......நக்கீரன் 24.05.2011

*****************************
பொது ஜனம்; சமச்சீர் கல்வியை இந்திய விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையும் ஆதரித்து பேஸ் புக்கில் எழுதி இருக்கிறாரே! பல கல்வியாளர்களும் ரத்து குறித்து மாநிலம் தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து இருக்கிறார்களே!

பொது ஜனம்; ஆமாம்! இந்த ரத்தை ஆதரிப்பவன் எவன்?

பொது ஜனம்; யார் மொட்ரிக் பள்ளிக் கூட்டமைப்பின் தலைவர்? அதிமுக வின் கொள்கை பரப்பு செயலாளராக ஆகவிட்டவர் எதிர்க்கிறார்?

பொது ஜனம்; அவருக்கு என்ன வந்து விட்டதாம்?

பொது ஜனம்; இந்த சமச்சீர் கல்வியினால் மெட்ரிக் பள்ளியின்  தரத்தை குறைத்து விட்டதாம் திமுக அரசு?  அப்படி என்று மக்கள் தொலைக்காட்சியில் அந்தாள் பேட்டி கொடுத்திருக்கான்.

பொது ஜனம்; இந்த சமச்சீர் கலவி வந்து விட்டால் மெட்ரிக் பள்ளியில் படிப்பவன் எடுக்கும் மதிப்பெண்ணை அரசு பள்ளியில் பயில்பவனும் எடுத்துவிடுவான். ஆகையால் மெடரிக் பள்ளிக்கான வணிக மவுசு குறைந்து விடும். இவ்வளவு காசு கொடுத்து இந்த பள்ளியில் எதற்கு சேர்க்க வேண்டும்? அரசு பள்ளியிலேயே இலவசமாக பயின்றால் போகிறது என்று மக்கள் மாறிவிடுவர். இதனால் இவர்கள் கொள்ளையடிக்க முடியாதே! அதனால் ஜெயலலிதாவிடம் முறையிட்டு இதற்கு முட்டுகட்டைப் போடுகின்றனர். இத்தனைக்கும் இந்தக் கல்வி வரவேண்டும் என்று அதிமுக காலத்திலேயே போராடி, அதற்கான தனி வல்லுநர் குழு அமைக்கப்பட்டு, கடந்த திமுக அரசு காலத்தில்  தான் பல போராட்டங்களுக்கிடையே அமல்படுத்தப்பட்டது.


பொது ஜனம்; சமச்சீர் கல்வி 1966 இல் இருந்தே கொத்தாரி கமிஷன் வலியிறுத்தி வந்து கொண்டிருக்கிறதே!  இந்த கல்வி முறைக்கான போராட்டங்கள் அப்பொழுதே ஆரம்பிக்கப்பட்டுவிட்டதே!


பொது ஜனம்; சரி  இதற்கான புத்தகங்கள் 216 கோடி ரூபாய்க்கும் மேலாக செலவு செய்யப்பட்டு, ஆறரை கோடி புத்தகங்கள் அச்சடித்து ஒரு பகுதி பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்ட பிறகு, ஜெயலலிதா பாசிச அரசு தடை போடுகிறதே? இன்னும் பல மாணவர்கள் இணையளத்தில் இருந்து தரவிறக்கி படிக்க ஆரம்பித்து விட்டனர். பல தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் விடுமுறை காலத்திலேயே 10 வகுப்புக்கான பாட பயிற்சிகள் தொடங்கிவிட்டன.


பொது ஜனம்; கல்வி பொதுவானது, ஜெயலலிதா அரசு இதில் கூட தனது பிக்காரி பிசின் அரசியல்  காழ்ப்புணர்ச்சி வேலையை காட்ட ஆரம்பிச்சுடுச்சே!

No comments: