Pages

Saturday, 7 May 2011

ஜிகாத்-அல்கொய்தா பின்னணியில் இருக்கும் மனிதர்கள் மற்றும் கொள்கைகள்...பகுதி-2




 ஜிகாத்...JIHAT-2


மத்திய கிழக்கு நாடுகளின் எந்த அரசாங்கமும் கவிழ்க்கப்படவில்லை. பின்லேடனின் திட்டம் மீண்டும் அவரை ஆப்கானிஸ்தானுக்கே கொண்டுபோய் சேர்த்தது. அவர் ஜர்தலாபாத் (Jalalabad-ஜலாலாபாத்)
அருகில் இருக்கும் ஒரு நகருக்குப் போய் சேர்ந்தார். 1996 இல் ஆப்கானிஸ்தானிற்குள் ஒரு உள்நாட்டு யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. ரஷ்யா பின்வாங்கியப்பிறகு அங்கு அமைதி திரும்பவில்லை. அதற்குப் பதிலாக ஆறு ஆண்டுகள் நீடித்த குழப்ப நிலையால் எதிர் எதிராக இருந்த கலகக்காரர்கள் அதிகாரத்தை கைப்பற்றப் போராடிக்கொண்டிருந்தனர்.

ஆப்கானிஸ்தானுடைய தலைநகராகிய காபூல் (Kabul) பெரும் சிதிலங்களாகவும், இடிபாடுகளாகவும் மாறியது. இப்போது புதிய அணியாக கறுப்பு வெள்ளை தலைப்பாகையுடன் தாலிபான்களும் இந்த சண்டையில் கலந்து கொண்டனர். தாலிபான்கள் தங்கள் உறுப்பினர்களை மார்க்கப் பள்ளிகளிலிருந்து இழுத்தார்கள். அவர்களில் பலர் சவுதி அரசாங்கத்திடமிருந்து ஊதியம் பெற்றவர்கள்.

தாலிபான்களுடை சட்டம் ஒழுங்கு ஆட்சி என்றால் அது நேரடியான அல்லது பிடிவாதமான இஸ்லாம் ஷரியத் சட்டம் என்று அர்த்தம். ஒசாம பின்லேடனுக்கு அந்த இடம் மிகவும் பொருத்தமானதாவும் இருந்ததாக உணர்ந்தார்.
************
ஒசாமா...

""நான் இஸ்லாமியர்களை இந்த நாட்டை ஆதரிக்கணும்னு கேட்டுக்கறேன். ஏன்னா ஒரு நாடு இஸ்லாமிய சிந்தனையோட எழுச்சியடையும் எனபது கடவுளோட சித்தம்.""

தாலிபான்களின் டாங்குகளால் மறைவிடங்களில் பாதுகாக்கப்பட்ட ஒசாமா பின்லேடனின் இருப்பிடம், அல்கொய்தா கேமரா மேன் படமெடுத்திருக்கிறார்.

பின்லேடன் கோடைக்காலத்தில் தனது பதினாறு பக்க பத்வாவை (Fatwa-இஸ்லாமிய சட்டம் உலமாக்களால் (islamic scholar) உருவாக்கப்படுபவை) உருவாக்குவதில் கழித்திருக்கிறார். இது மிகப்பெரிய யுக்தி மாற்றத்தை குறிக்கிறது. அல்கொய்தா மத்தியக் கிழக்கு நாடுகளை தாக்குதலிருந்து விலக்கிக்கொள்ளவேண்டும் என்று விவாதிக்கிறது.

ஆனால் புதிய இலக்கு இந்த நாடுகளுக்கு ஆதரவு கொடுக்கும் நாடுகளான மேற்கத்திய சக்திகள்...குறிப்பாக அமெரிக்க ஐக்கிய நாடுகள்.

ஓசமா...

“”நமக்கு மிகப்பெரிய எதிரிகள் யார்னா?  அமெரிக்க யூதர்கள் கூட்டணி தான். அவங்கதான், நம்ம நாடானா. சமுதாயமான நம்ம உம்மாவுக்கு எதிரியா நிக்கிற ஈட்டிமுனை. அதனால மத்த எதிரிகளைத்தாக்கி நேரத்தை விரயம் பண்ணாதிங்க.””


அய்மன் ஜவாஹிரி மீண்டும் பின்லேடனுடன் சேர்ந்து கொண்டார். எகிப்தியை அரசாங்கத்தை வீழ்த்த, பயங்கரவாதத்தின் மூலம் நிகழ்த்திய முயற்சி தோல்வியடைந்ததின் விளைவாக அவர் அல்கொய்தாவுடன் இணைந்து அதன் யுக்திகளை ஏற்றுக்கொண்டார்.



மேற்கத்திய நாடுகளை பொறுத்தவரை ஜவாஹரிதான் உண்மையான அச்சுருத்தல் என்று இருந்து வந்தது. அவர்தான் உண்மையிலேயே அல்கொய்தாவில காய்களை நகர்த்துறவராவும், பின்லேடன் அவருடைய கருத்துக்களை வெளிப்படுத்தறவராவும் இருந்தார். 

ஆனா அவர் எகிப்துல இருந்து ஆட்சியை கவிழ்க்க முடியாம வந்ததும், அவரோட பிரதான இலக்கு பின்லேடனோட ஒத்துப்போரதும் நம் அன்னிய எதிரிகளான் அமெரிக்கர்களைத் தான் நாம முதல்ல தாக்கணும்னு பின்லேடன் சொன்னதுக்கு, ஒத்துக்கொள்வேண்டியாடிச்சி. 

அதாவது அய்மன் அல் ஜவாஹரியோட ரொம்ப புத்திசாலியான மாற்றம்ணு நான் நினைக்கிறேன். அந்த மாற்றத்தின் படி ஜவாஹிரி துணைத்தளபதி, பின்லேடன் தளபதி.



ஆனால் ஜவாஹிரி தன் அரசியல் திறன்கள் எதையும் இழக்கவில்லை. 1996 பாத்வாவில் (Fatwa)
தான் வழங்கிய செய்தியை, பின்லேடன் இன்னமும் பட்டைத் தீட்டி கூறாக்குவார் என்று அவர் நம்பினார்.



ஒவ்வொரு அமெரிக்கரும், ஒவ்வொரு யூதரும் தங்களது தாக்குதலுக்கு இலக்குகள்  எது? என பின்லேடனை அறிக்கை வெளியிட்டு அது பிரசுரமாகிற மாதிரி ஒத்துக்கொள்ளவைக்கிறதுல ஜவாஹிரி வெற்றியடைஞ்சார்.



பின்லேடனும், ஜவாஹிரியும் பத்திரிகையாளர்கள் சந்திப்புகள் நடத்தி, அதில் பாத்வா (Fatwa) பற்றியும் அமெரிக்கர்கள் மற்றும் யூதர்களை கொல்வதாகவும் அச்சுருத்தலை வெளியிட்டனர்.


அமெரிக்கா ஒரு கௌபாய் (cowboy) போல நடந்துக்கும்ணு, அல்கொய்தா நினைச்சுது. அதாவது அது ஒரு குறிப்பிட்ட வகையில அந்த நாட்டை சீண்டிவிடுவதின் மூலமா.



கென்யாவிலும் (Kenya), தான்சானாவிலும் (Tanzania) உள்ள அமெரிக்க தூதரகங்களின் மேல் நடத்தப்பட்ட குண்டு வெடிப்புத் தாக்குதல் அல்கொய்தா எதிர்பார்த்த விளைவுகளை தந்தது.



தூதரகங்களிலே இருந்த ஒரு சில அமெரிக்கர்களை கொல்றதுல, பின்லேடனுக்கு ஆர்வம் இல்லை. அதுக்கான பதிலை அவரு, கிளின்டன் கிட்டயிருந்து எதிர்பார்த்தாரு!. அதாவது இந்த கௌபாய் மாதிரியான நடத்தைய!

*******************
13 நாட்களுக்குப் பிறகு, கிளின்டன் நாட்டுக்கு ஒரு உரை நிகழ்த்தினார்....

””குட் ஆப்டர் நூன், இன்னிக்கு நான் நம்ம ராணுவத்தை பயங்கரவாதிங்க இருக்கற ஆப்கானிஸ்தான், சூடான் பகுதிகளைத் தாக்க உத்தரவு கொடுத்துருக்கேன்! ஏன்னா! நம்மை நாட்டு பாதுகாப்புக்கு இருக்கற! தவிர்க்க முடியாத! அச்சுருத்தல்காக!.நம்ம நோக்கம் தெளிவா இருக்கு!, ஒசாமா பின்லேடனோட இணைஞ்சூம் அவரால நிதியுதவியடையற தீவிரவாதக் குழுக்களை வேரறுக்கணும்!. அவர் ஒரு வேளை இன்றைய உலகத்துல இருக்கற சர்வதேச பயங்கரவாத இயக்கங்களுக்கு, நிதியுதவி செய்யறதோட, அவங்க எல்லாருக்கும் ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கலாம்! ””

********************

ராணுவ ரீதியாக ஏவுகணைத்தாக்குதல்கள் தோல்வியடைந்தன. சூடானில் நடந்த ஏவுகணைத்தாக்குதல், தாக்கப்பட்ட ரசாயணத் தொழிற்சாலை, ஈவுபுரோபைன் மற்றும் விலங்குகளுக்கான மருந்துகளும் தயாரிக்கப்பட்ட இடமேத் தவிர அங்கு விஷவாயுத் தயாரிக்கப்படவில்லை.



ஆப்கானிஸ்தான் மீதான தாக்குதலில் அல்கொய்தாவின் 21 உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். ஆனால் பின்லேடனும், ஜவாஹரியும் 480 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தனர்.



அது அமெரிக்கர்களுக்காக பின்லேடன் எழுதுன திரைக்கதை போல தோணுது! அவங்க அந்த திரைக்கதைப்படி அப்படியே நடந்துக்கவும் செஞ்சாங்க! முஸ்லிம் நாடுகளுக்கு எதிரா அமெரிக்கர்களை கோபப்படுத்தி, இந்த மாதிரி செயல்கள்ல இறங்க வைக்க அவர் விரும்பனாரு!.



1998 ல நடந்த கென்யா மற்றும் தான்சானியா குண்டு வெடிப்புகளுக்குப் பிறகு, பல பழமைவாதிகள் உறவுக்கராங்களோட இஸ்லாமியர்களுக்கு நடுவுல நின்னது எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு! இந்த தூதரகங்கள்ல இருந்த 200 சாமான்யர்களை கொல்றது, என்ன ஞாயம்கிறது அவங்க கோரிக்கை! கிளிண்டன் மேடையில ஏறி பின்லேட்னதான் எதிரி!ன்னு அறிவுப்பு பண்ணதும், அந்த சர்ச்சை ஒரு முடிவுக்கு வந்தது.



சவுதி அரேபியாவில இருந்த உளவுத்துறையில இருந்த அதிகாரிகள் 11,000 த்துக்கும் குறையாத மக்கள் 1998 குண்டு வெடிப்புக்கும் செப்டம்பர் 11 குண்டு வெடிப்புக்கும் இடைப்பட்ட நேரத்துல, பின்லேடன்கிட்ட சேர்ந்திருக்கறதா! எனக்கு சொன்னாங்க! இது எல்லாமே! எதனாலன்னா அமெரிக்கர்களோட பி ஆர் சேவையோட (பப்ளிக் ரிலேஷன்) வெற்றியால தான்!



தனது மகனின் திருமணத்தின்போது ஜிகாதைப் பற்றி பின்லேடன் கவிதை ஒன்றை வாசித்தார். அந்த நிகழ்ச்சி அல்கொய்தாவின் மகத்தான் யுக்தியின் இன்னொரு துளியை நமக்கு காட்டக்கூடியதாக அமைந்தது.



பின்லேடனுடைய மகன் முகம்மத் அல்கொய்தா ராணுவ பிரதான யுத்த கலை நிபுணரான அபு அவுசின் மகளை மணந்து கொண்டார். அந்த திருமணத்தின் போது அபபு அவுஸ் எப்படி? அல்கொய்தா! அமெரிக்காவை ஒரு இஸ்லாமிய யுத்தத்திற்கு இழுக்கும் என்றும் ஒரு அராபிய பத்திரிகையாளருக்கு பேட்டிக்கொடுத்தார்.



அடுத்த 5 வருஷத்தில என்ன? நடக்கப்போகுதுன்னு என்னிடம் விளக்கமா சொன்னாரு! அதுமட்டுமில்லாம இங்க பாருங்க! அமெரிக்கர்களோட போராட உலக்த்தில இரண்டு மூணு  இடங்கள் வசதியா இருக்கும்! ஆப்கினிஸ்தான், ஈராக் அப்புறம் சோமாளியான்னாரு!



நாங்க! அமெரிக்க ஆப்கானிஸ்தானுக்குள்ள நுழையும்னு எதிர்பார்த்திட்டிருக்கோம், அதோட அதுக்கு தயாராவும் இருக்கோம்! அவங்க! ஆப்கானிஸ்தானுக்குள்ள வரணும்கறது தான் எங்க விருப்ப்ம் ன்னாரு!



அமெரிக்கா.....

இஸ்லாமிய நாடுகளோட மண்ணுல, நாங்க வந்து யுத்தத்தில ஈடுபடணும்ணு, அவங்க விரும்பினாங்களா? நிச்சயமா! அதே தான்! அதாவது அந்த நோக்கத்துல ஒரு பகுதி என்னென்னா? அமெரிக்கா இஸ்லாமிய மண்ணுல துரோகம் செய்ய வந்ததா! நிச்சயப்படுத்தி நம்பவைக்கணுங்கிறதுக்காகத்தான்.

பின்லேடன் தனது அல்கொய்தாவின் ஊடகக் குழுவுக்கு அதன் மிக திரித்து கூறப்பட்ட செய்தியை தயாரித்துக் காட்டும்படி உத்தரவிட்டிருந்தார். அதில் அல்கொய்தா பயிற்சி முகாம்களின் காட்சிகளும் சேர்க்கப்பட்டிருந்தன. அது மத்திய கிழக்கு மற்றும் அதை தாண்டியுமிருக்கும் இஸ்லாமிய தீவிரவாதிகளின் மத்தியில் பரவலாக விநியோகிக்கப்பட்டது. பின்லேடனின் வளர்ந்து வரும் பிராபல்யத்தால் வசீகரிக்கப்பட்டு, ஈர்க்கப்பட்டு வந்த தீவிரவாதிகளில் ஜெர்மனியின் ஹேம்பர்க் நகரில் இருந்து பயணம் செய்து வந்த 4 இளைஞருகளும் அடங்குவர். அவர்களுக்கு ஆங்கிலம் பேசத்தெரிந்திருந்ததுடன், மேற்கத்திய பாணி வாழ்க்கைக்கும் நன்கு பழகியிருந்தார்கள். அந்த அணியின் தலைவரான முகம்மது ஹேட்டா எனும் எகிப்பதியனுக்கு மட்டும் தான், தாங்கள் இதில் சேர்ந்து மேற்கொள்ளப்போகும் பணியின் முகாந்திரம் தெளிவாக விளக்கப்பட்டிருந்தது. மற்றவர்களுக்கு அது அமெரிக்காவை குறிவைத்து நடத்தப்படவிருக்கும், மதத்துக்கான கொள்கைப் போர் பணி என்றும், அவர்களின் முதல் கட்மை அவர்களின் விமானப்பயிற்சிப் பள்ளிகளில் சேர்ந்து கொள்ள வேண்டியது எனவும், அறிவுறுத்தப்பட்டிருந்தது.



2001 ஆம் ஆண்டு கோடைக்கால தாக்கத்தில் ஒரு அபாரமான தாக்குதல் நடத்த காத்திருந்தது என்று வெளிப்படையாகவே குறிப்புகளை காட்டியது.



எங்களுக்கு பின்லேடன் கூட பேட்டி ஒன்னுக்கு அழைப்பு வந்தது! எது? எப்படியோ? நிர்வாகம் இந்த பேட்டிக்கு ஒப்புதல் தந்ததோட அவங்களை இந்த பேட்டியை எடுக்கும்படி எங்களை கேட்டுக்குச்சி!



அவர் அங்கு போய்ச் சேர்ந்ததும் பின்லேடனும், ஜவாஹிரியும் புகைப்படம் எடுக்க அனுமதித்துடன் செய்தி தலைப்பையும் கொடுத்தார்கள்.

****************
ஜவாஹிரி, பின்லேடன்....

“”நாங்க உங்களுக்கு செய்திகள் கொடுக்கப்போறோம், அடுத்த சில வாரங்கள்ல மிகப்பெரிய ஆச்சர்யங்கள் நடக்கப்போகுது. நாங்க அமெரிக்காவில ஒரு காரியத்தை செயல்படுத்த முயற்சி பண்ணப்போறோம். நாங்க எல்லார் கிட்டேயும் இது மிகப் பெரிசா இருக்கப்போகுது என்று தெரியப்படுத்திட்டு வர்றோம்””

 *******************************
2001 செப்டம்பர்,11 ந்தேதி நடந்த சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்தும், அந்த பயங்கரத்தில் இருந்தும், இன்னமும் அமெரிக்க நாடு மீண்டு வரவில்லை. கனமான புகையும், சதி பற்றிய வதந்திகளும் பெரும்பாலான இஸ்லாமிய நாடுகளில் என்ன? நடந்தது என்பது பற்றிய உண்மையை தெளிவற்றதாக்கிவிட்டது.



இரட்டை கோபுரங்கள் தகர்ப்பு நடந்து 1 மாதத்திற்குள் இந்த ஒரளவு தெளிவில்லாத, தேர்ச்சியற்றவரால் எடுக்கப்பட்ட வீடியோ டேப்பில் பதிவான படத்தில், பின்லேடன் அந்த செப்டம்பர்,11 சம்பவத்தை பற்றி, பெருமை பேசுவது காட்சி அளிக்கிறது.


ஒசாமா...



“” இந்த தாக்குதலை நடத்திய சகோதரர்களுக்கு, இது ஒரு மகத்தான கொள்கைப் போர் பணி என்பது மட்டும் தான் தெரியும்.””



“”இவங்க விமானத்துல ஏறறுத்துக்கு முன்னால வரைக்கும் இந்த திட்டத்தை, நாங்க அவங்களுக்கு வெளிப்படுத்தல””


அந்த விமானங்கள் கோபுரங்களில் மோதுவதால் ஏற்படும் விளைவுகளை கூட பின்லேடன் தன் கைகளினால் செய்து காட்டுகிறார். ஆனால் பல இஸ்லாமியர்கள், இந்தப் பதிவு கூட அமெரிக்கர்களால் தயாரிக்கப்பட்ட போலி என்று, நம்பத் தயாராக இருக்கிறார்கள்.


ஜார்ஜ் புஷ்....



“” குட் ஆப்டர்நூன்..எனது உத்தரவின் பேரில், அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ராணுவம், ஆப்கானிஸ்தானில், தாலிபான் ஆட்சியில் இருக்கும் அல்கொய்தாவின் தீவிரவாத பயிற்சி முகாம்களின் மீதும், ராணுவ அமைப்புகளின் மீதும் தாக்குதல் நடத்த தொடங்கியிருக்கிறது.””


அக்டோபர்,7 ந்தேதி அமெரிக்க ராணுவம் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடவடிக்கைகளைத் தொடங்கியது. பின்லேடன் அமெரிக்கத் தாக்குதல் நடக்குமென்று நீண்டகாலத்துக்கு முன்பே எதிர்பார்த்திருந்ந்தார்.



1997 லிருந்தே அமெரிக்கர்கள் ஆப்கானிஸ்தான் மண்ணுல காலடி எடுத்து வைக்க விரும்பராங்க! அவங்களுக்கு நாங்க ரஷ்யர்களுக்கு கத்து கொடுத்த, அதே பாடத்தை கத்துக் கொடுப்போம்னு ரொம்ப வெளிப்படையாவே சொல்லிக்கிட்டிருந்தார்.



ஒசாமா...

“”அமெரிக்க ராணுவ வீரர்களுக்கும், ரஷ்ய ராணுவ வீரர்களுக்கும் ஒரு பெரிய வித்தியாசம் இருக்கு!. அமெரிக்க ராணுவ வீரர்கள் மனோதத்துவ ரீதியா, காலிப்பெட்டி மாதிரி. அவங்க காகிதப்புலிகள், கையாலாகதவங்க!.””



ஆனால் ஆப்கானிஸ்தான யுத்தம் பின்லேடன் எதிர்பார்த்தது போல அமையவில்லை.



அமெரிக்க விசேஷ ராணுவ அணியானது, தரையில் ஆயிரக்கணக்கான முஜாகிதின் துருப்புகளால் ஆதரவளிக்கப்பட்டதுடன், வான்வெளியில் பி 52 விமானங்களால் பாதுகாக்கப்பட்டது.



பெரும்பாலான ஆப்கானியர்கள், தாலிபான்களுக்கோ அல்லது அல்கொய்தாவுக்கோ உண்மையிலேயே ஆதரவளிக்கவில்லை. அவர்கள் அந்த ஆப்கான அராபியர்களை சந்தேக கண்ணோட்டத்தோடு நீண்ட காலமாக பார்த்து வந்திருக்கிறார்கள்.



அல்கெய்தா மீது சுருக்கு இறுகியவுடன், அதன் தலைவர்கள் கிழுக்கு திசை நோக்கி ஒடி ஒளிந்தார்கள்.



2001 ஆம் ஆண்டு, நவம்பர் 14 ம் தேதி, பின்லேடன் தான் டோரா போரா மலை பகுதிக்குப் போய்ச்சேர்ந்தார். டிசம்பர் துவக்கத்தில் அமெரிக்கர்கள் கடுமையான குண்டு வீச்சை ஆரம்பித்த பொழுது, ஜவாஹிரி அவருடன் கூடவே இருந்திருக்கிறார்.



டிசம்பர் மாசத்தோட முதல் 3 நாள்ல நாங்க நிறைய குண்டுகளை பின்லேடன் பதுங்கியிருந்த இடத்துங்கள்ல வீசினோம். எங்களுக்கு எதிரா சாகும் வரை போராட சொல்லி, நிறைய வீரர்களை அனுப்பி வைச்சிட்டு, சந்தடியில பின்லேடன் தப்பிக்கறத் திட்டத்தை நிறைவேத்திக்க முடிஞ்சது. அவங்களால எங்க வேகம் குறைஞ்சிடுச்சி.



அவங்கள்ல நிறையப் பேர் சாகற வரைக்கும் சண்டைப் போட்டாங்க!



 அவரு அதைத்தான் தெற்கு திசையில பாக்கிஸ்தானை நோக்கி, தப்பிச்சிப் போக பயன்படுத்தியிருக்கணும். அதோட அவர் வரக்கூடியப் பாதைகள், எல்லாத்தையும் மூடக்கூடிய சாத்தியமோ! பாக்கிஸ்தானியர்களுக்கு இல்லைங்கிறது! உண்மை!



உலகிலேயே அதிகமாகத் தேட்ப்படும் நபர் தப்பிச் சென்று பாக்கிஸ்தானுடைய வடமேற்கு எல்லையில் இருக்கும், சட்டங்கள் எதுவும் இல்லாத பழங்குடி இனத்தவர் இருக்கும் காட்டுப்பகுதிக்குச் சென்று விட்டார்.



2002 ஆம் ஆண்டில், அமெரிக்க ராணுவம், ஒரு செயல் வாய்ந்த யுத்தம் செய்யும் படையாக இருந்தால், அல்கொய்தாவின் முதுகெலும்பை முறித்துவிட்டிருக்கலாம் என்பது போலத் தோன்றியது.



ஆனால் அமெரிக்கர்கள் எதிர்வந்த ஈராக்கியர்கள்,  ஆக்கிரமிப்பை பற்றி அறிவிப்பு செய்தவுடன், எல்லாமே, தலைகீழாக மாறிவிட்டன.


அமெரிக்காவில்....

“”எந்த தவறும் நடக்கக்கூடாது, ஜனாதிபதி போ! ன்னு உத்தரவு கொடுத்தவுடனே! அது தான் தாக்கவேண்டிய நேரம்ணு புறிஞ்சிக்கணும்.!””


2003 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் ஈராக்கிய படையெடுப்பும், ஆக்கிரமிப்பும் முடிஞ்சதுக்கப்புறம், அது அல்கொய்தாவோட மறுப்பிறப்பாவே இருந்தது. அது ஒரு புது அல்கொய்தா! அது அல்கொய்தாவுக்கு புத்துயிர் கொடுத்தது. அதோட! எப்படிப் பட்ட புத்துயிர்!?



அந்த ஈராக் படையெடுப்பின் எதிர்பாராத பரிசு! சாத்தியம்னு எப்போதும் பின்லேடன் எதிர்பார்த்து கன்வு கண்டதை விட அதிகமாக அமைந்தது.



தாலிபான் அதிபரை பதவியிலிருந்து கவிழ்ப்பதில் வெற்றி கிடைத்திருந்தாலும் கூட கயமைத்தனம் நிறைந்த நாடு, ஏதேனும் ஒட்டு மொத்த பேரழிவை உண்டாக்கும் ஆயுதங்களை அல்கொய்தாவிடம் கொடுக்கலாம் என்று அதிபர் புஷ் தொடர்ந்து பயந்து கொண்டிருந்தார்.



புஷ்.....


“”உளவுத்துறை மூலமாக கிடைத்த.................................

..தொடரும்...பகுதி...3

,,நன்றி டிஸ்கவரி சேனல். தமிழில்.ஒளிபரப்பியது..02.05.2011  குறிப்பு ஒசாமா பின்லேடன் அமெரிக்க உளவுப்படையால் கொல்லப்பட்டதும் அன்றுதான் ...அதிகாலை பாகிஸதான்...அப்போதாபாத் நகரில்.


No comments: