Pages

Saturday 28 May, 2011

முதல்ல மூன்று கேள்விக்கு பதில் சொல்லு.....?





சமச்சீர் கல்வி சட்டம் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மீறி செயல்பட அரசுக்கு அதிகாரம் உள்ளதா?

சென்னை : சமச்சீர் கல்வி திட்டம் தொடர்பாக ஐகோர்ட்டும் சுப்ரீம் கோர்ட்டும் தீர்ப்பளித்த பிறகு அதை மீறி செயல்பட அரசுக்கு அதிகாரம் உள்ளதா என்று ஐகோர்ட் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதுதொடர்பாக விரிவான விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். சமச்சீர் கல்வி நிறுத்தி வைக்கப்பட்டதை எதிர்த்து சென்னை மதுரவாயலை சேர்ந்த ஷியாம் சுந்தர் என்பவர், சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ராஜேஸ்வரன், வாசுகி முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கோர்ட்டில் நடந்த வாதம் வருமாறு:

மனுதாரர் வக்கீல் கே.பாலு: சமச்சீர் கல்வி திட்டம், தமிழகத்தில் உள்ள மாணவர்களின் நலனுக்காக கொண்டுவரப்பட்ட நல்ல திட்டம். அனைத்து மாணவர்களும் இதில் சமமான கல்வியை பெற முடியும். புதிய அரசு ஆட்சிக்கு வந்ததும் உடனடியாக இதை ரத்து செய்திருப்பது சட்டவிரோதமானது. நீதிபதிகள்: சமச்சீர் கல்வியை ரத்து செய்து அரசு ஏதேனும் உத்தரவு பிறப்பித்துள்ளதா?
கே.பாலு: அதிகாரப்பூர்வ உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து பத்திரிகைகளுக்கு செய்தியாக அனுப்பப்பட்டுள்ளது.

முன்னாள் கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.வில்சன்: ஓய்வு பெற்ற ஆசிரியர் மனோன்மணியன் சார்பாக சமச்சீர் கல்வி ரத்து எதிர்த்து தனியாக மனு தாக்கல் செய்துள்ளோம். எனது தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும். கடந்த ஆட்சியில் மாணவர் நலன் கருதி சமச்சீர் கல்வி கொண்டுவர உயர்நிலை கமிட்டி அமைக்கப்பட்டது. அது பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து இந்த திட்டத்தை கொண்டுவந்தது.

இதற்காக தனி சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தை ஐகோர்ட்டும் சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்துள்ளன. இந்நிலையில், சட்டத்தை மீறி அரசு செயல்பட முடியுமா? சமச்சீர் கல்வி சரியில்லை என அரசு கூறுவது தவறானது. 10&ம் வகுப்பு மாணவர்கள் ஏற்கனவே இந்த பாட புத்தகங்களை படிக்க தொடங்கிவிட்டனர். ரூ.200 கோடிக்கு புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு தயார் நிலையில் இருக்கும்போது இந்த திட்டத்தை கைவிட்டால் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படும். எனவே, சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தி வைக்க அரசுக்கு தடை விதிக்க வேண்டும்.

அட்வகேட் ஜெனரல் நவநீத கிருஷ்ணன்: இந்த வழக்கில் எந்த தடையும் விதிக்கக் கூடாது. ரூ.200 கோடி வீணாகிறது என கூறுவதை ஏற்கக் கூடாது மாணவரின் நலன்தான் இதில் முக்கியம். சமச்சீர் கல்வி திட்டம் மாணவர்கள் நலனுக்கு எதிரானது. சமச்சீர் கல்வி திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் இதர மாநில மாணவர்களுடன் போட்டி போடுவது கஷ்டம். இதனால்தான் தமிழக அரசு இந்த திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளது. இதில் புதிய கொள்கை முடிவு எடுக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

சமச்சீர் கல்வி திட்டத்தை அனைத்து மாணவர்களும் படிக்க வேண்டும் என கட்டாயப்படுத்த அரசு விரும்பவில்லை. மாணவர்கள், பெற்றோர் விருப்பப்படி தரமான கல்வி பெற அவர்கள் விரும்பிய பள்ளி மற்றும் பாடதிட்டததை தேர்வு செய்து கொள்ளலாம். அவர்களை கட்டாயப்படுத்துவது அடிப்படை உரிமையை பறிப்பதாகிவிடும். மேலும் சமச்சீர் கல்வியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் வாபஸ்தான் பெறப்பட்டது. சிபிஎஸ்இ மாணவர்கள் தனி பாட திட்டததை படிக்கிறார்கள். மாணவர்கள் நலன் கருதி புதிய கொள்கை முடிவு எடுக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. விரிவான பதில் மனு தாக்கல் செய்த அவகாசம் வேண்டும்.

கே.பாலு: புதிய புத்தகங்களை அச்சடிக்க டெண்டர்விட தடை விதிக்க வேண்டும். ஏற்கனவே ரூ.200 கோடிக்கு புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. அது வீணாகிவிடும். பி.வில்சன்: ஒரு சட்டத்தை மீறி புதிய கொள்கை முடிவு மூலம் செயல்பட அரசுக்கு அதிகாரம் இல்லை. ஐகோர்ட் தீர்ப்புக்கு எதிராக செயல்படவும் அரசுக்கு அதிகாரம் இல்லை.

நீதிபதிகள்: சமச்சீர் கல்வி திட்டம் தொடர்பான சட்டத்தை ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தபிறகு அரசு புதிய கொள்கை முடிவு எடுக்க முடியுமா? ஒரு சட்டம் இருக்கும்போது அதை மீறி அமைச்சரவை கூட்டத்தின் மூலமாக நடவடிக்கை எடுக்க முடியுமா? பொதுமக்கள் மற்றும் மாணவர் நலன் கருதி நல்ல முடிவை எடுக்க அரசுக்கு அறிவுரை கூறுகிறோம். இந்த சட்டத்தின் நோக்கம் சரியாக உள்ளது. தலைசிறந்த கல்வியாளர்கள் கொடுத்த அறிக்கையை ஒதுக்கித்தள்ள முடியாது. பதில் மனுவில் சரியான காரணத்தை கூறவேண்டும். ஏற்கனவே ரூ.200 கோடி செலவிடப்பட்டு புத்தகங்கள் தயாரித்துள்ள நிலையில் அரசு கொள்கை முடிவு எடுத்து புதிதாக புத்தகங்கள் அச்சடிக்க வேண்டுமா என்பதை விளக்க வேண்டும்.

எங்களின் 3 கேள்விகளுக்கு அரசு விரிவான பதில் கூறவேண்டும். 1. சமச்சீர் கல்வி தொடர்பான சட்டம் இருக்கும்போது அதற்கு எதிராக அரசு கொள்கை முடிவு எடுக்க முடியுமா? 2. சமச்சீர் கல்வி திட்டம் குறித்து ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு கூறியபிறகு அதை மீறி அரசு செயல்பட அதிகாரம் இருக்கிறதா? 3. ரூ.200 கோடி செலவிடப்பட்டு புத்தகங்கள் அச்சடிக்கப்பட்ட பிறகு மீண்டும் செலவழிப்பது சரியாகுமா? இந்த வழக்கில் வரும் 8&ம் தேதி அரசு விரிவான பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணை வரும் 8&ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. சுமார் 1 மணி நேரம் பரபரப்பாக விசாரணை நடந்தது.

.....;நன்றி தினகரன் 26.05.2011

*****************************
பொதுஜனம்; உயர்நீதிமன்றம் சரியா மூன்று கேளவிகளை கேட்டிருக்குதே...?

பொது ஜனம்; ஆமா! பின்னே இவங்க உயர்நீதிமன்றத்துக்கும், உச்சநீதிமன்றத்துக்கும் பாடம் சொல்ற அளவுக்கு போறாங்களே!

பொது ஜனம்; ஆமா அந்தம்மா யாருக்கு வேணுன்னா பாடம் சொல்லும்! ரொம்ப தகிரியமான பொம்பளை!

பொது ஜனம்; இதுக்குப் பெயர் தகிரியம்னு எவன் சொன்னது? நீதிமன்ற அவமதிப்பு!

பொது ஜனம்; மத்திய அரசு பள்ளிகளின் சி பி எஸ் சி கல்வியும் ஓன்றானா தான் சமச்சீர் கல்வி என்று அர்த்தம், என்று   முட்டுகட்டை போடறுதுக்குன்னே ஒரு கும்பல் ஒரு காரணத்தை கண்டுபிடிச்சி வைச்சிருக்குதே!

பொது ஜனம்; முதல்ல மாநில அரசுக் கல்வி முறையை சமச்சீராக்க சொல்லு, அப்புறம் மத்திய அரசுக்கல்விக்கு போகலாம்.

பொது ஜனம்; விட்டா இவங்க இரண்டு அரசு எதுக்கு? மாநில அரசு மைய அரசு என்று தனித்தனியா  ஒரே அரசு போதாதா? நானே இரண்டுத்துக்கும் சேர்த்து ஆட்சி புரிந்து, கொடைக்கானலில் சொத்து வாங்கின மாதிரி சிம்லா, டார்ஜிலிங் இங்கெல்லாம் கூட என்னோட பராக்கிரமம் பரவும் இல்லை. பாதி இந்தியாவும் என்கைக்கு வந்தாலும் வந்துவிடும். மக்களும் எனக்கு தைரியசாலி என்று பட்டம் கொடுத்துவிடுவார்கள். எப்படியும்! என்னை கோர்ட் தண்டிக்கப் போறது இல்லை. அவங்களுக்கும் பேப்பே, அவங்க அப்பனுக்கும் பேப்பே காட்டிடுவேன்!

பொது ஜனம்; மத்திய அரசுக்கல்வியும், மாநில அரசுக்கல்வியும் ஒன்னாயிருந்தா தான் சம்ச்சீர் கல்வி என்று ஒரு மெட்ரிக்குலேஷன் போர்டு சங்கத்தலைவனும் இதே கருத்தை சொல்லிகிட்டு இருக்கான். அவன் அதிமுக கொள்கை பரப்பு செயலாளரா மாறி இருக்கான்?

பொது ஜனம்; அவன் ஒரு பெற்றோரா!  இந்த கருத்தை வைப்பானா? ஒரு ஏழை மாணவனா? இந்த கருத்தை வைப்பானா? அவன் வியாபாரியா வேணுன்னா இந்த கருத்தை வைப்பான்?


பொது ஜனம்; ஏன் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் பணிபுரி\யும் ஆசிரியர்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையே! வெறும் நிர்வாகிகள் மட்டும் தான் இதை தடுக்க நினைக்கிறாங்க!

பொது ஜனம்; அவங்க எப்படி இதை எதிர்ப்பாங்க! மக்களிடம் வாங்கும் பணத்தை இவனுங்க பள்ளியில வேலை பாக்கிற டீச்சருக்கு கால்வாசிக் கூட சம்பளமா கொடுக்கறது இல்லை.

பொது ஜனம்; பீஸ் வாங்கறதுக்காக புள்ளைகளுங்கு, பரிட்சையிலே எந்தெந்த கேள்வி வரும் என்று முன்னாடியே கேள்விகளை அவுட்டாக்கி  எல்லோரையும் பாஸ் பண்ண வைக்கிற வேலையைத்தான் இந்த பள்ளிகள் நடத்துது.

பொது ஜனம்; ரேங்க் கூட கிடையாது. எல்லாம் ஏ, பி, சி.....என் கிரடுகள் தான் வழங்கப்படுகிறது.

பொது ஜனம்; இல்லைன்னா பீசை கட்டின மக்கள் சண்டைக்கு வருவாங்க இல்லை. இவ்வளவு பணத்தை கொடுத்துட்டு ஒன்னும் பிரயோசனம் இல்லை என்று......என் பிள்ளை மட்டும் பத்தாவது ரேங்கா? பீஸ் மாசா மாசம் சொளையா வாங்கலை...

பொது ஜனம்;..மேல்வகுப்பு வரும்பொழுது, இந்த பிளைளகளுக்கு ஒரு எழவும் தெரியாமல் இருக்கும். படிச்சதை வாந்தியெடுக்கும் பிள்ளையா மாணவனை ஆக்கி வைச்சிருக்கும், இந்த பள்ளிகள். இந்த பிள்ளைகளுக்கு எந்த புதிய சிந்தனையும் வளருவதில்லை. வெளியுலகமும் தெரிவதில்லை.



பொது ஜனம்; இந்த ஆளு புத்தகத்தை அரசு அச்சடிக்க வைக்க கூடாது. தனியாரிடமும் கொடுத்து அச்சடித்து வெளியிட்டுக்கொள்ள உரிமையளிக்கவேண்டும். இதற்கு தடை போடுவது தனி மனித சுதந்திரத்தை மீறுவது ஆகும் என்று குரல் கொடுக்குதே!

பொது ஜனம்; அப்பத்தானே! 40 சதவீத கமிஷன்  தனியா புத்தகத்தின் மூலம் பெற முடியும்? இரண்டு கொள்ளை, ஒன்னு பீஸ், ஒன்னு புத்தக பீஸ் ...புத்தக கட்டணத்துல பாதி இந்த நிர்வாகங்களுக்கு! டீச்சர்களுங்கு பட்டை நாமம். மக்களுக்கும், மாணவர்களுக்கும் பட்டை நாமம்.

பொது ஜனம்; இந்த கருத்தை வலியுறுத்துற, அந்தாளு ஸ்கூல்ல என்ன அழகுல பாடம் சொல்லிக்கொடுக்கிறாங்க! என்று இதிலேயிருந்தே தெரிஞ்சிக்கலாம்.

பொது ஜனம்; அரசின் ஆரம்பக் கால கொள்கையே, கல்வி அரசிடம் இருக்க வேண்டிய ஒன்று. கல்வி இலவசமாக வழங்கப்படவேண்டிய ஒன்று. இந்தியாவின் ஒட்டு மொத்த மிகப்பெரிய மக்கள் தொகைக்கு அரசு மட்டுமே இந்த நாட்டின் கல்வி தேவையை இலவசமாக வழங்கி, பூர்த்தி செய்யமுடியாது. அதற்காக தனியாரிடம் பகிர்ந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டதினால் உருவானவைகள் தான் இந்த தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள். இதற்காக அரசிடம் பல மானியங்களை, இந்த தனியார் பள்ளிகள் பெறுகிறது. பள்ளிக்கான நிலம் முதற்கொண்டு அனைத்து விதமான சலுகைகளையும், பள்ளி நடத்த அரசிடமிருந்து இதன் நிர்வாகங்கள் பெறுகிறது. அது அனைத்தும் மக்கள் பணம்.



பொது ஜனம்; மக்களிடம் பெற்றுகிட்டு மக்களுக்கு எதிரான கல்விக்கொள்கையை இந்தப் பள்ளிகள் ஆதரிக்கிறது வெட்க கேடானது. இதற்கு அதிமுக உடந்தை.

பொது ஜனம்; வியாபாரிக்கு வியாபாரம் தானே முக்கியம். மக்களைப்பத்தி என்ன கவலை...!

பொது ஜனம்; இந்த கல்வி நிறுவனங்களை எல்லாம் அரசே எடுத்துகிட்டா என்ன?

பொது ஜனம்; வங்கிகளை தேசியமயமாக்கப்பட்டது மாதிரியா? அது தான் இலக்கு!

பொது ஜனம்; அது மாதிரி செஞ்சா? இந்த அரசை பாராட்டுவாங்க! இது அவங்களோட சேர்ந்துகிட்டு மக்களை சுரண்ட பாடுபடுது. ஏதாவது கஷ்டத்துல வளர்ந்திருந்தா இதை பத்தி தெரியும். சோம்பேறி வாழ்க்கை வாழறதுக்கெல்லாம் என்ன தெரியப்போகுது.

பொது ஜனம்; அப்ப சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் ஒரு ஆரம்பம்......இது இன்னும் பல பரிமானங்களை எடுக்கவேண்டும். வசதிகளிலேயும் தனியாரைப்போல, அதாவது ஆய்வகம், விளையாட்டுக் கல்வி என எல்லாமே தனியார் பள்ளிகளைப்போல அரசு பள்ளிகளுக்கும் சமமாக வரவேண்டும். அதானே!


பொது ஜனம்; ஆமாம்! அதுக்கு ஏதாவது முயற்சி எடுத்தா இதை ஒரளவுக்கு நல்லாட்சி என்று சொல்லலாம்! இது ஆரம்பத்துக்கே வேட்டு வைக்குது! இதுக்கு குடும்பம் இல்லைன்னா யாருக்கும் குடும்பம் இல்லையா!

பொது ஜனம்; முன்னால் முதலமைச்சர் கூட அவர் எழுதின செம்மொழிப் பாட்டை எடுத்துட்டு வெளியிட்டுக்கோ, மாணவர்கள், பல கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து போராடி பெற்றது, சமச்சீர் கல்வியை நிறுத்தாதே, மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்காதே! என்று சொல்லிட்டாரப்பா! அப்புறம் என்னவாம்!

பொது ஜனம்;  வேணுன்னா இந்தம்மாவே ஒரு நல்ல பாட்டா எழுதி சேர்த்துகிட்டும் யாரு வேணாங்கறா! 


பொது ஜனம்; ஏம்பா நடிச்ச படத்திலேயிருந்து ஒரு பாட்டை எடுத்து இதுல சொறுகிடப்போறாங்கப்பா!





No comments: