தமிழக அரசின் தலைமைச் செயலகத்தை மாற்றுவது தொடர்பில்
சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புனித ஜார்ஜ் கோட்டை வளாகம் |
ஓமந்தூரார் தோட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தலைமைச் செயலகம் மற்றும் சட்டசபை வளாகம் ஆகியவை மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றப்படக் கூடாது எனக் கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
தமிழக முதல்வராக மூன்றாவது முறையாக பொறுப்பேற்றுள்ள செல்வி ஜெயலலிதா முன்னர் முதலமைச்சராக இருந்த போது, அவர் தலைமையிலான அமைச்சரவையே தலைமைச் செயலகமும் சட்டமன்றமும் வேறு இடத்துக்கு மாற்றப்பட வேண்டும் என முடிவெடுத்தாகவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
புதிய தலைமைச் செயலக வளாகம் |
எதன் அடிப்படையில், யாரின் உத்தரவின் பேரில் தலைமைச் செயலகத்தையும், சட்டமன்றத்தையும் மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்பது தெரிவிக்கப்பட வேண்டும் என்பதே தமது மனுவின் முக்கிய கரு எனவும் கிருஷ்ணமூர்த்தி கூறுகிறார்.
ஆட்சி மாற்றம் ஏற்படும் போது தலைமைச் செயலகத்தை மாற்றுவது என்பது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் எனவும், அது அரசின் செலவினங்களை அதிகரித்துக் கொண்டே செல்லக் கூடும் எனவும் அது முறையானதாக இருக்காது என்றும் தமது மனுவில் கூறப்பட்டுள்ளதாகவும் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி கூறுகிறார்.
தமது மனு விசாரணைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறுகிறார். இந்த வழக்கில் தற்போது முதலமைச்சராகவும், அ இ அ தி மு க வின் பொதுச் செயலராகவும் இருக்கும் செல்வி ஜெயலலிதாவும், அரசின் தலைமைச் செயலர் மற்றும் பொதுப்பணிச் செயலர் ஆகியோர் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர் எனவும் கிருஷ்ணமூர்த்தி தெரிவிக்கிறார்.
இந்த வழக்கு விசாரணை ஜூன் மாதம் 16 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
...நன்றி பிபிசி தமிழோசை 19.05.2011
வழக்கை நீதிபதிகள் ராஜேஸ்வரன், வாசுகி ஆகியோர்
நேற்று விசாரித்தனர்.
அப்போது நீதிமன்றத்தில் நடந்த வாதம் வருமாறு:
மனுதாரர் வக்கீல் கிருஷ்ணமூர்த்தி:
புதிய முதல்வர் வந்ததும்
தலைமைச் செயலகத்தை
அவசரம் அவசரமாக இடமாற்றம்
செய்ய நடவடிக்கை
எடுத்துள்ளார். சட்டமன்ற
கூட்டத்தொடர் ஏற்கனவே புதிய
தலைமைச் செயலகத்தில் நடந்துள்ளது.
இந்நிலையில், சட்டமன்றமும், புதிய தலைமைச்
செயலகமும் மாற்றப்படுகிறது.
அங்கிருந்த செம்மொழி நூலகத்தை வேறு
இடத்துக்கு மாற்றி விட்டார்.
தலைமைச் செயலக இடமாற்றத்தால் பொதுமக்கள்
பணம் வீணடிக்கப்படுகிறது. எனவே,
இடமாற்றத்துக்கு உடனே தடை விதிக்க வேண்டும்.
நீதிபதிகள்: தலைமைச் செயலகம் மாற்றப்படும்
என்று யார் உத்தரவிட்டுள்ளார்கள்?
அந்த உத்தரவு நகல் உள்ளதா?
ஜி.கிருஷ்ணமூர்த்தி: பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது.
நீதிபதிகள்: பத்திரிகை செய்தியை வைத்து உத்தரவிட முடியுமா?
அரசு உத்தரவு அதிகாரப்பூர்மாக எதுவும்
வெளியிடப்படவில்லை.
இன்று காலை பத்திரிகைகளில்வெளியான
செய்தியை பார்க்கும்போது,
அமைச்சரவை கூட்டத்தை கூட்டிதான் தலைமை
செயலகம் மாற்றம் குறித்து முடிவு எடுக்கப்படும் என்று
முதல்வர் கூறியுள்ளார்.எனவே,
தலைமை செயலகம் மாற்றப்படும்
என்று உங்களுக்கு யார் கூறியது? எனவே,
எந்த உத்தரவும் இல்லாமல் இதில்
எப்படி தடை விதிக்க முடியும். ?
ஜி.கிருஷ்ணமூர்த்தி: தற்போதைய செய்திகளை
பார்க்கும்போது கட்டாயம் தலைமைச் செயலகம்
மாற்றப்படும் என்று தெளிவாக தெரிகிறது. எனவே,
அதிகாரப்பூர்வ உத்தரவு வரும் வரை தலைமைச்
செயலகத்தை மாற்ற தடை விதிக்க வேண்டும். செம்மொழி
நூலகம் மாற்றப்பட்டுள்ளது.
நீதிபதிகள்: நூலகம் மாற்றப்படுவதை வைத்து எந்த தடை
உத்தரவும் பிறப்பிக்க முடியாது.
ஜி.கிருஷ்ணமூர்த்தி: இந்திய அரசியல் சட்டம்
பிரிவு 174(2)ன் படி
தலைமைச் செயலகத்தை
மாற்ற கவர்னருக்கு தான்
அதிகாரம் உள்ளது.
அப்படி இருக்கும்போது
இதை மாற்ற அதிகாரிகள்
நடவடிக்கை எடுக்கிறார்கள்.
இதற்கு தடை விதிக்க வேண்டும்.
நீதிபதிகள்: நாங்கள் தெளிவாக கூறுகிறோம். தலைமைச்
செயலகம் மாற்றப்படும் என்று அதிகாரபூர்வமான உத்தரவு
எதுவும் இல்லாத நிலையில், நாங்கள் இந்த விவகாரத்தில்
குறுக்கிட விரும்பவில்லை.
தமிழக அரசு சார்பாக அரசு வக்கீல் வெங்கடேஷ்: தமிழக
அரசு சார்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம்
வேண்டும்.
முதல்வர் ஜெயலலிதா சார்பாக
வக்கீல் தஞ்சை நவநீதகிருஷ்ணன்: இந்த வழக்கில் அதிமுக
பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை 3வது எதிர் மனுதாரராக
சேர்த்தது தவறாகிறது. அதை நீக்க உத்தரவிட வேண்டும்.
ஜி.கிருஷ்ணமூர்த்தி: முதல்வர் ஜெயலலிதா அறிவுரைப்படி
தான் தலைமைச் செயலகம் மாற்றும் நடவடிக்கை
எடுக்கப்பட்டு வருகிறது.அவர் எந்த அறிவுரையும்
கூறவில்லை என்று கூறட்டும். இந்த வழக்கில் இருந்து
ஜெயலலிதா பெயரை நீக்கி விடுகிறேன்
நீதிபதிகள்: 3வது எதிர் மனுதாரர் ஜெயலலிதாவின் பெயரை நீக்க
வேண்டுமென்றால்
அதற்கான மனுவை தாக்கல் செய்யுங்கள். இந்த வழக்கு
விசாரணையை அடுத்த
மாதம் 15ம் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்.
ஜெயலலிதா சார்பில் வக்கீல் நவனீதகிருஷ்ணனும்,
தமிழக அரசு தலைமைச் செயலாளர்,
பொதுப்பணித்துறை செயலாளர் ஆகியோர் சார்பாக
வக்கீல் எஸ்.வெங்கடேசனும்
ஆஜராகி நீதிமன்றத்தில் நோட்டீஸ் எடுத்து கொண்டாதால்,
தனியாக நோட்டீஸ்
அனுப்ப நாங்கள் விரும்பவில்லை. எனவே,
அவர்கள் அடுத்த மாதம் 15ம் தேதி
பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
...........நன்றி தினகரன் 19.05.2011
பொது ஜனம்; இந்த நிலையில மே,23... ஜூன் 3 ந்தேதி சட்டசபைக் கூட்டப்படுகிறதே...ஒரு வேளை இரண்டு இடத்துல கூட்டுவாங்களோ? எந்த இடத்துக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவங்க போவாங்க!
பொது ஜனம்;சரி மக்களாட்சி என்றால் என்ன? சரி சட்டம் ஒழுங்கு என்றால் என்ன?
பொது ஜனம் ; பேசாமா வீடியோ கான்பரன்சிங் மூலம் சட்டசபையையும், தலைமைச் செயலகத்தையும் நடத்திட்டு போகலாமே! அதுனால மைக்கை எடுத்து எறியறதுக்கு வழியில்லாம இருக்குமே! அவங்கவுங்க வீட்ல இருந்தே வசதியா சட்டசபையையும், தலைமைச்செயலகத்தையும் நடத்தலாமே! இதை நடத்தறது பெரிய கம்ப சூத்திரமா?
பொது ஜனம்; சரி அடுத்து ஆட்சிக்கு வர்றவங்க இரண்டுமே பிடிக்கலை, என்று மெரினா பீச்சுல சட்டசபையையும், தலைமைச்செயலகத்தையும் காத்தோட்டமா மாத்திக்குவாங்களோ? என்னவோ?
பொது ஜனம்; இருக்கும் அவங்கவங்க இஷடம் தானே! அப்ப நம்ம வீட்டை இடிச்சுட்டு கூடத்தான் தலைமைச்செயலகத்தை நடத்துவாங்க! வாஸ்துப்படி இங்கதான் சரியா வரும் என்று!
பொது ஜனம்; நாடு அவங்கவுஙகளுக்குத் தானே, நாம அதுக்குத்தானே ஒட்டு போட்டோம்!... நாம அவங்க தயவிலத்தானே வழறோம். நம்ம தயவில வாழறோம் என்றால் அடிக்க வருவாங்க! அப்படித்தான் அரசியல் சட்டத்தில பட்டா போட்டு வைத்திருக்கிறதோ? என்னவோ? யாரு தட்டிக் கேக்கறது?
பொது ஜனம்;நீதிதான் தட்டிக்கேக்கணும். நம்மளோட கடைசி நம்பிக்கை அது தானே!அது ரொம்ப காலம் ஆகும் போல இருக்கே? நீதி எப்பவுமே லேட்டு தான் ஆனா லேட்டஸ்டா வரும்!
பொதுஜனம்;அதுக்குள்ள கையெழுத்து நான் போடலை என்கிற மாதிரி உத்தரவு நான் போடலை என்று சொல்லிட்டாங்கன்னா?
பொது ஜனம்; ஹி ஹி....அப்புறம் என்ன? சட்டத்தை கையிலெடுத்தவர் தலை உருளும்.....இன்னொருவர் வந்து காப்பாத்துகிறவரை..........
No comments:
Post a Comment