மரியம் பிச்சை விபத்து : சிக்கியது லாரி
திருச்சி : தமிழக சுற்றுச்சூழல் அமைச்சர் மரியம் பிச்சை
கடந்த 23ம் தேதியன்றுசாலை விபத்தில் இறந்தார்
அவரது கார் கன்டெய்னர் லாரியில் மோதி
விபத்துக்குள்ளானது. மரியம்பிச்சை மரணம்
குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்தபடும் என்று
ஜெயலலிதா தெரிவித்திருந்தார்.
சுங்க சாவடியில் பதிவான
வீடியோவை வைத்து கடந்த சில நாட்களாக தேடிய
தீவிர தேடுதல் வேட்டையில் அந்த லாரி ஆந்திர
மாநிலத்தை சேர்ந்தது என்று கிடைத்த தகவலையடுத்து
லாரியை போலீசார் தனிப்படை
அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் லாரி
ஆந்திர மாநிலத்தில்
சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனிப்படை போலீசார்
லாரியை கொண்டு வர கொல்கத்தா
விரைந்துள்ளனர் சி.பி.சி.ஐ.டி போலிசார்.
மேலும் அந்த லாரி தூத்துகுடியிலிருந்து ஜிப்சம்
மூட்டைகளை ஏற்றி கொண்டு
விஜயவாடா நோக்கி சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
லாரி ஓட்டுனரையும், உரிமையாளரையும் விசாரணைக்காக
சென்னை கொண்டுவர முடிவு செய்துள்ளது சி.பி.சி.ஐ.டி.
....தினகரன் 30.05.2011
*******************
பொது ஜனம்; இது என்னய்யா? முன்னாடி
அக்கடான்னு
போய்க்கிட்டிருந்த கன்டெய்னர்
லாரியில போய் மந்திரி மரியம் கார்
கண்ணுமண்ணு தெரியாம
ஒட்டியதினால
முட்டிகிட்டு விபத்து ஏற்பட்டா
லாரி ஒட்டுனரா பொறுப்பு!
பொது ஜனம்; பாவம்பா! டிரைவரோட,
பொண்டாட்டி
பிள்ளைங்களை
நடுத்தெருவுல நிக்கவைச்சுட்டாங்களா!
காக்கிகள் வேறு, போட்டுத் தாக்கு,
தாக்குன்னு தாக்கி
விசுவாசத்தை காட்டி இருப்பாங்களே!
பொது ஜனம்; இருப்பா பின்னே!
சட்டம் ஒழுங்கை
காப்பாத்த வேணாவா?
பொது ஜனம்; ஓ.....
இது தான் சட்டம் ஒழுங்கா!
இப்ப நல்லா தெரிஞ்சுகிட்டேன்!
பொது ஜனம்; எதிரே வந்த
டிப்பர் லாரியில மோதாம
தப்பிக்கறதுக்காகத்தான்
வண்டியை லெப்டுல ஒடிச்சு
இந்த கண்டெயன்ர் லாரியில
மோதிக்கிட்டாங்களாம்.
விசாரணை அறிக்கையை
பேப்பர்ல போட்டிருந்தது.
பொது ஜனம்; அப்ப இந்த
லாரியில முட்டிகிடலனா
எதிரே வந்த டிப்பர் லாரியில
மோதி கார்ல வந்த
மொத்த பேரும், கார்
டிரைவரோட சேர்ந்து எல்லோரும்
மவுத்தாயிருக்கணும். (மரணம்)
பொது ஜனம்; லாரியால
மரியத்தை தவிர மத்தவங்க எஸ்கேப்!
ஆனா மரியம் மட்டும் மாட்டிகிட்டு
மவுத்தாயிட்டாரு! (மரணம்)
பொது ஜனம்; ஆனா
லாரிக்காரர் நின்னு இருக்கணும்ல....
அவரு ஏன் நிக்காம போய்ட்டாரு!
பொது ஜனம்; இங்க
நேருக்கு நேர் மோதினாவே
விபத்து ஏற்படுத்தினவங்க
யாரும் ஸ்பாட்ல நிக்கறது
இல்லை. எல்லோருமே ஹிட் அன் ரன்
தான். நின்னா சுத்தி இருக்கிற
மக்கள் அடிச்சு கொன்னுற
மாட்டாங்களா?
பொது ஜனம்; ஆனா இந்த
மரியம் கார் பின்னாடி
இல்லை வந்து
முட்டிகிச்சு, விபத்து
ஏற்படுத்தினது மரியம் தான்.
இதுக்காக லாரி டிரைவர்
எப்படி தைரியமா நிப்பாரு!
அதுவும் வெளி மாநிலத்துக்காரரு!
எதுக்கு நிக்கணும்?
பொது ஜனம்; அவரு (லாரி டிரைவரு)
என்ன அதிமுக
பொதுச் செயலாளரா? தகிரியமா எதை
வேணுன்னா செஞ்சிட்டு
வெக்கமில்லாம நிக்கறதுக்கு!
பொது ஜனம்; மரியம் கார்மேல
தான் தப்பு!
அவரு
வந்த கார் டிரைவரைத்தான்
உள்ளே பிடிச்சு போடனும்.
பொது ஜனம்; இதுக்கு போயா
சிபிசிஐடி! விசாரணை!
அம்மாம்...பெரிய ஆளா அவரு!
பொது ஜனம்; நாங்க பாரு
எவ்வளவு ஷார்ப்பா இருக்கோம்!
என்று காட்டவேணாவா?
பொது ஜனம்; அதுக்காக
அப்பாவியை புடிச்சிகிட்டா
வருவே! உங்க
அழிச்சாட்டியத்துக்கு
அளவே இல்லை.
பொது ஜனம்; சரி சரி
மரியத்துக்கு மட்டும் தானா?
எல்லோருக்கும் சிபிசிஐடியா?
பொது ஜனம்; அப்படின்னா
நிறைய கேஸ் இருக்குதே!
எல்லாத்துக்கும் சிபிசிஐடி விசாரணை
வைக்கணுமே! தினம்
ஹிட் அன் ரன் கேஸ் மாதிரியான
விபத்து எக்கச்சக்கமா நடந்துகிட்டுதான்
இருக்கு!
பொது ஜனம்; ஆரம்பத்திலேயிருந்தே
இதுங்க போல
காண்பிச்சுகிட்டேதான் இருக்குதுங்க!
பொது ஜனம்; ஆமாம மெரினாவில
காணாம போன சிறுமியைக்கூட
பெத்தவங்களே
கண்டுபிடிச்சாட்டாங்க
இவங்க கண்டுபிடிச்சா மாதிரி இவங்க
பேரை போட்டுகிட்டு
மாறி மாறி போலிஸ்காரங்க
கூட்டிகிட்டுபோய்
முத்தம் கொடுத்துகிட்டு இருந்தாங்க!
பொது ஜனம்; போல காட்டறதுன்னா? என்ன?
பொது ஜனம்; அதான் நங்கு காட்டறது!
சின்னப்புள்ளைங்க மிட்டாய்
வைச்சுக் காட்டுமே!
பொது ஜனம்; ஆமாம்! அந்த
குழந்தையின் பெற்றோரும்
தொலைக்காட்சி பேட்டியில சொன்னாங்க!
"குழந்தையை
தூக்கி சென்றவரே
போன் பண்ணி குழந்தை ஜி.எச்.சில
இருக்கிறதா போன்
பண்ணி தெரிவிச்சிட்டார்" என்று
சென்னாங்க! இவங்க அங்கே
போறதுக்குள்ளே
போலிஸ் தூக்கிட்டு போய் போல
காமிச்சிகிட்டு இருந்தது!
பொது ஜனம்; ஓ... போனை டேப்
பண்ணி ஜி.எச்சுக்கு போயிருப்பாங்க!
பொது ஜனம்; அப்புறம் ஏன்?
அவர் மறைந்திருந்து
ஜி.எச் இல (மருத்துவமனையில)
விட வேண்டும்?
பொது ஜனம்; போலீஸ் பன்ற
அலப்பரையை
பார்த்து தான்.
மாட்டினா, அவகாசம் கொடுக்காம
கும்மாங் குத்து குத்தினாலும்
குத்தும் இந்த காவல் துறை.
கடத்துனேன்னு சொல்லு என்று
மிரட்டினாலும் மிரட்டும்
அப்பத்தானே மக்கள் கிட்ட போல
காட்ட முடியும்.
பொது ஜனம்; மக்களைப் பத்தி
எப்பவுமே இதுங்க
மட்டமாவே எடை போடும். ஒன்னும்
தெரியாதுன்னு.....
No comments:
Post a Comment