சென்னை மே 20: அரசு தலைமைச் செயலகமாக செயல்படுவதற்கு புதிய தலைமைச் செயலகக் கட்டிடத்தைத் தவிர்ப்பது ஏன் என்பது குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா விளக்கம் அளித்துள்ளார்.சட்டசபை செயல்பட புனித ஜார்ஜ் கோட்டையைத் தேர்ந்தெடுத்ததில் எவ்வித அரசியல் உள்நோக்கமும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது ஓமந்தூரார் தோட்டத்தில் கட்டப்பட்டுள்ள புதிய சட்டசபைக் கட்டிடத்தில் போதுமான வசதிகள் இல்லை. கட்டடப் பணிகள் நிறைவு பெறாமலேயே அவசரம் அவசரமாக துவக்க விழா நடத்தப்பட்டுள்ளது. 19.3.2010ல் புதிய கட்டடத்தில் முதல் சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெற்ற போது, சட்டமன்றத் தரையில் புதிய தரைவிரிப்புதான் போடப்பட்டிருந்தது. கேலரி உள்ள முதல் மாடி முடிக்கப்படாமல், பெரிய திரைச்சீலை ஒன்றால் சுவர்கள் மறைக்கப்பட்டு சட்டமன்றக் கூட்டம் நடைபெற்றது. மேலும், அப்போதைய அரசில் அனைத்து அமைச்சர்களின் துறைகளும் புதிய கட்டிடத்துக்கு மாற்றப்படாமல், முந்தைய அரசு இரண்டு கட்டிடங்களிலுமாகத் தான் செயல்பட்டுக் கொண்டிருந்தது. தற்போது கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தில் இன்னமும் முழுமையான வசதிகள் அனைத்தும் செய்து முடிக்கப்படவில்லை. மின் தூக்கிகள் கூட முழுமையாக முடிக்கப்படவில்லை. எனவே அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கட்டிடத்தின் மேல் மாடிக்குச் செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும், ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் தலைமைச் செயலகம் கட்டப்படுவதற்கு வணிகர்களும், புதுப்பேட்டை மோட்டார் வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்பவர்களும், ரிச்சி தெரு மின்னணு சாதன வியாபாரிகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். பாதுகாப்பு காரணங்களுக்காக அந்தக் கடைகள் விரைவில் அங்கிருந்து காலி செய்யப்படும் என்ற அச்சத்திலேயே இருந்து வந்துள்ளனர். எனவே, பாதுகாப்பு காரணங்கள் மற்றும் இயங்குவதற்கு வசதியாக அனைத்துத் துறைகளையும் ஒரே இடத்தில் வைப்பதற்கு ஏற்ற வகையில் உள்ள பழைய புனித ஜார்ஜ் கோட்டையையே மீண்டும் தேர்ந்தெடுத்துள்ளோம். இன்னும் ஒன்றரை வருடத்துக்குள் தேர்தல் வாக்குறுதிகளை கூடுமான வரையில் நிறைவேற்ற வசதியாக, அனைத்து அரசு அலுவலகத் துறைகளையும் ஒருங்கிணைத்து செயல்பட புனித ஜார்ஜ் கோட்டையே வசதி என்பதால், அதையே தேர்ந்தெடுத்துள்ளோம் என்று முதல்வர் ஜெயலலிதா இந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஆட்சி நிர்வாகம் நடத்த அங்கு சரியான வசதிகள் இல்லாத காரணத்தினாலேயே, செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு சட்டசபையை மாற்றியுள்ளோம். இதில் எவ்வித அரசியல் உள்நோக்கமும் கிடையாது என்று கூறியுள்ளார்.
...நன்றி தினமணி 20.05.2011
பொது ஜனம்; கடந்த 2001-2006 ஆம் ஆண்டில் மட்டும், செயின்ட் ஜார்ஜ் வசதியில்லாமல் போனது ஏனோ?
பொது ஜனம்; ஆமாம் அதானே! அப்போது மட்டும் பேரவையில் 110 விதியின் கீழ் தீர்மானம் கொண்டுவந்து, செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இடப்பற்றாக்குறை என்று, அரசின் நிதி தெருக்கடியிலும் புதிய சட்டப்பேரவைக் கட்டுவதற்காக, குயின் மேரிஸ் காலேஜை இடிக்க முயற்சித்தாரே! அது ஏன்?
பிறகு அண்ணா பல்கலைக்கழகத்திலும் இடம் பார்த்து போராட்டத்திற்கு பிறகு கைவிடப்பட்டதே! அதுவும் ஏன்?
பொது ஜனம்: அது அவங்க புதியதாக கட்டியிருந்தால் இடப் பற்றாக்குறையெல்லாம் ஆகாமல் தாராளமாக கட்டியிருப்பார்கள பணம் கூட தாராளமாக பயன்படுத்தியிருப்பார்கள்.
பொது ஜனம்: சென்னை பெரம்பூர் பாலம் கூட 1996-2001 வரையில் திமுக ஆட்சிகாலத்தில் கட்டப்பட்டு முடிவுறாத நிலையிலேயே இருந்தது. அதற்கு விடிவுக்காலம் அதிமுக ஆட்சிக்காலத்திற்கு பிறகு, 2006-2011 இல் வந்த திமுக ஆட்சியால் தான் மீண்டும் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டது. இது என்ன பற்றாக்குறையினால் அப்படியே கிடப்பில் போட்ப்பட்டது. ஒரு பாலம் கட்டறதுக்கு 10 வருஷமா? பலே! நிருவாகத் திறமை!
பொது ஜனம்:ஒரு வேளை இந்த புதிய தலைமைச்செயலகத்தை கட்டுவதற்கான கான்டிராக்டை ......அவங்க ஆளுக யாருக்காவது தருவதாக வாக்கு கொடுத்திருந்தார்களோ? அதுல........நிறைய.............. நிறைவேறாமல் போனதற்காகத்தான் இந்த வீண் வீம்பாக இருக்குமோ?
பொது ஜனம்: உனக்கு ஏம்பா இந்த டவுட்டு?
பொது ஜனம்: டவுட்டுதான் இங்க வேலையே!
பொது ஜனம்: சரி இந்த ஒமந்தூரார் தலைமைச்செயலக கட்டிடத்திற்கு வரைவு திட்டத்தை வகுத்த, ஐ ஏ எஸ் அதிகாரிகள், பொதுப்பணித்துறை பொறியாளர்கள் எல்லோரும் இன்னும் தமிழக அரசில் தானே பணிபுரிகிறார்கள். அவர்கள் அரசு ஊழியர்கள் தானே! நிதி ஒதுக்கிய துறையும் தமிழக அரசில் தானே இருக்கிறது. எல்லாம் தமிழக அரசு தானாப்பா.
பொதுஜனம்: ஆமாம்! மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் தான் ஐந்து வருடத்துக்கு ஒரு முறை மாற்றி மாற்றி அமருகிறார்கள். அரசால் நியமிக்கப்பட்டவர்கள் அப்படியேதான் இருப்பார்கள், அரசு அப்படியேத்தான் இருக்கும் அரசு பொதுமக்களுடையது. தனிநபருடையது அல்ல.
பொதுஜனம்: ஆமாம்! மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் தான் ஐந்து வருடத்துக்கு ஒரு முறை மாற்றி மாற்றி அமருகிறார்கள். அரசால் நியமிக்கப்பட்டவர்கள் அப்படியேதான் இருப்பார்கள், அரசு அப்படியேத்தான் இருக்கும் அரசு பொதுமக்களுடையது. தனிநபருடையது அல்ல.
பொது ஜனம்: அப்போது எதிர் கட்சியாக இருந்த அதிமுக எம்.எல்ஏ க்கள் இந்த குறைபாடுகளை எல்லாம் புதிய சட்டமன்றத்திலும் ஒரு தடவை கூட கூறவில்லையே,. கட்டுவதற்கு முன்னும் பழைய சட்டமன்றமான செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலும் கூறவில்லையே! நல்லா ஜாலியாகத் தானே ஒமந்தூரார் சட்டப்பேரவையிலே குளு குளு கதகதப்பில் அமர்ந்திருந்தார்கள். அப்போது ஐடியா தோன்றியிருக்காது. ஒருவேளை ஐடியாவை எம.எல்.ஏக் களுக்கு சொல்லமால் கொடைக்கனால் சென்று விட்டாரோ?
.
பொது ஜனம்: எங்க அய்யன் குதிருக்குள்ள இல்லைன்னு இவங்க அறிக்கையிலேயே எல்லாமும் ஒன்னொன்னா வெளியே வந்துரும் போல இருக்கே!
பொது ஜனம்: கேக்கறவன் கேனையனா இருந்தா கேழ்வரகுல நெய் வடியுது என சொல்லுவாங்க டோய்!
No comments:
Post a Comment