Pages

Tuesday 17 May, 2011

முதல் கோணல் முற்றும் கோணல்.........

http://www.worldservice.com/tamil
16 மே, 2011 - பிரசுர நேரம் 16:17 ஜிஎம்டி

தலைமைச் செயலக இடமாற்றம் சர்ச்சையில்...

தமிழக சட்டமன்றத்தையும் தலைமைச் செயலகத்தையும் அதன் புதிய வளாகத்திலிருந்து புனித ஜார்ஜ் கோட்டையின் பழைய வளாகத்திற்கு மாற்றப்பட்டிருப்பது சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளது.
1200 கோடி ரூபாய் செலவில் உருவான புதிய வளாகத்தைக் கைவிட்டு தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்றத்தினை முன்பு இருந்த புனித ஜார்ஜ் கோட்டைக்கே மாற்றும் யோசனையை கைவிடுமாறு முதல்வர் ஜெயலலிதாவை பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரியுள்ளார். 

தமிழகத்தில் உடனடியாக கவனம் செலுத்தி தீர்க்க வேண்டிய பிரச்சனைகள் ஏராளமாக உள்ளன என்று ஜெயலலிதாவே கூறியிருக்கும்போது, தமிழக மக்களின் வாழ்வாதாரம் மற்றும் வருவாயைப் பெருக்குவதில் கவனம் செலுத்தாமல் இப்படி இடம்பெயர்வது மக்களின் மனதில் எதிர்மறையாக எண்ணங்களையே ஏற்படுத்தும் என தான் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் ராமதாஸ் எச்சரித்துள்ளார்.
ஆனால் தமிழகத்தில் ஆட்சிப்பொறுப்பேற்றுள்ள புதிய முதலமைச்சர் ஜெயலலிதா, தலைமைச்செயலகம் முன்பு இயங்கி வந்த புனித செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்குச் சென்று தனது அலுவல்களைத் தொடங்கியுள்ளார்.
தேர்தல் முடிவுகள் வந்த ஒரு நாளிலேயே, பழைய தலைமைச் செயலகத்தில் பெயர்ப்பலகைகள் மாற்றப்பட்டிருந்தன.
நடவடிக்கை சரியா?
புதிய அரசு பொறுப்பேற்காத நிலையில், அரசு அலுவலகங்களை இடம் மாற்றுவது தொடர்பான உத்தரவுகளை யார் பிறப்பித்தார்கள், அவ்வாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை அதிகாரிகள் நிறைவேற்றுவது சட்டப்படி சரியானதுதானா என்பது ஓய்வு பெற்ற மூத்த தமிழக அதிகாரியும், தற்போது ஜனதாக்கட்சியின் தலைவருமான வி.எஸ்.சந்திரலேகா தமிழோசையிடம் பேசினார்.
(முன்னால் ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்திரலேகா....முந்தைய ஆதிமுக ஜெயலலிதா ஆட்சியில் பணிபுரிந்தவர்)
 சந்திரலேகா; முதல் கோணலே முற்றும் கோணலா! என்கிற மாதிரி, இன்னும் பார்மலா பதவியேற்பதற்கு முந்தியே இந்த மாதிரி உரிமை எடுத்து, அதை வந்து அரசாங்க அதிகாரிகள் நிறைவேற்றுகிறார்கள் என்பது ஒரு தப்பான முன்னுதாரணம். ஏன்னா இதுக்கு பார்மலா எந்த ஒரு ஆர்டரும் இஷ்ஷியு ஆகலை. ஒரு ஆர்டர் போடறதுக்கு முந்தி அதோட சாதகப் பாதகங்களை விளக்கி அந்த ஆர்டர் போடணும். எதற்காக இந்த கட்டடத்தை மாத்தறோம்? என்ன பிரச்சினை இருக்கு புது பில்டிங்கில? அதை யாருமே சொல்லலை.

புதிய முதலைமைச்சருக்கு பிடிக்கலை என்ற ஒரே காரணத்துனால, இன்றைக்கு போர்ட் செயின்ட் ஜார்ஜூக்கு  போயிருக்கிறார்கள். அடுத்த்தஅஉ இந்த இஷ்ஷூயுவ பொருத்தமட்டிலேயே, இந்த மாதிரி பில்டிங்கை மாத்தினது கரெக்டான்னா?, அக்கார்டிங் டூ மீ, இட்ஸ் நாட் கரெக்ட். ஏன்னா? இது பப்ளிக் பில்டிங். இது வந்து கிட்டத்தட்ட 1000 கோடி ரூபா செலவில கட்டப்பட்டிருக்கு.

எல்லாருக்குமேத் தெரியும் போர்ட் செயின்ட்ஜார்ஜூல, அரசாங்க அலுவலகங்கள் எல்லாமே இயங்குகின்ற அளவுக்கு இடம் நிச்சயமா கிடையவே கிடையாது. அதனால தான் இதற்கு முந்தய 2 வது முறை ஜெயலலிதா சீப் மின்ஸ்டராக இருக்கும் பொழுது, குயின் மேரிஸ் காலேஜை இடிச்சிட்டு அங்கே தலைமைச்செயலகம் கட்டறதா பிளான் இருந்தது. அப்புறம் ஸ்டூடன்ஸ் எல்லாம் எஜிட்டேட் (எதிர்த்தாங்க) பண்ணாங்க சொல்லிட்டு, அப்பறம் , ஐ.ஐ.டி கேம்பஸ்ஸூக்கு அரசாங்க அலுவலகங்கள்,இந்த செக்கட்டேரியட்டை கொண்டு போவனும், என்கிற மூவ் இருந்தது.

அதுக்கப்புறம் சிறுதாவூர் பக்கத்தில கொண்டுபோலாம், ஒரு இன்டகிரேட் டவுன்ஷிப் பண்ணி கொண்டுபோலாம் என்கிற ஐடியா ஜெயலலிதா அரசாங்கத்துக்கிட்டயே இருந்தது.


ஆனா, எதுக்காக போர்ட் செயின்ட் ஜார்ஜ், அங்கே இடம் போறாத இடத்துல கொண்டு போகணும் என்கிறது தெரியல.

இந்த புது பில்டிங் ஒரு நல்ல பில்டிங், கிரீன் பில்டிங் அதுக்கு சர்ட்டிபிகேட்ஸ் எல்லாம் வாங்கப்பட்டிருக்குது.


இது வந்து தனிப்பட்ட முறையில எனக்கு இந்த வீடு பிடிக்கல என்று அடுத்த வீட்டுக்குப்போகலாம். ஒரு அரசாங்க அலுவலகத்தை அப்படி மாத்தறது ரொம்ப தப்பு. ரொம்பத் தவறான முன்னுதாரணம்னு நான் நினைக்கிறன். ஜெயலலிதா இந்த முடிவை மாத்திக்கறது நல்லது.

கேள்வி: இதுல இன்னொரு கேள்வி; அரசாங்கம் இன்றைக்குத்தான் (16.05.2011) பதவியேற்றிருக்கிறது, ஆனால் அதிகாரிகள் சனிக்கிழமையன்றே (14.05.2011) இந்த பெயர் பலகையை மாற்றியிருப்பதாக சொல்கிறார்கள். எனவே, சனிக்கிழமையன்று ஏதாவது அதிகாரப்பூர்வமாக உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டதா?

சந்திரலேகா; எப்படி பிறப்பிக்கப்பட்டிருக்கமுடியும்?  புது அரசாங்கம் இன்னும் பதவியேற்வில்லை. அந்தம்மா அரசாங்கம் பதவியேற்றது இன்றைக்கு (16.05.2011) மத்தியானம் தான். நீங்க எப்படி முன்னாலேயே ஆர்டர் போட முடியும்? அதாவது, அதிகாரிகளுக்கு இன்னைக்கு வந்து முதுகெலும்பு இல்லை. இந்த இரண்டு அரசாங்கங்களுமே. அதிமுக, திமுக என்னபண்ணியிருக்காங்கன்னா? அரசாங்கங்களை தங்களுடைய கைப்பாவையாக வைத்துக்கொண்டார்கள், அவங்கவுங்களுக்கு வேணுங்கிற அதிகாரிகளைத்தான் முக்கியமான பதவிகள்ல வைக்கிற காரணத்தினால, அவங்க சட்டத்துக்கு புறம்பா பன்றதை பத்தி தயங்கறதே கிடையாது. இது தான் பிரச்சினை.

கேள்வி: இன்னொரு விஷயம் தேர்தல் முடிவுகள் வெளிவந்துக்கொண்டிருக்கும் போதே. நீங்கள் செய்கின்ற, மூத்த அதிகாரிகள் எல்லாம் அடுத்து வெற்றிப் பெற்ப்போகின்ற கடிசியின் தலைவர் வீட்டுக்குப் படையெடுப்பது, அங்கே போய் தவம் கிடப்பது, இது போல நீங்கள் தானே இதையெல்லாம் செய்கிறது?

சந்திரலேகா; ஏனென்றால் அவங்களுக்கெல்லாம் ஒரு நல்ல போஸ்டிங் வரணும், இது மாதிரி பன்னினாத்தான் அவங்க சர்வைவ் ஆக முடியும் என்கிற நிலைமையை, இந்த திரவாடக்கட்சிகள் உருவாக்கிவிட்டன. 67 க்கப்புறம் தான் இந்த மாதிரி நிலைமையே தமிழ் நாட்டுல உருவாக்கப்பட்டது. அதிகாரிகள் வந்து யார் பதவியில இருக்கறாங்களோ அவங்களோட நல்லெண்ணத்தை பெறனோம்னா இந்த மாதிரி, பன்னினாத்தான் இது சரிவரும் என்கிற நிலைமை இருந்ததினால. இன்னைக்கு அதிகாரிக்கெல்லாம் முத்திரை குத்தப்பட்டிருக்கிறது இவர் அதிமுக அனுதாபி, திமுக அனுதாபி, அதனால தான் அதிமுக சார்பு அதிகாரிங்க எல்லாம் முன்னாலேயே ரிசில்ட் வர்றதுக்கு முன்னாலே இப்படி வர்றதுன்னு தெரிஞ்சவுடனேயே அங்கேப் போய் மாலை போட்டு. எனக்கு இந்த போஸ்ட் வரணும்னு லாபி பன்ன ஆரம்பிச்சாட்டாங்க.

கேள்வி: இதை வந்து ஐ.ஏ.எஸ் ஆபிசர் சங்கத்துல இந்த மாதிரி புரபஸ்னல் இஷ்ஷியுசை விவாதிக்கறதில்லையா?

சந்திரலேகா; சங்கத்தில அது மாதிரி விவாதிக்கறது கிடையாது. ஏன்னா சங்கத்தில வர்ற அதிகாரிகளும், இப்ப வர்ற எலக்சன்லை வர்ற அதிகாரிங்கள் அப்படியேதான் பிளையபிலா இருப்பார். கேள்வியெல்லாம் கேட்க மாட்டாரு. இது அன் பார்ச்சுனேட்.

கேள்வி: இப்ப வந்து பொது பணத்தை விரயம், இப்ப வந்து தமிழ் நாடு மிகப்பெரிய நித சிக்கலிலே இருக்கிறது, என்று வந்தவுடன் சொல்லியிருக்கிறார் முதலமைச்சர் ஜெயல்லிதா. அப்படிஇருக்கும் பொழுது  வந்தவுடன் கட்டிடத்தை மாற்றுவது என்பது, அந்த நிதிச்செலவுகளை குறைப்பதற்கு எந்த வகையில பயன்படும்?

சந்திரலேகா; தேர்தல்ல சொல்லயிருக்காங்க திமுக அரசு கஜானவை காலி பண்ணிட்டாங்க என்று. காலியான கஜானாவில, திருப்பி இது ஒரு அனாவசிய செலவு தானே. ஏற்கனவே எல்லாரும் மூவ் பண்ணி கவர்ன்மென்ட் இயங்கிகிட்டிருக்கற கட்டிடத்தை விட்டுட்டு, ஏற்கனவே வேணான்னு சொல்லி வெளியில வந்த கட்டிடத்தை, திருப்பி புதுப்பித்து, திருப்பி டிப்பார்ட்மென்ட்சை எல்லாம் அங்க மாத்திறதுங்கிறது. திருப்பி இதுவும் பல லடசக்கண்க்கான பணம் செலவாகும். இது மக்கள் பணம் தானே! வரிப்பணம் தானே! இது வேஷ்டான எக்ஸ்பன்டிச்சர் இல்லையா!

மக்கள்.....ஏற்கனவே ஜெயலிலதா ஜெயிக்கறதுக்கு முன்னாடியே கிளியரா சொல்லிட்டாங்க.....நான்  ஜெயிச்சா செயின்ட் ஜார்ஜ் கோட்டயில தான் பதவி ஏற்பேன் என்று ஜெயிக்கறதுக்கு முன்னாடியே  சொல்லிட்டாங்க
   கேள்வி: அதுல ஒன்னும் தவறு இல்லையா?
மக்கள்.....அவங்களுக்கு அங்க இஷ்டமில்லை. ஏதோ ஒரு காரணத்துக்காக வேண்டாங்கறாங்க. (ஹிஹி என்ன? காராணம்?) என்ன? காரணம்னு இப்பத் தெரியாது? (பின்னே எப்பத் தெரியும்?)
கேள்வி: பல கோடி ரூபா செலவு பண்ணி கட்டிடம் கட்டினாங்க, அதை வேணாங்கறது, வீம்புக்காக அதை திருப்பி பன்றேன், அதை ரிவர்ஸ் பன்றேன்,. என்று பன்றாங்கன்னு நீங்க நினைக்கிறீங்களா?
மக்கள்.....அவங்க ஏதோ எண்ணத்தை வைச்சுண்டு, போகக்கூடாது அப்படின்னுட்டுதான  நினைக்கிறாங்க. இதைப்போய் யாரும் எடுத்துச் சொல்ற அளவுக்கு யாரும் கிடையாது.
மக்கள்: ரொம்பத் தவறுங்க! பெரிய தவறு சார் அது! எப்ப ஒன்று வந்து, பழைய பில்டிங்கிலேயிருந்து புது பில்டிங்குக்கு மாத்தும் பொழுது, அதை புது பில்டிங்குல இருக்கறதுதான் நல்லது. அதை அல்ரெடி லைப்ரரியா, பொது மக்களுக்கு ஆக்கியாச்சு! மக்களுக்காக ஒதுக்கி படிக்கிற அளவுக்கு பண்ணியாச்சு! புது சட்டசபை கட்டிட்டப்பிறகு புது சட்டசபையில தான் உட்காரணும். அதுதான் மரியாதை.

                      கேள்வி: சரி ஏன்? இது மாதிரி பன்றாங்க?
 
மக்கள்.........அது தெரிலை, அது அவங்களதான் கேக்கணும்.
 
மக்கள்.........முன்னால் முதலமைச்சர் கட்டினாருங்கற ஒரு காரணத்திற்காக மாத்திறதுங்கறது, மிகப்பெரியத் தவறு. அவரு வந்து அவர் சொந்த காசுல கட்டல மக்களோட ஆயிரக்கணக்கான, கோடிக்கணக்கான ரூபா வரிப்பணத்தில தான், கட்டினது. ஒரு பிரதமர் வந்து ஒப்பன் பண்ணி  வைச்சிருக்காரு. இவரு கட்டினாருங்கறதுக்காக, அதுல வந்து இருக்க மாட்டேங்கிறது ஏத்துக்கொள்ற விஷயமாயில்லை. (ஹி ஹி...கொத்தனாரு தானே கட்டினாரு...அதுவும் ஜெர்மன் கொத்தனாருங்க தானே....அப்ப கூடவா!, இது என்ன? ஸ்கூல் புள்ளைங்க கணக்கா...இது உன் பென்சில் அதுல நான்! எழுத மாட்டேன்ங்கற மாதிரி....என்ன இழுவுடா! இது!...இந்த கன்றாவிங்க கூடவெல்லாம்...)
மக்கள்............இரண்டு தடவை அங்க உக்கார்ந்து இருக்காங்க...அது ராசியனா இடம் அதுனால அங்க உக்கார்ந்து இருக்காங்க...
மக்கள்............இது தேவையில்லாதது...இவ்வளவு கோடி ரூபா போட்டு கட்டினதுக்கு 
மக்கள்..............இங்கேயே வைச்சு இருந்திருக்கலாம்....
 




புதிய அரசாங்கம் பொறுப்பேற்பதற்கு முன்னாலே அதிகாரப்ப்பூர்வ உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படாத நிலையில், முதல்வருக்கு தனிப்பட்ட முறையில் பிடிக்கும் என்ற ஒரே காரணத்துக்காக தலைமைச் செயலகம் போன்ற ஒரு இடத்தை அவசரகதியில் இடம்மாற்றுவது முறையற்ற செயல் என்று சந்திரலேகா தெரிவித்தார்.
அதிகாரிகளுக்கு முதுகெலும்பு இல்லை என்பதையே இது காட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

....நன்றி பிபிசி தமிழோசை 16.05.2011

No comments: