Pages

Monday, 30 May, 2011

தனியார் பள்ளிகளுக்கு வைச்சிட்டாங்கய்யா ஆப்பு!

தனியார் பள்ளிகளைக் கட்டுப்படுத்த கடுமையான சட்டம்: மத்திய அரசு

புது தில்லி, மே 29: அதிக கட்டணம் வசூலிப்பது, மாணவர்களின் வீட்டுக்கு டீ.சி.யை தபாலில் அனுப்புவது போன்ற அராஜகத்தில் ஈடுபடும் தனியார் பள்ளிகளைக் கட்டுப்படுத்த கடுமையான சட்டத்தைக் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.தனியார் பள்ளிகளில் மிக அதிகமாக கல்விக் கட்டணம் வசூலிப்பது இப்போது நாடு முழுவதும் பொதுமக்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 


குழந்தைகளைப் பள்ளிகளில் சேர்த்து விட்டு கட்டணம் செலுத்த பெற்றோர்கள் படாதபாடுபட்டு வருகிறார்கள். இது தவிர பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் சரியான ஊதியம் தருவதில்லை.


இந்தப் பிரச்னையை மத்திய அரசு தீவிரமாக கவனத்தில் கொண்டுள்ளது.தொழில்நுட்பக் கல்வி, மருத்துவக் கல்வி, பல்கலைக்கழகங்கள் போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் நியாயமற்ற நடவடிக்கைகளைத் தடுக்கும் மசோதா ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இப்போது தனியார் பள்ளிகள் விஷயத்திலும் இதேபோன்ற சட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.மத்திய கல்வி ஆலோசனை வாரியத்தின் கூட்டம் தில்லியில் அடுத்த மாதம் நடைபெறுகிறது. இதில் இந்த சட்டம் குறித்து விவாதிக்கப்படுமென்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கூறியுள்ளது.


"பள்ளி மற்றும் இடைநிலைக் கல்வி அமைப்புகளில் நியாயமற்ற நடவடிக்கைகள் தடை மசோதா 2011' என்ற பெயரில் இந்த மசோதா நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது. இதன்படி தனியார் பள்ளிகள், மாணவர்கள் சேர்க்கையின் போது அளிக்கும் விளக்கக் குறிப்பிலேயே தங்கள் பள்ளியைப் பற்றிய முழு விவரம், பாடங்கள், பாடத்திட்டங்கள், பள்ளி விதிமுறைகள் என மாணவர்களின் பெற்றோருக்கு அனைத்து விதமான தகவல்களையும் அளிக்க வேண்டும்.

பள்ளியின் இணையதளத்திலும் இந்த விவரங்களை வெளியிட வேண்டும். உரிய ரசீது தராமல் மாணவர்களிடம் இருந்து கட்டணம் வசூலிப்பதை இந்த மசோதா முழுமையாகத் தடை செய்யும். விளம்பரங்கள் மூலம் பள்ளி பற்றி மிகையாக பிரசாரம் செய்வது, போதுமான திறமையற்ற ஆசிரியர்களை வைத்து பாடம் நடத்துவது போன்றவற்றையும் இந்த மசோதா தடை செய்கிறது.

விதிகளை மீறும் பள்ளிகளுக்கு அபராதம் விதிக்கவும், தேவைப்பட்டால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கவும் முடியும். 

தனியார் பள்ளிகள் அதிக அளவில் நன்கொடை வசூலிக்கின்றன. கட்டணம் என்ற பெயரில் உரிய ரசீது ஏதும் தராமல் பணம் வாங்குகின்றனர். அவர்கள் கேட்கும் கட்டணத்தை அளிக்க சிறிது தாமதமானாலும் மாணவர்களை வீட்டுக்கு அனுப்புவது, டீ.சி.யை கொடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றன. 

மேலும் அரசுத் தேர்வில் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக சில மாணவர்களை தேர்வு எழுத விடாமல் செய்வது, அவர்களை வேறு பள்ளியில் சேர்க்குமாறு பெற்றோர்களிடம் வலியுறுத்துவது போன்ற நடவடிக்கைகளிலும் தனியார் பள்ளிகள் ஈடுபடுகின்றன என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது.
....தினமணி 29.05.2011
*******************************
பொது ஜனம்; என்னய்யா இந்த தனியார் பள்ளிகளுக்கு நாடெங்கிலும் எதிர்ப்பு கிளம்பியதினால, மத்திய அரசு ஆப்பு வைக்க ஆரம்பிச்சிட்டாங்க!பொது ஜனம்; ஆமாய்யா அவனுங்க பன்ற அக்கப்போர் தாங்கலை...அவனுங்களே ஒரு பெரிய வர்க்க பேதத்தை நாட்டில உருவாக்கிடுவானுங்க போலிருக்குது....பொது ஜனம்; ஒரு பள்ளிக்கூடத்துல கூட "இது லோகிளாஸ் பீப்பில் படிக்கிற பள்ளி". அதுனால இங்கே வந்து "லா பாயின்ட்" பேசாதீங்கன்னு, ஒரு பெற்றோரை கண்டிச்சு கிட்டு இருந்தது ஒரு பள்ளி நிர்வாகம்!பொது ஜனம்; கல்வியில என்னய்யா "லோ கிளாஸ்", "ஹைகிளாஸ்", எல்லோராலேயும் கல்விபயில முடியும்? இவனுங்க யாரு? மக்களை பிரிக்கறதுக்கு?


பொது ஜனம்; அது சரி! இந்த பள்ளிகளை நடத்திரவன் எந்த கிளாசாம்?  இவங்களை வைச்சே ஹகிளாசா ஆவரதுக்கு திட்டம் போடறானா?பொது ஜனம்; ஆமாம்! அதானே! பெத்தவங்களுக்கு வேற டெஸ்ட வெக்கிறானுங்க! பெத்தவங்க படிக்கலைன்னா! பிள்ளைங்க படிக்க கூடாதா?பொது ஜனம்; இவங்க படிப்பாங்க! இவங்க படிக்கமாட்டாங்கன்னு! இவனுங்க யாரு முடிவு பன்றதுக்கு! இவனுங்க என்ன படிச்சு கத்தையா புடுங்கி! நாட்டை சீர் படுத்திட்டானுங்க! எதையெதை கண்டுபிடிச்சாங்க!? படிச்சிட்டு வெளியே போனவங்க தான் பெரிய வல்லுநராக கூட வராங்க!பொது ஜனம்; நாங்கதான் அறிவாளிகளை உருவாக்குறோம்னு சொல்ற இவனுங்க ஏன்? எதையுமே கண்டுபிடிக்க முடியலை?!

பொது ஜனம்; யோவ்! படிக்கட்டு எங்கேயாச்சும் மேலே ஏறுமா?


பொது ஜனம்; மண்ணாங்கட்டி!  யாரு சொன்னது! எஸ்குலேட்டர் (எந்திரப் படிக்கட்டு இல்லை) இல்லை! அது மேலேயும் ஏறும்! கீழேயும் இறங்கும்!
பொது ஜனம்; இவனுங்க பள்ளியில சேர்க்கும் பொழுதே "லோக்கிளாஸ்" என்ற பார்வையிலேயே சேர்க்கிறானுங்களே, படிக்கும் பொழுது அந்த அடித்தட்டு குடிமக்களின் பிள்ளைகளுக்கு கல்வி பயிற்றுவிக்கும் பொழுது எந்த மாதிரியான டிரிட்மென்ட் கொடுப்பானுங்க என்று இதிலிருந்தே தெரிஞ்சுக்கலாம்...


பொது ஜனம்; அம்பேத்காருக்கு நடந்தது இப்பவும் நடக்க ஆரம்பிச்சுடுச்சே!


பொது ஜனம்; இவனுங்களை சுண்ணாம்பு கால்வாயில வைச்சு சுடவேணாம்!


பொது ஜனம்; சுடணும் தான் யாரு சுடறது! சட்டத்தின் மூலம் சுடக்கூடியவங்க, "சுட" வேண்டியதை "சுட" ஆரம்பிச்சுட்டாங்களே! போதாக்குறைக்கு "நான் தலையிட மாட்டேன்னு", இவனுங்களுக்கு பச்சை கொடி காட்டிடுச்சி அந்த பொம்பளை!


பொது ஜனம்; ஆமாம்பா! பல பள்ளிகளிலே ரசீதே தர்றதில்லே.....அது என்ன டேபிளுக்கு கீழே வாங்குற பணமா? இந்த பள்ளி நடத்துறவங்க இப்படி அநியாய கொள்ளையை நடத்த ஆரம்பிச்சிட்டானுங்க! 


பொது ஜனம்; வீட்டுகள்ல கூட விதிகளை மீறிப் பள்ளி நடத்த ஆரம்பிச்சுட்டாங்க!, மொட்டை மாடியில, கொட்டா போட்டு பள்ளி நடத்த ஆரம்பிச்சிட்டானுங்க! ஆனா பீஸ் மட்டும் எக்கச்சக்கமா புடுங்கறாங்க! பொது ஜனம்; டீச்சருக்கு சம்பளமே சரியா கொடுக்கறதே இல்லை! அவங்களுக்கு, பிளஸ் 2 முடிச்சவங்க, டிகிரி முடிச்சவங்க, முதுநிலை முடிச்சவங்க என்று வாத்தியார்களுக்கு ஒரு குத்துமதிப்பா சேலரி போட்டுத்தர்றாங்க! 
பொது ஜனம்; ஆனா பெத்தவங்க கிட்டேயிருந்து பீஸ் மட்டும் மானாவரியா புடுங்கறாங்க! கேட்டா! அவங்களுக்கு சம்பளம் தர்றணும், பத்தலைன்னு சொல்றாங்க.பொது ஜனம்; தனியார் பள்ளியிலே எந்த டீச்சருக்கும் அதிகபட்சமா ஏழாயிரத்துக்கு மேல சம்பளம் இல்லை. குறைந்தபட்சம் ஆயிரத்து ஐநூறு ரூபாய் இன்னும் சில இடத்துல 750, 1000 ம்னு கொடுக்கறானுங்க!
பொது ஜனம்; இது எல்லா பள்ளிகளிலேயும் நடக்குது.

பொது ஜனம்; ஏம்பா அவங்க தான் வாத்தியாருங்க சம்பளத்தை, அரசாங்கத்தை தர சொல்லி கேக்கறாங்களே!
பொது ஜனம்; அப்படி தந்தா அது அரசாங்க பள்ளியாயிடும். அப்புறம் ப்பளிக் கிட்டே  பீசே வாங்க முடியாது. ஆனா! இதே நிலைமை நீடிச்சா அதான் நடக்கப்போகுது.


பொது ஜனம்; அரசு பள்ளி வாத்தியார்களுக்கு தரும் சம்பளத்தை எந்த தனியார் பள்ளிக்கூடங்களும் தர்ரது இல்லை. ஆனா நிறைய தர்ரோம்னு புளுகுரானுங்க! பீசை ஏத்திரதுக்கு இந்த வித்தை.
பொது ஜனம்; முதல்ல இந்த பள்ளிகளுக்கெல்லாம் தனித்தனியா போர்டு வைச்சு அரசாங்கத்துல நிர்வகிக்கிறாங்க பாரு! அதுவே தப்பு! எல்லாமே "பள்ளிக்கல்வி" இயக்குநகரகத்துக்கு கீழே தான் அனைத்தும் வரணும். அப்பதான் "சமச்சீர் கல்வி" என்பதின் அடையாளத்தை ஒரளவுக்கு எட்டியதாக அர்த்தம். மெட்ரிக்குலேசன். சிபிஎஸ்சி...இப்படி அப்படின்னு இருக்கக் கூடாது.


பொது ஜனம்; ஆமாம், அந்த போர்டுகளிலே பார்க்குற அரசாங்க அலுவலர்கள், மொத்தமே 4 பேரு கூட இல்லை. புகாரை விசாரிக்கறதுக்கு கூட ஆளே இல்லை. புகார் கொடுத்து நடவடிக்கை எடுத்து, பள்ளியை மூடினதா, அவனுங்களை உள்ளே தள்ளினதா ஒரு தகவலும் இதுவரைக்கும் வரலியே!
பொது ஜனம்;மாசா, மாசம் அவங்களுக்கு "கிம்பள" கவர் போகுது இல்லை. அப்பறம் எப்படி விசாரிப்பாங்க?!


பொது ஜனம்; இவனுகளுக்கு மொத்தமா ஆப்பு வைக்கிர மத்திய அரசு சட்டத்துக்கு ஒரு ஓஓஓ போடு!

No comments: