Pages

Tuesday 24 May, 2011

பெற்றோர்களை நட்டாற்றில் விட்ட ஜெயலலிதா......!

 ப‌ள்‌‌ளி க‌‌ட்டண‌ம் ‌நி‌ர்ண‌யி‌ப்ப‌தி‌ல் அரசு நே‌ரடியாக தலை‌யிட முடியாது: ஜெயல‌லிதா  


''ப‌ள்‌‌ளி க‌‌ட்டண‌ம் ‌நி‌ர்ண‌யி‌ப்ப‌தி‌லஅரசேரடியதலை‌யிமுடியாது'' எ‌ன்றமுதலம‌ை‌ச்ச‌‌ரஜெயல‌லிததெ‌ரி‌வி‌த்து‌ள்‌ளா‌ர்.

செ‌ன்னை‌ தலைமை‌சசெயலக‌த்‌தி‌லஇ‌ன்றசெ‌ய்‌தியாள‌ர்களு‌க்கபே‌ட்டி அ‌ளி‌த்தபோதஇ‌வ்வாறஅவ‌ரகூ‌றியு‌ள்ளா‌ர்.

ப‌ள்‌ளிகளு‌க்காக‌ட்டண‌த்தை ‌நி‌ர்ண‌யி‌க்த‌னியாகுழஅமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதஎ‌ன்று‌மஜெயல‌லிததெ‌ரி‌வி‌த்து‌‌ள்ளா‌ர்.

த‌னியா‌ரப‌ள்‌ளிக‌ளகே‌ட்டு‌ககொ‌ண்டா‌லக‌ல்‌வி‌கக‌ட்டண‌த்‌தி‌லஅரசதலை‌‌யிடு‌மஎ‌ன்று‌மஅவ‌ரகூ‌றியு‌ள்ளா‌ர்.

மாணவ‌ர்களு‌க்கலே‌‌படே‌பவழ‌ங்குவதகு‌றி‌த்தஆளுந‌ரஉரை‌யி‌லஅ‌றி‌வி‌ப்பவெ‌ளி‌யி‌ட‌ப்படு‌மஎ‌ன்று‌ம் ‌பிள‌ஸமாணவ‌ர்க‌ளவேலவா‌ய்‌ப்பு‌ ப‌திவு‌க்காப‌ள்‌ளி‌யிலேயே ‌சிற‌ப்பஏ‌ற்பாடசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளதஎ‌ன்று‌மஜெயல‌‌லிததெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

...வெப்துனியா 24.05.2011

**********************
கூடுதல் கல்வி கட்டணம் கட்ட முடியாமல் பெண்சாவு:
பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை


கோவை,மே.24-

கோவை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் நேற்று நடைபெற்றது. முகாமில் கோவை மாவட்ட கலெக்டர் உமாநாத் தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலர் சண்முக சுந்தரம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு மனுக்களை பெற்றனர்.

முகாமில், கோவை மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தலைவர் ஆர்.கோபால் தலைமையில் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருப்பதாவது:- கோவை மசக்காளிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சங்கீதா, தனது மகனை கோவை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பில் சேர்த்துள்ளார். அதற்கு கல்விக்கட்டணமாக அந்த பள்ளி நிர்வாகத்தினர் ரூ.12 ஆயிரம் கேட்டுள்ளனர். ஆனால் சங்கீதா தன்னிடம் இருந்த ரூ.5 ஆயிரத்தை மட்டுமே கட்டணமாக செலுத்தி உள்ளார். மீதி பணத்தை அவரால் செலுத்த முடியவில்லை. இதனால் மனம் உடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஆகவே அரசு நிர்ணயித்த ரூ.4190 கட்டணத்தை மீறி, அதிகமாக கல்விக்கட்டணம் வசூலித்த பள்ளி நிர்வாகத்தினரை கைது செய்ய வேண்டும். இது குறித்து மாவட்ட அளவில் ஆணையம் அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தர்சனுக்கு அந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை இலவச கல்வி அளிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர்கள் தங்கள் மனுவில் கூறி இருந்தனர்.

ஏற்கனவே நடைபெற்ற குறை தீர்ப்பு முகாம்களில் மனுதாரர்கள் கூட்டம் நிரம்பி வழிவது வழக்கம். ஆனால் நேற்று வெகுவாக குறைந்து காணப்பட்டது. மனுக்களும் மிகவும் குறைவாகவே பெறப்பட்டன.
....தினத்தந்தி 24.05.2011

*****************************

பொது ஜனம்; தனியார் பள்ளிகளின் கொள்ளைகளை தடுப்பதற்காக அரசினால் அமைக்கப்பட்ட குழுக்கள் தானே! கோவிந்தராஜன் குழு மற்றும் அதற்குப்பின் வந்த ரவிராஜன் பாண்டியன் குழு. இப்பொழுது ஜெயலலிதா அரசு இப்படி நட்டாத்துல எனக்கு சம்பந்தமேயில்லைன்னு கையை விரிச்சுட்டுதே!

பொது ஜனம்; இது முன்னமே தெரிஞ்ச விஷயம் தான். ஏற்கனவே இந்த மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் கூட்டமைப்பு இந்த ஆட்சியை எதிர்பார்த்துகிட்டுதான் இருந்தது. இதன் கூட்டமைப்புத்தலைவர்களை அனைவரும் அதிமுக கொள்கை பரப்பு செயலாளர்களாக எப்போதோ மாறிவிட்டார்கள். அவர்கள் ஆட்சி வந்தவுடன் கொள்ளையடிப்பதற்காக சந்தோஷப்பட ஆரம்பித்து விட்டனர்.

பொது ஜனம்; அவர்கள் எப்படிவேணுன்னா மாறிவிட்டு போகட்டும். இங்க மாட்டிகிட்டு முழிக்கிறது ஏழை, நடுத்தர வர்க்கத்து பெற்றோர்கள் தானே! என்ன? ஆட்சிக்கு வந்ததுலேயிருந்தே மக்களை இப்படி புறக்கணிக்கிறார்களே! நம்மளோட பணத்தை இஷடத்துக்கு செலவு பன்றாங்க நமக்கு ஒன்னுன்னா? அப்படியே கை கழுவிட்டு போயிடுதே இந்த பொம்பளை!

பொது ஜனம்; இவர்கள் பள்ளிக்கும் நம்ம பணம் தானே அரசின் மூலம் மானியமாப் போகுது! கோவிந்தராஜன் குழு விதித்த கட்டண விகிதத்தை ஏற்க மாட்டோம்னு நீதிமன்றம் போனாங்க! அப்புறம் நீதிமன்றமும் பெற்றோர்களுக்கு சாதகமா தீர்ப்பு வழங்குச்சே!  அப்புறமும் இந்த பள்ளிகளின் கோரிக்கையை ஏற்று, அந்த கட்டண விகிதத்தையும் மாற்றி அமைக்க ரவிராஜன் குழுவை அமைச்சது. இப்ப எந்தக் குழுவின் முடிவிலேயும் நாங்க தலையிட மாட்டோம் யாருன்னா, எப்படின்னா அடிச்சிக்கினு சாவுங்க! என்று விடுறதுக்காகவா? இதற்கு ஒரு அரசு வேணுமா?. ஏன்? இப்படி எல்லாமே சட்டத்துக்கு விரோதமாகவே இந்த ஆட்சி வந்த கொஞ்ச நாளிலேயே பண்ண ஆரம்பிச்சிடுச்சி! இன்னும் கூறை காலத்துக்கும் என்ன பண்ணும்?

பொது ஜனம்; ஒரு தாய்க்குலம் வேறு, பள்ளியில் அரஜாகமா கேட்ட கூடுதல் கட்டணத்தை கட்டமுடியாமல் தற்கொலை பண்ணிகிச்சே!..... இந்த மக்கள் விரோத அறிவிப்பை செஞ்சதும் ஒரு பெண் தானே!

பொது ஜனம்; நிறைய பள்ளி வாசல்ல பேனரை தூக்கிட்டு இன்னைக்கும் நல்ல முடிவை அறிவிக்கும்னு பொற்றார்கள் காத்துகிட்டு இருக்காங்க அவங்க நினைப்புல மண்ணை போட்டுடுச்சே இந்த அரசு. பெற்றோர்களுக்கு கூட செவி சாய்க்கமாட்டேன்,  பள்ளிகள் கேட்டுகிட்டா மட்டும் தான் தலையிடுவேன் என்று தன்னுடைய நேரிடையான ஆதரவை அப்பட்டமா தெரிவிச்சுடுச்சே! 

பொது ஜனம்; இனிமே என்ன? இஷ்டத்துக்கு கட்டண கொள்ளை நடக்கப்போகுது! பல.....  தற்கொலைகளும் நடக்கப்போகுது..... 

பொது ஜனம்; ஏதேது! நாட்டை சுடுகாடா ஆக்காம விடாது போல இருக்கே!

No comments: