Pages

Friday 20 May, 2011

அதிமுக ஆட்சியில் எட்டு மணிநேர மின்சார சேமிப்பு.........??????



திருச்சி, மார்ச் 25: தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி மலர்ந்தால் மின் வெட்டு அடியோடு ஒழிக்கப்படும் என்றார் அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா.

............................
................................
...............................
கருணாநிதி ஆட்சியில் மின் வெட்டும் அதிகரித்துள்ளது. மின் மிகை உற்பத்தி மாநிலமாக இருந்த தமிழகம், இப்போது மின் வெட்டு மாநிலமாக மாறியுள்ளது. இதனால், தொழிற்சாலைகளில் உற்பத்தி குறைந்துள்ளது. விவசாயம் வீழ்ச்சியடைந்துள்ளது. ஜவுளித் தொழில் முடங்கியுள்ளது. இதன் காரணமாக, நாட்டின் பொருளாதாரம் நலிவடைந்துள்ளது. வேலையில்லாத் திண்டாட்டம் பெருகியுள்ளது. சட்டம்- ஒழுங்கும் இல்லாமல் போய்விட்டது. காவல் துறையை கருணாநிதி குடும்பம் ஏவல் துறையாகப் பயன்படுத்தி வருகிறது.

.....தினமணி 25.03.2011

பொது ஜனம்; திமுக ஆட்சியில தினம் ஒரு மணிநேரம் தான் நிறுத்தினாங்க, அதுவும் பகலில்  தான் நிறுத்தினாங்க இப்ப இந்தம்மாவின் அதிமுக ஆட்சியில என்னடான்னா? தினம் 8 மணிநேரம் நிறுத்தறாங்க. இரவிலேயும் 4 மணிநேரம் நிறுத்தறாங்களோ! ஒரு வேளை கரண்டை மிச்சப்படுத்தறாங்களோ!

பொது ஜனம்; ஓ..... இதுக்குப் பேர் தான் "ஆ(கா)ட்சி மாற்றமா?  அவங்களுக்கு எத்தனையோ வேலை இருக்குது...இதுக்குப் போய் ஏன்? அலட்டிக்க போறாங்க! ரங்கசாமி குத்துன காயமே இன்னும் ஆறலை.....மக்களை குத்தினாப் பரவாயில்லை.

சென்னையில் 18.05.2011 மின்தடையினால் மக்கள் அவதி..............விட்டு விட்டு ஒரு நாளைக்கு மொத்தம் எட்டு மணிநேரமாக மின்நிறுத்தம்...இரவில் தொடர்ந்து நான்கு மணிநேரமாக மின்நிறுத்தம். பெண்கள், முதியோர்கள், நோயாளிகள்  என அனைவரும் அவதி. இந்த அறிவிக்கப்படாத மின்தடையால் அனைவரும் நடு இரவில் தெருவில் அலைந்து கொண்டிருந்தனர்.

1 comment:

உதயகுமார் said...

enga oorla ellam current cut illapa.nan kiramathil dhan iruken