Pages

Tuesday, 24 May, 2011

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கொள்ளைப் போனது....?

 சென்னையில் இன்று காலை பழ. கருப்பையா எம்.எல்.ஏ. வீட்டில் புகுந்த கொள்ளையன் மனைவியின் செயினை பறித்து விட்டு ஓட்டம்
சென்னை, மே. 24-
சென்னை கோபாலபுரம் பெசன்ட் ரோட்டில் வசித்து வருபவர் பழ. கருப்பையா. துறைமுகம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனவர்.  
இன்று காலை 9.30 மணி அளவில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பழ. கருப்பையா வீட்டில் புகுந்தார். வீட்டினுள் பழ. கருப்பையாவின் மனைவி கலைவாணி (வயது 58). மட்டும் இருந்தார். அவரிடம் சென்ற வாலிபர் அய்யா வீட்டில் இல்லையா என்று கேட்டார்.
இதற்கு கலைவாணி அவர் வெளியில் சென்றிருக்கிறார். நீங்கள் யார் என்று கேட்பதற்குள் அந்த மர்ம வாலிபர் தான் கையில் வைத்திருந்த ஹெல்மட்டை கலைவாணியின் தலையில் வைத்து அமுக்கினார். பின்னர் அவரது கழுத்தில் கிடந்த 10 பவுன் செயினை பறித்தார்.  
இதனால் நிலை குலைந்த கலைவாணி சத்தம்போட்டு அலறினார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் திரண்டு வருவதற்குள் செயினை பறித்த கொள்ளையன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டான்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் ராயப்பேட்டை போலீசார் பழ. கருப்பையா எம்.எல்.ஏ. வீட்டுக்கு விரைந்து சென்றனர். அவரது மனைவி கலைவாணி மற்றும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள்.  
செயினுடன் தப்பி சென்ற கொள்ளையன் அவசரத்தில் தனது செல்போனை அங்கேயே போட்டு விட்டு ஓடி விட்டான்.அதனை போலீசார் கைப்பற்றினர். செல்போனை வைத்து கொள்ளையனை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
கொள்ளையனின் செல்போனுக்கு இன்று காலையில் யார் யாரெல்லாம் பேசி உள்ளனர். கொள்ளையன் யாரிடம் எல்லாம் போனில் பேசி உள்ளான் என்பது பற்றிய விவரங்களை உடனடியாக கண்டுபிடித்த போலீசார் அவர்களை போனில் தொடர்பு கொண்டு விசாரித்து வருகிறார்கள்.
செல்போனில் பதிவாகி உள்ள போன் நம்பர்களை வைத்தும் விசாரித்து வருகிறார்கள். எனவே கொள்ளையன் உடனடியாக கைது செய்யப்பட்டு விடுவான் என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 
....நன்றி மாலை மலர் 24.05.2011
***************************
பொது ஜனம்; இது என்னப்பா? அஅஅஅஅதிமுக எம்.எல்.ஏ வீட்டிலேயே பகல் கொள்ளை நடந்திருக்கு? சட்டம் ஒழுங்கு என்னாயிற்று?
பொதுஜனம்; ஆமாம் அதானே ஆட்சிக்கு வந்தவுடன் சட்ட்ம் ஒழுங்கைத்தான் கிழி கிழி என்று அடித்து துவைப்பேன் என்று அறிக்கையோ அறிக்கையாக வெளியிட்டுதே!  
அதிமுக தேர்தல் அறிக்கையைலேயும் வெளியிட்டுதே! 
ஆனா வந்த்து முதல் பவுன் பவுனா அதுவும் 100 பவுனா வழிப்பறி நடக்குதே! போலிஸ்கார் மாதிரி வேஷம் போட்டு வேற கோயம்புத்தூர்ல கொள்ளையடிச்சிட்டாங்க! கொள்ளைப்போனதுக்கு புகார் கொடுத்தாக் கூட  போலிஸ் ஸ்டேஷன்ல வாங்க மாட்டேங்கிறாங்களே! என்ன கடமையுணர்வு! நம்ம தமிழக காவல் துறைக்கு!..... 

பொது ஜனம்; மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி பொது மக்கள்,எந்தக்கட்சிக்காரரா இருந்தாலும் புகார் வாங்கணும்னு உத்தரவு போட்டிருக்காங்களாம்! பதவியேற்றுவிட்டு கார்ல போகாம நடந்து தான் தலைமைச்செயலகத்துக்கு சிம்பிளா போனாங்களாம்!

பொது ஜனம்; அப்படியா!

பொது ஜனம்; அது ஏதோ சொல்லணும்னு வழக்கமா சட்டம் ஒழுங்கைப் பத்தி சொல்லியிருக்குப்பா?  அதை வைச்சி தானே ஈசியா மக்களை ஏமாத்த முடியும்? (நான் இங்க தமிழ் நாட்டைப் பத்தி சொல்றேன்) 
பொது ஜனம்; சட்டம் ஒழுங்கைப் பத்தி எல்லாம் அதுக்கு என்ன தெரியும்? தீர்ப்பு தனக்கு எதிரா வந்ததுக்கே மூன்று மாணவிகளை தர்ம்புரியில உயிரோட பஸ்சுக்குள்ள வைச்சு கொளுத்துனவங்களுக்கு அதை பத்தி என்ன தெரியப்போகுது? உயிரை விட்டது அவங்க பொன்னுங்களா? என்ன? 
குடும்பமா? குட்டியா? இல்லை ஏழ்மையை பற்றியாவது தெரியுமா? தெரிஞ்சிருந்தா? மக்கள் பணத்தை வீணடிச்சிருக்குமா?

பொது ஜனம்; அதிமுக தேர்தல் அறிக்கையிலே அதிமுக எம்.எல்.ஏ வீட்டிலே திருடு போகாம பாத்துப்போம் என்றா? போட்டிருக்கிறது?

பொது ஜனம்; ஆமா!அதுவும் சரிதான்! அப்ப பழ. கருப்பையா, பார்ப்பன சோ துக்ளக் புக்கில கட்டுரை எழுதி கண்டுபிடிச்சுப்பார்! அவரை அப்படியே சாய்ஸ்ல விடுங்க....இல்லை சோ ரெக்கமன்டேஷனை வைச்சு கண்டுபிடிச்சுக்கட்டும். அது தான் அங்க நெருக்கமாச்சே! அதை பத்தி மக்கள் ஏன் கவலை ப்படணும்? 
100 சவரன் போச்சாம்மே ஒரு அப்பாவியிடம், வரிசையா அடுத்தடுத்து நிறைய பேரிடம் கொள்ளை போச்சே! சென்னை பஸ் ஸ்டான்டிலே வந்து இறங்கிய உடனே கொள்ள போச்சே! அவங்க வேணும்னா மகா பாவம்னு சொல்லலாம்!...பாவம் இன்னும் என்னென்ன? கொள்ளை போகப்போகுதோ? யார் யாரு? என்னென்ன? இழக்கப்போறாங்களோ?

பொது ஜனம்; சட்டம் ஒழுங்கைப் பத்தியெல்லாம் கவலைப்படறதுக்கு எங்க நேரம் இருக்குது.  திமுக அரசின் மக்கள் நலத் திட்டங்களை கீழே தள்ளி மக்களுக்கு எதிரா அழிச்சாட்டியம் பன்றதுக்கே நேரம் சரியாக இருக்குது. அது எங்கே? இதையெல்லாம் கவனிக்கப்போகுது!? 
பொது ஜனம்; அப்ப மக்கள் கதி அதோ கதி!தான்!
பொது ஜனம்: எழவு இது எப்ப வந்தாலும் வில்லங்கம் தான்யா!

பொது ஜனம்;அதிகாரிகளை மாத்தினா சட்டம் ஒழுங்கு சரியாகிவிடுமா? அதிகாரியா! திருடனை புடிக்கப்போகுது?   இன்ஸ்பெக்டர் கூட கிடையாது. இன்ஸ்பெக்டர் தலைமையில கான்ஸ்டபிள்கள் தான் பிடிச்சாவனும். அவங்களை மாத்தினாலும் வேலைக்காவாது! அங்கே போய் வேலையை காட்டுவாங்க!
அதே மாதிரி மாவட்ட ஆட்சியரை மாற்றினா மட்டும் எல்லாம் முடிஞ்சிடுச்சா?  மாவட்ட ஆட்சியரா? அரசு வேலையைப் பாக்கப்போறார். கிளார்க், குமாஸ்தா தான் எல்லா வேலையை பாக்கணும். எல்லோருக்கும் யூனியன் இருக்கே! அஸ்க்! புஸ்க்!.....
அப்படியே மாத்தினா மட்டும்  என்ன? வேறு துறைக்குத்தானே!  மாற்றப்போறே! இதெல்லாம் 3 ஆம் கிளாஸ் பையனுக்கே தெரியும்?

பொது ஜனம்; 3 ஆம் கிளாஸ் பயனுக்கு என்ன தெரியும்? நெளிவு சுளிவு.....அனுசரணை.....பொறுப்புணர்வு....மக்களாட்சி தத்துவம்......இதெல்லாம் தெரியுமா?

பொது ஜனம்; இதெல்லாம் இவங்களுக்கு கிடையாதுன்னு நிச்சயமா 3 ஆம் கிளாஸ் பயனுக்கேத் தெரியும். அது தான் செய்தியிலே தினம் தினம் வருதே!

பொது ஜனம்அப்ப யாரை மாத்தனும்ங்கறே? 

பொது ஜனம்; முதல்ல உனது கோக்கு மாக்கு மனநிலையை மாத்திக்கப்பா?  நீர் ஒரு மக்களின் சேவகர் என்ற மனநிலைக்கு உன்னை மாற்றிக்கொள் எல்லாம் சரியாகப் போகும்? உன்னுடைய மூர்க்கத்தையும், காழ்ப்புணர்ச்சியையும் மாற்றிக்கொள்........நீயே எல்லா சட்ட ஒழுங்கையும் மீறரே! அப்புறம் எப்படி மத்த சட்ட ஒழுங்கை பற்றி கேள்வி கேக்க முடியும்? என்ன எந்திரமா வேலை செய்யுது? மனிதன் தான் எல்லாவற்றையும் செய்யணும்.  என்ன? புறிஞ்சுதா?

பொது ஜனம்; ஆமா அப்படியே புறிஞ்சிட்டாலும்! 
பொது ஜனம்; சட்டம்  ஒழுங்கை காப்பது தான் என் முதல் வேலை.....என்ற அதிமுக அறிக்கைக்கு எதிராக  திருடர்கள் திருடுவது தான் முதல் வேலைன்னு அவங்க வேலையை  காண்பிச்சுட்டாங்க! 
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கொள்ளை போனது! கண்டு பிடித்து தருபவர் எவரோ?

No comments: