Pages

Friday 6 May, 2011

ஜிகாத்-அல்கொய்தா பின்னணியில் இருக்கும் மனிதர்கள் மற்றும் கொள்கைகள்...பகுதி-1




ஜிகாத்...JIHAT

1980 ஆம் ஆண்டில் ஒசமா பின் லேடன் (Osama bin Mohammed bin Awad bin Laden) தனது சக இஸ்லாமியரை ஜிகாத்தில் சேர்ந்து கொள்ளுமாறு வலியுறுத்தினார். ரஷ்யாவைச் சேர்ந்த துரோகிகளை ஆப்கானிஸ்தானை விட்டு துரத்தியாகவேண்டும். 1986 இல்
ஆக்கிரமைப்பை எதிர்த்து அந்த இளம் தலைவர் இன்று அவர் துணைவராக இருக்கும் பயங்கரவாத வெறியரான அய்மன் அல் ஜவாஹரியின் (Ayman Muhammad Rabaie al-Zawahiri) தாக்கத்திற்கு ஆளானார்.

அய்மன் அல் ஜவஹரி....

“”நாங்க இந்த ஒழுங்கான நாட்டையும், முறையான சமுதாயத்தையும் உருவாக்க எங்களால முடிஞ்ச அளவுக்கு முயற்சி பண்ணோம்””

“”லாஹி லாஹா இல்ஹல்லா........””

இந்த மனிதர்கள் ஒரு சமூகத்தின் சாதாரண யுத்தமாக இருந்த இஸ்லாமிய கேட்பாட்டை மேற்கத்திய உலகுக்கு எதிரான பயங்கரவாத யுத்தமாக மாற்றினார்கள்.

அத்துடன் தாங்கள் ஜிகாத் என்று கூறிக்கொள்ளும் ஒரு மரணகளத்தை சுயநலத்திற்காக நியாயப்படுத்த அமைதியும், மகிமையும் வாய்ந்த மதமான இஸ்லாத்தை அல் கொய்தாவால் பயன்படுத்திக்கொள்ள முடிந்தது.

அல்கொய்தா உருவாக்கப்பட்ட அதே ஆண்டு, ரஷ்யத் துருப்புக்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து ஒவ்வொரு கட்டமாக பின்வாங்கிச் செல்லத் துவங்கின..

15000 ரஷ்ய ராணுவ வீரர்கள் இறந்திருந்திருந்தனர். அது சோவியத் யூனியனுக்கு இன்னொரு வியட்நாம் ஆகியது.

இது இஸ்லாமிய சமூகத்தில் இருந்த இளம் தலைமுறையினருக்கு மகத்தான் கிளரச்சியை கொடுத்த தருணம். ஏன்னா? இஸ்லாமியர்கள் ஈடுபடற ஒவ்வொரு யுத்தத்திலேயும் அவங்க தோல்வியடையத் தேவையில்லைன்னு இது நிருபிச்சது.

அதனால் ஜிகாத்தை தங்கள் நாடுகளுக்கும் பரப்பத் திட்டமிட்டார்கள்.

பலபேர் தங்கள் தாய்நாட்டுக்குத் திரும்பி போனதுமில்லாம, அவங்க சொந்தமா பல கலவரங்களுக்குத் தலைமைத் தாங்கி நடத்த ஆரம்பிச்சதோட சொந்த பயங்கரவாத அமைப்புகளையும் உருவாக்கிக்கிட்டாங்க...அவங்க அல்ஜிரியாவில இருந்தாங்க, எகிப்துல இருந்தாங்க, நீங்க அவங்கல சவுதி அரேபியாவுல கூட பார்த்திருக்கலாம். அதான் பெரிய பிரச்சினையா மாறிடிச்சி.

அந்த புதிய ஜிகாத்திய வாதிகள் மத்திய கிழக்கு நாடுகளில் கடவுளுக்கு எதிரான அரசாங்கங்களாக கருதியவற்றின் மீது தாக்குதல் நடத்தும் அச்சுருத்தலை அறிவித்தார்கள். அருகிலிருக்கும் எதிரி மீது அறிவிக்கப்பட்ட யுக்தி அது. அதன் தலைமை ஆதரவாளர்களில் ஒருவர் அய்மன் அல் ஜவாஹரி


“”எப்படி? அரபு அரசுகள் குரானை பின்பற்றுவது இல்லைன்னும்,  ஜிகாத்தை பற்றியும் பின்லேடனுக்கு ஜவாஹைரி போதித்தார்””

“”அதற்கு பதிலாக, அந்த அரசுகள் (அரபு அரசுகள்) உலகம் பூரா உள்ள யூதர்கள் மற்றும் கிருஸ்தவர்களுக்கு, அதுவும் குறிப்பாக அமெரிக்காவில் உள்ளவர்களின் நலன்களுக்கு உதவி புரிவதாக கற்பித்தார்”” (ஜவாஹைரி) “” அதனாலதான் நாம அவங்களுக்கு எதிராக புரட்சி பண்ண வேண்டும்’’”

“”யூதர்களை விட கிருத்துவர்கள் அளவுக்கதிகமான சக்திவாய்ந்தவர்களாக இருக்காங்க....அவங்க கிட்ட இராணுவ பலம் இருக்கு, பணம் இருக்கு, மேலும், மேற்கத்திய நாடுகளோட தொடர்பு இருக்கு, அதனால் எல்லாவிதத்திலேயும் பணத்தை எதிர்த்து நடத்துகிற இந்த புரட்சி, எல்லாவகையான வன்முறைகளையும் நியாயப்படுத்துது.””




ஒசாமா...

“”இந்த வகையான குறிப்பிடத்தகுந்த தீவிரவாதிகள் அவங்களை தாக்குவாங்க...””

பின்லேடன்...1989 இல் சவுதி அரேபியாவுக்கு திரும்பினார். அதற்கு முன்பாகவே நடந்த சம்பவங்கள், அது அவருடயை சொந்த நாட்டுக்கே எதிராக திரும்பினதுமில்லாமல், அமெரிக்காவுக்கு எதிரான துவேஷ உணர்வு கொண்ட எதிரியாகவும் மாற்றியது.

மலைப்பகுதிகள்ல கஷ்டங்களோட  ஒரு மாவீரனாக தன்னுடைய வாழ்க்கையை கழித்த ஒரு மனிதரான அவருக்கு, பண்ணவேண்டிய வேலை நிறைய இருந்தது.

திடீரென, கட்டிடங்கள், கட்டுமான பணி, கணக்கு வழக்குகள், பண பத்தியெல்லாம் அக்கறை காட்ட ஆரம்பிச்சார். இது எல்லாமே அவருக்கு ரொம்ப அலுப்பா இருந்தது.

அதனால சதாம் உசேன் தீடீரென குவைத்தை ஆக்கிரமிச்சப்போ, ஒரு புனித வீரரா? தன்னை வெளிப்படுத்திக்க ஒரு அருமையான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும்விதமாக அது அமைஞ்சிது......

1990 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் சதாம் உசேனின் டாங்குகள் பாலைவனத்தை கடந்து குவைத்துக்குள் நுழைந்தன..................................சவுதி அரேபியாவிற்கு நேர்ந்த அந்த அச்சுறுத்தலால் எச்சரிக்கையடைந்து  எண்ணை பாதுகாப்பு செயலர் ''டிக் ஜெயனி'' அமெரிக்க பிரதிநிதிக்குழுவை ஜெடாவிற்கு வரவழைத்தார்.

நாங்க சொன்னது என்னென்னா? நாங்க பெரிய படையோடு வருவோம்...ஒரூ வேலையை முடிக்கறதுக்கு வருவோம். அந்த வேலை முடியறவரைக்கும் அங்குதான் இருப்போம். ஆனால் வேலை முடிஞ்சதும் திரும்ப போயிடுவோம்.

அரசர் பாட் ((King)Fahd), தான் அதிபர் புஷ்ஷை நம்புவதாகவும் உடனடியாக ராணுவத்தை சவுதிக்கு அனுப்பசொல்லும்படியும், இந்த பிரச்சினை முடிந்தவுடன் தாங்கள் திரும்பிவிடுவோம் என்று கூறியதை நம்புவதாகவும் தூதரிடம் கூறி புஷ்ஷிடம் தெரிவிக்கச்செய்தார்.
....................................
........................................

ஒசமா பின்லேடன் தனக்கொரு சந்தர்ப்பம் இருப்பதை கண்டுகொண்டார். அவர் தன் சொந்த ராணுவமான அல்கொய்தாவை உருவாக்கி கொண்டிருந்தார். அதோட அதை பயன்படுத்தவும் தன் தாய்நாட்டை காப்பாற்றவும் ஒரு சந்தர்ப்பமாக அமைஞ்சதை நினைச்சார். பின்லேடனோட முஜாகிதினும் சேர்ந்து ஆயிரக்கணக்கான வேலையற்ற, இளைம் சவுதி அரேபிய வீரர்களும் ஒருங்கிணைஞ்சி நல்ல முறையான ராணுவப் போர்ப்பயிர்ச்சி ராணுவத்தையும், உலகத்திலேயே மிகப்பெரிய டாங்க் படையை கொண்டிருக்கிற நாடுகளில் ஒன்றான ஈராக்கை எதிர்த்து போராடுவாங்க என்பது அவரது யோசனையாக இருந்தது.

தன்னோட இந்த யோசனையை, ராணுவ அமைச்சர்கிட்டேயும், டர்க்கி இளவரசர் கிட்டேயும்  ஒரு ஆதாயநோக்கத்துடனும், ரொம்ப ஆர்வத்துடன் பேசப்போனார்.

ஆனா அவருக்கு பதிலா கிடைச்சது என்னென்னா?

உங்க! யோசனைக்கு ரொம்ப நன்றி!

ஆனா! நீங்களே வரவேண்டா! நாங்களே உங்களை வேணுண்ணா கூப்பிடறோம்.! என்று சொல்லி அனுப்பிட்டாங்க.

ஈராக்கியர்களை அங்கிருந்து விரட்டுவதறக்கான பின்லேடனோட யோசனை அடிப்படையில பயனற்றது என எடுத்துக்கப்பட்டது.

ஒசாமா....
""சவுதி அரசுக்கு நன்றி தெரிவிச்சே ஆகணும்.....அதுவும் அவங்க மேற்கத்திய நாடுகளுக்கு அடிமையாகி, குறிப்பா அமெரிக்காவுக்கு அடிமையாகி, இந்த நாட்டோட மண்ணின் மைந்தர்களை, தங்களோட தாய் நாட்டை காப்பாத்த விடாம தடுத்ததற்காக.""

""ஆனா, அதுக்கு பதிலா இறை நம்பிக்கை இல்லாத அமெரிக்கர்களை இவங்க காப்பாத்த நியமிக்கிறாங்களாம்""

அரேபிய தீபகற்பத்துக்குள்ள அமெரிக்கர்களை உள்ளே விடற.. மன்னர் எடுத்த முடிவுதான். ஒசாமாவுக்கும் சவுதிஅரேபியாவுக்கும் ஒரு முடிவு ஏற்படற முக்கிய கட்டமாக அமைஞ்சிது.

மறைநம்பிக்கையில்லாதவர்கள் இந்த தீபகற்பத்தில் இருக்கக்கூடாதுன்னு முகம்மது நபி சொன்னது என்று எல்லா முஸ்லீம்களுக்கும் தெரியும். அதனால இது ஒசாம பின்லேடனுக்கு மட்டுமில்ல  இஸ்லாமியர்களுக்கோ ஒரு உந்துதலை தர்ற அம்சாம இருக்குது.

ஒசாமா....

""கிருஸ்துவ மற்றும் யூதப் பெண் ராணுவ வீராங்கனைகள் எங்களை பாதுகாக்கிறதை பார்க்க விரும்பல....அவங்களை ஒரு சில மாதங்கள் மட்டும் தான் தங்கவைக்கறதுக்கு மட்டும்தான் வரவேற்பு கொடுத்து தங்கவைச்சிருக்கிறதா, நம்ம தலைவர்கள் நம்மகிட்ட பொய்சொல்றாங்க!""


முதல் வளைகுடா யுத்தம் நடைபெற்று சதாம் உசேனுடைய ராணுவம் ஈராக்கிற்கு திருப்பி விரட்டப்பட்டது. ஆனால் அமெரிக்க ,ராணுவம் நேரடையாக திரும்பிச்செல்லவில்லை.

எப்ப அதைப் பத்தி பேச்சு வந்தாலும், பின்லேடன் அவங்க திரும்பி போகாம இங்க கழிச்ச காலத்தை சரியா கணக்கு காட்டுவாரு. அவங்க அமெரிக்கர்களை ஒரு வருஷத்துக்கு உள்ளே விட்டாங்க! அவங்க இன்னமும் இங்க தான் இருக்காங்க1 வருஷம் 96, 97 ஆகியும், ஏன்? 98 ம் ஆகிடுச்சிங்கிறாரு...

அரச குடும்பத்துடன் கருத்துவேறுபாடு வந்தவுடன் பின்லேடனுக்கு அவருடைய சொந்தநாட்டில் ஆதரவோ! அல்லது வரவேற்போ! இல்லை. 1992 இல் அவர் ஜெடாவை (Jeddah or Jidda-Saudi Arabian city) விட்டு புறப்பட்டார். அடுத்த சில ஆண்டுகள் சூடான் நாட்டின் தலைநகரான் கார்டொம் (Khartoum-Sudan capital)  தான் பின்லேடனுடைய
 கொள்கைப் பரப்பு களமாக விளங்கியது.

 சூடான் தான் இஸ்லாமிய விழிப்புணர்ச்சி எழுந்து ஒரு அரசமைக்கும் அளவுக்கு வெற்றிகரமாக அமைந்த முதல் சன்னிப்பிரிவு நாடாகும். சூடானின் புரட்சிக்கு காரணமான சிற்பி பேரிசில் கல்விபயின்ற அசான் அல் டுராபி (Hassan- al- Turabi) என்ற ஒரு இஸ்லாமியவாதி. நைல் நதிக்கு அருகில் அமைந்த ஒரு மக்கள் மாளிகையில் தான் டுராபி மிக ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட இஸ்லாமியவாதிகளுக்கான மாநாடுகளை நடத்தினார்.


கார்டொம் இது மாதிரி எல்லா இனத்தாருக்கும் ஒரு மையமாக ஆக்கணும் என்று டுராபி விரும்பினார். அதோட யார்? யாருக்கெல்லாம்? ஜிகாதிய கொள்கையில புரட்சிக்கான நோக்கம் இருக்கோ, அவங்க எல்லோருக்கும் சூடானுக்குள்ள வந்து முகாம் அமைச்சுகிட்டு தங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த கதவுகளுக்கு பின்புறம் மறைவாக தீவிரவாதக் குழுக்கள் சூடானுக்குள் வந்து 30 க்கும் மேற்பட்ட முகாம்களை அமைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டார்கள். இப்பொழுது போல, டுராபிக்கு ஏற்படும் தர்மசங்கடமான கேள்விகளை ஒரு புன்னகையுடன் ஒருபுறமாக ஒதுக்கித்தள்ளிவிடுவார்.

அவங்க எதுக்காக இந்த மாதிரி சொல்லப்படுற முகாம்களை உருவாக்கனாங்க? அவங்க இந்த முகாம்கள்ல ஒன்னா வசிக்கும் பொழுது, அவங்க யாரும் கலாச்சார வாதங்களிலோ, பேச்சு வார்த்தைகளிலோ இல்லை கல்வியிலோ ஈடுபடமாட்டாங்க. அதாவது அவங்க வாழ்க்கையோட அர்த்தம் அது அல்ல. அவங்க வெளியிலேயிருந்து வந்து ஒன்னா வாழுறவங்க. அவங்க இங்க வந்தது எல்லாமே ஜிகாத்தை நிலைநிறுத்த பயிற்சி எடுத்துக்கவும் அதை பற்றி சிந்திக்கவும் தான்.

இந்த இடத்தில் இருந்தவரை இந்த கட்டத்தில் ஜிகாத்தை அப்படியே ஒதுக்கி வைத்தது போல் தான் பின்லேடன் இருந்தார். அவருடைய அளப்பறிய தனிப்பட்ட சொத்து மதிப்பு சூடானின் மிக்ச்சிறந்த புள்ளியாக்கியது. மிகப்பெரிய கட்டுமானப்பணிகளை மேற்கொண்டார்.

அவர் ஒரு விமானநிலையத்தையும், அதுக்கு போய்ட்டுவரக்கூடிய சாலையையும் உருவாக்கினாரு. அதோடு மிருக வளர்ச்சி ஆராய்ச்சிலேயும் , விவசாயத்திலேயும் முதலீடு பண்ணார்.

ஆனால் பின்லேடன் ஒரேயடியாக ஜிகாத்தை விட்டு விலகிவிடவில்லை. கார்டொமின் நவநாகரிகமான மாவட்டத்தில் அவர் வாடகைக்கு எடுத்திருந்த 2 மாளிகைக்கு  பலத்த காவல் போடப்பட்டு இருந்தது. அதுபோல அவருக்கு ஆயுதம் தாங்கிய மெய்க்காப்பாளர்கள் வழங்கியிருந்தது வேறுயாருமல்ல, அது ஐமன் அல்ஜவஹரி தான்.

எகிப்து எதிரான யுத்த ஆயுதங்களுக்கு சூடான் ஒரு சரியான தளமாக பயன்பட்டது. அதோடு எல்லைகள் ஊடுருவ வசதியாகவும் விரிவாகவும் இருந்தது. அவரால் பழங்கால வர்த்தக பாதைகள் மூலமா சுலபமா ஆயுதங்களை கடத்த முடிந்தது. அங்கிருந்து தான் ஜவஹரியோடக் குழு தங்களோட நாசவேலைகளை ஆரம்பிச்சது.

கடந்த பதினெட்டு மாதங்களில் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் தற்கொலைப் படையினராலும், குண்டு வைப்புகளினாலும் சுமார் நானுறு பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். அவர் கெய்ரொவில படுகொலை முயற்சிகளோட தன் வேலையை ஆரம்பிச்சாரு. அதோட சூடானியர்களும் அந்த முயற்சிகளுக்கு ஆதரவு கொடுத்தாங்க. அவங்க முபாரக் (Muhammad Hosni Sayyid Mubarak) ஆட்சிக்கு எதிராக இருந்தாங்க. அவரால சூடான்ல உருவாக்கப்பட்ட இஸ்லாமிய புரட்சி  இயற்கையாகவே எகிப்துல பரவி அந்த ஒட்டுமொத்த பகுதியை ஆக்கிரமிக்கற நாளை ரொம்ப ஆவலா எதிர்ப்பார்த்திருந்தாங்க. அதனால் சூடானியர்கள் ஜவஹரியோட கைகோர்த்துகிட்டு வேலை செஞ்சாங்க.

இஸ்லாத்தின் பெயரால் சகமுஸ்லிம்களை கொலைசெய்வதை ஏற்றுக்கொள்ளப்படுவதாக தக்பிர் (Takfir=disbeleif-இஸ்லாமிய நம்பிக்கையில்லாதவர் or kafir (காபீர்) or atheiest-நாத்திகவாதி) அறிவிக்கிறது. முதலில் ஜவஹரியும் அதற்கு பின் ஒசமா பின்லேடனும் தக்பிர் செயல்படுத்தியபொழுது, முதல்முறையாக பல அப்பாவி முஸ்லிம்கள் அந்த கொடுஞ்செயல்களுக்கு தங்கள் உயிரை விலையாக கொடுக்கவேண்டிவந்தது.

பின்லேடன் சவுதிஅரேபிய அரசாங்கத்தை பத்தி குத்தம் சொன்னது மட்டுமில்ல, அந்த அராசங்கத்தையே தூக்கியெறியணும்னு அறைகூவல் விடுத்தார். அவரு வரம்பு மீறிப்போனதாக கருதப்பட்டதினால, அவரோட குடியுரிமையும் பரிக்கப்பட்டது.

“”ஆண்டவராகிய கர்த்தர் நமது பாவங்களை மன்னித்து நம் அனைவருக்கும் மீட்பையும் நிரந்தர வாழ்வையும் வழங்குவராக!””

சவுதியரேபியாவில் இருக்கும் அமெரிக்க ராணுவம் தான் இன்னமும் பிரச்சினையாக இருந்தது.

“”நாங்கள் அனைவரும் உம்மை விசுவாசிப்போமாக””....

அதன்பின்னர் 1995 நவம்பர் 13 ந்தேதியன்று அமெரிக்க ராணுவக் கட்டிடங்களுக்கு வெளியே முதலாவதாக இரண்டு கார் குண்டுகள் வெடித்து ஏழு பேர் இறந்தார்கள்.

ஒசாமா...
காலங்கடப்பதற்கு முன்னதாக வந்திருந்த அமெரிக்கப்படையினர் திரும்பிச் செல்லவேண்டும் என்பதை அறிவிக்கும் அடையாளங்களாக ரியாத்திலும், கோபரிலும் வெடித்த குண்டுகள் தெளிவு படுத்தின.


இதை செய்த குற்றவாளிகள் பிடிப்பட்டாங்க.....இதன் பின்னணியில பின்லேடன் தான் இருக்காருங்கற ஆதாரம் ஆணித்தரமாக கிடைச்சது.

அந்த குண்டுகளை வைத்ததாக குற்றம் சாட்டப்பட்ட இளைஞர்களின் பதிவு செய்யப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தை அவர்கள் தலைகள் துண்டிக்கப்படுவதற்கு முன்பாக சவுதி தொலைக்காட்சி முன்பாக ஒளிபரப்பியது.

மத்தவங்க மாதிரியே தாங்களும் பின்லேடனால் ஈர்க்கப்பட்டதாக அவங்க ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்காங்க.

வெர்ஜினியாவில் உள்ள லேன்ட்லீ சிஐஏ தலைமையகத்தில் பணக்கார வர்த்தகராக கருதப்பட்ட பின்லேடனுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படவில்லை.

ஆனால் 1995 ஆம் வருஷம் ரியாத்தில் நடந்த கார் குண்டு வெடிப்புக்கப்புறம், பின்லேடன் மேல ரொம்பத் தீவிரமா, கூடுதலா கவனம் செலுத்த ஆரம்பிச்சோம். அது ஏன்னா? அவருடைய பேரு எல்லா இடத்துகல்லேயிருந்தும் உளவுத்துறையில அடிபட ஆரம்பிச்சது. நாங்க பின்லேடனே கண்காணிக்க ஒரு அணியையே அமைச்சோம். அது 1996 ஆம் வருஷம் பணியில இறங்கியது.

யாரெல்லாம் தவிர்க்கவியலாத வகையில பயங்கரவாதிகளா இருந்தாங்களோ, அவங்க எல்லாருக்கும், இவர் தான் போஷகராகவும், ஆதரவாளராகவும் இருந்தாருங்கறது தெளிவா தெரிஞ்சது.

1996 ஆம் ஆண்டு இறுதியில நாங்க அல்கொய்தாவோடு ஏதோ ஒரு வகையில் தொடர்பு கொண்டிருந்தவர்கள், ஏறக்குறைய 25 லிருந்து 30 நாடுகள் வரைக்கும் இருக்கும் எனபதை கண்டுபிடிச்சொம். ஆனா எங்களுக்கு தகவல் தந்துகிட்டு இருந்த சில நாடுகள் அல்கொய்தாவோடத் தொடர்பு அதைவிட இருமடங்காக இருக்கலாம் என்பதை குறிப்பிட்டாங்க.

பின்லேடன் ஏதோ ஒரு வகையில, இந்த எல்லா நபர்களோட சம்பந்தபட்டிருக்கிறதோட, அவங்களுக்கு பொருளாதார ரீதியான ஆதரவையிம் கொடுத்துட்டு வந்திருக்காரு.

நாங்க சூடானியர்களை அவங்களை அடக்கணும்னு, நாட்டை விட்டே துரத்தணும்ணு வற்புறுத்த ஆரம்பிச்சோம்.
**********
ஒசாமா...

“”இந்த எல்லாவிதமான நெருக்கடிகளினாலேயும், சூடான் நாட்டு அரசு எல்லாவிதமான நடவடிக்கைகளையும் நிறுத்த சொல்லி எனக்கு உத்தரவு போட்டிருக்காந்தாங்க.””

*********

ஆகவே பின்லேடன் சூடானை விட்டு வெளியேறும்படி நிர்பந்திக்கப்பட்டார். எதிரியின் அருகியிருத்தல் என்ற யுக்தி அதனால் தோல்வியடைந்தது......................
...தொடரும்...பகுதி...2

,,நன்றி டிஸ்கவரி சேனல். தமிழில்.ஒளிபரப்பியது..02.05.2011  குறிப்பு ஒசாமா பின்லேடன் அமெரிக்க உளவுப்படையால் கொல்லப்பட்டதும் அன்றுதான் ...அதிகாலை பாகிஸதான்...அப்போதாபாத் நகரில்.

No comments: