சிவகங்கை : ""இலவச அரிசி திட்டத்தினை எவ்வித விழாவும் நடத்தாமல், கடைகளில் வழக்கம் போல் வினியோகம் செய்யவேண்டும்,'' என, அரசு உத்தரவிட்டுள்ளது.முதல்வர் ஜெ., பொறுப்பேற்றவுடன், ரேஷன் கார்டிற்கு 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என தெரிவித்தார். அதன்படி, இத்திட்டம் இன்று முதல் (ஜூன் 1) தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் துவக்கப்படுகிறது. இதன் மூலம் பச்சை நிற கார்டு வைத்துள்ள 1.80 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவர். இவர்களுக்கு யூனிட் அடிப்படையில் குறைந்தது 12 கிலோ முதல் அதிக பட்சம் 20 கிலோ வரை வழங்கப்படும்.
விழாவிற்கு தடை:இன்று துவக்கப்படும் இத்திட்டத்தை, சென்னையில் மட்டுமே முதல்வர் ஜெ., துவக்கி வைப்பார். மற்றபடி எந்த மாவட்டத்திலும், அமைச்சர், எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்று, விழா நடத்தி அரிசியை வினியோகம் செய்யக்கூடாது என அரசு தடை விதித்துள்ளது. ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் விற்பனையாளர் வழக்கம் போல், அரிசி வினியோகம் செய்வது போல், செய்தால் போதும். இத்திட்டம் முறைப்படி நடக்கிறதா என கலெக்டர், மாவட்ட வழங்கல் அலுவலர்கள் கண்காணிக்கவேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட வழங்கல் அலுவலர் ஒருவர் கூறுகையில்,"" அரிசி வழங்கும் திட்டத்தை விழாவாக நடத்தவோ, அமைச்சர், எம்.எல்.ஏ.,க்களை வைத்து துவக்கி வைக்கவோ கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. வழக்கம் போல் விற்பனை நடக்கும்,'' என்றார்.
...நன்றி தினமலர் 31.05.2011
*************************
பொது ஜனம்: என்னய்யா அரசு இது மாதிரி உத்தரவிட்டிருக்குது. ஆனா வட்டம், சதுரம் எல்லாம் ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் புகுந்து வசூல் வேட்டை நடத்தியிருக்குதே! அதிமுக, பார்ப்பன தினமலம் பத்திரிகை இப்படி செய்தி போட்டிருக்குதே!
jபொது ஜனம்; அது என்னைக்கு உண்மையை போட்டிருக்கு! ஜால்ராவை கரெக்டா போட்டிருக்கும்!
பொது ஜனம்; ஆமாய்யா! நேத்துக் கூட நானும் பார்த்தேன் ஒவ்வொரு கடையிலேயும் புகுந்து "அம்மாவுக்கு பேனர் வைக்கணும் 1000 ரூபாக் கொடு , 2000 ரூபாக் கொடு இல்லைன்னா அவ்வளவு தான்" என்று மிரட்டி ரேஷன் கடைகளில் வசூல் வேட்டை நடத்தியிருக்குதுங்களே!
பொது ஜனம்; ஆமாம! "இந்தா விசிட்டிங் கார்டு, நான் தான் அதிமுக வட்டச்செயலாளர் வண்டுமுருகன்! கவுன்சிலர் சந்து முருகனோட ஆளு! யாருக்கிட்டே வேணுன்னா போன் பண்ணிக்கோ! ஒண்ணும் பண்ண முடியாது! மரியாதையா காசைக் கொடு!" என்று வசூல் வேட்டையை நடத்திகிட்டு இருந்தது. எல்லா கடைகளிலேயும். எல்லாம் இந்த "வட்ட", "சதுர" செயலாளர்கள் அராஜகங்கள் தான் ஜாஸ்தியா இருந்தது.
பொது ஜனம்; அது மட்டுமில்ல ஜெயலலிதா 11 மணிக்கு தொடங்கினப்பிறகு தான் அரிசி விநியோகம் பண்ணனும்னு வண்டு முருகன் குரூப் கண்டிஷன் போட்டிருக்கு! இல்லைன்னா ரேஷன் கடையே காலியாயிடும் என்று மிரட்டிட்டு போயிருக்கு!
பொது ஜனம்; யாருக்கு கட் அவுட்டு? அவனை பத்து மாசம் சுமந்து பெத்த அவன் அம்மாவுக்காக பேனர் வைக்கணும்னா அவன் சொந்தக்காசை போட்டு பேணர் வைக்க வேண்டியது தானே! அரசாங்க ரேஷன் கடையிலேயிருந்து, அரசு பணத்தை எதுக்கு எடுத்து கொடுக்கணும்? அப்புறம் பொது விநியோக நிர்வாகம் எப்படி? அந்த பணத்தை சரி கட்டுவாங்க? வேற வழியிலேயா?
பொது ஜனம்; அவனை பெத்த "அம்மாவை" அவன் இவ்வளவு மரியாதையாக எல்லாம் அழைக்க மாட்டான்யா! "சனியனே! பீடை, மூதேவி!" "இன்னும் சாவலியா" என்று தான் அன்பாக அழைப்பான்! இது வேற!
பொது ஜனம்; ஜெயலலிதாவைத்தான் "அம்மா" என்று பாசத்தோடு அழைக்கிறான்!
பொது ஜனம்; அழைச்சுகட்டும்! அதுக்கு ரேஷன் கடைங்கள்ல எதுக்கு மாமூல் வாங்கணும்!
பொது ஜனம்; மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரைக்கூடத்தான் "அம்மா" வென்று அழைப்பாங்க! சோனியாவைக்கூடத்தான் அம்மாவென்று அழைப்பாங்க!
பொது ஜனம்; அவன் யாரை வேணுன்னா அம்மா! அப்பா! என்று கூப்பிட்டிட்டு போகட்டும். அதை விடு!. தாமரைக்கனிக்கும் அவர் பிள்ளைக்கும் நடந்த கதி தான் அவனுக்கும்! பொது மக்களோட ரேஷன் கடையில் எதுக்கு துட்டு வாங்கணும்? இது என்ன அராஜகமா இருக்கே!
பொது ஜனம்; ஆமாம் தாமரைக்கனின்னா? இந்த ஜெயலலிதாவுக்காக திமுக அமைச்சர்கள் மூஞ்சி மேல, 1996-2000 ஆட்சிகாலத்தில கும்மு கும்முன்னு குத்தினாரே அவர் தானே!
பொது ஜனம்; அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்து மூக்கு கூட உடைஞ்சு போச்சு! ரத்தம் கொட்டோ கொட்டுன்னு கொட்டுச்சே அதுவும் சட்டசபையிலேயே! அவர் தானே!
பொது ஜனம்; ஆமா! அதுக்குன்னே எம்.ஜி.ஆர் படம் போட்ட மோதிரத்தை கையிலே போட்டிருப்பார்.அதுக்குத்தான் போட்டிருக்கேன் என்றும் பேட்டி கொடுத்தவராயிற்றே!
பொது ஜனம்; ஆமா! அவரு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆளாச்சே! எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராயிற்றே! அவங்க ஊர்ல செம செல்வாக்குப்பா! அவருக்கு! எம்ஜிஆர் கலத்திலேயே சுயேச்சையா, எம் ஜி ஆர் நிறுத்தின ஆளை எதிர்த்து நின்னு தேர்தலிலே ஜெயித்தவராயிற்றே! ஜெயலலிதா பீரியட்லேயும் சுயேச்சையா நின்னு ஜெயிச்சவராயிற்றே!
பொது ஜனம; அவரேதான்! அவர் திமுக ஆளுங்களை மூஞ்சியில குத்தி ஜெயலலிதாவுக்கு விசுவாசத்தை காட்டினப்பிறகு, அதிமுகவில கழட்டிவிட்டுட்டாங்க!
பொதுஜனம்; ஆமா , அதற்கப்புறம் அவர் பிள்ளை தங்கமாங்கனி ஜெயலலிதாவுக்கு விசுவாசத்தை காட்டினார். அதற்கப்புறம் பெத்த அப்பன் நோய் வாய்ப்பட்டு இறுதி கட்டத்தை அடைந்த போதும், அவரை போய் பார்க்க விடலை ஜெயலலிதா! அவ்வளவு விசுவாசத்தை பெத்த அப்பாவை ஒதுக்கிட்டு காட்டினார்.
பொது ஜனம்; அந்த மனுஷன் (தாமரைக்கனி) செத்துட்டபிறகும் கொள்ளி வைக்க ஜெயலலிதா அனுப்பலியேப்பா! இப்படி கூடவா இருப்பாங்க! பாடைக்கு கூப்பிடாம போகனுமேப்பா!
பொது ஜனம்; ஆயிரம் தான் இருந்தாலும் அன்னையும் பிதாவும் தானேப்பா முன்னறி தெய்வம்! அந்த பையனுக்கும் அவருதானேப்பா அரசியலை கத்து கொடுத்திருப்பாரு!
பொது ஜனம்; இதெல்லாம் எண்ணிப்பார்க்கிற கும்பளா இந்த கும்பல். இதை பின்பற்றுகிற தலைமையா? பாவம் சும்மா விடாதுப்பா!
பொது ஜன்ம; அந்த பாவத்தை சரிகட்ட யானை இருக்குது! அதை தூக்கி கோயிலுக்கு கொடுத்தா? எல்லா பாவமும் சரியாயிடும்!
பொது ஜனம்; எந்த யானையை தூக்கி கொடுக்கணும்! நாட்டில இருக்கற "யானை"யையா? காட்டில இருக்கற "யானை"யையா????????????????????
No comments:
Post a Comment