Pages

Wednesday, 29 June 2011

மக்களை கழட்டி விட்டாலும் விடுவேன்! தனியார் பள்ளிகளை ஒருபோதும் கழட்டி விடமாட்டேன்-ஜெயலலிதா





 'சமச்சீர் கல்வி' தரமற்றது! ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல்!

சென்னை சமச்சீர் கல்வி தரமற்றது. இதுகுறித்து ஆராய்ந்த கமிட்டி ஒரு வாரத்தில் ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனுத்தாக்கல் செய்துள்ளது. சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும் என்று கோரி சென்னை தியாகராயர் நகரை சேர்ந்த பிரின்ஸ் கஜேந்திரபாபு உள்ளிட்ட பலர் உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தாக்கல் செய்தனர். 


இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் தமிழக அரசு கல்வித்துறை செயலாளர் சபீதா சார்பில் அரசு சிறப்பு வக்கீல் சம்பத் உயர் நீதிமன்றத்தில் நேற்று பதில் மனுத் தாக்கல் செய்தார். 

அதில் கூறியிருப்பதாவது் சமச்சீர் கல்வி தொடர்பாக கடந்த ஆண்டு சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டம் தவறானது.


மத்திய அரசின் கட்டாய கல்வி சட்டத்துக்கு எதிரானது. மத்திய அரசின் கட்டாய கல்வி சட்டம்தான் மூலச்சட்டம் இந்த சட்டத்துக்கு விரோதமாக சமச்சீர் கல்வி சட்டம் உள்ளது. இந்த மூலச்சட்டத்தை கவனத்தில் கொள்ளாமல் கடந்த அரசு சமச்சீர் கல்வி சட்டத்தை கொண்டு வந்தது. ஈசெ?ஈசெ?தேசிய பாடத் திட்டம் வடிவமைப்பு விதி 2005ன்படி சமச்சீர் கல்வி தரமற்றது. 

இதுதவிர சமச்சீர் கல்வியில் பல குறைபாடுகள் உள்ளது என்று கல்விக்கான தேசிய கவுன்சில் தமிழக அரசுக்கு கடந்த 2009ம் ஆண்டு நவம்பர் மாதம் 24ம் தேதி கடிதம் எழுதியது. அதை கடந்த அரசு ஏற்கவில்லை. இதுதவிரஇ கடந்த ஆண்டு சமச்சீர் கல்வி வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் அரசுக்கு பல பரிந்துரைகள் செய்தது. 

அதாவது சமச்சீர் கல்வி புத்தகம் தொடர்பாக ஆய்வு செய்ய புதிய கமிட்டி அமைக்க வேண்டும். அந்த கமிட்டி அங்கீகரிக்கப்பட்ட புத்தகங்கள் பட்டியலை வெளியிட வேண்டும் என்ற பரிந்துரையை கடந்த அரசு அமல்படுத்தவில்லை. இதற்காகஇ மே மாதம் 15ம் தேதி கெடு விதித்தது. அதை கடந்த அரசு மீறியுள்ளது. புத்தகத்தை தேர்ந்தெடுக்கும் உரிமை தனியார் பள்ளிகளுக்கு உள்ளது என்று மத்திய அரசின் மூலச்சட்டம் கூறுகிறது. இதை கடந்த அரசு மீறி செயல்பட்டுள்ளது. 

மூலச்சட்டத்தின் விதிமுறைகளை நடைமுறைப்படுத்தாமல் சமச்சீர் கல்வி சட்டத்தை அமல்படுத்த முடியாது. ஈசெ?ஈசெ?சமச்சீர் கல்வி வழக்கு தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீடு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் சமச்சீர் கல்வி தொடர்பாக ஆய்வு செய்ய ஒரு கமிட்டி அமைக்க வேண்டும் என்றும்இ அந்த கமிட்டி 3 வாரத்தில் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.; அதன்படிதமிழக அரசு கமிட்டியை அமைத்தது. இந்த கமிட்டி இரவுஇ பகலாக சமச்சீர் கல்வியை ஆய்வு செய்து வருகிறது. வரும் 5ம் தேதிக்குள் (ஒரு வாரத்துக்குள்) உயர் நீதிமன்றத்தில் அறிக்கையை தாக்கல் செய்யும். எனவே மனுதாரரின் குற்றச்சாட்டு ஏற்புடையதாகாது. 

சமச்சீர் கல்வி என்பது மாணவர்களுக்கு உதவுவதாக இருக்க வேண்டும். தற்போதுள்ள சமச்சீர் கல்வி மாணவர்கள் வளர்ச்சிக்கு தரமானதாக இல்லை. சமச்சீர் கல்வியை நாங்கள் முழுவதுமாக ரத்து செய்யவில்லை. அதை நிறுத்தி வைக்கத்தான் சட்டத்திருத்தம் செய்துள்ளோம். அதை எப்பொழுது வேண்டுமானாலும் அமல்படுத்தலாம்.

மத்திய அரசின் மூலச்சட்டத்துக்கு விரோதமாக சமச்சீர் கல்வி இருப்பதால் 1 கோடியே 35 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். 200 கோடி ரூபாய் வீண் செலவு என குற்றச்சாட்டு மிகைப்படுத்தப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் கூறியுள்ளது. இந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வருகிறது

.....தினகரன் 29.06.2011
****************************

பொது ஜனம்; என்னய்யா நிபுணர் குழு அறிக்கையே இன்னும் தாக்கல் ஆகவில்லை அதுக்குள்ள தமிழக அரசின் நிலைப்பாட்டை கோர்ட்டுல தெரிவிச்சிடுச்சே! அப்ப உச்ச நீதிமன்ற தீர்ப்பு அம்போ தானா?


பொது ஜனம்;நிபுணர் அறிக்கை எப்படி? இருக்கும்ணு! ஜெயலலிதா முன்னாடி கோர்ட்டுக்கு நேரிடையாவே தெரிவிச்சிடுச்சி! இதுவே ஒரு நீதிமன்ற அவமதிப்பு!


பொது ஜனம்; நிபுணர் அறிக்கையே அடுத்த வாரம்தானே! தாக்கல் ஆகப்போகுது! அதுக்குள்ள எப்படி சமச்சீர் கல்விச்  சட்டம் தவறானது! என்று மீண்டும் மீண்டும் கூறமுடியும்?



பொது ஜனம்; கோர்ட்டு இது குறித்து அறிக்கை கேட்கவில்லையே! சமச்சீர் கல்வி சரி என்று தீர்ப்பு கூறியாச்சே! சமச்சீர் கல்வி தீர்வு செய்யப்பட்ட சமாச்சாரம்!  



பொது ஜனம்; சமச்சீர் கல்வி சட்டம் தவறானது என்றும் சொல்லுது. சமச்சீர் கல்வியை எதிர்க்கலேன்னும் சொல்லுது! அப்ப சமச்சீர் கல்வி எனபது என்ன?



பொது ஜனம்; மூலச்சட்டத்துக்கு எதிரானது! என்று ஜெயலலிதா கூறியிருக்குதே! மூலச்சட்டத்துல சமச்சீர் கல்வி வேணான்னு சொல்லப்பட்டிருக்குதா!  இல்லை சமச்சீர் கல்வியைக் கொண்டு வருவது தவறு! என்று சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறதா! இருந்தா காட்ட சொல்லுமே பார்ப்போம்!



பொது ஜனம்; கட்டாயக் கல்விச்சட்டத்தையே தமிழக அரசு இன்னும் தமிழகத்தில் அமல் படுத்தாம இருக்கே! அது வந்து ஆறுமாசமா ஆச்சு!  அதுக்கே வழக்குப் போட்டுத்தான் கேக்க வேண்டியிருக்குது! வந்துவுடன் அதுக்கு சட்டம் போட்டிருந்தா இது அக்கறையுடன் செயல்படுது என்று சொல்லலாம்! இது இருக்கறதையும் நாசமாக்கிறதுக்கு வந்திருக்குது!



பொது ஜனம்; தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாக நடப்பது! அவங்களை கொள்ளையடிக்க விடுவது! மக்களை கட்டண சுமையில் தள்ளுவது! இது தான் அதோட அகராதியில சமச்சீர் கல்வியாக இருக்கும்!


பொது ஜனம்; இதுக்கா! இரவுப் பகலா ஆய்வு செய்தாங்களாம்!


பொது ஜனம்; அதுல உள்ள குறைகளைத்தானே சுட்டிக்காட்ட சொன்னாங்க! இவங்க எப்படி? சமச்சீர் கல்வியே தவறு! உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரா  கூறமுடியும்! 



பொது ஜனம்; மே 16 ந்தேதி அதிமுக அமைச்சரவையில 1 மணிநேரத்துல ஆய்வு செஞ்சு அறிவிச்சதைத்தான் திருப்பி அப்படியே இப்பொழுதும் தெரிவிக்கிறாங்க! இதுக்கு இரவுப் பகல் எல்லாம் ஒன்றும் தேவையே இல்லை! அதே 1 மணிநேரத்துல டிஸ்கஷன் பண்ணது தான்! அதனால தான் அறிக்கைக்கு முன்னாடியே அரசு தரப்பு முடிவை கோர்ட்டுல மீண்டும் தாக்கல் பண்ணிட்டாங்க! 



பொது ஜனம்; அதாவது  கோர்ட்டு எத்தனை தடவை சொன்னாலும் நான் மீண்டும்! மீண்டும்! சட்டத்தை மீறித்தான் செயல்படுவேன்! என்னை யார்? என்ன செய்யமுடியும்? என்ற மமதை! 



பொது ஜனம்; இதனால் தான் இது லோக்பால் மசோதாவில பிரதமரை சேர்க்கக்கூடாதுன்னு ரொம்ப அக்கறையா சொல்லுது. இந்த மாதிரி மமதையாக நடக்க அந்த மசோதாஅனுமதிக்காது.



பொது ஜனம்; அப்ப ஏனைய மாநிலங்கள் எல்லாம் பொதுப்பாடத்திட்டத்தை, ஒரே மாதிரியா அமல் படுத்தியிருக்குதே! அவங்க எல்லாம் முட்டாள்களா? இது ஒண்டிதான் புத்திசாலியா?



பொது ஜனம்; ஏதோ! நீதிமன்றத்தால நல்லா வாங்கி கட்டிக்கப்போகுதுன்னு நினைக்கிறேன்! 



பொது ஜனம்; அப்ப இன்னும் மிகப்பெரிய போராட்டம் இருக்குதுன்னு சொல்லு! தமிழக மக்கள் இன்னும் அதிகமாக அவதிப்படணும்!



பொது ஜனம்; இந்த சட்டம் அமலுக்கு வரும்பொழுது இது இந்த மாதிரியெல்லாம் எதிர்க்கட்சியாக இருந்த பொழுது ஒரு முறைக் கூட சொல்ல்லியே! இப்ப எதுக்கு இது மாதிரி சொல்லுது! 



பொது ஜனம்; அப்பவேதான் தனியார் பள்ளிகள் வழக்குப் போட்டாங்களே! அப்பவே உச்சநீதிமன்றத்திலே தள்ளுபடி ஆயிடுச்சே! இது சொல்ற அத்தனையும் தனியார் பள்ளிகளின் கோரிக்கைகளைத்தான் தன்னுடைய அராஜக அரசின் கொள்கையாக கோர்ட்டுல வெளிப்படுத்துது. கோர்ட்டு இதை ஒருபோதும் அனுமதிக்க கூடாது. 



பொது ஜனம்; முதலில் உச்ச நீதிமன்றமே இதற்கான நிபுணர் குழுவின் உறுப்பினர்களை நடுநிலையாக நியமிச்சிருக்கணும்! சமச்சீர் கல்வியை எதிர்க்கிற அதிமுக அரசிடமே, நிபுணர் அறிக்கை தயாரிப்பதற்கான அனுமதியை கொடுத்து இருக்க கூடாது. 


பொது ஜனம்; நீதிமன்றமும் இவங்க! எந்த நிலையில் இருக்கிறாங்க! என்பதை தெரிஞ்சுக்கறதுக்காக இந்த வாய்ப்பை தெரிஞ்சே கொடுத்து இருக்கும்! இந்த அறிக்கையைப் பார்த்தாலே இதுங்க பவுசு தெரிஞ்சுடுமே!



பொது ஜனம்; இந்த விஷயத்துல எல்லோரும் ஒன்று சேர்ந்து போராடணும் லேசுல விட்டுரக்கூடாது! நீதிமன்றம் இதன் ஒவ்வொரு விஷயத்தையும் ஆராய்ந்து பார்க்கணும்! இதை உருவாக்கிய  கல்வியாளர்களும் கோர்ட்டில் வாதாடணும்! அப்பத்தான் மக்களுக்கான நீதி கிடைக்கும்! இந்த அரசின் அராஜகப் போக்குக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடியும்!



பொது ஜனம்; இனி மக்கள் புரட்சி தான்! பார்த்துக்கலாம்! எவ்வளவு தூரம் போகுதோ போகட்டுமே!  எங்கே போயிடப்போகுது!..............!!!!

No comments: