சமச்சீர் கல்வி குழுவில் தனியார் பள்ளி முதலாளிகளை நியமித்ததற்கு கண்டனம்: 300 மாணவர்கள் கைது
சமச்சீர் கல்வி ஆய்வு குழுவில் தனியார் பள்ளி முதலாளிகளை நியமித்த அதிமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து, இந்திய மாணவர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய அளவில் முற்றுகை போராட்டங்கள் நடைபெற்றன.
சென்னையில் பள்ளி கல்வி இயக்குனர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
சமச்சீர் கல்வியை அமல்படுத்தாமல் நிறுத்தும் முயற்சியில் அதிமுக அரசு ஈடுபட்டு வருவதை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு முற்றுகை ஆர்ப்பாட்டம் நûபெற்றது. சென்னையில் பள்ளி கல்வி இயக்குனர் அலுவலகம் முன்பு முற்றுகை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய இந்திய மாணவர் சங்க மாநில தலைவர் கனகராஜ், தமிழ்நாட்டில் முழுமையான சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே நடைமுறைப்படுத்த வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவில் கல்வியாளர்களுக்கு பதிலாக தனியார் பள்ளி முதலாளிகளை நியமித்து உள்ளார்கள். அதனை வாபஸ் வாங்க வேண்டும். நடுநிலையான
கல்வியாளர்களை நிபுணர் குழுவில் நியமிக்க வேண்டும். ரவிராஜ பாண்டியன் அறிவித்துள்ள தனியார் பள்ளிகளுக்கான கட்டணம் அதிகப்படியாக இருக்கிறது. இந்த கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் என்றார்.
...நக்கீரன் 21.06.2011
*************************
பொது ஜனம்; மாணவர்களும் வகுப்புகளை புறக்கணித்து பெருவாரியாக போராட்டத்தில் குதித்துள்ளார்களேய்யா!
பொது ஜனம்; இது தமிழகம் முழுவதுமான அனைத்து கல்லூரி போராட்டமாக விரைவில் மாறும்! அவங்க இந்த விஷயத்தை கையில எடுத்தா தான் சரியா வரும்! இன்னும் தமிழ ஆசிரிய , பேராசிய பெருமக்களும் கலந்து கொண்டு நாடு தழுவிய ஸ்டிரைக் அனவுன்ஸ் பண்ணனும்!
பொது ஜனம்; இது மீண்டும் டெஸ்மா, எஸ்மா! கொண்டு வருமேய்யா!
பொது ஜனம்; கொண்டு வரட்டும்! அரசு வேலை நடக்க வேணாமா? ஒத்துழையாமை இயக்கம் என்னாச்சு! அதை நடைமுறைப்படுத்திட்டாப் போச்சு!
பொது ஜனம்; வெள்ளைக்காரனுக்கு எதிரா காந்தி கொண்டு வந்தது மாதிரியா? அந்தளவுக்கு ஆயிடுச்சா!
பொது ஜனம்; அப்ப வெள்ளைக்காரங்களுக்கு எதிரா! இப்ப கொள்ளைக்கா,ங்களுக்கு எதிரா!
பொது ஜனம்; அப்ப வெள்ளைக்காரங்களுக்கு எதிரா! இப்ப கொள்ளைக்கா,ங்களுக்கு எதிரா!
பொது ஜனம்;பின்னே இங்கே என்ன! ஜனநாயக ஆட்சியா நடக்குது! சர்வாதிகாரமில்லே நடக்குது! அதுவும் மத்திய அரசின் கீழே இயங்கும் ஒரு மாநில அரசு!
பொது ஜனம்; ஆமா அதிகாரிங்க! அரசு பணியாளர்கள் எல்லாம் மனிதர்கள் தான! குடும்பஸ்தனுங்க கீ கொடுத்தா இயங்குற மிஷினா? என்ன? இல்லை எல்லோருமே அதிமுக தொண்டர்களா? இல்லை ஜெயல்லிதாவோட அடிவருடிகளா? வேலை முடிஞ்சவுடனே எல்லோரும் வீட்டுக்குத் தானேய்யா போயாகணும்! குடும்பத்தை கவனிச்சு தானே ஆகணும்!
பொது ஜனம்; இது சாதாரணமா முடியாது! இன்னும் பெரிசா போகும்னு சொல்லு! ரைட்டு! அடிச்சு தூள் கிளப்பட்டும்!
No comments:
Post a Comment