Pages

Thursday, 23 June 2011

திருட்டுகோட்டை வைச்சுதான் திருட்டை ஒழிக்க முடியும்! - இது அ.தி.மு.க பாலிசி!





 நில ஆக்கரிமிப்பு
சட்டசிக்கலில் சட்ட அமைச்சர்!
  
டந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க வேட்பாளர்களிலேயே அதிக பணக்காரர் என அறிவித்து முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பனைத் தோற்கடித்து இன்று சட்டத்துறை அமைச்சராகியுள்ளார் இசக்கி சுப்பையா.

    ஜெ.தனது சொத்துக்கள் என அறிவித்த 51 கோடியை விட பத்து கோடி அதிகமாக 61 கோடி என அறிவித்ததன் பின்னணியில் ஏராளமான வில்லங்கமான புகார்களும் விவகாரமான கோர்ட் வழக்குகளும் இந்த சட்டத்துறை முழுதையும் கையாளும் அமைச்சருக்கு எதிராக இருக்கிறது என சொல்கிறார்கள், இவர் குடியிருக்கும் சென்னை கே.கே.நகர் பொதுமக்கள்.

     "இவர் ஒரு வழக்குரைஞர் என இவர் அமைச்சர் ஆன பிறகுதான் எங்களுக்குத் தெரியும்.  இவரது தகப்பனார் இநக்கி, சாலை போடும் பணிகளை செயத ஒப்பந்தக்காரர்.  இவரும் தகப்பனார் வழியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய பணிகளை செய்த ஒப்பந்தக்காரர்.  காலப்போக்கில் பணம் சேர்ந்த பிறகு, தினமும் ஒரு வெளிநாட்டுக் காரில் பறக்கும் மீட்டர் வட்டி சினிமா ஃபைனான்னசியராக மாறினார்.  சேர்ந்த பணத்தை வைத்து எங்கள் பகுதியில் பிரிச்சினைக்குரிய சொத்து விவகாரத்தில் தலையிடுவார்.  பிறகு அதை அதிக விலைக்கு விற்றுவிடுவார்.  இவருக்கு எதிராக வழக்குகள் பதிவாகியுள்ளன.  இப்பொழுது இவர் சட்ட்த்துறை அமைச்சராகியுள்ளதால் அந்த வழக்குகளின் தலையெழுத்து என்னாகுமோ என பயந்து கொண்டிருக்கிறோம்"  என்கிறார்கள் பொது மக்கள்.

வழக்கு 1:  தொடுத்திருப்பவர் ஜெயபாலன்

     எங்கள் கே.கே.நகர் பகுதி ஒரு காலத்தில் சினிமா ஸ்டுடியோக்கள் இருந்த பகுதி.  காலப்போக்கில் அந்த ஸ்டுடியோக்கள் கைப்பற்றி வைத்திருந்த அரசு நிலங்கள் எல்லாம் பொது மக்களுக்கு அரசால் வழங்கப்பட்டன.

     அந்த நிலங்களுக்கு மத்தியில் ஒரு இருபது அடி ஆழம் கொண்ட குளம் இருந்தது.  பத்து கிரவுண்ட் மதிப்புள்ள இந்தக் குள்த்தின் இன்றைய மதிப்பு 30 கோடி ரூபாய்.   அதன்மீது இசக்கி சுப்பையா கண் வைத்தார்.  ஒவ்வொரு முறை அ.தி.மு.க ஆட்சி வரும்போதும் ஒரு விவாகராத்தை அந்த நிலவிவிகாரத்தில் அரங்கேற்றுவார்.  1991-96-ல் அ.தி.மு.க ஆட்சியின் போது அந்த பொது குளத்தை சுற்றி காம்பவுண்ட் சுவர் கட்டி தனது பெயருக்கும் தனது குடும்பத்தார் பெயருக்கும் சட்டவிரோதமாக ஒதுக்கிக்கொண்டார்.  அடுத்து
அமைந்த தி.முக. ஆட்சியில் குடிசை மாற்று வாரியத் தலைவராக இருந்த அம்புஜ்சர்மா என்கிற ஐ.ஏ.எஸ் அதிகாரி, இந்த ஒதுக்கீடு சட்டவிரோதம் என ரத்து செய்தார்.

     2001-2006-ல் மீண்டும் அமைந்த அ.திமு.க ஆட்சியின் போது ரௌடிகள் பட்டாளத்துடன் வந்து அந்த இடத்தை ஆக்கிரமித்தார்.  அதை எதிர்த்து குடியிருப்புவாசிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அந்த வழக்கில் 'அம்புச்சர்மா ஐ.ஏ.எஸ். பிறப்பித்த சட்டவிரோத ஒதுக்கீடு ரத்து ஆணை பற்றிய பைலே காணவில்லை' என குடிசை மாற்று வாரியத்தை சென்னை உயர்நீதிமன்றத்திலேயே சொல்ல வைத்தார்கள்.  அதை கேட்டு திகைத்துப்போன தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, 'இந்த வழக்கு விரிவான சட்ட ரீதியான தீர்வுக்கு தகுதியான வழக்கு என தீர்ப்பளித்தார்.  அதன் அடிப்படையில் நாங்கள் இசக்கி சுப்பையா எப்படியெல்லாம் அரசு நிர்வாகத்தை ஏமாற்றுகிறார் என விரிவான வழக்கை ஐகோர்ட்டில் தாக்கல் செய்து வழக்காடிக் கொண்டிருக்கிறோம்.  இந்த முறை சட்டத்துறை அமைச்சரான பிறகு கோர்ட்டுகளை மதிக்காமல் இந்த நிலத்தை தி.நகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகருக்கு 30 கோடி ரூபாய்க்கு விற்று, இங்கு பெரிய அபார்ட்மெண்ட் கட்உம் வேலையில் ஈடுபட்டுள்ளார்" என்கிறார் விஜயராகவபுரம் பொதுநலச் சங்கத் தலைவரான ஜெயபால்.

     "இந்த அராஜகத்தை எதிர்த்து தொடர்ச்சியாக போராடுவாதால் ஒருமுறை கே.கே.நகர் பகுதி திமுக பிரமுகர் தனசேகரன் மூலமாக என்னிடம் பஞ்சாயத்து பேச வந்தார் இசக்கி சுப்பையா.  தனசேகரன் வீட்டில் நடந்த அந்த பஞ்சாயத்தில் எங்கள் மக்களுக்கு ஒரு சமூகநலக்கூடம் கட்ட்த்தான் போராடுகிறேன் என நான் எடுத்துச் சொன்னபோது, இசக்கி சுப்பையா தனது தலைமுடியை தொட்டுக்காட்டி, இதைக்கூட உன்னால் புடுங்க முடியாது' என தனசேகரன் முன்னிலையில் என்னை மிரட்டினார்" என்கிறார் ஜெயபால்.



வழக்கு  2 : தொடர்ந்திருப்பவர் செல்வம்

இவர் அசோக்நகர் சௌந்திரபாண்டியன் தெருவில் உள்ள இசக்கி சுப்பையாவின் பங்களாவிற்கு பின்புறம் வசிப்பவர்.  "எனது அத்தை முனியம்மாளுக்கு வாரிசு இல்லாததால் 16-வது அவென்யு, கன்னியப்பா நகரில் உள்ள மனை எண் 247-ஐ என் பெயருக்கு எழுதிக்கொடுத்தார்.  அதன்படி தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்திற்கு முழுபணம் செலுத்தி 1992-ல் முழு விற்பனை பத்திரத்தையும் கட்டினேன்.  அதைத்தொடர்ந்து மின்சாரம், வீடு கட்டும் அனுபதி ஆகியவற்றைப் பெற்றேன்.  அதன்பிறகு இந்தச் சொத்தில் தலையிட்டார் இசக்கி சுப்பையா.  என் அத்தையை மூளைச் சலவை செய்து அவருக்கு வெறும் 11 லட்ச கொடுத்ததாக எழுதி வாங்கிக்கொண்டு என்மீது வழக்குத் தொடர வைத்தார்.  எங்கள் குடும்பத்தில் சொத்துக்காக குழப்பத்தை உருவாக்கிய சுப்பையாவின் ஆட்கள் எனது அத்தையை அவரது சொந்த ஊரான செஞ்சிக்கு பக்கத்தில் இறக்கிவிட்டு வந்தார்கள்.  அவர் அங்கேயே மரணமடைந்துவிட்டார்.  அவர் என்மேல் தொடுத்த வழக்கும், நான் எனது சொத்து விவாகாரம் குறித்து தொடுத்த வழக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.  அந்த நிலத்தை இப்பொழுது வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையிலேயே வேறொருவருக்கு விற்றுவிட்டார்.  இப்பொழுது அமைச்சராகிவிட்டதால், 'சமரசமாகிப் போகலாம், 5 லட்சம் பிச்சை போடுகிறேன் என சொல்கிறார் இசக்கி சுப்பையா" என்கிறார் செல்வம்.

     வழக்கு   3 : தொடர்ந்திருப்பவர் யூசுப் (விடுதலை சிறுத்தை பொருளாளர்)

     "எங்கள் அசொக் நகர் 86-வது தெரி முனையில் 4,000 சதுர அடி நிலம் ஒன்று உள்ளது.  அது பொது மக்கள் உபயோகத்திற்காக அரசு ஒதுக்கிய நிலம்.  அதன் இன்றைய மதிப்பு 5 கோடி ரூபாய்.  அதை தனியார் சிலர் தி.மு.க. புள்ளிகள் உதவியுடன் ஆக்கிரமிக்க முயன்றார்கள்.  அதை எதிர்த்து நான் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து போராடி வருகிறேன்.  அந்த நிலத்தின் மீது இசக்கி சுப்பையாவிற்கு எப்போதும் ஒரு கண் இருந்து வந்தது.

     'பொது நல வழக்கை விலக்கிக்கொள், நான் அந்த நிலத்தை வாங்கிக் கொள்கிறேன்' என புரோக்கர் மூலம் என்னை மிரட்டினார் இசக்கி சுப்பையா'' என குற்றம் சாட்டுகிறார் யூசுப்.

     'இவை மட்டுமல்ல... அந்தப்பகுதியில் உள்ள சாமி ஒயின்ஸ் கட்டிடம் மற்றும் மணலி செல்லும் சாலையில் ஒரு பள்ளிக் கட்டிடம் என அபகரிக்க முயல்கிறார் இசக்கி சுப்பையா' என்கிற புகார்கள் ஆங்காங்கே பேட்டுக்கொண்டிருக்கிறது.

     'தி.மு.க.வினர் சட்டவிரோதமாக ஆக்கிரமித்த நிலங்களை மீட்க சட்டத்துறை மூலமாக நடவடிக்கை எடுப்பேன்' என அறிவித்துள்ள ஜெ.  அ.தி.முக. வின் சட்டத்துறை அமைச்சர் செய்துள்ளதாக எழுந்துள்ள சட்டவிராத ஆக்கிரமிப்புகள் பற்றிய புகார்களுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார் எனபதறிய சம்பந்தப்பட்ட ஏரியா மக்கள் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள்.

-பிரகாஷ்
படங்கள் ஸ்டாலின்....
...நக்கீரன் ஜூன் 22-24, 2011
**************************

பொது ஜனம்; என்னய்யா இந்த சட்ட அள்ளக்கை ஜெயலிதாவை விடப் பெரிய கையா இருக்கும் போல இருக்குதே! 

 

பொது ஜனம்; எதை வைச்சு சொல்றே!  ஜெயலலிதாவை விட 10 கோடி சொத்து அதிகமாக வைச்சிருக்குதே! அதே வைச்சா....? அது தேர்தல் கமிஈனுக்காக காட்டப்பட்ட  கணக்குய்யா! பினாமி எல்லாம் இதுல வராது! வந்தா தேர்தல்ல நிக்க முடியாது!

பொது ஜனம்; ஜெயலலிதா இரண்டு ரூபா சம்பளம் வாங்கியிருந்தா இந்த சட்டத்தை விட கொஞ்சம் அதிகமாக சொத்து சேர்ந்திருக்கும்! ஆனா அது ஒரு ரூபா மட்டும் தான் சம்பளம் வாங்குச்சு!  அதானால இந்த சட்ட அள்ளக்கை சொத்தை விட பத்துக் கோடி குறைவா ஜெயல்லிதாவுக்கு இருக்கு! அதுக்காக இந்த சட்டம் பீய்த்திக்கவேணாம்! சீக்கிரமா லீடிங் ஆயிடும்!

பொது ஜனம்; சரி தலையைப்போல் தான் வாலும் இருக்குது! விடு விடு....

பொது ஜனம்; திமுக வை கவனிக்கிறதுக்கு முன்னாலே அதிமுக வை நிறைய கவனிக்கணுமே அவங்கதான் இதிலேயெல்லாம் படு ஸ்பீடு.

பொது ஜனம்; அதெப்படி அவங்க அட்டூழியத்தை அவங்களே எப்படி கவனிச்சுப்பாங்க! பெங்களூர் நீதிமன்றத்துக்கே ஆட்டம் காட்டறவங்களாச்சே!

பொது ஜனம்; இந்த லட்சணத்தில தான் திமுக ஆட்சிகாலத்தில் அபகரித்த நிலத்தை மீட்போம்! என அறிவிச்சிருக்கா! இந்த பொம்பளை!

பொது ஜனம்;  ஜெயலலிதா அபகரித்த சிறுதாவூர் நிலத்தை யார் மீட்பது!?  இப்ப இசக்கி கொள்ளையடிச்சதை எப்படி மீட்கறது!? கொள்ளையடிக்கப் போறதையும் எப்படி தடுக்கறது!?

பொது ஜனம்; தெரியலேயேப்பா! அதுவா நடக்கும் விடு! ஒரு வேளை கொள்ளையை வைச்சு! கொள்ளையைத் தடுப்பாங்களோ! என்னவோ! அதுக்குள்ள பாதி இடம் காணாம போயிடுமே!


No comments: