Pages

Saturday, 4 June, 2011

கலைஞர் அரசின் திட்டங்கள் பாதி+கிடப்பில் போடப்பட்ட திமுக அரசின் திட்டங்கள் மீதி = ஜெயலலிதா அரசின் திட்டங்கள்

 
http://www.worldservice.com/tamil
03 ஜூன், 2011 - பிரசுர நேரம் 11:43 ஜிஎம்டி

தமிழக அரசின் திட்டங்கள் அறிவிப்பு

அண்மைய சட்டமன்றத் தேர்தல்களில் பெரும் வெற்றி பெற்று மீண்டும் தமிழகத்தில் ஆட்சியைக் கைப்ப்ற்றியுள்ள அஇஅதிமுக தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவிருப்பதாகவும், முந்தைய திமுக அரசின் திட்டங்கள் சில கைவிடப்படவிருப்பதாகவும் ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா அறிவித்தார்.
புதிய அரசின் முதல் சட்டமன்றத் தொடரை முறைப்படி துவக்கிவைத்து உரையாற்றிய பர்னாலா, குறிப்பாக திமுக அரசால் கட்டப்பட்ட புதிய் தலைமைச் செயலக ம்ற்றும் சட்டமன்றக் கட்டிடத்தில் பல்வேறு முறைகேடுகள் நிகழ்ந்துதள்ளதாகவும் அது குறித்து நீதிவிசாரணை மேற்கொள்ளபடும் என்றும் கூறினார்.

பர்னாலா பேரவையில் வைக்கப்பட்ட தனது உரையை முழுவதுமாகப் படிக்கவில்லை. சில முக்கியபகுதிகளைப் படித்துவிட்டு அமர்ந்தார்.
மொழிபெயர்ப்பில் முழுவதுமாகப் படிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
அவ்வாறு பேரவைத்தலைவர் படிக்கும்போது, திமுக ஆட்சிக்காலத்தில் பொதுமக்களிடமிருந்து சட்டவிரோதமாகப் பறிக்கப்பட்ட சொத்துக்க்ள் மீட்கப்பட சட்டம் கொண்டுவரப்படும் என்றார்.

கலைஞர் காப்பீட்டுத் திட்டம் கைவிடப்படுவதாகவும் அதற்கு பதிலாக புதியதொரு திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
செயலிழந்துள்ள அரசு கேபிள் நிறுவனத்திற்குப் புத்துயிர் ஊட்டப்படும், ஆனால் தனியார் கேபிள் டிவி அமைப்புக்கள் பாதிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

கிராமப்புற ஏழைகளுக்கான கலைஞர் வீட்டு வசதித் திட்டமும் ரத்து செய்யப்படுகிறது. புதிதாக சூரிய மின்சக்தியுடன் பசுமை வீடு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுவதாக ஆளுநர் அறிவித்தார்.

தற்போது உருவாகிவரும் மெட்ரோ ரயில் திட்ட கட்டுமானப் பணிகள் காலதாமதமாகும் என்பதால், மோனோ ரயில் இயக்கப்படும் என்றும் சென்னையில் துவங்கி மற்ற நகரங்களுக்கும் அது விரிவுபடுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

மகளிர் அனைவர்க்கும் மிக்சி, க்ரைண்டர், பேன் போன்றவை எதிர்வரும் செப்டம்பர் 15லிருந்து வழங்கப்படத் துவங்கும் எனவும் பர்னாலா அறிவித்தார்.
அதே நேரம் மாணவர்களுக்கு லாப்டாப் மடிக்கணினிக்ள் வழங்கப்படவிருக்கின்றன.

இலங்கைத் தமிழர் அகதி முகாம்களின் நிலை மேம்படுத்தப்படும் என்றும், முகாம் வாசிகளும் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கான நலத்திட்ட உதவிகளைப் பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

தேசிய முற்போக்கு திராவிடர் கழகத் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் பொதுவாக அறிவிப்புக்களை வரவேற்பதாகக் கூறினார்.

ஆனால் தலைமைச்செயலக மாற்றம், கேபிள் டிவி குறித்த கேள்விகளுக்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

அரசியல் காரணங்களுக்காக பல நல்ல திட்டங்கள் கைவிடப்படுவது தவறு என்று திமுக சட்டமன்ற அணித்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
மேலும், எவ்வித விசாரணைகளையும் திமுக சந்திக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கை அதிபர் மஹிந்த ராஜ்பக்சே போர்க்குற்றங்களுக்காக தண்டிக்கப்பட வேண்டுமென சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தியுள்ளது.

************************

பொது ஜனம்; என்னய்யா அது வரும் இது வரும் என்றால் ஒன்னுமே காணுமேய்யா! மக்கள் பணத்தை வீணாக்கிற திட்டங்கள் அதிகமாக இருக்குது. அது அறிவிச்ச திட்டங்களை விட மக்கள் பணத்தை வீணாக்கிற திட்டங்கள் அதிகமாக இருக்கு! திட்டங்கள் எல்லாம் பெயர் மாத்திதான் ஒப்பேத்தி இருக்கு!


பொது ஜனம்; முந்தைய கலைஞர் அரசின் திட்டங்களை நடைமுறைப்படுத்தினாலே பாதி என்ன? முக்காவாசி விஷயம் முடிஞ்சி போச்சே! வீடு கட்டும் திட்டம் பெயர் மாத்தியிருக்கு! அது எப்படின்னு பிறகுதான் தெரியும்!


பொது ஜனம்; ஆமாய்யா! தலைமைச்செயலகம் ஒரு 1200 கோடி, மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒரு 14, 600 கோடி, சமச்சீர் கல்வி பாடப்புத்தகம் நிறுத்தம் 216 கோடி ரூபாய் வீண் இது தான் இந்த கவர்னர் அறிக்கையின் சிறப்பம்சம். வீணாக்கிறதை அறிவிக்கறதுக்கு ஒரு கூட்டத்தை நடத்தியிருக்குதுங்க! அய்ய! என்ன ஒரு புத்திசாலித்தனம்!

பொதுஜனம்; ஆமா ஜெயலலிதா கஷ்டப்பட்டு வயல்ல உழுது அறுவடை அறுத்து,  மூட்டைத் தூக்கி, கல்லுடைத்து உழைத்து சம்பாதித்த காசு அதை வீணாக்கிறதுக்கு ஜெயலலிதாவுக்கு உரிமை இல்லையா?

பொதூஜனம்; ஒரு ரூபா சம்பளம் வாங்கியிருந்தாலும், வேற வழியிலே கஷ்டப்பட்டு சம்பாதிச்சு, சிறுக சிறுக கொடைக்கானல்,  திராட்சை தோட்டம், சிறுதாவூர், மிடாஸ் என எண்ணிலடங்கா சொத்து சேர்த்து அதுக்கு ஒன்னும்பாதியுமா டாக்ஸ் கட்டியிருக்காங்களே! அதனால அவங்க வீணாக்கிறதுக்கு உரிமை இல்லையா?  கஷ்டப்படறவங்க பணம் மட்டும் தான் இருக்குதா? என்ன? அவங்களும் கஷ்டப்பட்டவங்க தாம்பா?

பொது ஜனம்; யாரோ ஒருவருக்காக, ஒரு தனிநபருக்காகவே, ஏழை வளர்ப்பு மகனுக்காக அரசு பணம் 100 கோடி ரூபாயை செலவு செஞ்சு, அந்த திருமணத்தை  நடத்திக்காட்டி சாதனை புறிஞ்சவங்களாச்சே!

பொது ஜனம்; வீணாக்கிறதுன்னு முடிவாயிடுச்சு அதை நான் தான் வீணாக்கணும்! அதனால பெயிலியர் ஆன மோனோ ரயில் திட்டத்தை தூசு தட்டிக் கொண்டு வருவதா! 

பொது ஜனம்; அதுல ஒரு கட்டிங் பார்க்கலாம் இல்லை. அப்பதானே புதுசா டெண்டர் விடமுடியும். முன்னே கடல் நீரை சுத்திகரிப்பு செய்யற திட்டத்துக்கு ரஷ்ய நிறுவனத்துக்கிட்ட கட்டிங் கேட்டதுக்கு ஒடியே போனவங்க தான் அப்புறம் இந்த தமிழ் நாட்டு பக்கமே வரலியாமே! இல்லைன்னா எப்பவோ இங்கிருக்கிறவங்க தண்ணீர் கஷ்டம் தீர்ந்திருக்கும். எல்லாம் ஜெயலலிதாவுடைய கைங்கிரியம் தான்.

பொது ஜனம்; பின்னே அங்கே இருக்கிற அரசாங்கத்துக்கிட்டேயே இவங்க கட்டிங் கேட்டா அவங்க மிகவும் சீப்பாக லிட்டர் 35 பைசாவோ 45 பைசாவுக்கோ தண்ணீர் தயாரிச்சு தரேன்! என்று பொதுவுடமையா வந்தாங்க! இப்படி லஞ்சம் கேட்டவுன்ன பயந்து ஒடிட்டாங்க! மக்களின் ஜீவாதாரத்திட்டத்திற்கு கூடவா கட்டிங் எதிர்பார்ப்பிங்க என்று காறித்துப்பிட்டு ஒடிட்டாங்க!

பொது ஜனம்; எல்லா வெளிநாட்டு தொழில் நிறுவனங்கள் கிட்டேயும் இப்படித்தான் கேட்டாங்க அதான் எல்லோருமே காரித்துப்பிட்டு போனாங்க! இங்கே தொழில் தொடங்க வரவேயில்லை!

பொது ஜனம்; சரி கவர்னர் உரையிலே ஆடு மாடு  தர்றதைப்பத்தி ஒன்னுமே சொல்லலியே! ஏன் அதை வுட்டுட்டாங்க! அதை எந்த நிறுவனமும் தயாரிக்க முடியாதா? அதை விவசாயிங்க தான் உருவாக்கணும் இல்லை. உயிர் இல்லை அதனால மயிராச்சினு விட்டுட்டாங்க!

பொது ஜனம்; இதை இப்போ கொடுக்கணும்னா மொத்தமா இத்தனை லட்சம் ஆடு மாடுகளை வாங்கி ஒரு இடத்துலே மொத்தமா கட்டணும். அது வேற  நிறைய சாணி போடும், அதை வேறு அள்ளுறதுக்கு தனியா ஒரு துறையை நியமிக்கணும். "சாணி அள்ளும் துறை" என்று, இல்லையென்றால் அதை வாங்கின அதிமுக காரங்க சட்டசபை காம்பவுண்டு க்குள்ளே  கொண்டு வந்து கட்ட ஆரம்பிச்சுடுவாங்க. அப்புறம் சட்டசபையே நாறிடும், 

பொது ஜனம்; ஆமாம்! அப்பறம் ஏன்? நாறுச்சுண்ணு, யார் வாங்கின? ஆடு மாட்டாலே இந்த மாதிரி நாறுச்சுண்ணு! ஒரு விசாரணை கமிஷன் வேறு அமைப்பாங்க! அதனால இப்போதைக்கு சாத்தியமில்லை என்று நினைக்கிறேன்யா!

பொது ஜனம்; இந்த ஆடு மாடுகளை  வெளிநாட்டிலேயிருந்து இறக்குமதி பண்ண முடியாதா? 

பொதுஜனம்; யோவ் அது எப்படிய்யா முடியும்? அங்கே இருக்கிற சீதோஷ்ண நிலையில வாழ்ந்த மிருகம் எப்படிய்யா இங்கே இறக்குமதி பண்ணி "இதுங்களோட" வளர்க்க முடியும்? வரும் போதே நோயோடவா இறக்குமதி பண்ண முடியும். கூடவே மாட்டு டாக்டரையும் இலவசமா கூட அனுப்பிச்சு வைக்கணும். அதை தேர்தல் வாக்குறுதியிலே அறிவிக்கலையே! அதை எப்படி அனுப்புவாங்க! இதையே இன்னும் அறிவிக்கலை!

பொது ஜனம்; அண்ணாப் பல்கலைக்கழகம் எல்லாத்தையும் ஒண்ணாக்கப் போறாங்களாம்? அதனால என்ன நன்மை? கிளைகள் இருந்தால் மக்களுக்கு நல்லது தானே! என்ன எழவோ? தான் தான் படிக்கலைன்னாலும் அடுத்தவங்க படிக்கறதையும் கெடுக்கும் கூட்டம் போல இருக்குது.

பொது ஜனம்; அவங்க தான் சர்ச் பார்க்கில பீஸ் கட்டி பத்தாங்கிளாஸ் வரைக்கும் படிச்சவங்களாச்சேய்யா! இங்கிலிபீசெல்லாம் பேசறாங்களே!

பொது ஜனம்; இங்கிலிபீஸ் பேசினா என்ன? அரேபிய மொழி பேசினா என்ன? அது யாருக்கு வேணும்....! சரக்கு என்ன இருக்குது!? அதான் இங்க முக்கியம்! அது ஒரு மொழி! அது எவனுக்கு வேணும்!

பொது ஜனம்; கலைஞர் காப்பீட்டுத்திட்டம் நிறுத்திட்டாங்களேய்யா? கலைஞர் கலர் டிவியை ஏற்கனவே வாங்கி வைச்சு அப்படியே இன்னும் நிறையப் பேருக்கு கொடுக்காம வெறும் டோக்கன் மட்டும் கொடுத்திருக்காங்களே! அதை இந்த அறிக்கையிலே தெரிவிக்கிறேன்னு சொல்லுச்சே! ஒன்னும் தெரிவிக்கலையே! அதுவும் அவ்வளவு தானா? தேர்தல் வாக்குறுதியிலே எல்லாம் முந்தைய அரசின் நலத்திட்டங்களும் தொடரும்! என்று உறுதி கொடுத்திருக்கே!

பொது ஜனம்; கலைஞர் காப்பீட்டுத்திட்டம் தான் குடும்பத்தினர் அனைவருக்குமான பொது காப்பீட்டுத்திட்டமா மாற்றப்போறாங்களே! அதுவரைக்கும் நோய்வராம பாத்துக்கோ? 

பொது ஜனம்; டிவிக்கு ஒரு விசாரணை கமிஷன் அமைச்சு அப்புறமா கொடுக்கலாமா? வேணாமா? என்பதை தீர்மானிப்பாங்க! அதுக்குள்ள தேர்தல் வந்துடும். ஜனங்க மறந்துடுவாங்க!

பொது ஜனம்;முந்தைய அரசின் திட்டங்கள் என்பது எந்த முந்தைய அரசு? காமராஜர் அரசா?, ராஜாஜி அரசா? எதை குறிப்பிட்டு போட்டிருக்காங்க! திருக்குசு வேலை தெரியாம பேசறியே!

பொது ஜனம்; ஓ அப்படி ஒன்னு இருக்கோ? மறந்துட்டேன்!

பொது ஜனம்; முக்கியமா சமச்சீர் கல்வியை பத்தியும், தனியார்பள்ளி கட்டணக்கொள்ளையை தடுப்பது  பற்றியும் ஒன்னுமே தெரிவிக்கலேய்யா! 

பொது ஜனம்; சமச்சீர் கல்விக்கு புதியக்குழு போடும்னு அறிவுப்பு செஞ்சிருக்குதே? இவங்க ஐ.நா சபையில இருந்து வருவாங்க!  போலிருக்கு! 25 ஆம் கிளாசு வரைக்கும் படிச்சவங்க! கட்டணத்திற்கு ஏற்கனவே கையை விரிச்சிடுச்சி! இப்ப புகார் அனுப்புங்க என்று ஒன்னுமே தெரியாத மாதிரி நடிச்சது. அங்க மெயல்லேயே எக்கச்சக்க புகார் இருக்குது. அதையே இன்னும் அது பார்க்கலை!

பொது ஜனம்;இவங்க குழு தான் சரிங்கறதுக்கு என்ன வரைமுறை இருக்குதுன்னு நீதிமன்றத்தில கண்டிப்பா தெரிவிப்பாங்களா? 

பொது ஜனம்; என்ன வரைமுறையாம் அதை இந்த அறிவிப்பில தெரிவிக்கலையே! இவங்க மட்டும் தான் சரி என்ற எந்த உலக பொது அமைப்பு அறிவிச்சிருக்கு! இல்லை நீதிமன்றம் அறிவிச்சிருக்கு!

பொது ஜனம்; ஆமாம்!, இந்தக் குழு என்னென்ன விஷயத்தையெல்லாம் இந்த சமச்சீர் கல்விக்காகப் பார்ப்பாங்க!  இதுக்கு முன்னாடி அமைக்கப்பட்ட கல்வியாளர்கள் குழு எதையெதையெல்லாம்?  பார்க்க தவறிட்டாங்க!? இதை ஆராய்கின்றவர்கள் எந்த நாட்டில இருந்து வர்றாங்க! ஒரு வேளை அவங்க வேற்று கிரகத்துலேயிருந்து குதிச்சவங்களா? முந்தயக்குழுவில் இருந்தவர்களை விட எந்த விதத்தில இவங்க அறிவாளிங்க என்கிறதை பத்தி இந்த அறிக்கையிலே தெரிவிக்கலையே! என்ன படிப்பு படிச்சிருக்காங்க! என்பதையும் தெரிவிக்கலையே!

பொது ஜனம்; கவலைப்படாதே! ஜெயலலிதா இதையெல்லாம் வருகின்ற 8 ந்தேதி நீதிமன்றத்தில் தெளிவாத் தெரிவிக்கும்!

பொது ஜனம்; அப்படியா!


No comments: