Pages

Thursday, 2 June, 2011

17 நாளில் லாக் அப் டெத்......அதிமுக ஆட்சிக்கு வந்தாலே போலீசுக்கு மாமூல் குதூகலம்!போலீஸ் ஸ்டேசனில் விசாரணை கைதி மர்மச்சாவு

மதுரை: மதுரை ஊமச்சிகுளம் சரகத்திற்குட்பட்ட போலீஸ் ஸ்டேசனில் விசார‌ணைக்காக அழைத்துவரப்பட்ட கைதி மர்மமான முறையில் இறந்தார். மதுரை ஆத்திகுளத்தைச் சேர்ந்தவர் மார்க்கண்டேயன். இவருடைய மகள் சில நாட்களுக்கு முன் காணாமல் போய்விட்டார். இது தொடர்பாக மார்க்கண்டேயனை விசாரிக்க போலீசார் அழைத்துச் சென்றனர். இவர் இன்று காலை மர்மமான முறையில் இறந்து கிடந்தார். 

........தினமலர் 02.06.2011

*****************

பொது ஜனம்; ஏய்யா! இந்த அதிமுக ஆட்சிக்கு வந்தாலே போலிசோட அட்டகாசம் ஜாஸ்தியாடுதேயா! இதை அதிமுக ஆதரவாளர் ஒருவரே மிகுந்த கவலையோடு  தெரிவித்தாரே! ஏன்யா! வந்த 17 நாளுக்குள்ள ஒரு  லாக் அப் டெத், மதுரையில ஒரு கைதி தற்கொலை என்று வந்து கொண்டேயிருக்கிறதே!


பொது ஜனம்; இதுக்கெல்லாம் சிபிசிஐடி விசாரணை வைக்கமாட்டாங்களா?

பொது ஜனம்; அது என்ன? அதிமுக மரியம் பிச்சையா? வெறும் பிச்சைக்கார......சாமான்ய மக்கள். இது தான் ஜெயலலிதா ஆட்சியின் லட்சணம்.


பொது ஜனம்; ஏன் ஆதிமுக ஆட்சி வந்தா மட்டும் அப்படி ஒரு கொண்டாட்டம் இந்த போலீஸ்காரங்களுக்கு?

பொது ஜனம்; ஆமாய்யா!  மாமூல் எக்கச்சக்கமா வாங்கலாம்! யாருமே கேட்டுக்க மாட்டாங்க! ரவுடிங்க எல்லாம் இவங்க கைக்குள்ள வந்துடுவாங்க! எல்லா கிரிமினல்சை பத்தியும் போலிஸ்காரங்களுக்குத் தெரியும் யா! அவங்க எங்க இருப்பாங்கன்னும் நல்லாத் தெரியும்! எப்ப? எந்த? குற்றத்தை பண்ணுவாங்கன்னும் தெரியும்!

பொது ஜனம்; யோவ்! வேண்டிய போலீஸ் ஸ்டேஷன் டிரான்ஸ்பர் போட்டுக்கறதுக்கே செம லஞ்சம் கொடுக்கணும்பா! அதாவது லட்சக்கணக்கில் கொடுக்கணும். அதாவது  சென்னை சென்டிரல் ரயில் நிலைய போலீஸ் ஸ்டேஷன்ல போஸ்டிங் வேணுன்னா செம பைசாக்கொடுக்கணும்! 10 லட்சத்திருந்து 15 லட்சம் வரைகொடுக்கணுமாம்யா! சும்மா இல்லை! ஒரு போலிஸ்காரன் தகவல் சொன்னது.

பொது ஜனம்; ஏன் அம்புட்டு துட்டு தரணும்! ?

பொது ஜனம்;  பின்னே! எவ்வளவு பிக்பாக்கெட் கேஸ், செயின்  ஸ்நாட்ச்சிங், ராப்பரி, எவ்வளவு அடிதடிக் கேஸ், அசால்ட் கேஸ் எல்லாம் வரும் தெரியுமா! அவ்வளவு பேரிடமும் வருமானம் பார்க்கலாம் இல்லை! இன்னும் கூட சாதாரணக் கேசுக்கான எப்.ஐ.ஆர் போடறதுக்கே பைசா கொடுத்தா தான் வேலை நடக்கும்!

பொது ஜனம்; அது என்ன? சாதாரண, ஸ்பெஷல் கேஸ் அவங்க வேலை எப்.ஐ.ஆர் போட்டுத் தரவேண்டியது தானே! அதுக்குத்தானே சம்பளம் வாங்குறாங்க! அதுக்குத்தான் மக்கள் முன்னாடியே மக்கள் வரிப்பணத்தை கட்டிடாறாங்களே!

பொது ஜனம்; அப்படியெல்லாம் இல்லையா! எப்.ஐ.ஆர் அவ்வளவு சீக்கிரத்தில் போடமுடியாதுய்யா! தெரியாமல் பேசாதே! எப்.ஐ.ஆர் போட்டா மூன்று மாசத்துக்குள்ளே கோர்ட்டுல புரோடியுஸ் பண்ணணும். சும்மா இல்லை. அதன் கேஸ் ரிப்போர்ட்டையும், என்குயரி ரிப்போர்ட்டையும் கேர்ட்டுல சப்மிட் பண்ணனும்.

பொது ஜனம்; சப்மிட் பண்ணு! அதுக்கு எதுக்கு போலீஸ்காரங்களுக்கு லஞ்சம் கொடுக்கணும்?


பொது ஜனம்; அது தான் நம்ம போலீஸ் ஸ்டேஷனோட எழுதப்படாத விதி!

பொது ஜனம்; எப்.ஐ.ஆருக்காக விசாரணையெல்லாம் பண்ணணும் என்றால் "சர்வீஸ் சார்ஜ்" பே பண்ணணும் இல்லை. அதாம்பா பேட்டா, கூலியா கொடுக்கணும். அப்பறம் கன்வேயன்ஸ் எல்லாம் கொடுக்கணும். சரக்குக்கு வேற காசு கொடுக்கணும். அதுக்கு பேர் லஞ்சம் இல்லை, அவங்க அகராதியிலே!

பொது ஜனம்; ஓ...அப்படி மாத்திட்டாங்களா? இதுங்க இட்த்துல....

பொது ஜனம்; சட்டம் ஒழுங்கை காப்பாத்தப்போறோம்னு சொல்ற ஜெயலலிதா இவங்களோட போலீஸ்காரங்களோட சட்ட ஒழுங்கீனத்தை எப்படி காப்பாத்தப்போகுதாம்? ராணுவத்தை வைத்து காப்பாத்தப் போகுதாம்மா? இவங்களை கட்டுப்படுத்த யார்? வேறொரு டாப் போலீஸ் இருக்குதா?

பொது ஜனம்; ஆமாய்யா! இதுங்க ஸ்பாட் பைன் போட்டா, கூட ஒரு 50,100 என்று தனியா சர்வீஸ் சார்ஜ் என்று வாங்கிக்கும். அதெல்லாம் அதுங்க "குடலில" டாஸ்மார்க் சரக்காக உள்ளேப்போய் சேர்ந்துடும், மீதி குடும்பத்துக்கு மீன், கறி...... என்று தின்ந்தோறும் வாய்க்கு ருசியா சாப்பிட போயிடும். அப்புறம் பையன், பொன்னுகளுக்கு இன்ஜினியரிங், டாக்டர் படிப்புக்கு, ஸ்கூள் பீஸ் கட்டுவதற்கு என்று போயிடும். இன்னும் கொஞ்சம் ரூபா (இல்லை மொத்தமாக கூட) சின்ன வீட்டுக்கு போயிடும்.

பொது ஜனம்; ஆமாய்யா! காலேஜ் பசங்க ஏதாவது பீர் அடிச்சுட்டு பைக்கில போய் செக்கிங்கில மாட்டிகிட்டா, "டிரங்க் அன் டிரைவ்" கேஸ் போடுவேன்! கோர்ட்டுக்குப் போனா 1000 ரூபா பைன் ஆவும், 2000 ரூபா பைன் ஆவும் , அப்பா அம்மா கிட்டே குடிச்சதை சொல்லிப்புடுவேன் என்று பயமுறுத்தி கேஸேப் போடாம ஒரு 500 ரூபாவை லஞ்சமா வாங்கிக்கும்.


பொது ஜனம்; டிராபிக் போலீஸ் பன்ற வேலையை எல்லா போலீசும் பண்ணும். ஆனா இதுங்க மட்டும் தண்ணியடிச்சுட்டு போலீஸ் பைக்கு  பின்னாடி நம்பர் பிளேட்டுல "போலீஸ்" என்று எழுதிட்டு கையை தூக்கி ஆசர்வாதம் பன்ற மாதிரி சிக்னல் காமிச்சிட்டு எஸ்கேப் ஆயிடும். போலீஸ் காரங்க இந்த பைக்கை மடக்க மாட்டாங்க! பலான வீட்டுக்கு கூடப்போகும். எல்லா, பொது இடத்திலும் இதுங்க மட்டும் புகை பிடிக்கும்! இதுங்களுக்கு எல்லா தப்புக்கும் பிரி லைசன்ஸ். 

பொது ஜனம்; இப்பத் தெரியுதா இதுங்க எதுக்கு "போலீஸ்"  என்று இதுங்க சொந்த வண்டி பின்னாடி எழுதி வைச்சிகிட்டு ஓட்டுதுங்கன்னு!

பொது ஜனம்; அப்படி ஸ்டிக்கர் போடக்கூடாதுய்யா! யூனிபார்மை கழட்டிட்டா  போலீஸ் இல்லை! தனி  நபர் தான்! பிறகெப்படி சொந்த வாகனத்தில் போலீஸ் என்று ஸ்டிக்கர் ஒட்டிகிட்டு போகமுடியும். போலீஸ் என்ற ஊழியருக்கு வழங்கப்பட்ட காவல் எல்லைக்குள் தான் தன்னுடைய கடமையை செய்யனும்யா! அந்த எல்லையை தாண்டி ஆப் டூட்டியில போலீஸ் என்று சொல்லிக்கொள்ளவே முடியாது. சொல்லவும் கூடாது.

பொது ஜனம்; தண்ணயடிக்கிறதுக்கு காசு இல்லைன்னா உடனே ஒரு அப்பாவி வண்டியை மடக்கிடும், இல்லைன்னா எவனைன்னா ஒரு அப்பாவியை மடக்கி கேஸ் எழுதறேன்னு காசை புடுங்கிட்டு டாஸ்மார்க் கடைக்குப் போயிடும். எத்தனை பேர் இதைப்போய் புகார் பண்ணுவாங்க!

பொது ஜனம்; ஆமா! அப்படியே பண்ணினாலும்...தூக்கி உள்ளே போட்டுறப்போறாங்க! வந்து நம்பளை திட்டுவானுங்க!

பொது ஜனம்; என்னப்பா பசங்களுக்கு பீஸ் கட்டற அளவுக்கா வருமானம் வரும்? அவ்வளவு பணமா போலீஸ்காரங்களுக்கு கிடைக்கும?

பொது ஜனம்; பின்னே தின்ந்தோறும் "டிவிஷன்" வருது இல்லை. 

பொது ஜனம்; "டிவிஷன்னா"?

பொது ஜனம்; அதாம்பா தினந்தோறும் கான்ஸ்டபிள் போய் எல்லாக் "கையேந்தி பவன்",  "பிளாட்பார வியாபாரிகள்", "இன்னும் இதர சமூக விரோத வியாபாரிகள்" என்று  கட்டாய "மாமூல்" வசூலிக்கும். ஒரு கடைக்கு "20 ரூபாய் மாமூல்" என்று வசூலாகும், சில கடைகளில் "தலா 30, 40" என்று கூட "மாமூல்" போகும். ஒரு "டிவிஷனுக்கு 500 முதல் 1000 கடை வரை இருக்கும்". எப்படியும் 10,000 ரூபாய்க்கு மேல வசூலாகிவிடும். ஏரியாவுக்கு தகுந்த மாதிரி கடைகளின் எண்ணிக்கை கூடும். அப்புறம் ஆளுக்கு ஒரு நாளைக்கு 1000 ரூபாய் என்று பிரித்து கொள்கிற அளவுக்கு வசூலாயிடும். தினம் ஆயிரம் ரூபாய் குறையாமல் போலீஸ்காரன் எடுத்து செல்வான். இதுவும் பிரண்டு ஒருத்தன்  போலிஸ்காரனாக இருக்கான் அவன் சொன்னது தான். 

பொது ஜனம்; அப்ப மாசத்துக்கு ஒரு கான்ஸ்டபிளுக்கு ரூ 30,000 க்கும் மேலே கிம்பளம் மட்டும் வரும். சம்பளம் ஒரு தனியா ஒரு 10,000 ருபாய்க்கும் மேல அப்புறம் பாதி விலை ரேஷன், அப்புறம் ஒசிகாஜிப்பொருட்கள்..... எம்மா துட்டு....அப்பறம் ஏம்பா இன்னும் துட்டுன்னு துட்டுன்னு அலையறாங்க!

பொது ஜனம்; அப்ப இது பரவாயில்லையா? இதுக்கு மேலே போனாத்தான் தப்பா! இதுவே ஊரை அடிச்சு பிடுங்கின பணம் தானாப்பா! லஞ்சம்!


பொது ஜனம்;  ஆமாம், சீட்டாட்ட கிளப், பெரிய ஜாம்பவான்கள் கொடுக்கும், காயிலாங் கடைக்கறாங்க கொடுக்கற லஞ்சம் எல்லாம் இன்ஸ்பெக்டருக்கு, உதவி இன்ஸ்பெக்டருக்கு என்று தனித்தனியாக தகுதி வாரியாக பிரித்து மாமூல் வழக்கமாக வரும். இன்ஸ்பெக்டருக்கு போக மீதி உள்ளது உதவி இன்ஸ்பெக்டருக்கு...அது இல்லாம டீ, பஜ்ஜி, சொஜ்ஜி, இளநீர், பிரியாணி, டிபன், காய்கறி, கீரை என்று அனைத்தும் இலவசமாக ச்சீ ச்சீ பிடுங்கி கொண்டு போவதும் மாமூலான ஒன்று.


பொது ஜனம்; "மருதமலை" திரைப்படத்துல "நடிகர் வடிவேலு" கடைக்கராங்ககிட்ட மாமூல் புடுங்கி கொண்டு போவது போலத்தானே! பிச்சைக்கரானைக் கூட விடமாட்டியா என்று டயலாக் சொல்லுவாரே ஆது போலத்தானே!

பொது ஜனம்; ஆமாம்! அது போலத்தான் அது சும்மா ஒரு சின்ன பிட்!

பொது ஜனம்; எப்படிப்பா இதெல்லாம் செரிக்கிறதா? குடும்பம் நல்லா இருக்குமா! கிட்னி பெயிலியர் ஹாட் அட்டாக் எதுவும் வராதா? எந்த நோயும் வராதா? கொள்ளை நோய்......

பொது ஜனம்; கண்டிப்பா வரும்! சரி இந்த பணத்தை வைச்சி என்ன பண்ணுவாங்க.....?

பொது ஜனம்; இருக்குதே!  அந்த பணத்தில தான் புள்ளைங்க இன்ஜினியரிங் காலேஜ் படிக்குது. டாக்டருக்கு படிக்குது. 

பொது ஜனம்; கரெக்ட், எதுன்னா நான் இந்த லஞ்ச பணத்துல படிக்கமாட்டேன்னு சொல்லுதா! குடும்பம நடத்தமாட்டேன்னு அவங்க வீட்டு பெண்கள் சொல்லுதா?  சொல்ல மாட்டேங்குதே! அது தான் இப்ப அவங்க கொண்டாட்டத்துக்கு காரணம்.

பொது ஜனம்;இதுக்கு முன்னே திமுக ஆட்சியிலே மறைந்து, மறைந்து பயந்து பயந்து வாங்கினாங்க இப்ப இந்த அதிமுக ஆட்சியில பயமில்லாம வாங்குறாங்க!

பொது ஜனம்; இப்படி மனச்சாட்சியே இல்லாமல் இருந்தால் நல்ல சாவே வராதப்பா! நல்ல போலீஸ்காரங்களே இல்லையாப்பா!


பொது ஜனம்; இருப்பாங்க விரல் விட்டு எண்ணக்கூடிய நிலையில், காலில ரப்பர் செருப்பை போட்டுகிட்டு ஒருத்தர் இரண்டு பேர் இருப்பாங்க! ஆனா இதுக்கூட ஸ்டேஷன்ல இருக்கமாட்டாங்க! டிவிஷன் வாங்காமா எவரும் இருக்க முடியாது. அப்படி இருந்தா மத்தவங்க அவங்களை விட்டு வைக்க மாட்டாங்க! வேற டிப்பார்ட்மென்ட்டுக்கு மாத்தி விட்டுடுவாங்க! 

பொது ஜனம்; ஆமா, கமிஷனர் ஆபிசுக்கு, உளவுப் பிரிவுக்கு என்று....எங்க லஞ்சம் இல்லையோ, எங்கே ஊர் சாபத்தை வாங்காம இருக்கமுடியுமோ?  அப்படி நிம்மதியா வாழணும்னு நினைக்கறவங்க மட்டும் மாத்திக்கிணுப்போய்டுவாங்க! அங்கேயும் அப்படி இப்படி லஞ்சங்கள் என்று உண்டு. பெரிய அளவில் இருக்கும்.


பொது ஜனம்; பெரும்பாலும் அவங்களுக்கு அகால மரணம் வந்ததாகத்தான் கேள்விப் பட்டிருக்கேன்! திடீர்னு பொட்டுனு போயிடுவாங்க! யாரும் வருத்தப்படவே மாட்டாங்க!

பொதுஜனம்; பின்னே! சம்பளம் பத்தாயிரத்துக்கு மேலே! அரிசி, துவரைப்பருப்பு, பாமாயில் என்று எல்லா பொருடகளும் பாதி விலை. 1 ரூபா அரிசியைக்கூட அவங்களுக்கு 50 பைசாவுக்குத்தான் தருவாங்க! பாமாயில் எல்லாம் 12.50 ருபா தான்....எல்லாம் பாதிவிலைதான். அப்புறம் அலவன்ஸ் எல்லாம் உண்டு. பஸ்ஸூல பிரி, ஊருக்குப்போகணும்னா எல்லாம் பிரியாத்தான் போவாங்க! ஆனா எங்க போனாலும் காசு குடுத்து பொருள் வாங்கிறது இல்லை ஆம்பளை, பொம்பளை என்று எந்த போலீஸ்காரங்களாக இருந்தாலும் இப்படித்தான்.

பொது ஜனம்; ஏம்பா ஆனா! அவங்க 24 மணி நேரமும் டூட்டில இருக்கணுமேப்பா! அது கொஞ்சம் ஓவர் இல்லை!

பொது ஜனம்; யோவ்! அது எசன்ஷியல் டூட்டி கண்டிப்பா இருந்து தான் ஆவணும். தெரிந்து தானே வேலைக்கு சேர்ந்தே! பிரேக் கொடுத்து தானே ஊழியம் பார்க்க சொல்றாங்க! இந்த வேலைக்கு துட்டு லஞ்சமா கொடுத்து வேற வர்றாங்க! இது அதுக்கு மேலே! தனியார் செக்யூரிட்டியில வேலை பார்க்கலை.

பொது ஜனம்; இதை வரைமுறைக்கு கொண்டு வர முயற்சிக்கணுமே தவிர மக்களை அழிக்க கூடாது. நீயே சமுதாய விரோதியா ஆகக்க்கூடாது. அது உன் (போலீஸ்) குடும்பத்தையே அழிச்சிரும். ஏன் டிரெயன் டிரைவர், போக்குவரத்து ஊழியர், பால் உற்பத்தி தொழிலாளர்கள் இவங்களெல்லாம் வேலை பார்க்கலை இவங்களும் எசன்ஷியல் டூட்டியில தான் வர்றாங்க! ராணுவத்தினர் வேலை பார்க்கலை. அது போலத்தான் நேர்மையா தான் வேலை பார்க்கணும் இல்லைன்னா வேலைக்கு வராதே!

பொது ஜனம்; அவங்க என்ன பண்ணுவாங்கப்பா? அவங்க கேக்காமலே நிறையப்பேர் லஞ்சம் கொடுக்குறாங்களே!

பொது ஜனம்; அதெல்லாம் சும்மாப்பா, கொடுகலைன்னா கஞ்சா வைச்சிருந்தே, அறுவா வைச்சிருந்தான் என்று கேசை போட்டுருவான், அதுக்கு பயந்தே இவர்கள் காசு  கொடுக்கறது. கள்ளச்சாராயத்தை இவங்களே  காய்ச்ச சொல்லுவாங்க! அதுக்கு நல்லா  மாமூலை வாங்கிக்குவாங்க! கணக்கு காட்டறதுக்கு ஒரு ஆளை மாசாமானா புடிச்சு உள்ளே ஜெயில்ல போடுவாங்க! நாங்க கள்ளச்சாரயத்தை ஒழிச்சோம் என்று கணக்கு காட்டுவாங்க!

பொது ஜனம்; இதுக்கு தான் மக்கள் ஸ்டேஷன் பக்கமே போக மாட்டேங்கறாங்களா?

பொது ஜனம்; பின்னே! எந்த புகாரை க் கொடுத்தாலும் உடனே வாங்கறது இல்லை! கொடுக்கறவங்களை கிண்டல் பன்றது. பாதிக்கப்பட்டவங்களை கிண்டலடிச்சே ஒட்வைச்சிருவானுங்க! அதுக்கு பாதிச்சாலும் பரவாயில்லை இந்த காட்டிமிராண்டிங்க கிட்டே எதுக்கு மாட்டிகிட்டு அவமானப்படணும், என்று யாரும் புகார் கொடுக்க பாதி பேர்  போறதில்லே! 

பொது ஜனம்; அப்படியே புகார் கொடுக்கப்போனாலும் எல்லாத்தையும் ஒரு புகார் பன்றதுக்காக போலீஸ் ஸ்டேஷனுக்கு வேண்டிய பேப்பர் பேனா முதற்கொண்டு அனைத்தையும் வாங்கி வரணும்.  அனைவருக்கும் டீ, கூல் டரிங்க்ஸ், இளநீர் நம்ம காசுல வாங்கி கொடுக்கணும். ஸ்டேஷன் வாசல்லே துப்பாக்கி தூக்கிகிட்டு இருக்குமே அதுக்கு கூட இளக்காரமா இருக்கும்.

பொது ஜனம்; ஆமா! அப்படியே! புகார் கொடுத்தாலும், எதிர்த்த ஆள் கிட்ட  துட்டை வாங்கிகிட்டு நம்மளையே திருப்பி அசிங்க அசிங்கமாக திட்டுவானுங்க! மேலிடத்துல புகார் கொடுத்தா! மேலிடத்துல புகார் கொடுத்திட்டியா உன்னை ஒரு நாள் வேற கேஸ்ல புடிச்சு போடுறேன் பார் என்றும் மிரட்டுவானுங்க!

பொது ஜனம்; ஜெயலலிதாவே பிடிக்காதவங்களை கஞ்சா கேஸ் போட்டு உள்ளே தள்ற ஆளு. மார்டனா இருக்கற ஆளாயிருந்தாலும்,  கஞ்சா குற்றத்துக்கு பொருந்தாத பொம்பளையாக இருந்தாலும் பாவம் தோஷம் பார்க்காம கஞ்சா கேசுல உள்ளே தள்ளி ரசிக்கும் கொடூரக் குணம் கொண்டது. பின்னே இந்த மாதிரி ஆட்சியில போலீஸ்காரங்களும் இப்படித்தான் கொடூரமாக இருப்பாங்க!

பொது ஜனம்; இதுக்கு, இதிலிருந்து தப்பிக்க நாமும் ஏதாவது துட்டுக்கொடுக்கணும். போலீஸ் ஸ்டேஷன்ல போய் ஒருவர் துட்டுக் கொடுக்காம வந்தது கிடையாது. துட்டு வாங்காம போலீஸ் புகார் வாங்கினது கிடையாது. அப்படிக்காசு கொடுக்காம புகார் கொடுத்திட்டா அது தான் வாழ்க்கையில் செய்த சாதனையாக இருக்கும்பா. அது எல்லோருக்கும் நடக்கும்னு சொல்ல முடியாது.

பொது ஜனம்; இதெல்லாம் பத்தி மேலதிகாரிங்களுக்கு, அதாவது பெரிய போலீசுக்கு, (மூணு பாதிக்கு) எல்லாம்  தெரியாதா?

பொது ஜனம்; ஏன் தெரியாது எல்லோருக்கும் தெரியும்? இதுபற்றி முன்னால் காவல் துறை பெரிய போலீஸ், அதாம்பா முன்னால் கமிஷனர் நடராஜன் அவர்களே மனித உரிமை உறுப்பினரா இருந்த பொழுது தெரிவித்திருக்கிறாரே! அந்த கட்டுரை இணையத்திலேயே இருக்குதேய்யா! இப்போ அவர் டி.ஜி,பி ஆகப்போறார். (பாரதியார் பேத்தியோடப் பையனாம்)

பொது ஜனம்; இவர் மட்டும் நல்லவராம்மா? இவரும் தான் ஜெயலலிதா சொன்ன மாதிரி ஸ்டாலின் மேல பொய் கேஸ் போட டிரை பன்னாரு! எல்லாம் ஒரே குட்டை தான் இவங்க பெரிய லெவல்ல கொள்ளை அடிப்பாங்க...இல்லை விரோதமா நடப்பாங்க! இதுங்க சின்ன இடத்துல அப்பாவி மக்கள்கிட்டே இப்படி அநியாயமா நடக்குதுங்க! ஆனா இந்த லாக் அப் டெத்துக்கெல்லாம் போலீஸ்காரங்களுக்கு மரண தண்டனை கொடுக்கணும்பா! இவங்களுக்கு யார்? இந்த உரிமையெல்லாம் கொடுத்தது. நாம போனாக்கூட போட்டுத்தள்ளிடுவாங்க போலிருக்கே! 

பொது ஜனம்; நேத்துக்கூட ஒரு போலீஸ்காரன் ஒரு தெருவில நல்லா குடிச்சிட்டு கலாட்டா பண்ணிட்டு இருந்தான். எல்லோரும் பயந்தாங்க! "எங்கம்மா ஆட்சி!" எவன்? என்னை என்ன? பண்ண முடியும்?. இத்தனைக்கும் அவன் இருப்பது அவனுடைய சின்னவீட்டில் (இரண்டாவது பெண்டாட்டி வீட்டில்) தான்.  அவங்களையும் (சின்ன வீட்டையும்) தூக்கி போட்டு உதைத்து கொண்டிருந்தான். ரோட்டுல போற பொன்னுகளையெல்லாம் கையை பிடித்து, வாடி!, போடி! என்னடி பார்க்கறே! என்று திட்டிக்கொண்டிருந்தான். யாரும் அவன் மேல் புகார் பண்ணலை! எல்லோரும்  பயந்தாங்க! இதுக்கு முன்னாடி  (திமுக ஆட்சி இருந்தப்ப) அவன் இப்படி பண்ணதேயில்லை!.


பொது ஜனம்; ஆமாம்பா தி.நகர்ல கூட ஒரு நட்சத்திர ஒட்டல் அதிபர் பையனைக்கூட தேவையில்லாம விசாரணை என்ற பெயரில் லத்தி சார்ஜ் பண்ணாங்க போலிருக்குது. அது கேமராவில பதிவாயிடுச்சே! அடிச்சவரு ஒரு துணை ஆணையர்.(திருநாவுக்கரசு). இவரைப்பத்தி மனித உரிமை ஆணையத்திடம் புகார் கொடுத்திருக்காங்க! ஆட்சிக்கு வந்த 17 நாளில மனித உரிமை மீறல் புகார் இது எங்கேப் போய் முடியுமோ?

பொது ஜனம்; ஏன்? மக்கள் கேட்டுகிட்டாங்கன்னு மரியம் பிச்சைக்கு மட்டும் சிபிஐடி விசாரணை வைச்சுதே! இதுக்கு ஏன்?  விசாரணையை வைக்கமாட்டேங்குது! இது சட்டம் ஒழுங்கீனம் இல்லையா!  மக்கள் தான் சிறையில் கொலை பண்ணிட்டாங்க, மரணத்துல சந்தேகம்னு சொல்றாங்களே!

பொது ஜனம்; ஏன்? அமைச்சரா இருந்தா தான் சிபிசிஐடி வைக்குமா? உப்பு சப்பில்லாத கேசுக்கு விசாரணை வைச்சுதே! இத்தனைக்கும் அவரு போய் லாரியில் முட்டிகிட்டதுக்கு! இந்த கேசுக்குத்தான் முக்கியமா சிபிசிஐடி விசாரணையை வைக்கணும்.

பொது ஜனம்; இதனால தான் போலீஸ்காரவங்களுக்கு இந்த ஆட்சியில குதூகலம்! இப்பத் தெரியுதா? இவங்க தான்சட்டம் ஒழுங்கை காப்பாத்த போறாங்கன்னு சொல்லுது. இதுங்களே ஒரு குத்தவாளி கும்பல். அப்புறம் எப்படி மக்களை காப்பாத்துவாங்க!

பொது ஜனம்; இவங்க பன்ற அட்டூழியங்களில் கொஞ்சத்தை பேசினாலே பகீர்னு இருக்குதே இன்னும் மொத்த விஷயத்தையும் பேசினா நடுநடுங்கித்தான் போகணும்.

No comments: