27 கோடி வசூல்
"தி.மு.க. ஆட்சியில் தொழில் நசிந்து போனது என்ற கருத்து பரப்பப்பட்டது. ஆனல் இப்போதைய 'ஜெ' ஆட்சியில் தொழிலே நடத்த முடியாது போல ஆகிவிட்டது. இவர்கள் ஆட்சிக்கு வந்து ஒரே மாதத்தில் வலுக்கட்டாயமாக எங்களை குறிவைத்து கழுத்தில் சுருக்கு கயிறு மாட்டுவது போல 'இவ்வளவு கொடு' என நெருக்கி விட்டார்கள். இப்படி தமிழகம் முழுக்க உள்ள கிரஷர் (கல்குவாரி) உரிமையாளர்கள் குமுறும் செய்தி நமக்கு எட்ட நிஜத்தைத் தோண்டினோம்."
தமிழகம் முழுக்க ஆயிரக்கணக்கான கல்குவாரிகள் 27 மாவட்டங்களில் உள்ளன. சில மாவட்டங்களில் இருபது முப்பது குவாரிகளும், பல மாவட்டங்களில் நூற்றுக்கணக்கிலும் இவை நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு குவாரிக்கும் பத்து வருடம் கல் உடைக்க மட்டுமே அனுமதி... மீண்டும் தேவையென்றால் அவர்களுன் லைசென்ஸ்ஐ நீடிக்க வேண்டும். அப்போது அதிகாரிகளுக்கு பல லட்சம் லஞ்சம் கொடுத்தால் தான் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு தொழில் நடத்த அனுமதி கிடைக்கும். அதேபோல் ஒவ்வொரு மாதமும் லாரிகளுக்கு பர்மிட் வாங்கவேண்டும். ஜல்லி, கிரஷர் கற்களை லாரிகளில் விற்பனைக்கு அனுப்ப பர்மிட் அவசியம். இதை ஒவ்வொரு மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குநர் என்ற அதிகாரிதான் வழங்குவார். இது தான் இத்தொழிலின் நடைமுறை. இந்த மாதம் பர்மிட் வாங்கப் போன கிரஷர் உரிமையாளர்களிடம் ஒவ்வொரு மாவட்ட அதிகாரிகளும் 'அமைச்சரைப் போய் பார்த்துவிட்டு வாங்க அப்புறம்தான் பர்மிட் வழங்கப்படும்' என கூற, அந்த சூட்சுமம் பிறகுதான் வெளிப்பட்டுள்ளது.
இனி நடந்தவற்றை நாம் சந்தித்த பல்வேறு கிரஷர் உரிமையாளர்கள், அசோசியேஷன் நிர்வாகிகள் 'பெயர்', புகைப்படம் எதுவும் வேண்டாம். உண்மை இதுதான்' என விரவாகக் கூறினார்கள்.
"அ.தி.மு.க. ஆட்சியில் தொழில்துறை மற்றும் கனிம வளத்துறை அமைச்சராக இருப்பவர் உடுமலைப்பேட்டை சண்முகவேல். நல்ல மனிதர் எளிமையானவர் என்ற பெயரெல்லாம் இவருக்கு உண்டு. அப்படித்தான் நாங்களும் நம்பினோம். ஆனால் அவரைச் சந்தித்தபோது மிக கறாராகவும் மிரட்டும் தொனியிலும் நடந்துகொண்டார். 'கிரஷர், குவாரி தொழிலைப் பற்றி எனக்கு நல்லா தெரியும். ஏன்னா நானே மடத்துக்குளத்தில் குவாரி வைச்சு
20 X 10 மிஷின் போட்டுள்ளேன். என்ன வருமானம் என்பது எனக்கு நல்லா தெரியும். ஒவ்வொரு மாவட்டத்திலேயும் கிரஷர் உரிமையாளர் அசோசியஷன் வெச்சிருக்கீங்க. நீங்களே வசூல் செஞ்சு ஒரு மாவட்டத்துக்கு இரண்டு கோடி கொடுத்துடுங்க. நீங்களும் பொழைக்கணும் நாங்களும் பொழைக்கணும்' என ஒரே பேச்சில் முடித்துக்கொண்டார்.
'ரொம்ப அதிகமா கேட்கறீங்க, அவ்வளவு முடியாதுங்க' என நாங்க கெஞ்சிக்கேட்டபிறகு, இறுதியாக ஒரு கோடி என தலா ஒவ்வொரு மாவட்டத்துக்கும் முடிவானது. குவாரிகள் அதிகம் உள்ள இருபத்தி ஏழு மாவட்டத்திற்கும் இருபத்தி ஏழுகோடி. 'பணம் தரமுடியாது என கூறும் கிரஷர் உருமையாளர்களின் பர்மிட்டை ரத்து செய்யச் சொன்னதாக' அமைச்சர் கூறியதை மாவட்ட அதிகாரிகளும் எங்களிடம் கூறிவிட்டனர். எங்க தொழிலை பொறுத்தவரை நூறு சதவீதம் சரியா செய்யமுடியாது. பாறைகளை உடைக்க வெடிமருந்து பயன்படுத்த வேண்டும். அதிகாரிகள் பார்த்து தடை செய்யப்பட்ட அல்லது அனுமதி பெறாமல் வெடிமருந்து வைத்துள்ளதாக எங்களை கைது செய்யவும் முடியும். லாரிகளுக்கு பர்மிட் பொறுத்தவரை நூறு லோடு, இருநூறு லோடு என பர்மிட் வாங்குவோம். ஆனால் தொள்ளாயிரம் லோடு, ஆயிரம் லோடு அனுப்புவோம். இதுவெல்லாம் சின்ன அட்ஜஸ்ட்மெண்ட்தான். பரமிட் இல்லையென்று ஆர்.டி.ஓ, தாசில்தாரை விட்டு லாரியை பிடித்துக் கொண்டு போவார்கள். இப்படி பல பிரச்சினைகள் இத்தொழில் உள்ளன. இதனால் தான் அமைச்சரின் உத்தரவுக்கு நாங்கள் அடிபணிய வேண்டியுள்ளது.
சரி, ஒருமுறைதான் கேட்கிறார் என நாங்கள் நினைத்தோம். தென்மாவட்டத்தைச் சேர்ந்த உரிமையாளர்கள் அமைச்சரை சந்தித்தபோது, பத்து வருடம் லைசென்ஸ் எனபதை இருபது வருடமாக நீடித்து தாருங்கள் என கேட்டுள்ளனர். 'அதையெல்லாம் அம்மாவிடம் பேசி நான் முடித்து தாரேன். நீங்கள் இப்போது போல ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு ஒருமுறை மாவட்டத்திற்கு 'ஒன் சி' கொடுத்து விடுங்கள்' என கூறியுள்ளார். இனி ஆறு மாதத்திற்கு ஒருமுறை ஒவ்வொரு மாவட்டமும் ஒரு கோடி கொடுக்க வேண்டுமாம்" -என தலையில் அடித்துக்கொள்ளாத குறையாக கூறினார்கள் கிரஷர் உரிமையாளர்கள், அசோசியேஷன் நிருவாகிகளாக உள்ள அ.தி.மு.க. ர.ர. மற்றும் தி.மு.க. உ.பி.க்கள்.
சின்ன சின்ன அளவில் குவாரி நடத்தும் கிரஷர் உருமையாளர்கள் முதல் பெரிய அதிபர்கள் வரை தனித்தனியாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள கனிம வளத்துறை அதிகாரியே ஒரு நிறுவனம் எவ்வளவு கொடுக்க வேண்டும் என பட்டியல் போட்டு கொடுத்துள்ளார். அதன்படி சிறு கிரஷர் நிறுவனங்கள் 35 ஆயிரம், அடுத்து 50 ஆயிரம், தொடர்ந்து 1 லட்சம்... பெரிய நிறுவனங்கள் இரண்டு, மூன்று, நான்கு லட்சங்கள் என பங்குத்தொகை போல பிரித்து ஒரு மாவட்டத்திற்கும் ஒரு கோடிக்கும் குறையாமல் வசூல் செய்யும் கொறுப்பை அந்தந்த மாவட்ட அசோசியேஷன் நிர்வாகிகளிடம் ஒப்படைத்துள்ளார் கனிமவள அதிகாரி.
கடந்த ஒருவாரமாக தமிழ்நாடு முழுக்க கிரஷர் நிறுவனங்களிடம் வசூல் மிக தீவிரமாக நடந்து வருகிறது. சில மாவட்டங்களில் அமைச்சரிடம் செட்டில் மெண்ட் முடிந்து விட்டது. இம்மாத இறுதியில் 30-ந்தேதிக்குள் எல்லாம் ஒப்படைத்துவிடவேண்டும் என கெடு வைத்துள்ளனர். தலைமைச் செயலகத்தில் அமைச்சர் சண்முகவேல் அலுவலகத்தில் ஒருவாரமாகவே கிரஷர் உரிமையாளர்கள் கூட்டமாக உள்ளது. 27-ந்தேதி வரை இருபது மாவட்டங்கள் தங்கள் கணக்குகளை ஒப்படைத்து விட்டனர்.
இவ்வளவு கஷ்டப்பட்டு 'உழைத்த' தொழில் அமைச்சர் சண்முகவேலு திங்களன்று ஊரகத் தொழில் அமைச்சராக மாற்றப்பட்டு விட்டார். கணக்கில் குளருபடியோ ?
...ஜீவா தங்கவேல்
.............நக்கீரன் 2011-6-29--7-01
****************
பொது ஜனம்; வேலூர்ல மணல் மாபியா கலைகட்டுது இங்கே இது வேறையா! சக்கை போடு போடறாங்க போல இருக்குது!
பொது ஜனம்; அந்தம்மாதான் சொல்லுச்சே தன்னுடைய அல்லக்கைகள் எள்ளுன்னா எண்ணையா இருப்பாங்க என்று பேட்டியில சொல்லுச்சே! அதான் ஒரு கை பார்க்கிறாங்க! அதான் முன்பே தெரியுமே கொள்ளையர்களுக்கு மறுவாழ்வு அளித்தவர் ஜெயலலிதா தான்! அவர் இருக்கிறவரை பணம் மானாவாரியா புரளும்! பஞ்சமும் மானாவாரியா புரளும்!
பொது ஜனம் பஞ்சம் மக்கள் கிட்டே புரளும், 'பணம்' இந்த மாதிரி மாபியா கேங்குங்க கிட்டே, இந்த மாதிரி அல்லக்கைங்க கிட்டே புரளும்.
பொது ஜனம்;ஒவ்வொரு அரசாங்க அலுவலகத்திலே, ரேஷன் கடைகளிலே புகுந்து ஊழியர்களை அடிக்கிற அளவுக்கு அல்லக்கைங்க போயிட்டாங்களே! பொம்பளை ஊழியர்களை பச்சை பச்சையா திட்ட ஆரம்பிச்சுட்டானுங்களே!
பொது ஜனம்; எல்லா கடத்தல்களும் இந்த அல்லக்கைங்களே பண்ணுது! தலைவி வழியை அல்லக்கைங்களும் பின்பற்றுது. பாரேன்! ஒரு மாசம் கூட ஆவலை அமைச்சர் அம்மாவுக்காக என்ன மாதிரி சூப்பரா டீல் பண்ணியிருக்குது!
பொது ஜனம்; ஜெயலலிதா வந்தாலே அரசங்கத்துக்கு, மக்களுக்கு என ஒரே மொத்தமான ஆப்புதான்!
.பொது ஜனம்; இந்த ரேஞ்சுக்கு வசூல் பண்ணா என்னாவரது! அதுக்குத்தான் லோக்பால் மசோதாவில பிரதமரை சேர்க்க கூடாது என்று சொல்லுச்சா!
பொது ஜனம்; ஒன்னும் ஆகாது! தி.மு.க அரசு வைச்சுட்டுப்போன கடனுக்காக வசூல் பண்ணேன் என்று சொன்னாலும் சொல்லும்! நம்பறதுக்குத்தான் மக்கள் இருக்காங்களே!
No comments:
Post a Comment