Pages

Wednesday 22 June 2011

கொள்ளையர்களுக்கு மறுவாழ்வு அளித்த ஜெயலலிதாவுக்கு நன்றியோ! நன்றி!-கொலை கொள்ளையர்...

மனைவியின் கண் முன் கணவனை கொலை செய்து விட்டு தங்க நகைகள் கொள்ளை

விழுப்புரத்தில் மனைவியின் கண் முன் கணவனை கொலை செய்து விட்டு தங்க நகைகளை கொள்ளை அடித்துச்சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

விழுப்புரம் நாராயணன் நகரைச் சேர்ந்தவர் தீனதயாளன். நேற்று (20.06.2011) இரவு தனது குடும்பத்தினருடன் அவர் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது 4 பேர் கொண்ட கொள்ளை கும்பல், வீட்டின் பூட்டை உடைத்து தூங்கிக் கொண்டிருந்த தீனதயாளனையும், அவரது மனைவி லட்சுமியையும் எழுப்பி பீரோ சாவியை கேட்டுள்ளனர். 

சாவியை கொடுக்க மறுத்ததால் லட்சுமியை கயிற்றால் கட்டிவிட்டு, தீனதயாளன் தலையில் உருட்டுக்கட்டையால் தாக்கினர். இதில் தீனதயாளன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் பீரோவில் இருந்த 15 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

...நக்கீரன் 21.06.2011
********************

பொதுஜனம்; என்னய்யா கொள்ளைக்காரங்க நன்றி சொல்லியிருக்காங்க! 

பொது ஜனம்; கொள்ளைக்கார்ங்க தினம் ஜெயலலிதா படத்தை கும்பிட்டு விட்டுத் தான் கொலை கொள்ளைகளை அடிக்கப்போறாங்க! எல்லா அடிதடியும் ஆட்சிக்கு வந்த நாளிலேயே ஸ்டார்ட் ஆயிடுச்சி! ஜெயலலிதா ஆட்சி வந்தா தான்ய்யா கொள்ளையடிக்கமுடியும்? நிலத்தை மடக்க முடியும்? தைரியமா லஞ்சம் வாங்க முடியும்? தைரியமா! பட்டப்பகலிலே கொள்ளை அடிக்க முடியும்! தடுக்கரவங்களை போட்டுத்தள்ள முடியும்! என்று எல்லா சமூக விரோதிகளும் முன்னாடியே பப்ளிக்கா பேசிக்கிட்டாங்க! அது தான் இப்ப நடக்குது!

பொது ஜனம்; ஆமாய்யா! தேர்த்தலுக்கு முன்னாடியே பலர் இப்படி பப்ளிக்கா பேசிகிட்டு இருந்தாங்க!


பொது ஜனம்; விழுப்புரம் கொலை நடந்தவுடனே! விழுப்புரம் மாவட்டத்து எஸ்.ஐ., இன்ஸ்பெக்டர் என அனைவரையும் கூண்டோடு மாத்திட்டாங்களே!நடவடிக்கையைத்தான் உடனே உடனே எடுக்கிறாங்களே!


பொது ஜனம்; இந்த நடவடிக்கை எவனுக்கு வேணும்? கொள்ளையடிச்ச பொருள் திரும்ப கிடைச்சுடுமா? இல்லை போன உசிரு திரும்ப வந்துடுமா? மசிறு தான் வரும்!

பொது ஜனம்; ஓ இது தான் நடவடிக்கையா? இந்த நடவடிக்கைக்கு தினம் ஒருத்தரை போட்டுத்தள்ளனும் போல இருக்கே!

பொது ஜனம்;அதான் தினம் ஒருத்தரை கொள்ளைக்காரங்க போட்டுத்தள்ளுராங்க!

பொது ஜனம்; ஆமா! கொள்ளைக்காரரும் அதிமுக தொண்டர் தானே! வாக்காளர் தானே! அவ்வளவு சீக்கிரம் விட்டுற முடியுமா? எல்லா மணல் கொள்ளையும் அவங்க தான் மன்றாங்க! சூதாட்ட, டிஸ்கோ கிளப் நடத்தறதும் அவங்க தான்! முன்னாடி சாராயக்கடையை ஏலம் எடுத்து ஒரு ஒட்டு ஒட்டினாங்க! இப்ப வெறும் கள்ளச்சாராயம், அரிசி கடத்தல், மணல் கொள்ளை இது மாதிரி தான் பண்ணமுடியுது. ரேஷன் கடைகளிலே கூட மாவட்டப்பிரதிநிதிகளோட அட்டகாசம் தாங்க முடியலைய்யா! அம்மா! அம்மா!  இன்னு சொல்லியே லஞ்சப் பால் குடிக்க வந்துடறானுங்க!

பொது ஜனம்; ஜனநடமாட்டம் உள்ள பகுதியில் நடந்து போறவரு கிட்டேயே பணத்தை அபேஸஃ பண்ணிட்டு தைரியமா போறாங்களேய்யா! கொள்ளைக்காரங்க கூட அரசாங்கம் ஒப்பந்தம் ஏதாவது போட்டிருக்குமா?  


பொது ஜனம்; இவ்வளவும் பார்த்துகிட்டு ஜெயலலிதா அரசாங்கம் என்னத்தை கிழிக்குதாம்?


பொது ஜனம்; பசங்க படிக்கிற பாடப்புத்தகத்தை கிழிக்குது! அல்பம்! இது இந்த மாதிரி விஷயத்துக்குத்தான் லாயக்கு! இப்படி இருந்தா அப்படித்தான் நடக்கும்! பாதிப்பு பப்ளிக்குத்தான்! நல்லா அனுபவிக்கட்டும்!
 
பொது ஜனம்; மொத்தத்துல ஜெயலலிதா வந்ததுனால கொள்ளைக்காரங்களுக்கு மறுவாழ்வு கிடைச்சிறுச்சு! இனி தினம் ஒரு கொள்ளை!, தினம் ஒரு கொலைன்னு! எல்லா ஊர்லேயும் பார்க்கலாம்!

No comments: