சமச்சீர்க் கல்வி குழுவில் மாற்றம் வேண்டும்: ராமதாஸ்
சென்னை, ஜூன் 17: உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சமச்சீர் கல்வி குறித்து முடிவெடுப்பதற்காக தமிழக அரசு அமைத்துள்ள 9 பேர் கொண்ட குழுவை மாற்றி அமைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிóக்கை விடுத்துள்ளார்.இது குறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி சமச்சீர் கல்வி குறித்து முடிவெடுப்பதற்காக தமிழக அரசின் சார்பில் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில் கல்வியாளர்கள் என்ற பிரிவில் டி.ஏ.வி. குழும பள்ளிகளின் நிறுவனர் ஜெயதேவ், பத்மசேஷாத்ரி பாலபவன் பள்ளிகளின் முதல்வர் ராஜலட்சுமி பார்த்தசாரதி ஆகியோர் சேர்க்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிóக்கிறது.இவர்கள் இருவரும் சென்னையிலேயே அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளின் முதலாளிகள் ஆவர். கல்வியாளர் என்பதற்கான எந்த வரையறையும் இவர்களுக்கு பொருந்தாது. லட்சக்கணக்கில் நன்கொடையும், கட்டணமும் தரும் பணக்காரர்களுக்காக மட்டுமே பள்ளிகளை நடத்தும் இவர்களுக்கு ஏழைகள் படும்பாடு குறித்து எதுவும் தெரியாது.சமச்சீர் கல்வி முறை குறித்து அறிந்த ஏராளமான கல்வியாளர்கள் இருக்கும்போது தனியார் பள்ளிகளைச் சேர்ந்த இருவரை நியமித்திருப்பது வியப்பளிக்கிறது.இந்த விஷயத்தில் தமிழக அரசு நடுநிலைப்போக்கை கடைப்பிடிக்க வேண்டும். 9 பேர் கொண்ட குழுவிலிருந்து தனியார் பள்ளி முதலாளிகளை நீக்கிவிட்டு, சமச்சீர் கல்வி குறித்து நன்கறிந்த கல்வியாளர்களை நியமிக்க வேண்டும் என்று ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
.....தினமணி 17.06.2011
************
பொது ஜனம்; இந்த நிபுணர் குழு ஊரை ஏமாத்தறதுக்கு அமைச்ச குழுவா இருக்குதே!
பொது ஜனம்; தனியார் பள்ளிக் கொள்ளைக்காரன் , தனியார் நிறுவன் முதலாளிகள் எல்லாம் எப்போது கல்வியாளர்கள் ஆனார்கள்? அவன் எப்படி சமச்சீர் கல்வியை வரவேற்பான்! அவன் தான் இதை ஆரம்பத்திலேயிருந்தே இதை எதிர்க்கிறானே! அவன் எப்படி? சிறந்த கல்வியாளரா இருக்க முடியும்?
பொது ஜனம்; கவர்ன்மென்ட் ஸ்கூலும் தனியார் ஸ்கூலும் ஒன்னாயிட்டா எப்படிய்யா மக்கள்கிட்டேயிருந்து துட்டு பிடுங்க முடியும்? கவர்ன்மென்ட் ஸ்கூல் பசங்க அசால்ட்டா மார்க்கு எடுப்பானுங்களே! அதனால தான் அவன் பயப்படறான்!
பொது ஜனம்; ஆமாம்! இந்த பசங்களும் சும்மா இருக்காதுங்க! நீய்ம் நானும் ஒன்னு! இப்ப உன் வாயில மண்ணு! என்று வாயில தூக்கி வைச்சிடுங்க!
பொது ஜனம்; ஜெயலலிதான்னா சும்மாவா?
பொது ஜனம்; திருட்டுத்தனத்துக்கு டாக்டர் பட்டம் கொடுத்தா! அது ஜெயலலிதாவுக்குத்தான் கொடுக்க முடியும்!
பொது ஜனம்; ஏற்கனவே அதுக்காகத்தான் அது வாங்கி வைச்சிருக்குது!
பொது ஜனம்; ராமதாஸ் சொல்லியிருக்கிறது படி பார்த்தா ஜெயலலிதா மக்களையும், உச்சநீதிமன்றத்தையும் ஏமாத்தறதுக்கு தான் இந்தக் குழுவை அமைச்சு இருக்குது! இதை ஏத்துக்கவே கூடாது!
பொது ஜனம்; அப்ப இன்னும் பாடப்புத்தகங்கள் வெளியாகிறது இன்னும் தள்ளிப்போகும்! ஐய்யா......ரொம்ப ஜாலி.....! எக்சாம் இல்லாம அடுத்த வகுப்புக்கு பாஸ்....பேசாம "பார்ட் டைம் ஜாப்" ஏதாவதுக்கு பசங்க போயிருக்கலாம்!
பொது ஜனம்; ஒரு தனியார் ஸ்கூல் கொள்ளைக்கார பாப்பாரக் கிழவி கூட இதுல கலந்துக்குதாமே! அதுக்கு என்ன தெரியும்? அது இதுக்கு முன்னாடி இருந்த நிபுணர் குழுவில இருந்துதா?
பொது ஜனம்; "பத்மா ஷேஷாத்திரி"ன்னு ஊரை கொள்ளையடிக்கிற ஸ்கூல் நடத்துதே! அதுவா? அந்த கிழவி எப்படி? நியாமா? சமதர்மமா நடந்துக்கும்!
பொது ஜனம்; நியாயமா? அரசுப் பள்ளிக் கல்வியாளர்களைத்தானே நியமிச்சிருக்கணும்?
பொது ஜனம்; உச்சநீதிமன்றமே இதற்கான நிபுணர் குழு நபர்களையும் நியமிச்சு இருக்கணும்!
பொது ஜனம்; சின்ன பசங்களுக்கு ஜாலிப்பா! சின்ன பசங்களுக்கு ஓட்டுரிமை கொடுத்தா ஜெயலலிதாவுக்கு தான் ஒட்டுப் போடுவாங்க! படிக்காம ஸ்கூல் போகறதுக்கு வழிவகுத்த ஜெயலலிதாவுக்கு பெரிய ஓஓ... போடுவாங்க!
பொது ஜனம்; தேர்தல் ஆணையர் குரேஷி அதுக்கும் ரெடி பண்ணிட்டு இருக்காரு! 16 வயசுலேயே ஒட்டு போடலாம் என்று ஒரு திட்டம் வைச்சி இருக்காராம்! ஆனா குடிக்க மட்டும் கூடாது! ஆனா! திருடலாம்! திருட்டுத்தனம் பண்ணலாம் தப்பில்லை!
பொது ஜனம்; இந்த மாதிரி கொள்ளைக்கார ஸ்கூல்ல படிச்சவன் எவனாவது ஆரய்ச்சியாளனா? கண்டுபிடிப்பாளனா? வந்திருக்கானா? கவர்ன்மென்ட் ஸ்கூல்ல படிச்சவன் தான் வந்திருக்கான்!
பொது ஜனம்; இந்த மாதிரி கொள்ளைக்கா, ஸ்கூல்ல படிச்சு வந்தவன் வரிஏய்ப்பு பண்ணி துட்டு சம்பாதிச்சு இருப்பான்! சுயநலவாதியா செத்து இருப்பான்! இல்லை எவனையாவது சாகடிச்சு இருப்பான்!
பொது ஜனம்; அவங்களுக்கும் சேர்த்துதானய்யா இந்த சமச்சீர் கல்வி! இது அந்தப் பள்ளிக்கூடத்துக்குத்தான் அதிக நன்மை! என்ன ஒன்னு இனிமேல் அவனுங்க மக்களை ஏமாத்திப் பணம் பிடுங்க முடியாது! அதுக்காகத்தான் இதை வலிந்து தடுக்கிறானுங்க! இதை அந்த பள்ளிக்கூடம் நடத்துற கூட்டமைப்பு தலைவனே தொலைக்காட்சியிலே ஒத்துகிட்டான். ஈனம் மானம் கெட்டவன்!
பொது ஜனம்; ஆமாய்யா! இது ஏமாத்தறதுக்குத்தான்! இன்னும் பழைய பாடப்புத்தகம் அச்சடிக்கிறதை நிறுத்தலையாமே! அது பாட்டுக்கு அச்சடிக்க சொல்லி அச்சடித்துகிட்டு இருக்கிறாங்களாம்! எப்படியும் இந்த பாடத்தை தான் அமல் படுத்துவோம்! அதனால் கவலைப்படாம அச்சடிங்க! என்று டெண்டர் விட்ட அச்சகங்களுக்கு அதிமுக தரப்பில் இருந்து உத்தரவாம்!
பொது ஜனம்; விடக்கூடாது இரண்டுல ஒன்னு பார்த்துறணும்! என்ன தைரியம் மக்களின் ஏகோபித்த எதிர்ப்பையும் மீறி ஒரு அராஜக அரசு செயல்படுதுன்னா சும்மா விடலாமா? அரசே ஸ்தம்பிக்கிற அளவுக்கு போராட்டம் நடத்தணும்! இனி மக்களுக்கு எதிரா அவங்க வாயைத் திறக்க கூடாது. நீதிமன்றமும் இதை சும்மா விடக்கூடாது!
பொது ஜனம்; லயோலா கருத்துக்கணிப்பும் அதைத்தான் தெரிவிச்சிருக்கு! அதிமுக அரசு மீது மக்கள் கடுமையான அதிருப்தியில இருக்கிறதா? கருத்து கணிப்பை வெளியிட்டிருக்காங்க!
பொது ஜனம்; கொஞ்ச நாளுக்குள்ளேயே நல்லா பட்டுட்டாங்க! போலிருக்குது!
No comments:
Post a Comment