நீதிக்குத் தண்டனையா? கொல்லப்பட்ட வக்கீல்!
காக்கி சட்டைகளுக்குகும் கருப்புக் கோட்டுகளுக்கும் இடையே, மீண்டும் உரசல் தீயை உண்டாக்கிக் கொண்டிருக்கிறது அந்தப் படுகொலை. படுகொலையானவர் சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் சங்கரசுப்புவின் மகன் சதீஷ்குமார்.
கொலைக்குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்யவேண்டும் என்று காவல் துறையைக் கண்டித்து கோர்ட்டுகளைப் பறக்கணித்தும் போராட்ட்களத்தில் குதித்து வருகின்றனர். வழக்குரைஞர்கள் தமிழகம் முழுக்க கோர்ட் நடவடிக்கைகள் ஸ்தம்பிக்கத் தொடங்கியிருக்கிறது.
சென்னை அண்ணாநகரில் வசிக்கும் வழக்கறிஞர் சங்கரசுப்பு, 35 வருடங்களுக்கு மேலாய் வழ்க்காடி வருகிறார். சீனியர் வழக்கறிஞர் தகுதிக்காக, 2 நீதிபதிகளும் 2 சீனியர்களும் பரிந்துரைக்க வேண்டும் என்பதால், சீனியர் தகுதியையே மறுத்துவிட்டவர் சங்கரசுப்பு. 80-களில் நக்ஸல் இயக்கத்தைச் சேர்ந்த பாலன் மேடையில் பேசிக்கொண்டிருந்தா போது, அவரைக்கைது செய்த தேவாரம் தலைமையிலான டீம், அவரை நடுக்காட்டில் வைத்து சுட்டுக்கொன்றது. இந்த வழக்கில் தானாக ஆஜராகி, அது போலி எனகவுன்டர் என நிருபித்து, காவலதுறைக்கு கண்டனத்தையும் பாலன் குடும்பத்துக்கு நஷ்டயீட்டையும் வாங்கிக்கொடுத்தவர் சங்கரசுப்பி. இடது சாரித் தோழர்கள் யாராவது பொய்க் குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டால், அவர்களுக்காக ஆஜராகிவிடுவது இவரது இயல்பு. மனித உரிமை ஆர்வலரான இவர், ஃபீஸைப் பற்றி யோசிக்காமல் பாதிக்கப்பட்டவர்களுக்காக அழுத்தமாக குரல் கொடுக்கக்கூடியவர்.
சங்கரசுப்புவின் மனைவி மயிலம்மாள் அஞ்சல் துறை அதிகாரியாகப் பணியாற்றிவரிகிறவர். இந்தத் தம்பதிகளுக்கு சதீஷ்குமார் உள்ளிட்ட இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். சட்டப்படிப்பை முடித்து வேலை தேடிக்கொண்டிருந்த 24 வயதே ஆன சதீஷ்குமாரின் படுகொலை அவரது குடும்பத்தைத் தாண்டி, பலரையும் பதை பதைக்க வைத்துக் கொண்டிருக்கிறது.
என்ன நடந்த்து என வழக்குரைஞர் சங்கர சுப்புவிடமே நாம் கேட்டோம். கலங்கிய விழிகளோடு பேச ஆரம்பித்த அவர்...
"ஒரு தகப்பனாக நானும் என குடும்பத்தினரும் படும் வேதனைகளை வார்த்தைகளால் விரிக்கமுடியாது. குடும்பத்தோட குற்றாலத்துக்கு டூர் போய்ட்டு 6-ந்தேதி தான் நாங்க சென்னை திரும்பினோம். மறுநாள் காலை என் மனைவியை டூவீலர்ல கொண்டுபோய் அவங்க அலுவங்கத்தில் வட்டுவிட்டு வந்த சதீஷ், அன்னைக்கு நைடவரை வீட்லதான் இருந்தான். சைட் 9 மணிக்கு ஃபாஸ்ட் ஃபுட்ல சாப்பிட்டு வர்றேன்னு போனான். போய் ரொம்ப நேரம் ஆகியும் அவன் திரும்பலை. உடனே அவன் சொல்லைத் தொடர்பு கொண்டோம். ரிங் போய்க்கிட்டே இருந்த்து. உடனே எஸ்.எம்.எஸ் அனுப்பினோம். அதுக்கும் அவங்கிட்ட இருந்து பதில் இல்லை. விடிய விடிய பதட்டாமா அங்க இங்கன்னு தேடிப்பார்த்தோம். மறுநாள் காலை 7 மணிக்கு திருமங்கலம் போலீஸ் ஸ்டேஷன்ல புகாரைக் கொடுக்கப்போனேன். ரெண்டுமணி நேரம் கழித்து வரச்சொன்னாங்க. மறுபடியும் போய் புகாரைக்கொடுத்து எஃப்ஐ ஆரே போட்டாங்க. மதியம் 2 மணிக்கு ஒரச்சொன்னாங்க. இப்படி அலையவிட்டுதான் எஃப்ஐஆரே போட்டாங்க. இதுக்குப்பறிகும் அவங்க விசாரிக்கிற மாதிரி தெரியலை.
அண்ணாநகர் டி.சி யைப் பார்த்தேன். செல் நம்பரை வச்சி டிரேஸ் பண்ணுங்க சார்னு கேட்டுக்கிட்டேன். அதுக்கப்புறம் சீயாளம் தொரு டவர் எல்லையில் இருப்பதா கண்டுபிடிச்சாங்க. வேறு எதையும் செய்யலை.
9-ந்தேதி காலை கமிஷனர் திரிபாதியை சந்திச்சி விசாரணையைத் துரிதப்படுத்தச் செய்யுங்கன்னேன். 24 வயசுப் பையன்தானே தானா திரும்பி வந்துடுவான்னு அலட்சியமா சொன்னார். நான் பலருக்கு எதிரா வழக்காடியிருக்கேன். என் மீது அவங்க கோபமா அருக்காங்க. அதனால் அவங்க மூலம்ரென் பையனுக்கு பிரச்சினை வந்துடுமோன்னு பயமா இருக்கு. வழக்கை சைபர் கிரைமுக்கு மாத்தினா,ஈஸியா செல்போன் மூலம் கண்டுபிடிச்சிடலாம்னு வாதாடினேன். இதன் பிறகும் நிறைய அலையவிட்டார்களே தவிர, வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. அன்னைக்கு சைட் ஒரு மணிக்கு, என் மகள், சதீஷ் குமாரை வழக்கம் போல் தொடர்பு கொள்ள முயன்றாள். எதிர்முனையில் திடீரென்று அந்த போன் ஆன் ஆனது. பேசியவர் ஒரு போலீஸ்காரர். 'இந்த செல் யாருடையது? இந்த செல்லும் ஒரு டூவீலரும் ஐ.சி.எஃப். வடக்கு காலனி ஏரிக்கரையில் இருந்ததுன்னு அவர் சொல்ல. பதறியடிச்சிகிட்டு ஓடினோம். ஆனா பையன் கிடைக்கவே இல்லை.
மறுநாளான 10-ந் தேதி என் மகனை கண்டுபிடித்து ஒப்படைக்கவேண்டும் என்று ஹேப்பியஸ் கார்ப்பஃ மனுவை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தேன். நீதிமன்றமோ ஸபெஷல் டீம் போட்டு தேடும்படி உத்தரவிட்டது. இதன்பிறகும் பெயரளவுக்கே அந்த ஏரியில் தேடினாங்க. 13-ய்தேதி வரே தேடல் என்ற பெயரில் பாவலா பண்ணினாங்க. கடைசியில 13-ந்தேத சாயந்திரம் தான் என மகன் சடலமா கண்டுபிடிக்கப்பட்டான். மிகக் கொடூரமா கொன்னுருக்காங்க சார். இதை செஞ்சது இரு இன்ஸ்பெக்டர்கள் தான்" என்றவர் சோகத்தில் பேசமுடியாமல் தத்தளித்தார்.
யார் அவர்கள்? அவர்கள் எதற்காகக் கொல்லவேண்டும்? என்றோம்.
வழக்குரைஞர் சங்கரசுப்புவோ " திருமுல்லை வாயில் போலீஸ் ஸ்டேஷன்ல இருந்த ரியாஸூதீனும், கண்ணனும் தான். இவங்களோட இன்னொரு பக்கம் கொடூரமானது. விசாரணைக் கைதிகளை கொடூரமா அடிச்சி சித்திரவதை பண்ணி கணம் பிடுங்குவதில் கொடுமைக்காரர்கள். கும்மிடிப்பூண்டி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.சுதர்சனத்தைக் கொலை பண்ணிய கொள்ளையனான ஓம் பிரகாசை பிடிக்க உ.பிக்குப் போன இவங்க ரெண்டு பேரும், அவனைப் பிடிக்க முடியாததால், அவனோட டிகிரி படிச்சிக்கிட்டு இருந்த அண்ணன் மகன்கள் ரெண்டுபேரை பிடிச்சி, கொடூரமா எனகவுன்டர் என்ற பெயரில் படுகொலை பண்ணிய ஆளுங்க இவங்க" என்றவர் மேலும் தொடர்ந்தார்.
திருமுல்லைவாயிலைச் சேர்ந்த அருண்குமாரை திருட்டுக்குற்றச்சாட்டை சுமத்தி, சட்டவிரோதமா காவலில் வைத்து இவங்க சித்தரவதை பண்ணியதோட, அவர்ட்ட இருந்து நகைகளையும் பணத்தையும் பிடுங்கியபடியே இருந்தனர். இதையறிந்த நான் அவரைக் கண்டுபிடிக்கணும்னு ஹேப்பியஸ் கார்ப்பஸ் மனுபோட்டதோட, இந்த இரண்டு காக்கிகளின் அயோக்கியத்தனத்தையும் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கோண்டுபோனேன். இந்த வழக்கில் இருந்து ஒதுங்கும்படி பலமுறை அவங்க மிரட்டினாங்க. நான் விடலை. கடைசியில் நீதிமன்றம் இந்த இரண்டு காக்கிகளுக்கும் 25 ஆயிரம் ரூபாய் வீதம் அபராதம் போட்டதோட, துறை ரீதியாவும் நடவடிக்கை எடுக்கும்படி தீர்ப்பளித்தது. இதில் கொதித்துப்போன அவங்க, இதற்கான மோசமான விளைவை விரைவில் சந்திப்பே. உனக்கும் குடும்பம் இருக்கு. மறந்துடாதே'ன்னு மிரட்டினாங்க. சொன்னமாதிரியே என்னை பழிவாங்க, என் அப்பாவி மகனைக் கொன்னுட்டாங்க. அந்தக் கொலைகாரப்பாவிகளை விடமாட்டேன். சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை வாங்கிக்கொடுத்துட்டு தான் ஓய்வேன்" என்றார் கண்ணீர் பொங்க.
இவரது குற்றச்சாட்டுகள் பற்றி சம்பந்நப்பட்ட காக்கி அதிகாரிகளான ரியாஸூதீன், கண்ணன் ஆகியோரிடம் கேட்டபோது அவர்கள் பேச மறுத்தனர். அவர்கள் தரப்போ "இவங்க நிரபராதிகள். ஒரு வழக்குரைஞரை பழிவாங்க யாராவது அவர் பையனை கொல்வாங்களா?" என்கிறார்கள் ஆதாங்கத்தோடு.
கொல்லப்பட்ட, தன் மகனின் பிரேத பரிசோதனையின் போது, தன் சார்பில் ஒரு டாக்கடரையும் வீடியோ எடுக்கும் அனுமதியையும் கோர்ட் மூலம் பெற்ற சங்கரசுப்பி, போஸ்ட் மார்ட்ட ரிப்போர்ட்டை யாரும் மாற்றிவிடாதபடி உஷாராய் இருந்தார். இதைத்த தொடர்ந்து 'சதீஷ்குமார் படுகொலைதான் செய்யப்பட்டிருக்கிறார். கொல்லப்பட்ட பிறகு தண்ணீரில் வீசப்பட்டிருக்கிறார்' என்ற ரீதியில் போஸ்ட்மார்ட்ட ரிப்போர்ட்டை அரசுத்த தரப்பு உயர்நீதிமன்றத்தில் 16-ந்தேதி தாக்கல் செய்தது. சங்கரசுப்பு வேண்டுகோளின்படி, இந்தக் கொலை வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்திருக்கிறது நீதிமன்றம்.
போராட்டக்களத்தில் இருக்கும் வழக்குரைஞர்கள் சார்பில் பேசிய பிரசாத்தோ ”சதீஷை லாக்கப்பில் வைத்து சித்திரவதை செய்து கொன்ற மாதிரிதான் உடல் இருக்கு. வழக்குரைஞர்களைக் குறிவைத்து நடத்தப்படும் இதுபோன்ற கொடூர தாக்குதல்கள் தடுக்கப்பட்டாக வேண்டும். வழகுகுரைஞர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது. கொலை பாதக காக்கி அதிகாரிகளை உடனடியாகக் கைதுசெய்யவேண்டும். இல்லையேல் எங்கள் போராட்டம் ஒயாது" என்கிறார் ஆவேசமாக.
நீதிக்காக போராடியவரின் அப்பாவி மகனைக் கொன்ற கொலைபாதகர்களை விரைவாக சி.பி.ஐ கண்டுபிடிக்க வேண்டும்.
.........-பிரகாஷ்.
.....நக்கீரன் 18-21 ஜூன் 2011
***************************
பொது ஜனம்; எல்லா ஆட்சியிலும் தானய்யா காட்டுமிராண்டிகளா இருக்கானுங்க!
பொது ஜனம்; இல்லைய்யா ஆட்சியாளர்களைப் பார்த்து இவனுக மாறிடுவானுங்க! ஆட்சியில் இருப்பவங்களே காட்டுமிராண்டியா, எதைப்பத்தியும் கவலைப்படாத இருக்கும் பொழுது இவங்களுக்கும் தன்னால தைரியம் வந்துடும். முன்னாடி சின்ன சின்ன தப்பா செஞ்சிட்டு இருப்பாங்க! இந்த மாதிரி ஆட்சி வந்தவுடன் புள்ளா இறங்கிடுவானுங்க!
பொது ஜனம்; வக்கீல்ங்க மட்டும் சும்மாவா?
பொது ஜனம்; இல்லைய்யா இருக்காங்க! சின்ன வாய்க்கா தகராறு என்று போனா ஈவு இரக்கமில்லாம சொத்தையே காலி பண்ணிட்டுதான் விடுவாங்க! அது தெரியும்! இவரு! பாவம்யா மக்களுக்காக வாதாடியிருக்கவருய்யா! இந்த மாதிரி சாம்ன்யரை பத்தி கவலைப்படற வக்கீலுங்க சில பேருங்க தான இருக்காங்க!
பொது ஜனம்; இவங்களுக்கே இந்த மாதிரி துன்பம் வரும்பொழுது, இவங்களும் நாம ஏன் நியாயமா? நடக்கணும்? நடந்து என்ன ஆச்சு என் புள்ளைய தான் பறிகொடுக்கவேண்டியதாச்சு என்று மாறிட வாய்ப்பு இருக்கு! அது தவறும் இல்லை! ஆனா இவங்கெல்லாம் இல்லையென்னா எப்படிய்யா நாடு கொஞ்சமாவது அமைதியா இருக்கும்! இவங்களுக்காகவே இன்னும் பல அப்பாவிங்க இருப்பாங்க! அவங்களை எப்படி காப்பாத்த முடியும்? இவங்கதான் அவங்களை காப்பாத்தணும்!
பொது ஜனம்; ஆமாய்யா!டைவர்ஸ் கேஸுக்கு உள்ளே வந்தா முதியோர் பென்சன் வரைக்கும் இழுத்துட்டு நம்பளை போண்டியாக்கிட்டு போயிடுவாங்க! இந்த வக்கீல்கள்!
பொது ஜனம்; ஆனா இவர்! மனித உரிமைக்காக வாதாடியவர்ய்யா! காவல்துறை அட்டூழியத்தை எதிர்த்தவர்யா! நாட்டில பல தொடைநடுங்கி வக்கீல்கள் இருக்காங்கய்யா! அவங்களோட குறிக்கோள்கள் எல்லாம் அப்பாவிங்க கிட்டேபணத்தை பிடுங்கறது மட்டும்தான்யா!
பொது ஜனம்; பாவம்யா! இவரு புகார் கொடுக்கறதுக்கே எப்படி கஷடப்பட்டிருக்காரு! நம்க்கெல்லாம் இது மாதிரி வந்தா தாங்குவோமா? இந்த தொந்தரவிலேயே தூக்கு மாட்டிக்கவேண்டியது தான். என்ன அலைக்கழிப்பு! என்ன துயரம்! யாருக்கும் வரக்கூடாதுய்யா! அவர் குடும்பத்துக்கு இரங்கலை தெரிவிச்சக்கணும்யா!.
பொது ஜனம்; ஆனா அவருடைய குடும்பத்துக்கு, அவருடைய மகனுக்கு இந்த கொடுமை நிகழ்ந்திருப்பது சம்பந்தமில்லாத நமக்கே துடிக்கிறதே!
பொது ஜனம்; ஏன் சம்பந்தமில்லை! அவரு நம்ம சாதி தானே! நம்ம குலம் தானே! மனித சாதி! மனித குலம்! நமக்கு நிகழ்ந்தால் தானா? நாளைக்கு நமக்குத்தான்? அதுவும் இந்த ஆட்சியில்நிச்சயம்!
பொது ஜனம்; ஆமா! இதெல்லாம் எவன் நினைக்கிறான்!?
பொது ஜனம்; ஏய்யா இந்த "மூணு பாதி" கமிஷ்னர் கூட இந்தளவுக்கு இழுத்தடிச்சிருக்கே ஏன்? இது டகால்டி வேலைப்பண்ணி, தொலைந்து போன குழந்தையை வேறொருவர் கண்டுபிடிச்சா, தான் கண்டுபிடிச்சதா தூக்கி, முத்தம் கொடுத்து டி.வி கேமரா முன்னாடி நடிக்கிறது மட்டும் தான் இந்த மூணு பாதியோட வேலையா? இந்த மாதிரி கொடூரக்கொலையை கண்டுபிடிக்கிறது அந்த மூணு பாதியோட வேலை இல்லையா?
பொது ஜனம்; ஒரு வேளை கொலை செய்யப்பட்டவர் 24 வயதுடையவர் என்பதால், முத்தம் கொடுத்து நடிக்க முடியாது என்று கண்டுபிடிக்காமல் இருந்திருப்பார்.
பொது ஜனம்; கொலைசெய்தது காக்கிகள் தானே! அதனால் கண்டுபிடிக்காதே! ஆட்சிக்கு கெட்டப்பெயர் இழுத்தடி! என்று குண்டம்மா கிட்டேயிருந்து உத்தரவு வந்திருக்கும்!
பொது ஜனம்; போலீசுக்கு 1 மணிநேரத்திலேயே எல்லா விஷயமும் தெரிஞ்சிட்டிருக்கும். எல்லா ஜாதகமும் உடனே உடனே அதுங்க கைக்கு வந்துடும்! அதே போல உடனே உடனே கட்டு கட்டா பணமும் கைக்கு வந்து இருக்கும்!
பொது ஜனம்; அதுவும் டெக்னாலஜி காலத்திலே செல்போன் வேறு வைச்சிருக்கார். யார்? போன் பாண்ணங்க! எப்போ போன் வந்தது, எப்பத்தலேயிருந்து காணாம போனார், அதுக்கப்புறம் யார்? யார்? போன்பண்ணாங்க என்று பார்த்தாலே மேட்டர் முடிஞ்சது! ஆள் மொத்தபேரையும் பிடிச்சுடலாம்! இதுங்க சும்மா வோ வோ வோ வோ .....காட்டுதுங்க! இதுங்க டகால்டி நமக்கே தெரியும் பொழுது வக்கீலுங்களுக்கு தெரியாதா? அவங்களுக்கு எல்லா இடத்திலேயும் தொடர்பு இருக்குது!
பொது ஜனம்; அந்த 24 வயது பிள்ளை அவர்களுடைய அப்பா அம்மாவுக்கு குழந்தை தானே! இந்த "மூணு பாதி" கமிஷனருக்கு தெரியாதா? இதுக்கு இதுமாதிரி நடந்தா தெரியும்!
பொது ஜனம்; எல்லாம் அதுவாகவே நடக்கும்! யாரும் எந்த பாவத்திலேயிருந்தும் தப்ப முடியாது!
பொது ஜனம்; இதுங்க என்ன? வானத்திலேயிருந்து குதித்ததா? நம்ம உருவாக்கினது தானேய்யா இந்த காவல் துறை! இதுங்க கண்டிபிடிப்பு விஷயங்கள் எல்லாம் நாம கண்டுபிடிச்சது தானேய்யா! மக்கள் உருவாக்கினது தான் எல்லாமே!
பொது ஜனம்; முக்காவாசி குற்றங்களோட புலனாய்வுத் தகவல்கள் பொது மக்கள்கிட்டேயிருந்து தான் இதுங்களுக்கு கிடைக்கிறது.
பொது ஜனம்; ஏய்யா! அவரு! நக்சலைட்டுக்கெல்லாம் வாதாடியிருக்காரே! அது மட்டும் சரியா?
பொது ஜனம்; முண்டம்! "வாஞ்சி நாதனை" தூக்கி வைச்சி கொண்டாடுரே! நக்சலைட்டை மட்டும் திட்டுரே! வாஞ்சி நாதன் என்கிற பார்ப்பு என்ன பண்ணுச்சு? அகிம்சையை கடைபிடிச்சுதா? அதுக்கு நூற்றாண்டு கொண்டாடுரே? அந்த கொலைகார பார்ப்பானை மட்டும் தியாகி என்கிறே!
பொது ஜனம்; ஆமாய்யா! அது மட்டும் என்ன? நியாயம்? கம்யூனிசம் தானேய்யா....இதுவும்.....
பொது ஜனம்; எதுவாக இருந்தா என்னய்யா? காந்தியை கொன்றவர்களுக்கு வாதாடலே! கோட்சேவை புனிதனாக கொண்டாடலே! பார்ப்பானுங்க!
பொது ஜனம்; இதை சும்மா விடக்கூடாது! இது வக்கீலுகளின் பாதுகாப்புக்கு மட்டுமல்ல, பொது மக்களின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலான விஷயம். லேசுல விடக்கூடாது! உடனடியா கண்டிபிடிச்சு தண்டிக்கணும். காக்கிகளின் முகமூடிகளை கிழிக்கணும். மரண தண்டனை வாங்கி கொடுக்கணும்! எத்தனை பேரை என்கவுன்டர் பண்ணியிருப்பாங்க! ஈவு இரக்கமில்லாம! அதுவும் நம்ம கிட்டேயே சம்பளம் வாங்கி குடும்பம் நடத்திட்டு, நம்பளையே அநியாயமா போட்டுத்தள்ளுவாங்க! எல்லா குற்றங்களுக்கும் காரண கர்த்தா இவங்க தான்!
பொது ஜனம்; சும்மா விடுவாங்களா? வக்கீல்கள்! நீதியை எதிர்பார்த்து காத்திருப்போம்!
No comments:
Post a Comment